அந்த நேரத்தில் தாரணி நிஷா வீட்டில் இருந்தாள். ஒரு விதமான தனிமை அவளை துரத்தியது.நிஷா சமையலறையில் இருக்க, தாரணி மட்டும் ஹாலில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.அவள் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.
அந்த போன் கால் அந்த குரல்அதை மறக்க முடியவில்லை.
“தாரணி… சாப்பிட வரியா…?” என்று நிஷா உள்ளே இருந்து கேட்டாள்.
“ஆமா வரேன்…” என்று அவள் சொன்னாலும் அவள் குரலில் உயிரே இல்லை.
அந்த நேரத்தில் அவள் மொபைல் ஒலித்தது.அவள் உடனே திரையை பார்த்தாள். மீண்டும் அது தெரியாத எண்.
இந்த முறை அவள் தயங்கவில்லை.
அவள் உடனே அழைப்பை எடுத்தாள்.
“ஹலோ…!”
மறுபக்கம் அதே குரல்.இவ்வளவு சீக்கிரம் எடுத்துட்ட போன்,அதான் உனக்கு அந்த குழந்தை முக்கியம்னு தெரியும் என அவள் சொல்ல
தாரணி கோபத்தோடும் பயத்தோடும்
“யார் நீங்க? என்ன வேணும், என் குழந்தை எங்க இருக்கு…?” என கேட்க
அந்த பெண் மெதுவாக அவசரப்படாத,
நான் சொல்றதை கேள் என சொல்லி
சில நொடிகள் அமைதியாக இருக்க
அந்த அமைதியே அவளை நடுங்க வைத்தது.பிறகு அந்த குரல் மெதுவாக
“நாளைக்கு காலை நான் சொல்லும் இடத்துக்கு நீ தனியா வரணும்…” என்று சொல்ல
தாரணி மூச்சை பிடித்தாள்.
“நீ வரலன்னா அந்த குழந்தை உயிரோட இருக்காது…” என்று சொல்லவும்
அந்த வார்த்தை அவளது இதயத்தை கிழித்தது.
“ப்ளீஸ்,அவனுக்கு எதுவும் பண்ணாதீங்க…” என்று அவள் கெஞ்சினாள்.
அந்த பெண் குரல் கடுமையாகியது
“நான் சொன்னதை மட்டும் பண்ணு,
“யாரிடமும் சொல்லக்கூடாது.உன் தோழி உன் குடும்பம் யாருக்கும் தெரியக்கூடாது.நீ மட்டும் வரணும்…” என்று சொல்லவும்
தாரணி குரல் நடுங்கியது.“எங்கே…?” என்று கேட்க
சில நொடிகள் அமைதி.பிறகு அந்த குரல் மெதுவாக சொன்னது.“நாளைக்கு காலை நான் மீண்டும் கால் பண்ணுவேன்.அப்போ எந்த இடம் சொல்றேன்.அந்த நேரம் வரை நீ அமைதியா இரு,இல்லன்னா…”உன் மகன் உயிரோட கிடைக்க மாட்டான்…” என சொல்லி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“ஹலோ… ஹலோ…!” என்று தாரணி கத்தினாள்.ஆனால் மறுபக்கம் அமைதி.
அவள் முழுக்க நடுங்கினாள்.மொபைல் கையில் இருந்து கீழே விழ “என்ன பண்ணுறது,யாரிடம் சொல்லுறது…?” என அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.அந்த நேரத்தில் நிஷா வெளியே வந்தாள்.
“தாரணி… என்னாச்சு…?” என்று அவள் கவலையுடன் கேட்டாள்.
தாரணி உடனே கண்ணீரை துடைத்தாள்.
“எதுவும் இல்ல…நாம பார்த்துக்கலாம்” என சொல்ல
அவள் மனதில் ஒரு முடிவு
“நான் தனியா போவேன்,அந்த குழந்தை காப்பாத்தணும்.அந்த இரவு தாரணி முழுக்க தூங்கவில்லை.
காலையில் ஒரு முடிவு ஒரு பயம் ஒரு போராட்டம்..
அவள் காத்திருந்தாள்.அந்த ஒரு அழைப்புக்காக…
அடுத்த நாள் காலை தாரணி முழு இரவும் தூங்கவில்லை. கண்கள் வீங்கியிருந்தாலும் மனதில் ஒரு தீர்மானம்.நான் போவேன்..
