நெஞ்சம் 2

 

“ஹேய்… கௌதம் என்னாச்சு? ஏன்டா இப்படி நிக்கற?” என்று ஷாலினி சிலை போல நின்ற கௌதமை பார்த்து கேட்டாள்.

“அது…” என்று ஆரம்பித்தவனுக்கு மேற்கொண்டு சொல்ல வாய் வரவில்லை.

இதை விட அவனை யாரும் அவமானப்படுத்த முடியாது. அவன் தனது அவமானத்தை எவ்வாறு சொல்வது என திணறி கொண்டிருக்கையில் ஷாலினி அவன் கையில் இருந்து போனை பிடுங்கினாள்.

அவள் கண்களில் ஜெனிஃபர் வைத்திருந்த ஸ்டேட்டஸ் கண்ணில் பட அதனை பார்த்தாள். அது சில நிமிடங்களுக்கு முன் தான் வைக்கப்பட்டிருந்தது.

அங்கே அவள் ஒரு இடத்தில் கேக் வெட்டிக் கொண்டிருப்பது கண்ணில் பட அதனை பார்த்தவள் அதிர்ந்து போய் நின்றாள்.

“கௌதம் என்னடா இது?” என்று கேட்க அவனோ கூனி குறுகி கண்கள் கலங்க அமர்ந்திருந்தான்.

“கௌதம்” என்று அவனை உலுக்க “நீங்க ரெண்டு பேரும் பாத்துக்கோங்க” என்று தொண்டையை செருமியபடி சொன்னவன் அங்கிருந்து கிளம்பினான்.

“டேய் எங்க போற?” என்று ஷாலினி பதறி போய் கேட்க‌ “லீவ் மீ அலோன்” என்று கத்த வேண்டும் போல இருந்ததை சூழ்நிலையை கருதி தன்னை அடக்கியவன் தனது வாலட்டை அவளிடம் கொடுத்து “யாருக்கு என்ன செட்டில் பண்ணிடனுமோ பண்ணிடுங்க” என்றவன் அங்கிருந்து வெளியே செல்ல கிளம்பியவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

“கௌதம் நில்லுடா. நீ இப்போ போக கூடாதுடா” என்று சொன்னாள்.

“ஏய்… என்னடி பேசற? என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது” என்றவன் தலையை பிடித்தான்.

“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்டா கௌதம்” என்று அவனருகே வந்து அவனை அணைத்தாள். அவனுக்கு இருந்த மன அழுத்தத்தில் கௌதம் ஷாலினியை இறுக அணைத்து கொண்டான்.

ஆறுதலாக அவனது முதுகை வருடி விட்டவள் “கௌதம் இப்போ ஜெனிஃபர் வரல. நீயும் இங்க இல்லேனா நல்லாருக்காது. உனக்காக தான் எல்லாரும் வந்திருக்காங்க” என்றவளை முகம் கசங்க பார்த்தான்.

“கம் ஆன் கௌதம்… நம்ம இப்போ இவங்கள நல்லபடியா கவனிச்சு அனுப்பனும்டா” என்றவள் சொல்ல தளர்ந்து போய் அமர்ந்தான்.

அவனுக்கு அனைத்தையும் தூக்கி போட்டு உடைக்கும் வெறி வந்தது. பல்லை கடித்து கொண்டு அமர்ந்திருந்தான்.

இவர்களை கவனித்த ராகுல் அங்கு வந்தான்.

“என்னாச்சு? டேய் ஏன்டா உன் முகமே சரியில்ல?” என கேட்டான்.

ஷாலினி நடந்ததை சொன்னவுடன் “நான் தான் அத்தன டைம் சொன்னனே.  சொன்னத கேட்டியாடா? அவளுக்கு பெரிய உலக அழகினு நினப்பு?” என்று கத்தினான்.

