இதயம்!
இக்கதை முழுக்க முழுக்க புனைவு மட்டுமே.இதில் வரும் அறிவியல் தகவல்கள் பெரும்பாலானவை எனது கற்பனையான விடயங்கள்.அடிப்படை கருத்துக்கள் மாத்திரமே,உண்மை என உத்தரவாதம் அளிக்கிறேன்.
இதில் வரும் அறிவியல் வார்த்தைகளுக்கான விளக்கம்,அத்தியாத்தின் முடிவில் தரப்பட்டுள்ளது.
புரியலன்னா கீழே போய் படிச்சி படிச்சி எபி ரீட் பண்ணுங்கப்பா!
துடிப்பு – 01
பரபரப்பாக மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்க,அதில் கவனம் துளியும் இல்லாது போக,குறுக்கும் நெடுக்குமாக பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்தார்,சாத்வேத்.
கலக்கம் சூழ்ந்திருந்த விழிகளில் நிரம்பிக் கிடந்த பரிதவிப்பு,சொல்லாமல் சொல்லியது மனைவியானவரின் மீதிருக்கும் அளவு கடந்த காதலை.
சட்டென்று பிரசவ அறையின் கதவு திறக்கப்பட,கையுறையை கழற்றியவாறு வெளியே வந்த மருத்துவரோ,பணிவுடனேயே அணுகினார்,சாத்வேதை.
“டாக்டர் எனி ப்ராப்ளம்..?” தவிப்பு மேலோங்க வந்த வார்த்தைகளில் புன்னகை அரும்பியது,மருத்துவருக்கு.
“இன்னும் அவங்களுக்கு ப்ராபரா பெய்ன் வர்ல..பட் தட்ஸ் நாட் அ பிக் ப்ராப்ளம்..இன்னும் டைம் இருக்கு.. டென்ஷன் ஆகாதீங்க சார்..” சிறு புன்னகையுடன் கூறிடவுமே,நிம்மதி பெருமூச்சு விட்டார்,அவர்.
அப்படியே அருகே இருந்த இருக்கையில்,அமர்ந்து கொள்ளவும் வேக நடையுடன் சாத்வேதின் மெய்க்காப்பாளர் அவ்னித் அவரை நெருங்கவும் சரியாய் இருந்தது.
“என்ன அவ்னித் ஏதாச்சும் ப்ரச்சனயா..?” மெய்க்காப்பாளர் என்பதைத் தாண்டி,நட்பே இழையோடியது அவரின் வார்த்தைகளில்.
“யாத்ரிக்கு பெயின் வந்திருக்கு..இங்க தான் அட்மிட் பண்ணிருக்கோம் சார்..” என்றவரின் விழிகளில்,சில மணி நேர விடுப்புக்கான கோரிக்கை.
“இடியட் எதுக்காக அப்போ நீ என்ன பாக்க வந்த..? கோ..போ போய் அவள பாரு..” கடிந்தவரை நன்றியாகப் பார்த்தவனோ,தனது உதவியாளனிடம் விழி வழியே கட்டளை இட்டு விட்டே,அவ்விடத்தில் இருந்து நகர்ந்தார்.
பின்னே,பாதுகாப்பின்றி சாத்வேதை எப்படி விட்டு விட முடியுமாம்..?
நாட்டின் ஜனாதிபதியும் தலை சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியுமானவருக்கு,அயல் நாடுகளில் இருந்து ஏராளமான அச்சுறுத்தல்கள் இருக்கவே செய்தன.
சில பல மணி நேரங்கள் கடந்த பின்,சாத்வேதின் காதல் மனைவி,விஹானா அழகிய ஆண் குழந்தையொன்றை ஈன்றெடுக்க,மகளை கையில் ஏந்தியவரின் விழிகளில் மெல்லிய ஈரத்துளிகள்.
ஓய்ந்து போய் மயங்கி இருந்த மனைவியின் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து விட்டு,மகனை கையில் அள்ளிக் கொண்டு வந்தவரை ஆவலாய் எதிர்ப்பார்த்து இருந்தார்,அவ்னித்.
சரிக்கு சமமாய் தோழமையுடன் தன்னை நடத்துபவரின் அன்பில் நெகிழ்ந்தாலும்,ஒரு போதும் சாத்வேதுக்குரிய மரியாதையை தர மறந்ததில்லை,அவர்.அத்துடன் நட்பு பாராட்ட முன்வந்ததும் இல்லை.
