காதல் – 10

காதல் -10 
 

 

தன் நண்பனுடன் கீதாவின் இல்லம் நோக்கி சென்றான் ராஜா.

வண்டி ஒரு வளைவில் திரும்பவும்
“டேய் சூரியா நிறுத்துடா. கீதா வீடு வந்துடுச்சி. ” என்று சொல்ல, பைக்கை நிறுத்தியதும்  கீதாவின் வீட்டுற்கு முன் நின்று சுற்றிலும் பார்த்து விட்டு.” மச்சான் நம்ம இப்ப எப்படிடா உள்ள போறது.” என்று கேட்டவனை,

“என்னது நம்மளா? டேய் ராஜா நீ உன் ஆள பார்க்க போறா. நான் எதுக்கு டா.” என்றான் பயந்துப்படி,

ராஜாவோ குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு “நான் மட்டும் தனிய போய் என்னடா பண்றது. எனக்கு பயமா இருக்கும்டா. “என்றான்.

ராஜாவின் முகபாவனையை பார்க்க சகிக்காமல் “அடேய் அறிவு இல்லமா பேசதாடா. இவரு சின்ன பையன், பயப்புற மூஞ்ச பாரு. நீங்க ஏதாவது பர்ஸ்னலா பேசுவீங்க நடுவுலா நான் எதுக்கு.”என கேட்டவன் ” சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.” என்றான் திரைபட வசனமாக.

அவனோ ” இந்த டைம்லா என்ன உண்மைடா தெரியுனும் உனக்கு ” என்க,

சூரியாவோ மிகமுக்கியமான கேள்வி ஒன்றை கேட்டான் “ஆமா  உனக்கு எப்படி கீதா வீடு தெரியும்.” 
என ராஜாவின் முகத்தை பார்த்து கேட்க.

அவனே “ஈஈஈஈஈ” என்று அசடுவழிந்துக் கொண்டு இருந்தான்.

தன் நண்பனை வினோத ஜந்துவாக பார்த்த சூரியா “ம்ம்ம் இப்ப புரியுது இந்த லவ் பண்றவங்களாம் எதுக்கு அவங்க லவ்வர் பின்னாடியே சுத்துறங்கனு. எங்கள கழிட்டிவிட்டு, நீ இந்த வேலையும் பார்த்து இருக்கல. இந்த பூனையும் பால் குடிக்குமா. சொல்லுவாங்கள அந்த மாதிரி இருக்குடா உன்னை பார்த்தா” என அவன் பேசி முடிக்கும் வரையும்  பல்லை காட்டிக்கொண்டே இருந்தவனை பார்த்து “ஏய் சீ பல்ல முடுடா. பார்க்க சகிக்கல” என திட்டிவயவன் வந்த வேலை என்ன என்பது நினைவு வர ராஜாவிடம் 
“சரிடா உள்ள போ. ” என்று துரிதப்படுத்தினான்

ராஜாவோ சற்று அதிர்ந்து “டேய் மச்சி என்னவே மாமனார் வீட்டு, கதவை திறந்து வச்சிக்கிட்டு உள்ள வா மருமகனே என அவர் சொல்லிட்டு போன மாதிரி சொல்றா. நம்மளே திருட்டுத்தனமா வந்து இருக்கும். அதனால வாசல் வழியா இல்லடா. ” என வாசலை பார்த்தபடி கூற,

சூரியாவோ “பின்ன… வேற எப்படி போவ ராஜா. “என குழப்பமாக கேட்டான்.

ராஜாவோ திமிருடன் “பாலோ மீடா”. என்று சொல்லிட்டு பக்கத்தில் தெரிந்த சந்து வழியாக சென்று, மின்கம்பத்தை பிடித்து ஏற செய்தான்.

பாதி தூரம் சென்றவன் சிறிது குரலில் நடுக்கத்துடன் “மச்சி கம்ப கேட்டிமா புடிச்சிக்கேடா விழுந்துட போறேன். “என்றான் நெக்கல் தோரனையில்.

அதை கேட்ட சூரியாவோ “டேய் உனக்கே இது ஓவரா தெரில. வாயமுடிக்கிட்டு போடா. நானே பயந்து நடுங்கிட்டு இருக்கேன்.” என்று சுற்றுமுற்றும் பார்த்தப்படி கூற,

ராஜாவோ “ஏன்டா யாராவது வந்துற போறங்கானு பயமா இருக்கா?” என்றான்.

