ஆடி வரும் வண்ண மயிலே-32

அத்தியாயம்:32 

பவதீப், தர்மா இருவருமே திரும்பி பார்க்க…கிருபா மயூரியை தூக்கி கொண்டு வந்தவன்… 

அவளை அங்கே இருந்த ஒரு சேரில்.. அமர வைத்து விட்டு பவதீப் அருகில் போனான்….அவன் கை கட்டை பார்த்தவன். 

“ இப்போ பெயின் எப்படி இருக்கு பவா..? உனக்கும் எனக்கும் காயங்கள், வலிகள் புதிது இல்லை தான்…இதை விட யுத்தத்தில் நீ பெரிய காயங்களை தாங்கி இருக்க.  

இருந்தாலும் கூட நம்ம உடம்பு என்ன இரும்பிலா செய்து இருக்கு..? எனக்கு ஆச்சரியமான விஷயம் ஒன்று தான் பவா… நீ எப்படி பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்ட என்று.  

அதுவும் உன் டீம் பெஸ்ட் டீம் அனைவருமே திறமையான பயிற்ச்சி பெற்ற ராணுவ வீரர்கள்…ராகுல், தர்மா, நீ மூன்று பேர் இருந்தும் கூட எப்படி தீவிரவாதிங்க உள்ளே வந்தாங்க..? 

அதை விட ஒரு தீவிரவாதியை சமாளிக்க முடியாமல்…கத்தி குத்து வாங்கி இருக்க நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வீரமாக…முன்னால் போர்க்கு போகிறவன் நீ..? அப்படிப்பட்ட உன் எண்ணத்தை திசை மாற்றியது எது …? என கேட்டான்.  

பவதீப் “ நீங்க சொல்லவது எல்லாம் உண்மை தான் அண்ணா…தப்பு எங்க மேலே தான் அதுவும் சி.எம் பாதுகாப்பை…நான் பல தடவை சரி பார்த்து இருக்க வேணும்.  

கொஞ்சம் அசால்டாக இருந்து விட்டேன்…நான் தனியாக இருந்து இருக்க சமாளித்து இருப்பேன்.. பட் உங்க தங்கச்சி உயிரை காப்பாற்றுவது தான்…எனக்கு முக்கியமாக பட்டது.  

அந்த இடத்தில் உங்க தங்கச்சி என்று இல்லை…வேறு யாரும் இருந்து இருக்க கூட நான் இப்படி தான் நடந்து இருப்பேன்… 

இதை நான் செய்தது சி.எம் பேத்திக்காக இல்ல…ஒரு சிறந்த நடன கலைஞரை இந்த நாடு… இழந்து விட கூடாது என்பதற்காக தான்…” என்றான்.  

சக்ரபாணி அவன் அருகில் வந்தவர்….அவன் கைகளை மெதுவாக பற்றி கொண்டவர் அவன் கைகளை எடுத்து தன் கைகளுக்குள்ளே…பொத்தி வைத்தவர்.  

“ நன்றி என்று ஒரு வார்த்தை உங்களுக்கு போதாது பவதீப்…என் உலகமே என் பேத்தி தான் இன்று அந்த உலகத்தையே…எனக்கு காப்பாற்றி தந்து இருக்கின்றீங்க… 

நானும் கல்யாணியும் வாழ்வதே எங்க பேத்திக்காக தான்…எனக்கு உங்களை பற்றி பெரிதாக தெரியாது குரு சொல்லி தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்…நேரில் இன்று தான் உங்களை உங்க வீரத்தை பார்த்தேன். 

நீங்க சி.எம் பாடிகார்ட்  அவரை காப்பாற்ற வேண்டியது தான் உங்க கடமை…ஆனால் நீங்க உங்க உயிரை பணயம் வைத்து என் பேத்தியை காப்பாற்றி இருக்கிறீங்க …இத்தனைக்கும் என் பாடி கார்ட்ஸ் அங்கே இருந்தும் கூட.  

நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்…சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும் பணமா..? எத்தனை லட்சம் இல்ல கோடி என்றாலும் கொடுக்கிறேன்.  