கையில் தன் சிசுவை தாங்கியிருந்த அவ்னிதை கண்டதும் மற்றையவரின் விழிகள் மின்னின.
“என்ன கொழந்த அவ்னித்..?”
“ஆண் கொழந்த சார்..” பூரிப்புடன் வந்திருந்தன,தந்தையானவரின் வார்த்தைகள்.
“அப்போ என் பையனுக்கு ஒரு பாடிகாட் கெடச்சிட்டானா..?” சின்னப் புன்னகையுடன் வினவியருக்கு,ஆமென்பதாய் அசைந்து பதில் சொல்லிற்று,அவ்னித்தின் சிரசு.
சில வருடங்களுக்கு பிறகு,
எப்போதுமே,ஒரு வித சோர்வுடன் இருக்கும் தன் மகனின் நடத்தையில் சிறு சந்தேகம் வரத் துவங்கி இருந்தது,சாத்வேதுக்கு.
வயதுக்குரிய வளர்ச்சியும் ஓரளவு முதிர்ச்சியும் இருந்தாலும்,மகனிடம் துள்ளலையோ சுறுசுறுப்பையோ,காண்பது அரிதாகவே இருந்தது.
அவ்னித்தின் மகனோ,அங்குமிங்கும் ஓடியாடித் திரிந்த போதிலும்,அவர் மகன் புன்னகையை பதிலாக அளித்து பார்த்திருப்பானே,தவிர அவனுடன் ஒன்ற முன் வராதது,அவருக்கு வருத்தம் தான்.
அதுவும்,தங்களுடன் அவ்வளவாய் பழகாமல்,அவ்னித்தின் மகனுடனே,அவர் மகன் அபிஷேக் சிக்கந்த் காலம் கழிக்க,அது போதுமாய் இருந்தது,மெய்க்காப்பளரின் மகனுக்கும் ஜனாதிபதியின் மகனுக்கும் இடையில் நல்லதோர் நட்பு இழையோட.
அவ்னித் சாத்வேதிடம் காட்டும் ஒதுக்கமும் மரியாதையும்,அவர்களின் வாரிசுகளிடையே இருந்தது இல்லை.அந்தஸ்தை தாண்டிய தூய நட்பு அந்த வயதிலேயே,துளிர் விடத் துவங்கி இருந்தது.
அதனாலோ,என்னவோ அவ்னித்தின் மகனை தனது மாளிகையில் தங்க வைப்பதை வழக்கமாக்கி இருந்தார்,சாத்வேத்.
ஆனால்,அது என்னவோ அவ்னித்துக்கு பிடிப்பதில்லை.அடிக்கடி மகனிடம் அவர்களுக்கிடையிலான அந்தஸ்து வேறுபாட்டை உரைத்து தம் நிலையை உணர்த்தி,அபிஷேக்கிடம் மரியாதையாக நடந்து கொள்ளுமாறு பணிப்பார்.அதட்டவும் செய்வார்.
சரியென எல்லாம் புரிந்தது போல் தலையாட்டினாலும்,அந்த விலகலை தம்மிடையே கொண்டு வர முடிந்ததில்லை,அவர் மகனால்.
ஆனால்,ஒன்று மட்டும் அவன் மனதில் பதிந்து போயிருந்தது,அனைத்தையும் ஏன் தன்னையும் விட,அபிஷேக்கே முக்கியமானவன் என்று.
அபிஷேக் பன்னிரண்டு வயதை எட்டியிருந்த சமயம் அது.
அன்றொரு நாள் அப்படித் தான்.அபிஷேக் இருக்கையில் அமர்ந்திருக்க,அவனைச் சுற்றி கையில் விளையாட்டுப் பொருளொன்றை வைத்துக் கொண்டு,”டுர்ர்ர்ர்ர்ர்ர்” என்ற சத்தத்தை கிளப்பியவாறு சுற்றி ஓடிக் கொண்டிருந்தான்,தோழன்.
“அபி நீயும் வா..” சத்தமாகவே அழைத்திட,”டயர்டா இருக்கு” என மறுப்புச் சொன்னவனோ,சிறிது நேரத்தில் மயங்கிச் சரிய,அதிர்ந்து போன தோழன் கத்தியிருக்கவே,ஓடி வந்தார்,விஹானா.
