உருத்திரா 7

 

காரிலிருந்த கிஃப்ட் பாக்ஸை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான் பத்ரன்.

“கிஃப்டா? எனக்கா? வேண்டாம் சார்” என உடனே மறுத்தாள் பெண்ணவள். “வாங்குடி…” என்ற பத்ரனின் அதட்டலில் பயந்து அதை வாங்கினாள்.

“பிரிச்சுப் பாரு…”

வேகமாக பாக்ஸைத் திறக்க, சலங்கை ஜோடி அழகாக மின்னியது. கண்களை அகல விரித்தவள் ‘இந்தச் சலங்கையில் அதிக முத்துகள் வைத்திருக்கிறதே! ரொம்ப காஸ்ட்லியாக இருக்கும். எனக்கு ஏன் இவர் வாங்கிக் கொடுக்கிறார்?’ என்ற கோபம் வந்துவிட்டது.

அவள் பார்வை மாறுவதைக் கவனித்த பத்ரன் “பிடிச்சிருக்கா குட்டச்சி?” என்று கேட்க,

“எனக்கு உங்க கிஃப்ட் வேண்டாம் சார்” எனப் பட்டென அவன் கைகளில் அதைத் திணித்துவிட்டு பின்னால் நகர்ந்தாள்.

“ஏன் வேண்டாம்? உனக்கு இது பிடிக்கலையா? அரங்கேற்றம் பண்றவங்களுக்கு இந்தச் சலங்கை சரியா இருக்கும்னு ஷாப்ல சொன்னாங்க. இட்ஸ் ஓகே! நீயும் கூட வா உனக்குப் பிடிச்சதை வாங்கிக்கோ!” என்று கேஷுவலாக அவள் கையைப் பிடித்து இழுத்தவனை முறைக்க முடியாமல் கைகளைப் பின்னால் இழுத்தாள் திகள்விழி.

“எனக்கு கிஃப்ட் வாங்கித்தர நீங்க யாரு? நேத்து உங்க பாட்டியை மரியாதை இல்லாம பேசிட்டேன்னு நீங்க திட்டும்போது அமைதியா இருந்தேன். அதுக்காகக் கைப்பிடிச்சு இழுக்குறீங்க! 

முன்னப்பின்ன தெரியாத பொண்ணுகிட்ட ரோட்டுல எப்படி பிஹேவ் பண்றதுனு உங்களுக்கு அபி சொல்லித்தரலையா? உங்க கிஃப்டும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். முதல்ல கிளம்புங்க!” என மூக்குவிடைக்க விரலை நீட்டிச் சண்டையிட்டவளைக் கண்டு, கியூட்! என்று பத்ரனின் மனம் கொஞ்சியது.

அவன் நெஞ்சுவரை கூட உயரம் இருக்க மாட்டாள். எகிறி எகிறித் தன்னிடம் சண்டையிடுவதைக் கண்டு அவன் இதழில் புன்னகை.

“உன்னோட கையைப் பிடிச்சது தப்புதான்!” என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னவனிடம்,

“ம்… தப்புதான் பரவாயில்ல மன்னிச்சிட்டேன். நான் போறேன் கிளாஸுக்கு டைமாச்சு!” என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டு திரும்பியவளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடந்தான் பத்ரன்.

“அம்மா!” எனப் பயத்தில் அலறியவளைக் கண்டுகொள்ளாமல் தன் காரில் தூக்கிப் போட்டவன், காரை கிளப்பினான்.

“என்ன பண்றீங்க சார்? பயமா இருக்கு நான் தப்பான பொண்ணு இல்லை. என்னை விட்டுருங்க!” என அழ ஆரம்பித்துவிட்டாள். சற்று நேரத்திற்கு முன் அவன் ரசித்த கண் மை பூசிய விழிகள் கலங்கி, மை கலைந்து, கண்ணீராக அவனைக் குற்றம் சொல்லின.

“உஸ்ஸ் வாயை மூடு! சத்தம் வெளிய வரக்கூடாது!” என்றவன் அதட்டலில் கப்பென வாயை மூடிக்கொண்டாள் திகள்விழி. கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்துகொண்டிருந்தது.