அவனோ அதிதீவிரமான யோசனையுடன் “அதெல்லாம் ஒன்னு பயம் இல்லடா. உனக்கு ஷாக் அடிச்சா, என்ன பண்றதுனு பயமா இருக்குடா. ” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

ராஜாவோ புரியாமல் “ஏன்டா எனக்கு ஏன் ஷாக் அடிக்க போகுது.”என கேட்டவனிடம்,

முகத்தை சுருக்கிக் கொண்டு “மச்சி இது கரண்டுகம்பம்டா ” என்று அடிகுரலில் சற்று சத்தமாகவே சொல்ல.

ராஜாவோ பீதியுடன் “அடபாவி, இது கரண்ட்டுகம்பமா ஏன்டா ஏறும் போது சொல்லால. ” என்று நண்பனை ஏகத்துக்கும் முறைத்தான்.

சூரியாவோ பல்லை காட்டிக் கொண்டு “அதுவா மச்சி நீ வேற, ஆர்வமா ஏறுனியா அதான் சொல்லால மச்சி.” என்று சொல்லியன் சட்டென சீரியஸான முகபாவனையில் ” மச்சி விளையாட்டு போதும் சீக்கிரமா மேல ஏறி. கீதாகிட்ட முடிவா கேட்டுட்டு வாடா டைம் ஆகுது. “என்றான்.

தன் நண்பன் சொன்னா உடன் மேலே ஏறி பால்கனி வழியாக அவள் வைத்து இருக்கும் ரோஜா செடிகளை தொந்தரவு செய்யாமல் அறைக்குள் சென்றான் ராஜா.

ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் அதுவும் திருட்டுதனமாக பால்கனி வழியாக அவள் அறைக்குள் நுழைவதை நினைத்து மனதிற்குள் சிறு உறுத்தல் இருந்தாலும், தனக்கு கிடைக்க வேண்டிய பதில், கிடைத்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு வந்தவன், மங்கிய வெளிச்சத்தில் உறங்கிக் கொண்டு இருந்தவளை பார்த்ததும் ஓர் நொடி மெய்மறந்து தான் போனான் இன்பராஜா.

கீதாவே நன்றகா தூங்கிக்கொண்டு இருந்தால் அவள் தூங்குவதை பார்த்தவன் சற்று கோபத்துடன்,

“நான் இங்க தூங்கம இருக்கேன். என்னை அழ வச்சிட்டு நீ நல்ல தூங்குறீயாடீ. தூங்கும் போது கூட எவ்வளவு அழகா இருக்கா! என் பட்டுகுட்டிமா. ஏன்டீ என்னையா தவிக்கவிடுற” என்று கீதாவின் தலை முடியை மெல்ல வருடிவிட்டான்.

அவன் தொடுக்கையை உணர்ந்து சட்டென்று எழுந்தவள் இருட்டில் முகம் சரியாக தெரியாமல் 
அம்மா என கத்த வாயை திறந்தவளை தன் கையால் வாயை பொத்தி “உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் நான் தான்டீ. கத்ததா சரியா. ” என கேட்க, அவளோ மலங்மலங்கென விழித்துக் கொண்டு இருக்க.

“பதில் சொல்லுடீ…..” என்றவன் அப்போது தான், தன் கை கீதாவின் வாயில் அமுக்கி கொண்டுஇருப்பதை பார்த்து அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தான்.

கீதாவின் கண்களோ வெகு நேரம் அழுது ஓய்ந்து இருக்கிறாள் என்பதை உணர்த்தியது அவனுக்கு. மெல்ல தன் கையை எடுத்துக் கொண்டு “சாரி ” என. சொன்னான்.

அவன் கரம் எடுத்ததும் “அறிவு இருக்கா. ” என்று கோபத்துடன் கேட்க, அவனோ

‘யார சொல்ற இவ ‘என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு ” என்னைய தான் சொல்றா போல” என நினைத்தான்.

