அத்தியாயம் 2
ஆதவனின் பொற்கரங்கள் பூமியை அணைத்து கொண்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஆகிவிட்டது..!!
இரவில் மின்விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்த அந்த அரண்மனை இப்பொழுது ஆதவனின் ஒளிவீச்சால் கண்களை கூசும் அளவு பொலிவுடன் மின்னி கொண்டிருந்தது அந்த மார்பில் கற்கள்..!!
தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் தோட்டக்காரன், அடுப்படியில் இட்லி சாம்பார் என்று விதவிதமாக தயாரித்துக் கொண்டிருந்தார் வசுந்தரா..
மொத்த வீடும் அமைதியாக இருந்தது ஏதோ மியூசியம் போல..
மாடியில் இருந்த நம் நாயகனின் அறை ஆழ்ந்த அமைதியுடன் நிசப்தமாக இருந்தது..
ஜன்னல் வழியே தெரியும் வெளியுலக காட்சிகளை பார்த்துக் கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் தீரன்.
கண்களில் வழியும் கண்ணீரோடு உடம்பெல்லாம் நோக கட்டிலில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள் அகமித்ரா.
எத்தனை இனிமையாக நிகழ்ந்திருக்க வேண்டிய நிகழ்வு அது..??!!
ஆனால் அழுகையுடனும் , கூச்சலுடனும், கட்டில் அதிர , இவளின் கதறலால் ஆட்டம் கண்டது அந்த பிரம்மாண்ட அறை..!!
நல்ல வேளை இவள் போடும் கூச்சல் வெளியே கேட்க வில்லை அந்த நடு ஜாமத்தில்..
” ஐயோ அம்மா.. வலிக்குது என்னை விடுங்க பிளீஸ்.. வலிக்குது.. ஆஆஆஆஆஆஆஆ…….!!”, உயிரை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் கடைசி கத்தலாக கத்தி தீர்த்தாள் மித்ரா !!
அந்த நிமிடங்களை எல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது இப்பொழுது கூட அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது..!!
தனக்கு இருக்கும் கஷ்டத்தை தீர்த்து கொள்ளவும், சூழ்நிலை எதிரியை சமாளிக்கவும் வேறு வழியின்றி இவனுடைய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டு இதோ இவனுடைய மனைவி என்ற பெயரில் இவனுடைய தீரா பேய் பசிக்கு இறையாகி இப்போது கதறிக் கொண்டிருக்கிறாள் பெண்ணவள்..!!
” இன்னும் எவ்ளோ நேரத்துக்கு இப்படி அழுது நாடகம் போட்டுக்கிட்டு இருப்ப..?? சும்மா நடிக்காமல் போய் குளிச்சிட்டு வேலையை பாரு.. உடம்புல இருக்குற காயத்தை வெளியே காட்டிக்காம ஒழுங்கா அதை மறைச்ச மாதிரி சேலையை கட்டு.. இல்லையா சல்வார் கமீஸ் ஒன்னு வாங்கி வச்சிருக்கேன்.. அந்த கபோர்டுல இருக்கு அதை எடுத்து போட்டுக்கோ..”, எந்த வித உணர்ச்சிகளுமின்றி மரத்துப்போன குரலில் சற்றும் இரக்கமே இல்லாமல் பேசினான் அவன்.
அவன் பேசிய பேச்சுக்கு பதில் ஏதும் கூறாமல் மெல்ல எழுந்து சென்று புடவையை எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள் அவள்..
ஆகர்ஷதீரன்..…
செதுக்கி வைத்த சிற்பமல்ல அவன், செதுக்கப்படாத ஒரு பாறை..!!
அந்தப் பாறையில் மோதும் அலைகளாய் அவனிடம் தொலைந்து போகிறார்கள் பெண்கள்..!!
அவன் பார்வையில் ஒரு காந்தமும், அவன் புன்னகையில் ஒரு கத்தியும் உண்டு.. எதை எப்போது பயன்படுத்துவான் என்று தெரிந்தே அவனிடம் வீழ்வார்கள் பலர்..!!