“நீ அழுதுட்டே இரு, இன்னைக்கு முழுக்க கார்லயே சுத்தலாம். வீட்டுக்குப் போக வேண்டாம்”

“இல்ல நான் அழல!” எனக் கண்களைத் துடைத்த திகள், “ப்ளீஸ் சார் டான்ஸ் ஸ்கூல்ல என்னை இறக்கிவிடுங்க. உங்க பாட்டியை நான் பார்க்க மாட்டேன், அவங்க கூட பேச மாட்டேன்!” என்றாள் கெஞ்சுதலாக.

“நான் சொல்றதைப் பண்ணு, உடனே உன்னை விட்டுருவேன்”

“என்ன பண்ணணும்?” என்று பயந்தபடி கேட்டவளை முறைத்த பத்ரன் “நான் பொம்பளைப் பொறுக்கி கிடையாது. எதுக்குப் பயப்படுற? முதல்ல அந்தப் பார்வையை மாத்து, எரிச்சலா இருக்கு அபிக்குக் கால் பண்ணி, உங்க பேரனை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம்னு சொல்லு. உன்னை விடுறேன்!” என்றான்.

“ஆங்!” என வாயைப் பிளந்த திகள்விழி, “அவங்க பேரனா? அது நீங்கதானே…”

“ஆமா! என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கோ” என்றவனை இப்போது அவள் முறைத்தாள்.

“யோவ் மெண்டலு! ஒழுங்கா வண்டியை நிறுத்து இல்ல மண்டையை உடைச்சுருவேன்!” என்று கத்தியவள் சத்தத்தில் காரை நிறுத்திவிட்டான்.

“அடிங்க குட்டச்சி! மெண்டலா உன்னை…” என அவளைத் தூக்கித் தன் மடியில் அமர்த்தினான்.

“விடு, விடு! நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், நீ சரியான சிடுமூஞ்சி. எனக்கு உன்னைப் பிடிக்கல!”

அவள் நெஞ்சில் அடிப்பது, ஏதோ மயிலிறகால் அவனது உரமேறிய நெஞ்சைத் தீண்டிப்போவது போல இருந்தது.

இதுவரை யாருக்கும் காட்டாத தன் சிரிப்பை முதல்முறையாக அவளுக்குக் காட்டினான். கன்னக்குழி விரிய சிரித்தவனை முறைத்தாள்.

“உன்னை அடிக்கிறேன், நீ சிரிக்கிற!”

“அடிக்கிறேன்னு காமெடி பண்ற குட்டச்சி! பாரு நான் நல்லாவே சிரிப்பேன் சிடுமூஞ்சி இல்ல. இப்போ ஓகேவா?”

“இப்போதான் ரொம்பக் கேவலமா இருக்க! முதல்ல மடியிலிருந்து என்னை இறக்கிவிடு மங்கூஸ் மண்டையா! நல்லாக் கேட்டுக்கோ, உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்!” என்று அவள் முடிக்கும் முன் பத்ரனின் இதழ்கள் திகளின் இதழ்களைச் சுருட்டிக்கொண்டன!

அதிர்ச்சி, பயம், அழுகை, கோபம் என அவள் விழிகள் காட்டும் வர்ணஜாலத்தில் தெரிந்தே வீழ்ந்தான் பத்ரன். அவன் மடியில் அமர்ந்திருந்தவளின் மொத்த உருவமும் அவனுள் அடங்கிவிட்டது. 

 

தன் இடது கையால் திகளின் கால்கள் இரண்டையும் பற்றியவன், அவள் தேகத்தில் எழும் சிலிர்ப்பை உணர்ந்து உள்வாங்கிட, பத்ரனின் முத்தத்திலிருந்து தப்பித்துப் பெரிய பெரிய மூச்சு வாங்கிய திகள், கண்களை மூடித் தன்னைச் சமன் செய்தாள்.

அவள் பாதங்களில் ஊரும் அவன் கை விரல்களின் சூட்டை உணர்ந்தாலும், திகள் கண்களைத் திறக்கவில்லை! பயமும் படபடப்பும் போட்டி போட கண்களை இறுக மூடிக்கொண்டாள் திகள்விழி.

“கண்ணைத் திறடி!” என்றவனது குரல் குழைந்து வந்தது.