அவனின் முக மறுதலை புரிந்தவள் “யார தோடுற நான் உன்னை தான் சொன்னேன். அறிவு இருக்கா?…வாய பொத்திட்டு பேசு பேசுனா எப்படி பேச முடியும். இந்த டைம்லா என் ரூம்ல என்ன பண்ற. யாராவது பார்த்த தப்ப நினைக்க மாட்டாங்களா? என்று பொரிந்து தள்ளினாள்.

அவனோ அவள் முன் நின்று இரு கைகளையும் இடுப்பில் மடக்கி வைத்துக் கொண்டு அவள் பேசிய விதத்தை ரசித்துக்கொண்டு இருந்தவனை சொடுக்கு போட்டு சுயநினைவுக்கு கொண்டுவந்தாள்.

“என்ன அப்படியே சிலை மாதிரி நிக்கிற. எதுக்கு என் ரூமுக்கு வந்த. அதுவும் இந்த டைம்லா? “என கேட்டதும் தான், எதற்காக வந்தோம் என்ற நினைப்பு வந்தவனுக்கு,

‘ நான் எதுக்கு வந்தேன் என்ற விசியத்தையே மறந்து இவளை ரசிச்சிட்டு இருக்கேன். சீசீசீ மானம்க்கெட்ட மனசே ‘என மனசை திட்டிவிட்டு நேர விசியத்துக்கு வந்தான் இன்பராஜா.

“என்னை வைட்பண்ண சொல்லிட்டு… நீ ஏன் வரல? அதான்  எனக்கு இப்பவே முடிவு தெரிஞ்சிக்கனும்னு கேட்க வந்தேன் ” என்று சாதாரணமாக சொல்லியவனை அதிர்ந்து பார்த்தவள்,

“அடபாவி இத கேட்கவா இந்த டைம்ல இங்க வந்த.?” என்று விழிவிரித்து கேட்டாள்.

அவனும் ஆம் என்பது போல் தோரனை செய்ய,  தன்னவனை இங்க எதிர் பார்க்கதவள் மனமோ அவனை அணைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்த மனதை அடக்கி வைத்து ‘முதலில் இவனை இங்கு இருந்து அனுப்பனும். வீட்ல யாராவது பார்த்தா என்ன ஆகுறது’ என்று யோசித்தவள். அவனிடம் “நீ முத இங்க இருந்து கிளம்பு. எதுவா இருந்தாலும் நாளைக்கு காலேஜில பார்க்காலம். போ…. ” என அவனை விரட்ட,

அவனே பிடிவாதமாக மறுத்து “நீ பதில் சொன்னா தான் நான் இங்க இருந்து போவேன். இல்லனா நானே உங்க அப்பாகிட்ட முடிவ கேட்டுக்கிறேன். “என்று சொல்லி விட்டு கதவை திறக்க போனவனுக்கு முன்னால் போய் நின்று அவனை இறுக்கி அணைத்து அழத்தொடங்கி விட்டாள்..

இதை எதிர்பார்க்காதவனே அதிர்ந்து தடுமாற்றம் அடைந்தான். 

பின் அவளின் அணைப்பை இழக்க விரும்பாதவன் தன்னவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு. அவள் அழுகை நிறுத்தும் வரை அமைதியாக இருந்தவன் “இப்ப எதுக்குடீ அழுகிற.” என்ற குரலில் சுயநினைவுக்கு வந்தவள்.

ஒரு ஆடவனின் முதல் அணைப்பு, அதுவும் தன்னவனோடு என்று அவள் நினைக்கும் போதே வெட்கம் அவள் முகத்தில் அப்பட்டாமாக தோன்ற, அதை அவன் முன்காட்ட கூடாதென்று அவனை தள்ளிவிட்டு,

“சாரி ஏதே நினைப்புல” என அவள் தடுமாற்றத்தை ரசித்தவன். அவள் முகம் சிவந்து வெட்கபட்ட அழகை கண்டுக் கொண்டவனும் தடுமாற்ற தான் செய்தான்.

அவனுக்கும் இது முதல் அணைப்பு தானே. தன் காதலை சொல்லாமல் சொன்னவளை. மீண்டும் தன் பக்கம் இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு பதில் கேட்டான்.

“ஏன்டீ. என்னை தவிக்கவிட்டு வந்த?” அவனது அணைப்பில் விடுபட முடியாமல் தவித்துத்தாள் பாவையவள். அவனோ விடாமல் ” நீ பதில் சொல்லாம உன்னை விட மாட்டேன்டீ.” என்று அவள் காதருகில் கூற, அதில் நெளிந்தவள் வேற வழி இன்றி சொல்லா ஆரம்பித்தாள்.

