பாழடைந்த ஒரு வீட்டியில் நாற்காலியில் கைகள் கட்டப்பட்டு இருட்டு அறைக்குள் மெல்ல கண் திறந்தாள் மங்கையவள்.
மாலை நேரம் என்பதால் ஜன்னல் மூடப்பட்டிருந்தும் அதன் வழியே வந்த சிறு வெளிச்சத்தை பயன்படுத்தி சுற்றி பார்வையை சுழலவிட்டவள் கைகளில் கட்டிருந்த கயிறு தளர்வாக இருந்ததை உணர்ந்து மெல்ல உடல் அசைத்து முயற்சி செய்து மொத்தமாக கைகளுக்கு விடுதலை அளித்தாள்.
பின் கட்டிருந்த கால்களையும் விடுவித்து
விட்டு, அங்கு மெலிதாக தெரிந்த வெளிச்சத்தை வைத்தே ஜன்னல் அருகே வந்த பாவையோ ஜன்னலிலிருந்த கண்ணாடியை அகற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் காண,
மெல்ல ஜன்னல் வெளியே எட்டி பார்த்தவளின் கண்களோ கீழே பரப்பி கிடந்த கண்ணாடி துண்டுகளை கண்டு அதிர்ந்து விரிய, பெண்ணவள் தப்பித்து விட கூடாது என்பதற்காகவே அவளை கட்டி வைத்தவர்களே வழி முழுவதும் கண்ணாடி துண்டுகளை பரப்பி விட்டிருக்க, ஒரு நொடி தான் அவளின் அதிர்வு பின் பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள் இங்கேயிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தைரியமாக ஜன்னலின் வழியே குதித்து இறங்கினாள்.
அதில் பெண்ணவளின் பாதத்தில் கண்ணாடிகள் பதம் பார்த்து குருதியை வெளியேற்ற, வலியில் கத்தி சத்தம் கேட்டு விட கூடாது என்றதில் வாயை அழுத்தி பொத்தி வலியை அடக்கியவள், கண்ணாடி துண்டுகளை மீதே நடந்து அப்பாதையை கடந்து சுவர் பக்கம் வந்துவிட்டாள்.
ஆனால் அதில் ஏறி குதித்தால் தான் இங்கிருந்து நிரந்தரமாக வெளியேற முடியும் என்றதில் முதலில் காலியிருந்த கண்ணாடி துண்டை எல்லாம் அகற்றிவிட்டு வெளியேறும் குருதியை பொருட்படுத்தாமல் மெல்லமாக சுவரில் கால் வைத்து ஏறி மேல் சுவற்றை அடைந்தாள்.
அதில் கைவைத்த மறுநொடி பெண்ணவள் அம்மா என்று கத்தி தடுமாறிவிட,
முன் வைத்த காலை பின்னே வைக்க மனமில்லாமல் கைகளில் வரும் குருதியையும் பொருட்படுத்தாமல் பின்னே விழுந்து விடாமலிருக்க பிடிமானத்திற்காக சுவற்றை அழுந்த பற்றி கொண்டு வலியை இதழ் கடித்து அடக்கி கொண்டாள்.
அப்படியிருந்தும் சுவற்றில் ஆங்காங்கே பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடி துண்டில் பெண்ணவள் கவனிக்காமல் கைவைத்ததின் விளைவால் முதலில் கத்திய சத்தம் அவளுக்கு காவலாக சுற்றியிருந்த அடியாள் ஒருவன் காதில் விழுந்து விட,
“டேய் அவ தப்பிச்சு போறா பிடிங்கடா” என்று மற்றவர்களையும் திரட்டி கொண்டு பெண்ணவளை பிடிக்க அவளை நோக்கி வந்தனர்.
அதில் பதறிய பாவைக்கு கையில் ஏற்பட்ட வலியில் பிடியில் வலு குறைந்து கொண்டே போக, உயிரே போனாலும் தன்னை துரத்தி வரும் அரக்கர்களிடம் சிக்க கூடாது என்ற உறுதியில் உடலை முன்னோக்கி இழுத்தவள் சிறிதும் சுவரின் மறுபக்கம் என்ன இருக்கிறது என்று கூட யோசிக்காமல் குப்புற விழுந்து விட, அதில் பெண்ணவள் வயிற்றிலும் கண்ணாடி துண்டுகள் பதம் பார்த்து குருதி வடிய தொடங்கியது.
கீழே விழுந்ததில் தலையின் முன்பக்கம் நன்றாகவே அடி விழ, தலையை பிடித்தப்படி தன்னை மீட்கும் பணியில் எழுந்தவளுக்கு வயிற்றில் வேறு சுல்லேன்று வலியை கிளப்ப, மறுகரத்தை வயிற்றை பிடித்து கொண்டு ஓட தொடங்கி முடிந்த மட்டும் வேகமாக ஓடியவள் அடிக்கடி பின்னே பார்க்கவும் தவறவில்லை.
