என்ன இதுக்கே மயங்கி போயிட்ட,
அம்மாவை எப்படி கண்டு பிடிச்சு நினைக்கிறியா?…
அன்னைக்கு ராத்திரி இன்னும் தூங்கின பிறகு தினேஷ் அம்மா பாத்து மனசு கேட்காம எனக்கு ஒரு தடவை போன் பண்ணுங்க நீ நல்லா தூங்கிட்டு இருந்த,
அப்ப அவங்க பேசும் போது எனக்கு புரிந்தது. இனி எத்தனை ஜென்மம் நான் அவங்களுக்கு பிள்ளையா பிறக்க போறேன்?…
நீ சொன்னது மட்டும் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு.
அதனால நானும் அவர்கள் எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லிட்டேன் அதுக்கு அடுத்து நீயே தினேஷ் சொன்னதுக்கு அப்புறம் கண்டுபிடிக்க சொல்லி தினேஷ் கிட்ட சொன்னதையும் நான் பார்த்தேன்.
எல்லாமே எனக்கு தெரியும் நீ எனக்கு தெரியாத மாதிரி நிறைய விஷயம் பண்ணிட்டு இருக்கேன் ஆனா நீ என்ன சுத்தி தான் இருக்கிறேன் என்பதை நான் எப்படி மறப்பேன்?..
இப்படி அவன் கேட்கும் போது அதெல்லாம் இருக்கட்டும் அப்பா..
உங்க அப்பா கிட்ட நான் சமாதானம் பேசல அவரே என்கிட்ட ஹோட்டல்ல வச்சு பார்த்து பேசினாரு.
என்ன நடந்தது என்று பொறுமை என்கிட்ட கேட்டாரு.. நடந்த எல்லாத்தையும் சொன்னேன் அது மட்டும் இல்ல, நான் உனக்காக தான் அங்க வந்து இருக்கேன் என்ற விஷயத்தை உங்க அப்பா கிட்ட தெளிவா சொல்லிட்டேன்.
நாம ரெண்டு பேருக்கும் உள்ள ஏதோ ஒன்னு சரியில்லாமல் இருந்துச்சு. உன்னை நான் புரிந்து கொள்வதற்கு ட்ரை பண்ணவே இல்லன்னு அவரும் என்கிட்ட பேசினார்.
அம்மாவை டைரக்டா வீட்ல போய் நேத்து பேச சொல்லிட்டேன். உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேன் எப்படி இருக்கு?.. இப்படி கேட்கும் போது நிலாவுடைய அப்பா அம்மா வந்துட்டாங்க,
அவங்க ஓடிவந்து தன்னோட பிள்ளையை இறுக்கி அணைச்சுக்கிட்டாங்க,
போதும் போதும் என்ற அளவுக்கு மன்னிப்பு கேட்டு தன்னோட பொண்ணு கிட்ட அவங்க சரண்டர் ஆகிட்டாங்க.
போதும் போதும் என்ற அளவுக்கு அவளுக்கு சந்தோஷம் இன்னைக்கு நெறஞ்சு போயிருக்கு…
அவளை தாங்கனு தாங்குறாங்க யார் எல்லாம் அவளை ஒதுக்கி வச்சாங்களோ அவங்க எல்லாருமே இப்போ அவள் உள்ளங்கைல வெச்ச தாங்காத குறையா பேசிட்டு இருந்தாங்க அப்போதான் சங்கர் அவளை தனியாக கூப்பிட்டு,
இதெல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் நேத்து சாயங்காலம் அந்த பிளம்பரும் வாட்ச்மனும் குடிச்சிட்டு என்கிட்ட தகராறு பண்ணானுங்க அப்ப அவங்க வாயால் இருந்து உண்மையை சொல்லிட்டாங்க…
அதுக்கப்புறம் தான் எனக்கு செருப்பால் அடிச்ச மாதிரி இருந்துச்சு என் பொண்ணு நான் எந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி இருக்கேன்..