காலை 6 மணி மொபைல் மீண்டும் ஒலித்தது.அவள் உடனே எடுத்தாள்.
“ரெடியா…?” என்று அந்த குரல் கேட்க
“நான் வர்றேன்,நீ எந்த இடம் சொல்லு…” என்று தாரணி குரல் நடுங்கினாலும் உறுதியுடன் இருந்தாள்..
“பழைய தொழிற்சாலை நகரத்துக்கு வெளியே தனியா வா…” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.தாரணி மெதுவாக வெளியே கிளம்பினாள்.நிஷா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள்.ஆனால்
அவள் கதவை மூடும் போது பின்புறம் ஒரு சத்தம்.
நிஷா மெதுவாக கண் திறந்தாள்.
“தாரணி…?”அவள் சந்தேகமாக எழுந்தாள்.
பழைய தொழிற்சாலை அந்த இடம் வெறிச்சோடியது. சுற்றிலும் அமைதி காற்றின் சத்தம் மட்டும்.தாரணி மெதுவாக உள்ளே நடந்தாள்.
“ஹலோ…?”அவள் குரல் எதிரொலித்தது.
“இங்க…” என்று ஒரு குரல்.
தாரணி திரும்பினாள்.
அந்த பெண் நிழலில் இருந்து வெளிவந்தாள்.
அவள் முகம்,அமைதியாக இருந்தாலும்
கண்களில் ஒரு தீ.
“குழந்தை எங்க,நீ யாரு…?”என தாரணி நேராக கேட்டாள்.
அந்த பெண் மெதுவாக சிரித்தாள்.
“அவ்வளவு அவசரம்,நீங்க எல்லாம் அவனை இவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டீங்க…” என்று கேட்க
தாரணி கோபமாக கத்தினாள்“யார் நீங்க…?” என்று கேட்க
அந்த பெண் மெதுவாக அருகே வந்தாள்.
“நான் யார்னு தெரியாதா…?”
சில நொடிகள் அவள் கண்கள் தாரணியை ஊடுருவி பார்த்தது.
பிறகு அந்த ஒரு வரி.
“அந்த குழந்தைக்கு உண்மையான அம்மா யார்…” என்று அவள் கேட்க
தாரணி உறைந்து போனாள்.
“என்ன…?”அவள் மூச்சு தடைபட்டது.
அந்த பெண் கண்ணீருடன் சிரித்தாள்.
“ஆமா,அந்த குழந்தையை நான் தான் பெற்றேன்.உன் அக்கா அனன்யா இல்ல,அவளுக்காக தான் பெற்றேன்…” என சொல்லவும்
அந்த வார்த்தை தாரணியை அதிர்ச்சியில் தள்ளியது.
“என்னோட அக்காவுக்காக நீ பெற்றியா, இல்ல நான் நம்ப மாட்டேன்…அவளுக்கு தான் இந்த குழந்தை பிறந்தது…” என்று தாரணி சொல்ல
அந்த பெண் சிரித்தாள்.“அது தான் நீங்க நம்புற கதை,ஆனா உண்மை வேற…” என்று சொல்லும் போது அவள் குரல் கடினமாக,
“நான் ஏற்கனவே அந்த வீட்டுக்கு ஒரு குழந்தை கொடுத்தேன்…”என சொல்லும் போதே தாரணி கண்கள் பெரிதானது.
“அவங்க என்னை என்ன மாதிரி பயன்படுத்தினாங்க தெரியுமா…?பணம் கொடுத்து… என் குழந்தையை எடுத்துட்டாங்க,ஆனா அவன் என் குழந்தை…” என்று அவள் குரல் கத்தலாக மாறியது.
“என் இரத்தம்… என் உயிர்…”
தாரணி மெதுவாக பின்னோக்கி நகர்ந்தாள்.
“நீ பொய் சொல்ற,என் அக்கா அப்படி இல்ல…” என்று சொல்லவும்
அந்த பெண் சிரித்தாள்.
“உனக்கு தெரியாதது நிறைய இருக்கு தாரணி,அவள் எவ்வளவு பெரிய உண்மை மறைச்சிருக்கா தெரியுமா…?” என அவள் மெதுவாக சொன்னாள்:
“இந்த குழந்தை,அவள் சொந்தமா பெத்துக்கிட்டது இல்ல…”
அந்த வார்த்தை தாரணியின் உலகத்தை உடைத்தது.
