இனியாவின் செயலைக் கண்டவன் ‘என்ன இவள் நம்மை இதுவரை பார்த்திராதவள் நீண்ட நாள் பழகியவளைப் போல் இப்படி பேசறாளே?’என்று குழம்பித்தான் நின்றான். ஆனால் அவளின் குரல் மட்டும் எங்கேயோ கேட்டது போல் இருக்க
தன்னிடம் இருந்து அவளைப் பிரித்து நன்றாகப் பார்த்தவனுக்கு பலநாள் தேடி அலைந்த பொக்கிஷம் தன் கைகளில் கிடைத்ததை எண்ணி அந்த கண்ணனுக்கு நன்றி கூறினான்.இப்போது அவளை வேறு யாரோ ஒருத்தியாக நினைக்கத் தோன்றாது அவளை இழுத்து அணைத்து கொண்டவன் மேலும் மேலும் இறுக்கமாக அணைத்தவன் சிறிது நேரம் பிறகு அவளை நிமிர்த்தினான்.அவளின் கண்களைத் துடைத்தவனுக்கு அவளின் நெருக்கம் ஆடவணவனை நிலைக்குலைய செய்தாலும் கண்ணியம் தவறாமல் அவளை எட்டி நிறுத்த அவளோ மீண்டும் அவனை அணைத்தவள்
” மாயோன் என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க” என்றவளின் உடல் நடுங்கிக் கொண்டிருக்க,அவளின் தளிர் கைகள் அவனை அணைத்திருக்க இருவரும் அதே மோன நிலையில் சிறிது நேரம் நின்றிருந்தனர்.
“உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்டி” என்றவனுக்கு பழைய நினைவுகள் எழுந்தன.
பெண்ணவள் அவனிடமிருந்து பிரிந்தவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளின் மொபைல் அழைக்க இவளோ ஃபோனையும் எடுக்க தோன்றாமல் நின்று இருந்தாள்.
அவளின் கைப்பை கீழே விழுந்து இருக்க அதிலிருந்த ஃபோனை எடுத்தவன் அதில் வந்த எண்ணைப் பார்த்தவன் இவன் எதுக்கு இப்போ இவளுக்கு போன் பண்றான் என்று குழம்பினான் அவன்.
அவளிடம் போனை கொடுத்து பேசும்படி கூறினான்.அவள், “ஹலோ “என்றது தான் தாமதம்
“ஹே அறிவு கெட்ட முண்டம் வீட்டுக்கு போகாம எங்கடி இருக்க ?”
“டேய் அபி மனசு சரியில்லன்னு பீச்சுக்கு போனேன்டா ..திட்டாத சரி விடு நான் வீட்டுக்கு போயிட்டு உனக்கு கால் பண்றேன்”
“போடி போடி இன்னைக்கு நல்லா வாங்க போற நீ. உங்க அம்மாதான் எனக்கு ஃபோன் பண்ணி நீ இன்னும் வீட்டுக்கு வரலன்னு சொன்னாங்க”
“சரிடா சரி நான் பார்த்துகிறேன் நீ கவலைப்படாத “என்றவள் அழைப்பை துண்டித்தான்.
இனியா எதிரே இருந்தவனை பார்க்க , “இப்போ பேசியது யாரு “என்று கேட்டான்.
“அவன் என்னோட ஃப்ரண்ட் அபிஷேக்”
“ஓகே உங்க பெயர் என்ன?”
“என்ன மாயோன் நீங்க உங்களுக்கு என் பெயர் தெரியாதா?”
“தெரியலமா அதனால்தான் கேட்கிறேன் சொல்லுங்க”
“என் பெயர் இனியா” என்றதும் அதைக் கேட்டவனுக்கு இப்பொழுது பல முடிச்சுகள்அவிழ விதியை நினைத்து சிரித்துக் கொண்டான் கார்த்திக் ராஜன்.
கார்த்திக் ராஜன்,”நீங்க வீட்டுக்கு கிளம்புங்க” என்றவன் அவளை வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்தான்.இனியா அவனின் ஞாபகத்தில் மட்டுமே வீட்டுக்கு சென்றாள். அவனுக்குமே இவள் ஏன் நம்மை மாயோன் என்கிறாள் என்ற கேள்விக்கு பதில் தெரியாமலே குழம்பி இருந்தான்.