“ம்கூம்!” என மறுப்பாகத் தலையசைத்தவளைக் கண்டு சிரித்தவன் “முத்தம் வேணும்னா கேட்டு வாங்கு குட்டச்சி! இப்படி கண்ணை மூடிப் பிடிவாதம் பிடிச்சுக் கேட்கக்கூடாது” என்றான்.

படக்கெனக் கண்களைத் திறந்த திகள் “ஒரு பொண்ணைத் தூக்கிட்டு வந்து, விருப்பம் இல்லாம முத்தம் கொடுத்துட்டு திமிரா பேசுற ஆளைப் பாரு” என்று அவனை அடிக்கக் கைகளை ஓங்கினாள்.

பத்ரனுக்குக் கோபம் வந்துவிட அவள் கைகளை வளைத்துப் பிடித்தவன், “சுண்டைக்காய் சைஸ்ல இருந்துகிட்டு என்னை அடிக்க வர? ஒழுங்கா என்னை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்ற, நான் பொண்ணு கேட்டு வரும்போது சமத்துப் பாப்பாவா நிக்கணும் புரியுதா!” என்றான்.

“கையை விடு வலிக்குது! நீ மோசமானவன் என்னைக் கஷ்டப்படுத்துற. நீ மட்டுமில்ல, அபி, பவி யாருமே வேண்டாம்!” என அழுதவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று புரியாமல், இன்னும் அவள் மீது கோபம்தான் கொண்டான்.

பொத்தென அவளைத் தூக்கி சீட்டில் போட்டவன், காரை ஓட்டிவந்து டான்ஸ் ஸ்கூல் வாசலில் நிறுத்தினான். அதுவரை அழுதுகொண்டே வந்தவளைப் பார்த்தாலும் சமாதானம் செய்யவில்லை.

கார் நின்றதும் வேகமாக இறங்கப் பார்த்தவளின் மணிக்கட்டை வலிக்கப் பிடித்த பத்ரன் “இந்தப் பத்ரனை நேத்துலருந்து நீ ரொம்ப டிஸ்டர்ப் பண்ற குட்டச்சி! பாட்டிக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சு வரல! எனக்கு உன்னோட ஸ்ருங்கார ரச நாட்டியத்தைப் பார்க்க ஆசை. ரெடியா இரு சீக்கிரம் வந்து உன்னைத் தூக்கிட்டுப் போவேன். மறுக்க நினைக்காத, அது என்கிட்ட எடுபடாது!” என்று ஒரு மார்க்கமாகச் சிரித்தபடி கைகளை விட்டான்.

அவனைப் பயத்தோடு பார்த்த திகள் அவசரமாக உள்ளே ஓடிவிட்டாள்.

அவன் அழுத்தமான பிடியில் கையில் அச்சு விழுந்திருந்தாலும், திரும்பிப் பார்க்காமல் உள்ளே ஓடிவந்தாள்.

“திகள் என்னடி மூச்சு வாங்க ஓடிவர? இந்தா தண்ணி குடி!” என்று ஒருத்தி நீட்ட, மடமடவெனத் தண்ணீரைக் குடித்துத் தன்னைச் சமன் செய்துகொண்டாள் திகள்விழி.

“சலங்கை புதுசா சூப்பரா இருக்குடி! இது விலை அதிகமே, காசு சேர்த்து வச்சு வாங்குனியா?” என்றவள் கேள்வியில் புரியாமல் முழித்த திகள், தன் காலைப் பார்த்தாள். 

அந்தப் பாவி முத்தம் கொடுத்து ஏமாத்தி கேப்பில் மாட்டிவிட்டிருந்தான். இதைக்கூட உணராமல் இருந்ததை எண்ணி நொந்துகொண்டவளோ, “ஆமாம் புதுசு எனக்கு ஒருத்தவங்க கிஃப்ட் கொடுத்தாங்க, கிளாஸுக்கு டைமாச்சு போகலாம்!” என உள்ளே போனாள்.

“குட்டச்சி கியூட்டா இருக்கா. பட் வாய் ஓவர்!” என்று தலையைக் கோதியவனுக்கு அவளோடான காதலும், கூடலும், ஊடலும் பிடித்திருந்தன! வேலை, வேலை என மண்டை காய்ந்து சுற்றுபவனுக்குக் காதல் பகுதி கொஞ்சம் தித்திப்பாக இருந்தது.

