காதல் – 8

காதல் 8
 

 

கீதாவின் போனில் அடித்த பாடலை கேட்டதும் சடன் பிரேக் போட்டான் இன்பராஜா.

காரை நிறுத்தியவன் “இந்த பாட்டு” என மனதில் நினைத்து அவளிடம் கேட்க போக, அதற்கு முன் கீதாவோ,

“இங்க பாருங்க மிஸ்டர் ராஜா என்னை எதுக்கு இப்படி கட்டாயப்படுத்தி உன்கூட கூட்டிட்டு வந்திருக்கீங்க” என கேட்டாள்.

“நீ சாப்பிடாமல் இருந்து தான் மயக்கம் போட்டு விழுந்து இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க அதுதான்” என அவன் சொல்ல வர,

அவளோ ” ஓ சாப்பாடு வாங்கி தர என்னை இழுத்துட்டு வந்து இருக்கீங்க. என்ன பாத்து பிச்சைக்காரி நினைச்சுட்டீங்களா என்ன” என்று கோபத்துடன் கேட்டாள்‌.

” ஏய் ச்சீ வாயை மூடு, நீ இன்னும் திருந்தவே இல்லடி. அந்தத் திமிர் அப்படியே தான் இருக்கு. நியாயமா  நான்தான் இப்ப கோபப் படனும் ஆனா நீ கோபப்படுற.”

“ஆமா ஆமா நீங்கதான் கோபமா இருக்கணும். ஒரு பொண்ணுகிட்ட எல்லை மீறி நடந்துகிட்டீங்கல்ல, அதுக்கு நான் ஒத்துழைப்பு தரல  அதுக்குத்தான் இப்ப கோபப் படுறீங்க” என வார்த்தையில் வரம்பை மீறி பேசினால் கீதா.

ராஜாவும் அதே சினத்தோடு ” தப்பா பேசாத கீதா. என்னை விட உன்கிட்ட வேற யாருக்குடி உரிமை இருக்கு” என்று கேட்டான்.

” ஓ அதான் நான்  யாரென்று உங்களுக்கு தெரியாதே‌ அப்புறம் எந்த உரிமையை பத்தி பேசறீங்க”  என்று ஒரு மன ஆதங்கத்தில் கேட்டுவிட்டாள்.

ராஜாவோ அடுத்த வார்த்தை பேச முடியாமல் தடுமாறியவன் அதை பார்த்தவள் ” உங்ககிட்ட இதற்கான பதில் இல்லல்ல. சரி நான் கிளம்பறேன் “என காரில் இருந்து இறங்கப் போனவளின் கையை பிடித்துக் கொண்டு,

“அப்ப எனக்கு உன்கிட்ட எந்த உரிமையும் இல்லையினு சொல்லவறியா” என வார்த்தைகள் உடைந்து கேட்டான்.

கீதாவும் அமைதியாக இருக்க தன்  பொறுமை இழந்தவன் ” அப்படின்னா அந்த அருணுக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு. உனக்கு ஒன்னுனா அப்படி துடிச்சி போறான்”  என்று வார்த்தையில் தீயை அள்ளி வீசினான் ராஜா.

அவனின் கேள்வியில் கோபம் கொண்டவள் அவனவிடம் தன் கோபத்தை காட்ட விரும்பாமல் ” அருணை எனக்கு இந்த ரெண்டு நாளா தான் தெரியும் “என்று கூறியவள் சட்டென்று  அமைதியாகி ” ஆமா நான் எதுக்கு உங்களுக்கு இப்ப விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கணும் நான் கிளம்புறேன் என் கையை விடுங்க” என்று உதறினாள்.

ராஜாவும் விடாப்பிடியாக “இருடி எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ”

” அந்த கேள்விய உங்க மனசு கிட்ட கேளுங்க. அது பதில் சொல்லும் எது உண்மை எது பொய்னு. நான் போகணும் என்னை விடுங்கள். இல்ல கத்தி ஊர கூட்டுவேன்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினாள்.