சுவற்றில் கண்ணாடி துண்டுகள் இருப்பதை உணர்ந்து சுற்றி வந்தவர்கள் பெண்ணவள் சற்று தள்ளி சென்றதை கண்டு கொண்டு அவளை தொடர்ந்து ஏய் நில்லு என்று கத்தியப்படி ஓடி பிடிக்க முற்பட்டனர்.
அவர்கள் நெருங்குவதை உணர்ந்த பெண்ணவளுக்கு மறுபடியும் அகப்பட்டு விடுவோமோ என்ற பயம் வேறு வர, கூடவே ஆங்காங்கே வெளியேறும் குருதியால் பெண்ணவளுக்கு சிறிது சிறிதாக நினைவுகள் வேறு இழக்க நேரிட,
“கடவுளே என்னால முடியல.. பிளீஸ் எனக்கு உதவி பண்ணு.. நான் அவனுங்க கைல மாட்ட கூடாது” என்று புலம்பலுடன் ஓடி வந்தவள் இரும்பு ஆடவன் மேல் மோதி தடுமாறி விட, அவளை விழாமல் தன் இரும்பு கரத்தால் இடுப்பை சுற்றி பிடித்து அடைக்காத்து கொண்டான்.
தன்னை காக்க வந்த ஆண்மகன் யாரென்று நிமிர்ந்து பார்த்த பாவையோ, அவனை கண்டு திகைப்பில் விழிகள் விரிய, பின் கண்கள் சொருகிய நிலையில் “பிளீஸ் காப்பாத்துங்க” என்று வாசகத்தை கூறியப்படியே ஆடவன் மார்பிலே மயங்கி சரிந்தாள்.
****
சத்தியன் உடன் இணைந்து சைதாபேட்டிற்கு சென்ற வேலையை முடிக்கவே மதியம் நேரம் தாண்டி விட, உணவை முடித்துவிட்டு சத்தியனிடம் அங்கு மாற்ற வேண்டிய சில மாற்றங்களை கூறிவிட்டு அதற்கான தாள்களையும் தாயார்ப்படுத்த கூறிய அக்னி மாலை போல் அவனை அங்கேயே விட்டு, தான் மட்டுமே காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினான்.
சிறிது தூரம் வந்து கொண்டிருக்கும் போது தான் பெண்ணவளின் கத்தலில் காரை ஓரம்விட்டு இறங்கியவன், சத்தம் வந்த திசையை நோக்கி செல்ல, மேலும் பெண்ணவளின் புலம்பல் சத்தம் கேட்டு அவள் ஓடி திசையை சரியாக கண்டறிந்து அவ்விடம் ஆடவன் விரைந்த நொடி, பெண்ணவள் அவனின் மேல் மோதி மயங்கி சரிந்திருந்தாள்.
ஒரு முறை தன் எக்ஸ்ரே பார்வையால் குருதி வழியும் இடங்களை எல்லாம் ஆராய்ந்தவன் பெண்ணவளின் வயிற்றிலிருந்த கண்ணாடி துண்டுகளை அகற்றிய நொடி துரத்தி வந்த அடியாட்கள் தன்னை நெருங்குவதை கண்டு பெண்ணவளை கையில் அள்ளி கொண்டு கார் பக்கம் வந்தடைந்தான்.
பின் காரின் பின்பக்க கதவை திறந்து பெண்ணவளை இருக்கையில் கிடத்தயவன் பெரிதாக ரத்தம் போக்கு இல்லையென்றாலும் வயிற்றில் சிறிது பலமாகவே கண்ணாடி ஆழம் பார்திருப்பதால் காரிலிருந்த தன் சட்டையை பாவையின் வயிற்றில் இறுக கட்டிவிட்டான்.
அதோடு தன்னுடைய கை துணியையும் இரண்டாக கிழித்து காலிலும் கட்டி முடித்திருக்க, அக்னியின் காரை ரவுடி கும்பல் சுற்றி வளைத்தது.
சுற்றி நிற்பவர்களை கண்டு சிறிதும் அஞ்சாத அக்னியோ திறன்பேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்து காதிலிருந்த ப்ளூடூத் ஹெட்செட்டுடன் இணைத்தவன் திறன்பேசியை பேண்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு நிற்க,
ரவுடி ஒருவனோ “யாருடா நீ.. ஒழுங்கா அவள எங்ககிட்ட விட்டுரு இல்லன்னா உசுரோட வீடு போய் சேர மாட்ட” என்றவனின் கத்தலில் மறுகாதை குடைந்தவன் “அப்போ உசுரோட வீடு போய் சேருறீங்களான்னு பாத்துடலாமா” என்றவன் தன் பின்னே தாக்க வந்தவனின் மூக்கை ஒரே அடியில் பஞ்சராக்கிவிட்டு தன்னை நோக்கி வரும் மற்றவர்களையும் அடித்து துவைத்தான்.
