ஆடி வரும் வண்ண மயிலே-36

அத்தியாயம்:36 

கனகராஜ் ராகவனை கைபிடிக்குள்ளே வைத்திருக்கும்…ஒரு வழியை கண்டு பிடிக்க சொன்னார்.  

அவர் சொன்னதும் ராஜவேலு, பாண்டி இருவருமே…அமைதியாக யோசிக்க ஆரம்பித்து விட்டனர் கொஞ்ச நேரத்தில்… ராஜவேலு முகம் மலர… 

“ அண்ணா ராகவனை மட்டுமல்ல அந்த குரு மூர்த்தி, சக்ரபாணியையும்…நம்ம கைபிடிக்குள்ளே வைத்திருக்க ஒரு வழி இருக்கு…” என்றான்.  

கனகராஜ் “ என்ன வழி வேலு அது…நீ சொன்னால் அந்த வழி சரியாக தான் இருக்கும்…” என்றார்…பாண்டியை பார்த்தவாறே ராஜவேலு.  

“ அண்ணா ராகவன் பெண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாக வர வேணும்…என்ன புரியவில்லையா..? நான் அவன் பெண்ணை கல்யாணம் கட்டி கொள்ள வேணும்…” என்றான்.  

பாண்டி மட்டுமல்ல கனகராஜ் கூட…. அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டார்கள்…கோபமாக பாண்டி  

“ நீ நினைப்பது எப்பவுமே நடக்காது ராஜவேலு…சரிகா நான் தூக்கி வளர்த்த பெண்ணு என் வாரிசும் கூட…நான் இல்லீகல் வேலை பார்ப்பவன் தான்… அந்த சொத்தை எல்லாம் யாருக்காக சேர்த்தேன்.  

என் பெண்ணு அவளுக்காக பெரிய இடத்தில் படித்த பையனுக்கு…அவளை கட்டி வைக்க நினைத்து இருக்கிறேன்…அவள் வயது என்ன..? உன் வயது என்ன..? ரொம்ப மட்டமாக பேசுகிற.  

நான் பணத்தாசை பிடித்தவன் தான் சுயநலகாரன் தான்…அது மற்றவங்களுக்கு என் பெண்ணுக்கு இல்லை…அதனால் இந்த பேச்சை இத்தோடு விட்டு விடு வேறு வழியை பாரு…” என கோபமாக சொன்னான்.  

ராஜவேலு “ உனக்கு மூளையில் மசாலா இருக்கா…? இருந்து இருக்க நான் பேசுவது உனக்கு புரிந்து இருக்கும்…உன் தங்கச்சி பெண்ணு இந்த வீட்டு மருமகளா…? 

அதற்க்கு ஒரு தராதரம் வேணாமா …? அது உன் குடும்பம் உன் தங்கச்சி பெண்ணு பற்றி தெரிந்து இருந்தும்…பெண்ணு கேட்க நான் பைத்தியக்காரன் இல்லை… 

அதை விட ராகவன் உன் தங்கச்சி அவள் பெத்த பெண்ணுக்கு…கொடுத்து இருக்கும் இடம் பற்றி எனக்கு நல்லா தெரியும்.  

கோபுர கலசம் இருக்கும் போது குப்பை மேடுயை தேர்ந்தெடுக்க நான் என்ன முட்டாளா..? என்ன முழிக்கிற…நான் ராகவன் பெண்ணு என சொன்னது யாரை தெரியுமா..? அவனின் ஒரிஜினல் வாரிசு மயூரிகா ராகவனை தான்…” என்றான்.  

உண்மையில் கனகராஜ்க்கு நடிப்புக்காக இல்லாது…உண்மையிலே நெஞ்சு வலி வருவது போல இருந்தது…பாண்டிக்கு இவனுக்கு தலையில் ஏதும் அடிபட்டு விட்டதா..?  

இப்படி பிணத்தி கொண்டு இருக்கிறான்…சாவு இவனை தேடி வராமல் இவனே சாவை தேடி போகிறேன்…என்று சொல்கிறான் என நினைத்தான்…கனகராஜ் டேபிளில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தவர்.  

மடக்கு மடக்கு என சாப்பிட்டு விட்டு…ராஜவேலுவை பார்த்து.  

