அத்தியாயம்:27
மஸ்தி மயூரியின் கையை பற்றி இழுத்து கொண்டு மேடையில் இருந்து…கீழே இறங்க போனவன் அடுத்து நடந்ததை…. யூகிக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தான்.
பவதீப் மயூரியின் கையை பற்றி தன்னருகே இழுக்க அவள்…அவன் மார்பிலே முட்டி மோதி நின்றாள் அவளை ஒரு கையால் இழுத்து…தன் பின்னே மறைத்து வைத்தவன்.
கீழே கிடந்த மஸ்தியின் கால்லை அவன் பூட்ஸ் காலால் வைத்து அழுத்தினான்…உண்மையில் காசிப் கூட என்ன நடந்தது என தெரியாமல் மட்டுமல்ல.. அசைய முடியாமலும் நின்றிருந்தான்.
காசிப் பேசி முடிந்ததும் மஸ்தி மயூரின் கையை பற்றி… இழுத்து கொண்டு இருக்கும் போது கண்ணிமைக்கும் நொடியில் சட்டென …தன்னருகே நின்றிருந்த காசிப் கழுத்தில் பவதீப்…சின்னதாக ஒரு தட்டு தட்ட காசிப் உயிருள்ள சிலையாக நின்றிருந்தான்.
பவதீப் அலெக்ஸ் ஆக்சன் என சத்தமாக சொன்னவன்…ஒரே தாவில் மேடையேறி மஸ்தியின் வயிற்றில் உதைத்தவன்…மயூரை தன் பக்கமாக இழுத்து கொண்டான்.
அலெக்ஸ் சட்டென காசிப் நெற்றியில் துப்பாக்கியை வைக்க… பவதீப் கார்ட்ஸ் காசிப் ஆளுங்க துப்பாக்கியை பறித்து அவர்களின் நெற்றியில்…தங்கள் துப்பாக்கியை வைத்தார்கள்.
பவதீப் கீழே கிடந்த மஸ்தியை தூக்கி…தன் ஒரு கையால் அவன் கழுத்தை பற்றி கொண்டவன்.
“ நான் பவதீப் ரவீந்திரன் எந்த மிஷனிலும் நான் தோற்றது கிடையாது…இது என் தாய் நாடு எங்க உயிரை கொடுத்து இந்த நாட்டை காக்க வேணும் என்பது…ஓவ்வொரு ராணுவ வீரனும் எடுத்து கொண்ட சத்தியப்பிரமாணம்.
அதை போல நாட்டை ஆளும் தலைவரை காக்க வேண்டியது என் கடமை…எங்க நாட்டு பெண்ணுங்க நாங்க வணங்கும் தெய்வங்கள் போன்றவர்கள்.
அவங்க மேலேயா கை வைக்க நினைத்தீங்க… காசிப் தர்ஷனை உன் ஆளுங்களால் தூக்க முடியாது…அவன் இப்போ என் ஆளுங்க கையில் பாதுகாப்பாக இருப்பான்.
திகார் ஜெயிலில் இருக்கும் உங்க ஆளுங்க வெளியே வந்தால்…அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் ஒரு தடவை நாங்க உங்களுக்கு அடிபணிந்து விட்டால்…அதற்க்கு பிறகு நிரந்தரமாக உங்க அடிமையாகி விடுவோம்.
நான் உன்னை பேச விட்டு வேடிக்கை பார்த்தது…நேரம் வரும் போது பாய தான் புலி பதுங்குவது பயத்தால் அல்ல…பாய நேரம் பார்த்து தான் நாங்க என்ன உன்னை போல மக்களை மிரட்டி.
அவர்கள் பணத்தில் உழைப்பில் சொகுசாக தின்று கொண்டா இருக்கிறோம்…பனியிலும், வெயிலும் கடுமையான பயிற்சி செய்து நாட்டை காக்கும்…வீரர்கள் நாங்க.
காஷ்மீர் என்ன அழாக இயற்கை எழில் கொஞ்சம் ஊர்…சுற்றுலா தளம் வேறு இப்போ மக்கள் அந்த ஊரை… சுற்றி பார்க்க வரவே பயந்து போறாங்க…காரணம் நீங்க.