கீதாவின் பதிலில் அமைதியானவன் ” இவ செஞ்சாலும் செய்வா. ஏற்கனவே அப்படி பண்ணவதானே” என்று மனதில் நினைத்துக்கொண்டு ” சரி இரு உன்னை நானே வீட்டுல விட்டுறேன் ” என அவளிடம் கூற.

“தேவையில்லை என் வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியும். உங்க கரிசனம் எனக்கு தேவையில்லை. “என்று வெடுக்கென சொல்லி காரில் இருந்து இறங்கி விட்டாள்.

கீதா நடந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் மறையும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தான். ” நீ இன்னும் நான் பாடின அதே பாட்டை தான் உன் ரிங்டோனா வச்சிருக்கியா கீதா. அப்புறம் ஏன்டி என்னை வேணான்னு சொல்லிட்டு போன?” என்று மனதிற்குள் குமறினான்.

“இவளைப் பழிவாங்கனும் தான் நினைக்கிறேன் ஆனால் ஏனோ அது முடியல என்று தனக்கு தானே கேட்டு கொண்டவன் முன் அவனின் மனசாட்சி,

“நீ அவளை பழி வாங்குற அளவுக்கா காதலிச்சு இருக்க?. இல்ல அவ தான் உன்ன அப்படி காதலிச்சாலா?  நீங்க ரெண்டு பேருமே உயிருக்கு உயிரா தானே இருந்தீங்க. உன் உயிரை எப்படி உன்னால் பழி வாங்க முடியும்? என சொல்லியது அவனனின் மனசாட்சி.

தன்னையே நொந்து கொண்டவன் ஆபிசுக்கு போக விருப்பம் இல்லாமல் வீட்டுக்குச் சென்று தன் அறையில் நுழைந்து மெத்தையில் தொப்பென்று விழுந்து தன் பழைய நினைவில் மூழ்கினான்.

†********†********†*******†*********†

“டேய் மச்சி ராஜா, எங்க கிட்ட சொல்லாம மறைச்சிட்டுல்லடா நீ?” என்று கேட்டான் அவன் நண்பன் சூர்யா.

” மச்சி சூர்யா அவ உங்ககிட்ட இருந்து தப்பிக்க அப்படி சொல்லிட்டுப் போறாடா. அதை பெருசா எடுத்துக்கிட்டு கேட்கிற.” என்றான் ராஜா.

” அதெல்லாம் எங்களுக்குத் தெரியுது. ஆனால் நீ ஏன்டா அவளை விட சொன்ன?” என்று அவனை கேள்வியாக நோக்கினான்.

” பாவம் சின்ன பொண்ணுடா” என்று கீதாவுக்கு பரிந்துரை செய்தான் தன் நண்பனிடம்.

” யாரு அவளா?  நீ யாருன்னு தெரியாம உன்ன லவ் பண்றேனு உன் முன்னாடியே சொல்லிட்டு போறா அவ சின்ன பொண்ணா. ” என்று சூர்யா கேட்க, ராஜாவின் பார்வையோ தூரத்தில் போகும் கீதாவை பார்த்து கொண்டே இருந்தது.

“டேய் என்ன பார்த்து பேசுடா அவளையே பார்த்துட்டு இருக்க”  என்று கோபமாக கேட்டவன், தன் அருகில் இருந்த பரத்திடம் ” மச்சி இவனுக்கு லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சு டா”  என்று கத்தினான்.

” லூசு அதெல்லாம் எதுவும் இல்லை வாங்க கிளாசிக்கு போலாம் டைம் ஆகுது” என அங்கிருந்து கிளம்ப முற்ப்பட்டவன் அருகில்,

” அத்தான் அத்தான் “என்ற ஒரு குரல் தடுத்தது.

பரத்தோ திரும்பி பார்த்து “மச்சி உன்னை யாரோ கூப்பிடுறாங்க டா.” என ராஜாவிடம் சொல்ல.

ராஜாவோ ” ஐயோ பேய்டா பரத் என்று சட்டென கத்த,

” டேய் மச்சி அவ உன்னோட மாமா பொண்ணு இந்து டா” என பரத் கூறினான்.