சுகமாய் அவள் நினைவில் தொலைந்தவன், ஆபீஸுக்குக் கிளம்பி வர ருத்ரா பண்ணிவைத்த கூத்துதான் அங்கு ஹாட் டாப்பிக்…

“MD சார் அண்ணன், நிலாவைத் தூக்கிட்டுப் போய்ட்டாரு!” என ஆபீஸ் மூலை முடுக்கெல்லாம் இன்ஸ்டன்ட் செய்தி பரவிக்கொண்டிருந்த நேரத்தில் ஆபீஸில் கால் வைத்தான் பத்ரன்.

விமல் “சார், சார்! ருத்ரா சார் அந்த பொண்ணைப் பிடிவாதமா தூக்கிட்டுப் போய்ட்டாரு!” என்று பாவமாகச் சொன்னான்.

“இடியட்! அவன் சோட்டா பீம், நிலா லட்டு அசால்ட்டா தூக்கிட்டுப் போய்ட்டான்னு சொல்ற! இத்தனை செக்யூரிட்டி எருமைகளைச் சும்மா நிக்க வச்சிருக்கேனா? அவனைத் தடுக்காம எங்க போனாங்க?”

“எல்லாரும் ஹாஸ்பிடல் போயிருக்காங்க சார்! அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டாரு, உண்மையாவே தோள்ல தூக்கிப் போட்டுட்டுப் போனாரு ”

“சரபன் எங்க போய் தொலைஞ்சான், நீ மட்டும் அடிவாங்காம நிக்குற?”

“உன் பொடணிக்குப் பின்னாடிதான் நிக்குறேன் திரும்பு!” என்ற சரபன் குரலில் பத்ரன் திரும்ப, கன்னத்தில் ஐஸ் பேக் வைத்தபடி நின்றான் ருத்ராவின் ஆருயிர் நண்பன்.

“உன் பாசமலர் எங்களைப் பறக்க விடும்போது, இந்த நாய் ஓடிப்போய் டேபிளுக்கு அடியில் ஒளிஞ்சுக்கிட்டான். அதான் காயம் படல…”

“ஸ்ஆஆ…”

விமல் திருதிருவென முழிக்க “என்னை முன்னாடி தள்ளிவிட்டுட்டு நீ ஓடிப்போனதைக்கூட மன்னிச்சிடுவேன்டா! அவன் அடிக்கிறதுக்கு முன்னாடியே நிலாவை நாடு கடத்தப் போட்ட பிளானை, அதுவும் நான் தான் பிளான் எக்ஸிகியூட்டர்னு போட்டியே ஒரு போடு… இரண்டு கன்னமும் பன்னு மாதிரி வீங்கிப்போச்சு”

“இருடா உன்னை!” என்று விமலை அடிக்கத் துரத்தினான் சரபன்.

“இரண்டு பேரும் காமெடி பண்ணாம ருத்ரா எங்க போயிருக்கான்னு பாருங்க! நிலாவை தூக்கிட்டுப் போயிருக்கான் தாத்தாகிட்டப் பேசிட்டு வரேன்!” எனப் போனைத் தூக்கிக்கொண்டு போனான் பத்ரன்.

காலையில் அவசரமாக ஆபீஸ் வந்த நிலாஞ்சி, ஏற்கெனவே அனுப்பியிருந்த டெண்டர் அமௌன்ட் அண்ட் ஸ்டேட்மென்ட் குறித்து கிராஸ் செக் பண்ணுவதற்காகப் பத்ரன் அறையில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்க, தம்பிக்குப் பதிலாக மல்லிகைப்பூவோடு ருத்ரா என்ட்ரி கொடுத்தான்.

அவனைச் சத்தியமாக நிலா எதிர்பார்க்கவில்லை. ‘இன்னைக்கு என்ன பண்ணப்போறானோ?’ என்ற கலவரத்தோடு எழுந்து நின்றாள்.

அவளைக் கண்ட ருத்ராவின் விழிகள் ரசனையில் விரிந்தன. கொடி இடையை எடுத்துக்காட்டும் வகையில் சிவப்பு வண்ணச் சேலையைக் கச்சிதமாகக் கட்டியிருந்தாள் நிலா. 

