தாரகையின் மாயோன் -15

மாயோன் – 15

கார்த்திக் அனைவரையும் சமாதானப்படுத்தியவன் ஒரு விஷயத்தைக் கூற அனைவரும் அதிர்ச்சியில் நின்றனர்.

“டேய் அவளுக்கு எதுவும் ஆகாது டா .இது பயப்படக் கூடிய விஷயம் தான். இருந்தாலும் அவ்வளவு சீரியஸ் இல்ல. உங்களை விடவும் இப்போது எனக்குதான் அவளின் உடல் நிலை பற்றி கவலை அதிகமா இருக்கு, அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால தாங்க முடியாதுடா புரிஞ்சுக்கோங்க” என்று கலங்கினான்.

இதில் அனைவரும் அதிர்ச்சியாக  சரவணராஜன் மட்டும் தன் மகனை பார்த்து சிரித்தவர் ,”திருட்டு படவா எனக்குத் தெரியும்டா.. இப்படி நடக்கும்னு என்று அவன் காதை பிடித்து திருகியவர் சொல்லுடா சொல்லு இது எத்தனை நாளா நடக்குது” என்றார்.

“அப்பா விடுங்கப்பா வலிக்குது ..அது வந்து பா இரண்டு வருஷத்துக்கு முன் இனியா என் மனதில் புகுந்துட்டாள்”

“டேய் என்னடா அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கிற.. எனக்கு பயமா இருக்கு சீக்கிரம் சொல்லுடா” என்றார் கல்பனா தேவி.

“அம்மா நீங்க ஏன் தான் இப்படி பயப்படறீங்களோ தெரியல . சொல்றேன் இருங்க”.என்ற கார்த்திக் மற்றவர்களை பார்க்க அனைவரும் வாய் பிளந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

அபிஷேக், “ டேய் என்னடா நீ சொல்றதை பார்த்தா இனியாவை விரும்பறியா?”

“ஆமாண்டா ஏன் உன் ஃப்ரெண்டை நான் விரும்ப கூடாதா? அதுக்கும் ஏதாவது சண்டை போடப் போறியா?”

“அண்ணா நாங்க இந்த டிவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்ல  நீங்க இரண்டு பேரும் எனிமின்னு நினைச்சோம் .ஆனால் லவ்வரா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.நாங்க மட்டும் இல்ல வாசகர்கள் கூட இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க” என்றாள் ஸ்ருதி.

“ஏய் ஸ்ருதி எங்களுக்கு மயக்கமே வந்துடும் போல.”என்று பாலாஜி கூற, “அண்ணா எங்களுக்கு உண்மையாவே சந்தோஷமா இருக்கு. யாருமே எதிர்பாராத ஒன்று நடந்து இருக்கு .சரிங்க அண்ணா எங்களுக்கு ட்ரீட் வைங்க “என்று அன்பு கேட்டான்.

“அடேய் தீணிப்பண்டாரம் என்ன நடந்தாலும் உனக்கு சோறு தான் முக்கியம் அப்படித்தானே?”என்று ஸ்ருதி கேட்க ,

“அஃப்கோர்ஸ் சோறு அதானே எல்லாம்” என்ற அன்புவை பார்த்து சிரித்த கார்த்திக் ,”கண்டிப்பாடா டைரக்டா கல்யாண சாப்பாடு போடறேன் கவலைப்படாதடா?”

“டேய் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க டா என்ற அபிஷேக் கார்த்திக் நீ பேசியதை வச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன் .இருந்தாலும் உண்மைய சொல்லு அவளுடைய வாழ்க்கையோட விளையாடாத அவள் ஏற்கனவே நொந்து போய் இருக்காடா” என்றான்.

“அபி நீ என்னடா பேசுற” என்று கல்பனா சத்தமிட ,

“அம்மா காம் டௌன் மா “என்ற கார்த்திக் 

“ஏண்டா நல்லவனே உன் அண்ணன் என்ன அவ்வளவு பெரிய வில்லனா?ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை கெடுக்கறதுக்கு பொய் சொல்வேனா?என் வாழ்க்கையில் என்னுடைய சரிபாதி அவதான்னு இரண்டு வருடத்திற்கு முன் முடிவு பண்ணிட்டேன்டா.

” புரியுது டா.எனக்கு அவளும் முக்கியம் . அதனால் தான் கேட்டேன்.சாரி கார்த்திக் அம்மா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க ” என்றான் அபிஷேக் ராஜன்.

அபிஷேக் நண்பர்கள் அனைவரும் நட்புக்காக தன் அண்ணனையே கேள்வி கேட்பவனை நினைத்து பெருமை கொண்டனர்.