மன்னிச்சுடு அம்மா,
இப்படி கையெடுத்து நிலா முன்னாடி அவர் கும்பிடும்போது அப்பா…
எனக்கு நீங்க எவ்வளவு முக்கியம்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியணும்னு இல்ல அப்பா நான் உங்களை எந்த அளவிற்கு சொல்லப்படும் எந்த இடத்தில் வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கே தெரியும்.
இப்படி அவள் தன்னோட அப்பா கிட்ட ரொம்ப சந்தோஷமா பேசிட்டு இருக்கும்போது மத்தவங்க எல்லாருமே அவங்க ரெண்டு பேரும் பக்கத்துல வர,
அப்ப நான் ஒன்னு கேட்டா அப்பாவுக்காக செய்வியா ன்னு சொல்லி அவரு சிரிச்சு கிட்ட கேட்டாரு அதுக்கு நிலவும் சொல்லுங்கப்பா என்ன?…
நீங்க என்ன கேட்டாலும் மறுக்காமல் செய்வேன்.
என்ன வேணும்னு கேளு பா?… இப்படி தன்னோட அப்பா கிட்ட ஆசையாக ஒரு கேள்வியை கேட்கும் போது,
நீ…
சொல்லுங்க?..
நீ…
நான் நிலா, இப்ப சொல்லுங்க என்ன?…
உனக்கு நான் முக்கியமா இல்ல அந்த பையன் முக்கியமா நான் முக்கியம்னா என் கூட இப்படியே வந்துடுறியா?..
இல்ல அவன்தான் வேணும்னா எங்களை இங்கே அத்து.
விட்டுட்டு போயிடு.
என்னதான் இருந்தாலும் நான் பார்த்த பையன் இவன் இல்லையே.. இப்படி அவரு குண்ட தூக்கி போட்டுட்டாரு அதைக் கேட்டதுமே, அவள் பதற ஆரம்பிச்சுட்டா,
என்னப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க?…
திடீர்னு ஏன் இப்படி?..
உண்மையிலேயே தான் கேட்கிறேன். நான் ஒன்னும் பொய்யா கேட்கலன்னு சொல்லும்போது இதை கேட்ட கீதா அப்பா என்ன பேசிட்டு இருக்க?…
நீ பாக்குறத விட அக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு சும்மா இரு அப்பா,
நீ வாய மூடு..
நீ சின்ன புள்ள உனக்கு எதுவும் தெரியாது ஊர் உலகம் முன்னாடி நான் தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா?…
? நீங்க ஒன்னும் நடக்க வேண்டாம் அப்பா,
அவ கிட்டத்தட்ட அஞ்சு நாள் நம்ம வீட்ல இல்ல,
ஒரு நாள் ஆபீஸ்லயே இருந்ததா மறுநாள் நீங்களும் அடிச்சு துரத்தி விட்டுட்டீங்க அப்போ இருந்து விக்ரம் மாமா கூட தான் இருக்கா, இதெல்லாம் ஒரு தப்பா பேசாத?…
நீ வாயை மூடு நான் நிலா கிட்ட பேசிட்டு இருக்கேன். நிலா நீ எனக்காக எதனாலும் செய்வேன் எனக்கு தெரியும் உன் அப்பா தான் உன்னோட ஹீரோன்னு சொல்லுவ,
நீ சொல்லு உன் வாயால சொல்லு சொன்னதுமே இங்கே விக்ரமுக்கு மனசெல்லாம் ஒரு மாதிரி பதைபதைக்க ஆரம்பித்தது இதை பார்த்து அவனுடைய அம்மாவும் என்னடா இது?… அப்படின்னு கண்ணை அசைக்கும் போது அவன் எதுவும் பேசாத என்ற மாதிரி கையை காட்டி விட்டான்.
