அத்தியாயம்:33
மயூரிகா தன் காலில் கட்டி இருந்த சலங்கைகள் கழட்டி…பவதீப் காலடியில் வைத்தாள் அவள் இப்படி செய்வாள் என்று…பவதீப் எதிர்பார்க்கவே இல்லை அவன் திகைத்து நிற்க.
மயூரிகா என சக்ரபாணி சத்தமாக அவளை…அழைத்தவர்.
“ ஆர் யு மேட் மயூரி என்ன காரியம் செய்து கொண்டு இருக்க…?எனக்கு விருப்பம் இல்லை என்றால் கூட நீ உன் அம்மா போல…. ஆசைபட்டு விட்ட என்ற ஒரு காரணத்துக்காக உன் காலில் சலங்கை கட்ட விட்டேன்.
உன் ஆறு வயதில் கட்டிய சலங்கைகள் இது…இது தெய்வத்தின் காலடியில் மட்டும் தான் தஞ்சம் அடைய வேணும்…அதை போய் மனிஷன் காலடியில் போடுகிற என்ன உனக்கு மூளையில் ஏதும் அடிபட்டு விட்டதா..?
அதுவும் நீ சக்ரபாணியின் பேத்தி…இப்படியா நடந்து கொள்வது..? என கோபமாக கேட்டார்…அவரை மென்மையாக பார்த்தவள் மயூரிகா.
“ உங்க கோபம் புரிகிறது தாத்தா…ஆனால் நான் சொல்வதை கொஞ்சம் நீங்க அமைதியாக கேட்க வேணும்…பாடி கார்ட் சார் உங்க பேத்திக்கு செய்த உதவிக்கு முன்னே இது சாதாரண ஒரு விஷயம் தான்.
உங்க பேத்தி இப்போ உயிரோடு மட்டுமல்ல மானத்தோடு உங்க முன்னே…நின்று பேசி கொண்டு இருக்க காரணமே இந்த பாடி கார்ட் தான்…ஒருவரின் உயிர், மானம் இரண்டையுமே காப்பாற்றுவர்களை அவர்கள் தெய்வமாக தான் பார்ப்பார்கள்.
நானும் அப்படி தான் பார்த்தேன் பாடி கார்ட் சார்… நம்ம பார்த்த ஆளுங்களிலே ரொம்ப வித்தியாசமானவர் தாத்தா அவரை… எதை கொடுத்தும் நீங்க விலைக்கு வாங்க முடியாது.
பாருங்க நீங்க எதை எல்லாம் கொடுத்து அவருக்கு நன்றிகடனுக்கு செலுத்த நினைத்தீங்க…ஆனால் அவர் அதை எல்லாம் துச்சமாக நினைத்து மறுத்து விட்டார்.
அவரை விலைக்கு வாங்கும் சக்தி ஒரு சில விஷயங்களுக்கு தான் இருக்கு தாத்தா…அதை புவா அக்கா பேச்சு மூலமாக தெரிந்து கொண்டேன்…அந்த ஒரு சில விஷயங்கள் அன்பு, கடமை, கலை, நேர்மை என்பது ஆகும்.
அது தான் நான் உயிராக நினைக்கும் கலையை கொண்டு…அவருக்கு நன்றிக்கடன் செலுத்தி விட்டேன்… நான் சக்ரபாணி பேத்தி நன்றி மறப்பது நன்றன்று என்று நினைப்பவள்.
தெய்வம் உண்மையான பக்தி, அன்பை மட்டும் தான் ஏற்று கொள்ளும்…அது தான் என் கலையை அவருக்கு சமர்ப்பித்து இருக்கிறேன்…இது தப்பு என்று நீங்க நினைக்கிறீங்களா தாத்தா…?என கேட்டாள்.
அவள் பேசிய அனைத்தும் உண்மை என்பதால்…சக்ரபாணி திரும்ப ஏதும் பேச முடியாமல் நின்றிருந்தார்…கல்யாணி
“ என்னங்க பாப்பா சொன்னது எல்லாம் சரியாக தானே இருக்கு…நமக்கு பாப்பா உயிரை விட இந்த நாட்டியமா முக்கியம்…? விடுங்க அவள் சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்…” என்றவர் பவதீப்பை பார்த்து.
