அத்தியாயம்:39
மயூரின் கையை பிடித்து வெளியே இழுத்தான் ராஜவேலு…தன் கையை அவன் கரத்தில் இருந்து உருவ முயன்றவாறே…மயூரி
“ விடுங்க என்னை என் தாத்தாக்கள், அப்பாவுக்கு இது தெரிந்தால்…உங்களை சும்மா விட மாட்டாங்க நான் வீட்டுக்கு போக வேணும்…” என்று அழு குரலில் சொன்னாள்.
ராஜவேலு “ அப்பாடியா பொண்டாட்டி..? அவங்க என்ன என் தலையை கொய்தா விடுவாங்க..? நான் யாரு தெரியுமா ராஜவேலு…என் கிட்ட அவங்க ஆட்டம் எல்லாம் சொல்லாது.
டேய்…மற்றவங்களை கட்டி இழுத்து வாங்க டா கல்யாணத்துக்கு அட்சதை போட ஆள் தேவைப்படும்…இது யாரு கிராமத்து குயில் போல இருக்கு.
நீயும் பார்க்க சுமாராக தான் இருக்க…இப்போ நீ எனக்கு தேவைபட மாட்ட ரத்தின கல் இருக்கும் போது பித்தளை எதற்க்கு…?
வேணும் என்றால் என் ஆளுங்களுக்கு உன் தேவை இருக்கலாம் என்ன டா..? என தன் அடியாட்களை பார்த்து கேட்க அவர்கள் சிரித்தார்கள்.
கிராமத்து பெண் என்பதால் இயற்கையாவே கண்மணிக்கு…தைரியம் ஜாஸ்தி அவள்
“ முட்டாள் மைனரு எங்க மேலே நீ கை வைத்து விட்டு ஜாலியாக போக முடியுமா..? சக்ரபாணி ஐயா பற்றி என்ன நினைத்த அவர் அமைதியானவர் என்றா..?
அவர் அமைதி மயூரி அக்கா விஷயத்தில் செல்லாது…எங்களுக்கே தெரியாமல் எங்களை பாதுகாக்க தனியாக ஆளுங்களை …அவர், குரு மூர்த்தி ஐயா ஏற்பாடு செய்து இருப்பாங்க.
இப்போ பாரு உன் டங்குவார் கிழிய போவதை…என் கிட்ட உன் மிரட்டல் வேலை எல்லாம் வேணாம்…நான் கலப்பை பிடித்த குடும்பத்தில் இருந்து வந்தவள்…பட்டணத்துகாரி உடம்பு இல்ல நோஞ்சானாக இருக்க.
ஒரே அறை மொத்த பல்லும் கொட்டி விடும்…பிறகு எலும்பு கடிக்க கூட உனக்கு ஆள் தேவைப்படும்…மரியாதையாக அக்கா கையை விடு நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு அக்கா கேட்குதா..?
மறை ஏதும் உனக்கு கழன்று போய் விட்டதா..? இல்ல கண்ணு அவித்து போய் விட்டதா..? என் அக்கா அழகு என்ன..? படிப்பு என்ன..? அந்தஸ்து என்ன..? பொறுக்கி பயல் நீ உனக்கு அக்கா பொண்டாட்டியா..?
திரும்ப ஒரு தடவை இப்படி அழைத்த அக்காவை…உன் வாயில் வசம்பை வைத்து தேய்த்து விடுவேன்…” என கோபமாக சொன்னாள்.
அவள் அருகில் வந்த ராஜவேலு அவள் கன்னதில் பளாரென்று அறைந்தவன்…
“ பொட்ட கழுதை ரொம்ப பேசுகிற…உனக்கு இந்த ராஜவேலு யாரென்று காட்டுகிறேன்… டேய் இவளையும் இழுத்து வாங்க டா இவள் அக்காள் கல்யாணத்தை கண் குளிர பார்க்கட்டும்…” என்றவன்.
