தாரகையின் மாயோன்

மாயோன் – 8

  சிவக்குமார் தன் சம்மதத்தை சொல்லியவர் தன் மனைவியை சமாதனம் செய்து அவரை சம்மதிக்க வைத்தார்.

இனியா மாலை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்தாள்.அங்கே அபிஷேக் ராஜனின் பெற்றோரை பார்த்தவள் ஆச்சரியம் அடைந்தவளாக, “ஆன்ட்டி ,அங்கிள் இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க” என்று கேட்டாள் .

கல்பனா தேவி,”நல்லா இருக்கோம் டா. நீ எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போகுது”

“நல்லா போகுது ஆன்ட்டி.எனக்கென்ன ‌சூப்பரா இருக்கேன்” என்றவளை கல்பனா தன் பக்கத்தில் அமர வைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்தார்.

இனியாவின் பெற்றோர்கள் இதை ஆச்சர்யமாக பார்க்க அதை கவனித்த சரவணராஜன்,” இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா இப்படி தாங்க ,மத்தவங்க இருக்கறதையே மறந்திடுவாங்க “என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இனியாவின் பெற்றோர் அதில் மகிழ்ச்சியடைந்தனர்.

“என்னங்க சும்மா இருங்க ,என்ற கல்பனா .இனியா நீ டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு கிளம்பு டா”என்றார்.

“எங்க ஆன்ட்டி கிளம்பச் சொல்றீங்க”

“என்னமா இப்படி கேட்கிற.

உன் வானரக்கூட்டம் ஏதும் சொல்லலையா?”

“இல்லமா நாங்க அவக்கிட்ட எதுவும் சொல்லல “என்ற அபிஷேக் கூற அனைவரும் அங்கே திரும்பிப் பார்க்க  வானரப் படைகள் அங்கே நின்றிருந்தனர்.

இனியாவின் நண்பர்கள் வீட்டுக்கு வர இனியா,” என்னடா திடீர்னு வந்து இருக்கீங்க .என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல..சரி வாங்க டா உட்காருங்க என்றவள் அம்மா காபி எடுத்துட்டு வாயேன்..”

“ஆன்ட்டி எங்களுக்கு எதுவும் வேண்டாம்..ஏய் ரௌடி பேபி நீ கிளம்பு , நம்ம வீட்டுக்கு போய்ட்டு அம்மா கையால காபி குடிக்கலாம்”என்றான் அபிஷேக் ராஜன்.

“என்னடா சொல்ற எங்கே  கிளம்ப சொல்ற நீ ”

“நம்ம வீட்டுக்கு தான்டி கிளம்பு..”

“எது உங்க வீட்டுக்கா.”

“இனியா அறைஞ்சேனாப் பார்த்துக்கோ ,நம்ம வீடுன்னு சொல்றேன். உங்க வீடு சொல்லி பிரிச்சு பேசுற”

“சரிடா சரிடா கோச்சிக்காத இப்போ எதுக்கு நான் அங்கே வரனும்.ஆன்ட்டியும் என்னை கூப்பிட்டாங்க என்றவள் ஆன்ட்டி நீங்களும் உங்க வீட்டுக்கு சாரி நம்ப வீட்டுக்குதான் என்னை கூப்பிட்டீங்களா?”

“ஆமாம் டா நீ ஒரு மாற்றத்திற்கு அங்கு வந்து தங்கி பாரு கூடவே ஸ்ருதியும் வரா,  அதனால கவலைப்படாத”என்றார் கல்பனா தேவி.

“ கவலைப்பட என்ன இருக்கு ஆன்ட்டி ஏன் திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க .நாங்க எல்லாரும் இங்கேயே தங்கறோமே ஆன்ட்டி”

“என்னமா ஏன் இப்படி சொல்ற”

“ஆன்ட்டி நான் ஏன் சொல்றேன்னு உங்களுக்கு புரியும்.ப்ளீஸ் ஆன்ட்டி  நான் வந்தா அங்க இருப்பவர்களுக்கு சங்கடம் தானே?”

“இனியா பெரிய மனுஷி மாதிரி பேசாத .பெரியவங்க கூப்பிடறாங்க தானே நீ யார் கூட தங்க போற

உன் ஃப்ரெண்ட்ஸ் கூட தானே போயிட்டு வா” என்றார் லட்சுமி.

