ஆடி வரும் வண்ண மயிலே-26

அத்தியாயம்:26 

மஸ்தி மயூரியை நெருங்கி வர அவள் பின்னால் நகர்ந்து போனாள்… 

மஸ்தி அவள் நகர முடியாதவாறு…அவள் புடவையின் கரையை தன் பூட்ஸ் கால்களால் பற்றியவன்… குனிந்து அவள் புடவை மேலே கை வைக்க போக. 

“ வெயிட், ஆல் அப் யு ட்ராப் யுவர் கன்ஸ் ( துப்பாக்கியை அனைவரும் கீழே போடுங்க)…என்று பவதீப் சொன்னான்… அவன் உட்பட அங்கே நின்றிருந்த மற்ற கார்ட்ஸ்… அனைவருமே துப்பாக்கியை கீழே போட போக… 

காசிப் “ மேஜர் சார் உங்களை பற்றி எங்கள் விட தெரிந்தவங்க இருக்க முடியாது…நீங்க என்ன செய்கிறீங்க உங்க கையாலே இந்த துப்பாக்கியை எல்லாம் மூட்டை கட்டி… 

என் காலடியில் கொண்டு வந்து போடுகிறீங்க…வேறு ஏதும் பிளான் போட்டீங்க அதற்க்கு பிறகு…சி.எம் பேத்தி மானத்துக்கு நான் உத்தரவாதம் தர முடியாது…” என்றான்.  

பவதீப் அவனை ஒரு பார்வை பார்த்தவன்…அலெக்ஸ் என அழைக்க… யஸ் பாஸ் என சொல்ல “கலக்ட் தே கன்ஸ்…” என்றான். 

அலெக்ஸ் போய் அங்கே வந்திருந்த ஒருவரின்… சால்வையை வாங்கியவன் துப்பாக்கி எல்லாம் மூட்டை கட்டி… கொண்டு பவதீப்யிடம் கொடுத்தான்.  

அதை வாங்கியவன் பவதீப் தன் துப்பாக்கியையும் சேர்த்து…அதில் கட்டி கொண்டு காசிப் காலடியில் போட்டான் காசிப் சிரித்து விட்டு பாய்ஸ் என அழைக்க…அடுத்த செக்கன் எங்கு இருந்தோ முகத்தை மறைத்து… கறுப்பு ஆடைகள் போட்ட ஆளுங்க ஓடி வந்தார்கள்.  

காசிப் தன் இடது கையை உயர்த்தி சுற்றி காட்ட…அனைவருமே மக்கள் வெளியே போகாதவாறு அவர்களை…துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்தார்கள்… 

அது போல பவதீப், அலெக்ஸ் மற்ற கார்ட்ஸ் அனைவரின் பின்னும்…துப்பாக்கியோடு தீவிரவாதிகள் நின்றிருந்தார்கள்…பவதீப்பை பார்த்தவன்.  

காசிப் “ இப்படி உங்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி வைக்க வேணும்…என்பது என் எத்தனை நாள் கனவு தெரியுமா…? மேஜர் சாப் அது இன்று தான் சி.எம் பேத்தியால் அது நிறைவேறி இருக்கு.  

முதலில் அதற்க்கு இந்த லடுக்கிக்கு என் தன்யவாத் (நன்றி)…ஓகே டைம் வேஸ்ட் பண்ணாமல்… நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.  

சி.எம் சாப் எங்களுக்கு ஒரு கோரிக்கை இருக்கு…அதை நீங்க தான் இந்திய கவர்மெண்ட் கூட…பேசி நிறைவேற்ற வேணும் அது போல.. சக்ரபாணி சாப் உங்க கிட்ட சில காரியங்கள் எங்களுக்கு ஆக வேணும்.  

