கதையைக் கேட்டுக்கொண்டிருந்த திகள்விழி தன் நெற்றியில் விரல்களால் தட்டி யோசனை செய்யதவளோ,
“எல்லாம் சரி சார். அவரு எந்தப் பாயிண்ட் ஆஃப் வியூவ்ல ஆரலியை காதலிச்சாரு? தான் வெறுத்த ஒரு பொண்ணைத் தன்னோட காதலியா அவரோட மூளை எப்படி நம்புது?
அவளைப் பிடிக்கவே இல்லைன்னு சொல்லிட்டுத் சுத்துனவருக்கு, அவள் தன்னோட காதலின்ற எண்ணம் எப்படி வந்துச்சு? எனக்கு அந்த விஷயத்தை தான் சரியா புருஞ்சுக்கமுடியல”
“உன் பக்கத்துல உட்கார்ந்திருக்கவன், உன் காலை இடிக்கிறதா நினைச்சு என் காலை அரை மணி நேரமா தேய்ச்சிட்டு இருக்கான். அவன் பக்கத்துலயே இருக்கிற உனக்குப் பத்ரனோட காஜி புரியல, இதுல மேடமுக்கு ருத்ரா காதல் புரியலையா?”
“காலை எடுடா எருமை மாடு, தேய்ச்சே என்னை முழுகாம ஆக்கிடுவ போல!” என்று சரபன் கத்தவும்,அவனை முறைத்தபடி தன் காலை எடுத்தான் பத்ரன்.
“நீங்க ஏன் மாமா அவர் காலை தேய்க்குறிங்க? இங்க இருக்கு என் காலு! நல்லா தேய்ச்சுக்கோங்க!” என்ற திகளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட பத்ரன் “ஆபீஸ்ல அர்ஜென்ட் மீட்டிங் அரேஞ்ச் பண்ணியிருந்தாங்க சொல்ல மறந்துட்டேன், நான் கிளம்புறேன் குட்டச்சி”
“சரி பார்த்துப் போங்க, டாட்டா!” என அவனிடம் சிரித்தபடியே டாட்டா காட்டினாள் திகள்.
“ஏன் நிலா அமைதியா இருக்க?” என்ற சரபனின் கேள்வியில் நிமிர்ந்தாள் நிலா.
“என்ன சொல்றதுனு தெரியலை சார். அந்தப் பொண்ணை நினைச்சா கஷ்டமா இருக்கு. அவளோட வாழ்க்கை அநியாயமா முடிஞ்சுபோச்சு. ஆனா அவளைவிட ருத்ராவோட நிலைமைதான் இன்னும் கஷ்டமா இருக்கு”
அவளுடைய குரல் கலங்கியிருந்தது,
“உண்மை வேற! அவரோட மூளை இல்லாத ஒன்னை உருவாக்கி, அதுல சுகமா வாழ முயற்சி பண்ணுது. அந்தப் பொய்யை உண்மைன்னு நம்பி,
என்னையும் அவரோட பொய்க்கு வாழ்க்கை முழுக்கப் பழியாக்கப் பார்க்குறார். இவங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன்”
“புரியுதுமா! நீ கவலைப்படாத எல்லாத்தையும் பார்த்துக்கலாம்” என சரபன் அவளை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தான்.
அதே நேரத்தில், ருத்ராவின் கார் வாசலில் வந்து நின்றது.
“நான் கிளம்புறேன் திகள். வரேன் சார்!”
என்று இருவரிடமும் சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்துகொண்டாள் நிலா.
“மஃபின் என்னாச்சு? ஏன் டல்லா இருக்கு?”அவளுடைய முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்து கேட்டான் ருத்ரா.
பதிலேதும் சொல்லாமல் அவன் தோள்களில் சாய்ந்துகொண்டாள்.
அவனுக்காக இளகும் உள்ளத்தை அவளே வெறுக்கிறாள். ஆனாலும் அவனிடம் தானே மனம் சிக்கிக்கிடக்கிறது.
அவனுடைய அருகாமை எல்லாவற்றையும் மறக்கச் செய்கிறது!
