மருத்துவமனைக்கு போனீர்களா என்று மித்ரா கேட்ட கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்ல மாட்டானா என்று அவள் ஏங்க.. அந்த நம்பிக்கையை பொய்யாக்குவது போல அவன் ஆமாம் என்று தலையாட்டவும் இடிந்து போய் தரையில் அமர்ந்து விட்டாள் மித்ரா..!!
ஒரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்களே இப்பொழுது அதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்களா அதனால் தான் இவர் இப்படி அதிர்ச்சியாகிவிட்டாரா??!!
எனக்கு பிடித்த எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தவனுக்கு, எனக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவனுக்கு என்னால் ஒரு வாரிசை கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்..
முழங்காலிட்டு அமர்ந்தவள் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்..
மெதுவாக அவளின் தலையை வருடி கொடுத்தான் தீரன்.. அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கண்ணீர் கடலானது..!!
” என்னை மன்னிச்சுடுங்க தீரா.. என்னால உங்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை அதற்கு கூட நான் தகுதி இல்லாதவளாகிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க”,என்று சொல்லி அவன் மார்பிலேயே சாய்ந்து அழ தொடங்கினாள்.
பதிலுக்கு அவனிடமிருந்து எந்த வித ஆறுதலான வார்த்தைகளோ அல்லது தழுவலோ இல்லை.. மாறாக கற்சிலை போல அமர்ந்திருந்தான்..
” என்ன தீரன் நீங்க எதுவும் பதில் சொல்லவே மாட்டேங்கிறீங்க என் மேல கோவமா??”, என்று தயக்கத்தோடு அவள் கேட்ட கேள்விக்கு பதிலாக அவளின் கையில் ஒரு பேப்பரை திணித்தான்.
என்ன இது என்பது போல அதை ஆராய்ச்சியுடன் பார்த்தவள்..
அடுத்த நொடி உணர்ந்து கொண்டாள் அது டெஸ்ட் எடுத்த ரிசல்ட் என்று..
ரிசல்ட் என்னவென்று தெரிந்த பிறகு பார்த்து என்ன செய்வது என்று ஏமாற்றத்தோடு தான் அதை ஒவ்வொரு பக்கமாக புரட்டினாள்..
ஆனால் அதைப் பார்க்க பார்க்கத்தான் அவளின் முகத்தில் அதிர்ச்சி ரேகை அதிகமாகியது..!!
காரணம்..
அதில்.…
அவளுக்கிருந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாகவும்.. குழந்தை பெறுவதற்கு வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் போட்டிருந்தது..!!
நல்ல விஷயம் தானே?? இதற்கு எதற்காக அப்படி அழுதான் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளுடைய குழப்பத்திற்கு அடுத்த பக்கம் பதிலளித்தது…!!
அந்தப் பக்கத்தில் உள்ள விவரங்களை படிக்க படிக்க அவள் தலையில் இடி விழுந்தது போலாகிவிட்டது..
அந்த ரிசல்ட் தீரனுடையது..!!
அவனுக்கு ஆண்மை குறைவு என்று அதில் குறிப்பிட்டிருந்தது..!!
அதை படிக்கும்ப்பொழுது நிஜமாகவே அவளால் நம்ப முடியவில்லை.. இது உண்மைதானா என்று ஒரு முறைக்கு இருமுறை கண்களை கசக்கி விட்டு பார்த்தாள்..
நம்ப முடியாத அதிர்ச்சி அவளை தாக்கியிருந்தது..!!
ஒரு ஆண்மகன் அத்தனை சீக்கிரத்தில் உடைந்து போய் வாய் விட்டு அழ மாட்டான்.. அதுவும் கம்பீரத்தின் நெருங்கிய நண்பனாய் இருக்கும் தீரன் ஒருநாளும் இப்படி வாய் விட்டு கதறி அழுதது கிடையாது..
அப்படியென்றால் எந்தளவிற்கு அவன் மனம் காயப்பட்டிருக்க வேண்டும்..?? என்று யோசித்துப் பார்க்கும் பொழுதே அவளுக்கு மனம் வேதனைக்குள்ளானது..