ஏற்கெனவே அவன் பார்வை அவளை அப்பட்டமாக மேயும். இன்று ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போலப் பார்ப்பதில் நிலா நெளிந்தபடி “சார்…” என்று இழுத்தாள்.

“மஃபின்” என்று முணுமுணுத்தபடி அவளை நெருங்கியவன் மல்லிகைப்பூவை நீட்டிட, அவனையும் பூவையும் மாறி மாறிப் பார்த்தவள், வேண்டாம் என மறுப்பாகத் தலையை ஆட்டினாள்.

“இந்தப் பூ வேண்டாமா? இல்ல நான் குடுக்கிறதுனால வேண்டாமா?” அழுத்தமாய் வந்தது அவன் குரல்.

‘நீ கொடுக்கிறதுனால்தான் வேண்டாம், எருமை!’ என்று சத்தமாகச் சொல்ல முடியாதே.

“தலைவலி வரும், வேண்டாம் சார்”

“ஓஓஓஓ…”

இவன் ஓ போடுறது சரியில்லையே என நினைத்து முடிக்கவில்லை. பூவை விரித்து அவள் கழுத்தைச் சுற்றிப் போட்டவன் செயலில் அவள்தான் அதிர்ந்தாள்.

அடுத்த நொடி அவளை இறுக்கமாக அணைத்துக் கழுத்துவளைவில் முகம் புதைத்தவன், பூவோடு சேர்த்து அவள் வாசனையையும் நுகர்ந்திட, சர்வமும் ஆட்டம் கண்டது அவளுக்கு.

கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் கைகளால் ருத்ராவின் கழுத்தைச் சுற்றிப் பிடித்துக்கொண்டாள். நுகர்ந்து பார்க்கிறேன் என அவளை மூர்ச்சையாக்கிக்கொண்டிருந்தான். அவன் மீசைமுடியின் உரசல் கழுத்தில் முள்ளாய்க் குத்திட,

“விடுங்க! என்ன பண்றீங்க?”

அவன் தோளில் அடித்துத் தள்ளிவிடப் பார்க்க, சொரணை கெட்ட மாட்டுக்கு எப்படி வலிக்கும்?

“இன்னும் கொஞ்சம்…” என மேலும் கீழும் அவன் செய்யும் அத்துமீறல்களில் நிலாவின் அடிவயிற்றில் பூகம்பம் வெடித்தது.

இந்த அவஸ்தையான உணர்வுகள் எல்லாம் “ஆரலி” என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து வந்ததும் அறுந்துபோனது போல!

நிலா வெடுக்கென அவனைத் தள்ளிவிட்டாள்.

“நான் ஆரலி இல்லைனு எத்தனை தடவை சொல்றேன். ஏன் புரிஞ்சுக்க மாட்றீங்க? என் பேரு நிலாஞ்சி. யாரோ ஒருத்தியை நினைச்சுக்கிட்டு என்னைத் தொடுறியே உனக்கு அசிங்கமா இருக்குதோ இல்லையோ, எனக்கு அவமானமா இருக்கு!”

“தயவுசெய்து என்னை விட்டுரு!” எனக் கோபமாக ஆரம்பித்துக் கெஞ்சலில் முடித்தாள். அவளும் பெண்ணல்லவா? முதல்முறையாக ஓர் ஆணின் தொடுகை சிந்தையைத் தடுமாற வைக்கிறது.

“ரிலாக்ஸ் கொடிச்சி!” என்றவனைச் சப்பென அறைந்த நிலா, “நீ இங்கேயே உட்கார்ந்து பைத்தியம் போலப் புலம்பு நான் கிளம்புறேன்!” என்றாள்.

தன்னைத் தாண்டிப் போகும் நிலாவின் கைகளைப் பற்றிய ருத்ரா, அவளைத் தோளில் தூக்கிப்போட்டு வெளியே நடக்க ஆரம்பித்தான்.

“ராஸ்கல் விடுடா! எல்லாரும் பார்க்குறாங்க இறக்கிவிடு! பத்ரன் சார்கிட்டச் சொல்லி உன் மூஞ்சை உடைக்கச் சொல்றேன்!” என அவன் தோளில் அடித்துக் கடித்து வைத்தாள்.