மனங்களை திருடுவதில் அவன் ஒரு தேர்ந்த கொள்ளையன்.. ஆனால், ஒருமுறை கூட பிடிபட்டதில்லை, ஏனென்றால் அவன் திருடியது எதையும் திருப்பித் தந்ததில்லை..!!
பெயருக்கு ஏற்றார் போல ஈர்ப்பும் வீரமும் அவனிடம் கொட்டி கிடந்தது..
தொழில் சாம்ராஜ்யத்தில் வில்லாதி வில்லனாகவும், அன்னையின் அன்பைத் தவிர வேறொருவரின் கண்ணசைவிற்கு கூட தலைவணங்காத வணங்காமுடியாகவும் திகழ்ந்தான்..!!
எந்த பெண்ணிடமும் காதல் வந்ததில்லை ஈர்ப்பும் வந்ததில்லை.. ஆனால் ,அந்தந்த வயதிற்கே உண்டான உணர்ச்சிகள் மட்டும் பொங்கி எழுந்தது.. ஹார்மோன் செய்யும் கோளாறால் எந்த பெண்ணை பார்த்தாலும் படுக்கையை பகிர்ந்து கொள்வான் , அவளின் விருப்பத்துடனும் பல நேரங்களில் விருப்பம் இல்லாமலும்!!
எந்த பெண்ணிடம் கூடி களித்தாலும் அவனுக்கு இன்பம் கிடைக்கவில்லை..
வாழ்வில் எல்லாவற்றையும் அடைந்து விட்ட போதிலும் ஏதோ ஒன்றை இன்னும் அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது போல ஏமாற்றத்துடன் அலைந்து கொண்டிருந்தான் அந்த ராட்சசன்..🔥🔥
அழும் குழந்தைக்கு தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாது ஆனால் அழுது கொண்டே தான் இருக்கும் மணிக்கணக்காக.. அது போல தான் தீரனும்..
தனக்கு என்ன வேண்டும் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆத்திரம் கோபம் எல்லாம் மடை திறந்த வெள்ளமாய் கொட்டுகிறது..
இருந்தும் அந்த வெள்ளத்தில் அடித்துப் கொண்டு செல்கிறார்கள் சில பெண்கள்…
தீராத இந்த மோகமும் தாபமும் அவனை கொன்று புதைத்தது..!!
இதற்கு தீர்வே இல்லையா?? என்று அலைந்து கொண்டிருந்தவன் கடைசியில் ஒரு மனநல மருத்துவரை சந்தித்தான்..
“ இங்க பாருங்க மிஸ்டர் தீரன்.. எல்லா ஆண்களுக்கும் இந்த வயசில் வர்ற கோளாறு தான் என்ன உங்களுக்கு கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இருக்கு.. இதை இப்படியே விட்டால் ஒரு கட்டத்தில் பெரிய வியாதியாக கூட மாறிவிடலாம்.. இந்தக் காமம் அப்படிங்கற விஷயம் சாப்பாட்டில் போட்டுக்கிற உப்பு மாதிரி.. அளவா இருக்குற பட்சத்தில் சாப்பாடு ருசிக்கும், அளவுக்கு மிஞ்சினாலோ அல்லது குறைந்தாலோ சாப்பாடு ருசிக்காது.. அதுபோல தான், இதுவும் உங்களுக்கு அளவுக்கதிகமா போய்க்கிட்டு இருக்கு.. ஒரு கட்டத்தில் இது உங்களுக்கு உடல் உபாதையில் வந்து முடியலாம்.. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..”
“ அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு??”