கார்த்திக் ராஜன்,”விடுடா நீ அவ மேல எவ்ளோ பாசம் வச்சிருக்க.எனக்கு நல்லாவே புரியுது”

“சரிடா முதல்ல நீ நடந்ததை சொல்லு..”

“சொல்றேன்டா ” என்றவன் இரண்டு வருடத்திற்கு முன் நடந்ததை கூற அதைக் கேட்டவர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்.

அபிஷேக் தன் அண்ணனை கட்டிக் கொண்டவன் ,”எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கார்த்திக். நான் நிறைய முறை நினைச்சிருக்கேன்‌ எனக்கு இனியா அண்ணியா வந்தா நல்லா இருக்கும்னு .அவள் எனக்கு இன்னொரு அம்மா டா .ஆனால்  நீங்க ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலே வெறுப்பை உமிழ்வதைப் பார்த்து  இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லன்னு நினைச்சு அந்த எண்ணத்தை மூட்டை கட்டிட்டேன்..

பட் இதை நான் எதிர்பார்க்கல..சரி அவளை எப்படி தான் சமாளிக்க போற அவள் உன் பெயரைக் கேட்டாலே டென்ஷனாகறாளே?”

“அது அப்போ  இப்போ போய் கேளுடா என்றவன் டேய் அன்னைக்கு நான் இனியாவை காப்பாற்றிய போது நீ அவளுக்கு போன் பண்ணி இருந்த  அப்போதே  இவள் உன்னுடைய ஃப்ரண்ட் என்று சந்தேகம் இருந்தது. ஆனால் நான் அவள் இனியாவா இருப்பாள் என்று யோசிக்கல . அப்புறம் தான் நான் அவகிட்ட உங்க பெயர் என்ன என்று கேட்டதும் அவளும் இனியா என்று சொன்னாள்.நீ தான் எப்போதும் இனியா புராணம் பாடிட்டே இருப்பியே. நான் காதலிக்கும் ,பெண்ணும் உன்னுடைய ஃப்ரண்டும் ஒரே ஆள் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன்

ஆனால் அதை நான் அவகிட்ட அப்போ சொல்ல விரும்பல .அவளை சீண்டுவதற்காக தான் அடிக்கடி அவளை திட்டுவது போல் நடித்தேன் மத்தபடி அவள் என் உயிருடா புரிஞ்சுக்கோ “என்றான் கார்த்திக் ராஜன்.

“அது சரி இவ்வளவு நடந்து இருக்கு அதை அவளுக்கே தெரியாம மறைச்சிருக்க. சரியான ஆளுடா நீ என்றவன் இப்போ  மட்டும் என்ன உன் அண்ணன் இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லை சொல்வாளா?”

” கேட்டுத்தான் பாரேன் டா.நீ இன்னும் வளரனும் ராசா.போ போய் வேலையை பாரு என்றவன் தனது பெற்றோரை பார்த்தவன் அம்மா ,அப்பா இந்த ஜென்மத்தில் என்னுடைய மனைவி  இனியா மட்டும் தான் இனி அவள் முழுக்க முழுக்க என்னுடைய பொறுப்பு “என்றான்.

“நீங்க இரண்டு பேரும்  சந்தோஷமாக இருந்தால் சரி தான்..” என்று சரவண ராஜனும் ,”உன்னை  நினச்சா எனக்கு பெருமையா இருக்கு கார்த்திக் அந்த பெண்ணை நீ  அப்படி பேசும்போது  எனக்கு வேதனையாக இருந்துச்சு டா. ஆனால் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கல டா கண்ணா . இனியா நம்ப வீட்டு மருமகளாக வந்தா அதை விட சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்ல”என்றார் கல்பனா‌ தேவி.

“அது என்னன்னு தெரியலைம்மா எனக்கும் ஒரு சில நேரம் தோணும். நாம அவளை தேவையில்லாம திட்றோமோ என்று பட் அபியை சீண்டுவதற்காகவே நான் அவளைத் திட்ட ஆரம்பிப்பேனேத் தவிர மனசார நான் எதுவும் செய்யலமா”என்றான் கார்த்திக் ராஜன்.

“நீ சொல்றது எங்களுக்கு புரியுது கார்த்திக் இருந்தாலும் நானே நீ செய்வதை பார்த்து பயந்துட்டேன் .சரிடா இவங்களுக்கு  செமஸ்டர் முடிஞ்சதும் ,நாம முறைப்படி இனியா வீட்டுக்கு போயிட்டு பெண் கேட்கலாம்”

“அம்மா அதுக்கெல்லாம் இப்போ அவசியமில்ல.

