தூரிகை 36 (நிறைவு பகுதி )❤️

அவன் அவளுக்காக சாந்தி முகூர்த்த அறையில் காத்திருக்க அவள் அன்னம் போல் மெதுவாக நடந்து வந்தாள். அதிலேயே அவனுக்கு இதய துடிப்பு தாறு மாறாக எகிறி குதித்தது. இவளின் நிலைமையும் அதே தான்,,

இருவருமே இதற்கு முன்பு இந்த நிகழ்வை அனுபவித்து இருந்தாலும் அது இருவருக்குமே ஆனந்தத்தை கொடுக்கவில்லை ஒருவனுக்கு கசப்பான மனவருத்தத்தையும் அவளுக்கு கசப்பான உடல் காயங்களையும் தான் கொடுத்தது.

அது எல்லாம் நினைத்துக் கொண்டே வந்தவள் கைகள் நடுங்க அவனுக்கு பாலை ஊற்றி கொடுத்தாள். அவள் கைகள் நடுங்குவதே பார்த்தவன் அவள் கைகளை பிடித்து, “எனக்கு வேண்டாம் அதை அங்க வை” என்றான்.

அவன் தன் கையை பிடிக்கும் போது தான் தெரிந்தது அவனுக்கும்  வேர்வை வருவது அவள் அதை மெல்ல துடைத்துவிட்டு, ” ஏங்க என்ன ஆச்சு” என்று கேட்டாள்.

“ஒன்னும் இல்ல தூங்கலாமா” என்றான்

“ஏங்க நான் ஒன்னு கேட்பேன் நீங்க உண்மைய சொல்லணும்”

“கேளு”

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு அது உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே ” என்றாள்.

அவன் அவள் கைகளை பிடித்து தன் அருகில் அமர்த்தி “எனக்கும் தான் கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க” என்றான்.

அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க…. 

“தூங்கலாமா” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.

“ஏங்க என்கூட பேச பிடிக்கலையா?” என்றாள்.

அவன் அவள் புறம் திரும்பி, “நான் ஒன்னு சொல்லுவேன் நீ என்னை தப்பா நினைச்சுக்க கூடாது” என்றான்.

“சொல்லுங்க நமக்குள்ள எந்த ஒளிவு முறையும் இருக்கக் கூடாது” என்றாள்.

அவன் மெல்ல தயங்கி கொண்டே, ” எனக்கு இது எல்லாம் தெரியாது டி நீ சொல்லி தரீயா, நா நான் கத்துக்கிறேன் ஆனால் நான் பாஸ்ட் லேர்னர் சீக்கிரம் கத்துக்குவேன்.” என்றான் வெகுளித்தனமாக 

அவளுக்கு கோவமோ தப்பான உணர்வும் தோன்றாமல் அவனின் குழந்தை தனம் தான் தெரிந்தது அதை புரிந்துக் கொண்டவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வர அவன் கண்களிலும் கண்ணீர் வந்து துடைத்துவிட்டு, ” இவன் கூட எப்படி வாழுவது யோசிக்கிறியா? ” என்றான்.

“அதெல்லாம் இல்லைங்க ஆனால், இதெல்லாம் சொல்லித் தந்து வருவது இல்லை அது ஒரு உணர்வு, அதை புரிஞ்சிக்கணும் ” என்று முதலில் அவன் நெற்றியில் முத்தமிட்டாள். முதன் முதலில் ஒரு பெண்ணிடமிருந்து முத்தமதில் அவன் கண்கள் விரிந்தது அவள் மெல்ல கன்னங்களில் முத்தமிட்டு இறுதியாக அவன் இதழை சிறை பிடிக்க அவனும் அவள் இடையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

பின் கூச்சம் வந்து அவள் இடையில் இருந்து கையை எடுக்க அவளே அவன் கையை எடுத்து அவள் மேனி எங்கும் கோலமிட கற்றுக் கொடுத்தாள். அவனும் அவளை தவறாக நினைக்காமல் காதல் கலையை அவளிடம் கற்றுக் கொண்டு அவளிடமே அந்த வித்தையைக் காட்ட பெண்ணவளுக்கு கூச்சம் ஏற்பட்டு போதும் என்றாள்.