“ மனச கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க தீரன். கொஞ்ச நாளைக்கு இந்த பிசினஸ் பணம் பிரச்சனை எல்லாத்தையும் விட்டுட்டு தூரமா எங்கேயாவது அமைதியான ஒரு ஐலாண்டுக்கு போங்க.. நாள் கணக்கில் இல்ல மாச கணக்கில் தங்கி அங்கு உள்ள விஷயங்களை பார்த்து ரசிங்க.. மனசுக்கு பிடிச்ச பாடல்களை கேளுங்க.. பிடித்த உணவுகளை சாப்பிடுங்க எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியா இருங்க.. முடிஞ்சா காதல் கல்யாணம் கூட பண்ணுங்க தப்பே இல்ல.. இந்த காதல் கன்றாவியெல்லாம் எனக்கு வராது அப்படின்னு நீங்க சொன்னா, அதுவும் கூட தப்பில்ல.. முடிஞ்சா கல்யாணம் பண்ணுங்க.. சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பொண்ணோட நிம்மதியா வாழுங்க.. யார் கண்டது ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை காணாமல் போய் நீங்க உங்க வாழ்க்கையில் சந்தோஷமாக நிம்மதியா எல்லார் மாதிரியும் வாழ ஆரம்பிக்கலாம்”
இந்த பதிலை கேட்ட பிறகு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அவன்..
இவனுடைய லீலைகள் எதுவும் அறியாமல் வீடு தான் தன் உலகம் மகன்தான் தன் உயிர் நாடி என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார் வசுந்தரா…அவனின் தாய்!!
திருமணம் செய்து கொள்ள சொல்லி எத்தனையோ வருடங்களாக கெஞ்சிக் கொண்டிருக்கிறார் ஆனால் இந்த 32 வயது இளைஞனுக்கு அது புரிந்தால் தானே??
வசுந்தராவின் மன அழுத்தத்திற்கு இவனும் ஒரு காரணம் என்று அவன் நன்றாகவே அறிவான்.. வீட்டில் அவருடன் சிறிது நேரம் கூட அமர்ந்து பேசாமல்.. நேரம் செலவிடாமல், அவரை சாப்பிட்டியா என்று ஒரு வார்த்தை கேட்க கூட நேரம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான்..
பேசுவதற்கு ஆள் இல்லாமல் அவரும் அந்த வீட்டில் தனித்து விடப்பட்டார்..
எப்பொழுதாவது வீட்டிற்கு வந்து போகும் மகனை குசலம் விசாரித்து அவனுக்கு பிடித்ததை சமைத்து கொடுத்து சாப்பிட வைப்பார் அதுவும் வற்புறுத்தி தான்..
ஏற்கனவே அவருக்கு பிபி கொலஸ்ட்ரால் சுகர் என்று எல்லாமே இருந்தது..
அது போக சிறிது நாட்களாகவே அவருக்கு உடல் சோர்வு அதிகமாக காணப்பட்டது..
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று என்னவென்று கேட்ட பொழுது அவருக்கு உடலில் உள்ள நோய்கள் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் மனதில் ஏற்பட்டிருக்கும் இந்த நோய்க்கு மருந்தே தன் மகன்தான் என்பதை எடுத்துக் கூறினார். முடிந்த அளவு அவருடன் நேரம் செலவழிக்கவும் அன்பு காட்டவும், யாராவது ஒருத்தர் கூடவே இருந்தால்தான் நல்லது முக்கியமாக மகனாக இருக்கும் நீங்கள் இருந்தால் தான் நல்லது என்று டாக்டர் சொல்லவும் அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இதற்கு தீர்வு காணவும் அவனுக்கு வழி இல்லை..!!
தொழில் மட்டுமே முக்கியமென்று ஓடிக்கொண்டிருக்கும் அவன் மனதில் தாயின் நினைவு இல்லாமல் இல்லை..
எப்பொழுதும் தன் அன்னையின் நினைவு இருக்கத்தான் செய்தது.. ஆனால் அவருடன் அமர்ந்து பேசவும் நேரத்தை செலவழிக்கவும் அவனால் முடியவில்லை..
அதற்கு காரணம் குற்ற உணர்வு..
தன் தாயிடம் மறைத்து தான் செய்து கொண்டிருக்கும் இந்த பொல்லாத காரியத்தை நினைத்து பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு ஒரு மாதிரியாகிவிடும்..