லட்சுமி,”இனியா என்னடி ஏன் இவ்வளவு லேட்டா வர்ற.நாங்க உனக்காக காத்துகிட்டிருப்போம் அது உனக்கு மறந்து போச்சா .ஏன்டி இப்படி பண்ற..ஒரு பெண் பிள்ள வெளியே போனவ சீக்கிரம் வரலைனா பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும்”
“அம்மா ப்ளீஸ் மா கோச்சுக்காத மனசு ஒரு மாதிரியா இருந்துச்சு அதான் பீச்சுக்கு போனேன். நேரம் போனதே தெரியலம்மா..எனக்கு சூடா ஒரு காபி கொடும்மா ப்ளீஸ்”
“என்னடி இவ்வளோ ஈசியா சொல்ற” என்ற லட்சுமியை தடுத்த சிவக்குமார் ,”லட்சுமி நீ போய் காபி கொண்டு வா நான் பேசிக்கறேன்”
என்றார்.
“இனியா இங்க வாடா” என்ற சிவக்குமார் தன் மகளை தன் பக்கத்தில் அமர வைத்தவர் உனக்கு என்னமா மனசு கஷ்டம் . எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லி இருக்கலாம் தான அதை விட்டுட்டு ஏன்டா பீச்சுக்கு தனியா போன”
“அப்பா ஏதோ தோணுச்சு போனேன் பா அது தப்பா?”
“உன்னை யாருமா பீச்சுக்கு போக வேண்டாம் சொன்னா.தனியா எதுக்கு போன ,உன் ஃப்ரென்ட்ஸ் கூட போயிருக்கலாம் இல்ல வீட்டுக்கு வந்தவுடன் எங்க கூட போயிருக்கலாம் இல்லையா?
எதுவா இருந்தாலும் என்கிட்ட மறைக்காத சொல்லுமா அந்த கனவு உனக்கு மறுபடியும் வருதா.நாம டாக்டரைப் போய் பார்ப்போமா?”
“அப்பா சின்ன விஷயத்துக்கு எல்லாம் எதுக்குப்பா டாக்டரை பாக்கனும்.நான் நல்லா இருக்கேன்.. சோ நோ வொர்ரிஸ் பா “என்று தனது அறைக்குச் சென்றாள்.
லட்சுமி காபி எடுத்துக்கொண்டு வர அதை குடித்தவள் ,’அம்மா என்னை பற்றி ஏதும் கவலப்படாத.. எனக்கு எதுவும் இல்ல ஓகேவா
நான் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கறேன் என்னை தொந்தரவு பண்ணாத.”என்று கதவை மூடியவள் பிறகு அபிஷேக் ராஜனுக்கு ஃபோன் செய்து நடந்த அனைத்தையும் கூறினாள்.
அபிஷேக் இதை அனைத்தையும் கேட்டவன்,” என்னடி சொல்ற இனியா. நீ சொல்றதெல்லாம் பார்க்கும்போது அப்படியே சினிமாவில் வர மாதிரியே இருக்கு, ஆனால் அதை நீ அனுபவிச்சிட்டு வந்து சொல்லும் போது எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.சரி நீ இப்போ மனசை போட்டு குழப்பிக்காத படுத்து தூங்கு. நாம நாளைக்கு காலைல பேசிக்கலாம்
.”‘எனவும் இவளுக்கும் அதுவே சரியெனப் பட கண் மூடி தூங்க முயற்சி செய்தவளுக்கு தன்னைக் காப்பாற்றிய அவனின் முகமே மனக்கண்ணில் வந்து போனது.
இதுவரை நேரில் பார்த்திராத அவனை தெரியாமல் மாயோன் என்று நினைத்து கட்டிக் கொண்டு நின்றதை நினைத்துப் பார்த்தவளுக்கு அவன் தன்னை என்ன நினைத்து இருப்பானோ என்று யோசித்தவளுக்கு தூக்கம் பறிப் போனது.
அபிஷேக் தனது பெற்றோர் மற்றும் அண்ணனை அழைத்தவன் இனியாவுக்கு நடந்த விஷயத்தை கூற,” என்னடா சொல்ற இந்த பொண்ணுக்கு ஏன் அடிக்கடி இப்படி நடக்குது. தூங்கும் போது கனவு வந்தா சரி ,ஆனால் வண்டி ஓட்டும்போது இப்படி நடந்துச்சுன்னு சொல்றாளே.. இவளை நம்பி எப்படிடா தனியா வெளியே அனுப்புவாங்க அவங்க அம்மா அப்பா “என்றார் கல்பனா தேவி.
சரவண ராஜன் ,”அம்மா சொல்றது சரி தான் டா ..எனக்குத் தெரிஞ்சு அது உண்மையா நடக்க வாய்ப்பே இல்ல டா .அவளுக்கு ஏதோ ஒரு பிரமை அதையே நெனச்சுக்கிட்டு இருக்கா, அதனாலதான்அப்படி தோணுது..இதை நாம சாதாரணமா எடுத்துக்க கூடாது .உடனடியாக மருத்துவரிடம் கவுன்சிலிங் அழைச்சிட்டு போகனும் டா”என்றார்.