அவனோ எனக்கு வேணும் என்று இழுத்து  கழுத்து வளைவில் முத்தம் வைக்க அவளுக்கு உடல் எங்கும் சிவந்தே போய் விட்டது.

ஒரு மிருகத்திடம் மாட்டி பல முறை நக கீறல்களில் சிவந்தது போக இன்று கூச்சத்தில் சிவந்தாள்.

அவளின் முகத்தில் கண்ட உணர்வு பிடியில் தன்னை நோக்கி மீண்டும் இழுத்து குனிந்து மேல் உதட்டினை தன் உதட்டால் கடிக்கும் போது பெண்ணளவளின் கண்கள் சொருகி ஏகாந்த நிலையில் முணங்க

இருவரும் சித்தம் மறந்து, வயது மறந்து சுற்றம் மறந்து தங்களை தங்களுக்குள்ளே தேடி தேடி தொலைந்து போய் 

இதுவரை, தனக்கு எந்த பெண்ணிடமும் தோன்றாத உணர்வு இவளை சேர்வதற்காகவே என தோன்ற பிரம்மச்சரியங்கள்  விரதங்கள் கலைய அவளின் மேனியெங்கும் முத்த போர் நடத்தினான்.

ஒரே நாளில் கற்றுக் கொண்டதை விட இரு மடங்கு காதலை செய்தான். 

இதழில் தொடங்கிய காதல் முத்தம் மீண்டும் இதழுக்கு வந்தது..…

 

இருவரின் அங்கங்களும் ஒன்றாய் மாறி போக அவளின் மேனியில் வடிந்த வியர்வை துளிகள், கூட அவனுக்கு தேனாய் இனித்தது.

அவனின் முதல் காதல் போர்க்களையை அவளும் நிகழ்த்த அதில் இருவரும் தோற்றுப்போக ஒருவருக்கு மற்றொருவர் ஆடையென மாறிப் போயினர்.

அவர்களின் வாழ்வின் வண்ணங்களை அவர்கள் காதல் தூரிகையைக் கொண்டு வண்ணமிட்டுக் கொண்டனர்.

காதல் போரை வெற்றிகரமாக நிகழ்த்தி அது முடிந்த வேளையில், 

தன் பயத்தில் தெளிந்த ஆனந்தம் அவனுக்கும் தான் அவனுக்கு பொருத்தம் இல்லை என்று கலைந்த ஆனந்தம் அவளுக்கும் வர இருவருக்கும் கண்ணீர் வந்தது….. 

எத்தனையோ இரவுகள் தனிமையில் தூங்காமல் கழித்தவர்கள் இன்று, ஆனந்த கூத்தாடலை இரவு முழுவதும் நிகழ்த்தி நிலவுக்கு சவால் விட்டு உறங்காமல் போயினர்.

எல்லாம் முடிந்து அவள் பிறை நெற்றியில் முத்தம் வைக்க அவன் மார்பினிலின் துயில் கொண்டு மாலை அந்தி சாயும் வேளையில் எழுந்து வந்த அமுதனை பார்த்து நீலன் மர்ம புன்னகை செய்ய அவன் முதுகின் பின்னே ஒளிந்து கொண்டு, “என்ன அப்படி பார்க்காத மச்சான் ஒரு மாதிரி இருக்கு” என்று வெக்கப்பட்டான்.

“டேய்… என்னை ரெண்டு அடி கூட அடிச்சுடு ஆனால், இந்த வெக்கம் மட்டும் படாத மச்சான்” என்று கிண்டல் செய்தான்.

அதில் அமுதன் அவனை அடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு பழைய நினைவுகள் வந்து போக, ” இவ்ளோதான் மச்சான் லைஃப் இனிமே உன்னுடைய வாழ்க்கை எப்பவுமே அழகா இருக்கணும் டா ” என்று தன் நண்பனை கட்டி அணைத்தான்.