இல்ல கம்பெனி ஏதும் வைத்து தரட்டுமா..? பங்களா, எஸ்டேட், மால் உங்க பெயரில் வாங்கி தரட்டுமா…? என கேட்டார்.  

கிருபா, தர்மா ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்களின் பார்வை…கதை முடிந்தது என சொன்னது பவதீப்யிடம் எதை எல்லாம் பேச கூடாதோ…அதை எல்லாம் சக்ரபாணி பேசி விட்டார்… இதற்க்கு பதில் தாறுமாறாக அவனிடம் இருந்து வரும் என நினைத்தார்கள்…பவதீப் மெல்ல சிரித்தவன்.  

“ நீங்க சி.எம் சாரின் நண்பர், உறவு என்பதால் தான்… நீங்க இத்தனை பேசியும் அமைதியாக பதில் சொல்கிறேன் சார்… 

அதை விட நீங்க வயதில் பெரியவர் பிசினஸ் செய்பவர் இல்லையா..? அது தான் பணத்தை காட்டி என் கடமையை… விலை பேசி விட்டீங்க.  

உங்க பேத்தியின் உயிருக்கு நீங்க கொடுக்கும் விலை ரொம்ப சின்னது …அந்த இடத்தில் உங்க பேத்தி என்று இல்லை சாதாரண பெண்ணாக இருந்து இருக்க கூட…நான் காப்பாற்றி இருப்பேன் நீங்க பணக்கார வர்க்கம்… அது தான் சட்டென பணத்தை நீட்டி விட்டீங்க.  

இது தான் உங்களை போல உள்ள பணக்கார வர்க்கம் செய்யும் தவறு…பணத்தை நீட்டி விட்டால் எல்லாம் முடிந்தது என்ற எண்ணம்…சரி ஒன்று கேட்கிறேன் உங்க பதிலை சொல்லுங்க…? 

அந்த இடத்தில் உங்க பணமா உங்க பேத்தியை வந்து காப்பாற்றி கொடுத்தது…? இல்லை தானே மனிஷன் தான் வந்து காப்பாற்றினான்…இதனால் தான் நான் பணக்கார ஆளுங்க கூட சகவாசம் வைத்து கொள்வது இல்லை.  

நீங்க சொன்ன நன்றியை கூட நான் ஏற்று கொள்வேன்…நீங்க சொல்லும் இந்த விலையை நான் எப்பவுமே ஏற்று கொள்ள மாட்டேன்…அதுமட்டுமல்ல நான் ஒரு ராணுவ வீரன் நாட்டை மட்டுமல்ல… நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது..என் கடமை…” என்றான். 

அவன் பேசியது தவறு இல்லை என்றால் கூட…முதல் தடவையாக தன்னை ஒருவன் நேருக்கு நேராக நின்று எதிர்க்கிறான்…அதை சட்டென ஏற்று கொள்ள முடியாமல் சக்ரபாணியின் முகம் மாறியது.  

அசோக் “ என்ன பவதீப் நீங்க அங்கிள் அப்படி என்ன தவறாக பேசி விட்டார்…மயூரி ஒன்றும் சாதாரண பெண்ணு இல்ல கோடிகணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு…சி.எம் பேத்தி மினிஸ்டர் ராகவனின் பெண்ணு.  

இதை எல்லாம் விட நாட்டிய தாரகை…இத்தனை அடையாளம் உள்ளவள் என் தங்கச்சி அப்போ அவளின் உயிரின் மதிப்பை…நீங்களே தீர்மானித்து கொள்ளுங்க சக்ரா அங்கிள் உயரம் தெரியுமா உங்களுக்கு…? 

அவர் இப்படி ஒரு சாதாரண பாடி கார்ட்டியிடம் பேசுவதே பெரிய விஷயம்…அதை விட அவர் உங்களுக்கு கொடுக்க நினைக்கும் அன்பளிப்பு நீங்க…உங்க வாழ்நாள் பூராகவும் சம்பாதித்தாலும் வாங்க முடியாத விஷயங்கள்.  