மயூரியை இழுத்து கொண்டு கோவில் உள்ளே போக போக…
அவள் விடு என்னை என அழுது கொண்டே வந்தாள்…அப்போது தான் அது நடந்து கிட்ட தட்ட அதி வேகத்தில் காளை போல…
ஒரு உயர்ரக ராயல் என்ஃபீல்டு ரேசிங் பைக்…ஒன்று சீறி பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது.
அதில் இருந்தவன் ஹெல்மெட் போட்டு இருப்பதால்…யாரென அடையாளம் காண முடியவில்லை…
சரியாக ராஜவேலுவை இடிப்பது போல… அவன் அருகில் பைக்கை கொண்டு நிறுத்தியவன்…தன் ஹெல்மேட்டை கழட்ட நீயா…! என ராஜவேலு கேட்டான்.
முகம் மலர நீங்களா…? என மயூரி கேட்டாள்…இவர்கள் கேட்டவன் வேறு யாருமல்ல பவதீப் தான்…குரு மயூரியை பாதுகாக்க சொல்லி இருந்ததால்…அவளை பின் தொடர ஒரு எஸ்கார்ட் போட்டு இருந்தான்.
அவன் தான் இன்று மயூரி பற்றிய தகவலை சொல்ல…ராகுலிடம் குருவை பாதுகாக்க சொல்லி விட்டு…பைக்கை எடுத்து கொண்டு அவனே வந்தான்.
“ நானே தான் ராஜவேலு பவதீப் ரவீந்திரன்…இன்னும் உன் வேலையை நீ நிறுத்தவில்லை போல இருக்கே….அதுவும் எலக்சன் நேரத்தில் இப்படிப்பட்ட உத்தம வேலை செய்தால்.
ஒத்த வோட்டு கூட உன் அண்ணுக்கு விழாது…நீ செய்த வேலை உன் அண்ணுக்கு தெரியுமா..? இல்ல அவருக்கு தெரிந்து இருக்காது…
உன்னை விட அவர் அரசியல் அறிவு உள்ளவர்…எதார்த்தம் எது என அவருக்கு தெரியும்.
இங்கே பாரு உன் போல ஆளுங்க கிட்ட எனக்கு லெக்சர் பண்ண நேரமும் இல்லை…விருப்பமும் இல்லை மரியாதையாக வந்த வழியே திரும்ப போய் விடு… இல்ல அதற்க்கு பிறகு என்னை நீ தப்பு சொல்ல கூடாது…” என்றான்.
“ டேய்…! என்ன டா பூச்சாண்டியா காட்டுகிற…நான் ராஜவேலு டா எதிர்கட்சி தலைவரின் தம்பி…நீ பிச்சைகார பயல் பாடி கார்ட் இது ஒன்றும் உன் எல்லைப்பகுதி கிடையாது.
நீ எச்சரிக்கை செய்ய நாடு டா இங்கே அரசியல்வாதி வைப்பது தான் சட்டம்…அதனால் மரியாதையாக இப்போ கிளம்பு ஆ…இரு ஒரு விஷயம் கேட்க வேணும்.
நீ அந்த குரு மூர்த்தியின் பர்ஷனல் பாடி கார்ட்…உனக்கு இதற்காக இந்த வேலை ஏதோ இடிக்குதே… என்ன அவர் பேத்தியை டாவடிக்கிறாயா…?
அவர் பேத்தியை கட்டினால்..அடுத்த அரசியல் வாரிசாக வரலாம் என்று கணக்கு போடுகிறாயா..?
உன் அம்மாவும் உன் ஏழை வாத்தி அப்பனையும் உன்னையும் விட்டு போட்டு… பணக்காரன் ஒருவன் கூட ஓடி போனவள் தானே…உன்னை பற்றிய கிடைத்த தகவல் இது.
அது போல தான் அவள் பெத்த மகன் நீ….சி.எம் பேத்தியை ஆட்டையை போட பார்க்கிறாயா..? என நக்கலாக கேட்ட அடுத்த செக்கன்.
