உருத்திரா❤️19

 

“ருத்ராவுக்கு DMS கிடையாது, ஆக்ஸிடென்ட் ஆனப்போ மன அழுத்தம் அதிகமாகி நரம்பு சம்மந்தமான பிரச்சனை இருந்தது உண்மை ஆனால் இவன் தன்னோட வஞ்சத்துக்கு சரியான நேரமா அதை பயன்படுத்திக்கிட்டான்.

தன்னோட பணபலத்தால டாக்டர்களை விலைக்கு வாங்கி delusion போலவே அறிகுறிகளை உருவாக்குற மாத்திரைகளை தினமும் குடுத்தான். இவன் கொடுத்த மருந்துகளால அவருக்கு இல்லாத நோய்க்கான அறிகுறிகள் உருவாக ஆரம்பிச்சது.

அவரை மனரீதியா பலவீனப்படுத்தி, அவரோட வாழ்க்கையையே சிதைக்க பார்த்திருக்கான்!”

“என்னம்மா சொல்ற?” நடராஜனின் குரல் உடைந்தது.

“அப்போ இத்தனை வருஷமா ருத்ரா உடம்பு சரியில்லாம இருந்ததுக்குக் காரணம் இவனா?”

நிலா மெதுவாகத் தலையசைத்தாள்.

“இல்லை தாத்தா! ருத்ரா ஆக்ஸிடென்ட் ஆன ஆறுமாசம் பெட் ரெஸ்ட்ல இருந்த வரைக்கும் இவனோட திட்டம் எந்த தடங்கலும் இல்லாம நடந்துச்சு! அடுத்த ஆறு மாசத்திலே உங்க பேரனுக்கு ஏதோ சரியில்லைனு தெரிய ஆரம்பிச்சுருக்கு!

அவருக்கு எப்படி உண்மை தெரியும்னு எனக்கு தெரியாது பட் மீதி ஆறு வருஷமும் இந்த உலகத்துக்கு முன்னாடி நடிச்சிருக்காரு”

அந்த செய்தி அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

“அப்போ… ருத்ரா…” என்று மகாதேவன் தடுமாறினார். அதற்கு மேல் பேச முடியவில்லை.

அதே நேரத்தில் சாம்பவி தலைசுற்றி மயங்கி விழ, பத்ரன் விரைந்து சென்று அவரைத் தாங்கிக்கொண்டான். திகளும் பதறியபடி அவரின் மறுபக்கத்தைப் பிடித்தாள்.

ஆனால் பத்ரனோ தன் அம்மாவைத் தாங்கிக்கொண்டிருந்த திகளின் கைகளைத் தட்டிவிட்டான்.

“மாமா…” என்று அதிர்ந்த திகள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

பத்ரன் அவளைப் பார்க்கக்கூட விரும்பவில்லை.வாயில் கைவைத்து பேசாதே என்றவன்,“எனக்கு நேத்தே எல்லா உண்மையும் தெரியும்!” என்று முடித்தான்.

அவன் வார்த்தைகளை கேட்டதும், திகள் உள்ளத்தில் பயம் கவ்விக்கொண்டது

“எல்லாமே நடிப்பா?” மகாதேவன் தன் மகனைப் பார்த்தார்.

“நீ ருத்ராகிட்ட நடிச்சிருக்க… ருத்ரா எங்ககிட்ட நடிச்சிருக்கான்… இங்க யார்தான் உண்மை? நீ நிலாவா? ஆரலியா?” என அபிராமி ஆதங்கமாக கேட்டார்.

“ஆரலி பாட்டி…” என்று அவள் அழுதபடி சொல்ல, ருத்ரா அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டான்.

“விடுங்க! கடைசிவரை நான் வராம போயிருந்தா, இப்படி பைத்தியக்காரன் மாதிரி நடிச்சு செத்துப்போயிருப்பிங்களா? சரபனைப் பத்தி உண்மை தெரிஞ்ச பிறகும் அவனை கூடவே வச்சுக்கிட்டு என்ன விளையாட்டு விளையாடிட்டு இருந்திங்க?”

