“புழுதிக் காற்றில் கலைந்த என் ஓவியம் உன் கை வண்ணத்தில் இன்னும் அழகாய் மிளிர்ந்தது “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -22
விஜயின் சிரித்த முகத்தைப் பார்த்ததும், வர்மாவுக்கு கோவம் வர, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். தன் கன்னத்தில் கை வைத்த படி “ஏன் டா 3 மாசம் கழிச்சு பார்க்குறேன். சந்தோஷப் படுவேன்னு பார்த்தா, அறை கொடுக்குற ” விஜயின் பேச்சில் அவன் விட்டுச் சென்ற கோவம் வர்மாவுக்கு போக வில்லை தான், அவனை எப்போதும் அடித்துக் கொண்டு, திட்டிக் கொண்டு தானே இருக்கிறோம். அவன் ஒரு முறை கூட கோவத்தில் வார்த்தையை விட்டதில்லையே
அவன் மனம் அன்பால் நிறைந்திருக்கிறது. அவன் என்னை விட்டு பிரிந்து சென்றதற்கு கூட வலுவான காரணம் இருந்திருக்கும். நான் இன்னமும் அதே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். கூடவே இருப்பவரின் மனதை புரிந்து கொள்ளாமல் நோகடிக்கிறேன். தன்னையே நொந்து கொண்டவன்
தன் நண்பனை அணைத்துக் கொண்டான். விஜயும் அணைத்தவன் “சாரி டா உன்னை விட்டு போய் இருக்கக்கூடாது தப்பு பண்ணிட்டேன் ” என்றான்.
வர்மா அப்பா இருவரிடமும் வந்து “நீங்க யாரும் தப்பு பண்ணலை எல்லா தப்புக்கும் காரணம் நான் தான்” விஜய், ஆரண்யாவை வர்மா விட்டு சென்று விடுங்கள். நீங்கள் இருவரும் இருந்தால் அவன் திருமணமும் நடக்காது, அவனுக்கு நிம்மதி, சந்தோஷம் இருக்காது என்று கூறியதால் தான் இருவருமே பிரிந்து சென்றது.
“என்னை ரெண்டு பேருமே மன்னிச்சிடுங்க, எது உண்மை, எது பொய் தெரியாம நான் தான் தப்பா முடிவெடுத்து, என் பையன் வாழ்க்கையை நாசமாக்கப் பார்த்தேன். இப்போ தான் புரியுது அவன் சந்தோஷமா நிம்மதியா இருக்கணும்னா என் மருமக ஆரண்யாவும் வேணும் நீயும் வேணும் விஜய் “என்றதும்
“போதும் அங்கிள் நீங்க இனிமே சாரி கேட்க வேணாம். என்னால எப்பவும் வர்மாவை விட்டு இருக்க முடியாது. இது நாங்க ஏற்கனவே ஆரம்பிச்ச கன்ஸ்டரக்ஷன் கம்பெனி தான். அதை சக்சஸ் புல்லா ரன் பண்ணிட்டு இவனுக்கு சொல்ல இருந்தேன். இப்போ நிலாவால சீக்கிரம் உங்க முன்னாடி வந்துட்டேன்.
எங்க லவ்வ நாங்க புரிஞ்சிக்கிட்டோம். நீங்களும் புரிஞ்சிகிட்டு சேர்த்து வச்சிடுங்க,” தங்களின் காதலை வெளிப்படுத்தி அவர்களின் பதிலுக்காக விஜயும், அவனுடன் சேர்ந்து நின்று நிலாவும் அதை ஆமோதிக்க,
“எனக்கு ரொம்ப சந்தோஷம், உன்னை மாதிரி மாப்பிள்ளை கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும்” மனைவியிடமும், மகனிடமும் முடிவைக் கேட்க, அவர்களும் சிரிப்புடன் சம்மதம் சொல்ல, அனைவருமே மகிழ்வை கொண்டாடினார்கள்.
