மயக்கம் தயக்கம் 17
எந்த பரபரப்பும் இன்றி நிதானமாக வேலைகளை செய்ய சந்தனாவுக்கு நேரம் கிடைத்தது. தனது தங்கைக்காக அதிக நேரம் அமர்ந்து அவளுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுப்பதும்,விதவிதமாக சமைத்துக்கொடுப்பதும் கூட சாத்தியம் ஆகியது.காலையில் கிளம்பி சென்றால் மாலை சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வருவது பிடித்தும் இருந்தது.
மருத்துவமனையிலிருந்து உடன் வேலை செய்யும் தோழி பேசியபொழுது சந்தனா சொன்னது,” ஹ்ம்ம்..எல்லாம் சரியா போகுதுன்னு சொல்றதைவிட, நல்லா போகுதுன்னு சொல்வேன். அங்கே ஹாஸ்பிடல்ல வேலை செய்யுறதுக்கும் இங்கே அவங்க வீட்டுல பேஷண்ட் பாக்குறதுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கு. நேரம் நிறைய கிடைக்குது. பட், என்னோட சாய்ஸ் இது இல்ல. ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணும்பொழுது அதிகமா கத்துக்கறோம்.நேரடியா டாக்டர்ஸ் கூட இன்ட்ராக்ட் பண்ணும்பொழுது பேஷண்ட்ஸ் பற்றிய புரிதலும்,மருந்துகள் பற்றிய அறிவும் கெயின் ஆகுது. ஒருத்தங்க வீட்டுக்கு போய் அந்த பேஷண்ட் மட்டும் பொழுது நம்மை நாமே சுருக்கி இருக்குற மாதிரி இருக்கு. இது என் கருத்துதான். எல்லாருக்கும் எண்ணங்கள் மாறுபடும்.என்னோட ஒபினியன் தப்பா கூட இருக்கலாம்.’
அவளது வார்த்தைகளை கேட்ட சந்தனாவின் தோழியோ, ” நீ சொல்றது சரிதான்.பட், பாரு நீ அட்டென்ட் செய்யுற பேஷண்ட்ஸ் உன்னையே தேடுறாங்க.” அவளது வார்த்தைகள் வஞ்ச புகழ்ச்சி அணியாகத்தான் சந்தனாவுக்கு தோன்றியது. தோழி சொன்னதற்கு ஆமோதிப்பாகவோ,மறுப்பாகவோ பதில் சொல்ல இஷ்டமில்லை.மௌனமாய் இருந்து விட்டாள். அந்த தோழியின் மூலம் மருதவாமையில் மருத்துவன் அரவிந் அதிக நேரம் இருப்பதையும் தெரிந்து கொண்டவளுக்கு ஒரு ஊகம் இருந்தது.அதை வெளிப்படையாக சொல்லி பிரச்னையாவதையும் அவள் விரும்பவில்லை.
அதே போல் அரவிந்திடம் பேசிப்பார்க்கவோ, அவனை பற்றி நினைக்கவோ கூட பெண்ணுக்கு உவப்பாக இல்லை. அதாவது சந்தனாவை பொறுத்தவரை அரவிந்தனின் மீது துளி கூட ஈடுபாடு இல்லை. ஒருபக்கம் மட்டும் காதல் என்று நின்று என்ன பயன்?
பதினைந்து நாட்களுக்குப் பிறகு அந்த பேஷண்டை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தாள் சந்தனா. மருத்துவர்,” இனிமேல் நர்ஸின் தேவை இராது ” என்று அவர்களிடம் சொல்லிவிட்டதால்,சந்தனா திரும்ப அவர்களுடன் செல்லாமல் மருத்துவ மனையில் தங்கிவிட்டாள்.
மதிய உணவை முடித்துக்கொண்டு வந்தவளுக்கு அன்றிலிருந்து காலை நேரம் பணிக்காக கொடுக்கப்பட்டது. நேரே தான் வேலை செய்யும் தளத்திற்கு சென்று கொண்டிருந்தவளை தயாவின் ” ஆன்டி ” என்ற குரல் நிறுத்தியது. சந்தனா அங்கேயே நின்றுவிட்டாள். வேகமாக பூப்பந்தாய் ஓடி வந்து சந்தனாவின் கால்களை கட்டிக்கொண்டாள் சின்னவள்.