ருத்ரா கண்களில் குற்றவுணர்வும் காதலும் ஒன்றாகத் தெரிந்தது, 

“நீ வரணுமே ஆரலி!” அந்த வார்த்தையில் அவளுடைய கண்களில் மீண்டும் கண்ணீர்.

“பத்து நிமிஷத்துல இந்த உலகத்திலிருந்து இவனுக்கு விடுதலை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. நீ உயிரோட இருப்பனு எனக்கு நம்பிக்கை இருந்தது, நான் சரியானதும் என் ஆட்கள் மூலமா உன் இறப்பு கதையை விசாரிக்க ஆரம்பிச்சேன்.

எதுவும் கண்டுபிடிக்க முடியல, பைத்தியம் போல திரும்ப திரும்ப முயற்சி பண்ணதுல உன் ஊர் ஆட்கள் மூலமா அம்மாச்சியோட உடம்பு மட்டும் தான் கிடைச்சதா தகவல் கிடைச்சது! 

அப்போ எனக்கு முழுநம்பிக்கை வந்தது நீ உயிரோட இருக்க என்னைக்காவது என்னை தேடி வருவனு வெயிட் பண்ணேன். 

இவன் எனக்கு மட்டும் துரோகம் பண்ணிருப்பானு நினைச்ச நேரத்துல, உன் அம்மாச்சியை கொலை பண்ணி, உன்னையும் கொல்ல சொல்லிருக்கானு எனக்கு தெரியவந்தது. இந்த தகவல்கள் எனக்கு கிடைக்கும் போது உன்னை இழந்து இரண்டு வருஷம் கடந்துருச்சு.

என் முயற்சியை விடாம உன்னை தேடுனேன், உன் கையால இவனுக்கு தண்டனை கிடைக்கணும்னு நினைச்சேன். என்னைவிட்டு ஓடி ஒளிஞ்ச உன்னை எங்க தேடியும் கண்டுபிடிக்க முடியல ஆரலி!”

நிலா கண்களை துடைத்தபடி பேச ஆரம்பித்தாள்.

“ஓடி ஒளியாம என்ன பண்ண சொல்றிங்க? என் பக்கத்து நியாயத்தை சொல்ல ஒரு வாய்ப்பாவது குடுத்திங்களா ஏகரா சார்?”

“நான் உயிரோட இருக்கும்போது அடிச்சு விரட்டிட்டு, நான் செத்துப்போய்ட்டேனு தெரிஞ்சதுக்கு பிறகு என்மேல காதல் வந்துச்சுன்னு சொன்னா யார் நம்புவா?

அப்பவும் சரி, இப்பவும் சரி நான் உங்களை காதலிக்கல! காதலிக்கவும் மாட்டேன்” என்ற நிலா குரல் ஆத்திரத்தில் நடுங்கியபடி வந்தது.

ருத்ரா அவளுடைய கையை இறுக்கமாகப் பற்றினான்.

“ஆரலி…”

“வேண்டாம்!” என அவனைத் தடுத்தாள்.

“எல்லாரும் வெறுக்கிற ஆரலியா நான் இருக்க விரும்பல. யார் யாருக்காகவோ அழுது, பாவம் பார்க்குற பலவீனமான ஆரலி நான் இல்லை… தைரியமான நிலாவா, இவங்களோட பொண்ணு நிலாஞ்சியா இருக்க விரும்புறேன். உங்களுக்கும் எனக்கும் இடையில இருந்த கணக்கு இதோட முடிஞ்சது!”

சரபனை நோக்கித் திரும்பிவள்,

“இவன் மேல ஏற்கெனவே போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்திருக்கேன். என்னை தயவுசெய்து விட்டுடுங்க. உங்க நினைவே இல்லாத ஒரு நிம்மதியான இடத்துக்குப் போனா போதும்”

அவள் சொல்லி முடிப்பதற்குள் சரபன் திடீரென எழுந்து வாசலை நோக்கி ஓடினான்.

ஆனால் அவன் வெளியே போவதற்குள் போலீஸார் அவனைச் சுற்றி வளைத்தனர்.

“எங்க சார் ஓடுறீங்க?” சரபனின் சட்டையைப் பிடித்து இழுத்தான் விமல்.