உடனே அவனை கண்ணீரோடு நிமிர்ந்து பார்க்க ..
அவள் அருகில் அமர்ந்திருந்த அவளின் கணவன் அங்கு இல்லை..
எங்கே சென்றான் என்று வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டு எழுந்து அவனை தேடினாள்..
அங்குள்ள ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு வெளியே வெறித்த வண்ணம் அவனுடைய கண்கள் நிலைக்குத்தி நின்றது..
மெதுவாக நடந்து சென்று அவன் தோள் மீது கை வைத்தாள்..
“தீ.. தீ…ர…ன்”, என்று தழுதழுத்தது அவளுடைய குரல்.
எந்தவித சலனமுமின்றி அவளை திரும்பிப் பார்த்தான்..
அடிபட்ட வேதனை அவனுடைய கண்களில் தென்பட்டது..
இப்போது அவன் கண்களில் கண்ணீர் வழியவில்லை.. அதரங்கள் துடிக்கவில்லை..
ஆனால் அந்த முகபாவனை.. அதில் தெரிந்த உணர்ச்சிகள்.. இவள் மனதை ஆழமாக தாக்கியது..!!
இரு கைகளாலும் அவனுடைய முகத்தை ஏந்தியவள் கண்ணீரோடு பேச தொடங்கினாள்..
” தீரன் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை இதுக்காக தான் நீங்க இப்படி வருத்தப்பட்டிங்களா?? நான் சொல்றதை கொஞ்சம்..”, என்று அவள் முழுதாக பேசி முடிக்கும் முன்னமே அவளுடைய உதட்டின் மீது ஒரு விரலை வைத்தான்..!!
வேண்டாம் என்பது போல் தலையாட்டினான்..
அவளுடைய இரு கைகளையும் தன் கரங்களுக்குள் பொத்தி வைத்து கொண்டான்..
“மித்து.. கனவில் கூட நான் நினைச்சு பார்க்காத ஒரு விஷயம் நடந்திருக்கு.. அன்னைக்கு நீ என்ன நிலைமையில் என் கண்ணு முன்னாடி நின்னுட்டிருந்தியோ.. இப்போ அதே நிலைமையில் நான் உன் கண்ணு முன்னாடி நின்னுட்டிருக்கேன்.. குழந்தை பிறப்பதற்கு தகுதி இல்லாத நீயெல்லாம் என்கிட்ட கேள்வி கேட்கக் கூடாதுன்னு அன்னைக்கு எவ்வளவு கேவலமா பேசி உன்னை காயப்படுத்தினேன்.. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து தான் இப்பொழுது தண்டனை அனுபவிக்கிறேனோ??”, என்று அவன் சொல்லும்போதே அவன் இதழ்களை பொத்தினாள் கை விரல்களால்.
“ இல்லை தீரன் அப்படியெல்லாம் சொல்லாதீங்க..”
மறுப்பாய் தலையசைத்து மீண்டும் அவள் கைகளை தன் கரங்களுக்குள் சிறை பிடித்தான்..
“ என்னை முழுசா பேச விடு மித்து.. நான் ஒரு ஆண்மகன் என்கிற கர்வத்தோடு இத்தனை நாளும் வாழ்ந்துட்டிருந்தேன்.. இப்போ அதையெல்லாம் சுக்குநூறாக உடைப்பது போல இந்த எழுத்துக்கள் என் கண் முன்னாடி இருக்கு.. என்னோட ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக கல்யாணம் என்கிற பெயரில் உனக்கு எவ்வளவு கொடுமை பண்ணிட்டேன்.. உன்னுடைய விருப்பமில்லாமல் எத்தனையோ முறை உன்னை தொட்டிருக்கேன்.. நீ என் வாழ்க்கையில் வரதுக்கு முன்னாடி எத்தனையோ பெண்கள் என் வாழ்வில் வந்து போயிருக்காங்க.. ஆனால் நீ எப்போ வந்தியோ அதுக்கு பிறகு என்னால் கனவில் கூட வேறொருத்தியை நினைச்சு பார்க்க கூட முடியல.. காதலோ காமமோ எதுவாக இருந்தாலும் அது உன்னுடன் தான் என்று முடிவு செய்து விட்டேன் அப்போதே.. நாட்கள் கடக்க கடக்க ஒரு கட்டத்தில் நீ என்னை முழுசா ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுட்ட.. உன்னை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் தவிச்சிட்டிருந்தேன்.. அன்னைக்கு நடந்த ஆக்சிடெண்டில் கூட மறுபடியும் எப்படியாவது மீண்டு வந்து உன்னோடு வாழனும் என்கிற ஆசைதான் என்னை மீட்டுக் கொண்டு வந்தது.. ஒருவேளை அன்னைக்கே நான் மொத்தமா போயிருந்தா இந்த விஷயங்களை சந்திக்க நேர்ந்திருக்காது போல..”
