உயிராக வந்த உறவு – அத்தியாயம் 16

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 16

ஊட்டியின் அந்த குளிர் காலையும் மெதுவாக மாறிக் கொண்டிருந்தது.

டூர் இன் கடைசி நாள். நண்பர்கள் செல்ஃப்பிகள் என சிரிப்பு சத்தம்.ஆனா தாரணி மனசு மட்டும் அமைதியாக இருந்தது.

ஊட்டி மலைகள் சாட்சியாக அவள் வாழ்க்கையில் ஒரு காதல் மலர்ந்திருந்தது. காலேஜ் பஸ் கிளம்பியது.அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர தாரணி ஜன்னலோர இருக்கையில் இருக்க,தீரன் அவள் பக்கத்தில் இருக்க,மலை சாலைகள் மெதுவாக கீழே இறங்க ஆரம்பித்தது.

மாணவர்களில் “காதல் பாடல் போடுங்க!” என்று ஒருத்தி கூச்சலிட, பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.அந்த வரிகள்“உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே…”அதை கேட்டு தாரணி மெதுவாக சிரிக்க, தீரன் அவளை பார்க்க அப்படியே கல்லூரிக்கே வந்தார்கள்.

அடுத்த அந்த நாள் காலையில் தாரணி விழித்த நிமிஷமே அவள் முகத்தில் ஒரு குழந்தை போன்ற சிரிப்பு.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் டி அழகி…” என்று தன்னையே கண்ணாடியை பார்த்து சொல்லிக்கொண்டாள்.சிறிது நேரத்தில் ஃபோன் வைப்ரேட் ஆகிக் கொண்டே இருந்தது. அதில் நண்பர்களின் வாழ்த்துக்கள் செய்தி வந்து இருக்க,ஆனா அவள் காத்திருந்த நபரிடம் இருந்து ஒரு மெசேஜ் கூட வரவில்லை.இந்த தீரன் “ஒரு விஷ் கூட பண்ணல” என மனதில் திட்டி கொண்டாள்.

கல்லூரிக்கு வந்ததும் அவன் வழக்கம் போல இருக்க, தாரணி அவனையே பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு சாதாரண  குட் மார்னிங் கூட இல்ல. ஹம் என உதட்டை சுழித்தபடி சொல்ல அவன் கண்டு கொள்ளவில்லை.

மாலை வகுப்பு முடிந்ததும் அவன் மெதுவாக,“தாரணி… லைப்ரரி வரியா? ஒரு நோட்ஸ் வேணும்.”என சொல்ல

அவள் சற்று கோபத்துடன்,“வேணாம் நான் வரல” என சொல்லியதும்

கொஞ்சம் முக்கியம் என்று அவன் சுருக்கமாக சொன்னதும்,அவள் விருப்பமில்லாமே அவனைப் பின் தொடர்ந்தாள்.

லைப்ரரிக்கு பதிலா அவன் கல்லூரி கேம்பஸ் பின்புறம் உள்ள கார்டன்க்கு அழைத்துச் செல்ல,அங்கே மாலை காற்று மெதுவாக வீசியது.மரங்களின் நடுவே சூரியன் மறையும் ஒளி.

“எதுக்கு இங்க கூப்பிட்டு வந்த?” என அவள் கேட்கவும் 

அவன் எதுவும் சொல்லாமல் அவளின் முன் நின்றான்.

அடுத்த நொடி,மரக்கிளைகளில் சிறிய லைட் ஒளிர,அவள் பெயர் காகித மலர்களில் எழுதப்பட்டிருந்தது.

“Happy Birthday Tharani.” என்று இருப்பதை பார்த்த அவள் அதிர்ச்சியில் நின்றாள்.

“இது… நீயா…?”என கேட்க

அவன் சிரித்த படி“காலைல விஸ் பண்ணலன்னு கோபமா?”

அவள் அமைதியாக பார்த்தாள்.“நான் முதல்ல உனக்கு விஸ் பண்ணணும்… ஆனால் எல்லார் விடவும் ஸ்பெசல்”என சொல்லி பையில் இருந்து ஒரு சிறிய பாக்ஸ் ஒன்றை எடுத்தான்.