“உன்னை பிடிக்க கேவலமா உனக்கு பி.ஏ வேலையெல்லாம் பார்த்திருக்கேன் தெரியுமா? அதுக்கு பதில் சொல்லிட்டு போடா!”

“டேய் விமல்!” சரபன் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“அடச்சீ, வாயை மூடு! நான் யாருன்னு தெரியுமாடா உனக்கு? பெங்களூர்ல டாப் டிடெக்டிவ் ஏஜென்சி வச்சுருக்க இன்வெஸ்டிகேட்டர் விமலேஷ். உன்னோட திருட்டுத்தனத்தை கையும் களவுமா பிடிக்க உன்கூடவே இருந்து வேலை பார்க்க வேண்டியதாப் போச்சு!”

விமல் தன் தோள்களை குலுக்கினான். 

“என்னடா முழிக்கிற? குனிஞ்சு பேசி முதுகு வலிக்குது! உன்னைக் கொத்தா பிடிக்க நாங்க என்னென்ன ரோல் பண்ணோம்னு உனக்கு தெரியும் பட் எங்க ஒர்ஜினல் அடையாளம் உனக்கு தெரியாதுல, சொல்றேன் கேளு”

“நான் விமல்… விமலேஷ், private deductive & investigator!”

பிறகு அருகில் நின்றிருந்த பேபியை சுட்டிகாட்டினான்! 

“இதோ நிக்கிறானே பேபி, என் சொந்த தம்பி குழந்தை சாமி என்ற குகன்… MBBS, MD in ortho”

“என்னது?” என சரபன் அதிர்ச்சியில் விழிகளை விரித்தான்.

“ உன்னை கைது பண்ணி அழைச்சிட்டு போக வந்திருக்காங்களே, இவங்கதான் என் மம்மி சகுந்தலா ஐ.ஜி!” என்று தன் அம்மாவை காட்டினான்.

“அப்புறம் எங்க சித்தி பார்வதி, வதி ஹாஸ்பிடல் சேர்மன். இந்த நிலாவும் திகளும் எங்க தங்கச்சிங்கடா வெண்ணை!” என்று சொல்லிக்கொண்டே சரபனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் விமல்.

சரபனின் உதட்டோரம் ரத்தம் வழிய பேசாமல் நின்றான். நடராஜன் மெதுவாக அவனருகில் வந்தார்.

அவருடைய கண்களில் கோபத்தைவிட ஏமாற்றமே அதிகமாக இருந்தது.

“ஏன்பா இப்படி பண்ண? உன்னை எங்க சொந்தப் பேரனா நினைச்சோம். ருத்ராவை எப்படி பேரனா பார்த்தோமோ அப்படித்தான் உன்னையும் பார்த்தோம். உன்னை குடும்பத்துல ஒருத்தனா நம்பி பக்கத்துல வச்சோம், 

உனக்கு இருந்த மனஸ்தாபத்தை எங்ககிட்ட சொல்லியிருந்தா எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்திருக்கலாமே!” என்ற நடராஜனின் குரல் உடைந்து வந்தது.

ஏழுவருடம் சொந்த பேரனை விட்டு விலகி குடும்பமே அத்தனை சிரமப்பட்டதை கூடவே இருந்து பார்த்து ரசித்திருக்கிறானே! 

ஆனால் சரபனோ குற்ற உணர்வு இல்லாமல் சிரிக்க ஆரம்பித்தான்.

அந்த சிரிப்பில் மனிதத்தன்மை துளியும் இல்லை.

“சொந்தப் பேரனா? என்கிட்டயும் பணம் இருக்கு, அதிகாரம் இருக்கு, செல்வாக்கு இருக்கு. ஆனா எப்பவும் இந்த ருத்ராவுக்கு அடுத்த இடத்துல தான் நான் நிக்கணும்!

என் அப்பன் பூபதி சின்ன வயசுல இருந்தே என்னை இவனோட கம்பேர் பண்ணுவான். இவன் படிச்சா நானும் படிக்கணும். இவன் ஜெயிச்சா நானும் ஜெயிக்கணும். ஆனா எவ்வளவு முயற்சி பண்ணாலும், எல்லாருடைய பார்வையும் இவன் மேலதான் இருக்கும்!”