“இல்ல…” என்று அவள் தலை ஆட்டினாள்.
அந்த பெண் மெதுவாக ஒரு வீடியோ காட்டினாள்.
அந்த வீடியோவில் மருத்துவமனை அனன்யா, விக்ரம்,அந்த பெண் (கர்ப்பிணி) அனைவரும் இருக்க,
தாரணி கைகள் நடுங்கின.
“இப்போ புரியுதா…?”
“நான் யார்னு…?”
அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நான் என் குழந்தையை திரும்ப வாங்க வர்றேன்…”அவள் மெதுவாக எச்சரித்தாள்.
“நான் இப்போ என்ன சொல்றேன்னு கேள்.இல்லனா.. என சொல்ல
அந்த நேரத்தில் தூரத்தில் ஒரு சத்தம்.யாரோ வருகிறார்கள்…
தாரணி திரும்பிப் பார்த்தாள்.
அவளுக்கு தெரியாமல் வாழ்க்கையின் மிக பெரிய உண்மை வெளிவரப் போகிறது
அந்த வெறிச்சோடிய தொழிற்சாலையில்
காற்றின் சத்தமும் இருவரின் மூச்சும் மட்டும் இருக்க தாரணி இன்னும் அதிர்ச்சியில் நின்றாள்.
அந்த வீடியோ அந்த உண்மைஅந்த குழந்தை… அக்காவுடையது இல்ல…” என்பதை அவள் மனம் அதை ஏற்க மறுத்தது.
“இது பொய்…” என்று அவள் மெதுவாக சொன்னாள்.
அந்த பெண் சிரித்தாள்.“உண்மை எப்போதும் கஷ்டம் தான் தாரணி…”
அவள் அருகே வந்து நின்றாள்.
“இப்போ கேள்,அந்த குழந்தையை நான் வாங்கிக்கிட்டு போவேன்.யாராலும் என்னை நிறுத்த முடியாது…” என்று சொன்ன அந்த நேரத்தில் ஒரு கார் சத்தம்.இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
தொழிற்சாலை வாசலில்ஒரு கார் திடீரென நிற்கிறது.கதவு திறக்கிறது.
மெதுவாக வெளியே இறங்குகிறான்…
தீரன்.
அவனை பார்த்த அந்த நொடி…
தாரணியின் இதயம் நின்றது.
“தீரன்…”
அவள் மெதுவாக சொன்னாள்.
அவன் கண்கள் நேராக அவளை நோக்கின.அதில் கோபம்… கவலை… காதல்… எல்லாம் கலந்திருந்தது.
அவன் வேகமாக உள்ளே நடந்தான்.
“நீங்க யாரு…?” என அவன் அந்த பெண்ணை பார்த்து கடுமையாக கேட்டான்.
அந்த பெண் சிரித்தாள்.
“அவளை காப்பாத்த வர்ற ஹீரோவா…?”
தீரன் ஒரு படி முன்னே வந்தான்.
அவளிடம் இருந்து தூரம் நின்னு பேசு…”
அவன் குரல் கடுமையாக இருந்தது.
தாரணி இன்னும் அதிர்ச்சியில்.
“நீங்க எப்படி இங்கே…?”தீரன் அவளை ஒரு நொடி பார்த்தான்.
நீ என்னை ஏமாத்திட்டு தனியா போறேன்னு நினைச்சியா…?” என்று சொல்லும் போது அவள் கண்கள் நனைந்தது.அவன் மெதுவாக சொன்னான்.“நீ தனியா போறது நல்லது இல்லன்னு எனக்கு தெரிஞ்சு நான் வராம இருக்க மாட்டேன…” என்று சொன்னஅந்த ஒரு வரி…அவள் மனதை உடைத்தது.
அந்த பெண் இடையில் சிரித்தாள்.ஹலோ இங்க என்ன நடக்கு
என்று அவள் குரல் கடுமையாகியது.
“இது என் குழந்தை” என்று அந்தப் பெண் ரித்விக்கை பார்த்து சொல்ல
தீரன் அவளை கூர்மையாக பார்த்தான்.
“என்ன பேசுற…?”