அதை பார்த்தும் அவள் இதயம் வேகமாய் துடிக்க,இதை திறந்து பாரு என அவன் சொன்னதும் அவள் மெதுவாக திறந்தாள்.அதுக்குள் ஒரு சில்வர் பிரேஸ்லெட் அதில் சிறிய இதயம் இருக்க அந்த இதயத்தில் “D ❤️ T”என இருந்தது.

அதை பார்த்த அவள் கண்கள் நனைந்தது.“தீரன்… இது”என ஏதோ சொல்ல வர,வார்த்தை வராமல் தவித்தாள்.

அவன் ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டபடி,

இது என் வாழ்க்கைல மிக முக்கியமான நிமிடம்.“தாரணி…நான்  இன்று உன்கிட்ட ஒன்று சொல்லணும்.”அவன் அவளின் கண்களில் நேராக பார்த்தபடி,“நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு எல்லாமே கிடைச்ச மாதிரி ஆயிடுச்சு,பேருந்தில் முதல் தடவை நீ சாய்ந்த அந்த நிமிஷத்திலிருந்து,ஊட்டியில் நீ சிரிச்ச அந்த சின்ன நொடிகள் வரை…

நான் உன்னை தவிர வேற யாரையும் என் வாழ்க்கையில என்னோட துணையா நினைச்சி கூட பார்க்கமுடியல.”என அவன் சொல்ல

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவள் 

 கையை மெதுவாக பிடித்தான்.

“தாரணி…I love you.”

அந்த மூன்று வார்த்தைகள் மாலைக்காற்றில் மெதுவாக கரைந்தன.

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஆனா அது துக்கம் இல்லை. ஆனந்த கண்ணீர்.. யாருடைய வாழ்த்துக்காக காத்திருந்தாலோ அவனிடமிருந்து வாழ்க்கையை கிடைத்து விட்டது என சந்தோஷத்தில் இருந்தாள்..

“நீ இன்று விஸ் பண்ணலன்னு நான் மனசுக்குள் வருத்தப்பட்டேன்…ஆனா நீ இதை எல்லாம் பிளான் பண்ணி இருக்கன்னு தெரியல.”என அவள் சொல்ல

அவன் சிரித்தபடி,

“நீ என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம்.உன் பிறந்தநாள் சாதாரணமா இருக்கக்கூடாது.அதான் தாரணி” என சொல்ல

அவள் மெதுவாக அவனிடம் அருகே வந்து“தீரன்…நானும் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்.”என சொல்ல

அந்த வார்த்தை அவன் இதயத்துக்கு புது வித நம்பிக்கையை கொடுத்தது.

அவன் பிரேசிலெட் அவள் கையில் அணிவித்து அந்த கையில் மெதுவாக தன் இதழை பதித்தான்.

“இது ஒரு சாதாரண கிப்ட் மட்டும் இல்ல,இது உன் கூட இருக்கும்போது  எப்பவும் நான் உன் கைய உரசிட்டே இருக்கிற மாதிரி நீ நினைச்சுக்கணும்” என சொல்ல

இன்னும் அவன் அவள் கையை பிடித்து நிற்க

பெண்ணவளுக்கு முதல் முத்தம் தரும் வெட்கம், மயிலிறகு வருடலைப் போன்ற மென்மையாக இருந்தது. விழிகள் போதை கொள்ள, தேகம் சிலிர்த்து, இதழ்கள் ரகசியம் பேச, அவள் நாணத்தில் தலைகுனிந்து நின்றாள் அந்த தருணம், ஒரு காதலியின் அழகான வெட்கத்தை அவன் ரசித்தான்..

“உன் இதழ் தொட்ட கணத்தில்,

அகராதி தொலைத்தேன்!

என் நாணத்தின் உச்சியில்,

பூமி மறைந்தேன்!

முதல் முத்தத்தின் வெப்பம்,

என் வெட்கம் தழுவ…

கவிஞனாய் நீ மாற,

கவிதையாய் நான் நின்றேன்!” என்று அவள் கண்கள் கூட கவிதை சொன்னது அவனிடம்..

அந்த மாலைசூரியன் மறைந்தாலும்,

இரண்டு இதயங்களில் ஒரு புதிய ஒளி உதித்தது.அவள் பிறந்த நாள்…

அவள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிய நாள்.