இப்படியே இரவுகள் இனிமையாக பகல்கள் இம்சையாக இருவருக்கும் இன்பமாக அமைந்து மூன்று மாதங்கள் கழிய எல்லோரையும் சென்னைக்கு அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவர்களுக்கு பொன்னம்மாள் ஆர்த்தி எடுத்து வர வேற்றார். அப்போது அலுவலகம் முடித்து வந்த தன் பிள்ளைகளைப் பார்த்து, ஒரு மாதிரி கூச்சம் வர அமுதன் அந்த இடத்தை விட்டு எழும் நேரம், அவர்களின் மருமகள்கள் இருவரும்  பால் பழம் கொண்டு வந்துக் கொடுத்து, “மாமா ஹாப்பி மேரிட் லைப்” என்றனர்.

அதில் இருவருக்கும் வெக்கம் பிடுங்கி தின்று எழ போனவனை, “என்ன மாமா ஆச்சு உங்களுக்கு நீங்க எப்பவும் கெத்தா இருந்தை தான் நாங்க பார்த்து இருக்கோம் அப்படியே இருங்க, எங்களை பொறுத்த வரைக்கும் இந்த ஏஜ் ல தான் உங்களுக்கு துணை தேவை எவ்வளவு நாள் தான் நாங்களே வந்து உங்களை கவனிக்கிறது. அதே மாதிரி எவ்வளவு நாள் தான் மாமியாரே எங்களை கொடுமை படுத்துவாங்க ஒரு சேஞ்ச்கு நாங்க எங்க மாமியாரை கொடுமை படுத்தலாம்னு ஐடியா வச்சிருக்கோம் நீங்க என்னடான்னா இப்படி கூச்சப்பட்டு எஸ்கேப் ஆகிடுவீங்க போலையே” என்று கிண்டலாக கண்ணடித்து சொன்னார்கள்.

அவர்கள் கிண்டலாக சொன்னாலும் , காதல் அழகியலின் தொடக்கமும், ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு முக்கியம்  என்பதையும், எவ்வளவு துணை நிற்கிறோம் என்பதும் இந்த நடு வயதில் புரிந்துக் கொள்ள முடியும்.

தன் மருமகள் அவ்வாறு சொன்னதும் அங்கேயே அமர்ந்தவனிடம் வந்து அவர்கள் பிள்ளைகள் “எங்களை மன்னிச்சிடுங்க அப்பா” என்று கூறி உங்களை அப்பானு கூப்பிடலாமா ” என்று கேட்டனர். அவன் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தன் கைகளை விரிக்க அதில் வந்து தஞ்சம் புகுந்துக் கொண்டனர். 

அவன் தூக்கி வளர்க்கவில்லை என்றாலும் அவனின் கண் முன்னே வளர்ந்த பிள்ளைகளை அவன் எப்படி ஏற்றுக்கொள்ளாமல் போவான்.

அவர்களும் அவனிடமிருந்து வெளிவராமல் அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினர்.

அவர்களின் பாசப் போர் அங்கே நிகழ ஒரு புறம் சமையல் போரும் நடந்தது. 

இப்படியே இரண்டு மாதங்கள் கட்டிய குழலி கருவுற்றாள்.

அந்த செய்தி அமுதனின் காதுக்கு வர மனிதன் காலில் நடக்காமல் கையில் நடந்து வந்து அவள் கால் அருகில் அமர்ந்து அவள் இடையைக் கட்டிக் கொண்டு அழுதான்.

அவளும் அவன் தலையை கோதி விட்டு, “என்னங்க சின்ன பிள்ளை மாதிரி” என்றாள்.

அவன் நிமிராமல், “இது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்கவே நடக்காதுன்னு நினைச்சு எத்தனை இரவு ஏங்கி இருக்கேன் தெரியுமா? இப்போ எனக்கு அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கு டி” என்றுக் கூறி எழுந்து அவள் முகம் எங்கும் முத்தமிட்டு, “ஐ லவ் யு ” என்றான்.

அதுவரை அமைதியாக இருந்தவள் அவன் கையை தட்டி விட்டு “உங்க பிள்ளைக்காக தானே எனக்கு ஐ லவ் யூ சொல்றீங்க போங்க ” என்று கோவித்துக் கொண்டாள். 

“ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் இந்த ஐ லவ் யூ, ” என்றான்.