அவனை வெறுக்க வேண்டும் என்று நினைக்கிறாள், உனக்கு சொந்தமில்லாத காதலை தருகிறவனை போய் நேசிக்கிறாயே! என்று பல நேரங்களில் உள்ளம் வெதும்பினாலும்
ருத்ரா அருகில் வரும்போதெல்லாம் அவளுடைய மனம் அவனிடமே சரணடைந்துவிடுகிறது.
அவளுடைய அமைதியை உணர்ந்த ருத்ரா, எதுவும் கேட்காமல் அவளைத் தன் மடியில் தூக்கி அமர்த்திட, நிலா அவனுடைய நெஞ்சில் முழுதாய் புதைத்துக்கொண்டாள்.
அவனுடைய காதலுக்கும், உண்மைக்கும் இடையில் சிக்கிக்கொண்டு, அவனிடமிருந்து விலகவும் முடியாமல் முழுமையாக சேரவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
ருத்ராவின் கதையைக் கேட்ட பிறகு நிலாஞ்சியின் மனதிற்குள் ஒரு மாற்றம். இதுநாள் வரை அவனுடைய நடவடிக்கைகளைக் கண்டு கோபப்படுபவள், இப்போது அவனை பார்த்ததும் அமைதியாகிவிடுகிறாள்.
அவள் தன்னைத் திட்டாமல் இருப்பதைக் கவனித்த ருத்ராவுக்குத்தான் ஏதோ நெருடலாக இருந்தது.
முதல் இரண்டு நாட்கள் அவளுடைய அமைதியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவன், மூன்றாம் நாள் பொறுக்க முடியாமல் அவளிடமே கேட்டுவிட்டான்.
“ஏன் மஃபின் ரொம்ப அமைதியா மாறிட்ட? நான் நைட் உன்னைத் தேடுறது பிடிக்கலையா? இனிமேல் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் சாரி!”
அவன் குரலில் தெரிந்த தயக்கம் நிலாவை ஏதோ செய்ய, அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் நிலாஞ்சி.
“எனக்கு பிடிச்சிருக்கு ருத்ரா! நீ எதையும் யோசிச்சு உன்னையே குழப்பிக்காத”
என்று அவனுடைய நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
ருத்ரா பார்வையோ ஆராய்ச்சியாக அவள் மீது படிந்தது. “உன் கண்ணு பொய் சொல்லுது ஆரலி! என் கிட்ட மனசுவிட்டுப் பேசு, ஏதாவது கேட்கணுமா?”
இன்று வழக்கத்திற்கு மாறாக நிதானமாகப் பேசினான்.
“ருத்ரா… ஒருவேளை நான் உன்னை விட்டுப் போயிட்டா என்ன பண்ணுவ?”
அடுத்த நொடி அவளை அணைத்திருந்த அவனுடைய கைகள் இறுகின.
“ஸ்ஸ்ஆஆ… வலிக்குது ருத்ரா!” என்றவளுடைய சத்தத்தில் பிடியைச் சற்றுத் தளர்த்தினான்.
நிலா அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். “நான் உன்னை விட்டுட்டுப் போயிட்டா என்ன பண்ணுவ? என்னைத் தேடுவியா? இல்ல போகட்டும்னு விட்டுடுவியா?”
ருத்ரா முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ஆனால் உதடுகளில் மட்டும் மெல்லிய புன்னகை நக்கல் புன்னகை.
“இரண்டும் பண்ண மாட்டேன்”
“அப்போ?”
“என்னை விட்டு போகணும்னு நீ நினைக்கிற அந்த நிமிஷமே உன்னைக் கொன்னுடுவேன்!” என மென்மையாக சிரித்துக்கொண்டே சிறிதும் தயக்கமில்லாமல் சொன்னவனை
நிலா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“கொலை பண்ணிடுவியா?”
“ஆமாம்! திரும்பவும் என்னால இந்த ஏழு வருஷ தண்டனையை தாங்க முடியாது மஃபின். டோன்ட் அஃப்ரைட்… நீதான் என்னை விட்டுப் போக மாட்டியே!”
அவளுடைய கன்னத்தை வருடியபடி சொன்னான் ருத்ரா. ஒருவனால் காதல் கலந்த குரலில் மிரட்ட முடியுமா?