சரபன் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது.

“என் நெஞ்சுக்குள்ள இவன் மேல இருந்த ஆத்திரம் எப்போ வன்மமா மாறுச்சுன்னு தெரியுமா? ஸ்கூல், காலேஜ்னு படிக்கும்போது எனக்கு முன்னாடி நின்னவன், படிச்சு முடிச்சு பிஸ்னஸ் பார்க்க வந்தப்பவும் என் திறமையப்பாருனு முன்னாடி வந்து நிக்குறான்.

அப்போதான் முடிவு பண்ணேன். இவனை எதிர்த்து ஜெயிக்கக்கூடாது இவன் கூடவே உறவாடி அழிக்கணும்!”

ருத்ராவை கண்டு ஏளனப்புன்னகை சிந்திய சரபன்.

“நல்லா உறவாடினேன். என் நண்பன் சொன்னா கேட்பேன்னு இவன் கண்மூடித்தனமா நம்புற அளவுக்கு நம்பிக்கையை சம்பாதிச்சேன்!”

ருத்ரா அவனை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். பதில் என்ன பலமாக மூச்சுகூட விடவில்லை.

“என் கோவம் திடீர்னு ஏழு வருஷத்துக்கு முன்னாடி வரல சின்ன வயசுலருந்து சேர்த்துவச்ச ஆத்திரம். இவனை சாய்க்க என்னென்ன பண்ணேன் தெரியுமா?

உங்க AA group ல ஷேர் வாங்கி இவன் கூடவே இருந்து, உங்க குடும்பத்துக்கு அடிமை வேலை பார்த்தது எதுக்காக? நண்பன்டானு பாட்டுப்பாடவா!! 

கொஞ்சம் கொஞ்சமா உன் பேரனுக்கு ஸ்லோ பாய்சன் குடுக்க ஆரம்பிச்சேன்” என்றவன் வார்த்தையில் ருத்ரா குடும்பம் நெஞ்சில் கைவைத்துவிட்டார்கள். 

“என் அப்பன் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகவும், ருத்ராவை ஒரேயடியா கொன்றலாமானு ஒரு வெறி! கூடாது இவன் உடனே சாகக்கூடாதுனு யோசிச்சிட்டு இருந்த நேரம் எஸ்டேட் போகலாம்னு உன் பேரனே அவன் சாவுக்கு வழி காமிச்சான்”

சரபனின் முகம் வக்கிரமாக மாறியது.

“நீயும் உன் அம்மாச்சியும் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது ஆரலி! நான் பேசினதை நீ கேட்காம இருந்திருந்தா, உன்னை ஒன்னும் பண்ணிருக்க மாட்டேன், ஏதோ ஒரு மூலையில உன் அம்மாச்சியோட நீ நிம்மதியா வாழ்ந்திருப்ப. ஆனா என் திட்டத்துக்குள்ள வந்து எல்லாத்தையும் கெடுக்க பார்த்த அதான் உங்களை கொலைபண்ண வேண்டியதா போச்சு! பட் நீ தப்பிச்சிட்ட”

என இரக்கமே இல்லாமல் பேசியவனை கண்டு நிலாவின் கண்களில் கண்ணீர் பெருகியது. தன் அம்மாச்சியின் முகத்தை ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள்.

“ஆரலியோட ருத்ரா போட்ட சண்டையை பயன்படுத்தி அவ சாவுக்கு நீதான் காரணம்னு அவன் மனசுல குற்ற உணர்ச்சியை அதிகபடுத்துனேன்! ருத்ராவோட குற்றவுணர்ச்சியைப் பயன்படுத்தி அவனைக் கொல்லத் திட்டம் போட்டேன். 

கஷ்டப்பட்டு ஆக்ஸிடென்ட் பண்ண ஏற்பாடு பண்ணா சாகாம பிழைச்சு வந்துட்டான்… அவனை அப்படியே விடணுமா… சொல்லு!”

மனநலம் பாதிக்கப்பட்டவன் போல சரபன் கத்த அனைவரும் பயந்து போய் பார்த்தார்கள்.