“ஏன் டா நீ திரும்பி வருவேன்னு காத்துட்டு இருந்தது என் தங்கச்சி மட்டும் இல்லை, நானும் தான் உங்க காதலை சேர்த்து வச்சிட்டு தான் என் காதலுக்காக போகணும் நினைச்சிட்டு இருந்தா 3 மாசம் காக்க வச்சிட்டியே டா, நான் அப்பவே சொன்னேன் இது சரி வராது நான் போய் தூக்கிட்டு வந்துடறேன்னு சொன்னா எங்க கேட்குற இவ, அவரே என் காதலை புரிஞ்சிக்கிட்டு வரட்டும் சொல்லி காத்திருந்தா, சரி சரி இப்டியே பேசிட்டு இருந்தா, எனக்கு பிளைட்க்கு நேரமாச்சு நான் கிளம்புறேன் ரெண்டு பேரும் காதலோட கொஞ்சம் ஆபீசையும் சேர்த்து பார்த்துக்கோங்க “
வீட்டிலிருந்து கிளம்பிய வர்மா பிளைட்டில் ஏறி அமர்ந்தவன் தன் போனில் இருக்கும் தன்னவளின் முகத்தினைப் பார்த்து ” ஏன் டி என்னை விட்டு போன, எங்க அப்பா சொன்னா போய்டுவியாடி, என் பிரச்சனையை உன்கிட்ட சொல்லி இருக்கணும். தப்பு பண்ணிட்டேன். உன் முகம் காதலை நிரப்பி பார்ப்பியே ஒரு பார்வை அப்டியே ஜிவ்வுனு ஏறும்
உன் பேச்சு சக்கரைப்பாகுல மிதக்குற குளோப் ஜாமுன் மாதிரியே அப்டியே என் நெஞ்சுக்குள்ள இன்னிச்சுகிட்டே இருக்கும். காட்டன் புடவை அதுல தம்மாத்தூண்டு தெரியிற அந்த பப்பாளி கலர் இடுப்பு ” அதற்கு மேல் அவனால் சொல்ல முடியவில்லை அவளின் நினைவு அவன் இதயத்தை ஆக்கிரமித்து ஊசியால் குத்துவது போல் உணர்வு தோன்ற
தன் நெஞ்சினை மெல்ல தட்டி, அவ உனக்காக காத்துட்டு இருப்பா, சீக்கிரம் போ என்று சொல்ல, கண்கள் மூடி அவளோடு இருந்த நினைவுகளை நினைத்துக் கொண்டே உறங்கினான்.
“ஆரு எந்திரிடி டைம் ஆச்சு இன்னைக்கு பூஜை இருக்கு சீக்கிரம் எழுந்துக்கனும் சொன்னேனே. நைட் நல்லா தலையை ஆட்டிட்டு இப்போ இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க, கோவிலுக்கு போகணும், அதுக்கு முன்னாடி துளசி பூஜை பண்ணனும் அப்போ தானே நீ நினைச்சது நடக்கும் பப்பு வேணாமா “
அவ்வளவு தான் எழுந்து அமர்ந்தவள் “மா ஏன் மா இப்படி சொல்ற, நான் எழுந்துட்டேன் சும்மா நீ என்ன சொல்றேன்னு பார்க்க தான் தூங்குற மாதிரி இருந்தேன். நான் குளிச்சிட்டு வந்துடறேன் துளசி பூஜை சீக்கிரம் முடிச்சிடறேன் “ஜோதாவின் மகள் ஆரண்யா அம்மாவிடம் சொல்லிய படி குளித்து முடித்து ராஜஸ்தானின் பாரம்பரிய உடையான காக்ர சோலி அணிந்து கொண்டாள்.
