நினைவு -17

“எவ்வளவு தைரியம் இருந்தா, கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு ரூம்க்கு நைட்டு பன்னண்டு மணிக்கு வருவ நீ?” என்று கடுப்பாக கேட்டான் அவன்…

அதை அலட்சியமாக பார்த்த அகிலன், 

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே ஒரு பொண்ணோட கசமுசா பண்ணுவ?” என்று எதிராக கேட்டான்…

“என்ன?!”

அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவள்… அதே அதிர்ச்சியோடு தன் தமயனை திரும்பிப் பார்த்தாள்…

“என்னடா உளறுற?!”

கடுப்பின் உச்சத்தில் பற்களை நரநரவென கடித்தவன்… பார்வையில் தீ ஜுவாலைகள் பறக்க, எதிரில் இருந்தவனை எரிக்கும் பார்வை பார்த்தான்…

“ஆன்… அது… கல்யாணம் ஆகாத பொண்ணு ரூம்க்கு போய் நான் என்ன கசமுசாவா பண்ணப் போறேன்னு கேட்ட மாமா…” என்று அவனை சமாளிக்கத் தெரியாமல் இழித்துவைக்க…

“ஓஹ்… உனக்கு அந்த எண்ணம் வேற இருக்கா?” என்றவனின் பார்வையை பார்த்தவுடன், எதிரில் இருந்தவன் என்ன உணர்ந்தானோ தெரியாது…

“வேணாம் மாமா! நான் ஏதோ விளையாட்டுக்குப் பேசுனேன்… நைட் உன் தங்கச்சி ரூம்க்கு போனது தப்புதான்…” என்றவன் அங்கிருந்து தலை தெறிக்க ஓட ஆரம்பிக்க… இவனோ அவனை துரத்த ஆரம்பித்தான்…

“அண்ணா!” என்று இவர்களின் பின்னால் செல்ல முயன்றவளை, இருவரின் பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் தடுத்து நிறுத்தியது…

அதை அப்படியே விட்டு செல்ல முடியாததாலும்…அவர்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்ததாலும்…

“வரட்டும்…” என அமைதியாக அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினாள்…

ஏர்ப்போர்ட்டில் இருவரும் சுற்றிச் சுற்றி ஓட, அங்கிருந்தவர்களின் வித்தியாசமான பார்வைகள் இவர்கள்மீது விழுந்தன…

அதை எல்லாம் அவர்கள் கவனிக்கக் கூடும் நிலையில் இல்லை…

“வீயூ… வீயூ…”

திடீரென போலீஸ் ஜீப் ஒன்று அலறிக்கொண்டு வந்து அவன் முன்பு நின்றது…

அதீத அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தான் அவன்…

“மாமா… இதுக்காக என்ன உள்ளப் பிடிச்சு போடப் போறியா?” என்றவன் கேட்பதற்கும், அந்த ஜீப்பில் இருந்த போலீஸ்காரர்கள் இவனை மடக்கிப் பிடிப்பதற்கும் சரியாக இருந்தது…

அவனை பிடித்தவர்கள், “சார்!” என்று இவனுக்கு சல்யூட் வைத்தார்கள்…

அதை தலை அசைத்து ஏற்றுக்கொண்டவன், அவர்களை என்னவென்று வினாவினான்…

“சார், ஏர்ப்போர்ட்ல நீங்க ரொம்ப நேரமா இந்த அக்க்யூஸ்டைப் பிடிக்க கஷ்டப்படுறீங்கன்னு எங்களுக்கு நியூஸ் வந்துச்சு… அதான் சார், நாங்க உடனே இங்க கிளம்பி வந்துட்டோம்…” அவர்களில் ஒருவன் இன்ஸ்பெக்டர் போல விரைப்பாக பதில் சொல்ல…

“என்னது… அக்க்யூஸ்ட்டா?” என்றவன் கண் முளை வெளியே வரும் அளவுக்கு முழித்தான்…

“ஆமாம் சார்! இப்போ கூட பாருங்க… திருட்டு முழி முழிக்கிறான் ராஸ்கல்!” என்றவன் பல்லைக் கடித்து சொல்ல…

அவனின் பேச்சில் இவனை திரும்பிப் பார்த்தான் அவன்…

அந்த இன்ஸ்பெக்டர் சொன்னது போலவே இவனது ரியாக்ஷன் இருக்க, அதை பார்த்தவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வர, புறங்கையால் வாயைத் துடைப்பது போல கட்டுப்படுத்திக் கொண்டான்…

“நீங்க சொன்னது சரிதான்… இந்த அக்க்யூஸ்டைப் பிடிக்க முடியாமதான் கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்… நல்ல வேள நீங்க வந்தீங்க…” என்றவன் சிரிப்பை அடக்கப்படாத பாடுபட்டான்…

“என்னது யோவ்… மாமா விட்டா, நீயே என்ன அக்க்யூஸ்டுனு முத்திரை குத்தி உள்ள தள்ளிடுவ போல…” என்றவனின் பேச்சில் அந்த இன்ஸ்பெக்டருக்கு கோபம் வந்து விட்டது…

“எவ்வளவு தைரியம் இருந்தா… தப்பு பண்ணது மட்டும் இல்லாம, டிப்டி கமிஷனரா மாமான்னு கூப்பிடுவ?” என்றவன் கையில் இருந்த லத்தியை அவனை நோக்கி ஓங்கினான்…