முடியும் என காட்டினான் ருத்ரா. அவனை பொறுத்தவரையில் ஆரலி அவனுடைய உலகம். அவளுக்கு பிடிக்குதோ, இல்லையோ! அந்த உலகம் தன்னிடம் மட்டுமே இருக்கவேண்டும் என நினைக்கும் அவனுடைய பிடிவாதம் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது.
“டவுட் தீர்ந்துருச்சா? இப்போ நீ ஓகேதான, நார்மலா பேசு மஃபின்”
எங்குட்டு நார்மலா பேச!! என்ற பயத்தோடு இவனை புருஞ்சுக்கவே முடியல என பெருமூச்சு விட்டவளின் இதழ்களைச் சிறைபிடித்தான் ருத்ரா.
வழக்கமாக அவன்தான் நிலாவுடைய ஒவ்வொரு தயக்கத்தையும் ரசித்து, அவளைச் சீண்டி, நிதானமாகத் தன் காதலால் அவளை மூழ்கடிப்பான். இன்று அவனை திக்கு முக்காட வைப்பது அவள் முறையாகிப்போனது.
ஆணவனுக்கோ மயிலறகால் உணர்வுகள் மீட்டப்படும் போதை!
அவளோடு கூடாத இடமே இருக்கக்கூடாது என நினைத்தான்போல, சோபாவில் அமர்ந்தபடியே பெண்ணுடலில் கவிதை எழுத அவனுள் விரும்பியே தொலைந்தால் பெண்ணவள்.
போதும் போதும் என்று சொல்லும் வரை திருமணத்திற்கு முதல் நாள் முதற்கொண்டு அவளில் முக்குழித்தான் பாண்டியமன்னன். வேறு வேலையே இல்லை என்பது போல இரு உடல் ஒரு உயிராய் இருந்தனர்.
தன் பெற்றோரின் முன்னால் அமர்ந்திருந்த திகள்விழி, அக்காவின் பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
“என்னடி சொல்ற? அப்போ கல்யாணம்?”
என்று பார்வதி அதிர்ச்சியோடு கேட்டார்.
“இல்லம்மா! அக்காவுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை. அவளை மிரட்டித்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிருக்காரு. சரபன் சார்தான் நாம தப்பிச்சுப் போக உதவி பண்றதா சொல்லியிருக்காரு”
தன் மகளைப் பார்த்த பார்வதி,
“திகள் உன்னோட காதலும் அங்கதானே இருக்கு? அக்காவுக்காக நீ தியாகம் பண்ண முடிவு பண்ணிட்டியா?”
திகள்விழி சிறிதும் தயக்கமில்லாமல்,
“ம்மா… பத்ரன் மாமா என்னைப் புரிஞ்சுக்குவாரு. நான் திரும்பி வருவேன். என்னோட காதலை அவ்வளவு சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றாள்.
அவளுடைய உறுதியைப் பார்த்து பெற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அக்காவுக்காகத் தன் காதலை தற்காலிகமாக ஒதுக்கிவைக்கத் தயாராக இருந்தாலும், தன் காதலை கைவிடும் எண்ணம் அவளுக்கு இல்லை.
“அப்பா இந்தாங்க போன், லைன்ல சரபன் சார் இருக்காரு” என போனை நீட்ட, தயக்கத்துடன் வாங்கினார் சோமசுந்தரம்.
“ஹலோ தம்பி!”
“அங்கிள் நீங்க கவலைப்படாதிங்க. நிலா எனக்குத் தங்கச்சி மாதிரி, ருத்ரா நல்ல நிலைமையில இருந்திருந்தா நானே முன்னிருந்து இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருப்பேன். ஆனா நிலாவை ஆரலியா மாத்த நினைக்கிற ஒருத்தனுக்குத் துணை நிற்க என்னால முடியாது”
சரபனின் வார்த்தைகளில் அத்தனை உறுதி இருந்தது.
“ஆனா எனக்கு பயமா இருக்குப்பா. அவன் என் பொண்ணைத் தேடி வந்துட்டா?”