பத்து நாட்கள் மொத்தமாய் ஓடியிருக்க,மருத்துவ கவனிப்பு சாத்வேதின் மகனை ஓரளவு தேற்றியிருந்தது.
ஆனாலும்,அவனின் மயக்கத்துக்கான காரணம் சரிவரத் தெரிய வராது இருக்க,அவனின் பெற்றவர்களுக்கும் அவ்னித்துக்கும் மனம் உறுத்திக் கொண்டே,இருந்தது என்றால் மிகையாகா.
தன் முன்னே அம்ர்ந்திருந்த சாத்வேதுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியாமல்,சிகையை அழுந்தக் கோதி தவித்தார்,அவர்களின் குடும்ப மருத்துவர்.அரசின் மருத்துவ தலைமையதிகாரியும் கூட.
“டாக்டர் பிரஜின்..? வாட் ஹாப்பன்ட்..?” சாத்வேதுக்கு அவ்வளவு தவிப்பு.மனைவியின் கலக்கம் வேறு அவரை அழுத்தத்தில் தள்ளி இருந்தது.
“வாங்க சார்..” என அவரை அழைத்துக் கொண்டு,அபிஷேக் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் கதவின் அருகே செல்ல,கண்ணாடித் துளையின் வழியே அவன் படுத்து கிடப்பதும்,விஹானா கவலையில் ஆழ்ந்து இருப்பதும் தெளிவாகத் தெரிய,இருவரின் மனதிலும் வெவ்வேறு உணர்வலைகள்.
அவர்களின் பின்னே வந்து சற்றுத் தள்ளி நின்று கொண்டார்,அவ்னித்.அவருக்கு,ஜனாதிபதியின் பாதுகாப்பே,முதற் பணி.
“என்ன டாக்டர்..?”
“உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்ல சார்..ஆனாலும் சொல்ல வேண்டியது என்னோட கடம..நம்ம இதயத்தோட துடிப்புக்கான கரண்ட சிக்னல் கொடுக்குறது சைனோ ஏட்ரியல் நாட்..அபிஷேக்கோட எஸ் ஏ நாட் கொஞ்சமா கொஞ்சமா ஃபெயில் ஆகிட்டு வருது..”
“வாட்ட்ட்ட்..?” அப்பட்டமான அதிர்ச்சியும் தவிப்பும் தந்தையின் முகத்தில்.நிற்கத் திராணி இல்லாதது போல் இருக்க,அவரை அழைத்துக் கொண்டு தன்னறைக்குள் வந்தார்,மருத்துவர்.
“டாக்டர் நீங்க உண்மய தானா சொல்றீங்க..?” அவரால் இன்னுமே,நம்ப முடியவில்லை.
“ஆரம்பத்துல இருந்தே நீங்க சொல்லுவீங்க..அபிஷேக் சோர்வாவே இருக்குறதா..அவனோட ஹார்ட் மத்தவங்க ஹார்ட் போல நார்மலா இல்ல..அதான் அவன் பாடிக்கு ப்ளட் பம்பிங் இன் அடிக்வேட்டா இருந்துருக்கு..இருக்கு..அதனால தான் அவனால நார்மலான பசங்க மாதிரி இருக்க முடியுறதில்ல..”
“…………………….”
“நார்மலா செகண்ட்ரி பேஸ் மேகரா ஏ வி நாட் வர்க் ஆகும்..பட் இங்க அவனோட ஏ வி நாட்டோட ஆக்டிவிடில கூட ப்ராப்ளம் இருக்கு..ஸோ அவனோட ஹார்ட்டால தன்னோட கன்ட்ராக்ஷனுக்கு தேவயான இம்ப்ல்ஸஸ தேவயான இன்டென்டசிடியோட ஜெனரேட் பண்ண முடியாம இருக்கு..”
“எங்க ஃபேமிலில யாருக்குமே ஹார்ட்ல எந்த ப்ராப்ளமும் இருந்தது இல்ல..அப்றம் அவனுக்கு மட்டும் எப்டி..?” ஒற்றை மகனை இழக்க வேண்டி வருமோ என்கின்ற தவிப்பு படர்ந்து விரிந்து இருந்தது,அவர் விழிகளில்.
