தாரகையின் மாயோன்

மாயோன் -23

“விக்ரம் அப்பாகிட்ட பர்மிஷன் வாங்க னும் அவ்வளவுதானே அது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல . அதை நான் பார்த்துக்கிறேன்

நீங்க மத்த வேலைகளை கவனிங்க” என்ற இனியாவைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.

இனியா அவர்களின் அதிர்ச்சியை பொருட்படுத்தாதவளாய் விக்ரமுக்கு அழைத்தவள் ,”அப்பா நான் இனியா பேசறேன் .நீங்க எப்போ திரும்ப ஊருக்கு வருவீங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசனும் “என்றாள்.

அதைக் கண்டு மேலும் அதிர்ச்சியுற்றவர்கள் இனியாவை சூழ்ந்து நிற்க !ஸ்ருதி சிலையாய் அமர்ந்திருக்க ,”ஓ அப்படியா சரிங்க அப்பா சாப்டீங்களாப்பா ?”என்று நலம் விசாரித்தவள் அழைப்பைத் துண்டித்தாள்.

அபிஷேக் ,”இனியா என்னடி ஸ்ருதி பேச வேண்டியத  நீ பேசுற உனக்கு விக்ரம் அங்கிளை எப்படி தெரியும்.”

“டேய் அது ஒரு பெரிய கதை இப்பவே சொல்லியே ஆகனுமா?”என கொட்டாவி விட்டபடியே கேட்க..

கார்த்திக்,” என்ன அம்மு உடம்புக்கு ஏதும் முடியலையா ?சரி உனக்கு நேரம் கிடைக்கிறப்போ சொல்லு இப்போ போய் ரெஸ்ட் எடுடா” 

“டேய் சும்மா இருடா ..உன் அம்முவை நீ கொஞ்சியது  போதும்.. அவள் நல்லா தான் இருக்கா .?என்ற அபிஷேக் ஆமாண்டி சீக்கிரம் சொல்லு “என்றான்.

இனியா ஸ்ருதியின்  தோளில் கை வைக்க அதில் தன்னிலை அடைந்த ஸ்ருதி,” இனியா இனியா “என்று பேச்சு வராமல் தவிக்க,” என்னடி உனக்கும் நான் அப்பாகிட்ட எப்படி இவ்வளவு சர்வசாதாரணமா பேசறேன் தெரியனுமா?”

“ஆமாண்டி உனக்கு எப்படி அவரை தெரியும். நான் இதுவரை இப்படி அவர்கிட்ட பேசியது கிடையாது  “என்று கலங்கினாள்.

“இங்க பாரு ஸ்ருதி நீ அவரை சரியா புரிஞ்சுக்கல ..அவரும் உன்னை சரியா புரிஞ்சுக்கல ..சரி என்ன நடந்துச்சுன்னு  சொல்றேன்.”என்றவள்…

“ஸ்ருதி உனக்கு ஞாபகம் இருக்கா ,நீ முதன் முதல்ல அப்பாவைப்பத்தி சொல்லும் போது எனக்கும் அவர் மீது ரொம்ப கோவமா இருந்துச்சு ,எனக்கு இன்னொரு சந்தேகம் கூட இருந்துச்சு ஒருவேளை அவருக்கு இன்னொரு குடும்பம் ஏதாவது இருக்குமா ?”என்று இழுத்தவள் ஸ்ருதியை பார்க்க

“ஏய் இனியா அப்பா அப்படிப்பட்டவர் கிடையாது டி.”என்றாள் ஸ்ருதி.

“ஆமா ஸ்ருதி  விக்ரம் அப்பா பத்திரமா தங்கம்  .நான் நினைச்சது தவறு என்று எனக்கு எப்பவோ தெரிஞ்சிடுச்சு..நானும் அப்பாவும்  காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு  போயிட்டு இருக்கப்போ.. எங்களுக்கு முன்னாடி சென்று கொண்டிருந்த கார் ஒன்னு   திடீர்னு நின்னுடுச்சு. அதனால ண

ட்ராபிக் ஜாம் ஆகி எல்லாரும் கத்த ஆரம்பிச்சிட்டாங்க அப்போ அப்பா இறங்கிப் போய் என்னன்னு விசாரிக்க விக்ரம் அப்பா நெஞ்சைப் பிடிச்சுட்டு காருக்குள்ள உட்கார்ந்து இருந்தாரு ,பிறகு கதவைத் தட்டி அப்பாவை பக்கத்து சீட்டில் அமர வைச்சிட்டு அப்பா காரை எடுக்க நாங்கள் உடனடியா ஹாஸ்பிடல் போனோம் .அங்கே அப்பாக்கு மைல்ட் அட்டாக் சொல்லிட்டாங்க ..அப்புறம் ட்ரீட்மென்ட் முடிஞ்சு டாக்டர் இனி கவனமா இருக்கனும் சொல்லி மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்தார்”