“அதனாலதான் மச்சி சொன்ன, அவ பேயின்னு” என்று ராஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே இந்து அவர்கள் அருகில் வந்து நின்றாள்.

” என்ன அத்தான் என்னை பார்த்ததும் மறைஞ்சிகிட்டீங்க ” என்று ராஜாவின் கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு கேட்டாள்.

“டேய் என்னடா நடக்குது இங்க. ஒருத்தி என்னோடனா லவ்வர்னு சொல்லிட்டு போறா. இன்னொருத்தி என்னடா கையை கோர்த்துக்கிட்டு அத்தானு சொல்றா. இது காலேஜா இல்லை லவ்வர்ஸ் பாஃர்க்கா‌ ” என்று கடுப்புடன் மெல்ல ராஜாவிடம் கேட்டான் சூர்யா.

” சும்மா இருடா சூர்யா” என்று தன் நண்பனிடம் கடிந்து கொண்டவன் இந்துவிடும் திரும்பி, ” இங்க பாருமா இந்து, இது மாதிரி எல்லாம் காலேஜ்ல பண்ணக்கூடாது சரியா. கிளாசுக்கு போ” என்று அவளை அனுப்பிவிட்டு, தப்பித்தால் போதும் என தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்றான்.

பரத்தோ ” நீங்க போங்க டா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”

” ஓகே டா, சரி சீக்கிரம் வந்துடு” என்று கூறிவிட்டு மற்றவர்கள் சென்றார்கள்.

இப்படியே ஒரு மாதங்கள் ஓடி விட,

இந்த ஒரு மாதத்தில் கீதா பின்னாடியே திரிந்து கொண்டிருந்தான் ராஜா. 

கீதா எங்கு செல்கிறார், என்ன செய்கிறாள், என்று அவளின் பின்னாடியே சுற்றினான்.
நண்பர்களை மறந்து கீதா மட்டுமே கதியான இருந்தான்.

அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசித்தான். அன்பான குணம், தெளிவான பேச்சு, அக்கறையாக இருப்பது, மத்தவங்களுக்கு கஷ்டம்னு சொன்னால் தானே முன்வந்து உதவுவது. என இந்த ஒரு மாதத்தில் அவளை இந்த அளவுக்கு புரிந்து வைத்திருந்தான் ராஜா.

தன் பின்னால் ஒரு அழகான இளைஞன் சுற்றி சுற்றி வருவதை அவளும் அறியாமல் இல்லை. இருந்தும் இதை கண்டும் காணாமல் இருந்தால் கீதா. காலையில் அவள் பின்னாடியும் இரவில் புத்தகத்தின் பின்னாடியும் சுற்றிக் கொண்டிருந்தான் இன்பராஜா.

ஆனால் ராஜாவின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த இந்துவை கவனிக்க தவறினான்.

கீதா மட்டும் தனியாக நடந்து வருவதை பார்த்து,

“என்ன இன்னிக்கு உன் ஆளு மட்டும் தனியா வருது. இதுதான் சரியான டைம், கீதா கிட்ட போய் உன்னுடைய லவ்வ சொல்லிடு”  என தன் நண்பனிடம் கூறிக் கொண்டிருந்தான் சூர்யா.

பரத்தோ இடையில் நுழைந்து “வேணாம் மச்சி, சூர்யா சொல்றான்னு கீதா கிட்ட போய் லவ்வ சொல்லாத. அப்புறம் எல்லாரும் முன்னாடியும் அடிச்சிட போறா ” என்று அறிவுரை வழங்கினான்‌.

ராஜாவோ ” இல்லடா பரத் இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது”  என்று சொல்லிவிட்டு கீதா பின்னால் சென்றான்.

ராஜா அந்தப் பக்கம் போனதும் “டேய் வாங்கடா நம்ம இந்த மரத்துக்குப் பின்னாலே ஒளிஞ்சுகலாம்”  என்றான் பரத்.