“எனக்கும் அதே டவுட் தான்..அதான் நம்ம ஜெனடிக் எக்ஸ்பர்ட்ஸ் கிட்ட அபிஷேக்கோட ஜீனோம அனலைஸ் பண்ண சொல்லி இருந்தேன்..அதுல தான் தெரிய வந்தது..எஸ் ஏ நாட்டோட டிபோலரைஸேஷன்..ஏ வி நாட்டோட எக்டிவிடி..அது மாதிரி கன்ட்ராக்ஷனுக்கு தேவயான சோடியம் சேனல்ஸ் இதுக்கெல்லாம் கோட் பண்ற மரபணு அதாவது ஜீன்ஸ்ல மியூட்டேஷன் நடந்து இருக்குதுன்னு..”
நெற்றியை அழுந்தத் தேய்த்தவாறு உரைத்தவரின் வார்த்தைகளில் விழிகளில் நீர் கோர்த்துக் கொள்ளப் பார்த்திட,முயன்று அடக்கிக் கொண்டார்,சாத்வேத்.
அவரின் பதவியும் பொறுப்புக்களுடம் கடமைகளும் அவருக்கு அழுவதற்கான இடத்தை தந்தது இல்லை என்பது உண்மையும் கூட.
“இது எப்டி டாக்டர் நடக்கும்..? எப்டி நடந்து இருக்கும்..? ஈவின் அவன் சன் லைட்டுக்கு கூட எக்போஸ் ஆகாம இருக்குறவன்..அப்டி இருக்கும் போது..” தாள முடியவில்லை,அவரால்.
“மியூட்டேஷன் நடக்க எக்ஸ்டர்னல் மட்டும் இல்ல..இன்டர்னல் ரீசன்ஸும் காரணமா இருக்கலாம்..பட் ஆனா,உங்க வைஃப் விஹானா ப்ரெக்னன்டா இருக்கும் போது நீங்களும் அவங்களும் ஒரு தடவ நியூக்ளியர் பாம் டெஸ்டிங்க் ரேஸ்கு எக்போஸ் ஆனதா சொன்னீங்க இல்ல.. மே பி அந்த ரேஸ் தான் இந்த மியூட்டேஷன்கு ரீசனா இருக்கலாம்..”
“அப்போ நாங்களும் தான..?”
“நீங்களும் உங்க வைஃப்பும் அடல்ட்ஸ்..உங்க பையன் பத்தோ பதினஞ்சோ நாள் கரு..அப்போ விஹானா மேடம் ப்ரெக்னன்டா இருக்குறது கூட உங்களுக்கு தெரியாது..எக்ஸாக்டா சொல்ல முடியாது..பட் அது தான் அவனோட ஜீன் மட்டும் எஃபெக்ட் ஆகியிருக்கலாம்னு கெஸ் பண்ணலாம்..”
அவர் கூறக் கூற,ஏதோ அழுந்தி அடைப்பது போல் இருக்க,சாத்வேதின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“இதுக்கு என்ன பண்ணலாம் டாக்டர்..?”
“எக்ஸாக்ட் ரீசன் என்னன்னு கண்டு புடிச்சா மேற் கொண்டு யோசிக்கலாம் சார்..” என்றவரின் வார்த்தைகளில் நெற்றி சுருங்கியவரின் விழிகளில் அடுத்த சில நிமிடங்களில் யோசனை ரேகைகள்.
“டாக்டர் விஹானா மட்டும் இல்ல..அவ்னித்தோட வைஃப் யாத்ரி கூட அன்னிக்கு எங்க கூட அப்போ..அபியோட வயசு தான் அவ்னித்தோட பையனுக்கும்..அப்போ அவனுக்கும்..” இழுத்தவரை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவர்,தொண்டையைச் செருமிக் கொண்டார்.
“அப்டி கன்ஃபார்மா சொல்ல முடியாது…ஒவ்வொருத்தரோட ஜீன அது ஒவ்வொரு மாதிரி எஃபெக்ட் பண்ணும்..சம்டைம் அது அவரோட பையனுக்கு பாசிட்டிவ்வான ரிசல்ஸ்ட்ஸ காட்டி இருக்கலாம்..பட் அவ்னித்தோட பையன கூட்டிட்டு வந்தா ஏதாச்சும் பார்க்கலாம்..” என்க,அடுத்த சில நொடியில் அவர் முன்னே இருந்தான்,அவ்னித்தின் மகன்.
தன்னைக் கண்டதும் முகம் முழுக்க புன்னகையுடன் கன்னம் குழிய சிரித்தவனை ஏனோ அத்தனை பிடித்துப் போனது,அவருக்கு.
