ஆடி வரும் வண்ண மயிலே-24

அத்தியாயம்:24 

தர்ஷனை தூக்கி கொண்டு கோவிலின் குளத்து பக்கமாக காசிப் ஆளுங்க போனார்கள்…முன் பக்கமாக போக முடியாதபடிக்கு பவதீப் காவலை அதிகப்படுத்தி இருந்தான்.  

தர்ஷன் வேறு நொடிக்கு ஒரு தடவை அப்பா எங்கே காணோம்..? என கேட்டு கொண்டு இருந்தான்…காசிப் ஆளுங்களுக்கு அவனுக்கு பதில் சொல்லியே பொறுமை இழந்தவர்கள்.. 

“ ஏய்..! வாயை மூடி கொண்டு வா…சும்மா தொண தொணுத்து கொண்டு அது தான் உன் அப்பாவை…பார்க்க போகிறோம் தானே.  

பிறகு எதற்காக இப்படி தொந்தரவு பண்ணி கொண்டு வருகிற..? இனி வாயை திறந்து பாரு அதற்க்கு பிறகு உனக்கு இருக்கு…” என்று ஒருவன் மிரட்டினான்.  

இத்தனை நேரம் தன் கூட அன்பாக பழகியவர்கள்…இப்படி அதட்டவும் தர்ஷன்… அப்பா வேணும் என கேட்டவாறே அழ தொடங்கினான்… 

“ முன்னா அவன் வாயை மூடு இவன் சத்தமாக அழுது தொலைத்தால்…நம்ம வந்த காரியத்தை செய்ய முடியாது பிறகு…நம்ம தான் காசிப் பய்யா, தலைவர் கிட்ட வாங்கி கட்டி கொள்ள வேணும்.  

ஏன் தலைவர் மிஷன் வெற்றி பெறவில்லை என்றால்…நம்ம உயிரை கூட எடுக்க தயங்க மாட்டார்..முதலில் அவன் வாயை மூடு…” என்றான்.. மற்றவன் முன்னா தர்ஷன் வாயை மூட…தர்ஷன் திமிற தொடங்கினான்.  

அப்போது கோவில் குளத்தில் கால்களை கழுவி…மீன்களுக்கு பொரி போட்டு விட்டு மேலே ஏறி கொண்டு ஒருவனின் பார்வையில்…இவர்கள் பட்டார்கள்.  

அவன் முதலில் சாதாரணமாக தான் இவர்களை பார்த்து விட்டு கடந்து போக போனவன்..பிறகு நின்று ஹலோ ஒன் செக்கன் என அழைத்தான்.  

அவன் குரல் கேட்டு நகர முடியாமல் முன்னா, மற்றவன் நின்றிருந்தார்கள்…ஓடி போனால் சந்தேகம் வந்தால் விஷயம் விபரீதமாகி விடும்… 

சரி முதலில் என்ன கேட்கிறான் என பார்க்கலாம்… இல்லை என்றால் இங்கே தான் யாருமே இல்லையே இவன்…கதையை முடித்து விட்டு போய் விடலாம் என தீர்மானித்தவர்கள்…அந்த இடத்திலே நின்றிருந்தார்கள்.  

கிளம்பியவன் திரும்ப வந்து இவர்களையும் அவர்கள் கையில் உள்ள தர்ஷனையும் பார்த்தவன்…புருவங்களில் யோசனையால் முடிஞ்சு விழுந்தது…அவன்  

“ யாரு நீங்க எதற்காக பையன் வாயை மூடி இருக்கிறீங்க..? என சந்தேகமாக கேட்டான் தர்ஷன் வேறு  முன்னா கையை கடிக்க… முன்னா வலியில் ஸ்’, ஆ’ என்று முணங்கியவாறே கையை உதற…தர்ஷன்  

“ அப்பா  நான் அம்மா கிட்ட போக வேணும்…என்னை விடு…” என சொன்னவாறே கீழே இறங்க முயற்ச்சி செய்தான்…அவன் இவர்களை கூர்மையாக பார்க்க அவன் பார்வையில் தடுமாறியவர்கள் …பிறகு தங்களை நிலைபடுத்தி கொண்டே.  