ராஜவேலு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது… அவன் மயூரியின் கையை விட்டவன் மூக்கை பொத்தி கொண்டு அலற அவன்…அல்லகைகள் அவனருகே ஓடி வந்தார்கள்.
ராஜவேலு “ டேய்…அவன் இங்கே இருந்து உயிரோடு போக கூடாது டா…” என சத்தம் போட்டான்…
அவன் ஆளுங்க பவதீப்பை சுற்றி வளைக்க…மயூரியின் கையை இழுத்து… தன் பின்னே நிற்க வைத்தவன்.
ராஜவேலு ஆளுங்களை பிளந்து கட்ட ஆரம்பித்தான்…பத்து நிமிஷத்தில் அசோக், கிருபா, கார்ட்ஸ்…. அவன் கூட வந்து ராஜவேலு ஆளுங்களை பந்தாட தொடங்கி விட்டார்கள்.
எப்பவுமே இல்லாது ஏன் தங்கள் வற்புறுத்தி அழைத்தால் கூட…வராத ராகவன் தீடிரென வீட்டுக்கு வந்ததும்.
குரு, மீனா, புவனா சந்தோஷமாக அவனை வரவேற்றார்கள்…குழந்தைகள் இருவரும்…நர்சரி, ஸ்கூல் போய் இருந்தார்கள்.
மீனா, புவனா அவனை ஓடி போய் கட்டி கொள்ள…அவனும் அவர்களை கட்டி கொண்டான்.
மீனா “ கமலா சீக்கிரமாக ஆரத்தி கரைத்து எடுத்து வா…என் புள்ள வந்து இருக்கிறான் மதிய விருந்து அவனுக்கு பிடித்த சாப்பாடு செய் வேணும்…” என்றார்.
புவனா “ வா அண்ணா இத்தனை நாள் இதற்காக தான் காத்திருந்தோம்…இன்று தான் தான் எங்க காத்திருப்பு நிறைவேறியது …
இரு உனக்கு பிடித்த மாம்பழ ஜூஸ் எடுத்து வருகிறேன்…” என கிளம்ப போனவள்… கையை பற்றியவன்.
“இந்த பாவியை மன்னித்து விடு பாப்பா…மன்னிப்பு கூட கேட்க முடியாத நிலையில் நான் நிற்கிறேன்…இந்த நிலையில் நீ நிற்க நானும் ஒரு வகையில் காரணம் தான்…” என்றவன்… அவள் கைகளை தன் கண்களில் ஒத்தி கொண்டான்.
புவனா “ என்ன அண்ணா பேசுகிற எனக்கு புரியவில்லை…தெளிவாக பேசு என் நிலைக்கு நீ தான் காரணமா எப்படி..? என கேட்டாள்.
“ உன் அண்ணுக்கு இப்போ தான் ஞானோதயம் பிறந்து இருக்கு மா…உண்மை அவன் கண் முன்னாடி வந்து நிற்குது அது தான் ..நம்மை தேடி ஓடி வந்து இருக்கிறான்…
என்ன பா உன் பொண்டாட்டி சாவின்… உண்மையை கண்டு பிடித்து விட்ட போல இருக்கே…? என இத்தனை நேரம் அமைதியாக… இருந்த குரு மூர்த்தி கேட்டார்.
அவரை நேராக பார்த்தவன் ராகவன்…
“ சியாமி சாவை மட்டுமல்ல என் மாப்பிள்ளை பரத்… சாவுக்கும் காரணமானவனை கண்டு பிடித்து விட்டேன் பெரியப்பா…” என்றான்.
புவனா “ என்ன அண்ணா சொல்கிற அவர் சாவுக்கா..? அவர் இறந்தது விபத்தில் தானே…பிறகு எதற்காக இப்படி பேசுகிற…? என அதிர்ச்சியாக கேட்டாள்.