அவள் மேற்கொண்டு படிக்கட்டும் என்றவன் அபி நீங்க ஏதோ டூருக்கு போகனும் சொன்னீங்களே எந்த ஊர் டா .”

“ஊட்டிக்கு தான்டா போறோம்.”

“சரி நீயும் எங்கூட வா நாம போய் டாக்டர் பார்த்துட்டு வரலாம் “என்று இருவரும் சைக்காலஜிஸ்ட் குமாரை சந்திக்க சென்றனர்.

இருவரும் நடந்த விஷயத்தை கூற அவரோ யோசித்தவர் ,”சரி கார்த்திக் அவங்க டூருக்கு போகனும் சொன்னாங்க இல்லையா? போய்ட்டு வரட்டும் .பிறகு அவங்க கிட்ட ஏதாவது மாற்றம் இருக்கா பாக்கலாம்.இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறவங்க வெளியூர் செல்வது ரொம்ப அவசியம்.”என்றார் மருத்துவர்.

“டாக்டர் பயப்படும் படி எதுவும் இருக்காது தானே?’

“அப்படி எதுவும் இருக்காது கார்த்திக். அவங்க நார்மலா தான் பிஹேவ் பண்றாங்க சொல்றீங்க அவங்களுக்கு அந்த கனவு மட்டும் தான் பிரச்சனை.நீங்க அவங்க அதே யோசனையில் இல்லாம பாத்துக்கோங்க..

பயப்படும் படி எதுவும் இருக்காதுன்னு

நம்புவோம்.”என்றதும்

அங்கிருந்து கிளம்பினர் சகோதரர்கள்.

கார்த்திக் நடந்த விஷயத்தை கூறியவன் கல்பனாவின் சம்மதத்துடன் இனியாவை சந்தித்தான்.

இனியா தூங்கி எழுந்தவள் எதையோ யோசித்தவளாக அமர்ந்திருக்க கார்த்திக் அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.

அதில் அதிர்ந்தவள்,”ஹலோ! இப்போ எதுக்கு என் பக்கத்தில் வந்து உட்காந்தீங்க.உங்களுக்கு இங்கே என்ன வேலை”

“ஆமா இந்த அம்மா பெரிய மகாராணி இவங்க பக்கத்தில் யாரும் உட்காரக்கூடாது .போடி போ எனக்கு ஒரு கப் காபி எடுத்துட்டு வா”

“ஹலோ !என்ன கட்டின பொண்டாட்டி கிட்ட உரிமையா கேட்கிற மாதிரி கேட்கறீங்க .இந்த வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க.. டேய் அபி எங்கடா இருக்க இங்க வா “என்றவள் வெளியே வந்தாள்.

இவர்கள் இருவரைத் தவிர யாரும் இல்லாமல் இருக்க ,’அச்சச்சோ யாரையும் காணோமே இந்த சிடுமூஞ்சி கிட்ட என்ன தனியா விட்டுட்டு போய்ட்டாங்களா?’என்று நினைத்தவள்,” ஹலோ மிஸ்டர் கார்த்திக்.எங்க யாரையும் காணோம்”என்று கேட்டாள் இனியா.

கார்த்திக் கால் மேல் கால் போட்டு விசில் அடித்தபடி படுத்திருந்தவன் ,”என்னைக் கேட்டா எனக்கு எப்படி தெரியும் மகாராணி ” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

கார்த்திக் இவளின் அறைக்கு வரும் முன்னே அனைவரிடமும்,” நான் அவ அறைக்குப் போறேன் .அவ என்ன கத்தினாலும் யாரும் வராதீங்க. டேய் வானரங்களா நான் சொன்னதை மீறி அந்தப்பக்கம் வந்தீங்க பிச்சிடுவேன் பிச்சி”

“அச்சோ அண்ணா எங்களுக்கு எதுக்கு வம்பு. அவள் இனி உங்க பொறுப்பு அப்படி தானே டா ?”என்று ஸ்ருதி அனைவரையும் பார்த்து கேட்க அனைவரும் ஆமாம் என்று தலையாட்டினர்.

“அண்ணா உங்க நிலைமையை நினைச்சாதான் எங்களுக்கு பரிதாபமாக இருக்கு..” என்று அன்பு சொல்ல அதற்கு வானரக் கூட்டம் “ஆமாவோ ஆமா” என்று கோரசாக கத்தினர்.