இதை நீங்க இரண்டு பேருமே செய்ய வேணும்…நீங்க மறுக்க முடியாது காரணம் உங்க ஆசை பேத்தி உங்க குடும்பத்தின் முதல் வாரிசு… 

எங்க கையில் அதை விட நாட்டிய தாரகை இந்தியா சார்பில்…கலந்து கொண்டு பல வெற்றி பதங்கள், கோப்பை என்று வென்று குவிந்த…ஆடும் மயில் இதை இழக்க கவர்மெண்ட் என்ன முட்டாளா..? 

ஓகே சி.எம் சாப் விஷயத்துக்கு வருகிறேன்…திகார் ஜெயிலில் இருக்கும் எங்க தோழர்கள் ஆறு பேரையுமே…இந்திய கவர்மெண்ட் விடுவிக்க வேணும்…இதை நீங்க தான் அவங்க கிட்ட பேசி செய்து தர வேணும்.  

அடுத்து சக்ரபாணி சாப் எங்களுக்கு ஐம்பது கோடி பணமும்…நாங்க எங்க நாட்டுக்கு சேப்பாக போய் சேரவும் ஒரு ஹெலிகாப்டர் வேணும்.  

இது தான் எங்க கோரிக்கை இதை நீங்க இரண்டு பேருமே…செய்தால் உங்க பேத்தி உங்க கையில் சேப்பாக கிடைப்பாள்…இல்லை என்றால் என்னை தப்பு சொல்ல கூடாது.  

உங்க பேத்தியின் மானமும் கூடவே இந்த மக்களின் உயிரும்…இப்போ உங்க இரண்டு பேரின் கையில் தான் இருக்கு…” என்றான்.  

பவதீப் “ நோ சான்ஸ் திகார் ஜெயிலில் இருக்கும் உன் ஆளுங்களை…இந்திய கவர்மெண்ட் விடுதலை செய்யாது… அவங்க என்ன தியாகிங்களா விடுதலை செய்ய..? 

அவங்களால் எத்தனை உயிர் பறி போனது…அதுவும் அவங்க மத வெறி பிடித்த கூட்டம் இந்திய நாட்டில்… ஒற்றுமையாக வாழும் மதங்களுக்கு இடையூறாக வந்த…சாத்தான்கள்.  

அவங்களை விடுதலை செய்தால்…எங்க நாடே சுடு காடாக மாறி விடும் அவங்களை பிடிக்க… நாங்க எத்தனை ராணுவ வீர்களை பலி கொடுத்தோம் தெரியுமா..? 

எத்தனை இளம் விதவைகள், தந்தையை, மகனை இழந்த உறவுகள்…இன்னும் அவங்க மனசில் அந்த ரணம் ஆறாமல் இருக்கு… 

இதில் அந்த குத்தாக்களை  (நாய்கள்) விட வேணுமா..? நீ பகல் கனவு காணாதே…” என்று கோபமாக சொல்ல…காசிப் அவன் அருகில் வந்தவன் பவதீப் கன்னத்தில் அறைந்தான்.  

பவதீப்பின் உதடு கிழிந்து ரத்தம் வந்தது…அவன் திரும்ப காசிப்பை தாங்க போக மஸ்தி என காசிப் அழைக்க…மாஸ்தி மயூரியின் முடியை கொத்தாக பற்றி தூக்கியவன்…அவள் கன்னம் இரண்டில் மாறி மாறி அறைத்தான்.  

மயூரி தாத்தா என அழுதாள் சக்ரபாணி… 

“ நோ வெயிட் உனக்கு பணம் தானே வேணும் நான் கொடுக்கிறேன்…ஐம்பது கோடியல்ல நூறு கோடி ஹெலிகாப்டர் எல்லாம்…ஆனா என் பேத்தியை மட்டும் விட்டு விடு என்னை வேணும் என்றால் கைது செய்…” என கெஞ்சினார்.  

காசிப் “ வரே வாவ் இது தான் தாத்தா பாசம்…சக்ரபாணி சாப் எங்களுக்கு தேவை நீங்க இல்ல ஏன் உங்க பேத்தியும் இல்ல…எங்க தேவையே வேறு நாங்க சொல்லி விட்டோம்.  

