ஆடி வரும் வண்ண மயிலே-40

அத்தியாயம்:40 

பவதீப் ராஜவேலுவை என்ன செய்வது என கேட்டான்.  

குரு “ பவதீப் இதில் என் பேத்தி சம்பந்தப்பட்டு இருப்பதால்…என்னால் சட்டத்தின் உதவியை நாட முடியாது.. அவள் வயது பெண்ணு கல்யாணமாக வேண்டியவள்.  

ராஜவேலு பற்றி ஊருக்கே தெரியும்…எதுவும் நடக்கவில்லை என்றால் கூட யாருமே இந்த விஷயத்தை நம்ம மாட்டாங்க…நீ ஒன்று செய் இது எலக்சன் டைம் கட்சியின் பெயருக்கு களங்கம் வர கூடாது.  

இனி என் பேத்தியின் நிழலை கூட அவன் தொட பயப்படும் படி செய்…மற்றதை நான் கனகராஜிடம் பேசி கொள்கிறேன்…பவதீப் ராகவன் வீட்டுக்கு வந்திருந்தான்.  

அவனுக்கு உண்மை எல்லாம் தெரிந்து விட்டது போல…கோபமாக பாண்டியை பார்க்க போய் இருக்கிறான் ஏதும்… முட்டாள்தனமாக செய்து விடுவான்… 

அவனை கொஞ்சம் பார்த்து கொள்ளு… முதலில் சொல்லு என் பேத்தி உன் கூட தானே இருக்கிறாள்…? அவளுக்கு ஆபத்து ஏதும் இல்லை தானே..? என கேட்டார்.  

பவதீப் “ இல்ல சார் கிருபா அண்ணா, அசோக் வந்து…அவங்களை வீட்டுக்கு அழைத்து போய் விட்டாங்க சேப்பாக தான் இருக்கிறாங்க…நீ கவலைப்பட தேவையில்லை நான் ராகவன் சாரை பார்த்து கொள்கிறேன்…” என்றான்.  

விஷயம் கேள்விப்பட்ட சக்ரபாணி, கல்யாணி இருவருமே இடிந்து போய் விட்டார்கள்…எது நடக்க கூடாது என்று நினைத்து மயூரியை பாதுகாப்பாக… வளர்த்தாங்களோ அது நடந்து விட்டது.  

சக்ரபாணிக்கு குரு ராஜவேலு பெண்ணு கேட்டதை சொல்லி இருந்தார்…சக்ரபாணிக்கு ராகவன் மேலே தான் கோபம் மொத்தமும் திரும்பியது.  

இவனால் தான் அந்த பாண்டி தங்கள் குடும்பத்துக்குள்ளே வந்தான்…இவன் சலனமும் பேராசையும் தான் இத்தனைக்கும் காரணம்… 

என் பெண்ணு இறந்த போதே இவனையும் போட்டு தள்ளி இருந்தால்…. இப்போ எந்த பிரச்சனையும் இருந்து இருக்காது என நினைத்தார்.  

கிருபா மயூரியை தூக்கி கொண்டு வந்தவன்…அவளை கீழே இறக்கி விட அவள் தாத்தா, பாட்டி என அழைத்து கொண்டே..ஓடி வந்து இருவரையுமே கட்டி கொண்டாள்.  

அவர்களும் அவளை அணைத்து கொண்டார்கள்.  

கல்யாணி “ எங்க உயிரே போய் விட்டது பாப்பா…பாவி படுபாவி ராஜவேலு நல்லா இருப்பானா..? நிச்சயமாக அந்த பரமேஸ்வரன் இவனுக்கு தகுந்த கூலி கொடுப்பார்…” என்றார்…சக்ரபாணி  

“ கிருபா, அசோக் உங்க இரண்டு பேருக்குமே எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை பா…? நன்றி சொல்ல கூடிய அளவில் நம்ம உறவு இல்லை இருந்தாலும் நீங்க இரண்டு பேருமே… 

நான் வணங்கும் தெய்வமாக தான் தெரிகிறீங்க…” என சொன்னவர் கை எடுத்து கும்பிட்டார்.  