“இவனுக்கு வந்த தற்காலிக நரம்பியல் பாதிப்பை எனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்.  DMS மாதிரியான அறிகுறிகளை உருவாக்குற மருந்துகளை கொடுக்க டாக்டர்களை விலைக்கு வாங்கினேன்!”

அவனுடைய முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

“சட்டையைக் கிழிச்சுக்கிட்டு, தன்னையே மறந்துட்டு, குடும்பத்தை வெறுத்து ஒதுக்கிட்டு இவன் அலையுறதை பார்த்தப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா? 

என் அப்பன்கிட்ட இவனைக் காட்டி, ‘நீ யாரோட என்னைக் கம்பேர் பண்ணியோ, அவனோட நிலைமையைப் பாரு!’ன்னு சொன்னேன்!”என்ற சிரித்தான்.

“என் அப்பன் பெரிய உத்தமன் மாதிரி நியாயம், தர்மம்னு பேசுனான். நியாயவாதி எதுக்கு என்னை மத்த பசங்களோட கம்ப்பேர் பண்ணனும், அதான் அவனையும் படுக்கையில படுக்க வச்சுட்டேன்!” என்று சிரித்தவனை

அங்கிருந்தவர்கள் அருவருப்புடன் பார்த்தனர்.

“எல்லாம் நல்லா போகுது! நான் விட்டுட்டா கூட, இவன் தம்பி பத்ரனே இவனை கொன்றுவான்னு நினைச்சு சந்தோசப்பட்ட நேரத்துல நிலாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னான்! 

இவன் நல்லா இருக்கக்கூடாதுனு நினைக்குற நான் எப்படி கல்யாணத்தை நடக்க விடுவேன்! அதான் நிலாவோடு வெறுப்பை யூஸ் பண்ணி அவள் கையால விஷ ஊசி போட ஏற்பாடு பண்ணேன்.

 பழியை இவளும், இவ குடும்பமும் ஏத்துக்கும். நான் நிம்மதியா எனக்கு போட்டியா ருத்ரா இல்லாத உலகத்துல வாழலாம்னு நினைச்சேன்!” என்று முடித்தான்.

மகாதேவன் தன் காதுகளையே நம்ப முடியாமல் நின்றார்.

சரபனுடைய பார்வை ருத்ராவின் மீது மட்டுமே இருந்தது.

“ருத்ரா உனக்கு எப்படி உண்மை தெரிஞ்சது?” என்ற நடராஜனின் கேள்வி அனைவரையும் மீண்டும் ருத்ராவின் பக்கம் திருப்பியது.

“ஆக்ஸிடென்ட் நடந்தப்போ நான் பாதிக்கப்பட்டிருந்தது உண்மைதான் தாத்தா! ஆரலியோட நினைவுல என்னை நானே இழந்திருந்தேன். அந்த சூழ்நிலையை சரபன் தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டான்”

“ஆனா ஒரு கட்டத்துக்கு மேல, அவன் கொடுக்கிற மருந்துகளுக்கும் என் உடம்புல ஏற்படுற மாற்றங்களுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சந்தேகம் வந்துச்சு. அவன் சொல்றதெல்லாம் உண்மையா இருக்கும்னு நம்புற அளவுக்கு நான் முட்டாள் இல்லையே! 

 

அதுக்கப்புறம் ஆவனுக்கு தெரியாம என்னோட ரிப்போர்ட், மெடிஷன் எல்லாத்தையும் திரும்ப செக் பண்ண ஆரம்பிச்சேன். சில மருந்துகளை நிறுத்தின பிறகு என் சிந்தனை கொஞ்சம் கொஞ்சமா தெளிவடைய ஆரம்பிச்சது. 

சரபனுக்கு நான் சரியானது தெரிஞ்சா, என்ன செய்வான்னு தெரியல, அவன் மோட்டிவ் தெரியாம ரிஸ்க் எடுக்க நான் விரும்பல! சோ அவன் சந்தேகப்படாத மாதிரி அவனை மட்டும் என் பக்கத்துல வச்சுக்கிட்டு, எதுவுமே தெரியாத மாதிரி இருந்தேன்”

ருத்ரன் பார்வை சரபனை துளைத்தது.

“அவன் எனக்கு செய்த துரோகம், இனிமேல் யாரையும் கண்மூடித்தனமா நம்பக்கூடாதுன்ற பாடத்தை கத்துக்கொடுத்தது!”