அவங்க நாளை இப்ப எதுவும் பேச முடியல, ஆனா விக்கிரமா தான் சூஸ் பண்ணுவான்னு சொல்லி எல்லாரும் ரெடியா இருந்தாங்க,
விக்ரமும் ரொம்ப ஏக்கமாக அவள் முகத்தை பார்த்துட்டு இருந்தான் . அவள் எப்படியும் தன்னை பிடிக்கும் என்று சொல்லுவா ஆனா அவங்க அப்பாவையும் அதே அளவுக்கு பிடிக்குமே …
அவனோட மனசுக்கு மட்டும் தான் தெரியும் அவளுக்கு உண்மையிலேயே யாரை பிடிக்கும்னு ,
ஆனா அப்படியே அவள் விட்டுட்டு போயிட்டா அவனோட உயிரை அவனை விட்டுட்டு போன மாதிரி ஆகிடும் .. மனச உடைந்து நிலைமையில அவள் முகத்தை பார்க்கும் போது அவள் மெதுவாக திரும்பி விக்ரமை பார்த்தாள் .
அவன் கண்ணெல்லாம் கலங்கி போய் எதுவும் பேச முடியாமல் தவிச்சு போய் நின்னுட்டு இருந்தான் . எல்லாரும் அவளோட பதில் விக்கிரமாக இருக்கும்னு அவளுடைய வாய பாத்துட்டு இருக்க
ஆனா நிலா அப்படி சொல்லல ,
எனக்கு நீ போதும்பா,
நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்… இப்படி சொல்லி அவளுடைய அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.
இதை பார்த்த சங்கருக்கு மனசுக்குள்ள அவ்வளவு பூரிப்பு.
ஆனா….
விக்ரம் உடைய கையை இறுக்கமா பிடிச்சுக்கிட்டா, அந்த பிடிப்புல தெரிஞ்சிருச்சு அவனுக்கு அவளோட பதில் என்னன்னு….
நீ என்னோட ஹீரோ அப்பா, எனக்காக நீ என்னோட நல்லதை மட்டும் தான் பார்த்து செய்வேன் அது எனக்கு தெரியும்.
என்னோட நல்லது என்னோட விக்ரம் தான். நிச்சயமா என்னோட விக்ரம் கூட நீ போகக்கூடாது என்று தடையாக இருக்க மாட்ட,
எனக்கு தெரியும்…
என்னோட அப்பா எனக்கு புடிச்சதை செய்வாரு எனக்கு நல்லத செய்வாரு,
என் உலகமே விக்ரமா இருக்கும்போது அவரை விட்டுட்டு வா என்று சொல்ல மாட்டீங்க மனசார,
இப்படி சொல்லும் போது தன்னுடைய மகளின் முகத்தை நிமிர்த்தி அவள் தலையில் முத்தம் கொடுத்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
நீ ரெண்டு பேர்ல யாரையாவது ஒரு ஆள தேர்ந்தெடுத்து இருந்தா நிச்சயமா நானே உன்ன அடிச்சிருப்பேன்.
ஆனா…
ரெண்டு பேரும் வேணும்னு சொல்லி அதுவும் என் மனசுல கஷ்டப்படக்கூடாது விக்ரம் மனசும் கஷ்டப்படக்கூடாது நீ ஸ்ட்ராங்கா இருந்ததை பார்த்ததுமே எனக்கு பூரிப்பாய் இருக்கு..
நான் உன்னை பிரிக்க வேண்டும் என்று நினைக்கல,
அப்பா உன்னை டெஸ்ட் பண்ணினேன். எதுக்கு தெரியுமா அப்பாவோட வளர்ப்பு தாண்டி உன் காதலன் ஓட அன்பு உன்னை எப்படி மாற்றி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக,
உண்மையிலேயே நல்லா மாத்தி இருக்கு.
இந்தாங்க மாப்ள, என் மகளை என்னோட மனசார உங்க கையில கொடுக்கிறேன்.