“ வேலு நீ பேசியது எனக்கு சரியாக கேட்கவில்லை…திரும்ப ஒரு தடவை சொல்கிறாயா..? என கேட்டார்.  

ராஜவேலு “ அண்ணா நீங்க சரியாக தான் கேட்டு இருக்கிறீங்க…ராகவனின் மூத்த பெண்ணு மயூரிகா தான் நம்ம வீட்டின் இரண்டாவது மருமகள்…உங்க தம்பியின் பொண்ட்ட்டி அதற்கான ஏற்பாடுகளை பாருங்க…” என்றான்.  

பாண்டி “ தலைவரே உங்க தம்பியே…அவன் கையால் உங்களுக்கு பாடை கட்ட தயாராகி விட்டான்…அதற்க்கு தனியாக வெளியே இருந்து யாருமே வர தேவையில்லை…” என கோபமாக சொன்னான்.  

கனகராஜ் “ ஏய்…! முட்டாள் ராஜவேலு என்ன பேசி கொண்டு இருக்க…வேடிக்கை பேச்சு பேசும் நேரமா இது..? அடுத்த மாதம் எலக்சன் வருகிறது…இதில் நீ ஏழரை சனிக்கு அழைப்பு வைக்கிற.  

மயூரி ராகவன் பெண்ணு மட்டுமல்ல குருமூர்த்தி, சக்ரபாணியின் பேத்தி…பரம்பரை கோடீஸ்வரி அவர்களின் மூத்த வாரிசு இதை விட… சரிகாவை விட அவளுக்கு இரண்டு வயது தான் அதிகம்.  

இந்தியாவின் கலை பொக்கிஷம்…படித்த பெண்ணு பேரழகி இப்படிப்பட்ட பெண்ணு நம்ம குடும்பத்து மருமகளா..? 

நீ எனக்கு தான் உயர்வு மற்றவங்களுக்கு இல்லை…நம்ம புதிய பணக்காரங்க அதை மனதில் வைத்து கொண்டு பேசு… 

எனக்கு நீ தானே பெண்ணு பார்த்த அப்போ என்ன எல்லாம்… கேள்வி கேட்டு நம்ம குடும்பத்தை கேவலப்படுத்தினாங்க என்று தெரியும் தானே… 

அதுவும் சாதாரண குடும்பத்து ஆளுங்க…அப்படி இருக்கும் போது குருமூர்த்தி சி.எம் சக்ரபாணி பெரிய பிசினஸ் மேன்…பல கம்பெனிகளுக்கு சொந்தகாரர் அந்த குடும்பத்து வாரிசு நம்ம வீட்டு மருமகளா..? 

முதலில் பெண்ணு கேட்டு போக அந்த சக்ரபாணி…அவன் வீட்டு படியேற கூட விட மாட்டான் அதை முதலில் புரிந்து கொண்டு பேசு…” என்று கோபமாக சொன்னார்.  

ராஜவேலு “ நம்ம எதற்காக அண்ணா அங்கே எல்லாம் போக வேணும்…அது தான் மயூரிகாவை பெத்த ராகவன் உயிரோடு இருக்கிறான் தானே…அவன் கிட்ட பெண்ணு கேட்கலாம்.  

அவனுக்கு தானே முதல் உரிமை இருக்கு…அதுவும் நம்ம பெண்ணு கேட்க போவது இல்லை…நம்ம சார்பாக பெண்ணு கேட்க போவது பாண்டி தான்… 

என்ன பாண்டி ராகவன் உன் தங்கச்சி புருஷன் தானே…அதனால் நீ தாராளமாக கேட்கலாம்…” என்றான்.  

பாண்டி “ உனக்கு மறை கழன்று விட்டதா ராஜவேலு…என் கதையை சத்தம் இல்லாது முடிக்க பார்க்கிறாயா..? எத்தனை நாள் திட்டம் இது ராகவன் பற்றி… உனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை.  

அவனுக்கு முதல்வராக வேணும் என்று கனவு இருக்கு தான்…அதற்காக அவன் தன் பெண்ணை தாரை வார்ப்பான் என்று… கனவில் கூட நினைத்து விடாதே மயூரி சியாமளாவின் பிம்பம்.  

