இரவு வந்ததும் சாம்பவி மருமகளை ருத்ரன் அறைக்குள் அனுப்பி வைத்தார். அவளுக்கோ பயங்கர டென்ஷன்!
பதற்றத்தோடு கணவனின் அறைக்குள் செல்ல,
உள்ளே எதையும் பற்றிய கவலையில்லாமல் அமர்ந்து கேம் விளையாடிக்கொண்டிருந்த ருத்ராவை கண்டதும் வந்ததே கோவம்!
“எருமை மாடு!” என்று திட்டியபடியே அவன் மீது பாய்ந்து அடிக்க ஆரம்பித்தாள்.
“ஆரலி… மஃபின்… என்னடி ஆச்சு?” என்று அவளுடைய திடீர் தாக்குதலை தாங்கிக்கொண்டு பொறுமையாக கேட்டான் ருத்ரா.
அவள் அடிப்பதா அவனுக்கு வலிக்கப்போகிறது? நிலா சிறிய கைகளால் தன்னை அடிப்பதைப் பார்த்து உள்ளுக்குள் சிரிப்புதான் வந்தது.
“இப்போ உனக்கு என்னை அடிக்கணுமா? உள்ள ஜிம் ரூம்ல எக்யூப்மெண்ட் இருக்கு. எடுத்துட்டு வந்து எவ்வளவு வேணுமோ அடி!” என்று மிகவும் சீரியஸாகச் சொன்ன பூச்சாண்டியை பே என்று பார்த்தாள் நிலா.
“வெயிட்… நான் எடுத்துட்டு வரேன்!” என்று அவனும் உண்மையாகவே எழுந்து செல்ல முயன்றவனை அணைத்துக்கொண்டாள் நிலா.
“ஏன்டா இப்படி பண்ற? பைத்தியக்காரன் மாதிரி பேசி என்னை நோகடிக்கிற? கட்டையை எடுத்து அடிச்சு உன்னை கொலை பண்ணவா நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்?” என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்தபடி கேட்டாள்.
‘இவன் ஏன் தான் இப்படி இருக்கிறானோ?’ அவளுக்கே புரியவில்லை. மற்றவர்கள் நெருங்க பயப்படும் அரக்கன், அவளிடம் மட்டும் அடிமை போலல்லவா நடந்துகொள்கிறான்.
“சரி போகல, ஏன் கோவமா இருக்க? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?” என்று அவள் முகத்தில் சரிந்து கிடந்த முடிகளை மெதுவாக காதோரம் ஒதுக்கிவிட்டபடி, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டால் எப்படி கோவம் வரும்?
அவனுடைய மென்மையான ஸ்பரிசத்தில் அவளுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போனது.
“இல்லை ஏகரா. நீ தப்பு பண்ணல, நான் தான் லூசு!” என உண்மையை ஒப்புக்கொண்டு அவனை விட்டுவிட்டு படுக்கையை நோக்கிச் சென்றவளுடைய கையைப் பிடித்து நிறுத்தினான் ருத்ரா.
“என் காதல் உனக்கு கஷ்டமா இருக்கா ஆரலி? என்னை விட்டுட்டு ஓடிப்போயிடணும்னு தோணுதா?”
அந்த கேள்வியைக கேட்க அவனுக்கு விருப்பமில்லைதான்! இருந்தாலும் கேட்டுவிட்டான். அவளுடைய முகத்தில் அவ்வப்போது தெரியும் தவிப்பு,
‘நான் அவளுக்கு கஷ்டம் குடுக்கிறேனோ?’ என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.
அவன் கேள்வியில் நிலாவுக்குள் இருந்த காதலி விழித்துக்கொண்டாள். “உன் காதல் என்னைக் கஷ்டப்படுத்தல ஏகரா! இந்த உலகத்திலே நான் ரொம்ப லக்கினு ஃபீல் பண்ண வைக்குது”
“உன்னை விட்டு ஓட நினைச்சது உண்மைதான். ஒருவேளை இந்த காதல் நிலாவுக்குக் கிடைச்சிருந்தா, கண்டிப்பா உன் காதல் ஒரு கட்டத்துல பொய்யா தெரிஞ்சிருக்கும்”
“உன் பக்கத்துல நிற்கக்கூட தகுதியில்லாத ஆரலியை நீ காதலிச்சிருக்க, அவளோட இறப்பைத் தாங்க முடியாம பைத்தியக்காரனா சுத்தியிருக்க. நாளைக்கு என் அழகு போனாலும், நான் கை கால் இல்லாத ஜடமா மாறினாலும் உன் காதல் என்னைவிட்டு போகாதுன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு”
“இந்த மாதிரி முட்டாள்தனமா கேள்வி கேக்காம என்னை இன்னும் காதல் பண்ணு! யாருக்கும் விட்டுக்கொடுக்காத புரியுதா?” என்று அவனுடைய நெஞ்சில் விரலால் தட்டிக் கேட்டாள்.