உங்க தீவிரவாத மத வெறியால் ஒரு ஊரையே…சுடுகாடாக மாற்றி கொண்டு இருக்கிறீங்க அங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை…குழந்தைங்க படிக்க சரியான வழி இல்லை மொத்தில் நிம்மதியாக வாழ வழியில்லை.
தினம் தினமும் எப்போ யுத்தம் நடக்கும் பாம் போடுவீங்க…உயிரை எடுப்பீங்க என்று பயந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க…
மதத்தின் மேலே பற்று இருக்கலாம்…வெறி இருக்க கூடாது எந்த கடவுளும் உயிரை எடுக்க சொல்லவில்லை டா முட்டாளே…அன்பை விதைக்க தான் சொல்லி இருக்கிறாங்க.
கடவுள் பெயரை வைத்து மதத்தை வியாபாரமாக்குவது நீங்க தான்…உங்களால் உங்க மதத்தின் மேலே மற்ற மதத்து ஆளுங்களுக்கு வெறுப்பு உண்டாகிறது…அனைத்து மதங்களும் சமம் என வாழும் நாடு டா இது.
இங்கே வந்தா உங்க கை வரிசையை காட்ட நினைக்கிறீங்க…எங்க ராணுவத்தை பாரு மூன்று மதத்து ஆளுங்களும் இருக்கிறாங்க…தங்க தாய் நாட்டை காக்க உயிரை விட கூட தயங்க கூட மாட்டாங்க.
காசிப் என்ன அசைய முடியாமல் இருக்கா..? நான் அடித்த அடி வர்மக்கலையில் ஒரு பகுதி…லேசாக தான் உன் கழுத்து நரம்பில் அழுத்தினேன்.
உன்னால் அடுத்து ஒரு அடி கூட நகர முடியாமல் இருக்கு பார்த்தாயா..? நான் எல்லா வித்தையும் கற்றவன் டா என் கிட்டேயே உன் விளையாட்டை காட்ட நினைக்கிறாயா..?
மதம் மேலே பற்று கொண்ட உனக்கு எதற்க்கு டா…நூறு கோடி பணமும், ஹெலிகாப்ட்டரும்…நீங்க எல்லாம் பெரிய தியாகிங்க பாருங்க உங்களை…பாதுகாப்பாக காஷ்மீர்க்கு அழைத்து போக.
அலெக்ஸ் காசிப், அவன் ஆளுங்களை பாதுகாப்பாக கொண்டு போ…கவர்மெண்ட் கிட்ட ஓப்படைக்க வேணும் முதலில் நம்ம இடத்துக்கு இவங்களை அழைத்து போ.
இவங்க தீவிரவாதிகள் தான் துரோகிகள் இல்ல…ஆனால் நம்ம நாட்டில் பல குள்ள நரி கூட்டம் இருக்கு …இவங்க கிட்ட பணத்தை வாங்கி கொண்டு இவங்களை விடுதலை செய்ய வரும்…” என்றவன்.
மஸ்தியின் கழுத்ததை ஒரு கையால் பற்றி இருந்தவன்..தன் மற்ற கையால் தன் பேண்ட் பாக்கெட்டியில் இருந்து…ஹேண்ட் கப்பை(handcuff) எடுக்க போக மஸ்தி சட்டென எதிர்பாரத நேரத்தில்…பவதீப் வயிற்றில் குத்த அவன் தடுமாற.
சட்டென அவன் பின்னால் இருந்த மயூரியின் கையை இழுத்தவன்…அவள் கழுத்தில் கத்தியை வைத்தவன்.
“ சூப்பர் மூவ் மேஜர் சாப் ஆனா நாங்க உங்களை விட சக்தி வாய்ந்த ஆளுங்க…மரியாதையாக பாடி பய்யா என் தோழர்களை உங்க ஆளுங்க கிட்ட சொல்லி…விட்டு விட சொல்லுங்க.