நீங்க நான் பார்த்த மாப்பிள்ளை இல்லாட்டியும் என் பொண்ணு பார்த்த மாப்பிள்ளை சரியா தான் இருப்பீங்க…
உங்களை நான் ரொம்ப தரை குறைவா பேசிட்டேன் நீங்க நினைச்சிருந்தா என்ன எந்த அளவுக்கு வேணாலும் பேசி இருக்கலாம் ஆனா ரெண்டு பேருமே ரொம்ப கண்ணியமாக என்னை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டீர்கள்..
, இதுக்கு மேல எனக்கு என்ன வேணும் என் வாழ்க்கையில் நான் ஜெயிச்சுட்டேன்.. இப்படி சொல்லிக்கிட்டு அவரு விக்ரம் உடைய அம்மா கையையும் சேர்த்து மூன்று பேர் கைகளையும் ஒன்னா பிடிச்சு என் பொண்ண அவங்க கைல முழுசா ஒப்படைச்சிட்டேன். இனி அவ உங்க வீட்டு பொண்ணு.
நீங்க பாத்துக்கங்க, அவ கண்ணுல ரத்த கண்ணீர் வந்தாலும் நான் கேள்வி கேட்க மாட்டேன் ஏன்னா நீங்க உங்க பொண்ண அந்த மாதிரி எல்லாம் செய்ய வாய்ப்பே கிடையாது இப்படி சிரிச்சுக்கிட்டே அவர் சொன்னதுமே அவங்களும் நாங்க பயந்து போயிட்டோம் கொஞ்ச நேரத்துல…
என்னையெல்லாம் ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கணும் அந்த அளவுக்கு படபடன்னு ஆகிட்டீங்க ன்னு சொல்லி ஷங்கர் கிட்ட விக்ரம் உடைய அம்மா சொல்லும் போது அவரும் சிரிச்சுக்கிட்டே,
அடுத்து?..
அப்படி ஒரு கேள்வி கேட்க,
அதற்கு விக்ரம் நிலவைப் பார்த்து,
நிலா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேன் ஞாபகம் இருக்கா?..
உங்க சர்ப்ரைஸ் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. வாழ்க்கையில் எப்படியாவது சர்ப்ரைஸ் நான் எதிர்பார்த்தது இல்லைன்னு அவள் சொல்லும் போது இதுவா சர்ப்ரைஸ் இல்லவே இல்லையே…
என்கூட வா என்று சொல்லி அவள் கைய புடிச்சு இழுத்துட்டு போக கோவில் கருவறைக்கு கொஞ்சம் முன்னாடி கல்யாண தேவையான ஹோம குண்டம் ஐயர் எல்லாருமே ரெடியா இருந்தாங்க,
பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சானு சொல்லி அவரு ரெண்டு பேரையும் பார்த்து கேட்கும் போது வந்தாச்சு வந்தாச்சு…
அப்போ நான் என்ன சொன்னேன்னு உனக்கு புரிஞ்சதா?…
என் காதலி கூட இதுக்கப்புறம் இந்த மாதிரி இருக்க முடியாதுன்னு சொன்னேன் அப்படின்னா என்ன அர்த்தம்னு புரியலையா மண்டு..
நாம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா நீங்க பொண்டாட்டி இல்லையா?….
இப்படி அவன் வெட்கப்பட்டு கொண்டே அவளிடம் சொல்லும் போது அவளுக்கு கண்ணீரை கண்ட்ரோல் பண்ண முடியல கடல் நீர் போல் தாறுமாறா வந்து அவனை இறுக்கமாக கட்டிப்பிடிச்சு சுத்தி அத்தனை பேர் இருந்தாலும் யாரையுமே அவள் பாக்கல,
அவன் முகம் எல்லாம் போதும் போதும் என்ற அளவுக்கு அவள் முத்தம் மழை பொழிந்து விட அங்கு இருக்கிற எல்லாருக்குமே பயங்கர வெக்கமா போயிடுச்சு இவங்க ரெண்டு பேரையும் பார்த்தேன்…
அக்கா கோவில் அக்கா..