அவன் காதலை புரிந்துகொண்டாளே! என்ற திருப்தியில் புன்னகையுடன் தலையாட்டினான் ருத்ரா.
“அப்போ ஏன் கோவமா இருந்த மஃபின்?”
என்ற கேள்வியில் மீண்டும் முகம் சுருங்கியது நிலாவுக்கு.
“போடா! உன்மேல கோவமா வந்தேன், இப்போ கோவம் போச்சு. ஆனால் வீட்டுல என்ன சொல்றதுனு தெரியல”
“என்ன சொல்லணும்?” என்று புரியாமல் கேட்டான்.
“நான் கன்சீவா இருக்கேனோனு டவுட் ஏகரா…” என்று சொல்லி முடிப்பதற்குள் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ருத்ரா.
“இன்ப அதிர்ச்சியா இருக்கு மஃபின், எப்போ கன்பார்ம் பண்ண?”
அவனுக்குப் பேச்சே வரவில்லை. சந்தோஷத்தில் கண்கள் லேசாகக் கலங்கின.
“அத்தை பீரியட் டேட் கேட்டாங்க. எனக்கு போன மாசத்திலிருந்தே பீரியட் வரல ஐம்பது நாள் ஆகியிருக்கும். அவங்கிட்ட ஏதேதோ சொல்லி சமாளிச்சிட்டேன், இங்க யார்கிட்ட கிட் வாங்க சொல்றதுனு தெரியல. இன்னும் கன்ஃபார்ம் பண்ணல, பயமா இருக்கு. நீ போய் வாங்கிட்டு வரியா?”
நிலா தயக்கத்தையும் பயத்தையும் புரிந்துகொண்டவன் மென்மையாக அவளை அணைத்துக்கொண்டான்.
“இதுக்கு ஏன் அழகி முகத்தை சோகமா வச்சுருக்க? நான் போய் உடனே வாங்கிட்டு வரேன்” என்று அவள் இதழ்களை சிறிது நேரம் பிய்த்து தின்றுவிட்டு வெளியே போனான் ருத்ரா.
அங்கு அவனுடைய தம்பி அக்கப்போர் பண்ணிக்கொண்டிருப்பதைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான்.
“நான் அமெரிக்கா போறேன் அப்பா!”
மகாதேவன் மகனைப் பார்த்துவிட்டு,
“எதுக்கு போற? லண்டன், பாரிஸ்ல இருக்குற பிரான்ச் போதும். இங்க இருக்குற பிஸ்னஸ் பார்க்கவே இன்னும் நாலுபேர் வேணும். புதுசா அங்க போய் பிரான்ச் ஆரம்பிச்சு என்ன பண்ணப்போற?” என்று கேட்டார்.
“என் குட்டச்சியைத் தேடிப்போறேன் போதுமா?”
அவன் பதிலைக் கேட்டு அங்கிருந்த அனைவரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.
“நீதான் விழியே வேண்டாம்னு தொரத்திவிட்ட! இப்போ தேடிப்போறேனு சொல்ற?”
விமல் காலைலயே சொன்னான், அழகான வெள்ளைக்காரப் பையன் அவளுக்குப் ப்ரப்போஸ் பண்ணானாம். என்கிட்ட போட்டோ கூட காமிச்சான் இரண்டு பேரும் செம ஜோடி போ!” என்று அபிராமி சில்லாகித்து சொல்ல,
“பாட்டி!” என்று பல்லைக் கடித்தான் பத்ரன்.
“அவள் என்னோட விழி. என்னைவிட்டு போகமாட்டா! கோவமா இருந்தாலும் நான் போய் சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வருவேன். கல்யாணம் பண்ணி வைக்கிற வேலையைப் பாருங்க!”