அந்த பிம்பத்தை உன் கூட ஜோடி சேர்க்க அவன் என்ன முட்டாளா..? தஞ்சையில் நடந்ததை பார்த்த தானே பிறகு எதற்காக என்னை இதில் கோர்த்து விடுகிற..? நான் போய் உன் சார்பாக பெண்ணு கேட்டேன் என்று வை.  

அவனுக்கு என் மேலே சந்தேகம் வந்து விடும்…நான் உன் கூட கூட்டணி வைத்து இருக்கிறேன் என்று பிறகு… நான் போட்ட திட்டம் எல்லாம் கானல் நீராகி விடும். 

தலைவரே கொஞ்சம் உங்க தம்பிக்கு மண்டையில் ஏறுவது போல…எடுத்து சொல்லுங்க நான் போய் இவருக்காக பெண்ணு கேட்க வேணுமாம்…ஏன் நான் உயிரோடு இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா..? என கேட்டான்.  

கனகராஜ் “ வேலு வேணாம் இந்த ஆபத்தான வேலை…நம்ம வேறு வழி பார்க்கலாம் எனக்கு என் தம்பியின் உயிர் முக்கியம்…” என்றார்.  

ராஜவேலு “ இல்ல அண்ணே…! எனக்கு பொண்டாட்டி என்றால் அது அந்த மயூரிகா தான்…பாண்டி நான் சொல்வது போல நீ ராகவனிடம் பேசு முடியாது என்றால்…உன் கடத்தல் வேலை, கொலை ஆதாரம் எல்லாமே என் கிட்ட இருக்கு.  

அதை வெளியே விட்டேன் என்று வை அந்த ராகவன் சக்ரபாணி,குரு மூர்த்தி உனக்கு…பாடை கட்டி விடுவாங்க என்ன ஞாபகம் இல்லையா..? ஞாபகப்படுத்துமா..? 

அந்த சியாமளா எப்படி செத்தாள்…? அதை விட பரத்க்கு விபத்து எப்படி நடந்தது..? என்ன அதிர்ச்சியாகி விட்ட நீ எங்க கூட… கை கோர்க்க வரும் போதே உன்னை பற்றி ஆதாரங்களை நான் சேகரித்து விட்டேன்.  

நீ பெரிசாக ஏதுவுமே செய்ய வேணாம்…நான் சொல்வது போல மட்டும் செய் மற்றதை நான் பார்த்து கொள்வேன்…” என்றான்.  

மயூரிக்கு ரொம்பவே போரடித்தது…சக்ரபாணி, மீனா இருவருமே கண்டிப்பாக சொல்லி விட்டாங்க…இன்னும் ஒரு வாரத்துக்கு நீ டான்ஸ் ஸ்கூலுக்கு போக கூடாது என்று.  

வீட்டில் இருந்து என்ன என்றாலும் செய்….அது போல வெளியே போக கூடாது என்று சாரதா வேறு ரொம்ப வருடத்துக்கு பிறகு வந்த மகனுக்கு…அவனுக்கு பிடித்த சாப்பாடு எல்லாம் தன் கையால் சமைத்து கொடுத்து கொண்டு இருந்தார்.  

கிருபாவுக்கும் அன்னையின் ஏக்கம் புரிந்தது…அவனும் சில முடிவுகளை எடுத்து விட்டு தான் வந்திருந்தான்…அது பற்றி அவன் சக்ரபாணியிடம் கலந்து ஆலோசிக் வேணும் என்று நினைத்தான்.  

அவர் வீட்டில் இருக்கிறாரா என கால் பண்ணி அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டே…சக்ரபாணியின் பங்களாவுக்கு வந்து இருந்தான் …அவன் வருவதாக சொன்னதால் அசோக், யசோதா, வெங்கட்டை கம்பெனிக்கு முதலில்…அனுப்பி விட்டு அவர் பிறகு வருவதாக சொன்னார்.  

சக்ரபாணி கிருபா வருவதாக சொன்னதால்…கல்யாணி மதிய விருந்தை கொஞ்சம் பெரிதாக செய்ய சொல்லி விட்டார்…மயூரி வேறு கிருபா வருவுக்காக காத்திருந்தாள்.  