“அம்மா ப்ளீஸ் நீயும் புரிஞ்சுக்காம பேசாத என்னால அங்க போக முடியாது.அது சரி சுற்றுலா பயணம் போக கேட்டதுக்கு முடியாது சொன்னியே.  அங்கேயும் இவங்க தானே என் கூட வரப் போறுங்க.. அங்க அனுப்பாத நீ அபி வீட்டுக்கு போறதுக்கு மட்டும் எப்படி சம்மதம் சொல்ற”

“ஏய் நீ எதுக்கு எதை முடிச்சு போடுற. எங்களுக்கு நீ ஒரே பொண்ணு .உன்னை சுற்றுலா அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது”

“ஓஹோ அப்படியா அப்ப6 என்னாலயும் அபி வீட்டுக்கு போக முடியாது ”

லட்சுமி ,”ஏய் நான் சொல்லிட்டே இருக்கேன் நீ கூட கூட பேசுற “என்று சத்தம் போட,

கல்பனா தேவி,”லட்சுமி ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க.நான் அவகிட்ட பேசிக்கிறேன் என்றவர் இனியா நான் சொல்றத கேளுடா .நம்ம வீட்டுக்கு வரதுக்கு உனக்கு என்ன தயக்கம் .நீ கார்த்திக்காக  யோசிக்கிற 

அப்படி தானே?அவன் உன் விஷயத்தில் தலையிட மாட்டான் நீ உன் வீட்டில் இருக்கிற படி அங்கேயும் ஜாலியா இருக்கலாம்”

“லட்சுமி நீங்க ஏன்  அவளை சுற்றுலா அனுப்ப மாட்டேங்கறீங்க .அபிஷேக்கும் மற்ற பசங்களும் அவளை பத்திரமா பார்த்துப்பாங்க ..

நீங்க அவங்கள நம்பி அனுப்பி வைங்க”

“சரிங்க கல்பனா நான் இதைப்பத்தி மறுபடியும் யோசிக்கிறேன். முதல்ல அவளை உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க”

” லட்சுமி  இதில் யோசிக்க என்ன இருக்கு, சம்மதம் சொல்லுங்க நான் உங்களை வற்புறுத்தறதா  தவறா நினைக்காதீங்க .கல்லூரி வாழ்க்கை என்பது ஒவ்வொரு மாணவர்களுக்கும் மறக்கமுடியாத ஒன்று.அதிலும் சுற்றுலா போவது என்பது அவர்களின் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை மிகவும் இனிமையான நினைவுகளாக இருக்கும்.”என்றார் .கல்பனா.

கல்பனா கூறியதும் லட்சுமி சிவக்குமாரை பார்க்க அவரும் சம்மதிக்கும் விதமாக தலையாட்ட,” சரி கல்பனா நீங்க சொல்றது எனக்கு புரியுது .நான் சம்மதம் சொல்றேன் அவ சுற்றுலா போயிட்டு வரட்டும்”

“ரொம்ப சந்தோஷம் லட்சுமி.இனியா அம்மா சம்மதம் சொல்லிட்டாங்க.. சரி நீ கிளம்பு நம்ம வீட்டுக்கு போகலாம் “என்று மீண்டும் கூறினார் கல்பனா.

“ஆன்ட்டி ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.என்னால இப்போ அங்க வர முடியாது.”

“ஓஹோ !அப்படியா அவ்வளவு தூரம் போயாச்சா அப்போ உனக்கு நான் வேற யாரோ அப்படித்தானே ?”என்று கேட்டான் அபிஷேக்.

“அபி ப்ளீஸ் புரிஞ்சுக்கோ டா”

“எங்களுக்கெல்லாம் புரியுது

. நீ எதுவும் சொல்ல வேணாம் .அவனால உனக்கு எந்த தொந்தரவும் வராது..நீ அவனை நேர்ல பார்த்தா இப்படி பேச மாட்டடி ஒழுங்கு மரியாதையா கிளம்பு”

“அங்கிள் ப்ளீஸ் நீங்களாவது புரிஞ்சுக்கோங்க

நான் நான் எப்படி அங்கிள் அங்க வருவேன்”என்று தயங்கி தயங்கி கூறியவளை பார்த்த சரவண ராஜன்

“இனியா நீ எதுக்கு தயங்குறேன்னு எங்களுக்கு தெரியும் .அதுதான் ஆன்ட்டியும் , அபியும் சொல்லிட்டாங்களேகார்த்திக் நீ இருக்கும் பக்கமே வரமாட்டான் போதுமா?”என்றார்.

அப்பொழுதும் இனியா எதுவும் கூறாமல் அமர்ந்திருக்க..

“இனியா நீ சொல்றத கேட்கும்போது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு ,என் பிள்ளை அப்படி ஒண்ணும் கெட்டவன் இல்லமா. ஏதோ உங்க இரண்டு பேருக்குள்ள தவறான புரிதல் அவ்வளவுதான்.அதுக்கு ஏன் மா நீ அங்க வரமாட்டேன்னு சொல்ற.