இப்படி கீதா சொல்லும்போது போடி அந்த பக்கம்…
இது என் புருஷன், நான் என்ன நாளும் பண்ணுவேன் இப்படி சொல்லிக்கிட்டு அவனோட கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டான் இதை பார்த்த எல்லாருக்கும் அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு.
நான் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துவிடாதே என்று ஏங்கிய அந்த அப்பா அம்மாவுக்கும் இப்ப மனச திருப்தியா இருந்துச்சு ரொம்ப சந்தோஷத்தோட அந்த கல்யாணம் அங்கேயே நிறைவு பெற,
பசிக்குதுன்னு சொன்னியே..
கல்யாண சாப்பாடு சாப்பிடலாமா?… இப்படியா அவன் கண்ணடிச்சு கிட்ட கேட்க,
இதுக்கு தான் பட்டினியா எனக்கு கூட்டிட்டு வந்தீங்களா?… இப்படி தெரிஞ்சு இருந்தா நான் பல வருஷம் கூட பட்னியாக இருந்திருப்பேனே,
நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். இந்த உலகத்திலேயே எனக்கு சந்தோசத்தை மட்டுமே கொடுத்தது நான் அதை நீங்க மட்டும் தான்.
உங்களை பார்க்கும் போது ஒரு பயம் இருந்துச்சு ஆனா என் மனசு சிறையை உடைத்து வெளியில கொண்டு வந்தது நீங்க மட்டும் தான்.
நீங்க என்ன காப்பாத்த வந்த அரக்கன்.
தப்பா நினைச்சிட வேணாம்,
ஒரு அழகான பூவ கூட ஒரு அரக்கன் கிட்ட பாத்துக்க சொன்னான் அவன் பத்திரமா பாத்துப்பான் யாரையுமே பக்கத்துல விடாம..
இப்படி சொல்லிக்கொண்டு அவனுடைய தோளில் சாய,
அன்றைய இரவு,
ரெண்டு பேருக்கும் இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்..
பயங்கரமான அரேஞ்ச்மென்ட் ஒரு பெரிய ரெசார்ட் புக் பண்ணி அங்கே எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்க,
அந்த சாதாரணமாக நிலா எல்லாம் நடந்து வந்தா,
அவளை பார்த்த விக்ரம் கேட்டான் என்னடி?… பயங்கர வெக்கத்தோட வருதா இன்னைக்கு பயங்கர என்ஜாய்மென்ட்டா இருக்க போதுன்னு நினைச்சேன் நீ என்ன சாதாரணமா வர்ற?..
சார்..
இது என்னமோ முதல் முறை மாதிரி பேசிட்டு இருக்கீங்க பேசாம போய் தூங்குங்க எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.
என்னது?…
டயர்டா இருக்கா?..
கொன்னே புடுவேன். நேத்து வரைக்கும் நீ யாரும் எனக்கு தெரியாது இன்னைக்கு நீ என் பொண்டாட்டி. கட்டுன பொண்டாட்டி அதை மறந்துடாத…
இப்படி சொல்லிக்கிட்டு அவளை தூக்கி கட்டிலில் போட்டான்.
ரொம்ப நேரம் கழிச்சு ரெண்டு பேருக்கு தூக்கம் வரல.
ஆனா இது முழுக்க முழுக்க சந்தோசத்துனால…
அந்த சந்தோஷத்திலேயே ரெண்டு பேரும் கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டு விடிய விடிய பேசிய படியே
அந்த அரவணைப்பிலிருந்து சற்றும் நகராம மனசலவில் இந்த உலகத்தையே வென்றது போல அமைதியோடு இருந்தாங்க…
இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் .
நன்றி வணக்கம் .
முற்றும்…