கையில் விளையாட்டுக் காருடன் இருந்தவனின் புன்னகை மருத்துவரை அதிகமாகவே ஈர்த்திருக்க,தன்னை மீறி அவனின் கன்னத்தை கிள்ளி இருந்தார்,மருத்துவர்.
தன் ஸ்டெத்தை மாட்டி அவனின் இதயத்தில் வைத்தவரின் புருவங்கள் ஒரு நொடி சுருங்க,விழிகள் இடுங்கின.செவிகள் கூர்மையாகிட,கவனம் மொத்தமும் அவன் மேல் தன்னாலே வந்து குவிந்தது.
விழிகளில் சிறு கலக்கம் தொற்றிக் கொள்ள,தன் மேசையின் ட்ராயரில் இருந்து வேறொரு வகை ஸ்டெத்தை கையில் எடுத்து மாட்டிக் கொண்டவர்,மீண்டும் அவனின் இதயத்தை பரிசோதிக்க அப்போதும் அவரின் முகம் தெளியவில்லை.முகம் முழுக்க குழப்பம் மட்டுமே.
மகனை அழைத்து அவன் பின்னே வந்திருந்த,அவ்னித்துக்குமே தலைகால் புரியாத நிலை.மருத்துவரின் முகபாவனை பல்வேறு யோசனைகள் கிளப்பி விட்டிருக்க,விழிகளில் அலைப்புறுதல்.
“டாக்டர் எனி ப்ராப்ளம்..?” என்க,மறுப்பாய் தலையசைத்தவரோ,அவ்னித்தின் மகனை எழுந்திடச் சொல்ல தாவி எழுந்தவனை வியப்புடன் பார்த்தார்,அவர்.
அவனோ,அவரை இன்னும் திகைப்பில் ஆழ்த்தும் விதமாய் துள்ளிக்குதித்து ஓட,சில நொடிகளுக்கு மேலாக விரிந்தன,மருத்துவரின் விழிகள்.
“டாக்டர்.. என் பையனுக்கு என்னாச்சு டாக்டர்..?”
“பிரஜின் டெல்..எதுக்கு இப்டி பேயறஞ்ச மாதிரி இருக்கீங்க..?”
“கம்மியான பஸ்ல் ரேட்..ஹார்ட் பீட் சத்தம் கூட ரொம்ப கம்மியா இருக்கு..பட் ஹீ ஈஸ் நார்மல்..அதான் என்னால நம்ப முடில..” திகைத்துக் கூறியவரின் கூற்றில் முன்னிருந்தவர்கள் இருவரின் போயினர்.
தாமதியாமல்,அவ்னித்தின் மகனை மருத்துவமனையில் அனுமதித்து அவனின் இதயத்தை பரிசோதித்திட,அதில் கிடைத்த பெறுபேற்றில் அவருக்கு அதிர்வு தான்.
“இட்ஸ் அ மிராகில்..” அவனின் இதயத்தை ஆராய,அவர் செய்த ஒவ்வொரு பரிசோதனையின் முடிவுகளை பார்க்கையில்,அவர் இதழ்கள் இவ்வாறே கூறிக் கொள்ளலாயின.
பல மருத்துவ பரிசோதனைகள் நடந்தேறிட,ஏனோ உரியவனுக்கு தான் அதன் ஆழம் தெரிந்திருக்கவில்லை.
அதுவும்,பல வருட அனுபவம் மிகுந்த மருத்துவர்,இப்படியெல்லாம் அதிர்ந்து போவது சாத்வேதுக்கு புதிராகவே இருந்தது.
என்னவென்று அவ்னித்தும் சரி சாத்வேத்தும் சரி,பலமுறை பிரஜினை அணுகிய போதிலும்,முழுதாக அறிந்து கொண்ட பின்னரே,அவர் என்னவென்று உரைப்பதாய் உறுதியாய் கூறியிருக்க,அதற்கு மேலும் வற்புறுத்தவில்லை,மற்றைய இருவரும்.
“சத்தியமா அவனுக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல..பயப்டாதீங்க..” அவ்னித்தின் தவிப்பைக் கண்டவர்,ஒரு முறை அழுத்திக் கூறியிருக்க,அப்பொழுது தான் அவ்னித்தினும் யாத்ரியினும் மனம் சமப்பட்டது,கொஞ்சமேனும்.