“அந்த விமல் ராஸ்கலுக்கு வந்து இருக்கு!” என்று முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான் பத்ரன்.
அவனே மனதிற்குள் எப்படி அவளைச் சமாதானப்படுத்துவது? என்று யோசித்தபடி இருக்க, இவர்களோ விட்டால் ஜோனோடு அவளை ஜோடி சேர்த்துவிடுவார்கள் போல, அந்த கடுப்பில் வேகமாக கிளம்பிவிட்டான்.
அப்போது ருத்ரா அங்கே நிற்பதை கண்ட பெரியவர்கள், “நீ இந்நேரம் வெளியே என்ன பண்ற?” என்று கேட்டனர்.
“சும்மா வெளிற போகலாம்னு வந்தேன்!” என்றவன் அவர்கள் அடுத்த கேள்விக்கு இடம் கொடுக்காமல் வேகமாக வெளியேறி, காரில் லக்கேஜ் வைத்துக்கொண்டிருந்த தம்பியிடம் சென்றான் ருத்ரா.
“பொறுமையா பேசு பத்ரா! திகள் ரொம்ப சென்சிடிவ்வான பொண்ணு. ஆல்ரெடி அவளை காயப்படுத்தி அனுப்பியிருக்க, அவ கோவத்துல உன்னை வேண்டாம்னு சொல்ல வாய்ப்பு இருக்கு. பார்த்து ஹேண்டில் பண்ணு”
அண்ணனுடைய அழுத்தமாக பார்த்த பத்ரன், “நீ தெளிவா இருக்கன்னு எனக்கு புரியுது. அதுக்காக உரிமையா வந்து பேச வேண்டாம், இந்த ஏழு வருஷம் எப்படி தள்ளி இருந்தியோ அப்படியே இனியும் இரு!” என்றவனுடைய பேச்சு முகத்தில் அடித்தது போலிருந்தது.
ருத்ராவின் உள்ளம் சுருக்கென்று குத்தியது. அதை வெளியே காட்டினால் அவன் அரக்கன் இல்லையே!
“ஃபைன்… யுவர் விஷ்!” என்று மட்டும் சொல்லிவிட்டு விலகிச் சென்றான்.
பத்ரனின் வேதனை அவனுக்கும் புரிந்தது. அவர்கள் பாதுகாப்பிற்கே ஆனாலும் தன்னுடைய குடும்பத்தை தள்ளி வைத்திருக்கக்கூடாது என்பதை அறிவான், தவறு என்பதை உணர்ந்தும் இருந்தான்.
நடந்தது நடந்து முடிந்து விட்டது. இனியாவது குடும்பத்தோடு சகஜமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். முடியாத பட்சத்தில் ஆரலியோடு தனியாக சென்றுவிடலாம் என்றும் முடிவெடுத்திருந்தான்.
“ஒரு நிமிஷம் நில்லு!”தம்பியின் குரலில் திரும்பினான் ருத்ரா.
“இந்த டைம் எங்க போற?” வேண்டா வெறுப்பாகக் கேட்ட பத்ரனைப் பார்த்தவன்,
“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்! என் தம்பியா கேட்டிருந்தா சொல்லியிருப்பேன். நீ ருத பத்ரன்! ஸோ ஸ்டே அவே ஃப்ரம் மீ!” என்று திமிர் குறையாமல் சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அவனை முறைத்துப் பார்த்த பத்ரன்,
“போ! உறவு வேண்டாம்னா ஒரேயடியா அத்துவிட்டுட்டு கிளம்பு! திமிரைப் பாரு நான் தான் உன் மேல நியாயப்படி கோவப்படணும் ருத்ரா” என்று கத்தினான்.
தம்பியின் குரலில் இருந்த வலி அவனை அசைத்துப் பார்த்தது.
“கூடிய சீக்கிரம் கிளம்பிடுவேன். டோன்ட் வொரி பத்ரா! நான் பண்ணது தப்புனு எனக்குத் தெரியும். என் ஃபேமிலி என் கூட இருக்கும்ன்ற நம்பிக்கையில உங்களை தெரிஞ்சே காயப்படுத்தினேன்”
“அது மட்டுமா பண்ண? யாரோ ஆரலி, சரபனுக்காக எங்களை ஏமாத்தியிருக்க. பெரியவங்களை விடு என் கிட்ட சொல்லியிருக்கலாமே! நான் என்ன செத்தா போயிட்டேன்?”