அபிஷேக்,”அப்பா நீங்க இரண்டு பேரும் சொல்றதை தான் நாங்களும் நினைக்கிறோம் என்றவன் அண்ணா நீ ஏன்டா அமைதியா இருக்க உனக்கு என்ன தோணுது சொல்லுடா “
“ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பாரு அந்த பெண்ணை பத்தி பேசிக்கிட்டே இருக்க அவளுக்கு என்ன பைத்தியமா எங்கேயாவது கனவு கண்டுக்கிட்டே வண்டி ஓட்டியிருப்பா ..அதனால அவளுக்கு அப்படித் தோனுது .போடா போய் வேலையை பாரு”என்று கார்த்திக் அலட்சியமாய் கூற,
“ இங்க பாரு கார்த்தி உன்னை பெரிய மனுசன்னு நெனச்சு கேட்டேன் பாரு. என்னை தான் அடிச்சுக்கனும் . நீ எனக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம். அதுக்காக அவளை அப்படி பேசாத ஏண்டா நீ எப்படி இருக்க”
“டேய் உண்மைய சொன்னா கசக்கத்தான் செய்யும் .எல்லாம் வயசுக் கோளாறு ..தேவை இல்லாத நேரத்துல வெளியே சுத்த வேண்டியது ,கண்ட கண்ட படத்தை பார்க்க வேண்டியது ,பிறகு குத்துதே குடையுதே சொன்னா யாரும் எதுவும் பண்ண முடியாது புரியுதா?”
“கார்த்திக் போதும் நிறுத்து. இதுக்கு மேல எதுவும் பேசாத. அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்” என்று கத்தினான் அபிஷேக் ராஜன்.
இருவரின் சண்டையை பார்த்த லட்சுமி தன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட சரவண ராஜன் ,”இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க டா .டேய் கார்த்திக் நீ ஏன் இப்படி பேசற. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?”
“அப்பா ப்ளீஸ் எனக்கு புரியாம எதுவும் இல்ல.அவள் உண்மையை தான் சொல்றாளோ ? இல்ல பொய் சொல்றாளோ யாருக்கு தெரியும் .எல்லாருடைய கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக அவ பொய் சொல்லி இருக்கலாம் இல்லையா?”
“கார்த்திக் போதும் நிறுத்துடா இதுக்கு மேல எதுவும் பேசாத.. அந்தப் பெண்ணைப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும்..
நீ போய் தூங்கு டா” என்றார் கல்பனா.
“எனக்கு தூக்கம் வரல அம்மா. நீங்க பேசுங்க நான் எதுவும் வாயைத் திறக்கல போதுமா..?”
“கார்த்திக் என்னுடைய கோபத்தை கிளப்பாத ,தயவுசெய்து இங்கிருந்து போய்டு என்ற அபிஷேக் அம்மா எனக்கு ஒரு யோசனை தோணுது நான் சொல்றேன் உங்க இரண்டு பேருக்கும் சம்மதம்னா சொல்லுங்க”
கார்த்திக் ஏதோ கூற வர சரவணராஜன் அவனை முறைத்தவர்,” கார்த்திக் கொஞ்சம் அமைதியா இருக்க மாட்டியா ?அப்புறம் எனக்கு என்ன மரியாதை..”என்றதும்..
“சரிங்க அப்பா நான் எதுவும் பேசல”என்று அமைதி காத்தான் கார்த்திக் ராஜன்.
சரவணராஜன்,”அபிஷேக் நீ சொல்லுப்பா”
“அப்பா நான் சொல்றேன்.ஆனால் நீங்க அதை எப்படி எடுத்தீப்பங்கன்னு தெரியல..”
“எதுவாயிருந்தாலும் சொல்லு டா அந்த பொண்ணுக்கு நல்லது நடந்தால் போதும்.”
“சரிங்கப்பா “என்றவன் தானும் தன் நண்பர்களும் சேர்ந்து எடுத்த முடிவை கூற இதில் சரவண ராஜனும், லட்சுமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் கார்த்திக்,” டேய் உனக்கு என்ன பைத்தியமா ?இதுக்கு கொஞ்சம் கூட வாய்ப்பே கிடையாது .கண்டிப்பா நீங்கள் நினைக்கறது நடக்காது ..”என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான்.
தாரகையின் மாயோன் தொடர்ந்து வரும் கனவினால் தூக்கத்தை தொலைத்த நாயகி.அவளுக்கு உறுதுணையாக இருந்து அவளை அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர உதவும் அவளின் நண்பர்கள். நாயகன் அவளை உயிருக்கு உயிராக விரும்பினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக ஆரம்பத்தில் அவளை வெறுப்பது போல்…