“ அது வேற ஒன்றுமில்ல சார் இவன் அப்பா எங்க பெரியப்பா பையன் தான்…அண்ணும், அண்ணியும் கொஞ்சம் மனகசப்பால் பிரிந்து இருக்கிறாங்க… 

அண்ணி கொஞ்சம் பெரிய இடம்… பையனை பார்க்க அண்ணனை அனுமதிக்க இல்லை.  

கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ் நடக்கிறது…அண்ணன் பையனை பார்க்க ஆசைபட்டார் அண்ணி பையன் கூட இங்கே வந்திருப்பதை அறிந்தவர்…பையனை பார்க்க இங்கே வந்தார் காரில் வெளியே தான் நிற்கிறார்.  

அது தான் அவர் கிட்ட பையனை காட்ட அழைத்து போகிறோம்…அண்ணனை பார்க்க தான் இவன் அப்படி அழுகிறான்…” என்று கதை பிண்ணினான்.  

அவன் “ ஆ’ அப்படியா..? பார்த்தால் அது போல தெரியவில்லையே…அதுவும் அப்பாவாக இருந்தால் கூட  பையனின் அம்மா பர்மிஷன் கேட்காது… 

நீங்க இப்படி அழைத்து போவது தப்பு இல்லையா…? அதுவும் கோர்ட்டில் கேஸ் நடக்கும் போது இப்படி நடந்து கொள்வது சட்டப்படி தப்பு…” என்றான். 

முன்னா “ ஏய்..! முதலில் யாரு நீ..? கோவிலுக்கு சாமி கும்பிட வந்தால் அதை மட்டும் பாரு…அதை விட்டு போட்டு மற்றவங்க குடும்ப விஷயத்தில் தலையிட்டு கொண்டு இருக்க.  

இது எங்க குடும்ப விஷயம் இவன் எங்க அண்ணன் பையன்…நாங்க இவனை பார்த்து கொள்கிறோம்…” என்றான்.  

அவன் “ ஓ..! அப்படியா..? அப்போ இவன் உங்க அண்ணன் பையன் இல்லை…கோவிலுக்கு வந்த குழந்தையை கடத்தி கொண்டு போகிறீங்க.. 

மரியாதையாக பையனை என் கிட்ட கொடுத்து விட்டு ஓடி போய் விடுங்க…இல்ல என்றால் பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பு இல்லை…” என்றான்.  

“ ஏய்..! நாங்க யாரு தெரியுமா..? எங்க முன்னாடி நிற்கவே இந்திய கவர்மெண்ட் கூட பயப்படும்…சல்லி பயல் நீ எங்களை மிரட்டுகிறாயா…? உனக்கு உன் உயிர் முக்கியம் என்றால் ஓடி போய் விடு… 

இல்ல ஒரே குத்து தான் உன்னை தூக்கி இதோ இந்த குளத்தில்… போட்டு விட்டு போய் கொண்டே இருப்போம் எப்படி வசதி..? என கேட்டு வாய் மூடவில்லை அவன்.  

ஆ’ என அலறலோடு தன் வயிற்றை பிடித்தான்…முன்னா எதிர்பார்க்காத நேரம் அவன் முட்டியில் உதைக்க அவன் ஆ’ என அலறி கொண்டே தன் முட்டியை பற்றியவன்..தர்ஷனை கீழே விட தர்ஷன் தரையில் விழ போக… 

சட்டென அவன் தர்ஷனை தூக்கி அணைத்து கொள்ள… அப்பா என அழுகையோடு தர்ஷன் அவன் கழுத்தை கட்டி கொள்ள…தர்ஷன் முதுகை அவன் தடவி கொடுத்தான்.  

அந்த நேரம் பார்த்து தர்மா அவன் கூட நான்கு ஐந்து கார்ட்ஸ் ஓடி வந்தவர்கள்…தர்ஷனை ஒருவன் தூக்கி இருப்பதையும் அவன் அழுது கொண்டு இருப்பதையும் பார்த்தவன்… 

அவனை தவறாக எண்ணியவன் அவன் முதுக்கு பின்னால்…துப்பாக்கியை வைத்தவன்..டோன்ட் மூவ் ஹேண்ட்ஸ்  அப் என்றான்…தர்ஷனை தூக்கி வைத்து கொண்டு இருந்தவன் நிதானமாக திரும்ப.  