“உன்னை நினைச்சு எத்தனை நாள் தூங்காம கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா? அண்ணன் பழையபடி என்கிட்ட பேசமாட்டானானு எவ்வளவு ஏங்கியிருப்பேன். ஒரு கட்டத்துல அவ்வளவுதான்னு நினைக்கும்போது, எல்லாம் நடிப்புனு சொல்ற! யார் யாருக்கோ நீ உண்மையா இருந்து எங்களைத் தவிக்க விட்டுட்ட. அதுக்காக நான் கோவப்படக்கூடாதா?”
தன் தம்பி தன்னை எவ்வளவு தேடியிருக்கிறான் என்பதை அவனுடைய வார்த்தைகள் மூலம் உணர்ந்தவன், அடுத்த நொடியே தம்பியை நெருங்கி இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
“விடுடா! திட்டுனா உடனே போயிடுவியா ராஸ்கல்?” என்ற பத்ரன் அவனை விலக்காமல் அப்படியே நின்றான்.
“சாரி…”
“உன் சாரியை தூக்கிப்போடு! நீ ஓகே ஆனதே போதும், சரபன் கேஸ் நாளைக்கு விசாரணை. அண்ணி எமோஷனல் ஆவாங்க கேர்ஃபுல்லா பார்த்துக்கோ!” என்றான் பத்ரன்.
“நான் பார்த்துக்குறேன். திகளை சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வா! உனக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாம்”
“எங்க மேரேஜ் லேட் ஆகும். குட்டச்சி டாக்டர் படிப்பை முடிக்கட்டும். நீயும் அப்பா பதவிக்கு ப்ரமோஷன் வாங்கு அப்புறம் பார்த்துக்கலாம்!” என்றவனை பார்த்துச் சிரித்தான் ருத்ரா.
“வாங்கிட்டேனு நினைக்கிறேன். அதான் மெடிக்கல் போய் கிட் வாங்கிட்டு வரப்போறேன்!” என்ற ருத்ரா பேச்சைக் கேட்ட பத்ரன் அதிர்ச்சியில் விழிகளை விரித்தான்.
“என்னடா சொல்ற? அப்போ…”
“ம்ம்ம்!” என்று தோளை உலுக்கினான் ருத்ரா.
“அடக் கடவுளே… நீ தெளிவாத்தான்டா இருந்திருக்க! எனிவே, கங்கிராஜ் பாசிட்டிவ் வர வாழ்த்துகள்” என்று புன்னகை முகமாக அண்ணனை அணைத்து விடுவித்தான்.
“நான் கிளம்புறேன், குட்டச்சி குதிச்சு குதிச்சு சண்டை போடுவா! அவளை வேற சமாளிக்கணும்!” என்று அலுப்பாகச் சொல்லியபடி கிளம்பினான் பத்ரன்.
அண்ணனின் வாழ்வு மலர்ந்ததில் அவனுக்கும் சந்தோஷமே! இனிமேல் தங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே சென்றான்.
ருத்ரா திரும்பி வருவதற்குள் நிலா தூங்கிவிட்டாள். அவளைப் பார்த்ததும் ருத்ராவின் முகத்தில் இரக்கம் சுரந்தது. காலையிலிருந்தே டயர்டாக இருப்பதாக அவள் சொன்னது நினைவு வந்தது.
இந்த நேரத்தில் அவளை அலைக்கழித்துவிட்டோமே என்று வருத்தப்பட்டவன், கையில் இருந்த பொருளை அருகில் வைத்துவிட்டு,
லைட்டை ஆஃப் செய்துவிட்டு மெதுவாக நிலா அருகில் வந்து படுத்தான்.
அடுத்த நொடியே உருண்டு வந்து அவனை அணைத்துக்கொண்ட நிலா,
“ஏகரா… எனக்குச் சேலை கசகசன்னு இருக்கு சேஞ்ச் பண்ணிவிடு, ரொம்பத் தூக்கமா வருது” என்று தூக்கத்திலேயே முணங்கினாள்.
மென்சிரிப்போடு அவளை தூக்கி தன் மீது சாய்த்துக்கொண்ட ருத்ரா, உடைகளை மெதுவாக கலட்டினான். தன் சட்டையை அவளுக்கு போட்டு விட்டு தன்னோடு அணைத்துக்கொள்ள அவன் நெஞ்சில் சுருண்டு சுகமாய் தூங்க ஆரம்பித்தாள் நிலா.