“என்னடி சொல்ற அப்பாக்கு அட்டாக்கா எனக்கு எதுவுமே தெரியாது இனியா” என்று அழுதவளின் பக்கத்தில் வந்து அமர்ந்து புவனேஷ் சமாதானம் செய்ய ,”ஸ்ருதி நான் சொல்றதை பொறுமையா கேளு டி.என்ற இனியா 

அப்பா விக்ரம் அப்பாகிட்ட  உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க நான் உங்கள வீட்ல விட்டுடறேன் சொன்னார்.”

“வேண்டாம் சார் நானே போய்க்கறேன்…”

“என்ன சார் விளையாடறீங்களா ?வீட்ல யாருடைய ஃபோன் நம்பராச்சும் கொடுங்க நான் அவங்களை வரச் சொல்றேன்.” 

“சார் நீங்க எனக்கு இவ்வளவு செஞ்சது போதும் .வீட்ல என் பொண்ணு மட்டும் தான் இருக்கா ?இதை கேள்விபட்டா பயந்துருவா நான் வீட்டுக்கு கிளம்பறேன் சார் .எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.”

“சார் அதெல்லாம் முடியாது நான் உங்கள வீட்ல விட்டுடறேன்..” என்றவர் விக்ரம் அப்பாகிட்ட அட்ரஸ் கேட்ட பிறகு அவரின் மனநிலையை மாத்தும்  பொருட்டு அவருடைய குடும்பத்தைப்பத்தி விசாரித்தார். மேலோட்டமாக சொல்லிய விக்ரம் அப்பா உன்னுடைய பெயரை சொன்னாரு .அப்போ அப்பா நீ என்ன படிக்கிற என்று விக்ரம் அப்பாகிட்ட விசாரித்த போது தான் விக்ரம் அப்பா நீ எந்த காலேஜ் அதையும் சொல்ல எனக்கு ஷாக் ஆகிடுச்சு ,அப்புறம் அப்பா என் பொண்ணும் அங்க தான் படிக்கிறா என்று சொல்ல அப்போதுதான் விக்ரம் அப்பா என்னைத் திரும்பிப் பார்த்தவர்.…

“நீ என்னமா படிக்கிற என்று என்னை விசாரிக்க நானும் கூற என் பொண்ணும் அதே டிபார்ட்மென்ட் தான் அப்போ என் பொண்ணு ஸ்ருதியை உனக்கு தெரியுமா ?” என்று கேட்க…

“எனக்கு ஸ்ருதியை தெரியும் அங்கிள் . அவள் என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்..”

“ சரிம்மா அவ கிளாஸ்ல எப்படி இருப்பா?”

“அங்கிள் நீங்க இப்ப என்கிட்ட இவ்வளவு நல்லா பேசறீங்க. ஆனால் ஸ்ருதியை நீங்க புரிஞ்சுக்கவே இல்ல .அவள் பாசத்துக்காக ரொம்ப ஏங்கறா அங்கிள் .ஏன் உங்களுக்கு அது புரியல?”

“இனியா அது எனக்கும் தெரியும் .ஆனாலும் அவளுக்கு திருமணம் முடியற வரைக்கும் நான் இப்படித்தான் இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். அவள் என்னை தப்பா புரிஞ்சுட்டாலும் பரவாயில்ல.. எனக்கு அவளுடைய வாழ்க்கை தான் முக்கியம்”

“என்ன அங்கிள் நீங்க குழப்பறீங்க . எனக்கு நீங்க சொல்றது புதுசா இருக்கு, இந்த மாதிரி நான் யார் சொல்லியும் கேள்விப்பட்டதில்லை..அதுக்கும் நீங்க பாசம் காட்டாததற்கும் என்ன சம்மந்தம்”

“ஸ்ருதி எனக்கு உடம்புல நிறைய பிரச்சினை இருக்கு, இப்பவே பார்த்தியே டாக்டர் என்ன சொல்லி அனுப்பினார் . அவள் பாசத்துக்கு அடிமையாகக் கூடாது.. அவள் என் மேல அதிகமான பாசம் வைக்க வேண்டாம் . அவள் தன்னந்தனியா எல்லாத்தையும் மேனேஜ் பண்ண கத்துக்கனும் .அவளை கட்டிக்கப் போறவனை மட்டுமே அவள் சார்ந்து இருக்கக் கூடாது  ..என்கிட்ட பணத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…இருந்தாலும் அவள் அவளுடைய சொந்த கால்ல நின்னு சம்பாதிக்கனும்..”

