அவன் பிள்ளைகள் தான் குத்தி விட்டனர் என்று குழலி கூறியதை கேட்டவர் அங்கிருக்கும் ஜாடியை உடைத்து விட்டு, ” அவனுங்க ஒன்னும் அமுதனுடைய பசங்க இல்லை” என்றார்.
இதைக் கேட்ட குழலிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் என்னங்க “ஐயா சொல்றீங்க அவங்க அவங்க பசங்க இல்லையா?” அதிர்ச்சியாக கேட்டாள்.
“ஆமா மா இது வரைக்கும் எங்களுக்கு மட்டும் தெரிஞ்ச உண்மைய உனக்கு சொல்றேன் அப்பவாவது அவன பத்தி நல்லா தெரிஞ்சுக்கோ” என்றார்.
“சொல்லுங்க கேட்கிறேன் ” என்றாள். குழலி மிகவும் ஆர்வமாக
அதே நேரம் இங்கு அமுதனின் இளைய மகன் அமுதன் “எங்க அப்பா இல்லையா?” என்றுக் கேட்டதற்கு அம்மா கண்களை ஒரு நிமிடம் மூடி திறந்து “ஆமா அமுதன் உங்க அப்பா இல்லை” என்றார்.பொன்னமா
அதைக் கேட்டவன் அங்கிருந்த உணவு மேஜையை அடித்து உடைத்து, “அப்போ எங்களை அப்பன் பேரு தெரியதவங்கன்னு சொல்லுறீயா” என்றார்கள்.
பொன்னம்மா அதற்கு ஆவேசமடையாமல் கண்களை மூடி திறந்து, ” நீங்க எவ்வளவு கோவமாக கேட்டு பொருளை உடைச்சாலும் இதுதான் பா உண்மை” என்றார்.
அதில் அவனுக்கு இன்னும் கோவம் தலைக்கு ஏறி பொன்னம்மாவின் கழுத்தை பிடிக்க வர அவனின் அண்ணன் வந்து தடுத்து “இருடா அவங்க என்னதான் சொல்றாங்கன்னு கேட்போம் ” என்றுக் கூறி தன் தம்பியை சமாதானம் செய்து விட்டு, அவரிடம் திரும்பி கைகளை கூப்பி ” நீங்க சொல்றது எங்களை எவ்வளவு கஷ்டப்படுத்துவது உங்களுக்கு தெரிந்து தான் சொல்றீங்களா பொன்னம்மா” என்று உள்ளுக்குள் உடைந்துக் கேட்டான்.
அவனின் மனநிலை அப்படி பாசமே இல்லையென்றாலும் இவர் தான் அப்பா என்ற அங்கிகாரம் இருந்தது இன்று அப்பன் தெரியாத பிள்ளை என்பது அவ்வளவு வலியைக் கொடுத்தது. ஒரு வார்த்தை அவர் தான் உன் அப்பா என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா என்று அவரையே பார்க்க அவரோ
“கஷ்டமானாலும் இது தான் பா உண்மை என்றார்.
“அப்படினா எங்க அப்பா யாரு, இவ்வளவு நாள் எங்க அப்பானு சொன்னா அமுதனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்” என்றார்கள் குரல் உடைந்து
“சொல்றேன் பா” என்று அமுதனின் வாழ்க்கை மர்மங்களை கூற தொடங்கினார்.
அதே போல் இங்கு நீல கண்டனும் குழலிடம் கூறினான். அப்படி என்ன தான் நடந்தது அமுதனின் வாழ்வில் நாமளும் பார்ப்போம்.…
சில வருடங்களுக்கு முன்பு
“அம்மா சீக்கிரம் மா டைம் ஆகுது ஆனா இரண்டு வாரத்துக்கு ஒருமுறை நான் வருவதும் போதும் எனக்கு பலகாரத்தை இங்கிருந்து கட்டிக் கொடுக்கிறதும் போதுமா பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை பார்த்து சிரிக்கிறார்கள் அம்மா!” என்று தன் அன்னையிடம் சிணுங்கி கொண்டு இருந்தான் அமுதன்!!