தர்மா அவனை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன்…பிறகு சட்டென தன் துப்பாக்கியை கீழே இறக்கியவன்…அவனுக்கு ராணுவ பாணியில் வணக்கம் வைத்தவன்…மற்றவர்களிடம் துப்பாக்கியை கீழே போட சொல்லி விட்டு.  

“வெல்கம் டூ சென்னை லெப்டினன்ட் ஜெனரல் “ என்றான்…அவனும் சின்ன புன்னகையோடு அவன் வணக்கத்தை ஏற்று கொண்டான்.  

அவன் வேறு யாருமல்ல சாரதாவின் ஒரே மகன் கிருபாகர் தான்…சைப்பிரஸாக இருக்கட்டும் என்று தாயிடம் சொல்லாமல்…அவரை பார்க்க வந்தான் கூடவே மயூரின் நடனத்தையும் பார்க்க ஆசையாக வந்தான் … அவளை அவன் கடைசியாக பார்க்கும் போது வயது எட்டு.  

அவனை போக வேணாம் அண்ணா என அழுதது இன்னும்…அவனுக்கு ஞாபகம் இருக்கு ஊருக்கு லீவுக்கு போகும் போது எல்லாம்…அவளுக்கு அவன் பொருட்கள் வாங்கி கொண்டு போவான்.  

தங்கை இல்லாத அவனுக்கு மயூரி சொந்த தங்கை போல தான்…அது போல அசோக் தம்பி அன்புக்கு ரத்த பந்தம் தேவையில்லை…உண்மையான அன்பு இருந்தால் போதும்.  

கிருபாகர் “ தர்மா சி.எம் வந்திருக்கிறார் போல…இவங்க ஆளுங்க சரியில்லை அரெஸ்ட் பண்ணி லாடம் கட்டு…உண்மை தன்னாலே வெளி வரும் சம் டைம் சி.எம்மை.. போட்டு தள்ள வந்த ஆளுங்களாக கூட இருக்கலாம்.  

பவதீப் தானே சி.எம் பர்ஷனல் பாடி கார்ட்…எப்படி இவங்கள் மிஸ் பண்ணினான் எதற்காக இந்த பையனை இவங்க கிட்நாப் செய்ய வேணும்…இவன் இங்கே வந்திருக்கும் விவிஐபி பையனாக இருக்க வேணும்… 

பணத்திற்காக இல்ல வேற எதற்காகவோ… இவனை இவங்க கிட்நாப் செய்ய முயற்சி செய்து இருக்கிறாங்க…” என்றான்.  

தர்மா “ ஜெனரல் இவன் வேறு யாருமல்ல…சி.எம் பேரன் தர்ஷன் அவர் பெண்ணு புவனா மேடத்தின் பையன்…இவனை காணோம் என்று தான் பாஸ் தேட சொன்னார்.  

நானும் ராகுலும் இவனை தான் தேடி கொண்டு இருக்கிறோம்…நல்ல காலம் இவங்க உங்க கண்ணில் பட்டாங்க இல்ல… 

பையனை கிட்நாப் செய்து டிமான்ட் ஏதும் வைத்திருப்பாங்க…” என சொல்லி கொண்டு இருக்கும் போதே… ராகுலும் இன்னும் சில கார்ட்ஸ் ஓடி வந்தார்கள்.  

கிருபாகரை பார்த்தும் ஜெனரல் நீங்களா இங்கே..? என கேட்ட ராகுல் அவனுக்கு சலூட் அடித்தான்.  

ராகுல் “ வாட் ஏ சைப்பிரஸ் ஜெனரல் ராணுவத்தை விட்டு ஒரு அடி கூட…நீங்க நகர மாட்டீங்க இப்போ உங்களை பார்த்து எங்களுக்கு ஷாக்காக இருக்கு…தர்ஷன் எப்படி உங்க கிட்ட இவங்க யாரு..? என கேட்டான்.  