சி.எம் சாப் சக்ரபாணி சாப் தன் தாத்தா பாசத்தை காட்டி விட்டார்…நீங்க எப்படி மகன் வழி பேத்தியை காப்பாற்ற போகிறீங்களா..? இல்ல அந்த லடுக்கியை பலி கொடுத்து உங்க பதவியை காப்பாற்ற போகிறீங்களா..?  

உங்களுக்கு இன்னும் ஒரு விஷயம் சொல்லவா..? உங்க பேத்தி மட்டும் எங்க கையில் இல்ல உங்க…மகள் வழி பேரனும் இப்போ எங்க கையில் தான் உள்ளான்…அவனை நாங்க தூக்கி விட்டோம்.  

இப்போ உங்க இரண்டு பேர பசங்களும்… எங்க கையில் தான் இருக்காங்க… இனி முடிவெடுக்க வேண்டியது நீங்க தான்.  

பவதீப் எங்களை பார்த்தா நாய்கள் என்று சொன்ன…நாங்க நாய்கள் இல்ல டா நீங்க தான் நாய்கள் கவர்மெண்ட் போடும்… எலும்பு தூண்டுக்கு வாலாட்டி கொண்டு இருக்கும் ஆளுங்க உங்க ஆளுங்க …” என கோபமாக சொன்னான்.  

புவனா அய்யோ தர்ஷா என சொன்னவள் மயங்கி விழ…அவளை ராகவன் சட்டென பிடித்து கொண்டான் தியா வேறு… தூக்கத்தில் எழுந்து அழ தொடங்கி இருந்தாள்… 

ராகவன் “ பெரியப்பா இன்னும் என்ன யோசித்து கொண்டு இருக்கிறீங்க..? எப்போ பாரு என்னை பதவி வெறி பிடித்தவன் என திட்டுவீங்க… இப்போ அப்படி நிற்பது நீங்க தான்.  

உங்க பேரன், பேத்தியை விட உங்களுக்கு… இந்த முதல்வர் சீட் பெரிதாக போய் விட்டதா..? அவங்க கேட்பதை கொடுத்து தொலைத்தால் தான் என்ன..? என சத்தம் போட்டான்.  

மாலதி “ என்னங்க நீங்க இதில் எதற்காக தலையிட வேணும்…அது உங்க பெரியப்பா குடும்ப விஷயம் அவர் பார்த்து கொள்ளட்டும்.  

இது தான் உங்க குடும்பம் நான் உங்க பொண்டாட்டி, இவ உங்க பெண்ணு சரிகா…அதை விட்டு போட்டு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி ..உங்க உயிர்க்கு ஆபத்தை தேடி கொள்ள வேணாம்…” என்றாள்.  

சரிகா “ அப்பா அம்மா சொல்வது தான் சரி…உங்களை மதிக்காத அந்த மயூரி எப்படி போனால் உங்களுக்கு என்ன..? அவள் தான் பெரிய நாட்டிய தாரகை என்ற நினைப்பில் இருந்தாள்.  

இன்று பாருங்க அந்த நாட்டியமே அவளை காவு வாங்க போகிறது…அவள் இருந்தால் என்ன செத்தால் உங்களுக்கு என்ன..? உங்க பெண்ணு நான் தானே…” என குரூரமாக சொன்னாள்.  

ராகவன் “ வாயை மூடு முட்டாள் கழுதை…மயூரிகா என்னை ஒதுக்கினாலும் அவள் என்ன பெண்ணு இல்லை என்று ஆகி விடுமா.? மாலதி உன் எல்லையை தெரிந்து நடந்து கொள்ளு.  

என்னை பேச வைத்து விடாதே…இங்கே ஆபத்தில் சிக்கி இருப்பது என் பெண்ணும் என் மருமகனும் இது என் குடும்பம்…ஆயிரம் தான் பகை இருந்தாலும் கூட இவங்க உறவு மாறி விட போவது இல்லை… 

பெரியப்பா என்ன அமைதியாக நிற்கிறீங்க இவங்க கேட்டதை செய்து கொடுங்க…அவங்க ஆறு பேரையும் ரிலீஸ் செய்ய சொல்லுங்க…” என்றான்.  