இவன் இப்படி அரை மெண்டல் வேலை செய்வான் என விமலுக்கு ஏற்கனவே தெரியும். அதனால் முன்கூட்டியே வக்கீல் வண்டுமுருகனான சரபனையும் வரச் சொல்லியிருந்தான். சரபன் ஆபீஸுக்குள் வரும்போது, நிலாவைக் கதறக் கதற நண்பன் தூக்கிவருவதைக் கண்டு பதறிவிட்டான்.

“ருத்ரா அந்தப் பொண்ணை இறக்கிவிடு! செக்யூரிட்டி வாங்கடா வேடிக்கை பார்க்கவா உங்களை நிக்க வச்சுருக்கோம்”

“தள்ளு சரபா! என் கோவத்தை அதிகமாக்காத…”

“இப்போ மட்டும் கம்மியா இருக்கா? நிலாவை இறக்கிவிடு, பொறுமையாப் பேசலாம்!”

அதற்குள் பத்ரனின் வெல் டிரெய்ன்ட் செக்யூரிட்டி டீம் ருத்ரனைத் தடுக்க, நிலாவை ஒரு கையில் பிடித்திருந்தாலும் இன்னொரு கையால் ஒற்றை ஆளாக அனைவரையும் பந்தாடினான்.

அடுத்து விமலை நெருங்கிய ருத்ராவைக் கண்டு பயத்தில் சரபனைப் பிடித்து முன்னால் விட்ட விமல், “சார், சார்! என்னை அடிச்சிடாதீங்க. இவருதான் நிலாவை ஃபாரின் அனுப்ப ஏற்பாடு பண்ணிருக்காரு!” என்று பற்ற வைத்துவிட்டு மேஜைக்குக் கீழே ஒளிந்துகொள்ள,

“அடப்பாவி சண்டாளா! உனக்கு வேலை கொடுத்து, சம்பளம் கொடுத்த பாவத்துக்கு என்னை சாவுக்குத் தூக்கிக் குடுக்கப் பார்த்துட்டியே!”

ருத்ரா ஆங்காரமாகச் சரபனை நெருங்கிட,

“மச்சான் நான் இல்லைடா! உன் தம்பி ஐடியா அது! ப்ளீஸ் அடிச்சிடாத!” எனச் சரபன் கெஞ்சியும் பயனில்லை. இரண்டு கன்னங்களையும் பழுக்க வைத்துவிட்டு நிலாவைக் காரில் போட்டுக் கிளம்பிவிட்டான் ருத்ரா.

“இப்போ நீ காரை நிறுத்தல, நான் வெளியே குதிச்சிடுவேன்!” என ஆர்ப்பாட்டம் செய்த நிலாவைப் பளாரென அறைந்த ருத்ரா “மூச்! சத்தம் வரக்கூடாது!” என்றான்.

பயத்தோடு அவனைப் பார்த்தவளோ அழுதுகொண்டே அமர்ந்திருந்தாள்.

“ஏன்டி சொல் பேச்சுக் கேட்க மாட்ற? என்னைப் பாரு…”

அவள் கன்னத்தைப் பிடித்துத் தன்னைப் பார்க்க வைத்த ருத்ரா, “சாரி! என்னால கோவத்தைக் கண்ட்ரோல் பண்ண முடியல. நீ ஏற்கெனவே கோவமா இருக்க இப்போ அடிச்சுட்டேன். வேணும்னா நீயும் இரண்டு அடி அடிச்சுக்கோ!” என அவள் கைகளைப் பிடித்துத் தன்னை அடிக்க வைத்தான்.

“விடுடா சைக்கோ!” என்று கைகளை உதறினாள்.

“நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு சாக்லேட் மஃபின், புருஷனை ‘டா’ போட்டுப் பேசுறியே!”

“உன் பேருகூட எனக்குத் தெரியாது! நீ என் புருஷன் இல்ல”

“மறந்துட்டியா? இல்ல உண்மையா என் பேரு தெரியாதா?”