இனியா,” அங்கிள் நீங்க சொல்றது எனக்கு பெரிய விந்தையாய் இருக்கு.”

“அது அப்படித்தான் இருக்கும் இனியா. போகப்போக உனக்கும் புரியும். எனக்காக நீ ஒரே ஒரு உதவி செய்வியா?”

“எதுவாயிருந்தாலும் சொல்லுங்க அங்கிள் நான் செய்றேன் .எனக்கு ஸ்ருதி மகிழ்ச்சியாய் இருக்கனும் .நீங்க  அதை கொஞ்சம் யோசிங்க”

“ இனியா கண்டிப்பா அவளை புரிஞ்சிக்கிற மாதிரி அவளுக்கு லைஃப் பார்ட்னர் கிடைப்பான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு ,என் பொண்ணு என்ன சரியா அப்பான்னு கூப்பிட்டது கிடையாது .நானும் வேலை வேலைன்னு கால்ல சக்கரத்தை கட்டிட்டு ஓடிட்டே இருந்துட்டேன் .நீ என்னை அப்பா சொல்லி கூப்பிடுறியாமா?”

இதில் அப்பா ,மகள் இருவரும் அதிர்ந்தவர்கள்,” அங்கிள் நீங்க என்ன சொல்றீங்க .”

சிவக்குமார் ,”இனியா மா அவர் கேட்கிறார் இல்ல அவரை அப்பா சொல்லி  கூப்பிடு”

“சரிங்க அப்பா ஆனால் நான் விக்ரம் அப்பான்னு  தான் சொல்லுவேன். என்றவள் விக்ரம் அப்பா நான் மறுபடியும் சொல்றேன் எங்க எல்லாருக்கும் ஸ்ருதியோட சந்தோஷம் ரொம்ப முக்கியம் ப்ளீஸ் ஏதாவது செய்யுங்களேன்”

“நீங்க படிச்சு முடிங்க 

அவளுக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் இப்போ அது உனக்கு கூட தெரிய வேண்டாம் இனியா .உனக்கு தெரிஞ்சா ஒரு நாள் கண்டிப்பா அவளுக்கு தெரிஞ்சிடும் .”என்றவர் அன்றிலிருந்து மாதம் ஒரு முறையாவது இனியாவை நேரில் சந்தித்து தனது மகளை பற்றி விசாரித்து வந்தவருக்கு ஸ்ருதி செய்யும் குறும்புகளை இனியா கூற அதை நினைத்து அடிக்கடி சிரித்துக் கொள்வார்..

இனியா நடந்ததைக் கூற ஒவ்வொருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க ஆனால் ஸ்ருதி மட்டும் ,”என்னால் இதை நம்பவே முடியல. அப்பாவா இப்படியெல்லாம் பேசினார்.. எனக்கு இப்பவே அப்பாவைப் பார்க்கனும் போல இருக்கு ,என்று அழுதவள் ஆனால் இனியா ஏதோ ஒரு சர்ப்ரைஸ் என்று சொன்னாரே அது என்னன்னு உனக்கு தெரியாதா?”

“தெரியாதுடி நானும் அப்பாவை சந்திக்கும் போதெல்லாம் கேட்டு பாத்துட்டேன் . ஆனால் அப்பா அதைப்பத்தி  என்கிட்ட சொல்லவே இல்ல.”

“நான் நான் இப்பவே அப்பாவை பாக்கனும் ப்ளீஸ் மாமா ப்ளீஸ் நீங்க என்ன அழைச்சிட்டு போறீங்களா ?”

“ஸ்ருதி நீ உங்க அப்பாவை போய் பாருடா .ஆனால் நான் கூட வந்தா அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார்  தெரியல ” என்றான் புவனேஷ்.

“அடடா இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க .ஏய் ஸ்ருதி நாளைக்கு காலையில அப்பாவே ஊருக்கு திரும்பிடுவார் .அப்போ நீ அவர்கிட்ட போய் பேசு ..ஆனால் புவனேஷ் அண்ணா உங்கூட வர‌ வேண்டாம் புரியுதா?”

அதற்கு ஸ்ருதியும் ஓகே சொல்ல இனியாவை அனைவரும் பாராட்ட இனியா இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டவள் கார்த்திக்கை பார்க்க கார்த்திக் அவளின் செய்கைகளை ரசித்தவன்,’ இந்த வாயாடி  இன்னும் எதை எல்லாம் செய்ய போறாளோ  தெரியல? நல்லது நடந்தால் சரி ..?’என்று நினைத்தவன் தனது அறைக்குச் சென்றான்.

 

 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!