“பயப்படாதிங்க அங்கிள்! நீங்க நேரடியா கார் ஏற்பாடு பண்ணினா அவனுக்குச் சந்தேகம் வந்துடும். அதான் கார் நான் அரேன்ஜ் பண்றேன் நீங்க தப்பிச்சு போக வசதியா இருக்கும். உங்க பேமிலி ப்ரெண்ட் பேபின்னு ஒரு பையன் இருக்கிறதா நிலா ஏற்கெனவே சொல்லியிருக்கா, அவனை கூடவே வச்சுக்கோங்க. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி பார்த்துக்கோங்க”
“சரியா கல்யாணத்துக்கு முந்தைய நாள் நைட் மண்டபம் எல்லாரும் மண்டபம் வந்துடுவோம், நீங்க நாலு பேரும் நைட் ரெண்டு மணிக்கு மண்டபம் பின்வாசல் போய்டுங்க கார் ரெடியா இருக்கும். அடுத்து இங்க நடக்குறதை நான் பார்த்துக்கிறேன். கார் சென்னையைத் தாண்டுற வரைக்கும் என்னோட ஆட்கள் உங்களை கண்காணிப்பாங்க, நீங்க சேஃபா போனதும் எனக்கு தகவல் வந்திடும்”
“ரொம்ப நன்றிப்பா! எங்க பொண்ணுக்காக இவ்வளவு உதவி பண்ற, உன்னை நாங்க மறக்கவே மாட்டோம்”
“அதெல்லாம் வேண்டாம் அங்கிள். நிலா பாதுகாப்பா போய் சேர்ந்தா போதும்”
என அழைப்பைத் துண்டித்த சரபன், தனக்குள் ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டான்.
எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சரி! இல்லை ருத்ராவிடமிருந்து நிலாவை மட்டுமல்ல, தன்னையும் காப்பாற்ற முடியாது!
இதற்கிடையில் தனியாக இருந்த பத்ரன், சரபன் சொன்ன விஷயங்களை நினைத்துக்கொண்டிருந்தான்.
இதுநாள் வரை அண்ணனுடைய சோ கால்ட் காதல் கதையை பற்றியெல்லாம் அவன் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. முன்பே ருத்ரா அவனுடைய முடிவுகளில் யாரையும் தலையிடுவதை விரும்ப மாட்டான்.
குடும்பத்தோடு இருந்தாலும் தன்னுடைய உலகத்தில் வாழ்பவன்.
பழைய விஷயங்களை யோசித்துப்பார்க்கும் போது இப்போது ஏதோவொரு விஷயம் அவனுக்குள் நெருடியது.
சரபன் சொன்ன கதையில் நடுவில் சில பக்கங்களைக் காணவில்லை.
அண்ணன் அப்நார்மலாக நடந்துகொள்வதற்கும், அவனுடைய நடவடிக்கைகள் மாறியதற்கு பின்னால் வேற காரணம் இருக்குமோ?
விபத்து நடந்த பிறகுதான் அவனுடைய மனநிலை மாறியதா? அல்லது அந்த விபத்துக்கும் முன்பே ஏதாவது நடந்ததா?
இப்படி பல கேள்விகளை மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்க, “ருத்ராவோட ஆக்ஸிடெண்ட் பத்தி, ஆரலி இறப்பு பத்தி முழுசா விசாரிங்க. அந்த ஆக்ஸிடெண்ட் முன்னாடி எஸ்டேட்டல என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெளிவா தெரியணும்” என தன் ஆளிடம் உத்தரவிட்டான்.
அண்ணா இப்படி இருக்கிறதுக்குப் பின்னால் ஏதோ இருக்கு. அந்த உண்மை என்னன்னு தெரிஞ்சுக்காம நான் ஓயமாட்டேன்!
ஆளாளுக்கு ஒரு திட்டம் போட்டிருக்க, கல்யாணத்துக்கு பிள்ளைதாச்சியா தான் என் வருங்கால பொண்டாட்டியை கூட்டிட்டு வருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு முழுநேரமும் அவளை கட்டிலில் புரட்டி எடுத்தான் ருத்ரா.
காதல் என்ற பெயரில் நிலா அனுபவிக்கும் நெருக்கடியை மற்றவர்கள் உணர்ந்திருந்தாலும், அவனிடம் நேரடியாக ‘நீ பண்றது சரியில்ல’ என்று சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை.