ஆனால்… அந்த அடி அவன் மீது படுவதற்கு முன், இரும்பு கரம் ஒன்று அதைத் தடுத்தது…

“இங்க பாருங்க, மிஸ்டர்…” என்றவன், அவன் நெஞ்சின் மீது இருந்த பேட்சில் பெயரைப் பார்த்து…

“சந்தோஷ்… இவன் என் அக்க்யூஸ்ட். இவன் மேல என்ன தவிர வேற யாருடைய கையும் படக்கூடாது. புரிஞ்சுதா?” என்றவன்…

“அண்ட், இது என் கேஸ். நான் பாத்துக்கிறேன்… நீங்க கிளம்பலாம்.” என்றவனின் குளுமையான குரலில் இருந்த அழுத்தம், எதிரில் இருந்தவர்களை நடுங்கச் செய்தது…

அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பினர் அவர்கள்…

அவர்கள் கிளம்பிய அடுத்த நொடி, மாமான்காரனை அணைத்துக்கொண்டவன், “தேங்க்ஸ் மாமா… நான் கூட எங்க என்ன உள்ள தள்ளிருவியோன்னு பயந்துட்டேன்…” என்றான்.

அவனை விலக்கித் தள்ளியவன்,

“யாரு நீ பயந்துட்ட? அதை நான் நம்பணுமா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும், மிஸ்டர் அகிலன்…” என்றவன் திரும்பி நடக்க தொடங்கியவன்…

“ஆதி!” என்ற குரலில் அப்படியே நின்றான்…

சில நொடிகள் அங்கே அமைதி நிலவியது…

“நீ இசைய கல்யாணம் பண்ணதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்டா…”

அந்த ஒரு வார்த்தை போதுமென இருக்க…அவன் திரும்பிய அடுத்த நொடி, அவனை பலமாக அணைத்துக்கொண்டான்…

ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் முகம் புன்னகையில் மிளிர… அடுத்தவனுக்கு அது மிகவும் தேவைப்பட்டதாக இருந்தது…

சிறுவயதில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்… பார்ப்பதற்கு எதிரிகள் போல எப்போதும் அடித்துக் கொண்டாலும், இருவரின் இடையில் உள்ள நட்பின் ஆழத்தை அவர்கள் மட்டுமே அறிவார்கள்…

அதுவும் ஆதியின் மனதை அவன் ஒருவன் மட்டுமே அறிவான்…

வெளியில் வீரப்பாய் கம்பீரமான போலீஸ் அதிகாரியாய் வலம் வருபவன், தாய் தந்தையருக்கு சரியான மகன், தங்கைகளின் பாசமான அண்ணன்… இது மட்டுமே அனைவரும் அறிந்தது.

ஆனால் அவனுக்குள் உடைந்து அழுது கொண்டிருந்த சிறு குழந்தையை, அவன் தனிமை மட்டுமே அறிந்த அந்த ரகசியத்தை இவன் மட்டுமே அறிவான்.

அணைத்துக் கொண்டிருந்தவர்கள் மெல்ல விலகிட, ஆதியின் முகமோ சோகத்தை தாங்கி கசங்கி இருந்தது…

அது அவன் மனதின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து நிற்க…

“என்ன ஆதி, இதுல உனக்கு சந்தோஷம் இல்லையா?” என்றவன் அவனை குழப்பமாக பார்த்திட,

“எப்படிடா சந்தோஷமா இருக்க சொல்ற?” என்றவன் சிறு இடைவெளி விட்டு…

“சிரிப்பையே தொலைச்சிட்டு உட்கார்ந்து இருக்காடா… அதை பார்த்துட்டு எப்படி என்னால சந்தோஷமா இருக்க முடியும்…?” பொதுவெளி என்பதால் குரல் கம்பீரமாகவே வெளிவர…

ஆனால்… அதில் இருந்த வலியை எதிரில் இருந்தவனால் நன்றாக உணர முடிந்தது…

“அவ முகத்தில் எப்பவும் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கணும் நினைச்சுட்டு இருந்த மச்சான்…

ஆனா இன்னைக்கு அவ சந்தோஷத்தை இழந்துட்டு நிக்கிறதுக்கு நான் தான் காரணம்னு நினைச்சாலே…

யாரோ மூளைக்குள்ள சம்பட்டியால அடிக்கிற மாதிரி இருக்குடா…” என்றவனுக்கு, காலையில் அவளின் இறுகிய முகம் நினைவுக்கு வர, மனம் ஆயிரம் மடங்கு மறுத்துப் போனது.

“டேய், ஏன்டா மாமா தேவையில்லாம யோசிக்கிற… அவ சந்தோஷத்தை நீ எப்படி கெடுப்ப சொல்லு… அவளையே அந்த அயோக்கியன்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கடா நீ..”

“இல்லடா… அவன் கெட்டவனா இருப்பானோன்னு சந்தேகம் எனக்கு இருக்கும்போது, நான் அவனை இசையோட பழக விட்ருக்க கூடாது… இப்போ அவ முழுசா ஒடஞ்சி நிக்க நானே காரணமாயிட்டேன்.” என்றவனுக்கு, அந்த குற்ற உணர்ச்சிதான் அவனை அணு அணுவாய் கொன்று கொண்டிருந்தது…

“ஆதி,” என்றவன் ஏதோ சொல்ல வர, அதற்குள்,

“நான் இசைய டிவோர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்டா!” என்றவனின் பதிலில் அதிர்ச்சியில் உறைந்தான்…

 

 

                                             தொடரும்…

 

ஸ்டோரி எப்படி போகுதுனு உங்க கருத்துகளை மறக்காம சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்…நன்றி…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page