கிருபா, அசோக் பதறி போனார்கள்…கிருபா அவர் கையை பற்றி கொண்டு.  

“ என்ன அங்கிள் இது மயூரி யாரு எங்க தங்கச்சி…அவள் என்று இல்லை அந்த இடத்திலே வேறு பெண்ணு இருந்து இருக்க கூட…நானும் அசோக்கும் இப்படி தான் நடந்து கொண்டு இருப்போம்.  

உண்மையை சொல்ல போனால் உங்க நன்றியை சொல்ல… வேண்டிய ஆளுங்க நாங்க இல்ல பவதீப் தான்… அவனால் தான் மயூ இன்று மானத்தோடு, உயிரோடு உங்க முன்னாடி நிற்கிறாள்.  

அவன் கிட்ட தான் முதல்வர் பாப்பாவை பாதுகாக்க சொல்லி இருக்கிறார்…அவன் தன் கடமையை சரியாக செய்து விட்டான்…” என்றான்… 

அப்போது அவன் மொபைல் ரிங் ஆக எடுத்து பார்த்தால்.. திரையில் பவதீப் நம்பர் ஆன் பண்ணி காதில் வைத்தவன்.  

சொன்ன விஷயம் கேட்டு அடுத்த…செக்கன் அவன் முகம் மாறியது… 

“ சரி நீ அங்கே இரு நான் இப்போ வருகிறேன்…முதலில் மீடியா, பிரஸ் எல்லாம் வராது பார்த்து கொள்ளு…சி.எம் சாருக்கு தகவல் சொல்லி விட்ட தானே…? என கேட்டான். 

அசோக் “ அண்ணா என்ன விஷயம்…? என்ன தகவலை சி.எம் கிட்ட சொல்ல சொன்ன…? என கேட்டான்.. கிருபா சக்ரபாணியை நேராக பார்த்தவன்.  

“ அங்கிள் ஒரு பாட் நியூஸ் வந்து ராகவன் சார்…பாண்டியை கொலை செய்து விட்டார் காரணம் சியாமளா ஆன்ட்டி, பரத்தை கொலை செய்தது…பாண்டி என்ற உண்மையை தெரிந்து கொண்டதால்…” என சொன்னான்.  

அங்கே இருந்த அனைவருமே அதிர்ச்சியாக நின்று விட்டனர்… 

கல்யாணி “ என்ன என் பெண்ணு  சாவு கொலையா..? அதை செய்தவன் பாண்டியா…! புவனா மூளியாக நிற்க காரணமும் அவன் தானா..?  

கடவுளே என் நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கே…இத்தனை நாள் என் பெண்ணு விபத்தில் தான் இறந்தாள் என நினைத்து இருந்தால்… 

அது கொலையா…! என்னங்க நம்ம பெண்ணை அந்த பாண்டி கொலை செய்து இருக்கிறான்…” என சொல்லி அழுதார். 

மயூரி அதிர்ச்சியில் கல்லாக சமைத்து போய் நின்றிருந்தாள்…அவள் மனதில் ஓடியது ஒன்று தான் என் அப்பா அம்மாவை… கொலை செய்யவில்லை என்ற எண்ணம்.  

சக்ரபாணி அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டே சோபாவில் அமர்ந்து விட்டார்…கண்மணி தான் ஓடி போய் அவர் சாப்பிட தண்ணீர் கொண்டு வர…அதை வாங்கி அசோக் அவரை சாப்பிட வைத்தான்.  

“ இத்தனை வருடம் நான் கனவில் கூட நினைத்து பார்க்காத உண்மை இது கிருபா…என் பெண்ணு இயற்கையாக சாகவில்லை அவள் சாவு கொலை.  

என் ஒரே பெண்ணு வாழ்க்கை இப்படியா ஆக வேணும்…இது எல்லாவற்றுக்கும் காரணம் ராகவன்…இப்போ அவனே அதை சரி செய்து இருக்கிறான் தீ சுடும் என… சொன்னால் யாருமே கேட்பது இல்லை.  