ஜார்ஜெட் துணியில் பஞ்ச் லேகாரியா வடிவமைப்பில் நீண்ட பாவாடையிலும், துப்பட்டாவின் ஓரங்களிலும் சரிகை வேலைப்பாடுடன், ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, கனகாம்பரம், சங்கு பூ வண்ணங்கள் கொண்ட அந்த ஆடை ஆரண்யாவுக்கு மிகவும் பொருத்தமாக, அழகாக இருந்தது.
வெள்ளை கற்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட வண்ண வளையல்கள்,நெற்றியில் சிறிய நெத்திச்சூட்டி காதில் பெரிய ஜிமிக்கி என பேரழகியாய் மாறி நின்றவளைப் பார்த்து நெட்டி முறித்தவர். துளசி வழிபாடு செய்ய, ஆரண்யாவும் அவருக்கு உதவினார்.
சண்டா தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு கீழே இறங்கி வர, ஆரண்யாவின் தோழி ப்ரியாவைப் பார்த்ததும் கொஞ்ச நேரம் பேசிட்டு வரோம் மா ப்ளீஸ் என்று கெஞ்சி நிற்க, ஜோதாவும் பத்திரமாக சீக்கிரம் வர சொல்லி விட்டு கிளம்பினார்.
“ஆரு ராக் பார்க் போகலாமா ரொம்ப நாள் ஆச்சு “
ப்ரியா கேட்டதும் “எனக்கும் பார்க்க ஆசை தான், வா போகலாம் ” ப்ரியா வந்த காரிலே சென்றனர்.
ராவ் ஜோதா பாலைவனப் பாறைப் பூங்கா, இந்தியாவின் இராசத்தானி லுள்ள சோத்பூரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்ரன்கர் கோட்டைக்கு அருகில் 72 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது. பூங்காவில் சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட பாலைவனம் மற்றும் வறண்ட நில தாவரங்கள் உள்ளன. கோட்டையை ஒட்டிய மற்றும் கீழே உள்ள ஒரு பெரிய பாறைப் பகுதியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க முயற்சிப்பதற்காக இந்த பூங்கா 2006 இல் உருவாக்கப்பட்டது.
இது பிப்ரவரி 2011 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தனித்துவமான எரிமலை பாறைகள் மற்றும் மணற்கல் அமைப்பு களைக் கொண்டுள்ளது. சுமார் 880 மீ முதல் 1115 மீ வரையிலான நான்கு பாதைகளில் மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் நீலப் பாதைகள் இருக்கும்.
இயற்கையின் அதிசயத்தில் தோழிகள் இருவரும் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்க, காக்ட்டஸ் செடியில் பூத்திருக்கும் சிவப்பு மலரினை பார்த்த ஆரண்யா அதை அருகில் சென்று பார்க்க, உயர்ந்த மரங்களின் மலரின் அருகே தெரிந்த முகம் கண்டவள் கண்ணை துடைத்து மீண்டும் பார்க்க அங்கே யாரும் இல்லை.
அங்கே சுற்றிலும் தேடியவளைப் பார்த்து “என்ன ஆரு யாரை தேடுற “
“அது ” அவள் தயங்கியதும்
“பப்புவா டி ” பிரியாவும், ஆரண்யாவும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள் ஆரண்யாவைப் பற்றி அனைத்தையும் அறிந்தவளுக்கு பப்புவைப் பற்றி தெரியாதா, சிறு வயதில் அவளின் இன்பம், துன்பம் எல்லாமே பப்பு தானே
ஆரண்யாவின் அமைதியே சொல்லியது அவன் தான் காரணம் என்று, ஆரண்யாவை கை பிடித்து அங்கே இருந்த இருக்கையில் அமர வைத்தவள் “என்ன ஆச்சு பப்புவ பார்க்க தானே போன, பார்த்தியா, பேசனியா என்ன நடந்தது “
வர்மாவிடம் தான் யார் என்று சொல்லாமலே வேலைக்கு சேர்ந்தது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம், அவன் இதழ் தீண்டல், நிதிஷாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, வர்மா அப்பாவின் பேச்சு, விலகி வந்தது வரை சொன்னாள்.