அதற்குள் சந்தனாவின் பாட்டி வாணி அருகே வந்துவிட, சந்தானவோ வெகு பழக்கமாக தயாவை தூக்கிக்கொண்டிருந்தால். வாணியை பார்த்தவுடன் சந்தனாவுக்கு தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
” மாம்..நீங்களா? அம் வெரி மச் எக்ஸைடேட். உங்களோட பாட்டுன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும் ” என்று விழிகளை விரித்து சொன்னவளை ஆதூரமாக பார்த்தார் வாணி.கூடவே யாருடனும் அவ்வளவு எளிதாக பழகாத தயா சந்தனாவின் தோளில் சாய்ந்து கொண்டிருப்பதையும்,சந்தானா சின்னவளை பாசமாக தூக்கி வைத்திருப்பதையும் பார்த்தவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ரோஷினியின் குழந்தைக்கு முதல்நாள் இரவிலிருந்து ஜுரம்.காண்பிக்கவென்று அவர்கள் வாணியும்,ரோஷிணியும் மருத்துவமனைக்கு கிளம்ப, தயா தானும் வருவேன் என்று அழுகை. விஜயராகவனும் ‘சரி அழைச்சிட்டு போங்க “என்று சொல்லியது தான் தாமதம். பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிட்டாள்.
உண்மையில் மருத்துவமணையில் சந்தனா ஆன்டி இருப்பாளா என்று அவளது கண்கள் வெகு நேரமாக அலசிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் தயாவுடனும் வாணியுடனும் பேசியவள் ,குழந்தையுடன் மருத்துவர் அறைக்கு வெளியே காத்திருந்த ரோஷினியையும் பார்த்துவிட்டு,குழந்தைக்கு ஜுரம் எவ்வளவு இருக்கிறது என்று பரிசோதித்து அவற்றை கம்பியூட்டரில் பதிவேற்றம் செய்துவிட்டுத்தான் சென்றாள்.
அங்கே ரோஷினிக்கு முன்பு ஆறு பேர் தங்கள் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்கள். மருத்துவன் அரவிந் சாப்பிடவென்று சென்றிருக்கிறார்.வர இன்னமும் அரைமணி நேரம் ஆகும் என்றார்கள்.
வாணியிடமும் ரோஷினியிடம் ஒரு தலையசைப்புடன் வருகிறேன் என்றவள்,தயாவின் கன்னங்களில் முத்தமிட்டு,” குட் கேர்ள்லா இருக்கணும்.எல்லாத்துக்கும் அழவோ,அடம்பிடிக்கவோ கூடாது என்றுவிட்டு குழந்தையை அணைத்து விடுவித்துவிட்டு தனது வேலை தளத்துக்கு சென்று விட்டாள்.
வீட்டுக்கு வரும் வழி முழுவதும் தயா சந்தனாவை பற்றியே பேசிக்கொண்டு வந்தாள். இரவு அவள் அப்பாவிடமும் சந்தானா புராணம் தான்.சந்தானவை பற்றிய பேச்சுக்கள் தனது மனதை மென்மையாக்குவதாக உணர்ந்தான் விஜயன். மனது உணர்ந்ததை மூளை இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.
ஒருவாரம் கொடைக்கானல் சென்றுவிட்டு வந்ததில் அலுவலகத்தில் வேலை பளு கூடியிருந்தது. அவன் அப்பாவும் வீட்டில் இருப்பதில்லை.அவர் சென்னையில் இருக்கும் தங்கள் அலுவலகம் சென்றுவிட்டு மாலை அல்லது இரவில் தாம் வருவார்.
வாணியும் சென்னை வந்திருப்பதை அறிந்துகொண்டு சில சபாகாரர்கள் இசை கச்சேரிக்கு என்று அவரை புக் செய்து இருந்தார்கள். குழந்தைக்கு கொஞ்சம் உடல் நிலை சரியானதும் ரோஷினி ,” ம்மா,சென்னை வந்திட்டு எங்க மாமியார் வீட்டுக்கு போகலைன்னா தப்பாகிடும்.அண்ட் அவங்களுக்கும் குழந்தையோட இருக்க ஆசை இருக்கும் தானே!” என்றுவிட்டு சேலத்தில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.