கல்யாணத்துக்கு முதல் நாள் பயத்தோடு சுற்றிவந்த நிலாவை ருத்ரா கவனித்துக்கொண்டிருந்தானே தவிர ஏன் இப்படி சுற்றுகிறாய்? என கேள்வி கேட்கவில்லை.
“ஆரலி!” என்ற அவனுடைய அழுத்தமான குரலில் படக்கென்று திரும்பினாள்.
“இங்க வா!”
மறுக்க முடியாமல் அவனருகில் வந்து பொம்மைபோல அமர்ந்தாள்.
நிலா கைகளைப் பற்றியவன், மெஹந்தி கோனை எடுத்து அவளுடைய உள்ளங்கையில் வரையத் தொடங்கினான்.
நிலா ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.
“உனக்கு மெஹந்தி போடத் தெரியுமா ருத்ரா?”
“ஏதோ கொஞ்சம் டிசைன் போடுவேன். அந்த நம்பிக்கையில உனக்கும் போடுறேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!”
அவனுடைய முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது.
“என்ன சிரிப்பு?”
“ஒண்ணுமில்ல!”
“ம்ம்ம்…. இன்னைக்கு நைட் எட்டு மணிக்கு மண்டபத்துக்குப் போகணும் மஃபின். அங்க போனதுக்கப்புறம் மெஹந்தி போட நேரம் கிடைக்காது அதான் இப்பவே வச்சுவிடுறேன்”
ருத்ரா வார்த்தைகளில் இருந்த அக்கறையை உணர்ந்த நிலா, அமைதியாக அவன் முகத்தை பார்த்தாள்.
தன் கண்கள் கலங்கிட, “நீ ஏன்டா எனக்கு மட்டுமே கிடைக்க மறுக்குற?” என்று உணர்வு பொங்க கேட்டாள்.
அவளுடைய கேள்வியில் வெளிப்பட்ட வலியை உணர்ந்தாலும், எந்த தயக்கமும் இல்லாமல், “ஏன்னா… நான் ஆரலியோட காதலன் பொண்ணே!” என்று பதிலளித்தான்.
அவ்வளவுதான்! அவளுக்குள் இருந்த மிச்ச நம்பிக்கையும் அந்த நொடியே உடைந்துபோனது. தன்னுடைய முகத்தில் தோன்றிய வலியை அவனிடம் காட்டாமல் மறைத்துக்கொண்டாள் நிலா.
அதன்பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
மாலையில் ருத்ராவின் குடும்பத்தினர் ருத்ரா வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
பாட்டியும் சாம்பவியும் நிலாவுடன் இருந்துகொள்ள, ருத்ரா தனியாக அமர்ந்து கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.
அண்ணன் மீது பதிந்த பத்ரனின் பார்வை மட்டும் அவ்வப்போது அழுத்தமாகப் பதிந்தது. ருத்ராவோ தம்பியைப் பற்றிக் கவலைப்படவில்லை.
“ஆரலி… பசிக்குது!” என்றவன் குரல் கேட்டதும் வேகமாக ஓடிவந்தாள் நிலா.
‘ஏன் உனக்கு கையில்லையா? போய் எடுத்துவச்சு சாப்பிட மாட்டியா?’ என்ற கேள்விகளே இல்லை.
சாம்பவி வரும்போதே இருவருக்கும் சேர்த்து சமைத்து எடுத்து வந்திருந்தார். அதை தட்டில் எடுத்து வைத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள் நிலா!
காலையிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் அவளுடைய கால்களை பற்றி தன் தொடையில் வைத்த ருத்ரா, மென்மையாக பிடித்துவிட ஆரம்பித்தான்.
“வேண்டாம் ருத்ரா! அப்புறம் எனக்குத் தூக்கம் வந்துடும், கிளம்புற நேரத்துல தூங்கிட்டா நீதான் என்னை தூக்கிட்டுப் போகணும்!”
“தூங்கு, நான் தூக்கிட்டுப் போறேன்”
என அத்தனை இயல்பாக சொன்னான்.
