மலர் 14

மலர் 14

“நேத்து நான் அங்க போகும் போது ஒரு டூ  வீலர் வண்டில லைட்டா பட்டுருச்சு. அதுக்கு அதுல இருந்த பொண்ணுங்க கத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதான் அவங்க மேல மான நஷ்ட வழக்கு போடலான்னு  இருக்கேன். என்னதான் இருந்தாலும் அப்டி பப்லிக் பிளேஸ்ல என்னை அவமான படுத்தி இருக்க கூடாது. அதுலயும் போய் அம்மா மடில படுத்து தூங்க சொல்லறா ஒருத்தி. எனக்கு வந்த கோபத்துக்கு இறங்கி ஒரு அப்பு அப்பனும்போல இருந்துச்சு.

அவன் சொல்ல சொல்ல பாட்டிக்கு அருகில் நின்றிருந்த அமிர்தாவுக்கு தொண்டை விக்கித்து போயிற்று.

அவள் என்ன மாதிரி உணர்கிறாள் என்பதை குரூரமாக பார்த்து ரசிக்கவே ஆனந்த்  காத்துக் கொண்டிருக்கிறானே ? அவன் தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

“அதுக்குத்தான்  பத்து மணிக்கு லாயர் அங்கிளை  ஆபிசுக்கு வர சொல்லி இருக்கேன்”

“ஏதோ சின்ன பொண்ணுங்களா இருக்கும். விடுடா” பாட்டி தான் சொன்னார். 

“அது எப்படி பாட்டி அப்டியே விட முடியும். பொது இடத்துல  யாரை பார்த்து என்ன பேசறோன்னு  தெரிய வேண்டாம் ? “அவனின்  அழுத்தமானப் பார்வையால் 

உடம்பில் தெம்பிலாமல் அருகில் இருந்த தண்ணீரை குடித்தாள்  அமிர்தா. 

“உப்ப திண்ணா  தண்ணீ  குடிச்சுதானே ஆகணும்” இரட்டை அர்த்தத்தில் பேசினான் ஆனந்த் . 

அதற்குள் அவனுக்கு போன் கால் வந்தது. டிஷ்யூவினால் வாயை துடைத்துக் கொண்டவன், போனை  எடுத்துக் கொண்டு தன்  அறைக்கு  சென்று விட்டான்.

“தாத்தா!அவர் கிட்ட அந்த மாதிரி எதுவும் பண்ண வேண்டான்னு சொல்லுங்களேன்”

“ஏம்மா ?”

“அது நானும் இனியாவும்தான்”. பயத்தில் கண்களில் நீர் குளம் கட்டியது. 

“என்னம்மா இது ? அவன்கிட்ட போய் இப்படி பண்ணிடீங்களே?அவனுக்கு அவங்க அம்மாவை பத்தி பேசினா எவ்ளோ கோபம் வரும் தெரியுமா ?இனியாவுக்குத்தான் அவனை பத்தி தெரியாது? உனக்குமா தெரியாது?” மேலும்  தொடர்ந்தவர்,

முதல்ல நீ பண்ண தப்புக்கு அவன்கிட்ட போய் மன்னிப்பு கேளு. அப்புறம் ஒத்து வரலைன்னா நான் பேசறேன்”

“தாத்தா ப்ளீஸ் தாத்தா. எனக்கு அவரை பார்த்தாலே குலை நடுங்குது. நான் எப்படி?”

“நீ போய்  மன்னிப்பு கேட்டாதான்  அவன் மனச மாத்திக்குவான். இல்லாட்டி நீங்க  யாருக்கும் சப்போட் பண்ண வேண்டான்னு என்னையே திட்டுவான்”

அவள் முகம் தெளியாததால், 

“சரி! உனக்கு இன்னொரு வழி சொல்லறேன். அதை  பண்ணறியா ?”

கண்களை துடைத்துக் கொண்டவள் “சொல்லுங்க பாட்டி “என்றாள்  ஆர்வமாக.