தர்மா நடந்ததை எல்லாம் சொல்ல ராகுல்…கீழே கிடந்த முன்னாவுக்கு இரண்டு அறை விட…அவன் பல் தெறிந்தது கீழே விழுந்து ரத்தம் வடிந்தது.  

ராகுல் “ என்ன தைரியம் இருந்தால் சி.எம் பேரன் மேலே கை வைத்து இருப்ப…எந்த இயக்கம் டா நீங்க உங்களை இப்படி கேட்டால் பதில் வராது… 

தர்மா இவங்களை நம்ம இடத்துக்கு தூக்கி கொண்டு போ….நீ கொடுக்கும் ட்ரீட்மெண்ட்ல் இவங்க பதிலை கக்க வேணும்..பாஸ் இவங்களை பற்றிய டீட்டெல் கலெக்ட் பண்ண சொல்லி இருக்கிறார்.  

ஜெனரல் வாங்க உள்ளே போகலாம்..தர்ஷனை என் கிட்ட கொடுங்க…” என்று தர்ஷனை வாங்க கை நீட்ட…தர்ஷன் கிருபாகர் கழுத்தை இறுக்க பற்றி கொண்டவன்… 

“ அங்கிள் நான் வர மாட்டேன் அப்பா கூட தான் இருப்பேன்…நீ போ…” என்றவனை… தர்மா, ராகுல் அதிர்ச்சியாக பார்க்க…அவன் முதுகை தடவி கொடுத்த கிருபாகர் ஹிந்தியில்.  

“ ராகுல்  தர்ஷனின் அப்பா ஆசையை காட்டி தான் இவங்க இவனை கிட்நாப் செய்தது…பையன் அதிர்ச்சியில் இருக்கிறான் அது தான் இப்படி பேசுகிறான்… 

என் அம்மா தான் நாட்டிய சிகாமணி சாரதா கண்ணன்…மயூரிகாவின் குரு மட்டுமல்ல ஆன்ட்டி கூட.  

மயூ என் தங்கச்சி அவள் டான்ஸை பார்க்க தான்…நேரில் வந்தேன் கால் கழுவி விட்டு போகலாம் என்று…இந்த பக்கமாக வந்த போது தான் இவங்களை பார்த்தேன்…” என்றான்.  

தர்மா “ சாரதா மேடம் பையனா நீங்க…மயூரி மேடத்தை தெரியுமா.? இது எங்களுக்கு தெரியாது …? ஜெனரல் நீங்க இங்கே வந்திருப்பது எங்களுக்கு சந்தோஷமாகவும் ஹெல்ப்பாகவும் இருக்கிறது.  

இந்த கோவிலில் டெரரிஸ்ட் மக்களோடு மக்களாக வந்திருக்கிறாங்க…என்ன டிமாண்ட் வைக்க போகிறாங்க என தெரியவில்லை…அதற்கு முன்னே நம்ம அவங்களை கண்டு பிடித்து தூக்க வேணும்.  

இவங்க ஏதோ ஒன்றுக்காக தான்…தர்ஷனை கிட்நாப் செய்ய முயற்ச்சி செய்து இருக்கிறாங்க…அதை முதலில் கண்டு பிடிக்க வேணும்…” என்றான்.  

கிருபாகர் “ உயிரே போனாலும் இவங்க வாய் திறக்க மாட்டாங்க தர்மா…இது ஆர்மியில் வேலை பார்த்த உனக்கு தெரியாதா..? இவங்களை விசாரிப்பது டைம் வேஸ்ட்…இவங்க டார்கெட் முதல்வராக தான் இருக்க வேணும்.  

இவங்களை கார்ட்ஸ் கிட்ட கொடுத்து விட்டு வாங்க…நம்ம உள்ளே போகலாம்….” என்று… சொல்லி கொண்டு இருக்கும் போதே துப்பாக்கி வேட்டு சத்தமும்…அதை தொடர்ந்து மக்களின் அலறலும் கேட்டது.  

கிருபாகர், ராகுல், தர்மா கூடவே சில கார்ட்ஸ் மண்டபத்துக்கு உள்ளே ஓடி போக…முன்னா, மற்றவனை மற்ற கார்ட்ஸ் கட்டி இழுத்து கொண்டு போனார்கள். 

மயில் ஆடி வரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page