ஒரு நீண்ட மூச்சை வெளியேற்றிய ருத்ரா தொடர்ந்து பேசினான்.

“இவனுக்கு முன்னாடி நான் தெளிவா இருக்கேன்னு காட்டினா, அவன் அடுத்த நிமிஷமே என்னைக் கொல்ல முயற்சி பண்ணியிருப்பான். இல்ல உங்களை ஏதாவது பண்ண டிரை பண்ணிருப்பான். 

அதனாலதான் உங்களையெல்லாம் வெறுக்கிற மாதிரியும், என் குணங்களை மறந்துட்டு பைத்தியம் மாதிரி, நோய்வாய் பட்டவன் மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்”

சாம்பவி கண்ணீருடன் மகனைப் பார்த்தார்.

“அப்போ எங்களை வெறுத்து ஒதுக்குனதெல்லாம்…”

“நாடகம் அம்மா” என்றான் ருத்ரா.

“உங்களை விட்டு விலகி இருக்க வேண்டியிருந்தது. என்னைச் சுற்றி நடக்கிற எல்லாத்தையும் தெரிஞ்சுக்க வேண்டியிருந்தது. அதே நேரம் சரபனுக்கு என்னைப் பத்தி எந்த சந்தேகமும் வந்திடக்கூடாது”

“ஆரலியை நான் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிட்டேன்னு சொன்னப்போ, நான் முழுசா பைத்தியமாகிட்டேன்னு நம்பிட்டான். நான் என் வாழ்க்கையை இழந்துட்டேன்னு நினைச்சு, அவன் நிம்மதியா இருந்தான்”

ருத்ரா மெல்லச் சிரித்தான்.

“சில இடங்கள்ல வேணும்னே அவனுக்கு விட்டுக்கொடுத்தேன். ஆனா என் வேலைகளையோ, என்னை பாதுகாத்துக்கிற முயற்சியையோ நிறுத்தவே இல்லை.

நான் நல்லா இருந்துட்டு நடிக்கிறனோனு அவனுக்கு சந்தேகம் வர ஒவ்வொரு முறையும் என்னைக் கொல்ல முயற்சி பண்ணான். ஃபாக்டரி, கன்ஸ்டரக்ஸன், ஆபிஸ்னு ஒரு இடம் விடாம எல்லா இடத்திலும் பிரச்சனை குடுத்தான்.

 

எல்லாத்தையும் கடந்து வந்து இந்த ஏழு வருஷமா அவனுக்கு முன்னாடி நான் தோற்றுக்கிட்டே இருக்கிற மாதிரி நடிச்சேன்”

அவன் வார்த்தைகளை கேட்ட நிலா அவனை பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

உண்மையை சொல்லி முடித்ததும் சரபனை நெருங்கிய ருத்ரா, 

“அப்புறம் மச்சான், நான் தெளிஞ்ச இந்த ஆறு வருஷமும் எனக்கு யார் உதவியா இருந்தாங்கனு தெரியுமா?”

“சொன்னா நீ நம்ப மாட்ட. அதோ அவனே வந்துட்டான் பாரு!” என்றதும், அனைவரும் வாசலைத் திரும்பிப் பார்த்தனர்.

மூச்சு வாங்கியபடி ஓடி வந்த ஆகாஷ்,

“டேய் ருத்ரா ஆர் யூ ஓகே!” என்று அவனை ஆராய்ந்தபடி கேட்க,

அவனைக் கண்டதும் ருத்ரா எழுந்து நின்றான்.

“ஆகாஷ் நீயா?” என்று சரபன் கத்திட, 

“ஆமாம் நான்தான்! எனக்கு ருத்ராவோட போட்டி போடப் பிடிக்கும் அதுக்காக கூட இருந்தே துரோகம் பண்றவன் நான் இல்லை, ருத்ராவை தொழில்ல நேரடியா ஜெயிக்க நினைச்சேன். அவன் வாழ்க்கையை அழிக்க நினைக்கல! என்று சொல்லியடி ருத்ராவை அணைத்துக்கொண்டான் ஆகாஷ்.