ராகவன் “ விபத்து தான் ஆனால் திட்டமிட்ட விபத்து…இந்த பாவியின் அரசியல் ஆசையை வைத்து பாண்டி ஏற்படுத்திய விபத்து…
எங்கே பரத் உயிரோடு இருந்தால்… அவனை அடுத்த வாரிசாக பெரியப்பா நிறுத்தி விடுவார் என்ற எண்ணம்.
அதுவே அவன் சாவுக்கு காரணமாகியது…அது போல அவன் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ண வேணும்…என்பதற்காக என் சியாமியை மாடி படியில் இருந்து… அந்த பாண்டி தான் தள்ளி விட்டு இருக்கிறான்.
நீங்க சொல்லும் போது நான் கேட்கவில்லை பெரியப்பா…இப்போ தான் எல்லாம் தெரிந்தது…நீங்க சொன்னது போல நான் ஒரு முட்டாள் ஏமாளி தான்.
முதல்வராக நிற்க கூட எனக்கு தகுதி இல்லை…என் குடும்பத்து ஆளுங்களை காப்பாற்ற முடியாத நான்…
எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற முடியும்..? நான் பாவி பெரியப்பா…” என சொல்லி தன் நெற்றியில் அடித்து கொண்டு அழுதான்.
புவனா அதிர்ச்சியில் தரையிலே அமர…மீனா நெஞ்சில் அடித்து கொண்டே அழுதார் குரு மூர்த்திக்கு… பரத் விபத்தில் ராகவன் மேலே சந்தேகம் இருந்தது உண்மை தான்.
அதைய நேரம் அவர் வளர்த்த பையன் அவன்..தன் அரசியலுக்காக தன் சொந்த தங்கச்சி வாழ்க்கையை அழிப்பானா…?என நினைத்தார்.
இன்று அவன் சொன்ன உண்மை…அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது…ராகவன் கண்களை துடைத்து விட்டு தங்கை அருகில் வந்தவன்…அவள் அருகே அமர்ந்தவன்.
“ உன் அண்ணனை நீ நம்புகிறாய் தானே பாப்பா…என் சியாமி, என் மாப்பிள்ளை சாவுக்கு நான் நீதி வாங்கி கொடுக்கிறேன்…” என்றவன்.
அவள் தலையில் முத்தம் வைத்தவன் எழுந்து…மீனாவை அணைத்து விட்டு… வெளியே கிளம்ப போக ராகவா என குரு அழைத்தார்.
“ நீ பாண்டியை ஏதுவுமே செய்ய கூடாது…உன் பெரியப்பா முதல்வர் நான் அவனை பார்த்து கொள்கிறேன்…நீ எங்கேயும் போக தேவையில்லை…உன் அறையில் போய் ரெஸ்ட் எடு…” என்றார்.
ராகவன் “ கடைசியும் முதலுமாக உங்க வார்த்தையை மீறுகிறேன் பெரியப்பா…நான் இப்போ வெளியே போக தான் வேணும்.
பிறகு உங்க கூட நிரந்தரமாக தங்க வருவேன்…என் பெண்ணுகளை பார்த்து கொள்ளுங்க…” என்றவன்… அவர் அழைத்தும் நிற்காது போய் விட்டான்.
குருவின் மொபைல் ரிங்காக ஆன் பண்ணி காதில் வைக்க…அவருக்கு சொன்ன தகவலை கேட்டவர் அதிர்ச்சியாக விட்டவர்…அடுத்த செக்கன் பவதீப்புக்கு கால் பண்ணினார்….அவன் மொபைலை ஆன் பண்ண.
“ பவதீப் மயூரி எங்கே அவளுக்கு ஆபத்து ஏதும் இல்லை தானே…? என கேட்டார்.
பவதீப் “ மேடம் சேப்பாக இருக்கிறாங்க சார்…ராஜவேலுவை என்ன செய்ய கதையை முடிக்கவா..? இல்ல சட்டத்தின் கையில் ஒப்படைக்கவா..? என கேட்டான்.
மயில் ஆடி வரும்…
