உருத்திரா 15❤️

 

‘ஏன் நாங்க வீட்டுல சமைக்கமாட்டோமா?’ என்று பொறுமலோடு நின்றார் பார்வதி.

என்ன குடும்பம்டா இது?

“குட்டச்சி அது ஒயிட் கோல்டு செயின் வித் டைமண்ட் நேம் பிளேட்! லட்ச ரூபாயை தாண்டும். அந்த செயினும் நாலு பீஸ் சிக்கனும் ஒன்னா?” என கர்ணகொடூரமாக அவளை முறைத்தாள்.

“லட்ச ரூபாயா இருந்தாலும் பசிச்சா சாப்பிட முடியுமா? நாலு பீஸ் சிக்கன்தான் உன்னோட பசியை போக்கும் மாமா! லெக்சர் எடுக்காம நாளைக்கு வரும்போது சாக்லேட் வாங்கிட்டு வாங்க” என்று சிரித்தாள் திகள்விழி.

“நாங்க கிளம்புறோம் பார்வதி. விழிக்கு உடம்பு சரியாகட்டும். இரண்டு வாரம் இல்ல, மூணு வாரம் கழிச்சுக்கூடக் கல்யாணம் வச்சுக்கலாம்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் பாட்டி.

“நாளைக்கு ஜோசியரை பார்த்து வேற  நாள் குறிச்சிட்டு வரோம்” என இருவரும் டாட்டா காட்டிவிட்டுக் கிளம்ப, நீங்க வரவே வேண்டாம் என்று நினைத்தார் சோமசுந்தரம்.

திகள் போனை வைத்ததும் பத்ரனின் முகம் இறுக ஆரம்பித்தது. அவனுடைய அருமை அண்ணனின் ஏற்பாட்டால்தான் தன் குட்டச்சியின் கை இந்த நிலையில் இருக்கிறது எனத் தெரிந்ததிலிருந்தே டென்ஷனாக இருக்கிறான். 

ஏற்கெனவே ருத்ராவை பற்றிப் பேசினால் கோபித்துக்கொள்வாள். இப்போது கையை பொங்கல் வைத்தது அண்ணன் என்று தெரிந்தால் ஆடித் தீர்த்துவிடுவாள் திகள்விழி.

‘சரி என் குட்டச்சிக்கிட்ட உன் வேலையைக் காட்டாத’ என ருத்ராவை எச்சரிக்கலாம் என்று போன் செய்தால், ருத்ரா எடுக்கவே இல்லை. அவன்தான் கட்டில் பாடத்தில் பிஸியாக இருந்தானே! அதனால் அமைதியாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறான்.

கல்யாண வேலைகள் அடுத்த நாளிலிருந்து ஆரம்பமானது. முதலிலாவது நிலாவை வந்து கண்ணிலாவது காட்டிவிட்டுப் போவான் ருத்ரா. இப்போது உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா என்பது போல, அவளை நடராஜன் வீட்டுப் பக்கமே கூட்டிவருவதில்லை.

முழுநேரமும் அவளில் மூழ்கியல்லவா கிடக்கிறான்!

காலையில் அவள் சமைப்பதற்குக்கூட கீழே வருவதில்லை. எதார்த்தமாக இரண்டு தடவை வந்த சரபனால் அவளைப் பார்க்க முடியவில்லை. 

‘சோ, நிலாவை ரூமுக்குள்ள அடைச்சு வச்சிருக்கான் போல!’ என முடிவே செய்துவிட்டான்.

தோன்றும் நேரமெல்லாம் அவளைச் சுருட்டி வாயில் போட்டுக்கொள்ளும் மிட்டாய் திருடனாக மாறிப்போனான் ருத்ரா. அவனை அடித்தாலும், கடித்தாலும் சொரணைகெட்ட மாட்டுக்கு வழிக்காது!

கெஞ்சிக் கேட்டு ஆபீஸ் வேலைகளை லேப்டாப்பில் பார்த்துக்கொள்கிறாள். தங்கையை போய் பார்க்கவில்லை என்ற கவலை! அம்மா, அப்பாவோடு பேச முடியவில்லை என்ற ஆதங்கம் எல்லாம் பின்னால் போய்விட்டது.

