காதல்-5
தன் தங்கையின் மகளுக்காக வாசலிலே காத்திருந்தார் ரவி.
“நேரம் ஆச்சு இன்னும் கீதாவை காணோம்” என்று கவலையோடு இருந்தார் ரவி.
“அவ வருவா நீங்க உள்ள வாங்க முதல்ல ” என்று விஜயா அழைக்க,
தன் மனைவியை முறைத்துவிட்டு காத்திருந்தார் ரவி. அவருடைய காத்திருப்பு நீடிக்காமல் வந்து சேர்ந்தால் கீதா.
” என்ன மாமா வெளியவே நிக்கிறீங்க” என்று கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தால் கீதா.
“உனக்காக தானே காத்திருக்கேன், ஏம்மா இவ்வளவு லேட்.”
“இல்ல மாமா இன்னைக்கு முதல் நாளுல. அதான் மாமா மீட்டிங் வச்சாங்க. அதனால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.”
“சரிம்மா நீ ரூமுக்கு போ “என்று கூறினார்.
“கீதா நில்லுடி” என்று விஜயம் குரல் கொடுக்க, அவளும் நின்றாள்.
“உனக்கு எவ்வளவு சம்பளம்.” என்க.
கீதா தன் மாமாவைப் பார்த்துவிட்டு “இருபதாயிரம் தான் அத்தை” என்று கூரியவள் மீண்டும் தன் மாமாவை பார்த்தாள்,
அவரோ கண்ணசைவில் எதுவும் கூற வேண்டாம் என சைகை செய்ய. கீதாவோ தன் மாமா மதியம் பேசியதை நினைவில் வந்து சென்றது.
மதிய வேளையில் கீதாவிற்கு போன் செய்தவர்” வேலை கன்ஃபார்ம் ஆயிடுச்சு கீதா” என கேட்டு தெரிந்து கொண்டார்.
அவளும் “ஆயிடுச்சு மாமா” என சொல்ல,
“சாப்பிட்டியாம்மா பட்டினி கிடக்காதம்மா” என்று அறிவுரை வழங்கியவர் சற்று தயங்கிக்கொண்டே “அம்மாடி எவ்வளவு சம்பளம் சொல்லி இருக்காங்க” எனக் கேட்டார்.
“முப்பதாயிரம் மாமா” என்று உண்மையை கூறினாள்.
“கீதாம்மா உன் அத்தை கிட்ட இவ்வளவு சம்பளம் சொல்லிடாதடா. அவ எவ்வளவு சம்பளம் கேட்ட இருபதாயிரம் மட்டும் சொல்லு மீதி 10 ஆயிரமும் உனக்குன்னு தனியா எடுத்து வச்சுக்கோ.” என்று அவளுக்கு எடுத்துக் கூறினார்.
கீதாவும் தன் மாமா கூறியபடியே அத்தையிடமும் கூறினாள்.
எதையோ நினைத்துக் கொண்டு நின்ற கீதாவை உசுப்பி “சரி மா நீ போய் சாப்பிட்டு படு கீதா” என்று ரவி கூற,
“என்னது! சாப்பிட்டு படுக்கணும்மா? அப்ப வீட்டு வேலையெல்லாம் யார் செய்வா” என்று முறைத்தாள் விஜயம்.
” பாவம்டி அந்த பொண்ணு. ரொம்ப சோர்ந்து போய் வந்து இருக்காடி.” தன் தங்கை மகளுக்காக பரிந்துரைத்து பேச, தன் கணவனை முறைத்துக்கொண்டு நின்றால் விஜயம்.
கீதாவோ ” இல்ல மாமா நான் பார்த்துக்குறேன், நீங்க சாப்பிட்ட மாத்திரை போட்டிங்களா?”
“அதெல்லாம் அவர் மாத்திரை போட்டாச்சு. நீ போய் வேலையை பாரு. அப்புறம் நீ வர லேட் ஆச்சுனு இப்ப தான் சாப்பாடுல தண்ணி ஊத்தின. வேலைய முடிச்சுட்டு சாப்பிட்டு போய் படு.” என்று தன் மனைவி சொன்னாதை கேட்ட ரவி அதிச்சியுடன்,
“ஏண்டி இப்பதானே அரைமணி நேரத்துக்கு முன்னாடி உன் பையனுக்கு மீன் குழம்பு சாப்பாடு போட்ட! அதுக்குள்ள தண்ணி ஊத்திடியா? “என்று கோபப்பட்டார் ரவி.