நிலா நெற்றியில் முத்தமிட்டவன், அவள் நிம்மதியாக தூங்குவதை சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தான்.
நாளைக்கு ஆரலியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அப்போதே முடிவெடுத்து விட்டான். குழந்தை உறுதியானால் நிச்சயம் அவளை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளைக் கட்டியணைத்தபடியே தூங்கிப்போனான்.
காலை அனைவரும் எதிர்பார்த்த கேஸ் ஹியரிங் என்பதால் ஒன்பது மணிக்கே ருத்ரா குடும்பத்தினர் தயாராக நின்றனர். பார்வதி குடும்பத்தினரும் சிறிது நேரத்தில் வந்துவிட, ருத்ரா மட்டும் இன்னும் வரவில்லை.
“ஆரலி இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எல்லாரும் வெயிட் பண்றாங்க!” என்று கண்ணாடி முன் நின்று கிளம்பிக்கொண்டிருந்த ருத்ரா, பாத்ரூமுக்குள் சென்று அரைமணி நேரமாகியும் கதவைத் திறக்காத மனைவியை அழைத்துக்கொண்டிருந்தான்.
“ஆரலி… சீக்கிரம் வா!”
படாரென கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த நிலா “ப்ராடுகாரா! காதல் பண்றது எப்படினு தெரிஞ்சுக்கவே விடல நீ!” என உதட்டை பிதுக்கிக்கொண்டு சொன்னவள், கையில் வைத்திருந்த பிரெக்னன்சி கிட்டை அவனிடம் நீட்டினாள்.
அழகாக தெரிந்த இரட்டை கோடுகளைக் கண்டதும் அவனுடைய இதழ்களில் புன்னகை விரிந்தது.
“ரொம்பக் கோவமா இருந்தா அடிச்சுக்கோ மஃபின்! நான் ரொம்ப ஹாப்பி” என்று சொன்னவன், அவளைத் தன் உயரத்திற்கு அப்படியே தூக்கினான்.
ருத்ரா தோள்களில் பூமாலையாக தொங்கிய நிலா “நானும் ஹாப்பி தான்! உன்னை மாதிரியே அழகா, ராஜா தோரணையில பையனோ, பொண்ணோ பெத்துக்கொடுக்க எனக்கு கசக்கவா செய்யும்!”
பிறகு தயக்கத்துடன், “பட் வீட்டுல சொல்லணுமே. சங்கடமா இருக்கு ஏகரா!” என்றாள்.
“நான் இருக்கேன் சாக்லேட் மஃபின்! என்னை மீறி யாரும் உன்னை ஒரு வார்த்தை கேட்க முடியாது. நீ சந்தோஷமா இருந்தாதான் நான் நிம்மதியா இருக்க முடியும்”
அவன் காதலில் எப்போதும்போல இப்போதும் தொலைந்து போனாள் நிலா.
“ஐ லவ் யூ அரக்கா!” என்று அவன் இதழ்களைத் தன் இதழ்களால் தீண்டினாள்.
அவளுடைய முத்தத்தில் மயங்கியவன்,
“எனக்கு இது போதாது ஆரலி! போயிட்டு வந்து நிறையத் தரேன். நீ வீட்டுல ரெஸ்ட் எடு!” என்று அவளை இறக்கிவிட்டான்.
“நோ! நானும் வருவேன்!”
“ஆரலி…” என்று ருத்ரா அழுத்தமாக அழைத்தான்.
அவனுடைய குரலில் இருந்த கண்டிப்பைக் கண்டு உள்ளுக்குள் கொஞ்சம் பயந்தாலும், பிடிவாதமாக,
“நான் கண்டிப்பா வருவேன். நீ விட்டுட்டுப் போனா ஆட்டோ பிடிச்சு வருவேன்!” என்றாள்.
அவளுடைய பிடிவாதத்தை பார்த்து திட்டவும் மனமில்லாமல் பெருமூச்சுவிட்ட ருத்ரா “சரி வா! பட் கேர்ஃபுல்லா இருக்கணும்”
“நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை? வா போகலாம்” என்று அவனோடு சேர்ந்து கீழே வந்தாள்.