“ஷ்… ராகுல் நீ ஏன்டா கத்தற? இது வெளிய தெரிஞ்சா அவனுக்கு தான்டா அசிங்கம். சைலன்ட்டா இரு” என்றவள் ராகுலை சமாதானம் செய்ய அந்த வார்த்தைகளில் அவனது மனம் ஆயிரம் குத்தீட்டிக்களை சொருகியது போல தவித்தது.

மௌனமாக தலையை பிடித்தபடி அமர்ந்தவனை தேற்றியவர்கள் வந்தவர்களுக்கு தவிர்க்க முடியாத நிலையில் ஜெனிஃபரால் வர முடியவில்லை என சொல்ல ஒவ்வொருவரும் அவனை பார்த்த பார்வை கௌதமை உயிரோடு கொன்றது.

“ஆதவ் சாப்பிடுங்கடா. ஜெனிஃபரால வர முடியல. இன்னொரு நாளைக்கு உங்களுக்கு இன்ட்ரோ கொடுக்கறேன்” என்று கௌதம் சொல்ல ஆதவ் அவனை ஏளனமாக பார்த்தான்.

“உன் ஆளு ஏன்டா வரல?”

“அது… அவ அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லனு ஊருக்கு போய்ட்டா” என்று திணறியபடி கூறினான்.

“அவ அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லனு ஊருக்கு போனாளா? இல்ல நீ வேணாம்னு வேற ஒருத்தனோட ஓடிப் போயிட்டாளா?” என்றவனின் கேள்வியில் கௌதமின் கோபம் உச்சகட்டத்திற்கு சென்றது.

 

“டேய் என்னடா பேசற?” என்றவன் அவனை அடிக்க ஆரம்பித்தான்.

“நான் என்ன பேசறது? அதான் உன் ஆளு உனக்கு டிமிக்கி கொடுத்து வேற எவனோடவோ பர்த்டே கொண்டாடிட்டு இருக்கானு உண்மைய சொல்றதுக்கு என்ன?” என்றவன் அடியையும் வாங்கி கொண்டு அசராமல் கேட்டான்.

“டேய் ரொம்ப பேசற” என்றவன் இன்னும் அவனை அடிக்க இந்த முறை ஆதவ்வும் அடிக்க ஆரம்பித்தான்.

“டேய் கௌதம் நிறுத்துடா‌. நீ ஏன்டா அவன அடிக்கற? நாங்க நீங்க பேசறது கேட்டுட்டு தான் இருந்தோம். ஒரு லவ்வர தக்க வெச்சுக்க துப்பில்ல? நீ எங்கள அடிக்கிறயா?” என்று இன்னொருவனும் கௌதமை அடிக்க ஆரம்பித்தான்.

இவர்கள் சண்டை போட்டதில் அங்கிருந்த பொருட்கள் எல்லாம் நாசமாக இவர்களை சமாதானம் செய்ய வந்த நண்பர்களுக்கும் அடி விழுந்தது. 

ராகுலும், ஷாலினியும் எவ்வளவோ தடுத்தும் கௌதம் ஜெனிஃபர் மேல் இருந்த கோபத்தில் தன்னை மறந்தான்.

ஒரு கட்டத்தில் ஆதவ்வின் நண்பன் போலீஸை கூப்பிட்டு கௌதமை பற்றி புகார் செய்தான்.

அப்போதும் சண்டை ஓய்ந்தபாடில்லை. வந்த போலீஸ் கௌதமை ஏதும் பேசவே விடவில்லை. அவன் கண்களில் இருந்த ஆக்ரோஷத்தை பார்த்தவர்கள் அவனை கைது செய்தார்கள்‌.

“என்ன ஏன் அரெஸ்ட் பண்றீங்க?” என்று கோபமாய் கௌதம் கேட்டான்.

“நீ அடிச்சதுல அவன்  எப்டி மயங்கியிருக்கான்.  இன்னும்‌ உனக்கு திமிரு போலயா?” என்றவனை அடித்தவர் இழுத்து சென்றார்.

“சார் தப்பு அவன் மேல இல்ல சார். ப்ளீஸ் ஸார்” என்று ராகுலும், ஷாலினியும் கெஞ்சினார்கள்.