தீக்குள்ளே விரலை விட்டு பார்த்து தான் தெரிந்த கொள்வார்கள்…ராகவன் நிலையும் இப்போ அது தான் இன்று என் பேத்தி அம்மாவை இழந்து… கொலைகாரன் பெண்ணு என்ற பட்டத்தோடு நிற்கிறாள்.  

இதை எல்லாம் அவன் எப்படி சரி செய்ய போகிறான்…அவன் தங்கச்சி இரண்டு சின்ன குழந்தைகளை கையில்…வைத்து கொண்டு விதவை கோலத்தில் நிற்கிறாள். இதற்கு எல்லாம் காரணம் ராகவன் தான்…” என்றார்.  

கிருபா “ அங்கிள் பழசை பேசி பயன் இல்லை….இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம் நான் பவதீப்பை பார்க்க போகிறேன்…அசோக் இங்கே நீ பார்த்து கொள்ளு…” என சொல்லி விட்டு கிளம்பினான்.  

குருமூர்த்திக்கும் பவதீப் தகவலை சொல்லி இருக்க அவரும்…அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார் மீனா, புவனா அழ ஆரம்பித்து விட்டார்கள்…குரு ரவியிடம் சொல்லி ராகவனின் பெயிலுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார்.  

அவன் செய்தது கொலை தான் ஆனால் செத்தவன் ஒன்றும் உத்தமன் இல்லையே…! விஷயம் மீடியா, பிரஸ்க்கு தெரிய வர போலீஸ் வர முன்னே… சம்ப இடத்துக்கு அவர்கள் வந்து விட்டார்கள்.  

மாலதி, சரிகாவால் பாண்டி சாவை இன்னும் நம்ப முடியாமல் இருந்தது… அதை விட சியாமளா, பரத்தை கொலை செய்தது பாண்டி என்பதை…அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.  

பாண்டியை பார்க்க அவன் பங்களாவுக்கு போனவன் ராகவன்…அவன் கிட்ட உண்மையை சொல்ல சொல்லி கேட்க முதலில் மறுத்தவன்…பிறகு நக்கலாக பேச ஆரம்பிக்க தான் வாய் தகராறு… கை தகறாறு ஆகி பாண்டி உயிரை பறித்தது.  

ராகவன் கொலை செய்து விட்டோம் என்று…எந்த குற்றணர்வும் அவன் மனதில் இல்லை… என் சியாமி, பரத் சாவுக்கு நீதி வாங்கி கொடுத்து விட்டேன் …என்ற எண்ணம் ஒன்று தான் அவன் மனதில் ஓடியது.  

பாண்டி ஒன்றும் தியாகி இல்லையே…அவன் கதை முடிய வேண்டும் என்று தான் சனங்கள் மட்டுமல்ல… போலீஸ்ம் நினைத்து கொண்டு இருந்தது…இத்தனை நாள் பொறுமையாக இருந்தது ராகவன் மச்சான் என்ற ஒரு காரணம் தான்.  

கடத்தல், கொலை, கொள்ளை என்று எக்கச்சக்க வழக்குகள் பாண்டி பெயரில் இருந்தது…அவன் அல்லக்கை கபாலியை கட்டம் கட்டி போலீஸ் தூக்கி இருந்தது…அவன் தானே அவனின் வலது கை.  

கனகராஜ்க்கும் இது அதிர்ச்சி தான்…அவர் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கிறதே…போதாது என்று பவதீப் ராஜவேலு கால் ஒன்றை அடித்து உடைத்து இருந்தான்…அவராலும் வெளிபடையாக கேள்வி கேட்க முடியவில்லை.  

அவர் கேள்வி கேட்டால் அடுத்த செக்கன்…அவர் பதவி பறி போகும் இப்படிப்பட்ட தம்பியை வைத்து கொண்டு…எலக்சனில் நிற்க உனக்கு என்ன தகுதி இருக்கு என கேள்வி வரும்.  