தன் பின்னால் வருபவனை திரும்பிப்பார்த்து ” ஹலோ மிஸ்டர் இங்க வா “என இன்பராஜாவை கூப்பிட்டால் கீதா.

“ம்ம் சொல்லுங்க கீதா “

” எதுக்கு என் பின்னாடி சுத்துற? அதுவுமில்லாம என் பெயர் எப்படி உனக்கு தெரியும்?” என்றாள் மிரட்டலுடன்.

ராஜாவோ ” நான் எங்கேங்க உங்க பின்னாடி சுத்துற. நீங்கதாங்க என் முன்னாடி போறீங்க” என்று மொக்கை போட்டான்.

அவனின் மொக்கையை கேட்டவள் ” இதோடாக் காமெடி பண்றியா”

” என்னது இதோடவா “என்று தன் மனதிற்குள் நினைத்தவன்  “இவளுக்கு திமிரா அதிகம்தான்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அவனின் அமைதியை பார்த்து “என்ன பதிலே இல்ல? நீ என்னை  ஃபாலோ பண்றேன்னு, நீ ஃபாலோ பண்ணா அடுத்த நாளே எனக்கு தெரியும். நான் உன்னை கவனிச்சேன்” என சொல்லியவளை பார்த்து.

” ஓ கவனிச்சிட்டியா? சும்மாதான், ஆமா எப்பவும் உன் கூட வருவாளே உன் தோழி எங்க ஆளையே காணோம்”  என்று பேச்சை மாற்ற முயன்றான்.

“அவளா? அவ இன்னிக்கி வரல.” என சொல்லிவிட்டு ஏதோ நினைத்தவள் ” ஓ அப்போ நீங்க அவளை தான் ஃபாலோ பண்ணிங்களா!”  என வருத்தத்துடன் கேட்டாள்.

“ச்சீ ச்சீ இல்ல நான் உன்ன தான் ஃபாலோ பண்ணேன்”  என்று சட்டென இருபக்கம் தலையசைத்து மறுத்தான்.

அவன் கூறியதும் ஆயிரம்வாட்ஸ் பல்பு போல பிரகாசமான அவளின் முகத்தை பார்த்து “நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான் ராஜா.

” ம்ம் சொல்லு ” என்றாள் சிரித்த முகத்துடன்.

“அது வந்து எனக்கு சுத்தி வளைச்சு பேசலாமா தெரியாது. எப்பவுமே நேரா பேசித்தான் பழக்கம். சோ நான் நேரா விஷயத்துக்கு வரேன்”

ராஜா கூறியதைக் கேட்டு ” ம்ம் வாங்க, ஆமா எவ்வளவு தூரம் வரைக்கும் வருவீங்க “என்றாள் குறும்பாக.

ஆனால் ராஜாவோ சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு “நீ வாழ போற மீதி இருக்கும் உன்னுடைய வாழ்க்கையோட கடைசி தருணம் வரைக்கு உன் கூட வர ஆசைப்படுகிறேன். ” என்று தன் காதலை வெளிப்படுத்தினான்.

இதைக்கேட்ட கீதாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

உள்ளுக்குள் ஏதோ ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் முகத்தை யோசனையாக வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் யோசனைப்படி இருந்த முகத்தைப் பார்த்து ” என்னாச்சு என்னை உனக்கு பிடிக்கலையா ” என்றான் கவலையுடன்.

அவளும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள் இந்த ஒரு மாதத்தில் ராஜாவை. 
ஒரு நாளும் தன்னை தவறான பார்வை பார்த்தது இல்லை. தவறான எண்ணத்தோடு தன்னை நெருங்கியதில்லை. தூரத்தில் இருந்தபடியே தன்னை ரசித்துக் கொண்டிருப்பவனை  இவளும் ரசித்துக் கொண்டுதானே இருந்தாள்.