அந்த பெண் நேராக சொன்னாள்
“அந்த குழந்தை அனன்யாவுடையது இல்ல…”
அந்த ஒரு வரி தீரனை உறைய வைத்தது.
“என்ன…?”அவன் தாரணியை பார்த்தான்.
தாரணி கண்ணீர் மல்க தலையசைத்தாள்.
“அவள்… அவள் தான் சொல்றா…”
அந்த பெண் வீடியோ காட்டினாள்.
தீரன் அதை பார்த்தான்.அவன் முகம் மெதுவாக கடினமானது.“அப்போ…”
“நீ தான் அந்த வாடகை தாயா…?” என்று கேட்க
அந்த பெண் சிரித்தாள்.
“இப்போ புரியுதா,நான் யார்னு…” என்று சொல்லும் போது அவள் குரல் மாறியது.
“என் குழந்தையை நான் வாங்கிக்கிட்டு போறேன்…” என சொல்லி அவள் திடீரென்று தாரணியை நோக்கி வந்தாள்.
“நீங்க யாரும் என்னை நிறுத்த முடியாது…” என அந்த பெண் சொல்ல
அந்த நேரத்தில் தீரன் அவள் முன்னே நின்றான்.நீ ஒரு அடி முன்னாடி வராத, குழந்தை தாரணிக்கு தான் என சொல்ல
அந்த பெண் சிரித்தாள்.“நீ என்ன பண்ண போற…?” என்று கேட்க
போலீஸ் இப்பவே போன் பண்றேன் என அவன் தன் மொபைல் எடுக்க
“குழந்தை எங்க இருக்குன்னு தெரிஞ்சா தான் பேசுவா நீ” என்று அந்த பெண் சொல்லவும்
அந்த வார்த்தை இரண்டு பேருக்கும் டென்ஷனை உயர்த்தியது.
தாரணி அதிர்ச்சியுடன் “அவன் எங்க…?” என கேட்க
அந்த பெண் மெதுவாக பின்னோக்கி நடக்க “என்னை ஃபாலோ பண்ணி கண்டுபிடிச்சா உங்க லக்…” என்று சொல்லி அவள் திரும்பி ஓட ஆரம்பித்தாள்.
“நிறுத்து!” என்று தீரன் கத்தினான்.
ஆனால் அவள் ஓடிவிட்டாள்.தீரன் அவளை பின் தொடர முயன்றான்…
ஆனால் தாரணி அவனை பிடித்தாள்.
“தீரன்…”அவள் குரல் நடுங்கியது.
அவன் திரும்பிப் பார்த்தான்.
அந்த குழந்தை,அவன் காப்பாத்தணும் என்று சொல்லும் போது அவன் கண்கள் தீவிரமானது
“நாம் காப்பாத்துவோம்” என்று
அவன் உறுதியாக சொன்னான்.
ஆனா நிஜமாக என்ன நடந்தது என்று அந்த பொண்ணு வாயைத் திறந்து எல்லாத்தையும் சொன்னா தான் தெரியும். இந்த வீடியோவை வைத்து நாம் எதுவும் முடிவு பண்ணிட முடியாது என தீரன் சொல்ல
அந்த நொடியில் அவர்கள் இருவருக்கும் இருந்த காதல்,கடந்த காலம் எல்லாம் ஞாபகத்திற்கு வர
இரண்டு பேரும் கையைப் பிடித்து படி வெளியே வந்தனர் அந்த இடத்தை விட்டு
அந்த தொழிற்சாலை வெளியே
தாரணி கண்ணீருடன் நின்றாள்.
தீரன் கோபத்துடன் சுற்றி பார்த்தான்.
அந்த பெண் ஓடிய பாதையை அவன் கண்கள் பின் தொடர்ந்தது.
“நாம் அவளை பிடிக்கணும்…”
தீரன் கடுமையாக சொன்னான்.
அந்த நேரத்தில் தாரணியின் மொபைல் மீண்டும் ஒலித்தது.அவள் நடுங்கிக் கொண்டு எடுத்தாள்.
“ஹலோ…”மறுபக்கம் அதே பெண்.
ஆனா இந்த முறை அவள் குரலில் ஒரு வித்தியாசம்.