குரு “ முட்டாள் ,முட்டாள் பயலே நான் ஒரு நாட்டின் முதல்வர் மட்டும் தான் டா… இந்திய பிரதமர் இல்ல படித்து அரசியலில் இருக்கும்…உனக்கு சட்ட சிக்கல் கூடவா தெரியாது.?  

பதவிக்கு ஆசைபடுபவன் நான் இல்ல நீ தான்…என் பேரன், பேத்திக்காக இந்த பதவியை தூக்கியெறிய தயங்க கூட மாட்டேன்…ஆனால் அவங்க மட்டும் என் உறவு இல்லையே என்னை நம்பி வாக்களித்த மக்களும் என் குடும்பம்.  

இதோ என் குடும்பம் போல தானே அவங்களும் ஆபத்தில் சிக்கி இருக்கிறாங்க…இவங்களை பாதுகாப்பது கூட என் கடமை.  

நம்ம என்ன டா அரசியலிலை வைத்து பணம், காசு பார்க்கவா அரசியலுக்கு வந்தோம்…நம்ம பரம்பரையாக அரசியல் குடும்பம், கோடீஸ்வர குடும்பம் டா.  

அது மறந்து போய் விட்டதா உனக்கு..? அது சரி பெத்த பெண்ணே இப்போ தான் உன் கண்ணுக்கு தெரியும் போது…இந்த விஷயத்தையா நீ ஞாபகம் வைத்திருக்க போகிற..? 

எனக்கு தெரியும் என் பேத்தி, பேரனை எப்படி காப்பாற்ற வேணும் என்று…நீ வாயை மூடு கொண்டு இரு… இடையில் புகுந்து குட்டையை குழப்பாதே…” என்றவர் காசிப்பை பார்த்து.  

“ இங்கே பாரு காசிப் நீ கேட்டதை உடனே செய்ய நான் பிரதமர் இல்ல…நான் டெல்லியில் பேசுகிறேன் எனக்கு என் குடும்பம் மட்டுமல்ல மக்களும் முக்கியம்…எனக்கு ஒரு நாள் டைம் கொடு.  

நீ கேட்ட பணம், ஹெலிகாப்டர் எல்லாம் சக்ரா தர தேவையில்லை…நானே இப்பவே தருகிறேன் ஆனால் நீ கேட்ட உன் தோழர்களின் விடுதலைக்கு… கொஞ்சம் பொறுத்து இருக்க வேணும் அதுவும் ஒரு நாள்…” என கேட்டார்.  

காசிப் “ ஓகே சி.எம் சாப் அது வரைக்கும் உங்க பேத்தி, பேரன் எங்க கூட இருக்கட்டும்…நீங்க சட்டசபையில் பேசி முடிவெடுப்பது போல…நாள், மாதக்கணக்கில் பேசி முடிவெடுத்து விட்டு வாங்க.  

ஒன்று மட்டும் சொல்வேன் உங்க பேத்தியின் மானத்துக்கும்…உங்க பேரனின் உயிருக்கும் நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது…எங்க கூட்டத்தை என்னால் தடுக்க முடியாது.  

மஸ்தி அந்த லடுக்கியை தூக்கி வா…நம்ம இடத்துக்கு கொண்டு போகலாம் சி.எம் சாப் காஷ்மீரில் வந்து எங்களை பார்க்கட்டும்…சி.எம் பேரனை நம்ம ஆளுங்க இப்போ தூக்கி இருப்பாங்க.  

சரி சி.எம் சாப் அப்போ நாங்க கிளம்புகிறோம்…உங்க பேத்தியை கடைசியாக முழுதாக பார்த்து விடுங்க…இதற்க்கு பிறகு இந்த லடுக்கி இப்படி  முழுதாக வருவது கஷ்டம் தான்…” என்றவன் மஸ்தியை பார்த்தான். 

மயில் ஆடி வரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page