இல்ல அடுத்த செக்கன் சி.எம் பேத்தி கழுத்தில்…என் கத்தி பாய்ந்து விடும்…முட்டாள்தனமாக ஏதும் செய்ய நினைக்க வேணாம் உங்க வேகம் பற்றி தெரிந்ததால் தான் சொல்கிறேன்…” என்றவன்… மயூரின் கழுத்தில் கத்தியை வைத்து மெல்ல அழுத்தினான்
அவள் கழுத்தில் இருந்து லேசாக ரத்தம் வர…மயூரியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..பவதீப் கை முட்டிகள் அதை பார்த்து இறுக…
அவன் “ மஸ்தி வேணாம் நீ நெருப்பு கூட விளையாட நினைக்கிற…அவங்களை விட்டு விடு அவங்களை நம்ம யுத்தத்தில் இழுக்க நினைக்க வேணாம்…
அது போல இந்த அப்பாவி மக்களும்… நம்ம இடையே நடக்கும் பிரச்சனையில் உயிரை இழக்க வேணாம்.
நம்ம பேசி தீர்த்து கொள்ளலாம் உன் பாடி பாய்…நரம்பை திரும்ப எடுக்கும் வித்தை எனக்கு தான் தெரியும்…இல்ல அவர் நிரந்தரமாக இப்படி தான் நிற்க வேணும்…” என்றான்.
மஸ்தி “ நீ ரொம்ப பேசுகிற மேஜர் படித்தவன் இல்லையா..? உன் பேச்சால் மனசு மாற நாங்க அவ்வளவு வீக் இல்ல…நாங்க எங்க கொள்கைக்காக உயிரை எடுக்கவும் ,எங்க உயிரை கொடுக்கவும் தயங்க மாட்டோம்.
இப்போ நீ நான் சொல்வதை மட்டும் செய்…உன் ஆளுங்களை என் தோழர்களை விட்டு விலகி நிற்க சொல்லு…உங்க துப்பாக்கியை எல்லாம் என் தோழர்கள் கையில் கொடுக்க சொல்லு.
பாடி பாய் கேட்டது போல எங்க தோழர்களின் விடுதலை…கூடவே பணம், ஹெலிகாப்டர் எல்லாம் ஏற்பாடு செய்…
இல்ல இந்த லடுக்கி உயிர் ஒரு செக்கனின் போய் விடும் ..” என்றவன்… மயூரின் கழுத்தில் கத்தியை அழுத்த அவள் வலியால் துடித்தாள்.
பவதீப் “ சரி அவங்களை ஒன்றும் செய்யாதே…அலெக்ஸ் என அழைக்க போக…அடுத்த செக்கன் மஸ்தியின் கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து…
அவன் ஆவன என்ற அலறலோடு… தன் கையை பற்ற நொடியில் பவதீப் மயூரியை தன் பக்கமாக இழுத்தான்.
அனைவருமே யாரென்று பார்க்க கையில் பிஸ்டலோடு நின்றிருந்தான் கிருபாகர்…அவன் கையில் பாதுகாப்பாக தர்ஷன் இருக்க கிருபாகர் அருகில்… ராகுல், தர்மா மற்ற கார்ட்ஸ் நின்றிருந்தார்கள்.
பவதீப் ஒரு தடவை கிருபாகரை பார்த்தவன் கிருபா அண்ணா என அழைத்தான்…அது போல சாரதாவுக்கு ரொம்ப வருஷத்துக்கு பிறகு கண்ட தன் பையனை பார்த்தவர்… கண்கள் கலங்க கிருபா கண்ணா என அழைத்தார்.
காசிப் “ அரே ஜெனரல் சாப் நீங்க இங்கே எப்படி.? ரொம்ப வருஷமாகி விட்டது இல்ல நம்ம மீட் பண்ணி.. ஆனா உங்க முகம் எனக்கு மறக்கவில்லை பாருங்க மறக்க கூடிய முகமா உங்க முகம்..?
இவங்க எல்லாம் உங்க தம்பிங்க அப்படி தானே சொல்வீங்க…ட்ரைனிங் கொடுத்தது யாரு நீங்க இல்லையா..?