இடையே இடையே அழைப்பு விடுத்து தோற்றவன், அடுத்ததாக சத்தியனுக்கு அழைப்பு முயற்சித்தப்படி சண்டையிலும் கவனத்தை பதித்தான்.
****
அப்போது தான் அக்னி கூறிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அமர்ந்த சத்தியன், திறன்பேசி ஒலித்ததில் திரையில் வந்த மிஸ்டர் பயர் என்ற பெயரை கண்டு “இப்போ தான் அக்கடான்னு உக்காந்தேன்.. அதுக்குள்ள மூக்கு வேர்த்துமே இவனுக்கு.. வேலை சொல்லியே கொல்லுவானே” என்று தன்னை நொந்தப்படியே அழைப்பு ஏற்றவன் “சொல்லுங்க மிஸ்டர் பயர்”
“டேய் மூண்டாம் கால் அட்டென்ட் பண்ண இவ்வளவு நேரமா..” என்றப்படி ஆடவன் சண்டை போட,
அவன் தன்னை அர்சித்ததை கண்டு கொள்ளாத சத்தியனோ, சண்டையிடும் சத்தத்தை உணர்ந்து “டேய் என்னடா சத்தம் யார்கூட சண்ட போட்டுட்டு இருக்க..” என்று பதற,
“டேய் டேய் பதறாம நான் சொல்லுறத கேளு.. பேபிக்கு கால் பண்ணினேன் ரிப்லையே இல்ல.. உனக்கு அவ டெலிபோன் நம்பர் தெரியும்ல கால் பண்ணி டாக்டர் கிட் எடுத்துட்டு வீட்டுக்கு வர சொல்லிட்டு நீயும் வா.. முடிஞ்சா பேபிய நீயே பிக்அப் பண்ணி கூட்டிட்டு வா” என்றதில் மேலும் பதறிய சத்தியன் “டேய் மச்சி என்னடா சொல்லுற ஆர் யூ ஓகே.. நீ முத எங்க இருக்கன்னு சொல்லு”
“டேய் முண்டம் நான் சொன்னத செய்டா.. நான் ஓகே தான்..”
“அதுசரி நான் தான் கால் பேசுறன் தெரிஞ்சா உன் பேபி கால கட் பண்ணிடுவாடா” என்றதில் கடுப்பான அக்னி “ஃப்ச் நான் அவளுக்கு டெக்ஸ்ட் பண்றேன்டா.. பீ சீரியஸ் மச்சி சீக்கிரம் வந்து சேருங்க” என்று அழைப்பு முடித்தவன், மொத்த பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு *இன்னொரு முறை எந்த பொண்ணுங்க பின்னாடியாவது உங்க ஒருத்தர பாத்தாலும் உடம்புல உசுரு தங்காது.. ஓடி போங்கடா” என்று விரட்ட, அவர்களும் உயிர் பயத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடி விட்டனர்.
பின் பேபி என்றவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காரை உயர் வேகத்தில் செலுத்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
வீடு வந்ததும் காரை விட்டு இறங்கி அவளையும் தன் கைகளில் ஏந்தி கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று படுக்கையில் கிடத்தியவன் அவர்கள் இருவரும் வருவதற்குள் மயக்க நிலையிலிருந்த பெண்ணவளின் காயந்த குருதியை துடைத்து கட்டு போட தொடங்கி விட்டான்.
***
நண்பன் அழைப்பை துண்டித்ததும் அவன் பேபி என்று கூறியவளுக்கு அழைப்பு விடுக்க, முதல் அழைப்பிலே பெண்ணவள் ஏற்று விட, சத்தியனோ “இஷா..” என்று தான் அழைத்திருக்க கூடும்,
அதற்குள் பெண்ணவள் “சாரி பேஷண்ட் செக்அப் போயிட்டு இருந்துச்சு.. ஃபோன் கூட சைலண்ட் சோ அண்ணா கால் பண்ணினது கவனிக்கல.. இப்போ தான் அண்ணா டெக்ஸ்ட் பாத்தேன்.. எனக்கு பதறுது யாருக்கு என்னாச்சி நீங்களும் அண்ணாவும் ஓகே தான” என்று பொரிந்து தள்ள,
பெண்ணவள் தனக்காக பதறியதில் ஆடவனுக்கு தேன் சாரல் அடித்தது போல் இருக்க, அதில் ஒரு நிமிடம் அவனின் முகத்தில் புன்னகையும் தோன்றி மறைய “இஷா ரிலாக்ஸ்டி நீ பதறுற அளவுக்கு பிராப்ளம் இருக்காது.. அண்ட் எனக்கே என்ன நடந்துச்சு தெரியல.. நீ ரெடியாயிரு நான் உன்ன பிக்அப் பண்ணிட்டு போறேன்”
“இல்ல சத்தி.. அண்ணா டெக்ஸ்ட் பாத்ததுமே பைக்ல கிளம்பிட்டேன் இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல அங்க ரீச்சாயிடுவேன்”
“சரிடி.. பாத்து போ நானும் ஸ்ட்ரெய்ட்டா அங்க வந்துடுறேன்” என்றப்படி அவனும் அழைப்பை துண்டித்து நண்பனின் வீட்டிற்கு விரைய,
பெண்ணவளும் வண்டியில் வேகத்தை கூட்டினாள்.