என்னதான் பெற்ற தாய்க்கு பிடித்ததெல்லாம் வாங்கி கொடுத்து எல்லாமே செய்தாலும் பக்கத்தில் அமர்ந்து பாசமாக இரண்டு வார்த்தை பேசாவிட்டால் இந்த ஆடம்பர பொருளுக்கும் அரண்மனை போன்ற வீட்டிற்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுகிறதே..!!
அதுதான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது..
தன் அன்னை இதுவரை அவனிடம் விரும்பி எதையும் கேட்டதில்லை..
ஆனால் சிறிது நாட்களாக , “திருமணம் செய்து கொள்.. நீ தான் என்னுடன் அமர்ந்து பேச மாட்டேன் என்கிறாய் ஆனால் நீ திருமணம் செய்து கொண்டால் வருகிற மருமகளாவது என்னை பார்த்துக் கொள்வாள் அல்லவா ??அவளுடனாவது நான் சிறிது நேரம் அமர்ந்து பேசலாம் இல்லையா ??அதற்காகவாவது திருமணம் செய்து கொள்ளேன்”, என்று தன் தாய் கெஞ்சும் பொழுது அவனுக்கும் அது கஷ்டமாகத்தான் இருந்தது..
யார் யாருக்கோ என்னென்னவோ செய்கிறான்.. பணத்தை வாரி இறைக்கிறான்.. ஆனால் தன் தாய் வாய் திறந்து கேட்கும் இந்த ஒரே ஒரு விஷயத்தை கூட தன்னால் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம் அவனுக்கும் உண்டானது..
அதனால் பதில் ஏதும் சொல்லாமல் நாட்களை தட்டி கழித்தவன், இதோ இன்று இவளை மணந்து கொண்டு கணவன் என்னும் பதவியை வகிக்கிறான்..
எந்த பெண்ணிடமும் கிடைக்காத இன்பம் இவளிடம் கிடைத்து விடுமா என்று கேட்டால் அவனால் அதற்கு பதிலை உறுதியாக கூற முடியாது..
ஆனால் அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவன் மனதில் உண்டான மாற்றங்கள் ஏராளம்…
எந்த பெண்ணிடமும் தோன்றாத ஒரு வித ஈர்ப்பு அவனுடைய மனதில் தோன்றியது அவளை பார்க்கும் பொழுது..
வாவென்று சொல்லும் முன்னே தன் மடியில் வந்து சரியும் பெண்களுக்கு மத்தியில்..
தன் மீது எந்த வித ஈர்ப்பையும் காட்டாமல் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் மரத்துப்போன முகபாவனையோடு கண்களில் வடியும் கண்ணீரோடு தன் எதிரே உதவி என்று வந்து நிற்கும் இவளை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு வித ஈர்ப்பு விசை அவனை அசைத்துப் பார்த்தது..!!
பார்த்த மாத்திரத்தில் அவளை கட்டி அணைத்து கட்டிலில் சரித்து தன்னுடைய பராக்கிரமங்களை நிரூபிக்கத்தான் நினைத்தான் அந்த கயவன்..
ஆனால், அவள் வந்த காரியம் வேறு அல்லவா அதனால் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சாக்கில் அவளை திருமணம் செய்து கொண்டான்..
எங்கெங்கோ தேடிய அலைந்த பொக்கிஷம் இவளிடமாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து அவளிடம் நேற்று இரவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டான்..
தேடிய பொக்கிஷம் கிடைத்ததோ இல்லையோ, ஆனால் வாழ்நாள் முழுக்க அவள் வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவன் மனதில் ஆணித்தரமாக தோன்றி விட்டது..!!
மீண்டும் மீண்டும் அவளை நாடி அவளுடன் கூடலில் இறங்க தான் தோன்றியதே தவிர அவளை விட்டு விலகி நிற்க அவன் மனம் எண்ண வில்லை..🔥🔥❤️❤️
– தொடரும்🔥🔥❤️❤️..