“ஆமா குழம்பு காலி ஆயிடுச்சு அதான் தண்ணி ஊத்துன. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இவ வந்து இருந்தா அந்த தண்ணி ஊத்தின சாப்பாட கூட இவளுக்கு கிடைச்சி இருக்காது. தெருவுல இருக்க நாய்க்கு போட்டு இருப்பேன் ” என்று மனசாட்சியே இல்லாமல் பேசினால் விஜயா.
“ஏய் விஜயா” என்று தன் பல்லை கடித்துக் கொண்டு அழைத்தார் ரவி.
அவளோ அலட்டிக்கொள்ளாமல்” சும்மா கத்தாதீங்க போய் படுங்க, ஏய் நீ போய் வேலைய பாரு.” என அதட்டினாள்.
ரவிக்கோ தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலைமையை உணர்ந்தவர் வேதனைப்பட்டார்.
அவரின் வேதனையை பார்த்த கீதா “மாமா நீங்க போய் படுத்து தூங்குங்க நான் வேலைய முடிச்சிட்டு போய் படுத்து தூங்குறேன். “என சொல்லி தன் மாமாவை அறைக்கு அனுப்பி வைத்தவள் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
ஒரு நாயை விட துச்சமாக தன்னை நினைத்ததை எண்ணி நொந்து போனாள் கீதா. பின் சமையல் கட்டிலிருக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்து விட்டு அடுப்பு தட்டுகளை சுத்தம் செய்துவிட்டு காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது அவளுக்கு.
பின் தன் அத்தை தனக்காக எடுத்து வைத்த தண்ணீர் ஊற்றிய சாப்பாடை உப்பு போட்டு மடமடவென்று சாப்பிட ஆரம்பித்தாள் கண்ணீரோடு.
சாப்பிட்டு முடித்து விட்டு அதையும் சுத்தம் செய்து வைத்து முகம் கைகளை அலம்பிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
கீதா எப்பொழுது அவள் அறைக்குச் செல்வாள் என்று கழுகு போல் பார்த்துக்கொண்டு காத்திருந்த இரண்டு கண்கள்,
அவள் அறைக் கதவை சாத்தும்போது தன் கைகளால் கதவை தள்ளி கொண்டு உள்ளே வந்தான் தினேஷ்.
அறைக்குள் நுழைந்தவன், கீதாவின் கைகளை அழுத்தி பிடித்து முதுகுக்குப் பின்னால் வைத்து “ஏண்டி ஏன் போனை எடுக்கல” என்று ஆத்திரத்தோடு கேட்டான்.
கீதாவோ உடல் நடுக்கத்துடன் “அத்தான் போன் சைலன்ட்ல இருந்தது ப்ளீஸ் கையை விடுங்க அத்தான் வலிக்குது” என்று கெஞ்சினாள்.
“வலிக்கட்டும் டி, எத்தனை தடவை சொல்லிருக்கேன் நான் போன் பண்ணும் போது நீ போன் எடுத்தே ஆகணும் சொல்லி இருக்கேன்ல, அதுக்கு தண்டனை கொடுக்க வேண்டாம் “என சொல்லி மீண்டும் கைகளை இறுக்கி அவள் கண்ணங்களில் இவன் கைரேகையை பதித்தான்.
அடி தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தால் கீதா.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து அழுது கொண்டிருந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை. தினேஷ் எப்பொழுது சென்றான் கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தாள்.
“தான் எதற்காக அழுகிறோம்? இவன் அடித்ததற்காகவா? இல்லை இன்பா தம்மை யாரோ ஒருவர் போல் நடத்தியதற்காக வா”
தினேஷ் அடித்த வலியை விட, தன்னவன் தன்னை மறந்த வலி தான் அதிக வலியைத் தந்தது அவளுக்கு.
தன் நிலையை உணர்ந்தவள் மெதுவாக எழுந்து கதவின் அருகில் சென்று கதவை அடைத்து விட்டு, அவள் அறை ஒட்டியபடி இருக்கும் பால்கனிக்கு சென்றாள்.
அங்கே அவள் வைத்த ரோஜா செடிக்கு நடுவில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து ” ஏம்பா இப்படி என்னை தனியா தவிக்க விட்டு போயிட்டாங்க. யாருக்காக இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு இருந்தேனோ அவனே என்னை யார் என தெரியவில்லை என்று சொல்லிவிட்டான்” என்று அழுது கொண்டிருந்தாள்.
அங்கே,
தன் மகனுக்காக காத்திருந்தாள் வசந்தா. கார் சத்தம் கேட்டு வெளியே வந்தவர் “என்னப்பா இவ்வளவு லேட்” என்று வாஞ்சையோடு கேட்டாள்.