“நல்லா தான் பேசுறீங்க” 

“சரி அதை விடு டி எனக்கு பொண்ணு தான் வேணும், அந்த குழந்தைக்கு எங்க அம்மா பெயர் வைக்கணும்” என்றான்.

“ஆமா உங்க அம்மா பெயர் என்ன சொல்லுங்க…”

“அது நம்ம பாப்பா பிறக்கும் போது சொல்றேன் என்று அவள் மூக்கின் மேலே ஒரு முத்தம் வைத்து விட்டு சென்று விட்டான். 

அன்றிலிருந்து அவள் கால் தரையில் படாமல் ஒரு பூ போல தாங்கினாள் ஒன்பதாம் மாதம் வளைகாப்பு வர, அதை யாரு என்ன சொன்னாலும் விமர்சித்தாலும் பரவாயில்லை என்று எல்லோரையும் அழைத்து ஏன் பிரம்மாண்டமாக குழலின் தாய் தந்தையை கூட அழைத்தான்.

  அவளின் தாய் தன் மகள் நன்றாக இருந்தால் போதும் என காமாட்சி தன் கணவனிடம் சண்டையிட்டு அழைத்து வந்திருந்தார்.

வந்தவர்கள் எல்லாரோயும் வரவேற்று வியர்வை துளிகள் வழிய வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை அவள் தன் கண்களால் சைகை செய்து இங்கு வாங்க என்றாள்.

அவனும் மேலே வந்து, “என்னடி வேணும்” என்று கேட்டான்.

அவள் தன் அருகினில் உள்ள நாற்காலியை காண்பித்து” இங்கே உட்காருங்க” என்றாள்.

அவன் தயங்க அவன் சட்டை காலரை இழுத்து, “இப்போ மட்டும் நீங்க என் பக்கம் உக்காரல எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லி எழுந்து போய்டுவேன். ” என்று மிரட்டவும் அவன் ஒன்னும் சொல்லாமல் தன் மனைவிக்கு சந்தனம், வளையல் எல்லாம் போட்டுவிட்டு அவள் அருகிலேயே இருந்தான்.

அதன் பின் எல்லாரும் அவர்களை வாழ்த்த வளைகாப்பு நல்ல முறையில் முடிவடைந்தது.

அன்று இரவு மட்டும் அவள் மேடிட்ட வயிற்றுக்கு 1000 முத்தம் வைத்தான். அவளுக்கு அப்போதே பிரசவ வலி எடுக்க அவர்கள் இருவரையும் தன் கையில் ஏந்தி காரில் கிடத்தி  மருத்துவமனையில் சேர்த்தான்.

மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில், ஒரு அழகான பெண் குழந்தையை ஒரு தூதுவளையில் கொண்டு வந்து கொடுக்க அதை தட்டு தடுமாறி வாங்கிக்கொண்டு தன்னவளை பார்க்க உள்ளே சென்று அந்த குழந்தையை காட்டி அவள் பிறை நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு தன் குழந்தையின் கால் பாதத்தில் ஒரு முத்தம் வைக்கும் நேரம் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“ஏங்க என்ன ஆச்சு” என்றாள்.

“என் அம்மா” என்றான்.

அவளுக்கு இரு குழந்தையை தன் பொறுப்பில் உள்ளது என்று நினைத்துக் கொண்டாள்.

3 மாதங்கள் கழித்து குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடக்க, “ஏங்க இப்போவாவது உங்க அம்மா பேரு சொல்லுங்க” என்றாள்.

“இன்னும் அஞ்சு நிமிஷம் தானே அப்ப சொல்றேன் என்று தன் மகளை தூக்கி தங்க தொட்டிலில் போட்டு அமராவதி” என்று பெயரிட்டான்.

அவன் சொன்னதும் அந்த குழந்தை கண்ணக்குழி தெரிய சிரித்தது.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடத்திய தூரிகையில் வண்ண ஓவியமாக அவர்கள் மகள் அமராவதி இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

அவளின் சிரிப்பை பார்த்து இவர்களும் சிரிக்க , அந்த இடமே அழகான வண்ண ஓவியமாக மாறியது.

இதுபோல் எப்போதும் அவர்களின் வாழ்வில் சிரிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்று நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்… 

சுபம் 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page