“வெல்கம் பேக் ஹீரோ!” 

“ஆரலியைக் கண்டுபிடிக்கவும், உனக்கு தெரியாம எனக்கு தேவையான உதவிகளை ஆகாஷ் செய்தான். உன் அழிவுக்கு பின்னாடி இருக்குற ஒவ்வொரு உதவியும் ஆகாஷ் என் கூடவே நின்னு செய்தான்”

“தேங்க்ஸ் டா!” என மனதார ஆகாஷூக்கு நன்றி சொன்னான் ருத்ரா.

“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்! சீக்கிரம் அபீஷியலா கம்பேக் குடு, ஏகதச ருத்ரா கூட போட வேண்டிய சேலன்ஜ் நிறைய இருக்கு மேன்!” என்று கண்ணடித்துவிட்டு கிளம்பினான் ஆகாஷ்.

அவன் வார்த்தைகளைக் கேட்டதும் ருத்ராவின் உதட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையான புன்னகை மலர்ந்தது.

“என்னையே ஏமாத்திட்டிங்களா?” என சரபன் வெறித்தனமாக ருத்ராவை அடிக்க முன்னேறினான்.

“உங்களைச் சும்மா விட மாட்டேன்டா!”

அவன் பாய்வதற்குள் விமல் அவனுடைய முகத்தில் இன்னொரு குத்துவிட்டான்.

“ஏன்டா அயோக்கிய ராஸ்கல்! எவ்வளவு தைரியம் இருந்தா நிலா கையால விஷ ஊசி போட ஏற்பாடு பண்ணிருப்ப?”

சரபன் நிலைதடுமாறி நின்றான்.

“நாங்க மட்டும் கவனமா இல்லாம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்!”

என்ற விமலின் குரலில் ஆத்திரம் கொப்பளித்தது.

நிலா அவனைத் தடுத்து பிடித்தாள்.

“நீ கொடுத்த மாத்திரைகளை நான் ருத்ராவுக்கு கண்மூடித்தனமா குடுத்தேன்னு நினைச்சியா? முதல் நாளே அந்த மாத்திரைகளைப் பற்றிய தகவல்களை பேபி அண்ணா எடுத்துட்டான். அதுக்கப்புறம் நீ குடுத்த மாத்திரைகளுக்குப் பதிலா, ருத்ராவுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் மாத்திரைகள்தான் கொடுத்தோம்”

அவள் குரலில் ஏளனம் இருந்தது.

“இன்ஜெக்ஷன் விஷயத்திலும் நாங்க கவனமா இருந்தோம். நீ ஏற்பாடு பண்ணிருந்த ஆபத்தான மருந்தை எடுத்துட்டு, அதுக்கு பதிலா பாதுகாப்பான மைல்ட் டோஸ் தூக்கமருந்து குடுத்தோம். நீ போட்ட திட்டம் உனக்கே தெரியாம உன் கையாலேயே தோல்வியடைஞ்சிருச்சு!”

“மஃபின்…” என்று ருத்ரா அவளிடம் வர,

நிலா அவனை திரும்பிப் பார்த்த பார்வையில், அப்படியே வாயை மூடிக்கொண்டு நின்றான்.

“நான் மண்டபத்துல எல்லார் முன்னாடியும் இவனை போட்டு பொங்க வைக்கணும்னு பிளான் பண்ணிட்டு வந்தேன். நீ என்னடான்னா இங்க கூட்டிட்டு வந்து காமெடி பண்ணிட்டு இருக்க!” என்று ஆலகா நாயகனையே ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தாள் அவன் பராசக்தி.

“இவனை மன்னிச்சு விடலாம்னு ஏதாவது பிளான் வச்சிருந்தா இப்பவே சொல்லிடு. நானே இவனை கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிடுறேன்!”

நிலாவுடைய கோபத்துக்குப் பின்னால் எவ்வளவு வலியிருக்கிறது என அவனுக்கு புரிந்தது.

“இல்லை மஃபின். இனிமேல் இவனை மன்னிக்கிற பேச்சுக்கே இடமில்லை”

என்றவன் சகுந்தலாவை நோக்கித் திரும்பி பேச ஆரம்பித்தான்.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!