அபிஷேக் ,”டேய் வாங்கடா இனி அவன் பாடு.அந்த ரௌடி பேபியை எப்படி சமாளிக்கனும்  அது அவனுக்கு நல்லாவேத் தெரியும்”என்றான்.

“கார்த்திக் அவளை திட்டிடாத சின்ன புள்ள பாவம்டா “என்ற கல்பனாவை முறைத்தவன்,

“ அம்மா உங்களுக்கு எத்தன தடவ சொல்றது .என்னால அவளுக்கு எந்த பிரச்சினையும் வராதும்மா.அவளை எப்படியாவது சரி செய்யனும் அத நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப் படாதீங்க”

“அப்போ சரி கார்த்திக் உங்க அம்மா கோவிலுக்கு போகனும்னு சொல்லிட்டு இருந்தா. நான் இவங்களையும் அழைச்சுட்டு கோவிலுக்கு போறேன் .நாங்க போயிட்டு வரதுக்குள்ள நீ பேசறதெல்லாம் பேசிடு “என்றார் சரவண ராஜன்.

“அச்சோ டாடி சான்சே இல்ல வாட் எ ஃபேமிலி…வாட் எ பேமிலி… எங்க அப்பா ஒரு நாளாவது எனக்கு இப்படி சொல்லி இருப்பாரா “என்று கூறிய அன்பை காதை பிடித்து திருகிய சரவணராஜன் ,”உன்னை பத்தி எங்களுக்கு தெரியாதா? ராசா வா வா போகலாம் “என்றிட அனைவரும் அதில் சிரித்தவர்கள் கோவிலுக்கு கிளம்பினர்.

“கார்த்திக் ப்ளீஸ் சொல்லுங்களேன் .”என்று இனியா கெஞ்சலும் 

கொஞ்சலும் ஒருசேர குழந்தையாய் சிணுங்கியபடி  கேட்க அதில் மயங்கிய கார்த்திக் ராஜன்

“யாரும் வீட்ல இல்ல அது மட்டும் தான் எனக்கு தெரியும்”

“என்ன சொல்றீங்க அப்போ நீங்களும் ,நானும் மட்டும் தான் வீட்ல தனியா இருக்கோமா. அச்சச்சசோ இந்த பிசாசுங்க என்னை தனியா விட்டுட்டு போய்ட்டாங்களா எனக்கு பயமா இருக்கே”என்றவளை முறைத்தவன்,

“ஏண்டி நான் என்ன பூதமா இல்ல பிசாசா ?எதுக்கு என்ன பார்த்து பயப்படற நீ”

“ஏதே உங்கள பார்த்து நான் பயப்படறேனா?அந்த எண்ணம் வேற உங்களுக்கு இருக்கா? நினைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம்..எனக்கு மறுபடி தூக்கம் வருது தூங்கலாம்னு நினைச்சேன் யாரும் இல்லைனா நான் எப்படி தூங்குறது.. எனக்கு எனக்கு மறுபடியும் கனவு வருமோ பயமாயிருக்கு”என்றவளை பார்த்தவனுக்கு மனம் வேதனை அடைந்தாலும் மருத்துவர் கூறியதைப் போல அவளை அந்த நினைப்பிலிருந்து வெளியே கொண்டு வரும்பொருட்டு..

“இப்போ நீ தூங்கனும் அவ்ளோ தானே. தூங்கு நான் தான் பக்கத்தில் இருக்கேனே?”

“ஏதே நீங்க என் பக்கத்தில் இருப்பீங்களா  என்ன விளையாடறங்களா? எழுந்து வெளியில போங்க மிஸ்டர் கார்த்திக் ..ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது உங்களுக்கு இங்கே என்ன வேலை”

“ஏய் நான் யாருன்னு உனக்கு தெரியாதா?”

“ஏன் தெரியாம அபிஷேக் அண்ணா அவ்வளவுதான் அதை தவிர உங்களுக்கும் ,எனக்கும்  என்ன உறவு இருக்கு சொல்லுங்க”

“ஓஹோ! அப்படியா வேறு எந்த உறவும் இல்லையா.? என்ற கார்த்திக் எழுந்து  சென்றவன் அவளை நெருங்க ,”கார்த்திக் இப்போ நீங்க என்ன பண்றிங்க அங்கே நில்லுங்க.”என்றவளை பார்த்துக்கொண்டே மேலும் நெருங்க இதை எதிர்பாராத இனியா,” கார்த்திக் உங்களுக்கு சொல்றது புரியலையா.ப்ளீஸ் வெளிய போங்க”என்றவள் வேகமாக பின்னோக்கி நகர்ந்தாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!