இது எதுவும் அறியாமல்,தன்பாட்டில் துள்ளிக் குதித்து ஓடியாடி மகிழ்ந்திருந்தான்,அந்த பாலகன்.
அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது,சந்தத்துடன் சத்தம் தவிர்த்து.
●●●●●●●●
“என்னடி உன்னோட ஒடம்பு இப்டி கொதிக்கிது..? காய்ச்சல் அடிக்கிதா..?” என கேட்டவாறு தோழியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்,ராகவி.
வேலைத்தளத்துக்கு வரும் பொழுதே தோழியின் முகத்தில் குடி கொண்டிருந்த சோர்வும்,விழிகளில் ஏறியிருந்த சிவப்பும் அவ்வாறு கேட்கத் தூண்டுவதாய்.
“எப்பவும் இப்டி தான இருக்கும்..காய்ச்சல் எல்லாம் ஒன்னுல்லடி..” சோர்வாய் சொல்லியவாறு,தன் கணினியை உயிர்ப்பித்து வேலையைத் துவங்கியவளின் மனதை பல்வேறு எண்ணங்கள் போட்டு அலைக்கழித்துக் கொண்டிருக்க,அதை முழுதாய் புறந்தள்ள முடியாமல் திணறி நின்றாள்,பாவையவள்.
அதுவும் நேற்று வீட்டில் நடந்திருந்த கலவரத்தின் நினைப்பில் அடிக்கடி விழிகள் வேறு கலங்கிப் போக,இமை சிமிட்டி கண்ணீரை துரத்திய தோழியைப் பார்க்கையில் மனம் கசந்தது,ராகவிக்கு.
சிறு வயது முதலே,அவளின் வாழ்வியலின் பிண்ணனியை அறிந்தவளுக்கு,அவளின் பிரச்சினை எந்தவொன்றுக்கும் தீர்வு தந்திட முடியா தன்னிலையை எண்ணுகையில் தன் மீதே கோபம்.
எந்தவொன்று பேசாமல்,தோழியின் கரத்தை அழுத்திக் கொடுத்திட,ராகவியின் செயலில் அர்த்தம் புரிந்தவளோ,கடினப்பட்டு முறுவலித்தாள்,கண்ணீர் உள்ளிழுத்தவளாய்.
“என்ன ப்ரச்சனடி..?” உணவு இடைவேளையில் தன்னிடம் வினவிய தோழியை அதற்கு மேலும் தவிர்த்திட முடியவில்லை,பாவையவளால்.
“சதீஷ்கு என்ன கல்யாணம் பண்ணி வக்கிறதா பேசிக்கிறாங்க..நேத்து நா முடியாதுன்னதும் அவ்ளோ சண்ட..” தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்தவாறு உரைத்தவளின் வார்த்தைகளில் கோபம் கொழுந்து விட்டெறிந்தது,தோழிக்கு.
“யாரு அந்த பொம்பள பொறுக்கி அவனுக்கா..? உன் வீட்டாளுங்களுக்கு கண்ணு என்ன கபாலத்துலயா இருக்கு..? அவனுக்கு போய் உன்ன கட்டி வக்கப் பாக்கறாங்க..? அதுவும் தெனம் தெனம் ரெட் லைட் ஏரியாவுக்கு போறவன் டி அவன்..அவனுக்கு போய் உன்ன..”
ஆண் வாசமே அறியாத,காதலின் நெடியை கூட நுகர்ந்திடாத,பாவையவளை அயோக்கியன் ஒருத்தனுக்கு கட்டி வைக்க முயல்வதை எந்த தோழமை தான் தாங்கிக் கொள்ளும்..?
“என்ன பண்றதுன்னு புரில கவி..” ஆதங்கம் மிகுதியில் வந்த வார்த்தைகளில் அளவுக்கு மீறிய வலி.
“பேசாம ஓடிப் போயிரு டி..”
“அவங்க பண பலத்துக்கும் அதிகார பலத்துக்கும் முன்னாடி எங்கன்னுடி நானும் போய் ஓடி ஒளிரது..? நீயே சொல்லு..” ஆற்றாமையுடன் வினவியவளின் கேள்வியில் இருந்த உண்மையில் பேச்சற்று போனாள்,தோழி.