திருமணம் முடிந்து அவள் மாமியார் வீட்டுக்கு செல்வது இதுதான் இரண்டாவது முறை. மாமனார் அமெரிக்காவில் வேலை பார்த்து செட்டில் ஆகியிருந்தவர் தான். எழுவது வயதுக்கு பிறகு மீண்டும் இந்தியா வந்துவிடும் ஆசையில் மாமியாரையும் அழைத்துக் கொண்டு கடந்த ஆண்டுதான் இந்தியா வந்தார்கள். குழந்தை பிறந்த சமயத்தில் ஒரு மாதம் அங்கே வந்திருந்து மகன் அவனது குடும்பத்துடன் கழித்துவிட்டு மீண்டும் இந்தியா வந்துவிட இதோ இப்போது ரோஷினி அவர்களை காணவென்று சேலம் செல்கிறாள்.
குழந்தையுடன் ரோஷினி சேலம் சென்றபிறகு வீடு மீண்டும் அமைதியாக மாறிப்போனது. இங்கே இருக்கும் பொழுது அவர்கள் இருவரின் ,குரலும் கேட்டுக்கொண்டே இருக்கும்.இப்போது கேட்பது வாணியின் குரல் மட்டும்தான். கச்சேரிகளில் பாடுவதற்க்காக வீட்டில் கொஞ்சநேரம் குரல் பயிற்சி செய்துவிட்டு மீண்டும் வாத்தியங்களுடன் பயிற்சியை தொடரவென்று சபாவுக்கோ,ஸ்டூடியோவுக்கோ சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வருவார்.
தயா பள்ளிக்கு சென்றுவிட்டு,வீட்டில் யாரும் இல்லையாதலால் அங்கே இருக்கும் கிரீச்சில் இருந்துவிட்டு மாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வருவாள். குழந்தையை பார்த்துக்கொள்பவர் தனது பெண்ணின் பிரசவம் என்று கிளம்பி சென்று ஒரு மாதம் ஆகிறது. வீட்டில் வாணியும் ஆனந்தும் இருந்ததால் விஜயன் அதைப் பற்றி பெரியதாக லட்டிக்கொள்ளவே இல்லை.
மகனை இந்த நிலையில் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் அமெரிக்காவுக்கு மீண்டும் செல்ல பெற்றவர்களுக்கு மனதில்லை. இந்த வார இறுதியில் அதை பற்றியும் அவனது மறுமணம் பற்றியும் பேசி விடுவது என்று முடிவு செய்து வைத்திருந்தார்கள்.
வீட்டில் மீண்டும் மீண்டும் திருமணம் பற்றிய பேச்சு எழுவதால் அலுத்துப்போன அரவிந்தன் அதிலிருந்து தப்பிக்கும் வழியாக மருத்துவமனை ஏற்பாடு செய்து இருந்த கிராமப்புறங்களுக்கான மருத்துவ சேவையின் ஒரு பாகமான ஒரு மாத கேம்பிற்கு தன்னையும் இணைத்துக் கொண்டான் . உடன் சில நர்சுகளும் ரொட்டேஷனில் வருவதாக ஏற்பாடு ஆகியிருந்தது .சந்தனாவும் தங்களுடன் வரக்கூடும் என்று அரவிந்தன் மனதிற்குள் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது .
அவன் எண்ணம் பொய்க்காமல் ,சந்தனாவின் பெயரும் அந்த லிஸ்டில் இருக்க அரவிந்தனுக்கு பெரு மகிழ்ச்சி . எப்படியாவது இந்த முறை சந்தனாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான் அரவிந்தன் .
அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில் மருத்துவமனை அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்க , சந்தனாவின் மனதில் எப்படி மறுப்பது என்றே ஓடிக் கொண்டிருந்தது . வீட்டை விட்டு வெகு தூரம் அதிக நாட்களுக்கு அவள் சென்றதில்லை .இன்னொரு விஷயம் என்னை விட்டுவிட்டு எப்படி இருப்பாள் என்ற தயக்கமும் உண்டு .
வீட்டில் சொன்னதற்கு , பெற்றவர்களோ “ஏற்கனவே உன்கிட்ட சொன்னது தான் சந்தனா. கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு. இல்லன்னா,வெளிநாட்டுல இருக்குற ஆபர் அதையாவது ஒத்துக்கோ. அதுக்கு இப்போ போறே இல்ல கேம்ப். அது ஒரு பயிற்சியா அமையும்.”என்றுவிட்டார்கள்.