இருவரும் கீழே வந்ததும், ஏன் இவ்வளவு நேரம் தாமதம் என்று கேட்டு யாரும் அவர்களை சங்கடப்படுத்தவில்லை.
“வாங்க ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க! வாம்மா நிலா முதல்ல இந்தப் பாலை குடி நிறைய நட்ஸ் போட்டிருக்கேன்!” என்று அபிராமி அவளுடைய கையை பிடித்துக் கூட்டிச் சென்றார்.
“ஒரு நிமிஷம் பாட்டி! எல்லார்கிட்டயும் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்!”
அவனுடைய குரலைக் கேட்டதும் அனைவரும் ஹாலில் வந்து ஆஜராகிவிட்டனர்.
அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பயந்தபடி நின்றாள் நிலா.
“சாப்பிட்டுப் பேசலாம், பாரு நிலா டயர்டா இருக்கா!” என்று சாம்பவி சொல்ல,
“அம்மா… நான் சொல்றதை முதல்ல கொஞ்சம் பொறுமையா கேளுங்க!” என்றான் ருத்ரா.
அவனுடைய முகமோ மென்னகையோடு இருந்தது.
“என்னடா காலையிலேயே தலைபோற மாதிரி அப்படி என்ன விஷயம்?” என்று சாம்பவி அவனைப் பார்த்துக் கேட்டார்.
அந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவன் போல, தன் அருகில் நின்ற நிலாவின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு, “அம்மா… நீங்க பாட்டியாகப் போறீங்க!” என்றான் உற்சாகமாக.
“என்னடா உளறிக்கிட்டு இருக்க?” என்று அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த சாம்பவி, அடுத்த நொடியே அலட்சியமாகத் தோளைக் குலுக்கினார்.
“நேத்துதானேடா உனக்கு கல்யாணம் ஆச்சு! அதுக்குள்ள பாட்டியாக்கிட்டியா என்ன? காலையிலேயே ஏதாவது கதை விடாம முதல்ல வந்து சாப்பிடுங்க”
சொல்லிவிட்டு திரும்பிச் செல்ல, அவரைத் தவிர அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
விமல் வாயில் வைத்த இட்லியைக்கூட முழுங்க முடியாமல் அப்படியே அமர்ந்திருக்க, அவனுடைய பார்வை மெல்லத் தங்கையின் பக்கம் திரும்பியது.
பேபியோ தன் தங்கையை பார்த்தபடியே கையில் இருந்த பொங்கல் கீழே விழுந்ததை காண மறந்திருந்தான்.
மற்றவர்களின் நிலை அப்படியிருக்க, சம்பந்தப்பட்ட நிலாவோ ருத்ராவின் முதுகுக்குப் பின்னால் முகத்தை மறைத்துக்கொண்டு நின்றாள்.
“அடப்பாவி!” என்று முதலில் சுதாரித்த விமல், கையிலிருந்த தண்ணீர் டம்ளரை மேசையில் வைத்தான்.
“ருத்ரா நீ உண்மையைத்தானே சொல்ற? விளையாடலையே?” என்று அதிர்ச்சியுடன் மகாதேவன் மகனிடம் கேட்டார்.
அதற்குள் அபிராமியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்துவிட்டது.
“அடியேய் கூறுகெட்டவளே! கல்யாணம் நேத்து முடிஞ்சா என்ன? பிள்ளை வரதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? தள்ளு” என்று மருமகளை நகர்த்திவிட்டு பேரனிடம் சென்றார்.
“ருத்ரா கண்ணா நிஜமாவா சொல்ற? நான் கொள்ளுப்பாட்டியாகப் போறேனா?” என்று அவனுடைய கன்னத்தை வருடிக் கேட்டார்.
“நிஜம்தான் பாட்டி!” என்றவன் அருகில் நின்ற நிலாவைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தான்.
பேரனின் பின்னால் மறைந்து நின்ற நிலாவின் கைகளைப் பிடித்து முன்னால் இழுத்தார் அபிராமி “இங்க வா ராசாத்தி!”
“பாட்டி…” என்று நிலா தயக்கத்துடன் முனகினாள்.
“என்ன பாட்டி? இத்தனை நாளும் இவனைப் பார்த்தாலே ஓடி ஒளிஞ்சுக்கிட்டு இருந்தியே! நான் கூட என் பேரன் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டான் போலனு பயந்தேன்.