“ தம்பி மீனு, புவனா இரண்டு பேருமே நாங்க பேசும் போது…உங்களை பற்றி பேசி இருக்கிறாங்க உங்க அன்பு, நேர்மை பற்றி எல்லாம்…அதை எல்லாம் நாங்க இன்று நேரில் பார்த்து விட்டோம்.
என் புருஷன் பேத்தி மேலே கொண்ட அன்பால்…சட்டென உங்க கிட்ட பணம் பற்றி பேசி விட்டார்… தப்பாக எடுத்து கொள்ள வேணாம் அவர் ஆணவம் கொண்டவர் இல்ல.
நீங்க இன்று செய்த உதவியை நாங்க சாகும் வரைக்கும்…மறக்க மாட்டோம் தயவு செய்து என் பேத்தியின் நன்றியை மட்டுமல்ல… எங்க நன்றியையும் ஏற்று கொள்ளுங்க…” என்றவர்…. தன் இரு கரம் குவித்து அவனுக்கு நன்றி சொன்னார்.
பவதீப் தன் காலடியில் இருந்த சலங்கைகள் மெல்ல குனிந்து எடுத்தவன்…அதை ஒரு கணம் பார்த்து விட்டு தன் எதிரே நின்றிருந்த…மயூரியிடம் சலங்கைகளை நீட்டியவன்.
“இது இருக்க வேண்டியது என் காலடியில் இல்ல மேம்…உங்க காலில் நிரந்தரமாக இது எப்பவுமே இருக்க வேணும்…உங்களை போல பேச எனக்கு வராது பட் எனக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன்.
இந்த சலங்கை உங்க காலில் இருந்தால் தான் முழுமை பெறும்…எனக்கு கலைகள் பற்றி பரிச்சயம் இல்லை தான் ஆனால் அதை ஒரளவு…புரிந்து கொள்ள முடியும் எனக்கு உங்க உணர்வுகள் புரிகிறது.
எனக்கு நீங்க நன்றி செலுத்த விரும்புகிறீங்க என்று…நீங்க அப்படி நன்றி செலுத்த விரும்பினால்…நீங்க செய்ய வேண்டியது ஒன்று தான் கலை என்பது கடவுள் கொடுக்கும் வரம்.
அதை எதை கொண்டும் வாங்க முடியாது…அப்படிப்பட்ட ஒரு அற்புதமான கலை உங்க பாதத்தில் இருக்கு…
அதை கடைசி வரைக்கும் நீங்க நிறுத்தாது ஆட வேணும்…அதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க வேணும்…அது தான் நீங்க எனக்கு செலுத்தும் நன்றிக்கடன்…” என சொன்னவன்.
சலங்கைகளை அவளை நோக்கி நீட்ட…மயூரி கண்கள் அவன் பேச்சால் வைரமாக பள பளத்தது…சும்மாவே அவள் கண்கள் ஆழ்கடல் போல ஆளை உள்ளே இழுக்கும்…இப்போ கேட்கவா வேணும்.
பவதீப் கூட ஒரு கணம் சித்தம் தடுமாறி போனான்…அவள் விழி அழகை கண்டு.
விழிகளில் விழிகளில்
விழுந்து விட்டாய் எனக்குள்
என்னையே ஒளித்து வைத்தாய்..
சின்னஞ்சிறு சிரிப்பினில்
சிதறடித்தாய் சிதறிய
இதயத்தை திருடி கொண்டாய்…
என்ற பாடல் தான் அவன் மனதில் ஒலித்தது…மயூரிகா அவன் நீட்டிய சலங்கைகளை வாங்கி கொண்டவள்…அதை நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.
கல்யாணி “ சரி தம்பி அப்போ நாங்க கிளம்புகிறோம்…நீங்க இன்று எங்களுக்கு மட்டுமல்ல பல உயிர்களை காப்பாற்றி கொடுத்து இருக்கிறீங்க…இப்படிப்பட்ட ஒரு புள்ளையை பெத்த உங்க பெத்தவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி.