“எதுனாலும் ஸ்டேஷன் வந்து பேசிக்கோங்க” என்றவர் அவனை கூட்டி செல்ல அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து போய் நின்றார்கள் இருவரும்.

***

அன்று‌ முழுவதும் ஆட்டம் போட்டு வந்த‌ ஜெனிஃபருக்கு அலுப்பாக இருந்தது. 

காலையில் கல்லூரி சென்றதும் உடனே சிறிது நேரத்தில் அவளது சொந்தங்கள் அவளை கூட்டி கொண்டு சென்றார்கள்.

ஜெனிஃபர் தனது உறவினர்களுடன் தனியாக வீடெடுத்து வசிக்கிறாள்.

ஏற்கனவே அவள் கோவையில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து அதில் அவளுக்கு பிடித்தம் இல்லாமையால் அவளது அண்ணன் சாம் தான் பார்த்து கொள்வதாக சொன்னதில் அவளுடைய அப்பா டேவிட் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க அனுப்பி வைத்தார்.

டேவிட்டின் முதல் அண்ணன் பையன் சார்லஸின் பையன் ஷாம். அவன் MBBS முடித்து விட்டு மருத்துவராக சென்னையில் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு இதய சிகிச்சை நிபுணர் ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக படித்து கொண்டிருக்கிறான்.

டேவிட்டின் இரண்டாவது அண்ணன் ஸ்டீஃபனுக்கு இரண்டு மகள்கள். பெரியவள் ஜெசிகா சென்னையில் உள்ள பேங்கில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். சிறியவள் செலின் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு சேர்ந்திருக்கிறாள்.

ஜெனிஃபர் இவர்களுடன் தான் சென்னையில் தங்கி இருக்கிறாள்‌. சிறு வயதில் இருந்தே இவர்கள் கூட்டாக சேர்ந்து அடித்த லூட்டி அதிகம். இவர்கள் ஒன்றாக இருந்தால் அந்த இடமே அவ்வளவு கலகலப்பாக இருக்கும்.

அதிலும் ஜெனிஃபர் அனைவரையும் விட சிறியவள் என்பதால் அவள் எல்லாருக்கும் செல்ல குழந்தையாகி போனாள்.

எப்போதும் அப்பா, அம்மாவுடனே பிறந்த நாள் கொண்டாடியவள் இன்று இவர்களோடு இருக்கையில் அவள் பிறந்த நாள் வர கொண்டாடி தீர்த்து விட்டார்கள்‌.

காலை பதினோரு மணிக்கே அவள் கல்லூரிக்கு வந்தவர்கள் அவளை விடுமுறை எடுக்க வைத்து மதியம் ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் அப்படியே சினிமாவுக்கு சென்றார்கள்‌.

சினிமா முடிந்தவுடன் பீச்சுக்கு வந்தவர்கள் அலைகளில் விளையாடி விட்டு அங்கேயே உள்ள ஹோட்டலில் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெனி திக்குமுக்காடி போனாள். அவர்களின் ஒவ்வொரு செயலையும் அவள் சந்தோஷமாக அனுபவித்தாள்.

அந்த நாள் அவளின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது.

இவர்களோடு இருந்ததில் அவள் போனை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

அவள் கேக் வெட்டும் போது போட்டோ எடுத்த செலின் அதை ஸ்டேட்டஸாக வைத்து விட்டாள்.

இதை எதையும் அறியாத ஜெனி களைப்பில் கண் மூடி படுக்கையில் அவளுக்கு கௌதம் ஞாபகம் வந்தது.

‘ஓ மை காட்! இவன எப்படி மறந்தேன்? பார்ட்டி வைக்கிறேனு சொன்னானே’ என்று நினைத்தவளுக்கு தூக்கி வாரி போட போனை தேட ஆரம்பித்தாள். ஆனால் அதுவோ அவளிடம் இல்லை.

அவள் அறையில் ஒவ்வொரு இடமாக தேடி கொண்டிருக்கையில் சாம் உள்ளே வந்தான்.