“அதான் காலைல மீட்டிங் இருக்குன்னு சொன்னேன்ல அம்மா. நான் சாப்பிட்டு வந்துட்டேன் ம்மா. நீங்க சாப்பிட்டீங்களா?” என்று வீட்டிற்குள் நுழைந்து கொண்டே பேசினான் இன்பராஜா.
” நானும் சாப்பிட்டேன் பா”
“சரிமா நான் ரூமுக்கு போறேன்” என்று கூறிவிட்டு மாடிப்படியில் ஏறி போனவனிடம்,
“ராஜா ஒரு நிமிஷம் பா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும் “என்று தன் மகனை தடுத்து நிறுத்தினால் வசந்தா.
தாய் அழைத்ததும் அப்படியே நின்றவன் “ம்ம் சொல்லுங்கம்மா” என்று கேட்டான்.
தன் மகனிடம் பேச வேண்டும் என்று கூறி விட்டாரே தவிர விஷயத்தை எப்படி சொல்ல வேண்டும் என்று தயங்கிக் கொண்டு இருந்தவரை யோசனையோடு பார்த்து,
“என்னமா ஏதாவது பிரச்சனையா? “என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா” என்று அவசரமாக மறுத்தவரை கேள்வியோடு பார்த்து,
“அப்போ எதுக்கு இப்படி நீங்க திணறிக்கிட்டு இருக்கீங்க? என்றான்.
தன் மகன் கண்டுபிடித்து விட்டானே என நினைத்தவர் அவன் கோபத்தை அறிந்திருந்தும் வேறு வழியின்றி சொல்லத் துணிந்தார் வசந்தா.
“அது வந்து பா, இன்னிக்கு நானும் உங்க அப்பாவும் உன்னோட மாமா வீட்டுக்கு போயிட்டு வந்தோம்” என ஆரம்பித்து அங்கு நடந்ததை சொல்லி முடித்து தன் மகனை பார்த்தவர் அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான், என்று வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு எச்சிலை முழுங்கிக் கொண்டு நின்றாள் வசந்தா.
தன் அன்னை சொன்னதைக் கேட்டவுடன் கோபத்தின் உச்சிக்கே போனான் இன்பராஜா.
அதே கோபத்தோடு “யாரைக்கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க” என கத்தினான் அந்த வீடும் அதிரும்படி.
ராஜா கத்திய சத்தத்தில் தனது அறையில் இருந்து வெளியே வந்த சுந்தரம் அங்கிருந்து வேலையாட்கள் அனைவரும் வெளியே போகச் சொன்னார்.
“நாங்க யாரை கேட்டு முடிவு பண்ணனும்” என்று வசந்தாவும் விடாப்பிடியாக பேச,
ராஜாவும் தன் பொறுமையை இழுத்துப் பிடித்து கொண்டு “என் கிட்ட கேக்கணும், இங்க பாருங்கம்மா நான் கீதாவை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். என் வாழ்க்கையிலும் சரி என் மனசிலும் சரி கீதாவுக்கு மட்டும்தான் இடம் இருக்கு. இதெல்லாம் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்த விஷயம் தான், திரும்பத் திரும்ப நீங்க இதே மாதிரி பண்ணிட்டு இருக்காதிங்க அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.” என்று எச்சரிக்கும் தோரனையில் அவன் வார்த்தைகள் இருக்க.
வசந்தாவோ “அவதான் நீ வேண்டாம் தூக்கிப்போட்டு போயிட்டுல” எனத் தன் பிள்ளைக்கு எடுத்துக்கூற முயன்றால்.
ஆனால் ராஜாவோ “அவதான் என்னை வேணாம் சொல்லிட்டு போனாலே தவிர, நான் அவளை வேணாம்னு சொல்லவே இல்லையே?” என்றான் விடாப்பிடியாக,
இதைக்கேட்டு கோபத்தின் உச்சிக்குச் சென்ற வசந்தா வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்,
“ஏண்டா எவ்வளவு ஒரு கேடுகெட்டவளுக்காக எங்களை தூக்கி எறிந்து பேசுறியா?” என வசந்தா கூறி முடிக்கும் முன்,
“அம்ம்ம்மா….. “என்று சிங்கம் போல் கர்ஜித்தான் ராஜா. இருந்தும் தன் தலைகோதி கோபத்தை இழுத்துபிடித்து ” இங்க பாருங்கம்மா கீதாவை பத்தி ஏதாவது தப்பா பேசானீங்க, அப்புறம் நான் இவ்வளவு அமைதியா பேசிக்கிட்டு இருக்க மாட்டேன் “என்று தன் தாயையே எடுத்தெறிந்து பேசினான்.