கண்மணி “ அக்கா இப்போ எதற்காக… இப்படி குட்டி போட்ட பூனை போல ஹாலில் நடந்து கொண்டு இருக்க…அது தான் அண்ணனும் ஆன்ட்டியும் கிளம்பி விட்டதாக.. சொன்னாங்க தானே வந்து விடுவாங்க…” என்றாள்.  

கல்யாணி “ இதை தான் நானும் காலையில் இருந்து சொல்கிறேன்…கேட்டால் தானே சரி விடு அவளுக்கு இது பயிற்ச்சி தானே நடக்கட்டும்…மணி உனக்கு காபி வேணுமா..? 

நான் எனக்கு காபி கலக்க போகிறேன்…அது தான் கேட்டேன் மயூரின் தாத்தாவுக்கு இடையில் காபி சாப்பிட கொடுக்க கூடாது என… டாக்டர் சொல்லி இருக்கிறார் மயூ உனக்கு வேணுமா..? என கேட்டார்.  

மயூரி தனக்கு வேணாம் என சொல்ல…கல்யாணி தனக்கும் கண்மணிக்கும் காபி கலந்து எடுத்து வந்தார்…கல்யாணி  

“ என்னங்க இந்த தடவை கட்டாயமாக கிருபா கல்யாணத்தை நடத்தி வைக்க வேணும்…வயது வேறு ஆகிவிட்டது நானும் சாரதாவும் சொன்னால் மழுப்பலாக பதில் சொல்வான்.  

அதனால் நீங்க கொஞ்சம் கண்டிப்பாக சொல்லுங்க…ஏதும் காரணங்களை அடுக்குவான் நம்பி விட வேணாம்…” என்றார்.  

சக்ரபாணி “ இந்த தடவை அப்படி நடக்க விட மாட்டேன் கல்யாணி…அவன் என் கிட்ட ஏதோ வருவதாக சொன்னான் சில நேரம்… அவனுக்கு பெண்ணு ஏதும் பிடித்து இருக்கோ தெரியாது.  

இவன் வேறு காஷ்மீ்ர் பாடரில் தானே இருந்தான்…அந்த ஊர் பெண்ணோ தெரியாது சாரதாவுக்கு… தெரிந்தால் சம்மதிக்க மாட்டாள் என நினைத்து இருப்பான்…அதற்காக தான் என் உதவி கேட்டு வருகிறானோ தெரியாது. 

இவனும் சியாமளா போல தான் பொருத்தம் இல்லாத ஜோடிகளை தேர்ந்தெடுத்து விட்டு…கடைசியில் வாழ்க்கையை இழந்து நிற்பது எத்தனை தரம்… எடுத்து சொன்னேன் நம்ம பெண்ணு கிட்ட… 

கேட்டாளா..? இல்ல பா அவர் பார்க்க தான் முரடு உள்ளே என் மேலே ரொம்ப பிரியம்…அது இது என சொல்லி என் வாயை அடைத்தாள்…அவள் மேலே நான் வைத்துள்ள பாசத்தை காட்டி என்னை சம்மதிக்க வைத்தாள்.  

என் ஒரே பெண்ணு என் உயிர் என்று அவள் ஆசையை இந்த பாவி நிறைவேற்றினேன்…கடைசியில் அவளை ரத்த வெள்ளத்தில் தான் பார்த்தேன்.  

இப்போ இவன் முறை சாரதாவின் உலகமே இவன் தான்..எந்த தீவிரவாதியின் தங்கச்சி இல்ல அக்காவோ தெரியாது…? 

அவன் வேறு சத்தம் இல்லாது இவன் கதையை முடித்து விட்டு …யுத்தத்தில் இறந்ததாக காரணம் காட்டி விடுவான்.  

இந்த வீட்டில் காதல் என்ற வார்த்தையை… நான் கேட்க கூடாது இது மயூரி, கிருபாவுக்கு மட்டுமல்ல… கண்மணி, யசோதாவுக்கு கூட இது தான் என் கட்டளை…” என்று கோபமாக சொன்னவரை மயூரி பயத்தோடு பார்த்தாள். 

மயில் ஆடி வரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page