” ஐயோ தீரா.. தயவு செஞ்சு இப்படி வார்த்தையால என்னை கொல்லாதீங்க.. இந்த மாதிரி பேசாதீங்க என்னால தாங்கிக்க முடியல..”,என கூறி அவன் கைகளில் முகம் புதைத்து அழுதாள்.
” காலம் முழுக்க உன்னோட வாழனும் என்கிற ஆசைதான் என்னை அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது.. இப்போ மறுபடியும் தாங்க முடியாத ஒரு கஷ்டத்தை சூழ்நிலை எனக்கு கொடுத்திருச்சு.. உன்கிட்ட நான் ஒன்னே ஒன்னு கேட்டுக்குறேன்.. நான் உனக்கு செய்த கொடுமைகள் ஏராளம் அதையெல்லாம் இப்ப சரி பண்ண முடியாது.. ஆனால் இப்போ எனக்கு அதுக்கு ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைச்சிருக்கு.. எனக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு தெரிஞ்சும் என்னை நீ ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் விலகி செல்வதும் உன்னுடைய விருப்பம் அதை நான் தடுக்க மாட்டேன்.. என்னை விட்டு விலகி போகணும்னு நினைத்தால் தாராளமாக போகலாம்.. ஒருவேளை நீயும் என்னை விரும்புவதாக நினைத்தால்…… அப்படி மட்டும் இருந்தால் நான் தான் அதிர்ஷ்டசாலி.. எனக்கு நீ இன்னொரு வாய்ப்பு தருவியா என்று தெரியல ஆனா தந்தால் நிச்சயம் உன்னை விட்டு ஒரு நொடி கூட நீங்க மாட்டேன் மித்து..”, என்றான் உறுதியோடு அவளின் கண்களை பார்த்து..!!
கலங்கிய விழிகளோடு.. எந்த பதிலும் சொல்லாமல் அவனை வைத்துக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..
தயங்கியப்படி அவள் சில நிமிடங்கள் அவனையே பார்க்கவும், அவளுக்கு விருப்பம் இல்லை போல என்று நினைத்துக் கொண்டு அவளின் கைகளை விடுவித்தான் அவன்..
அவளிடமிருந்து அவன் விலகி இரண்டு அடி தான் நகர்ந்திருப்பான்..
உடனே ஓடி சென்று அவன் முதுகோடு சேர்த்தணைத்து கொண்டாள்..❤️❤️
” என்னை விட்டுப் போயிடாதீங்க எனக்கு எல்லாமே நீங்க தான்.. தயவு செஞ்சு என்னை விட்டு விலகிப் போகணும்னு கனவில் கூட நினைக்காதீங்க..”, என்று அவள் கூறவும் அவளை திரும்பிப் பார்த்தான்..
” ஆனால் பதில் சொல்லாமல் தயங்கி நின்றாயே.. உனக்கு விருப்பம் இல்லையோனு நான் அதான்..”, என்றதும்..
” என்னை விட்டு நீ எங்கேயும் போகக்கூடாது.. காலம் முழுக்க நீ என்னுடன் தான் இருக்கணும்னு நீங்க கட்டளையாக சொல்லிருந்தால் கட்டியணைத்து முத்தம் கொடுத்திருப்பேன்.. வாய்ப்பு தருவியா என்று அனுமதி கேட்கவும் தான் தயங்கி நின்றேன்..”, என்று கூறினாள் புன்னகை ததும்ப..