“ஜெனி  கௌதம் யாரு?” என அதட்டலான குரலில் கேட்டவனை திடுக்கிட்டு போய்  பார்த்தாள்.

“அ… அது” என்றவள் திணறினாள்.

“யார் கௌதம்? அவன் எதுக்கு உன்னால ஜெயிலுக்கு போகணும்?” என்று கேட்க அவள் அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள்.

“ஏய்.. சொல்லுடி. உன்ன தான் கேக்கறேன்” என்றவன் கேட்கையில் அவளது போன் திரும்பவும் அடித்தது.

“ச்சே… இந்த போன் வேற” என எரிச்சலான குரலில் கத்தியவன் போனை அவளிடம் தந்தான்.

அப்போதும் அவள் அப்படியே நிற்க “ஜெனி” என்றவனின் கர்ஜித்ததில் பயந்து போனவள் “அவன நான் லவ் பண்றேன்” என அவள் உளறினாள். அவளது பதிலில் சாம் உறைந்து போய் நின்றான்.

போன் அடித்து கொண்டே இருக்க “ஃபர்ஸ்ட் போன பேசு. எனக்கு இருக்கிற டென்ஷன்ல நான் போன தூக்கி போட்டு உடைச்சுடுவேன்” என்றவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அதில் நடுங்கியபடியே போனை வாங்கிய ஜெனி “ஹலோ” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“ச்சே…. நீ எல்லாம் மனுசியாடி? ஒருத்தன் உன்ன லவ் பண்ணிட்டு உன் பர்த்டேக்காக செலிபரேட் பண்ணனும்னு எவ்ளோ ஆசையா பார்ட்டி அரேஞ்ச் பண்ணான்? உன்னால வர முடியலனா வர மாட்டேன்னு சொல்ல வேண்டியது தானே? ஏன் இப்படி அசிங்கப்படுத்தற? இப்போ உன்னால அவன் ஜெயில்ல இருக்கான்” என ஷாலினி கத்தினாள்.

“அக்கா… அக்கா… என்ன சொல்றீங்க?” என்று கண்ணீர் குரலில் கேட்டாள்.

“ஏய்… உன்‌ நீலிக்கண்ணீர்லா அவன் கிட்ட வெச்சுக்கோ. கௌதம போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.‌ அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு” என்று ஷாலினி கத்தி கொண்டிருக்கையில் “ஷாலினி அவளுக்கு எதுக்கு நீ கூப்பிடற? அவ ஒரு ஆளுனு… கௌதமுக்கு நம்ம இருக்கிறோம்.  வேற யாரும் தேவையில்ல” என்று சொல்லியவாறே போனை கட் செய்தான்.

அவர்களிடம் பேசியவள் அப்படியே தளர்ந்து போய் தரையில் உட்கார்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்.

“ஜெனி இப்போ எதுக்கு அவனுக்காக நீ அழற? ஃபர்ஸ்ட் நீ லவ் பண்றங்கறதையே என்னால நம்ப முடியல” என்று இறுக்கமான குரலில் கண்டிப்புடன் கேட்டான்.

“சாம்.‌. ப்ளீஸ் சாம்… அவன வெளிய எடுக்கணும் சாம்.‌எப்படியாவது ஹெல்ப் பண்ணு” என அழுகையுடன் கேட்டாள்.

“அவன்‌ யாரு என்னன்னே எனக்கு தெரியாது. அவனுக்கு எப்படி நான் ஹெல்ப் பண்ண முடியும்?”

“ப்ளீஸ்டா… அவன் ரொம்ப நல்லவன் டா… என்ன பிரச்சினைனு தெரியல” என்றவளை கோபம் பொங்க பார்த்தான்.

“ஒரு ரவுடிய லவ் பண்ணிட்டு அவன வெளிய எடுக்க சொல்றியே? உனக்கு வெக்கமா இல்ல?” என்றவனின் வார்த்தைகளை நம்ப முடியாமல் அவனை பார்த்தாள்.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page