சுந்தரமும் தன் மனைவியை ராஜா எடுத்தெறிந்து பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல்,
“ஏண்டா உன்னை விட்டு போன யாரோ ஒருத்திக்காக உங்க அம்மாவை எடுத்தெறிந்து பேசுவியா?” என்று கோபப்பட்டார்.
“அவள் ஒன்றும் யாரோ ஒருத்தி இல்லை. அவ என்னோட” என சொல்லி முடிக்கும் முன்,
” ராஜா” என அதட்டினார் அவனின் தந்தை. “உள்ள போடா “என கூறியவர்” நீயும் உள்ள வா வசந்தா” என தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
வசந்தாவோ ” என்னங்க இவன் எப்படி பேசிக்கிட்டு இருக்கான்” என்று புலம்ப,
” நீ முதல்ல உள்ள வா அப்புறமா பேசிக்கலாம்” என்று கூறினார்.
அறைக்குள் நுழைந்ததும் “நான் தான் அப்பவே சொன்னேன்ல வசந்தா. அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு முடிவு பண்ணிக்கலாம்னு நீதான் என் பேச்சைக் கேட்கல” என்று கடிந்தார் சுந்தார்.
“என் மகன் நான் சொன்ன கேட்பான் நினைச்சன்ங்க. ஆனால் அது தப்புனு இப்ப புரியதுங்க.
“நீ ரொம்ப அவசரப்படுறீயோனு தோணுது வசந்தா” என்ற தன் மனைவியை சமாதானப்படுத்த முயன்றார்.
வசந்தா புரியாமல் தன் கணவனை பார்க்க அவரோ “ஒன்னும் இல்லம்மா நீ போய் படுத்து தூங்கு. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறினார்.
ராஜாவோ தன் அறைக்கு வந்தவன் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் தூக்கி போட்டு உடைத்தான்.
கீதாவின் மேல் இருக்கும் கோபத்தை தன் அம்மாவிடம் காட்டியதில், அவனுக்கு அவன் மீதே கோபம் கோபமாக வந்தது. அப்படியே கட்டிலில் அமர்ந்து அவன் காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
†**********†***********†*********†
இன்பராஜா தனக்கு வேலை கொடுப்பான் என எதிர்பார்க்காதவள் அவனிடம் ,
“ம்ம்ம்ம். நீங்க போலாம்.”
“உண்மையாவே என்ன உங்களுக்கு தெரியலையா?” என்று ஒரு வித எதிர்பார்புடன் கேட்டவளை, ஓர் நிமிடம் நிமிர்ந்து பார்த்து எந்த சலனமும் இன்றி,
“தெரியாது, நீங்க போலாம் மிஸ். போய் வேலையை பாருங்க” என்றான்.
அவன் அவ்வாறு கூறுவான் என்று தெரிந்தாலும், சுருக்கென்று வலித்தது அவளுக்கு. பின் “ஓகே சார், சாரி சார் அண்ட் வேலை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சார்.” என அந்த சாரில் அழுத்தத்தை கொடுத்து சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே சென்றாள்.
இறுகிய முகத்தோடு கீதா போனவுடன் ரிசப்ஷனுக்கு போன் பண்ணி பிரியாவை தன் கேபினுக்கு வரசொன்னான் ராஜா..
“மே ஐ கமின் சார்.”
“கமின்.. மிஸ் பிரியா அருண் அண்ட் மிஸ்.”……. என்று பெயர் தெரியாதது போல் நிறுத்தினான்.
“கீதா, சார்..”என்று பிரியா கூற,
“ம்ம்ம்ம்…அவங்க ரெண்டு பேருக்கும் அங்க கேபின் காட்டுங்க. அப்புறம் லன்ச் டைம்ல ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்க. மத்த ஸ்டாப்க்கு இவங்க ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தினும்.”
பிரியாவும் ராஜா சொன்னதை கேட்டுக் கொண்டு அங்கே நின்றிருந்தாள். ராஜாவோ என்னவென்று பார்க்க,
“என்ன இன்னும் இங்கேயே நிக்கீறீங்க.”
“அது இரண்டு பேருக்கும் ஒரே கேபினா சார்” என்று கேட்டாள்.
“ஆமா இரண்டு பேருமே எனக்கு பிஏ வா வேலை செய்ய வந்தவங்க தானே? சோ என் கண்ணு முன்னாடி இருக்கறதுதான் நல்லது அப்புறம் அவங்க ஒர்க் பத்தி சொல்லிடுங்க.”