அவர்கள் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொன்ன அந்த நாளிலிருந்து, வாழ்க்கை மெதுவாக மாற்றம் கண்டது.அன்று பெய்த மழை இன்னும் தாரணியின் நினைவில் தெளிவாக இருந்தது. கல்லூரி வளாகத்தில் திடீரென கொட்டிய மழையில் நண்பர்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தீரன் அவள் கையை பிடித்து, “ஓடாதே…” என்று சிரித்தபடி அவளை பிடித்து இழுக்க,

மழைத்துளிகள் முகத்தில் விழ, தாரணி சிரித்தாள்.

அந்த சிரிப்பில் நாணமும் இருந்தது,சந்தோஷமும் இருந்தது.

“இப்போ எல்லாருக்கும் தெரியும்,நாம லவ் பண்றது” என அவள் மெதுவாக சொன்னாள்.

உடனே தீரன் “தெரியட்டும், சோ வாட் செல்லம்”என அவள் இடையை இருக்க பிடிக்க,

டேய் விடு இது காலேஜ் என அவள் சொல்ல

“நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல பெருமையா இருக்கு தாரு” என அவன் சொல்லியதும் இப்படி எல்லாம் ஐஸ் வச்சா உன் கூட எங்கேயும் வர மாட்டேன் டா என்னை விடு என சொல்லி அவனிடம் இருந்து அவள் விலக

விலகி போகாதே தொலைந்து போவேனே நான்…என அவன் சொன்னதும் அவள் சிரித்து கொண்டு லவ் யூ தீரா என்றாள்..

அந்த நாளிலிருந்து அவர்கள் காதல் மறைவு இல்லாமல் மலர்ந்தது. நாட்கள் நகர்ந்தன…காலை நேர காத்திருப்பு,வகுப்பு இடைவேளையில் சிறு உரையாடல்கள்,நூலகத்தில் சேர்ந்து படித்த நேரங்கள்,தேநீர் கடையில் ஒரு கப் தேநீரை இருவரும் பகிர்ந்தது,சில நாட்களில் சிறு சண்டைகள் வந்தது.

“நேத்து அழைக்கலையே?”

“செய்திக்கு பதில் தரலையே?”என சின்ன சண்டை..

ஆனால் ஒவ்வொரு சண்டைக்கும் முடிவில் ஒரு மன்னிப்பு…ஒரு சிரிப்பு…

ஒரு “நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்” என்ற உறுதி.

காதல் மெதுவாகப் பொறுப்பாக மாறியது.மூன்றாம் ஆண்டு  வந்தது..அன்று கல்லூரி முடிந்து வளாகம் காலியாகிக் கொண்டிருந்தது.

மரங்களின் நிழலில் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

“நாம விரும்பி இரண்டு ஆண்டுகள் போனதே தெரியல…” என தாரணி மெதுவாக சொன்னாள்.

“ஒரு நொடியைப் போல போயிடுச்சு,” என்றான் தீரன்.

“அடுத்தது என்ன?” அவள் கேட்க,

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

பைனல் இயர் முடிச்சுட்டு நெக்ஸ்ட் ஒரு நல்ல வேலை,பிறகு… நம்ம வாழ்க்கை.”

அந்த வார்த்தை தாரணியின் இதயத்தை மெதுவாகத் தட்டியது.

“நம்ம வாழ்க்கை…”அவள் கண்களில் ஒரு கனவு.அவன் அவள் கையை பிடித்தான்.“நீ எங்க இருந்தாலும்… என் வாழ்க்கையில் நீ தான்.”என அவன் சொல்ல

அவர்கள் குழந்தைத்தனமான காதலிலிருந்து புரிதலான உறவாக வளர்ந்திருந்தார்கள்.தீரன் ஒரு நல்ல வேலைக்காக படிக்கும் போதே முயற்சி செய்து கொண்டிருந்தான்.தாரணி மேல்படிப்புக்கு விண்ணப்பித்தாள்.

ஆனால் வீட்டில் மெதுவாக பேசப்படும் வார்த்தைகள் அவளது மனதை கலக்க ஆரம்பித்தது.“படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணணும்…”

“வயசு ஆகுது…”என்ற பேச்சு.. அதை எதையும் அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை, தீரன் இடம் தன் அக்காவை பற்றி சொல்லி அடிக்கடி கவலை கொள்வாள் இன்னும் அவளுக்கு குழந்தை இல்லை என்று..

