தூரிகை 28❤️

அமுதன், குழலி இருவரின் பயணமும்  வெள்ளைக் கேட்டிலிருந்து வெள்ளிமலையின் இருளுக்குள் தொடரந்தது ஆனால், அமுதன் இன்னும் கண் திறக்கவில்லை

குழலியும் இறுதியாக ஒரு முறை “அண்ணா” என்று அழைத்தாள்.

அவன் அதை காதில் வாங்கினானோ என்னவோ தெரியவில்லை சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டு அதிலிருந்து குதித்து அங்கிருக்கும் இழை தழைகளில் ஒன்றைப் பறித்து கசக்கி அமுதனின் வாயில் விட்டான்.

“அண்ணா என்ன பண்ணுறீங்க எதையாவது கொடுத்து அவருக்கு ஏதாவது ஆகிட போகுது அண்ணா தயவு செய்து உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் ஏதாவது ஹாஸ்பிடல்ல வண்டிய நிறுத்துங்க அவரை நான் கொஞ்சம் பார்த்துக்கிறேன். என்று பயத்ததுடன் கேட்டாள் குழலி!

அவன் அவள் பேசுவதெல்லாம் கண்டுகொள்ளாமல், ” நீ அவனோட பொஞ்சாதியா” என்றான்.

அவள் தலைக் குனிந்துக் கொண்டே “இல்லை” என்றாள்.

அவன் அதற்கு நக்கல் சிரிப்பை சிரித்து விட்டு “அப்போ  அவன் கூட ஏதும் தொடர்பில் இருக்கீயா” என்றான்.

“இல்லை அண்ணா அவர் யாருன்னு எனக்கு தெரியாது அவரே எனக்கு இந்த ரெண்டு நாளா தான் தெரியும்” என்று கண்ணீருடன் கூறினாள்.

“அது சரி ரெண்டு நாள் தெரிந்ததுக்கே உனக்காக  உயிர் வாழனும்னு நினைக்கிறானா என்ன” என்றான் 

“அது அவரு இப்பதான் அண்ணா சொன்னாரு ஏன் அப்படி சொன்னாருன்னு எனக்கு தெரியல நீங்க இந்த பேச்சை விட்டுட்டு” என்று அவள் இழுக்கும்போதே!!

தன் கையைக் காட்டி தடுத்து விட்டு, “இங்க பாரு என்னால ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு இருக்க முடியாது எனக்கு தெரியும் அவனை எங்க கூட்டிட்டு போகணும் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் அதனால இப்படி நீயும் வாய் வலிக்க கத்தி என் காதை வலிக்க வைக்காதே அவன் அவளோ சீக்கிரம் செத்துப் போயிட மாட்டான்.” என்றான் ஒரு உறுதியுடன்!!

“சரிங்க அண்ணா இப்போ என்னவோ குடுத்தீங்க இல்லை அது என்னது அதனால் அவருக்கு ஏதாவது ஆகப் போகுது” என்று சொல்லி வாய் மூடும் முன்னே அவன் இரும்பினான். அமுதன் 

அவள் மெல்ல அவன் நெஞ்சை நீவி விட்டு, “ஒன்னும் இல்லைங்க” என்றாள்.

அதைப் பார்த்தவன் சத்தமாக சிரித்து, “என்னடா எங்களுக்குள்ள ஒன்னும் இல்லைன்னு சொன்ன இது எல்லாம் என்னவாம் ” 

“இந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அவங்களுக்கு உதவி தான் செய்யணும், இப்படி உதவி கேட்டு வந்தவங்களை கஷ்டப்படுத்தக் கூடாது” என்றாள் சற்று கோவமாக

“எப்படி நீங்க வந்து என்கிட்ட உதவி கேட்டீங்களா இல்ல நானா வந்தேனா “என்றான்.

“ஏதோ ஒன்னு ஆனா நான் உங்ககிட்ட உதவி தானே கேட்டேன். நீங்க எங்களை இப்படி சிறுக சிறுக சாவடிச்சுட்டு இருக்கிறதுக்கு பதிலா அங்கேயே விட்டிருந்தா கூட ஒரேடியா நாங்க ரெண்டு பேரும் செத்து போயிருப்போம்” என்றாள்.

“அப்படியெல்லாம் உங்களை நிம்மதியா சாக விடுவதற்காக நான் இவ்ளோ போராடிட்டு இருக்கேன்.”