எங்க மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”என்று கேட்டார் கல்பனா தேவி.

“அச்சோ நான் அப்படி சொல்ல வரல ஆன்ட்டி”

“உனக்கு விருப்பம் இல்லன்னா நீ வரவேணாம்டா..அபி நானும் ,அப்பாவும் கிளம்பறோம்  டா .நீ பேசிட்டு வா”என்று  கல்பனா தேவி கிளம்பினார். 

“ஆன்ட்டி ஒரு நிமிஷம்  உங்களுக்காக 

நான் கண்டிப்பா வரேன் .ஆனால் உங்க பெரிய மகன் என் கண்ணில் படவே கூடாது .அதுக்கு ஓகேன்னா நான் வரேன்”என்றாள்.

இவள் சொல்றதை பார்த்து வானரங்கள் சிரிக்க அபிஷேக்கும் கூடவே சிரித்தவன் தனது அம்மாவைப் பார்த்தான்.

லட்சுமி, “ என்னடி அவங்க வீட்ல போய் தங்கிட்டு அவங்க பையனை உன் எதிரில் வரக் கூடாதுன்னு சொல்ற.அப்போ அவர் எங்க போவார்”

“ஷப்பா முடியல அதுக்குதானே நான்  போகலை னு சொன்னேன்.நானும் அவரும் ஒரே வீட்டில் இருக்க வாய்ப்பே கிடையாது  மா . அவ்வளவுதான் சொல்வேன்’ என்றாள் இனியா. 

“ஏய் என்னடி சொல்ற..” என்று லட்சுமி இனியாவை  அறைய போக,

“ஆன்ட்டி ப்ளீஸ் ரிலாக்ஸ்  என்ற அபிஷேக் உனக்கு என்னடி அவன் வீட்ல இருக்கக்கூடாது  அவ்ளோ தானே .இருக்க மாட்டான் நீ கிளம்பு…”

“டேய் என்னடா சொல்ற ஏற்கனவே உங்க அண்ணனுக்கு என் மேல கோபம் ..இதில் எனக்காக அவர வெளிய போய் தங்க சொல்லுவியா ?வேணாம் சாமி ஆளை விடு. அந்த சிடுமூஞ்சி  எங்க இருந்தாலும் பரவால்ல நான் அவர் கண்ணுல படாம பாத்துக்கறேன். என்றவள் கல்பனா தேவி ,சரவணராஜன்  இருப்பதை மறந்து தான் பேசியதே எண்ணி நாக்கை கடித்துக் கொண்டவள்  ஆன்ட்டி ,அங்கிள்

சாரி”என்றாள்.

“பரவாயில்ல விடுமா.

ஆனால் நீ அவனை நேரில் சந்திக்கும் நாள் வரும்போது அவன் எப்படிப்பட்டவன் என்று உனக்கு நல்லாவே தெரியும் “என்றார் கல்பனா தேவி.

அதுக்கு கண்டிப்பா வாய்ப்பில்ல என்று நினைத்த இனியா ,”சரிங்க ஆன்ட்டி கொஞ்ச நேரம் இருங்க .நான் போய் கிளம்பி வரேன்” என்று உள்ளே சென்றாள்.

சிவக்குமாரும் லட்சுமியும் அபிஷேக்கின் பெற்றோரிடம் ,”அவள் அப்படி தான் .கோபம் வந்துட்டா என்ன பேசுறதுன்னே அவளுக்கு தெரியாது “என்று மன்னிப்பு கேட்டனர்.

“சார் என்ன நீங்க இதுக்கு போய் மன்னிப்பு எல்லாம் கேட்கறீங்க.அவள் பேசுறது எதுவும் தப்பா எடுத்துக் கொள்ளும்படி இல்லையே.உண்மையை தானே பேசறா”என்றார் சரவணராஜன்.

“இங்க பாருங்க லட்சுமி  பெண்பிள்ளை இல்லாத எனக்கு இனி யாவும் ,ஸ்ருதியும் எங்க வீட்டுக்கு வர்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு ,நீங்க கவலைப்படாதீங்க .இனியா  அங்க இருந்து கிளம்புவதற்குள் கார்த்தியை பற்றி நல்லாவே புரிஞ்சிப்பா “என்றார் கல்பனா தேவி.

கல்பனா பேசியதை கேட்ட  ஸ்ருதி ஓடிச்சென்று கல்பனாவின் மடியில் படுத்துக்கொள்ள அனைவருக்கும் அவளின் நிலமை புரியவே செய்தது.

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!