கீதாவின் அமைதியை பார்த்தவன் மீண்டும் என்னாச்சு என்று கேட்க,

“அது இல்ல நான் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் முதல்ல என் அப்பா அம்மா கிட்ட கேட்டு தான் முடிவு பண்ணுவேன். அதான் யோசிச்சேன். நீ நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுறியா நான் எங்க அப்பா கிட்ட கேட்டுட்டு வந்து என்ன பதில் சொல்றேன் “என குழந்தை போல் கூறிவளை பார்த்து,

” என்ன அப்பா அம்மா கிட்ட கேக்க போறியா? நான் லவ் பண்றது உன்னை தானே! அதுக்கு எதுக்கு அவங்க பதில் ” என்றான் ராஜா.

ராஜாவை முறைத்துப் பார்த்துக் கொண்டு “நீங்க லவ் பண்றது என்னவோ என்னைதான். ஆனா அவங்க இல்லாம நான் எப்படி இந்த உலகத்துக்கு வந்து இருக்க முடியும். சோ நீங்க  இப்ப லவ் பண்றது யாருனா, அன்பரசன் மற்றும் பார்வதியோடு பொண்ணு புரியுதா?.” என அவள் சொல்லிய விதத்தை ரசித்தவன், அவள் சொல்வதும் உண்மைதான் என்று உணர்ந்து கொண்டான்.

“ம்ம் சரி நாளைக்கு இதே இடத்துல உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன் “என்று ஆசையாகக் கூறினான் ராஜா.

” சரி நான் கிளம்புறேன் டைமாச்சு பை ” என்று சொல்லி விட்டு விடைபெற்றுச் சென்றாள் கீதா.

கீதா சென்றதும் மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டிருந்த நண்பர்கள் வெளியே வந்தனர்.

” என்னடா மச்சி இவ இப்படி சொல்லிட்டு போறா. இவ உனக்கு சரிப்பட்டு வர மாட்டா ” என பரத் ராஜாவின் காதலை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு பேசினான்.

அதைக்கேட்ட ராஜாவோ மெல்லிய சிரிப்புடன் ” இல்லடா பரத் இவ எனக்காக பிறந்தவ. மனசுல காதல் இருந்தாலும், அவங்க அப்பா அம்மா முடிவு தான் முக்கியம் சொல்றா பாரு. அப்பவே புரிஞ்சிக்கிட்டேன். அவ அப்பா அம்மா எந்த அளவுக்கு இவ கூட தோழமையாக இருக்காங்கன்னு”  என்று கீதா போகும் திசையைப் பார்த்துக் கொண்டு சொன்னான்.

அப்படியிருந்தும் பரத்தோ ” சரி டா மச்சி நீ எந்த முடிவெடுத்தாலும் அது சரியாதான் இருக்கும். ஆனா ஒரு சந்தேகம் இப்ப நீ ஒரு பணக்காரன் தெரிஞ்சு உன்ன லவ் பண்ணி இருந்தா என்னடா பண்ணுவ” என்று எடக்குமுடக்காக கேள்வியைக் கேட்டான்.

ராஜா அதே சிரிப்புடன் “அவளுக்கு இன்னும் என்னை பத்தி முழுசா தெரியாது தான் நினைக்கிறேன். தெரிஞ்சிருந்தா அவ, இப்பவே எனக்கு ஓகே சொல்லிட்டு போயிருப்பா. நாளைக்கு அப்பா கிட்ட கேட்டுட்டு வரேன்னு சொல்லி இருக்கமாட்டாள்”  என்று கீதாவுக்கு பரிந்து பேசினான்.

பரத்தோ தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ” நீ சொல்றதும் சரிதான்டா. நாளைக்கு வரை காத்திரு” என்று கூறினான்.

ராஜாவோ “காத்திருப்பதும் ஒரு சுகம் தான்டா “என்று கண்ணை மெல்ல மூடி திறந்து கூற, இரு விழிகள் மட்டும் நாளை அவளை வரவிடாமல் தடுப்பது எப்படி என்று திட்டம் போட்டு கொண்டு இருந்தன.

நாளை கீதா வருவாளா? ராஜா காதலை ஏற்றுக் கொள்வாளா? இல்லை வராமல் இருப்பாளா? என்று காத்திருந்து பார்க்கலாம்.

நன்றி.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page