“கேப் விடுடா, மூச்சு முட்டுது!” என்று தன்னிலையே நொந்துகொள்ளும் அளவுக்கு இருக்கிறதே!

தினமும் அவளை சுகமாய் வதைக்கிறான். கல்யாணம் இன்னும் ஒருவாரம் தள்ளிப்போனதில் நிம்மதியடைவதா? இல்லை இவன் கூட இன்னும் ஒருவாரம் அதிகமாக இருக்கணுமே என வருத்தப்படுவதா?

அன்றிரவு லாப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்தவளைத் தூக்கி மடியில் வைத்தான் ருத்ரா.

“நாளைக்கு சேலை எடுக்க போகணும் ஆரலி. உனக்குப் பிடிச்ச டிசம்பர் பூ கலர்ல எடுக்கலாம்” என்று ஆர்வமாக கேட்டான்.

அவனை முகம் சுளித்துப் பார்த்த நிலா, “எனக்கு டிசம்பர் பூ கலர் பிடிக்கும்னு யாரு சொன்னா, கிறுக்குப்பையா! மரகதப் பச்சை கலர்ல எடுக்கலாம். அப்புறம் இந்த ஆரி ஒர்க் இதெல்லாம் வேண்டாம். எனக்குப் பிடிக்காது” என்றவள், அவன் போனை நோண்டி சில பிளவுஸ் டிசைன்களை எடுத்துக் காட்டினாள்.

“வேற!”

“வேற நகைகளும் அதுக்கு மேட்ச்சா வாங்கிடாத, கான்ட்ராஸ்ட் கலர்ல வாங்கணும் அப்புறம் முக்கியமா ஆணழகா நீங்க சட்டையோட மணமேடைக்கு வாங்க. ‘என் ஆண்மையைப் பாரு’ன்னு திறந்துபோட்டு வராத!” என்று மிரட்டினாள் நிலா.

அதில் சத்தமாகச் சிரித்துவிட்டான் ருத்ரா!

“போதும் சிரிச்சது! என்னை இறக்கிவிடு மெயில் பண்ணணும்” என்று அவன் மடியிலிருந்து இறங்கினாள் நிலா.

“இன்னும் எத்தனை நாளைக்கு நடிக்கப்போற ஆரலி?” என்றவன் வார்த்தையில் உலகமே சுழல ஆரம்பித்தது நிலாவுக்கு, தன் முகம் மாறாமல் இருக்கப் பெரும் பிரயாத்தனப்பட்டாள்.

“என்ன நடிக்கிறேன்? நான் நார்மலாத்தான் இருக்கேன் ருத்ரா. எதையாவது உளறாத!” என்று அவசரமாக சமாளித்தாளும், மனதோ அடித்துக்கொண்டது.

தப்பிச்சு போறதுக்குப் போட்ட பிளானை கண்டுபிடிச்சுட்டானா? பயமா இருக்கே!

அவளை அழுத்தமாகப் பார்த்த ருத்ரா, “உண்மையை சொல்லமாட்ட ரைட்? நோ ப்ராப்ளம்” என்றவன் எழுந்து வெளியே போய்விட, இவளால் நிலைகொள்ள முடியவில்லை தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

நாளைக்கு திகள், சரபன் சார் கடைக்கு வருவாங்க. அவங்ககிட்ட என்ன பண்றதுன்னு கேட்கலாம்.

அவனிடமிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதில்லை என நிலாவுக்கு தெரியாமல் போனது.

அடுத்த நாள் காலையில் டிப்டாப்பாகக் கிளம்பி சோபாவில் உட்கார்ந்திருந்தான் ருத்ரா. அவனை முறைத்தபடி கிளம்பிக்கொண்டிருந்தாள் நிலாஞ்சி.

‘இன்னைக்கு சேலை கட்டப்போறேன்’ என படித்துப் படித்து சொன்னவளை கண்டுகொள்ளாமல், கண்ட இடத்தில் கடித்து வைத்திருந்தான். 

கழுத்து, இடை பகுதியில் வட்ட வட்டமா அவள் பல் பதிய கடித்து வைத்திருக்க, மற்ற இடங்களிலோ அவன் கைரேகையை எடுத்துவிடும் அளவுக்கு அழுத்தமாகப் பதித்துவிட்டிருந்தான்.