அவன் மேலே பொம்பளைங்க வேறு கோபமாக இருக்கிறாங்க…அதனால் கனகராஜ் வாயை மூடி கொண்டு… ராஜவேலுவை வெளிநாட்டுக்கு ட்ரீட்மெண்ட் செய்ய… யாரும் தெரியாது அனுப்பி விட்டார்.  

மீனா தனக்கு தன் பையன் வேணும்…அவனை எப்படியாவது வெளியே எடுங்க… இல்ல என்னை உயிரோடு பார்க்க மாட்டீங்க என அழது புலம்ப…குரு மூர்த்தி அதற்கான ஏற்பாட்டை எல்லாம் பார்க்க தொடங்கி விட்டார்.  

ராகவன் செய்தது கொலை தப்பு செய்து இருந்தால் கூட…ஒரு உயிரை பறிப்பது பாவம் தீர்ப்பு எழுத அவன் யாரு..? பிறகு கோர்ட், சட்டம்,நீதிபதி, லாயர்கள் எல்லாம் எதற்க்கு…? 

பாண்டி செய்த குற்றங்களின் அளவு அதிகம்….அவனுக்காக வாதாட யாருமே வரவில்ல… மாலதி மகளை அழைத்து கொண்டு…. 

அவர்களின் சொந்த ஊருக்கு போய் விட்டாள்… எங்கே இங்கே இருந்தால் பாண்டி செய்த குற்றங்களில்… தன்னை, மகளை கோர்த்து விடுவாங்க என்ற பயம்.  

ராகவனுக்கு எதிராக வாதாட பெரிதாக யாரும் இல்லை என்பதால்…அவனுக்கு பெயில் கிடைத்தது தீர்ப்பு இரண்டு வாரங்கள் கழித்து தான் வரும் என சொல்லபட்டது… 

கோர்ட் வாசலில் இருந்தே ராகவனை… குரு மூர்த்தி தன் வீட்டுக்கு அழைத்து போய் விட்டார்.  

அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்த… மீனா, புவனா அவனை கட்டி கொண்டு அழுதார்கள்.  

மீனா “ ஏன் ராசா இப்படி செய்த..? அது தான் உங்க பெரியப்பா பாண்டியை பார்த்து கொள்வதாக சொன்னார் தானே… 

இப்போ பாரு நீ தான் கொலையாளியாக நிற்கிற.. இரண்டு பெண்ணுங்களை பெத்தவன் ராசா நீ…! 

அதுகள் வாழ்க்கையை நினைத்தாவது… நீ கொஞ்சம் பொறுமையாக போய் இருக்கலாம் இல்லையா..? என கேட்டார்.  

புவனா “ எங்களுக்கு இருக்கும் ஒரே சொந்தம் நீ அண்ணா…அவருக்கு நடந்தது அநீதி தான் அதற்காக இல்லாத அவருக்காக…நீ இப்படி கொலைகாரனாக வந்து நிற்கிறாயே அண்ணா..? 

போன அவர் உயிரை உன்னால் திரும்ப தர முடியுமா…? உன் கனவு, லட்சியம் எல்லாமே அரசியல் தான்… 

இப்போ பாரு அதற்க்கு ஒரு தடை வந்து விட்டது…அப்பா கிட்ட நீ இந்த விஷயத்தை விட்டு இருக்க… அவர் பார்த்து இருப்பார்…” என்றாள்.  

ஹாலில் பெரிதாக பிரேம் போட்டு மாட்டியிருந்த… தன் குடும்ப படத்தை பார்த்து கொண்டே…ராகவன்  

“ இல்ல பாப்பா இந்த கணக்கை நான் தான் சரி செய்ய வேணும்…என்னால் தான் இந்த அழகான குடும்பம் சிதைந்து போனது…என்னை நம்பி வந்தவளை காக்கும் கடமையில் இருந்து தவறியவன் நான்.  

என் தங்கச்சி குங்குமம் அழிய மறைமுக காரணம் நான்…எனக்கு அரசியல் எவ்வளவு முக்கியமோ அதை விட குடும்பம் முக்கியம்…இதை பெரியம்மாவை விட யாராலும் புரிந்து கொள்ள முடியாது…” என்றான். 

மயில் ஆடி வரும்….
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page