“நேத்து நீ என் கிட்ட லவ்வ சொன்னத எங்க வீட்ல வந்து சொன்னேன்.” என்று ஆரம்பித்தவள் நடந்தத்தை கூறினாள்.

” அப்பா எங்க இருக்கீங்க அம்மா நீங்களும் இங்க வாங்க.” என்று கத்திக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் கீதா.

“இரண்டு பேரும் இங்க தான் இருக்கோம். முதல நீ இங்க வாடீ.” டி.வின் முன் அமர்ந்த… பார்வதி அழைக்க. அவர்கள் அருகில் வந்தவளை பார்த்து ” ஏன் டீ. வீட்டுக்கு வரும்போதே இப்படி கத்திட்டு வர? ” என கேட்டவள் தன் மகளின் முகத்தில் தெரியும் அளவில்ல சந்தோஷத்தையும் பெற்றோர் இருவரும் பார்க்க தவறவில்லை.

கீதாவோ எந்த ஒளிவுமறைவு இல்லாமல் தன் பெற்றோரிடம் “அப்பா, அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விசியம் சொல்லனும்.” என ஆரம்பித்து இன்பராஜா காதலை தன்னிடம் கூறியதையும். அதற்கு என் பெற்றோர் சம்மதம் தான் முக்கியம்என்று சொன்னத்தையும்  சொல்லி முடித்தாள் கீதா.

தன் ஆசை மகள் வந்ததிலிருந்து கவனித்த அன்பரசன், கீதாவின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, அவன் மேல் அவளுக்கும் காதல் இருந்தும். தன் அப்பா, அம்மா சம்மதம் தான் முக்கியம் சொல்லிட்டு வந்த தன் மகளை பெருமையுடன் பார்த்தார்.

ஆனாலும் மனதிக்குள் ஏதோ ஒன்று நெருடலாகவே இருக்க. ‘என் முடிவில் கீதாவின் சந்தோஷத்தை இழந்து விடகூடாது. ‘என முடிவு செய்தவர் தன் மனைவி பார்வதியை பார்த்தார். பார்வதியும் குழப்பத்தில் இருப்பதை அறிந்து அமைதியாக யோசனை சொய்தார்.

தன்… பெற்றோர் மௌனம் கீதாவை பயம் கொள்ள வைத்தது. தன் முதல் காதல் எங்கே தனக்கு 
கிடைத்துவிடாமல் போய்விடும் என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு.

சிறுது நேரம் மௌனத்துக்கு பிறகு… அன்பரசன் பேச்ச ஆரம்பித்தார்.

அவர் கேட்ட முதல் கேள்வியே “அவன் பெயர் என்னமா. ” என்று தான்.

தன் தந்தை கேட்தும் தான் அவளுக்கே ஞாபகம் வந்தது இதுவரை அவன் பெயர்?. அவன் யார்?அவனது பெற்றோர்?என எதுவும் தெரியாமல் பெற்றோரிடம் தன் காதலை பற்றி பேச வந்ததை நினைத்து வேதனைபட்டாள்.

தன் மகளின் மௌனத்தை பார்த்தவர். “என்னமா என்ன யோசனை? அப்பா உன் காதலுக்கு எதிரியா இருப்பேன் பயமா? என் உயிர கூட கொடுப்பேன். ஆனா உன் சந்தோஷத்துக்கு குறுக்க நிற்க்கமாட்டேன்மா. ” என்று பரிவாக பேசிய தந்தையை பார்த்தவள்,

“அய்யோ, அப்பா ஏன் இப்படி பேசுறீங்க. நீங்களும் சரி அம்மாவும் சரி என் சந்தோஷம் தான் உங்க சந்தோஷம்னு வாழுறீங்க. இது கூட எனக்கு தெரியாதா?” என்றாள் ஆதங்கத்தோடு.

அன்பரசனோ “அப்புறம் என்ன மா.. உனக்கு யோசனை. ” என்க.