“அவங்க இருந்து தப்பிக்கனும்னா நா இந்த உலகத்த விட்டுத் தான் போனும்..வேற வழி இல்ல..” வலியோடு சலிப்பும் ஒரு சேரத் தாக்க,எழுந்து கொண்டவளோ,கைகளை கழுவிக் கொண்டு வருகையில் எதிரே வந்த ஆணொருவனுடன் மோதப் பார்த்திட,சுதாரித்து விலகி நின்றவளுக்கு ஆழமாய் மூச்சு வாங்கிட,நெஞ்சில் கை வைத்து இதழ் பிளந்து சுவாசித்தாள்.
அவள் இதயமோ,இயல்பை மீறி உச்ச அதிர்வெண்ணில் துடித்தது.
துடிக்கும்.
2026.03.13
நம்மளோட இதயம்,தான் துடிக்குறதுக்கு தேவயான நரம்புத் தூண்டல தானே,ஆரம்பிச்சுக்கும்.
நார்மலா நம்ம பாடில எந்த பார்ட் அசையுறதுன்னாலும் அதுக்கு நரம்புக் கணத்தாக்கம் தேவ.அதே போல தான் இதயத்துக்கும்.ஆனா,இதயம் தான் துடிக்குறதுக்கு தேவயான சிக்னல அதாவது கரண்ட தானே,பிறப்பிச்சிக்கும்.
அப்டி பிறப்பிக்குறது தான்,இதயோத்தோட மத்திய தசைப்பகுதியில அமஞ்சு இருக்குற ஸ்பெஷலான செல்ஸ்.
இது மூலமா தான் கரண்ட் உருவாகி,அந்த மத்திய தசைப்படைல (மயோகாடியம்) பரவி இதயம் துடிக்கும்.
அப்டி ஸ்பெஷலான இந்த செல்ஸோட கூட்ட நாம இதயத்தோட கடத்தும் தொகுதின்னு சொல்லுவோம்.
அதுல மெய்னா மூணு இருக்கு.
சைனோ ஏட்ரியல் நாட் – SA node – இதயத் துடிப்பு ஆரம்பத்துக்கான கணத்தாக்கத்தை இது தான் ஆரம்பிக்கும்.இது இதயவறைகளோட,சுருக்கத்துக்கு ரீசன்.
ஏ வி நாட் – AV node – இவரு வென்ட்ரிகல் (சோணையறை) இடையிலான பிரிப்புத் தடுப்புல இருக்கும்.எஸ் ஏ நாடோட கரண்ட இவரு விரியலாக்கம் மீன்ஸ் பெருசா மாத்துவாரு.
பேர்கின்ஜி நார் மற்றும் ஹிஸ்ஸின் கட்டு – இவங்க தான் சோணையறை மயோகாடியத்துல பரவி இருக்கும்.இவங்களுக்கு கரண்ட் வர்ரதால சோணயறைகள் சுருங்கும்.
பேஸ் மேகர்னு நார்மலா எஸ் ஏ நாட சொல்லுவாங்க..அப்டின்னா அந்த கரண்ட ஆரம்பிச்சு வைக்கிறதனால அந்த பேர் வரும்..ஹார்ட்ல பேஸ் மேகர் செயற்கையா பொருத்துறது கேள்வி பட்டு இருப்பீங்க தான..
எஸ் ஏ நாட் சரியா வேல செய்யலனா ஏ வி நாட் கரண்ட பிறப்பிக்கும்.பட் அது எஸ் ஏ நாட் அளவு பெருசா பிறப்பிக்காது.
ரைட்!
அடுத்து மியூட்டேஷன் – விகாரம்னு தெரியும் தான.உள்ளக மற்றும் வெளியக காரணிகளால பரம்பரையலகுகள்ல வர்ர மாற்றம் தான் இது.பெரும்பாலும்,தீமயான விளைவு தான்.பட் நன்மையவும் உண்டு பண்ணலாம்.
அடுத்து டிபோலரைஸேஷன் – Depolarization – ஒரு கரண்ட் அதாவது கணத்தாக்கம் கடத்தப்பட மூனு ஸ்டேஜ் இருக்கு..அதுல முனைவழிதல தான் இப்டி சொல்லுவோம்..தட் மீன்ஸ் நார்மலா செல் மெம்ப்ரேன்ல ஒரு நெகடிவ்விடி இருக்கும்.அது இல்லாம போறது..
இவ்ளோ போதும்னு நெனக்கிறேன்!