“இங்க பாரு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பழைய கணக்கு இருக்கு அது தீரும் வரை அவன் உயிரோட தான் இருப்பான். இப்போ நான் கொடுத்தது கூட விஷம் முறிவு மருந்து ஒருவேளை அவனுங்க கத்தில விஷத்தை ஏதாவது தடவி குத்திருந்தானுங்கனா அந்த விஷம் ரத்தத்தில் கலக்காமல் இருப்பதற்கு தான், அது கொஞ்ச நேரத்துக்குள்ளயே குடுக்கணும் அதுக்கு தான் வண்டியை இவ்ளோ வேகமா ஓட்டிட்டு வந்தேன். பயப்படாத கொஞ்ச நேரத்துல அவன் வாந்தி எடுப்பான் அப்ப மட்டும் சொல்லு வண்டிய ஓரமா நிறுத்துறேன். அவன் வேலையை பாக்கட்டும் நானும் அதுக்குள்ள என்னோட குருவுக்கு தேவையான மூலிகைகளை பறிச்சிக்கிறேன் எங்கேயாவது  தப்பிச்சி அவனை கூட்டிட்டு போகணும்னு நினைச்சேனா சும்மாவே விடமாட்டேன் அதுவும் இல்லாம உங்களால போகவும் முடியாது என இந்த காடு முழுக்கவும் எங்களுடைய கண்ட்ரோல்ல தான் இருக்கு எது எது எப்ப எந்த நேரத்தில் வரும்ங்கிறது எங்களுக்கு தான் தெரியும்” என்றான்.

அவளுக்கு அதற்கு எந்த பதில் சொல்வது என்று தெரியாமல், “சரிங்க அண்ணா!” என்றாள்.

அவளுக்கு தற்போது அமுதன் உயிர் பிழைத்தால் போதும் என்றானது அவன் உயிர் பிழைத்து வந்துவிட்டால் இவர்கள் எல்லாம் அவனே பார்த்துக் கொள்வான். இந்த இரண்டு நாட்களிலேயே அவன் மேல் அத்தனை நம்பிக்கை அவளுக்கு அதனால் தற்சமயம் அவன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக் கொள்ளலாம் என்று பொம்மையை போல் தலையாட்டிக்கொண்டாள்.

அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் அமுதன் வாந்தி எடுக்கவும்  வண்டியை நிறுத்திவிட்டு அவன் தன் வேலையை பார்க்கவும் அமுதன் வாந்தி எடுக்கும் சரியாக இருந்தது. வாந்தி எடுத்து முடித்தது குழலி அவனை மீண்டும் தட்டு தடுமாறு அவனை தன் தோளில் சுமந்து கொண்டு வண்டியில் கிடத்தினாள்.

“பரவாயில்லையே சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே ” என்றான்.

“இப்போதைக்கு இந்த நேரத்துல அவரை காப்பாத்த உங்களது தான் எனக்கு வேற ஆள் இல்லை இப்போதைக்கு நான் உங்களை நம்பித்தான் ஆகணும் அதுவும் இல்லாம எனக்கு ஒரு நம்பிக்கை வந்துருச்சு எப்படியும் நீங்க அவரோட உயிரை காப்பாத்துவீங்கன்னு அவர் சரியாகி வந்த உடனே அவரே எங்கள காப்பாத்திடுவார் ” என்றாள்.

“அது சரி ரெண்டு நாளில் இந்த அளவுக்கு நம்பிக்கையா? என்னவோ அது எல்லாம் கடவுளுக்குத் தான் வெளிச்சம் ” என்று கையை மேலே தூக்கி சொல்லிவிட்டு அமுதனை வண்டியில் ஏற்ற உதவி செய்து ஓட்டுனர் இருக்கையில் ஏறி வண்டியை இயக்கினான்.

அவளும் இரண்டு பேர் மேல் உள்ள நம்பிக்கையில் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

வண்டியும் சீரான வேகத்தில் செல்ல, குழலி மெல்ல அவனிடம், “அண்ணா அப்படி என்ன உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனை,”என்றாள்.

“அதை நான் அவன் பொஞ்சாதி கேட்டாலே சொல்ல மாட்டேன், உனக்கும் அவனுக்கும் என்ன உறவுனே தெரியல உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று முகத்தில் அடித்தார் போல் சொன்னான்.

அவன் சொன்ன பதிலில் குழலிக்கு தான் தவறு செய்யாமல் இந்த பழிக்கு ஆளாகி விட்டோமே என்று குற்ற உணர்வாகிப் போக அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

ஆனால், வாய் மட்டும்தான் அமைதியானதே தவிர உள்ளுக்குள் ‘ சென்னையில் இருக்கிற ஒருத்தருக்கும் இந்த வெள்ளி மலையில் இருக்கிற ஒருத்தருக்கும் இவ்வளவு பகையாகும் அளவுக்கு அப்படி இவர் என்னதான் பண்ணி இருப்பார் ஒரு கொலை பண்ணிட்டாரு என்பதற்காக இவரை தப்பாவும் நினைக்க முடியலையே!! அப்படி பாத்தா என்னையே காப்பாத்திட தானே இருக்காரு.. இதோ இப்ப வரைக்கும் இவரு அனுபவிக்கிற எல்லா கஷ்டத்துக்கும் நானும் தானே ஒரு காரணம்!!’ என்று தன்னை தானே நொந்துக் கொண்டு, ” அண்ணா இவரை உங்களுக்கு எப்படி தெரியும்” என்று மீண்டும் அவனிடமே கேள்வி கேட்டு நின்றாள் பேதையவள்..