“அவங்க எல்லாம் அப்படித் தான் சிரிப்பாங்க அதுக்காக என் பையனோட உடம்பை கெட்டு போறதுக்கு நானே அனுமதிக்க முடியுமா? அதனால கொஞ்சம் நேரம் அமைதியா இரு இதோ செஞ்சிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே தன் மகனுக்கு தேவையான பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அமுதனின் அன்னை!!
“எப்படியும் சொன்னாலும் கேக்க போறது இல்லை எடுத்து வைக்கிறீங்க அப்படியே நீலனுக்கும் சேர்த்து எடுத்து வைங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உள்ளே வந்தான்.
“எப்படிடா ஆயுசு நூறு இப்பதான் உன்னை பத்தி பேசிட்டு இருந்தேன்” என்றான் அமுதன்.
“எப்படிடா நல்ல விதமா தானே பேசின” என்று கேட்டான் நீலன்
“உன்னைப் பத்தி நல்ல விதமா பேச என்ன இருக்கு” என்று கிண்டல் செய்தான் அமுதன்.
“ஆமா என்கிட்ட மட்டும் நல்லா வாய் பேசு ஆனா காலேஜ்ல யாராவது ஏதாவது பேசினா கூட அமைதியா போ” என்று நீலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அமுதன் தன் வாய் மீது விரல் வைத்து, ” அப்படி எல்லாம் சொல்லாதடா” என்றான்.
அதை கவனித்து அமுதனின் அன்னை ” என்னாச்சுடா என்ன பண்ணா இவன்” என்றார்.
“இவன் என்ன பண்ண போறான் அத்தை ஒரு பையன் வந்து இவனை போன வாரம் அடிச்சிட்டான் இதோ பாருங்க காயம்” என்று அவன் மோவாயில் இருக்கும் காயத்தை காட்ட, ” டேய் இது அடிச்சதா இவன் கீழே விழுந்ததாக சொன்னானே டா” என்றார் அதிர்ச்சியாக!!
“அட நீ வேற ஏன் அத்தை ஏதோ புக்ஸ் தரலையா நோட்ஸ் தரலையான்னு தெரியல அதுக்கு எனக்கே நோட்ஸ் தர மாட்டீயான்னு சொல்லி அடிச்சிட்டான் அத்தை அதை வாங்கிட்டும் சும்மாவே இருந்தான். நானா என்னடான்னு கேட்ட அப்புறம் கூட சொல்லவே இல்லை, இவன் கிளாஸ் மென்ட் கேட்டு தெரிஞ்சிகிட்டு நானும் என் டிபார்ட்மெண்ட் பசங்களும் போய் தான் பிரின்ஸ்பால் கம்ப்ளைன்ட் பண்ணினோம் அப்புறம் பிரின்சிபால் அவனை காலேஜ் விட்டு சஸ்பென்ஸ் பண்ணாங்க என்ன முன்னாடியே தெரிஞ்சி இருந்தா ரெண்டு மிதி மிதிச்சு இருக்கலாம்” என்றான் ஆவேசமாக!!
அவன் அண்ணன் இவனை பார்க்க கூட படிக்கிற பையன் எப்படி குறிப்பிட்டு கம்ப்ளைன்ட் பண்ண முடியும், அதுவும் இல்லாம அவன் பெரிய இடத்து பையன் வேற என்றான்.
அதுக்குன்னு இப்படி அடி வாங்கிட்டு சும்மாவே இருப்பியாடா? என்றார் அவர் அன்னை கவலையாக
” நீ வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுதில்லடா” என்று அவனை பார்த்து கண்டிக்க…
நீலன் அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் தன் அத்தையிடம், “கொஞ்சம் தைரியமா இருக்க சொல்லு அத்தை எப்ப பாரு பயந்துகிட்டே இருக்கான்.” என்றான்.