சேலையில் அதை மறைக்க முடியாத கோபத்தில் சீப்பை அவன் மீது தூக்கி எறிந்தாள். 

“ருத்ரா இடியட்! பாரு என்னால சேலை கட்ட முடியல” என்று சிடுசிடுத்தாள்.

“ஏன் மஃபின்? நான் வேணா ஹெல்ப் பண்ணவா?” என்று சீரியஸாகக் கேட்டவனை முறைத்தவளோ,

“போடா! உன்கூடப் பேசுனா நான் தான் மெண்டல் ஆகணும்” என நொந்துகொண்டு முழுக்கை, காலர் வைத்த சுடிதாரில் முழுதாக கவர் பண்ணி கிளம்பினாள்.

இருவரும் கடை முன்பு போய் இறங்க, திகள், சரபன், விமல் மூவரும் விளையாடிக்கொண்டிருக்க, பத்ரன் மூவரையும் முறைத்தபடி நின்றிருந்தான்.

அவர்களைக் கண்ட ருத்ரா, மெண்டல்ஸ்! என்று நினைக்க, நிலா தங்கை செய்யும் சேட்டையை கண்டு சிரித்தாள்.

“திகள்!” என்று தங்கையிடம் ஓடியவளை ருத்ரா தடுக்கவில்லை.

“அக்கா வந்துட்டியா? உள்ளே போகலாம் வா” 

“உனக்கு கை சரியாகிடுச்சா திகள்! சாரிடி என்னால வீட்டுக்கு வரமுடியல” என்றவள் குரல் கவலையில் ஒலித்தது. 

அவள் நிலைமை புரிந்து “விடுக்கா நான் நல்லா இருக்கேன், எல்லாரும் என்னை பத்திரமா பார்த்துக்கிட்டாங்க முக்கியமா அபி, பவி, மாமா! தினமும் நம்ம வீட்டுக்கு வருவாங்க”

தங்கை முகத்தில் இருந்த சிரிப்பை கண்டு அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவளுக்கு அமைந்த வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்கிறோமே! என்ற தவிப்பு வர ஆரம்பித்தது.

“மாமா, அக்கா வந்துட்டா!” என்று நிலாவை இழுத்துக்கொண்டு உள்ளே போனாள்.

பத்ரன் அண்ணனை முறைக்க, அவன் வழக்கம்போல அவனை கண்டுகொள்ளாமல் சரபனோடு பேசியபடி உள்ளே போய்விட்டான்.

அம்மாவை ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள் நிலா. சோமசுந்தரம் மகளின் தலையைத் தடவிவிட, நீண்ட நாட்களுக்குப் பிறகு நிலாவின் முகம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.

அபிராமி, சாம்பவி அவர்களோடு சேர்ந்துகொள்ள, பெண்கள் அனைவரும் புடவை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆண்கள் அனைவரும் சேரில் ஓரமாக அமர்ந்திருந்தாலும், தங்கள் ஜோடிப் புறாக்கள் மீதுதான் கவனம் இருந்தது.

ருத்ரா இம்மியும் பார்வை அகலாமல் நிலாவை உறுத்துக்கொண்டிருந்தான். அவன் பார்வையில் சலித்தவள் ‘திரும்புடா!’ என்று சைகை செய்தாள்.

அவனா கேட்பான்? இன்னும் உற்றுப் பார்த்தான்.

திகள் அங்கும் இங்கும் ஓடி ஓடிப் புடவையை தேடி பார்த்தவளுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. அமைதியாக வந்து பத்ரன் அருகில் அமர்ந்துவிட்டாள். பத்ரன் இருக்கக் கவலை ஏது?

“குட்டச்சி இங்கே வா” என அவளை அழைத்துப்போய், அவளுக்குப் பொருத்தமான பட்டு சேலைகளை பார்க்க ஆரம்பித்தான். 

பச்சை, சிவப்பு, மஞ்சள் என வேறு வேறு வண்ணங்களில் புரட்டிப் பார்த்து, அவளுக்கு ஆகாய நீல சேலையை அழகாகத் தேர்ந்தெடுத்துவிட்டான்.