“உன்னை முன்னப்பின்ன நான் பார்த்தது இல்ல. இன்பேக்ட் நான் சென்னை இப்போதான் வந்திருக்கேன்”

“No problem மஃபின்! என் பேரு ஏகதச ருத்ரா”

“ஏகதச ருத்ரா” என்று மெதுவாக அவன் பெயரை உச்சரித்துப் பார்த்தவள் கண்களில் இன்னும் பயம் இருந்தது.

“ஆமாம் ஏகதச ருத்ரா. ஆனா நீ என்னை ஒரு தடவை கூட ‘ருத்ரா’ன்னு கூப்பிட்டது இல்லை. உனக்கு மட்டுமே சொந்தமான ஒரு அழைப்பு இருக்கு.

இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு, உன் வாயிலிருந்து வரப்போற அந்த பெயருக்காக நான் காத்திருக்கேன்!” என்றவனது பேச்சு உணர்வுக் குவியலாக நிரம்பி வழிந்தது.

அதில் ஒரு சதவீதம்கூட நிலாஞ்சி என்ற மடச்சியை நினைத்து அவன் பேசவில்லை. யாரோ ஒரு ஆரலியை அல்லவா என்னிடம் தேடுகிறான்? அவனையே வெறித்துப் பார்த்தாள் நிலா.

“நான் உன்னை எப்போ கல்யாணம் பண்ணேன்?”

அவன் முகத்தில் இருந்த சிரிப்பை அப்படியே உறைந்து போக, “வேண்டாம், ஆரலி! அந்த நாள் இரண்டு பேருக்கும் பிடிக்காத நாள். உன்னை மோசமாப் பேசி என்னை விட்டு விலக்கி வச்ச நாள்” என்று முகம் இறுகச் சொன்னவனோ, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தான்.

“பொய் அப்படி ஒரு நாளே இல்லை அதான் உண்மை. ஆரலின்ற பொண்ணுக்கு நீ பண்ண கெடுதலுக்கு என் மூலமா பிராயச்சித்தம் பண்ணப் பார்க்குற. அதுக்கு நான் ஆள் இல்லை!”

“வண்டியை நிறுத்து ருத்ரா!” என்று கத்தியவளைக் கண்கள் சிவக்கப் பார்த்தவன், ஓரமாய் காரை நிறுத்தினான்.

“என்னை விட்டுப் போறியா மஃபின்?”

“ஆமா! கார் கதவை அன்லாக் பண்ணு!” என்று சிடுசிடுத்தவள் அவன் முகத்தைப் பார்க்க, மூக்கில் ரத்தம் வடிய, தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் ருத்ரா.

“ஐயோ ருத்ரா! உனக்கு என்ன ஆச்சு?”

நிலா பதறியபடி சேலை முந்தானையால் அவள் மூக்கைப் பொத்தினாள்.

“இங்க பாரு, டென்ஷன் ஆகாத ரிலாக்ஸ்! டீப் ப்ரீத்!” என்று அவன் நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள். ருத்ராவின் பார்வை அவளை விட்டு இம்மியும் விலகவில்லை.

அடிக்கடி நடக்கும் நிகழ்விது! அவன் கோபத்தில் கட்டுப்பாட்டை இழக்கும்போது மூக்கில் ரத்தம் வரும், தலைவலி ஆளைக் கொல்லும். சுற்றியிருப்பவர்களை மிருகம்போல அடிப்பான்.

இன்று அவள் அருகாமையில் கோபம்கூட மறைந்துபோனது! மூக்கிலிருந்து புடவையை எடுத்தவள், தண்ணீர் கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்தாள்.

“உனக்கு என்ன தான்டா பிரச்சனை? ஏன் இவ்வளவு கோபம் வருது? ஹாஸ்பிடல் போகலாம்!” என்று திட்டயவளின் தாடையைப் பிடித்து தன்னைப் பார்க்க வைத்தான்.

“என்ன?”

“தலைவலிக்குது ஆரலி”

“ம்ச்… சரி ஹாஸ்பிடல் போகலாம், உன்னால கார் ஓட்ட முடியுமா? முடியலைன்னா சொல்லு டாக்ஸி கூப்பிடுறேன்!” என்று பேசிக்கொண்டிருந்தவளின் இதழை விழுங்கின ருத்ராவின் இதழ்கள்.

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!