“டேய் எனக்கு பயமா இருக்கு டா நான் என்ன பண்ணுறது சரி சரி வா டைம் ஆகுது சீக்கிரமா போகலைனா பஸ் மிஸ் ஆகும், அடுத்த பஸ்ல போனோம்னா நாளைக்கு காலைல கிளாஸ் லேட் ஆகும் அப்புறம் மேடம் வந்து திட்டுவாங்க,” இன்று தன் நண்பனிடம் கூறிவிட்டு அன்னையிடம் திரும்பி, ” நீ எல்லாத்தையும் எடுத்து வையுமா நான் போய் மாமாவ பாத்துட்டு வரேன் ” என்று தன் மாமனை பார்க்க சென்று விட்டான்.
அவன் சென்றதும், “ஏன் அத்தை இவனை இவ்வளவு பயமா வளர்த்து வெச்சிருக்க” என்றான் நீலன்.
“என்னடா பண்றது கைக்குள்ளேயே வச்சு வளந்துட்டேன் இப்போ இப்படி பயமாவே இருக்கான், நீ இருக்கிற தைரியத்துல தான் நான் அவனை அந்த காலேஜ்லயே சேர்த்து இருக்கேன் கொஞ்சம் பார்த்துக்கோடா, படிப்புல எல்லாம் நல்லா தான் வருவான் நம்பிக்கை இருக்கு,, ஏன்னு தெரியல டா எனக்கு என்னவோ மனசுக்கு தப்பா படுது தெரியல” என்று பெற்ற தாயாக பயந்தார்.
“எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் அத்தை நீ கவலை படாத ” என்று அவன் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தான்.
அதே நேரம் பிராமண்டமான தன் மாமன் வீட்டிற்கு வரும்போது அவனின் மாமன் மகள் எதிரே வருவதைப் பாராமல் இடித்து விட, “அட சீ பார்த்து வர மாட்டா உன்னால பாரு என் டிரஸ் எல்லாம் கசங்கிப் போச்சு,” என்று தன் உடைகளை சரி செய்துக் கொண்டு அவனை ஒரு மனிதனாகக் கூட மதிக்காமல் சென்றாள். அவள்!!
அது அவனுக்கு ஒரு மாதிரியாகி போனாலும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், “சாரி மா” என்று சொல்ல அவள் காற்றை விட வேகமாக பறந்து சென்று விட்டாள்.
இவனும் தன் மாமனைப் பார்க்க உள்ளே செல்ல அவரும் அவனை இன்முகத்தோடு வரவேற்று, ” என்னப்பா எனக்கு காலேஜுக்கு போறியா? ” என்று கேட்டார்.
“ஆமா மாமா, போனா இன்னும் ரெண்டு மாசத்துக்கு வர முடியாது அதுதான் உன்னைய பார்த்துட்டு போலாம்னு வந்தேன் உன் உடம்ப பத்திரமா பாத்துக்கோ அப்படியே அம்மாவையும் பாத்துக்க மாமா” என்றான்.
“நான் என்னைய பார்த்துக்கிறேன் நீயும் உன்னைப் பார்த்துக்கோ, சீக்கிரமா படிப்பு முடிச்சுட்டு வா என் பொண்ணு உனக்காகத்தான் காத்திருக்கிறாள்” என்றார்.
‘அவளா எனக்காக காத்திருக்கிறாள் என்னை பார்த்தாலே அவளுக்கு பிடிக்க மாட்டேங்குது இதை மாமாக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியே ஒரு சின்னதாக ஒரு சிரிப்பை மட்டும் சிரித்துவிட்டு “சரி மாமா நான் வரேன்” என்று தன் மாமனை ஒரு முறை கட்டி அணைத்து விட்டு வந்தான்.