“அழகா இருக்கு மாமா!” என்று புடவையை ஆசையாக தடவினாள். அவளுக்காக பார்த்து பார்த்து செய்பவன் மீது காதல் கொள்ளை கொள்ளையாக வந்தது.

தன் கைகளை பிடித்துக்கொண்ட பத்ரனை நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தாள் திகள்விழி.

“குட்டச்சி ரொம்ப நாள் ஆச்சு! மாமாவுக்கு ஒரே ஒரு முத்தம்” என்று கண்களை சுருக்கி கேட்டவனை உள்ளே ரசித்தாலும் வெளியே முறைத்த திகள்விழி, சுற்றிலும் கண்களை காட்டினாள்.

“சாரி” என்று அசடு வழிந்தவனை கொஞ்சிக் கொல்ல ஆசை பிறந்தது.

தங்களை சுற்றிலும் ஆட்கள் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டவள், பத்ரன் கன்னத்தில் அவசரமாக முத்தமிட்டு விலகினாள்.

“உங்களுக்கு லவ் பண்ணவே தெரியல மாமா, தனியா வந்து கேளுங்க! நிறையத் தரேன்” என அவனை பார்த்து கண்ணடித்துவிட்டு ஓடினாள்.

இருவரின் காதல் நாடகத்தையும் நமட்டுச் சிரிப்போடு பெரியவர்கள் கண்டாலும், கருத்தில் கொள்ளவில்லை.

“இந்த புடவை உனக்கு அழகா இருக்கும் நிலா!” என பெரியவர்கள் மெரூன் வண்ணப் புடவையை நிலாவுக்கு எடுத்தனர், அவர்கள் தேர்வை கண்டு சிரித்தபடி தலையாட்டினாள் நிலா.

வேகமாக அவளிடம் வந்த ருத்ரா, “எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு மஃபின். ஒன் ஹவர்ல வந்திடுவேன் இங்கையே வெயிட் பண்ணு” என்றான்.

பாட்டியிடம் திரும்பி, “இந்தக் கலர் அவளுக்குப் பிடிக்காது பாட்டி. அவளுக்கு பிடிச்ச சேலையா நானே கல்யாணச் வாங்கிடுறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

‘அப்போ என்ன இதுக்கு இங்கே வந்தீரு?’ என்று யார் அவனிடம் கேட்பது?

பெரியவர்கள் கல்யாணத்திற்கு சேலை எடுப்பதில் பிசியாக இருக்க நைஸாக சரபன், நிலா, திகள் மூவரும் ஓரமாக ஒதுங்கினார்கள்.

“சார் நான்…” என்று மூக்கை நீட்டிய விமலின் மூக்கிலேயே நாலு போட்டான் சரபன்.

“ என்ன நானு! உன்னை கூட வச்சு பேசுனா, ருத்ரா கேள்வி கேக்குறதுக்கு முன்னாடியே அப்ரூவராகி எங்களை பரலோகம் அனுப்பிடுவ. மரியாதையா வெளிய நின்னு பத்ரன் வரானான்னு பாரு!” என வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு போனான் சரபன்.

“சார் ருத்ரா பிளானைக் கண்டுபிடிச்சுட்டானோன்னு பயமா இருக்கு. ‘என்கிட்ட பொய் சொல்றியா?’ன்னு சரியா கேட்கிறான்” என பயத்தோடு நிலா சொல்ல,

“என்ன பிளான் அக்கா?” என்று புரியாமல் முழித்தாள் திகள்விழி.

“வேற ஒன்னும் பெருசா இல்ல! கல்யாணத்தன்னைக்கு நிலா எஸ்கேப் ஆகுறதுதான்…” என்ற சரபனின் வார்த்தையில் வாயில் கைவைத்து அதிர்ந்தாள் திகள்.

“அக்கா…”

“நிலா மட்டும் இல்ல! நீ, உன் குடும்பம் எல்லாரும் எஸ்கேப் ஆகுறிங்க”

சரபன் சொல்வதை கேட்க மயக்கம் வருவது போல இருந்தது திகளுக்கு, 

“அக்கா ஏன் அமைதியா இருக்க? இவர் சொல்றது உண்மையா? நீ இந்த கல்யாணம் பண்ணிக்கப்போறது இல்லையா?”