கீதாவோ தயக்கத்துடன் “அது… வந்துப்பா…. அவன் பெயர் என்னனு தெரியாதுப்பா. ” என சொல்லியவள் சற்றென்று “ஆனா அவன் குணத்தை பத்தி நல்லா தெரியும். ரொம்ப நல்லவன். எந்த அடிதடிக்கும் அவன் போய் நான் பார்த்துதே இல்லப்பா. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கமா இருக்க மாட்டான்ப்பா. நீங்க தானாப்பா. சொல்லி இருக்கிங்க. அந்தஸ்து பணம் எப்பவும் முக்கியம் இல்ல. ஒருத்தன் நல்ல குணத்தோடு வாழனும் சொல்லிக்கொடுத்திங்க.” என்று தன் தந்தைய சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள் கீதா. 

தன் மகள் அவனுக்காக பரிந்துரை செய்வதை பார்த்து மனதிற்குள் சிரித்துக்கொண்டடு மறுபடியும் யோசனையில் முழ்கினார் அன்பசரன்.. அவனை பத்தி எதுவும் தெரியாமல் எப்படி பதில் கூறுவது. என யோசனை செய்துக்கொண்டு இருக்க. அதுவரை அமைதியோடு இருந்த பார்வதி,

“ஏன்..டீ அவன் பெயர் கூட தெரியாமல் தான் காதலிப்பியா?.  காலேஜில சேர்ந்தே ஒன்மன்த் தானே ஆகுது. அதுக்குள்ள லவ்வா?” என பார்வதி தன் மகளை கண்டிப்புடன் கிண்டால் செய்ய,

“ஏம்மா… நீயும் அப்பாவும் தான் காலேஜில ஜாயின் பண்ணதுல இருந்தே காதலிச்சிங்கனு சொன்ன.?” என கீதாவும் தன் தாயை கிண்டல் செய்தாள்.

அதை கேட்ட பார்வதியோ “அடி விழ போகுதுடி உனக்கு.” என பெய்யாக தன் மகளை மிரட்டினாள்.

யோசனையில் இருந்த அன்பரசன் நிமிர்ந்து “கீதாமா உன் காதலுக்கு நாங்க தடையா இருக்க மாட்டோம். ஆனா காதலால நீ படிப்பை கோட்டை விடகூடாது. பொண்ணுங்களுக்கு படிப்பு தான் ரொம்ப முக்கியம். புரியுதா? அப்புறம் நாளைக்கு உன் ஆளுடா நேம் கேட்டுட்டு வா. “என தன் மகளை கிண்டல் செய்தார் அன்பரசன். “என்ன பார்வதி நான் சொல்றது சரிதானா? “என தன் மனைவியிடமும் பதில் கேட்க,

பார்வதியோ “நீங்க சொன்னா அது சரியா தான் இருக்கும்.”என  தன் கணவனை காதலுடன் நோக்கினாள் பார்வதி.

இருவரையும் கட்டிபிடித்து முத்த மழை பொய்து. “தாங்க்ஸ் பா தாங்க்யூ மா.” என சந்தோஷ்த்தோடு கூறினாள்.

நடந்தத்தை கேட்ட ராஜாவோ

“ஏன்டீ , அதான் அத்தையும் மாமனாரும் ஓகே சொல்லிட்டாங்கள? அப்புறம் ஏன்டீ. என்னை தவிக்க வச்சிட்ட.? என போலி கோபத்துடன் கேட்க. கீதாவோ,

“என்னது! அத்தை மாமனாரா? ” என்றாள்.

அவனோ கூலாக ” ம்ம்ம்ம் அத ஓகே சொல்லிட்டாங்கள, அப்புறம் என்ன” என்க.

அவளோ “ஏய் ஹாலே  நான் இன்னும் ஓகே சொல்லலையே” என்று அவனை வெறுப்பேற்றினாள். 

ராஜாவோ சற்றே ஏமாற்றத்துடன்  “கீதா உனக்கே ஓவர இல்ல. அவங்களே ஒகே சொன்னதுக்கு அப்புறம் உனக்கு என்னடி பிரச்சனை? நீ ஏன்டீ என் கிட்ட லவ்வா வெளிப்படத்துல? என்று முறையிட்டவனிடத்தில் 

” அது….. வந்து…… இந்து யாரு? ” என்று கேட்டாள் கீதா.

இனி அடுத்த அத்தியாயத்தில். 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page