“நீங்க ரெண்டு பேரும் நல்லா சேர்ந்துட்டீங்களே,எவ்வளவு அழகான காட்சி,”என சொல்ல,தீரன் உடனே மொபைலை பிடித்தான்.“எங்கே இருக்கே…?” என்று கேட்க
அந்த பெண் சிரித்தாள்.
“அவசரப்படாதே, இன்னும் இதுஆரம்பம் தான்…” என்று சொல்ல
அந்த நேரத்தில்மறுபக்கம் இருந்து இன்னொரு சிரிப்பு.
அது அந்த பெண்ணோட குரல் இல்ல.
ஒரு பழக்கமான சிரிப்பு.
தாரணி கண்கள் பெரிதானது.
“இது…”அவள் மெதுவாக சொன்னாள்:
“அர்ச்சனா…”
தீரன் அதிர்ச்சியடைந்தான்.
“அர்ச்சனா…?”
அந்த போன் ஸ்பீக்கரில் இருந்து,அந்த குரல் தெளிவாக வந்தது.
“நீயா…?” என்று அவள் குரல் நடுங்கியது.
அர்ச்சனா மெதுவாக சிரித்தாள்.
“ஆமா தாரணி,இத்தனை நாளா உன் வாழ்க்கைல நிழலா இருந்தது யாருன்னு இப்போ புரியுதா…?” என்று கேட்க
தீரன் கோபமாக கத்தினான்:
“அர்ச்சனா… இது எல்லாம் என்ன…?”
அவள் குரல் உடனே கடினமானது.
“நான் ஆரம்பிச்சதை முடிக்கிறேன் தீரன்,நீ என்னை விட்டு அவளை தேர்வு பண்ணின நாள்,நான் முடிவு எடுத்தேன்
நீங்க இருவரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கக்கூடாது…” என்று சொல்ல
அந்த வார்த்தை காற்றை கிழித்தது.
தாரணி அதிர்ச்சியில்,
“என் குழந்தை…?”அர்ச்சனா சிரித்தாள்.
“அந்த வாடகை தாய் பெண்,அவளோட கோபம்… அவளோட வலி…”நான் அதை யூஸ் பண்ணிட்டேன்…”என சொல்ல
தீரன் கோபத்தில் கத்தினான்:
“நீ ஒரு உயிரோட விளையாடுறே…”
அர்ச்சனா குளிர்ந்த குரலில்“அது மட்டும் இல்ல,உங்க வாழ்க்கையோடவும்…”
“நீங்க ரெண்டு பேரும் உடைந்து போறதை பார்க்கணும்…” என்று சொல்லி அவள் சிரித்தாள்.
இப்போ கேளு அந்த குழந்தை நல்ல இருக்கான்.ஆனா எவ்வளவு நேரம் இருப்பான்னு தெரியாது…” என்று சொல்ல
தாரணி கெஞ்சினாள்“ப்ளீஸ்… அவனுக்கு எதுவும் பண்ணாதே…”
அர்ச்சனா சற்று அமைதியாக,
“அவனை காப்பாத்தணும்னாநீங்க என்ன சொல்றேன்னு கேட்கணும்…” என்று சொல்ல
தீரன் கடுமையாக என்ன வேணும்…?”
சில நொடிகள் அமைதி…
பிறகு அந்த ஒரு வரி:
“தீரன்,நீ என்ன கல்யாணம் பண்ணிக்கணும் இப்போவே, அதுக்கப்புறம் இந்த வாடகத்தை கதை எல்லாம் உன்கிட்ட நான் தெளிவா சொல்றேன்…” என்று சொல்ல
அந்த வார்த்தை இருவரையும் உறைய வைத்தது.
அது மட்டும் தான் பண்ண,
குழந்தை உங்க கையில் உயிரோட இருக்கும்… என்று சொல்லி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
தாரணி மெதுவாக பின்னோக்கி நடந்தாள்.அவள் கண்களில் கண்ணீர்.
“இது எல்லாம்… என்னால தான்…”
தீரன் அவளை பார்த்தான்.
அவன் முகத்தில் கோபம்… வலி… தீர்மானம்.
“ இப்போ நமக்கு காதல் முக்கியம் இல்ல,ஒரு குழந்தை முக்கிய…” என்று அவன் மெதுவாக சொன்னான்:
நான் அவனை காப்பாத்துவேன்…”
அந்த நொடியில் தாரணி கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது..