அன்று கல்லூரி புதிய கல்வியாண்டில் அடி எடுத்து வைத்து வரும் முதல் வருட மாணவர்களை வரவேற்றது..கல்லூரி வளாகம் மீண்டும் சத்தமாய் உயிர்ப்புடன் இருந்தது.புதிய மாணவர்கள் அச்சமும் ஆர்வமும் கலந்த முகங்களுடன் உள்ளே வந்துகொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருத்தி அர்ச்சனா.

பிங்க் சல்வார், வெள்ளை துப்பட்டா, நீண்ட கூந்தல்.அவள் கண்களில் ஒரு தன்னம்பிக்கை.“இந்த கல்லூரில் தான் என் வாழ்க்கை ஆரம்பம்,” என்ற ஒரு எதிர்பார்ப்பு.அவள் வளாகத்துக்குள் முதல் அடியை வைத்த நொடி,

மர நிழலில் சில மாணவர்கள் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களுள் ஒருவர் தீரா..என குரல் கொடுக்க,

அவனோ தூரத்தில் இருந்து கையில் ஒரு நோட்டை தலைக்கு மேல் வைத்தபடி அழகாக துள்ளி ஓடி வந்தான்..

“என்னடா மச்சான் உனக்கு மழையா பெய்து, நோட்டை வச்சிட்டு வர”என ஒருவன் கேட்க 

மழை இல்லடா, வெயில்.எவ்வளவு வெயில் பார்த்தியா புதுசா நம்ம ஜூனியர் எல்லாம் வராங்க என அவன் சொல்ல 

“பார்றா நீயும் வர வர காதல் மன்னன் ஆகிட்டே வர” என ஒருவன் சொல்லவும் தீரன் மெதுவாக சிரித்தான்.அவன் சிரிக்கும் போது கண்களில் ஒரு ஈர்ப்பு,

அந்த ஒரு பார்வை.அர்ச்சனாவின் நடை தானாக மெதுவானது.

“யார் இவர்?”அவள் மனம் கேட்டது.

அவள் பார்வை அவனை விட்டு நகரவில்லை.அந்த நேரம் தாரணி அவன் அருகே வந்து,“இன்று லாப் நேரம் மாறிச்சு,” என்று சிரித்தபடி சொன்னாள்.

தீரன் அவளை பார்த்து சிரித்தான் 

அந்த சிரிப்பு அவள் மட்டும் புரிந்துகொள்ளும் ஒரு நெருக்கம்.

அதை பார்த்த அர்ச்சனாவின் உள்ளத்தில் ஒரு அறியாத உணர்வு.

“அவர்கள்…?”

சில நொடிகளில் பதில் கிடைத்தது.

“அவர்கள் கல்லூரி லவ் ஜோடி,” என்று பக்கத்தில் நின்ற மாணவி சொன்னாள்.

“இரண்டு வருடமாச்சு.”

அந்த வார்த்தை அர்ச்சனாவின் இதயத்தை சற்று குத்தியது.

ஆனால் அவள் சிரிப்பை மறைக்கவில்லை.“காதல் ஜோடி…”

அவள் மனதில் மெதுவாக ஒலித்தது.

தீரன் தாரணியுடன் பேசிக்கொண்டே இருந்தான்.அவன் யாரை பற்றியும் கவனமே இல்லாமல் அவள் அருகே நடந்துபோனான்.

அர்ச்சனாவின் மனம் ஒரு தீர்மானம் எடுத்தது.“ஒரு பார்வையில் மனம் இழந்தால் அது தவறா?”

“அவன் காதலில் இருக்கிறான் என்றால்… நான் விரும்ப கூடாதா?”

அவள் கண்களில் ஒரு சவால்

மின்னியது.அந்த நாள் கல்லூரியில் அவள் முதல் நாள்.ஆனா அவள் இதயத்தில் ஒரு போட்டி தொடங்கிய நாள்.தீரன் எதுவும் அறியாமல் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.தாரணி தனது உறவின் நிம்மதியில் இருந்தாள்.ஆனால்

ஒரு புதிய கண்அவர்களின் காதலை கவனித்து கொண்டிருந்தது.

அந்த பார்வை சாதாரணமல்ல.

அது ஒரு ஆசை.ஒரு பிடிவாதம். பிடிவாதம் பண்ணியே எல்லாவற்றையும் வாங்கியவள் தீரன் காதலையும் வாங்க திட்டமிட்டாள்.. 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!