அவனுக்கு தன் மாமன் மீது அலாதி பிரியம், தன் தாய் சொல்வதைக் கூட கேட்க மாட்டான் ஆனால், தன் மாமன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை கேட்காமல் இருக்கவே மாட்டான் அவருக்கும் அந்த அளவுக்கு பிரியம்…
அதன் பிறகு, வீட்டிற்கு வந்து தன் மாமன் மகனும், நண்பனுமான நீலனுடன் சேர்ந்து கல்லூரிக்கு விரைந்தான்.
அமுதன் கட்டிடத்துறை பொறியியலும் நீலகண்டன் கெமிக்கல் இன்ஜினியரிங்கும் ஒரே கல்லூரியில் படித்தனர். அமுதன் கல்லூரி காலங்களில் எல்லாம் பயந்த சுபாவம் அவனை காப்பாற்றுவதே நீலன் தான்..
இப்படியே இவர்கள் படிப்பு சென்றுக் கொண்டிருந்த வேளையில் ஒரு முறை நீலன் அமுதனை சினிமாவிற்கு அழைத்தான். அவன் வர மறுத்தும் நீலன் அவனை அழைத்து சென்றான்.
சினிமா தியேட்டரில் அமுதன் ஒருவனை இடித்து விட அவன் அமுதனை அடிக்க கை ஓங்கும் நேரம் தான் தெriந்தது அவன் தன் சிறு வயது பள்ளி கால நண்பன் என்று அவனை பார்த்து, “டேய் நீ முத்து தானே” என்றான் அமுதன்..
“அட ஆமா நீ அமுதன் தானே அப்போ சின்ன வயசுல பார்த்ததுல ஒன்னும் ஞாபகமே இல்லை… சரி சரி வாங்க மூவி தானே போறீங்க எல்லாரும் சேர்ந்தே பார்க்கலாம் ” என்று மூவரும் சினிமா பார்த்துவிட்டு வந்தனர்.
முத்துவின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருப்பதாலும், இவனுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லாதலும் இங்கேயே இருந்தான்.
அது குறித்து பலமுறை நீலனும் அமுதனும் கேட்ட போது கூட மறுத்து விட்டான். இவர்களும் அதைப் பற்றி கேட்காமல் எங்கு சென்றாலும் மூவரும் சேர்ந்தே சென்றனர்.
இப்படியே சென்று கொண்டிருக்க அமுதனின் மாமாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று ஒரு தகவல் வர இருவரும் ஊருக்கு கிளம்ப விரைந்தனர் அப்போது அங்கு வந்த முத்து “எங்கடா போறீங்க நானும் வரேன்” என்றான்.
“எங்க சித்தப்பாக்கு உடம்பு சரியில்ல அதனால ஊருக்கு போறோம் டா” என்றான் நீலன்..
“அப்போ நீங்க இல்லாம நான் என்னடா பண்ண போற நானும் வரேன்” என்றான் முத்து.
“டேய் நீ எதுக்கு வர இங்க இருந்து காலேஜ் போடா” என்றான் நீலன்,,
” என்னால உங்கள விட்டு இருக்க முடியல டா நானும் வரேன் ” என்றதில் அமுதன் “சரி விடுடா வரட்டும்” என்று சொல்ல மூவருமாக வெள்ளி மலையை நோக்கி பயணித்தனர்.
அங்க போய் பார்த்ததும் அமுதனின் மாமாவிற்கு காய்ச்சல் நீலன் அவருக்கு சித்த வைத்தியத்தில் சிஷ்யன் என்பதால், அவர் சொன்ன மருந்துகளை எல்லாம் கொடுத்து அவரை சரியாக்கினான் பத்து நாட்கள் மூவரும் அங்கேயே இருந்து விட்டு, மீண்டும் கல்லூரி வந்து நாட்கள் அதன் போக்கில் நகர முத்துவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்று தகவல் வர முத்து வெளிநாட்டிற்கு மனமே இல்லாமல் விரைந்தவன் வரவேயில்லை… இப்படியே செல்ல
மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஊரிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
இவர்களும் சென்றனர் அங்கு இவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்,,