அவள் சாப்பாடு ஊட்டி முடித்ததும், தட்டைப் பக்கத்தில் வைத்தவன் நிலாவுடைய பாதங்களை மெதுவாக அமுக்க ஆரம்பித்தான்.
அவனுடைய விரல்கள் பாதங்களில் அழுத்தம் கொடுக்க, ஏற்கனவே வலியில் இருந்த கால்களும், மனதிலிருந்த பதற்றமும் சேர்ந்து அவளை சோர்வடையச் செய்தன. பத்தே நிமிடங்களில் சோபாவில் தலைசாய்த்துத் தூங்கிவிட்டாள் நிலா.
‘நடக்காத கல்யாணத்துக்கு எதுக்குடா தேங்காய் பை’ என்று மனதுக்குள் புலம்பியபடி வேலை செய்துகொண்டிருந்த சரபன் அவள் தூங்குவதை கண்டு தலையில் அடித்துக்கொண்டான்.
‘இந்த தூக்கம் தூங்குற இதெல்லாம் எங்க தப்பிச்சு போகப்போகுது’ என பல்லை கடித்துக்கொண்டு அவன் நிற்கும் நேரம், சரியாக திகள்விழி போன் செய்தாள்.
“ஹலோ சார்! அங்க எல்லாம் ஓகேவா?”
“எங்கம்மா ஓகேவா இருக்கு? அவன் காலை அமுக்கி விட, உன் அக்கா சுகமா தூக்கிட்டு இருக்கா!
நாளைக்கு அவன் தாலி கட்டுற நேரத்துல ‘ஐயோ… அம்மான்’னு கதறிட்டு இருந்தா, நானே இவளைப் பிடிச்சு ருத்ரா கூடத் தனியா அனுப்பிடுவேன் பார்த்துக்கோ!”
சரபன் சிடுசிடுக்க, மறுமுனையில் திகள்விழி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் ருத்ரா உள்ளே சென்றுவிட, சரபன் நிலாவின் அருகே வந்தான்.
“நிலா… நிலா!”
“ஆங்… என்ன ருத்ரா? எனக்கு தூக்கமா வருது!” என தூக்கத்திலே சிணுங்கியவளின் தலையில் நறுக்கென கொட்டினான் சரபன்.
அடுத்த நொடி, தூக்கத்திலிருந்து மண்டையை தேய்த்துக்கொண்டு எழுந்தாள் நிலா.
“சார்!”
“என்ன சார்? உன்னை நம்பி உயிரை பணயம் வச்சு எவ்வளவு வேலை பார்த்திருக்கேன், நீ தூங்கிட்டு சுகமா தூங்குறியா? போய் மாத்திரை, இன்ஜெக்ஷன் எல்லாம் எடுத்து வை”
“ஆங், இதோ போறேன்!” என வேகமாக எழுந்தவள் தங்கள் அறையை நோக்கி ஓடினாள்.
தன் முன்னே அமர்ந்திருந்த தாத்தாவையும், அப்பாவையும் தேமே என்று பார்த்த ருத்ரா, ‘ஏன் இப்படி பார்க்குறிங்க?’ என எதுவும் வாயை திறந்து கேட்கவும்வில்லை.
அவர்களுடைய முகத்தில் தெரிந்த கவலையை புரிந்துகொள்ள அவன் முயற்சிக்கவும் இல்லை.
“ருத்ரா!” மகாதேவனின் குரல் அறையின் அமைதியை கலைத்தது.
“நீ சுயநினைவோட தான இந்த கல்யாண முடிவை எடுத்துருக்க, நாளைக்கு நம்ம சொந்தங்கள் முன்னாடி ஏதாவது பிரச்சனையோ, அவமானமோ நடந்தா உன்னை மன்னிக்கவே மாட்டோம்”
ருத்ரா அசால்ட்டாக தன் பார்வையை உயர்த்தினான்.
“அப்போ நீங்க யாரும் மண்டபத்துக்கு வராதிங்க!”
அவன் பதிலில் மகாதேவனின் கோபம் எல்லை மீறியது. “டேய் நாங்க உன்னைப் பெத்து வளர்த்தவங்கடா! எங்களைத் தூக்கி எறிஞ்சு பேசுற அளவுக்கு வந்துட்டியா?”