அவங்களுக்கு எங்க நன்றியை சொல்லி விடுங்க…கிருபா பாப்பாவை நடக்க விடாதே அவளுக்கு காலில் லேசாக பிராக்சர் இருக்கு என்று…டாக்டர் சொன்னார் அதனால் அவளை தூக்கி கொண்டு நம்ம டென்ட்க்கு கொண்டு போ…” என்றார்.
கிருபா மயூரியை தூக்கி கொண்டு போக…அவள் பவதீப்பை பார்த்தவாறே போனாள்…முதல் தடவையாக பவதீப் தடுமாறி நின்றிருந்தான்.
ராகவன் பாண்டி,மாலதி, சரிகா இருந்த டென்த்க்கு வர…அங்கே அவர்கள் ஸ்நாக்ஸ், ஜூஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்…இவனை கண்டதும்.
மாலதி “ எங்கே போய் விட்டு வருகிறீங்க..? உங்களுக்கு கொஞ்சமாவது எங்க மேலே பாசம் இருக்கா..? பொண்டாட்டி, பெண்ணு மயக்கத்தில் இருக்கிறாங்களே…அவங்க பக்கத்தில் இருந்து பார்த்து கொள்வோம் என்ற எண்ணம் வேணாம்.
அண்ணா மட்டும் இல்லை என்றால் நானும் என் பெண்ணும் செத்து இருக்க வேணும்…அது தானே உங்க ஆசை அப்போ தானே உங்க மூத்த பெண்ணு… கூட இருக்கலாம்.
இத்தனைக்கும் அவளுக்கு உங்க மேலே ஒரு துளி கூட பாசம் இல்லை…ஏன் அப்பா என்ற உறவு இருப்பதே அவளுக்கு தெரியுமோ தெரியாது…? இதில் நீங்க தான் அவள் பின்னாடி நாய் போல சுற்றி கொண்டு இருக்கிறீங்க.
கூடவே உங்களை ஏத்தி விட உங்க பெரியம்மா, தங்கச்சி இருக்கிறாங்க…இப்போ அந்த தங்கச்சி புள்ளைங்க உங்களுக்கு முக்கியமாக போய் விட்டாங்க இல்லையா..?
அந்த சின்ன குட்டியை அப்படி பாதுகாப்பாக வெளியே கொண்டு வருகிறீங்க…இதுவே உங்க பெண்ணு சரிகா மூச்சு திணறி கொண்டு இருக்கிறாள்.. .அவளை காப்பாற்றாது உங்க தங்கச்சி பெண்ணை காப்பாற்றி இருக்கிறீங்க.
எனக்கு இப்போ தான் சந்தேகமாக இருக்கு…இத்தனை நாள் நீங்க நடித்து கொண்டு இருந்து இருக்கிறீங்க…அது வேறு ஒன்றுமில்ல என் அண்ணன் தயவு இருந்தால் தானே நீங்க அரசியலில் மேலே வர முடியும்.
உங்க பெரியப்பா அவர் குடும்பம் கூட …பேச்சு வார்த்தை இல்லை என சொன்னது எல்லாம் பொய்….அப்படி இருந்து இருக்க உங்க பெரியம்மா உங்க தங்கச்சி இரண்டு பேருமே.
இப்படி உங்க கிட்ட ஒட்டி கொண்டு சிரித்து பேசி இருக்க மாட்டாங்க…அந்த சின்ன குட்டி வேறு அப்படி உங்க கூட ஒட்டுகிறாள்…அப்போ எங்களுக்கு தெரியாமல் அவங்க வீட்டுக்கு நீங்க போய் வருகிறீங்க.
ஆனால் ஒன்று அந்த சக்ரபாணி தான் மானஸ்தன்…உங்களை திரும்பி கூட பார்க்கவே இல்லை உங்களுக்கு வெட்கமாக இல்லையா..? உங்களை மதிக்காத இடத்து போய் இருக்கிறீங்க.