அதற்க்கு நன்றி சொல்வதை விட்டு போட்டு…இப்படி வியாக்கியானம் பேசி கொண்டு இருக்கிறீங்க…இதற்க்கு தான் அங்கிள் சொல்வது நமக்கு தகுதி குறைவான ஆளுங்க கூட…பேச்சு வார்த்தை வைத்து கொள்ள கூடாது என்பது.  

நீங்க நான் சொல்வதை கேட்காமல்  இவரை பார்க்க இங்கே வந்தீங்க…இப்போ வீண் பேச்சு எல்லாம் கேட்க வேண்டி இருக்கு…மயூ பாப்பா பாரு இதற்காக தான் அடம் பிடித்து இங்கே வந்தாயா..? 

ஒரு மனிஷன் அன்பாக ஒரு பொருள் தந்தால் அதை ஏற்று கொள்ள வேணும்…அதை விட்டு தேவையில்லாத பேச்சை எல்லாம் பேசி கொண்டு…” என கோபமாக சொன்னான்.  

அசோக் பேச்சு அதிகபடியானது என்று…அங்கே இருந்தவர்களுக்கு தெரியும் அவன் சக்ரபாணி மேலே உள்ள பாசத்தால் தான்…இப்படி பேசுகிறான் என்று சக்ரபாணி, கல்யாணி, கிருபா, மயூரிக்கு தெரியும்…ஆனால் பவதீப்க்கு தெரியாது இல்லையா..? 

அவன் கை முட்டிகள் இறுக அவன் பார்வை அசோக்கை வேட்டையாடவா..? என கேட்டது…நொடியில் அவன் பார்வையை புரிந்து கொண்ட மயூரி.  

“ அண்ணா கொஞ்சம் நேரம் அமைதியாக இரு…எப்போ பாரு எதாவது லெக்சர் பண்ணி கொண்டு முதலில் நீ போய்…நம்ம கிளம்பும் வேலையை பாரு சுனில் அண்ணா உன்னை தான் தேடி கொண்டு இருப்பார்…முதலில் நீ கிளம்பு…” என்றாள்.  

அசோக் பவதீப்பை முறைத்து பார்த்து விட்டு…கார்ட் தலைவன் சுனிலை தேடி போனான் அவன் போனதும்…மயூரி மென்மையாக பவதீப்பை பார்த்து புன்னகை புரிந்தவள்.  

“ தப்பாக நினைக்க வேணாம் பாடி கார்ட் சார்… அசோக் அண்ணாவுக்கு தாத்தா மேலே ரொம்ப பாசம்…அவரை பற்றி யாரும் என்ன பேசினாலும் இப்படி தான் நடந்து கொள்ளும்.  

இது கிருபா அண்ணாவுக்கும் தெரியும்…கிருபா அண்ணா கூட இடம், பொருள் பார்த்து பேச வேணும் என்று…எத்தனையோ தடவை அசோக் அண்ணா கிட்ட சொல்லி இருக்கிறார்.  

அது கேட்டால் தானே அது போல தாத்தா… உங்களை உங்க கடமை, நேர்மைக்கு விலை நிர்ணயம் செய்யவில்லை…நீங்க அதற்க்கு எல்லாம் அப்பாற்பட்டவங்க என்று புவனா அக்கா சொல்லி இருக்கு.  

தாத்தாவுக்கு நான் தான் உசிரு அந்த உசிரை காப்பாற்றி கொடுத்த உங்களை…அவர் தெய்வமாக தான் பார்க்கிறார் தெய்வம் நமக்கு நல்லது செய்தால்… 

நம்ம திரும்ப அவருக்கு நன்றி செலுத்தும்… விதமாக காணிக்கை கொடுப்பது இல்லையா..? 

அது பூ,பழம், புடவை ,பணம் இப்படி தானே காணிக்கை செலுத்துவோம்…சில நேரம் நம்ம உடலை வருத்தி கூட அவருக்கு காணிக்கை செய்வோம்…அது போல நினைத்து தான் தாத்தா உங்க கிட்ட அப்படி கேட்டார்.  