“மகாதேவா அமைதியா இரு!” நடராஜன் மகனை அடக்கியவர், பேரனின் அருகே சென்றார்.
“நீ என்ன பண்ண நினைக்கிறியோ அதைச் செய் ருத்ரா. நாங்க எப்பவும் உன் கூட இருப்போம்” என்று சொல்லிவிட்டு மகனை அழைத்துக்கொண்டு வெளியே போனார்.
அவர் வார்த்தைகளைக் கேட்டதும் ருத்ராவின் உதடுகளில் மெல்லிய புன்னகை தோன்றியது.
அவர்கள் வெளியேறியதும் சரபன் உள்ளே வந்தான். ருத்ராவின் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது.
“மச்சான்… பாட்டி நல்ல நேரத்துல கிளம்பணும்னு சொல்றாங்க”
“ம்ம்ம்…கிளம்பலாம் சரபா, அதுக்கு முன்னாடி நீ ஒன்னு பண்ணனும். எனக்கு போர் அடிக்குது சோ ஜோக் சொல்லு, நான் சிரிக்கணும் அப்பறம் போகலாம்”
என்று சொன்னவனை சரபன் அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“எதே?”
“என்ன முழிக்கிற? ஜோக் சொல்லு இல்லைனா இப்போ வரமா, நாளைக்கு நேரா முகூர்த்தத்துக்கு வருவேன்”
‘ஐயோ காரியமே கெட்டது!’ என்று பதறிய சரபன் “இருடா இப்போ என்ன ஜோக் சொல்லணும் அவ்வளவு தான, யோசிக்குறேன” என முழித்துக்கொண்டு நின்றான்.
அப்போது நிலா சரபன் அருகே வந்து
“சார் ஏதாவது யோசிச்சுச் சொல்லுங்களேன்!” என்று மெதுவாக சொல்லிட,
“என்னை இவன்கிட்ட கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்குறிங்க, உனக்கு உதவி பண்ண வந்ததுக்கு என்னை வச்சு செய்றான்” என சரபன் அவளை முறைத்தான்.
“சரி மச்சான், ஒரு ஆள் மழையில குடை இல்லாம, தொப்பி இல்லாம, ஓடாம நடந்து போனான். ஆனா அவன் முடியில ஒரு சொட்டுத் தண்ணிகூடப் படல…ஏன்?”
“ஏன்?”
“அதைத்தான் நானும் கேட்கிறேன் மச்சான், நீ சொல்லு!”
“தெரியாது! நீயே சொல்லு” என ருத்ரா நிதானமாக அவனை பார்த்தான்.
“ஏன்னா அவன் சொட்டைத்தலை! முடி இருந்தா தான முடில தண்ணி படும்!” என்று சொல்லி சரபன் பெருமையுடன் சிரிக்க, மற்ற இருவரும் சிரிக்கவில்லை.
மாறாக முகத்தை சுளித்த நிலா, “சார் ஜோக் ரொம்ப மட்டமா இருக்கு, ருத்ரா முறைக்கிறான்!” என்றாள்.
“எனக்குத் தெரிஞ்சதை சொன்னேன், மச்சான் விட்ருடா, இதுக்கு மேல ஒன்னும் வரல!” என கெஞ்சவே ஆரம்பித்துவிட்டான் சரபன்.
“போய்த் தொலைங்க!” என இருவரையும் முறைத்துவிட்டு வெளியேறினான் ருத்ரா.
“அப்பாடா, ஒரு வழியா போயிட்டான்!” என சரபன் நிம்மதியாக மூச்சுவிட,
“சார் நீங்க பண்ண கடி ஜோக் எனக்கே கோபம் வருது. ருத்ரா டென்ஷனாகி உங்களை அடிக்காம விட்டாரே!”
“நீ ரொம்ப வாய் பேசுற! போய் அவனையே கல்யாணம் பண்ணிக்கோ”
“ஆங் வேண்டாம், வேண்டாம்! உங்க காமெடி சூப்பர். நான் போய் ரெடியாகுறேன்!” என்று சொல்லிவிட்டு ஓடியவளைப் பார்த்த சரபன் தலையில் அடித்துக்கொண்டான்.