“இல்ல திகள்! என்னால இந்த ஆரலி பைத்தியத்தோட வாழ முடியாது” என்று கண்கள் கலங்கச் சொன்ன நிலாவை அணைத்துக்கொண்டாள் திகள். 

நூறு வாய்ப்புகள் அவனுக்கு தந்துவிட்டாள்! ஆயிரம் வாய்ப்புகள் தர தயாராக இருக்கிறாள், நிலாவாக அவளை ஏற்றுக்கொண்டாள் ருத்ராவின் விஷமான காதலை அமிர்தமென பருக அவள் தயாராக இருக்கிறாள். ஆரலி தான் வேண்டும் என்றாள் விலகிவிடுவதே சிறந்தது என நினைத்தாள்.

“சரிக்கா அழாத! நாம போயிடலாம்”

“ஆனால் பத்ரன் சார் உன்னை விரும்புறாரே திகள்! என்னால உன் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது”

“அவர் என்னைப் புரிஞ்சுப்பாரு அக்கா! நாம ஒரேயடியா போகப்போறதில்ல, கொஞ்ச நாள் போகட்டும் மாமாகிட்ட பேசுறேன், நான் மட்டுமாவது திரும்பி வருவேன். எனக்கு மாமா மேல நம்பிக்கை இருக்கு” என்று உறுதியாக சொன்னாள் திகள்விழி.

அவளுக்கு உள்ளே பத்ரனை நினைத்து பயம் இருந்தாலும், தன்னை வெறுத்து ஒதுக்கிவிடமாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

சரபன் “சின்னப் பொண்ணா இருந்தாலும் தெளிவா பேசுறா! நீ பயப்படாத நிலா, உன் வாழ்க்கையையும் திகளோட வாழ்க்கையையும் குழப்பாத.

பத்ரன் திகளை விரும்புறான், அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க, நான் சொல்றதை கேளுங்க” என்று தன் திட்டத்தைத் தெளிவாகச் சொன்னான்.

“காலையில பிரம்ம முகூர்த்தம் நாலு மணியிலிருந்து ஐந்து மணிக்குள்ள முகூர்த்த நேரம். நீங்க நைட்டே மண்டபத்துக்கு வந்திடுவிங்க, அவனுக்கு எப்படியாவது நான் கொடுத்த ஊசியைப் போட்டுடலாம் இல்லையா, மாத்திரையைக் கொடுத்திடலாம். இரண்டுல எது நடந்தாலும் அவன் மயக்கமாகிடுவான்.

மண்டபத்து பின்வாசல்ல என் கார் நிக்கும், உன் ஃபிரெண்ட் அவன் பேரு… ஆங் பேபி அவனை நீங்க தப்பிச்சு போக ஹெல்ப்க்கு வச்சுக்கோங்க! ருத்ரா செக்யூரிட்டியைத் திசைதிருப்புறது என் வேலை” என்றான்.

“அப்பா, அம்மாகிட்ட பிளானை தெளிவா சொல்லிடு திகள். என்னால போன் பேச முடியாது, எல்லாத்துக்கும் தயாரா இரு” என்று தங்கையின் கைகளை பிடித்து அழுத்தினாள் நிலாஞ்சி.

பத்ரன் என்ன சொல்வானோ என்ற பயம் உள்ளுக்குள் இருந்தாலும், வெளியே சரியென தலையை ஆட்டினாள் திகள்விழி.

“சார், பத்ரன் சார் வராரு!” என்று விமல் பதற்றத்துடன் உள்ளே ஓடி வந்தான்.

அங்கிருந்தவர்களின் பேச்சு சட்டென்று நின்றது. சரபன் நிதானமாக திரும்பிப் பார்க்க, நிலாவும் திகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். 

அடுத்த நொடி பத்ரன் உள்ளே நுழைந்தான். 

“எல்லாரும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிங்க?” என்று கேட்டவனுடைய பார்வை ஒவ்வொருவரின் முகத்திலும் கூர்மையாகப் படிந்தது. 