உங்க சட்டையில் பதங்கள் குத்த முடியாத அளவுக்கு உங்க மிஷனின் வெற்றி இருந்தது அல்லவா..? அது எல்லாம் எங்க தோழர்களின் ரத்தம் தப்பு பண்ணி விட்டீங்க ஜெனரல்…நீங்க பார்டரை விட்டது இங்கே வந்தது ரொம்ப தப்பு…” என சத்தம் போட்டு கொண்டு இருந்தவன்.
அடுத்த செக்கன் ஆவன அலறினான்…கிருபாகர் அவன் முட்டிக்கு கீழே சூட் பண்ணி இருந்தான்.
கிருபாகர் “ நீ ரொம்ப பேசி விட்ட காசிப் அதற்கு தான்..உனக்கு இந்த சின்ன பரிசு உனக்கு எல்லாம் உயிர்கள் விளையாட்டு பொருள் இல்லையா..?
நீ டிமாண்ட் வைத்து காப்பாற்றும் அளவுக்கு உன் தோழர்கள் தியாகிகள் அல்ல…அதை கேட்டு பயந்து போய் அவர்களை விடுதலை செய்ய இந்திய கவர்மெண்ட்…உன் தலையாட்டி பொம்மை இல்லை.
மரியாதையாக நீ ,உன் ஆளுங்க சரண்டர் ஆகிவிடுங்க…இல்ல உங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு…உங்க சாவு இருக்கும்…” என்றான் காசிப் சத்தமாக சிரித்தவன்.
“ ஜெனரல் சாப் எங்களை பற்றி தெரிந்து இருந்தும்…நீங்க இப்படி பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கு…நீங்களும், மேஜர் சாப்பும் தமிழ் நாட்டுக்கு வந்தவுடனே ரொம்ப மாறி விட்டீங்க.
உயிர் அது உங்களை போல ஆளுங்க தான் பெரிசு…எங்களை போல கொள்கையோடு வாழும் ஆளுங்களுக்கு அது தேவையில்லை…” என சொல்லி கொண்டு இருக்கும் போதே… பவா என்று கிருபாகர் சத்தம் போட…பவதீப் சட்டென திரும்ப.
மஸ்தி குண்டு பட்ட தன் இடது கையை விட்டு…வலது கையால் கீழே கிடந்த கத்தியை எடுத்தவன்….பவதீப் பின்னால் நின்றிருந்த மயூரியை குத்த வந்தான்…
பவதீப் சட்டென சுழன்று மயூரியை… தன்னோடு சேர்த்து அணைத்து தூக்கியவன்…அவளை நகர்த்தி விட்டான்.
மஸ்தி வேகமாக வீசிய கத்தி பவதீப்பின் வலது தோள்பட்டையை பதம் பார்த்தது…மயூரி அய்யோ…! என சத்தம் போட்டவள் மயங்கி விழ போக… அவளை தன் இடது கரத்தால் பிடித்து கொண்டவன்…
எதிரே நின்றிருந்த மஸ்தியின் வயிற்றில் ஓங்கி… உதை விட அவன் தூர போய் விழுந்தான்.
ராகுல் பாஸ் என பவதீப்பை நோக்கி ஓடி வந்தான்.
பவதீப் “ ஐ யம் ஓகே ராகுல் முதலில் இவன் தப்பி ஓடாதபடி பார்த்து கொள்ளு…இவனை, காசிப்பை அழைத்து போ…” என்றவனுக்கு லேசாக கண்கள் இருட்டியது…
மஸ்தி பலசாலி என்பதால் அவன் வீசிய கத்தி.. ஆழமாக பவதீப் தோள்பட்டையை பதம் பார்த்து.
மயூரியின் உடல் பாரத்தை அவன் தாங்கி கொண்டு இருப்பது வேறு…அவனுக்கு கஷ்டமாக இருந்தது அந்த நேரம் பார்த்து வெளியே மறைந்து இருந்த… காசிப் ஆளுங்க கண்ணீர் புகை குண்டுகளை வீச அந்த இடமே புகையால் சூழ்ந்தது .
மயில் ஆடி வரும்….