அவருக்கு புரியாத ஒரு விஷயம் தெய்வம் மட்டுமல்ல மனிதர்களில் சில பேர்…பிரதிபலன் எதிர்பார்ப்பது இல்லை என்று அவர் பார்த்த ஆளுங்களை… வைத்து உங்களை எடை போட்டு விட்டார்… 

இதற்க்கும் என் மேலே வைத்திருந்த பாசம் தான் காரணம்…பீளிஸ் தப்பாக எடுத்து கொள்ள வேணாம் நீங்க செய்தது… உங்களுக்கு கடமையாக இருக்கலாம்.  

எனக்கு அப்படி அல்ல எனக்கு நீங்க சாமிக்கு சமம்…சாமி தான் மனிதர்களை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாது காப்பாற்றுவார்…என் அம்மாவின் ஆன்மா இங்கே காற்றில் கலந்து இருக்கு.  

அந்த ஆன்மா நிச்சயமாக உங்களுக்கு நன்றி சொல்லி கொண்டே இருக்கும்…இதோ இங்கே வீற்றிருக்கும் அகிலம் காக்கும் நாயகர் பரமேஸ்வரன் கூட…நீங்க செய்த உதவிக்கு நிச்சயமாக நன்றி சொல்வார்.  

நீங்க மட்டுமல்ல உங்க டீம் கூட இங்கே உள்ள பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறீங்க…அதுவும் உங்க உயிரை பணயம் வைத்து அதற்க்கு என்ன கொடுத்தாலும் ஈடாகாது…தாத்தாவுக்கு பணத்தை விட நான் தான் முக்கியம்.  

அது தான் எனக்காக உங்க கிட்ட பணத்தை நீட்டி விட்டார்…உங்களை சாதாரண மனுஷனாக நினைத்து விட்டார் அவருக்கு தெரியவில்லை…  

தெய்வம் எப்பவுமே உண்மையான பக்தி, அன்பை தவிர.. எதையுமே ஏற்று கொள்ளாது என்று.  

நானும் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்…பணத்தால் அல்ல என் நடனத்தால் ஆம் இந்த மயூரிகா உங்களுக்கு தன் நடனத்தை நிறுத்தி நன்றியாக…பரமேஸ்வரனை முன் வைத்து நன்றி செலுத்துகிறாள்… 

இதை நீங்க மறுக்காமல் ஏற்று கொள்ள வேணும்…” என்றவள் தன் காலில் இன்னும் கழட்டாது இருந்த சலங்கைகள் கழட்டியவள்…கிருபா அண்ணா என அழைக்க கிருபா அவள் அருகில் வந்தான்.  

தன் கைகள் அவனை நோக்கி நீட்ட கிருபா அந்த மென் கரங்களை பற்றி கொள்ள…மெதுவாக அதை பற்றி கொண்டு எழுந்தவள் பவதீப்பை நோக்கி போனாள்.  

அவள்  தன்னை நோக்கி வருவதை பார்த்தவன்…பவதீப் தட்டுத்தடுமாறி எழு போக அவன்… அருகில் நின்றிருந்த தர்மா அவனை பற்றி தூக்கினான்…மயூரிகா அவன் அருகில் வந்தவள் அவனை நேராக பார்த்தவள்.  

தன் கையில் உள்ள சலங்கைகளை மெதுவாக தடவி விட்டவள்.  

“ இந்த சலங்கைகள் எப்பவுமே என் ஈஸ்வரனின் காலடியில் தான் தஞ்சம் கொண்டு இருந்தது…நான் காலில் சலங்கை கட்டிய நாள் முதல் அப்படி தான் இருந்தது… முதல் முறையாக மட்டுமல்ல கடைசி தடவையாகவும்.  

இந்த சலங்கைகள் உங்க காலடியில் தஞ்சம் அடைகிறது…இது தான் என் உயிர், மானம் இரண்டையும் காப்பாற்றிய உங்களுக்கு…நான் செலுத்தும் நன்றிக்கடன்…” என்றவள். 

மெல்ல குனிந்தவள் தன் விலையுயர்ந்த சலங்கைகளை… பவதீப் காலடியில் வைத்தாள். 

மயில் ஆடி வரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page