இப்போ பார்த்தா, கல்யாணம் நேத்த, இன்னைக்கு பிள்ளைன்னு கணக்குப் போட்டு எங்களுக்கு அதிர்ச்சி தரிங்க” என்று அவளுடைய நாடியைப் பிடித்து அன்பாகக் கொஞ்சினார்.
நிலாவுக்கோ வெட்கத்தில் தலை நிமிரவே முடியவில்லை. “பாட்டி… அது வந்து…” என்று வார்த்தைகளைத் தேடினாள்.
“சரி சரி! இப்போ எதுவும் பேச வேண்டாம் ஹாஸ்பிடல் போய் டாக்டரை பார்த்திங்களா? எத்தனை நாள் ஆச்சு?”
“இல்ல பாட்டி! இன்னைக்குக் காலையில்தான் டெஸ்ட் பண்ணேன். அதுலதான் கன்ஃபார்ம் ஆச்சு,இதோ பாருங்க!” என்று கிட்டை நீட்டினாள்.
அதைப் பார்த்த அபிராமியின் முகம் இன்னும் பிரகாசித்தது.
“என் கண்ணே பட்டுடும் போலிருக்கே! எங்க வீட்டுக்கு முதல் வாரிசு வரப்போகுது”
“என்ன வாயைப் பார்த்துக்கிட்டு நிக்கிறிங்க? போய் உடனே ஸ்வீட் எடுத்துட்டு வாங்க. சந்தோஷமான செய்தி சொல்லியிருக்காங்க, இப்படியே சிலை மாதிரி நின்னு கேட்டுக்கிட்டு இருப்பிங்களா?”
அவருடைய ஆர்ப்பாட்டத்தைப் பார்த்த குடும்பத்தினர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“இவரு கல்யாணத்துக்கு முன்னாடியே கபடி ஆடிட்டு வந்திருக்காரு! நாமதான் லூசுங்க போல நிக்குறோம். இந்த கிழவியைப் பாரு, பேரனை ஒரு வார்த்தை திட்டல! கொள்ளுப்பேரன் வரப்போறான்னு கொண்டாடிக்கிட்டு இருக்கு” என்று விமல் முணுமுணுத்தான்.
“என்னடா முணுமுணுப்பு? என் பேரன் சந்தோஷமா இருக்கான், இது போதாதா?”
“ஆமா உங்க பேரன் சந்தோஷமா இருக்காரு ஆனா எங்க தங்கச்சி முகத்தைப் பாருங்க. எங்கள நிமிர்ந்த பார்த்த முடியாம நிக்கிறா!” என்றான் விமல்.
அவன் சொன்னதும்தான் அனைவரின் பார்வையும் நிலாவின் பக்கம் திரும்பியது.
அம்மா, அப்பா இருவரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலைகுனிந்து நின்ற மகளைக் கண்ட பார்வதியின் மனம் கனத்தது.
“நிலா…” என்று மெதுவாக அழைத்தார்.
“மா… நான்…” அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ அடைத்துக்கொண்டது போலிருந்தது.
மகளின் கண்களில் தெரிந்த வெட்கத்தையும் தயக்கத்தையும் பார்த்த பார்வதியால் அவளைக் கண்டிக்க முடியவில்லை. அவள் செய்தது தவறுதான் என்றாலும், இப்போது அவள் வாழ்க்கையில் இன்னொரு உயிர் வரப்போகிறது. அதுவே கோபத்தை எல்லாம் பின்னுக்குத் தள்ளியிருந்தது.
சோமசுந்தரம் அவளுடைய தலையை ஆதரவாகத் தடவிக்கொடுத்தார்.
“சரி, நிலா… நடந்தது நடந்துடுச்சு. இனிமேல் இதைப் பத்தி யாரும் பேச வேண்டாம். நீ நல்லா இருக்கணும். அதுதான் எங்களுக்கு முக்கியம்”
அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும் நிலாவின் கண்கள் கலங்கின.
“அப்பா…” என அவருடைய கையைப் பற்றிக்கொண்டாள்.
“அழாதம்மா!” என்று பார்வதி மகளை அணைத்துக்கொண்டார்.
“நீ எங்க பொண்ணு. உன்னை நாங்க புரிஞ்சுக்காம வேற யாரு புரிஞ்சுக்கப் போறா? நீ கவலைப்படாதே”
“தேங்க்ஸ் மா…” என்று தாயின் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள் நிலா.