“லூசு உங்க மாமா தானே அவர் கிட்ட நீ யார்ன்ற உண்மையை சொல்லி இருந்தா அங்கேயே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து இந்நேரம் பர்ஸ்ட் நைட்டே முடிஞ்சி இருக்கும் ” ப்ரியா சொன்னதற்கு அவளின் வாயைப் பொத்தியவள்.
“எங்க வந்து என்னடி பேசுற, எனக்கு தெரியும் டி, கண்டிப்பா நிதிஷா கூட கல்யாணம் நடந்திருக்காது அவர் மனசுல நான் தான் இருக்கேன். ஆனா நான் யார்னு உண்மையை சொன்னா அவர் என்னை ஏத்துக்குவாறா, இப்போ கூட அவர் இங்க தான் பக்கத்துல இருக்குற மாதிரி என் உள் மனசு சொல்லுது,
ஏன் இவ்ளோ நாள் தேடி வரல, அவரை ஒவ்வொரு நொடியும் நான் நினைச்சிட்டு இருக்கேன். இதோ இந்த டிரஸ்ல அவர் என்னை இப்போ பார்க்கணும் தோணுது உண்மையா அவர் மனசுல நான் இருந்தா என் கண் முன்னாடி இருக்கணும்ல இல்லையே அப்டினா என்ன அர்த்தம் என்னை மறந்…”
“அந்த வார்த்தையை சொல்லக்கூட எனக்கு பிடிக்கல ” அவளின் குரல் வேறுபாட்டை வைத்து அவளின் மனது அவன் பிரிவால் எவ்வளவு காயப்பட்டிருக்கிறது என்பது ப்ரியாவால் புரிந்து கொள்ள முடிகிறது. அவளின் மனதை ஆறுதல் படுத்த “கண்ணை மூடி உன் பப்புவ நினைச்சுகிட்டு கண்ணை திற டி ” என்றாள்.
“ஹேய் விளையாடாதடி ” பிரியாவிடம் சிணுங்களுடன் ஆரண்யா சொல்ல,
“முதல்ல கண்ணை மூடி பப்புவ நினைச்சுகிட்டு திறந்து பாரு ” ப்ரியா மீண்டும் சொல்லவும் அது நடக்குமோ நடக்காதோ ஆனால் அவள் சொன்னது பிடித்திருந்தது, ஆரண்யா கண்கள் மூடி ‘ஆரு எங்க இருந்தாலும் இப்போ என் கண் முன்னாடி வந்து நில்லுங்க ‘ மனதில் நினைத்து கண்கள் திறந்து பார்க்க,
ஆரண்யாவின் முன்பு ராஜஸ்தானின் ஜோத்பூரி சூட்டில் படு ஸ்டைலாக நின்றான் ஆருவின் பப்புவும், ஆரண்யாவின் மாறன், மாறவர்மன். ப்ரியா வாய் பிளந்து ” ஆ ” அதிர்ச்சியில் பார்க்க,
ஆரண்யவோ கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கனவு தான் என்று நினைத்திருந்தவளுக்கு, இது கனவல்ல நிஜம் தான் என்பதை மெய்ப்பிக்க வண்ண ஓவியமாய் நிற்கும் தன் அழகு பதுமையின் இடையில் கையிட்டு அவளை இழுத்து அவள் ரோஜா இதழ்களை தன் வலிமை பொருந்திய இதழ்களுக்குள் பொருத்திக் கொண்டு இதழ்களின் வண்ணத்தை தன் இதழ்களில் இடம் மாற்றிக் கொண்டிருந்தான். அவன் இதழ் தீண்டலில் தன்னை அவன் வசம் கொடுத்து விட்டு 3 மாத பிரிவின் ஏக்கத்தையும் அவனின் வாசத்தையும் தனக்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள் மாறனின் ஆரு….
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