“உனக்கு நான் ஒரு தடவை சொன்னா புரியாதா இப்போ உனக்கு அவன் உயிரோட வேணுமா வேண்டாமா?” என்றான்.

“உயிரோட வேண்டும் அண்ணா” என்றாள்.

“அப்போ அமைதியா வாய மூடிக்கிட்டு வா உனக்கும் அவனோட உயிர் வேணும் எனக்கும் அவனோட உயிர் வேணும் ” என்றான்.

“சரிங்க அண்ணா இதுக்கு மேல நான் பேசல” என்று கூறி விட்டு தன் வாயை  பிளாஸ்த்ரி போட்டு ஒட்டியதைப் போல் மூடிக்கொண்டாள்.

அவனும் எதுவும் பேசாமல் தன் வழியை நோக்கி பயணித்தான்.

அவன் யாரு என்று யோசித்து இவளுக்குத்தான் மண்டை வெடித்து சிதறி விடும் போல் ஆகிவிட்டது. இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் தற்போது அவன் உயிர் ஒன்றே முக்கியம் என்று அமைதியாகிவிட்டாள்.

இங்கு மருத்துவமனையில் சேகரும், அவனின் நண்பனும் அந்தப் பெண்மணியின் கணவருக்காக காத்திருக்க, பொழுது விடியும் தருவாயில் அவன் வந்து சேர்ந்தான்.

வந்தவன் தனக்கு போன் வந்த எண்ணிற்கு மீண்டும் அழைத்து, ” ஹலோ நீங்க நேத்து நைட்டு போன் பண்ணி இருந்தீங்க என்னோட ஒய்ஃப்க்கு ஆக்சிடென்ட் ஆகி அவ இறந்துட்டான்னு சொல்லி அவளோட பாடிய வாங்கிட்டு போக வந்திருக்கேன்” என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒரு குரல் வரவும் சேகரின் நண்பன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வழியை சொல்ல அவனும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அங்கு வந்து சேர்ந்தான்.

வந்தவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் இருவரும் முழித்து நிற்க அவனே தொடர்ந்தான் “எல்லாம் முடிஞ்சதா எப்ப பாடிய தருவாங்க” என்று கேட்டான்.

இருவருக்கும் இவன் என்ன ராகம் எப்படி இறந்தார்கள் என்று கூட ஒரு வார்த்தை கேட்கலையே என்று தோன்றி அவனையே ஆவென்று பார்த்துக் கொண்டிருக்க அவனும் இவர்கள் முன் சொடக்கிட்டு “உங்களைத்தான் கேட்கிறேன் எப்போ பாடி தருவாங்க” என்றான்.

அதில் சேகர் முதலில் தெளிந்து “இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல கொடுத்திடுவாங்க சார் நீங்க வாங்கிட்டு போயிடலாம் ஆனா எனக்கு ஒரு சந்தேகம்” என்று தலையை சொரிய “என்னவா இருந்தாலும் கேளுங்க என்ன ஆச்சு எதனால் ஆக்ஸிடெண்ட்னு நான் கேக்கலன்னு யோசிக்கிறீங்களா! என்றான். அவன் சொல்ல வந்ததை இவனே சொல்லி முடித்தான்.

சேகர் தன் மண்டையை நாளா புறமும் ஆட்ட, ” அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும் ஏதோ தப்பு பண்ணத்தான் அவ உங்களோட சேர்ந்து வந்து இருக்கா அந்த தப்பு அவளுக்கே தப்பா முடிஞ்சு போயிடுச்சு இனிமே அத பத்தி பேசி என்ன ஆகப்போகுது இறந்தவங்களை பத்தி தப்பா பேசக்கூடாது இல்லைங்களா அடுத்தது ஆகுற வேலையை பார்ப்போம். ” என்றான் 

அவனுக்குத்தான் தன் மனைவியை பற்றி நன்றாக தெரியுமே இருந்த போதிலும் குழந்தைகளுக்காக அவளை பயமுறுத்தியாவது வைத்திருக்க வேண்டும் என்று தான் வைத்திருந்தான் ஆனால் அது இன்று முடிந்து இறந்து விட இதுவும்  நல்லது என்று தன் வேலையை பார்க்க சென்று விட்டான் அவன்!!

அவளின் உடல் உடற்கூறு ஆய்வு செய்து தர அதை வாங்கிக் கொண்டு தன் வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

இவர்களும் இனி அமுதனிடம் தலையிடக்கூடாது என்று ஒரு முடிவுடன் அவர்களின் வேலையை பார்க்க சென்று விட்டனர்.

இங்கு  வண்டி ஓட்டி வந்தவனோ அமுதனை தன் குருநாதரிடம் அழைத்து வந்தான். அவனைப் பார்த்த குருநாதர் அமுதனை கண்டதும் அதிர்ச்சியில் நின்றார்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page