” அப்படின்னா உனக்கு.. விருப்பமா ?? நீ என்னை விரும்புகிறாயா??”, என்று சந்தேகமாக கேட்டான் இன்னுமும்..
” முழுமையான ஆண் மகன் என்றால் என்ன தீரா?? கட்டிய மனைவிக்கு குழந்தை கொடுப்பவன் தான் ஆண்மகன் என்று யார் சொன்னது?? ஒரு பெண்ணின் உணர்வுகள் அவனால் மதிக்கப்படும்போது , உனக்கு நான் இருக்கிறேன் என்கிற தைரியத்தை அவளுக்கு கொடுக்கும்போது, அவன் அருகில் நான் இருந்தால் பாதுகாப்பாக உணர்கிறேன் என்கிற உணர்வை அவள் அவனிடம் உணரும்பொழுது, எனக்காக எதையும் அவன் இழப்பான் ஏன் தன்னையே கூட அவன் இழக்க தயாராக இருப்பான் என்கிற உறுதி அவள் மனதில் என்று தோன்றுகிறதோ அப்பொழுதுதான் ஒரு ஆண் முழுமையான ஆண்மகன் ஆகிறான்.. அப்படி பார்த்தால் நீங்க தான் என்னோட ஹீரோ.. ❤️❤️
என்னதான் வன்மையாக என்னை நீங்கள் நெருங்கினாலும் என் கண்களில் ஒரு துளி கண்ணீரை பார்த்ததும் என்னை காயப்படுத்தாமல் விலகி சொல்வீர்களே அப்போதும் சரி, வேறு ஒரு ஆண்மகனுடன் நான் பேசுவதை கூட தாங்கிக்கொள்ள முடியாமல் மனதளவில் கஷ்டப்பட்டீர்களே.. அந்தப் பொசசிவ்னஸ் அதை உணரும் போதும் சரி, எனக்கு பிடித்ததையெல்லாம் பார்த்து பார்த்து செய்து என்னுடைய தீராத ஆசைகளை எல்லாம் நிறைவேற்றினீர்களே…
அது போதாது என்று உங்களுடைய கர்வம் , ஆணவம் எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்துவிட்டு மண்டி போட்டு என்னிடம் உங்கள் மனதை வெளிப்படுத்தி அன்பை யாசகமாக கேட்டீர்களே அப்போதும் சரி,
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கூட முதலில் என்னை மட்டும் காப்பாற்றி விட்டு நீங்கள் உங்கள் உயிரை பணயம் வச்சீங்களே அப்போதும் சரி.. என் மனம் உங்களிடம் மண்டியிடத் தொடங்கி விட்டது என்றோ கொஞ்சம் கொஞ்சமாக.. ஐ லவ் யூ தீரன் என்று வாய் வார்த்தையாக நான் உங்களிடம் சொல்லாவிட்டாலும் என் மனம் உங்களிடம் சரணடைந்து பல நாட்கள் ஆகிவிட்டது..”, என்று கண்ணீரோடு அவள் தன் மனதை வெளிப்படுத்தியதும்..
” ஐ லவ் யூ தீரன்.. லவ் யூ சோ மச்..”, என்றாள் அவனை நேருக்கு நேராக பார்த்து..
தன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை.. நிஜமாகத்தான் சொல்கிறாளா என்று மீண்டும் மீண்டும் அவளின் கண்களை ஏக்கமாக பார்த்தான்..
நிஜம்தானடா மடையா நம்பு.. என்பது போல அவனுடைய இதழ்களை தன் தேனிதழ்களால் சிறை பிடித்தாள் மிஸ்ஸஸ் தீரன்..💋💋
மடி மீது நீ இருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ
ஒரு மூச்சில் இரு தேகம்
வாழ்வது நாம் அன்றி வேராரோ
நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ஓஹோ ❤️❤️
💋💋💋💋💋💋சுபம்💋💋💋💋💋💋💋