வேகமாக வாயைத் திறக்க முயன்ற விமலின் தலையில் நச்சென்று கொட்டினான் சரபன்.

“அது ஒன்னுமில்ல பத்ரா, நிலா ஆரலியைப் பத்தி கேட்டுட்டு இருந்தா. அதான் அவளுக்கு தெளிவா கதை சொல்ல ஆரம்பிக்கிற நேரம் நீ வந்துட்ட.

சரி நீயும் வா, எல்லாரும் சேர்ந்து கதை பேசுவோம்!” என்றான் இயல்பாக,

சரபன் சமாளிக்க உளறுகிறான் என புரிந்து “ஆமாம் சார்” என்று நிலா வேகமாகத் தலையாட்டினாள்.

திகள் அவனைப் பார்த்து மெல்ல சிரிக்க, 

“இங்கே உட்கார்ந்து பேசுறதைவிட வெளியே இருக்கிற காஃபி ஷாப்ல உட்கார்ந்து பேசலாம் வாங்க!” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தான் பத்ரன்.

அவனைப் பின்தொடர்ந்த நிலா, சரபனின் காதில் மட்டும் விழும்படி குசுகுசுக்க ஆரம்பித்தாள்.

“சரபன் சார் இப்போ அவ கதையை யாரு கேட்டா? ஏற்கனவே ஒருத்தன் அவள் பேரைச் சொல்லிக் கடுப்பேத்துறது பத்தாதா? நீங்க வேற கதை சொல்றேனு கூட்டிட்டு போறிங்க!”

“என்ன சொல்றதுன்னு தெரியாம சமாளிக்க சொன்னேன். சரி விடு, நீயும் அந்தக் கன்றாவி கதையைக் கேளு” என்றான்.

“எது கன்றாவி கதையா?”

“பின்ன காவியக்காதலா? முதல்ல கதையைக் கேளு. அப்புறம் அதுக்குத் தலைப்பு குடுக்குற வேலைய பார்ப்போம்”

ஐவரும் காஃபி ஷாப்பில் இருந்த ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்தனர்.

“மாமா எனக்கு டீ வேணும்!” என்ற அறிவுக்கொழுந்தை “ஞஞஞ…” என்று பார்த்தார்கள். 

“குட்டச்சி இது காஃபி ஷாப்!” என்றான் பத்ரன்.

“ஆங் எனக்கு டீதான் பிடிக்கும் மாமா”

“இப்போ டீயா? காஃபியா? பஞ்சாயத்து ரொம்ப முக்கியமா? இவ வாயில எதையாவது ஊத்தி அடைச்சு வைங்கடா!” என்று எரிச்சலுடன் சொன்ன சரபன், பத்ரனைப் பார்த்து ஆர்டர் கொடுக்கும்படி சைகை செய்தான்.

பத்ரனும் அவளை முறைத்தபடியே அனைவருக்கும் வேண்டியதை ஆர்டர் செய்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, “சார் கதை!” என்று விமல் நினைவுபடுத்தினான்.

“சொல்றேன் கேளுங்க! ஒன்ஸ் அப்பான் அ டைம்…”

“எது ஒன்ஸா?” என்று நடுவில் குறுக்கிட்டாள் திகள்.

சரபன் அவளைத் திரும்பி பார்த்து முறைத்தவன் “சரி ஏழு வருஷத்துக்கு முன்னாடி போதுமா! இனிமேல் வாயைத் திறந்தே கொன்றுவேன்” என்று மிரட்டினான்.

பத்ரனின் பக்கம் திரும்பிய திகள் “மாமா…” என்று சிணுங்கிட, அவளை தோளோடு அணைத்துக்கொண்ட பத்ரன், “நீ காஃபி குடி குட்டச்சி. அவன் கதை சொல்லட்டும்!” என்று சமாதானப்படுத்தினான்.

“சார் ஏழு வருஷத்துக்கு முன்னாடி…” என்று விமல் மீண்டும் ஆரம்பித்தான்.