சத்தியனால் இஷா என்றழைக்கப்பட்ட நவீஷா என்பவள் அக்னி கட்டிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவள்.
வழக்கம் போல் நோயாளிகளிடம் பரிசோதனை முடித்துவிட்டு தன்னறைக்குள் வந்திருக்க, அக்னியின் தொடர் அழைப்பில் குழம்பி இஷா “எமர்ஜென்ஸி பேபி.. டாக்டர்கிட் எடுத்துட்டு வீட்டுக்கு வா பேபி” என்ற குறுஞ்செய்தியில் யாருக்கு என்னவாயிற்று என்று பதறியவள் தன்னுடைய பையை எடுத்து கொண்டு வண்டியில் அக்னியின் வீட்டை நோக்கி செல்ல,
அப்போது தான் சத்தியனிடமிருந்து அழைப்பு வந்ததில் என்னவென்று தெரிந்து கொள்ள எண்ணி உடனே அழைப்பை ஏற்றாள்.
****
இருவருமே அடித்து பிடித்து ஒருவழியாக வீட்டை அடைந்திருக்க, வீட்டிற்குள் நுழைந்த சத்தியனிற்கு அவன் இருக்கும் சத்தம் கேட்காதால் வேகமாக அவனின் அறையை நோக்கி செல்ல, பெண்ணவளும் பின் தொடர்ந்து சென்றாள்.
அப்போது தான் அக்னி பெண்ணவளின் காலில் ஏற்பட்டிருந்த குருதியை துடைத்து அவள் மயக்க நிலையில் இருப்பது தெரிந்தாலும் எங்கே வலித்து விடுமோ என்று பூபோல் பெண்ணவளின் காலை மடியில் வைத்து கட்டிட்டு கொண்டிருந்தான்.
அவன் பெண் காலை பிடித்து சேவகம் செய்வதை கண்டு உள்ளே வந்த இருவரும் அதிர்ந்து முழிக்க, அவனின் சட்டையிலிருந்த ரத்தக்கரையை கண்டு அதிர்விலிருந்து தன்னை மீட்டு கொண்டு, அவனருகில் சென்ற இஷா “அண்ணா.. என்னாச்சி யாரு இந்த பொண்ணு” என்று தொடர் கேள்வி எழுப்ப,
அதில் பட்டென்று எழுந்த அக்னி “பேபி.. நீ ட்ரீட்மென்ட் பாரு.. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு விவரமா சொல்லுறேன்”
“சரி அண்ணா.. நீங்க வெளிய இருங்க* என்றுவிட்டு அவன் கொடுத்த கட்டளையை நிறைவேற்றும் பணியை தொடங்கினாள்.
அக்னியோ அங்கேயே பேவென்று நின்ற நண்பனின் முடியை இழுத்து கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
அவன் மூடியை பிடித்ததில் உண்டான வலியில் சுயம் பெற்ற சத்தியனிற்கு அதிர்ச்சி மட்டும் குறையவில்லை.
அதோடு யார் எக்கேடு கேட்டாலும் கல் மனம் படைத்த போல் வளம் வரும் நண்பனின் கண்களில் இன்று தெரியும் கலவரங்கள் என்னவோ புதிதாக இருந்தது.
அதிலும் இஷாவை தவிர யாரிடமும் அடி பணியாத நண்பன் இன்று ஒரு பெண்ணின் காலை பிடித்து சேவகம் செய்தது அதிர்ச்சியை கொடுக்க, ஆடவனின் மனமோ ‘ஒருவேளை காயமாயிருக்குன்னு ஹெல்ப் பண்ணியிருக்கலாம்ல’ என்று அக்னிக்கு வக்காலத்து வாங்க, அது தான் மேலும் குழப்பத்தை கொடுத்தது.
பின்ன ஆசிர்வாதம் வாங்குவதற்கு கூட யார் காலிலும் விழாத நண்பனின் இன்றைய அவதராத்தில் கண்களில் தெரிந்த பதறத்திலும் அக்னியே புதிதாக தெரிய, அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்தான் சத்தியதேவன்.
யார் அந்த பெண்?
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்க கூடுமா?
சுவாசம் தொடரும்…