சத்தியமாக இது போன்ற ஒரு பதிலை சந்தனா எதிர்பார்க்கவில்லை. திகைப்பில் விழித்தாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. கேம்பிற்கு செல்லவும் இஷ்டமில்லை . சாசர் போல அவளது விழிகள் விரிந்ததில் அவளது எண்ண ஓட்டங்களை பெற்றவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் . ஆனாலும் தாங்கள் சொன்னதிலிருந்து மாறுவதாக இல்லை . இன்னமும் கூட சந்தனா திருமணம் பற்றியோ அல்லது வெளிநாடு சென்று வேலை செய்வது பற்றியோ எந்த முடிவையும் பெற்றவர்களிடம் தெரிவித்திருக்கவில்லை . ஏதாவது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலா வது பெண் பிடி கொடுப்பாளா என்று அவர்களும் முயற்சி செய்துதான் பார்க்கிறார்கள் .
எழுதப்பட்டிருக்கும் விதி எனும் மாறவா போகிறது? இதற்கு மேல் பேசினால் பிரச்சனை பெரிதாக கூடும் என்று யோசித்த சந்தனா , தன் அறைக்குள் சென்று விட்டாள் . ராகினி இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை . அதுவேறு சந்தனாவிற்குள் பதட்டத்தை விதைத்தது .சரியாக சொல்ல வேண்டும் என்றால் ராகினி ,பள்ளிகூடம் விட்டு,அல்லது ட்யூஷன் விட்டு வீடு வந்து சேர அரைமணி நேரம் தாமதம் ஆனால் கூட சந்தனாவிற்குள் பதட்டம் தோற்றிக் கொண்டு வருகிறது
கீதாவும் ரங்கனும் சொல்லிப் பார்த்து அலு த்தது தான் மிச்சம் . அவளால் கொஞ்சமும் மாற்றிக் கொள்ள முடியவில்லை. சின்னவளின் சிறு சிறு ஆசைகள் கூட சந்தனாவின் பயத்தால் தடைபடுகிறது. இப்போது ராகினி பள்ளியில் படிக்கிறாள். கல்லூரிக்கு செல்லும் பொழுதும் இதே தொடர்ந்தால் ராகினி எப்படி நடந்து கொள்வாள் என்று யோசனை கீதா ரங்கனுக்குள்.
பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கான பயம் சரியானது தான். ஆனால், சந்தனாவின் பயம் அவள் தங்கை ராகினியின் தனிப்பட்ட வாழ்க்கையின் சதோஷத்தை குறைப்பதில் நியாயம் இல்லை. சந்தானவின் பயத்திற்காக ராகினியை வீட்டுக்குள்ளா வைத்திருக்க முடியும்?
ராகினி அவளது மிதிவண்டி பஞ்சர் என்று அதை சரிசெய்து கொண்டு வீடு வந்து சேர தாமதம்.சந்தனாவுக்கு தங்கையை கண்டபிறகுதான் மூச்சே சீராக வந்தது. கீதாவும் ரங்கனுக்கு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த பெண்ணுக்கென்று ஒரு திருமண வாழ்க்கையை சீக்கிரம் ஏற்படுத்திக் கொடுத்தாக வேண்டும்.இப்படி தனியாக நிற்க வைக்கக்கூடாது என்று யோசித்தார்கள். முப்பது வயது ஆகப்போகிறது.ஏறத்தாழ ஆறு வருஷங்களாக திருமணம் பற்றி பேசினாலே சந்தனா பதில் மௌனம் தான். மற்றவர்கள் குற்றம் சொல்வது பெற்றவர்களை தான்.
இன்னமும் பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்க நேரம் வரவில்லையா? அவளது பணம் வருகிறது என்று இருக்கீங்களா? பொண்ணுக்கு பதினஞ்சு வயசாகும் பொழுது நீங்க அடுத்த குழந்தை பெத்துக்கிட்டு,இப்போ மூத்தவளை கலியாணம் செஞ்சுக்குடுக்கமா நிக்க வைக்கிறது என்ன நியாயம் என்று நிறைய கேட்டாகி விட்டது.இன்னமும் எவ்வளவுதான் தாங்குவது?
வெளியே எங்கேயும் திருமணம் போன்ற விழாவுக்கு நிம்மதியாக சென்றுவிட்டு வர முடியவில்லை.அவ்வளவு கேள்விகள்,பரிகாசங்கள். எதையும் சந்தனா கண்டுகொள்வது கிடையாது. வெளியே எழும் பேச்சுகளும் சரி,பெற்றவர்களின் புலம்பலும் சரி.அவளை பொறுத்தவரை ஒன்று தான்.