“ஆங் சொல்றேன்! அப்போ எங்களுக்கு இருபத்தைந்து வயசு இருக்கும். நானும் ருத்ராவும், எங்களோட இன்னும் இரண்டு பிரெண்ட்ஸ் சேர்ந்து கேரளா பார்டர்ல இருந்த ருத்ரா எஸ்டேட்டுக்கு போயிருந்தோம்.”

அந்தக் காலகட்டத்தில் நால்வரும் புதிதாக தொழிலைத் தங்கள் கைகளில் எடுத்திருந்தனர். பொறுப்புகள், முக்கிய முடிவுகள், தொடர் மீட்டிங் என்று ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அவை!

குறிப்பாக ருத்ராவுக்கு மைண்ட் ரிலாக்ஸ் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் சிட்டி டென்ஷனிலிருந்து இயற்கையின் அமைதியில் ஒரு மாதம் தங்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

மலைகளுக்கு நடுவே பரந்து விரிந்த தேயிலைத் தோட்டமும், அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட பாதைகளும், குளிரைச் சுமந்தபடி வீசும் காற்றும் கொண்ட அழகான எஸ்டேட்.

கார் கெஸ்ட் ஹவுஸூக்குள் நுழைந்ததும், அவர்களை வரவேற்பதற்காக அங்கே வேலை செய்யும் சிலர் காத்திருந்தனர்.

“சார் வந்துட்டிங்களா?” என்று எஸ்டேட் மேனேஜர் முத்து வேகமாக முன்னால் வந்தார்.

“டேய் பரதேசி! தூங்கித் தொலையாதடா!” என்று சந்துருவை உருட்டித் தள்ளினான் ரிஷி.

“இரண்டு பேரும் அமைதியா வாங்கடா குளிருது!” என்று கைகளைத் தேய்த்தபடி காரிலிருந்து இறங்கினான் சரபன்.

அவர்களுக்குப் பின்னால் இறங்கிய ருத்ரா, சுற்றிலும் ஒருமுறை பார்வையை ஓட்டினான். அவனுடைய முகத்தில் வழக்கமான இறுக்கம் இருந்தது. மற்றவர்கள் இயற்கையை ரசித்துக்கொண்டிருக்க, அவனோ அங்கிருந்த சூழலை அமைதியாக ஆராய்ந்துகொண்டிருந்தான்.

முத்து உடனே அவனருகில் வந்து பவ்யமான குரலில் பேசினார்.

“சார் எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு”

“முத்து இவங்களுக்கு ரூமைக் காட்டுங்க. நாங்க ஒரு மாசம் இங்கே தங்கப்போறோம். போன தடவை இருந்த குக்கையே ஏற்பாடு பண்ணுங்க. இங்க எக்ஸ்ட்ரா ஆட்கள் இருக்க வேண்டாம். மற்றவங்களை வேலையிலிருந்து அனுப்பிடுங்க. நாங்க கிளம்பின பிறகு வரச் சொல்லிக்கலாம்”

ருத்ரா சொன்னதைத் தலையசைத்துக் கேட்டுக்கொண்ட முத்து, உடனே ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

அவன் சொன்னபடியே வாட்ச்மேன், சமையல்காரர்கள் தவிர மற்ற அனைவருக்கும் ஒரு மாதம் வேலைக்கு வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அன்று நால்வரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்தனர்.

அடுத்த நாள் காலையில், நடுவீட்டில் ஒலித்த ஒரு பெண்ணின் சத்தமான குரல் அவர்கள் தூக்கத்தை கலைத்தது.

“என்னங்க இது நியாயம்? நேத்து வரைக்கும் வேலைக்கு வரச் சொல்லிட்டு, இன்னைக்கு திடீர்னு வரவேண்டாம்னு சொன்னா நாங்க என்ன பண்ணுவோம்?”

என்றவள் குரலில் கோபமும் ஆதங்கமும் கலந்திருந்தது.

அறையிலிருந்து முதலில் வெளியே வந்த சந்துரு, தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் தேய்த்தான். பின்னால் ரிஷியும் சரபனும் வந்தனர்.

நடுவீட்டில் முத்து கைகளைப் பிசைந்துகொண்டு நிற்க, அவருக்கு எதிரே ஒரு பெண் நின்று வாதாடிக்கொண்டிருந்தாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!