“ஓகே. சார்” என்று பிரியா சென்றதும் தன் வேலையை மறந்து தன்னவளை கவனிக்கத் தொடங்கினான் இன்பராஜா.
“உன்னை எப்படி மறக்க முடியும் கீதா. நீ எனக்கு பண்ணும் துரோகம் என்ன இந்த அளவுக்கு மாத்தி இருக்கு. என் உலகமே நீ மட்டும் தான் டி. ஆனா நீ அந்த உலகத்தை சிதைத்து விட்டாய். “என்று மனதிற்குள் கீதாவின் மீது வெறுப்பை வளர்க்க முயன்றான்.
பின் சிசிடிவி கேமராவில் கீதாவை நோட்டமிட்டவன் ” மதியம் லஞ்ச் டைமே முடிய போகுது, இவ இன்னும் சாப்பிடாம இருக்கா? என்று அவளுக்காக வருத்தப்பட்டவன் ஒரு நொடியில் தன்னை கடிந்துக் கொண்டு “இவ சாப்பிட்டா என்ன சாப்பிடலைன்னா நமக்கென” என்று நினைத்தான்.
பின் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்ததும் அவனையும் அறியாமல் அவன் கண்கள் கீதாவை தேடியது.
பின் அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தான். கீதாவையும் அருணையும் அனைவருக்கும் அறிமுகம் படித்துவிட்டு ஒரு அரை மணி நேரம் பேசி முடித்து விட்டு கிளம்பிவிட்டான்.
†******†******†************†***”*†
நடந்ததை நினைத்து பார்த்தவன் தன்னவளின் நினைவிலேயே உறங்கியும் விட்டோன். தன் காதலில் இன்னொருவன் நுழைந்ததை அறியாமல்.
அங்கே அருணும் கீதாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.
“ப்ப்ப்பா என்ன ஒரு அழகு, அழகுக்கு அழகு சேர்க்கும் கண்கள், கழுத்தில் மெலிதாக ஒரு ஜயின், காதில அழகான கம்மல் ஜிமிக்கி. அப்புறம் சத்தமே வராத மெல்லிய கொலுசு. ” என்று கூறிய தன் மகனை பார்த்து,
“ஒரே ஒரு நாள்தான் ப்பா, வேலைக்கு போன அதுக்குள்ள இந்த அளவுக்கு நோட் பண்ணி இருக்க. வேலைக்கு தான் போனியா? இல்ல பொண்ணு பாக்க போனியா? என்று கிண்டலடித்தார்.
“ஐயோ அப்பா நான் வேலைக்கு தான் போன நம்புங்க.” என்று தன் தந்தையிடம் சினிங்கி அவன் மனதிற்குள்” நான் என்ன பண்றது அவள் தேவதை மாதிரி இருந்தால், அதனாலதான் அவகிட்ட இருந்து என்னுடைய பார்வையில் எடுக்கவே முடியல.”என எண்ணினான்.
“அதில்லடா ஒரே நாளில் இந்த அளவுக்கு கவனிச்சிருக்கியே. ஆமா அந்த பொண்ணு பேரு என்னப்பா?”
“கீதா”.
” கீதா.. ம்ம் பெயர் நல்ல தான்டா இருக்கு. நானும் இப்படி தான்டா உங்க அம்மா வா நினைச்சிட்டு இருப்பேன். என்னையும் உன்னையும் தனியா தவிக்க விட்டு போய் சேர்ந்துடா. சரி பா அருண் நீ தூங்கு காலையிலா ஆபிஸ் போகனும்ல “என்று எழுந்து தன் அறைக்குச் சென்று விட்டார்.
தன் தந்தை தூங்க சென்றதும் அருணோ “இவளும் அம்மாவை மாதிரி தான் அழகா அமைதியா இருக்கா. ஆனா அந்த அமைதிக்குப் பின் ஏதோ சொல்ல முடியாத அளவுக்கு வலி இருக்கிற மாதிரி தோணுது. நான் எதற்காக இப்ப அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வேலை அவளை நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேனா? இதுதான் கண்டதும் காதலா? என்று பல யோசனைகளில் இவனும் உறங்கிவிட்டான்.
இரு ஜீவன்கள் தங்களுக்குள் இருக்கும் காதலை பற்றி நினைத்துக் கொண்டு உறங்க.
ஆனால் உறங்காமல் அழுது கொண்டிருந்தது ஒரு ஜீவன்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம் நன்றி.