உங்க பெரியப்பா ஏதோ நீங்க அவர் அடிமை போல…அந்த பாடி கார்ட் பயலை அனுப்பி கிட்ட தட்ட உங்களை மிரட்டி அழைத்து வர கொண்டு வர சொல்கிறார்…நீங்களும் அவன் அழைத்ததும் கிளம்பி போகிறீங்க.
இதில் ஏதோ விஷயம் இருக்கு அண்ணா இவர்… உன்னை, எங்களை எல்லாம் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்…” என்று கோபமா சத்தம் போட்டாள்.
ராகவன் “ வாயை மூடு மாலதி நானே ரொம்ப கோபத்தில் இருக்கிறேன்…என் பெண்ணை பார்க்க, பேச கூட முடியாத நிலையில் நிற்கிறேன் என்று …இதில் நீ வேறு பிலாக்கணம் வைத்து கொண்டு நிற்கிற.
உன்னை சரிகாவை ஏதோ நடு வீதியில் விட்டு போனது போல…பேசி கொண்டு நிற்கிற பாண்டி கூட தானே விட்டு போனேன்…அவன் உன் அண்ணன் உன்னை பார்த்து கொள்ள மாட்டானா..? அதுவும் ஏதோ கடல் கடந்து ஓடி போனது போல பேசுகிற.
உன் கண் முன்னே உன் கிட்ட சொல்லி விட்டு தான் பக்கத்து சீட்டில் இருக்கும்…என் குடும்பத்தை பார்க்க போனேன் ஒன்றை நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளு மாலதி.
நீ பெரியப்பாவை பேசினால் கூட பொறுத்து போவேன்…ஆனால் பெரியம்மா என் தங்கச்சி மருமக்களை பற்றி பேசின…நான் மிருகமாகி விடுவேன் தியா பாப்பா வயது என்ன மூன்று வயது.
சின்ன குழந்தை அவளும் இருபது வயது சரிகாவும் உனக்கு ஒன்றா…இத்தனை நாள் அவளுக்கு என்னை தெரியாது…அதனால் என் கூட ஒட்டவில்லை இப்போ மாமா என்ற உரிமையில் குழந்தை ஒட்டுகிறாள்.
அது உனக்கு பொறுக்கவில்லையா..? நீ இல்லை என்றாலும் கூட ஊர், உறவு அறிந்த உண்மை மயூரிகா என் மூத்த வாரிசு…ஏன் என்னை கல்யாணம் பண்ணும் போது உனக்கும் தெரியும் தானே பிறகு என்ன..?
உனக்கும் சரிகாவுக்கும் நான் இப்போ வரைக்கும்…எந்த குறையும் வைத்து இல்லை அதை நீ கூட இல்லை என சொல்ல முடியாது…ஆனா மயூவுக்கு நான் இது வரைக்கும் ஒரு சுடிதார் கூட எடுத்து கொடுத்தது இல்லை.
அவள் பிறந்த நாளைக்கு வாழ்த்து கூட சொன்னது இல்லை…இதில் ஏதோ உன்னை விட்டு….அவளுக்கு மட்டும் செய்வது போல பேசி கொண்டு இருக்க.
நானே மாமா மேலே செம கோபத்தில் இருக்கிறேன்…என் பெண்ணை பார்க்க தடை போடுகிறார் என்று…இதில் நீ வேறு இருக்கும் கோபத்தில் ஏதும் செய்து விடுவேன்.
மரியாதையாக உன் அண்ணன் கூட நீயும் சரிகாவும் சென்னைக்கு கிளம்புங்க…நான் கட்சி ஆபிஸ் வரைக்கும் போய் வருகிறேன் பாண்டி உன் முட்டாள் தங்கச்சிக்கு புரிய வை.
எலக்சன் வருகிறது ஏதும் ஏடாகூடமாக செய்து வைத்தாள் என்று வை…அதற்க்கு பிறகு இருக்கு இவளுக்கு சே…வர வர நிம்மதியே இல்லை…” என்று சொல்லி விட்டு கோபமாக டென்ட்டை விட்டு வெளியே போனான்.
மயில் ஆடி வரும்…