“நீ போய்  ரெஜிதாவை பார்த்து அவகிட்ட விஷயத்தை சொல்லு. அவ மனசு வச்சா உனக்கு ஏதாவது நல்லது நடக்கலாம்”

“ஐயோ பாட்டி ! தலை சாய்த்து கெஞ்சிக் கொண்டிருந்தவளை  பார்த்தவனுக்கு மனதில் ஏகப்பட்ட ஆத்திரம்”

 அவனை திட்டியதாலா ?அவனே சொல்வான்.

அவன் அறைக்கு வெளியே கதவைதட்டி விட்டு காத்திருந்தாள்.

கையில் ஜூஸுடன் அவள் வருவதை பார்த்ததுமே இது பாட்டியின் ஐடியா என்று  அவனுக்கு தெரிந்து விட்டது. ஆனால்  அவனுக்கு தெரியாத விஷயம் அதை தயாரித்தது அமிர்தா  என்பது. அவன் போன் கால் வந்ததும் ஜூஸ் குடிக்காமலேயே வந்து விட்டான். 

கேரட் ஜூஸை எடுத்து அமைதியாக பருகினான். அவன்   குடித்து முடிக்கும் வரை அமைதியாக காத்துக் கொண்டிருந்தாள். இப்படி ஒரு ஆடவன் அருகில் இருந்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு மனம் ரெக்கை கட்டி பறக்கும். ஆனால் இவளோ உதறல் எடுத்த கை கால்களை கெட்டியாக நிறுத்துவதே பெரும்பாடாக திண்டாடிக் கொண்டிருந்தாள். 

கையில் கிளாஸை கொடுத்தான்.

கிளம்பாமல் அவள் தயங்கி நிற்கவே “இன்னும் என்ன” தலை குனிந்து நின்றிருந்தவளுக்கு  அவன் மிரட்டலில் உடல் தூக்கி வாரி போட்டது.

“ஒன்னும் இல்ல சார். சாரி சொல்லத்தான் வந்தேன்” தைரியமாக கூறி விட்டாள் .

“சாரி! அதோட வால்யூ  தெரியுமா ?”

“என்னவோ பண்ணறத பண்ணிட்டு பிச்சை போடற மாதிரி சாரின்னு  ஈஸியா சொல்லிட்டு போயிடுவீங்க” அவன் சொல்லிக் கொண்டே முன்னால்  அடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். பின்னாலே சென்றுக் கொண்டிருந்தவள் சுவற்றில் இடித்து நின்றாள்.

இத்தனை  நெருக்கத்தில் ஒரு ஆண் . அவளுக்கு மூச்சு வேகவேகமாக வெளி வந்தது. அதற்குள் உடம்பெல்லாம் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது அவனின் ஏசி அறையில்.

அருகில் வெகு அருகில் வந்தவன் சட்டென நின்று கை  கட்டி  அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.

முள்  மலரும்….…

மலர்-15

ம் பாக்க நல்லாத்தான் இருக்க. நீ பண்ண தப்புக்கு தண்டனைன்னு சொல்லி நான் உன்ன என்ன வேண்ணாலும்  பண்ணுவேன். பண்ண முடியும். ஆனா பண்ண மாட்டேன். நான் எங்க ? நீ எங்க ? 

சட்டென முகத்தை அருவருப்புடன் திருப்பிக் கொண்டான். 

உன் பிரண்டு என்ன சொன்னா ? அம்மா மடில படுத்து தூங்கா ? ஏங்காம பத்தி பேச அவ யாரு டி ?

படுத்து தூங்க அம்மா மடி  கிடைக்குமான்னு ஏங்கினவனடி நான். அவள் தாடைகளை அழுத்தி பிடித்ததில் வலி தாங்க முடியவில்லை. ஆனால்  அதே சமயம் அவனின் மன வலிகளையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்களும் மூச்சும் கலந்து விட்டனவோ.விளைவு?

 ஒரு நிமிடத்திற்கும் குறைவாக தன்  கட்டுப்பாட்டை இழந்தவன் சட்டென நகர்ந்து இடுப்பில் கை வைத்துக் கொண்டான்.

“சார் நாங்க  ரொம்ப சாதாரணம். அவளுக்கும் புதன் கிழமை பொண்ணு  பாக்க வராங்க. கோர்ட் கேஸுன்னு போனா அவ வாழ்க்கையே பாழாகிடும். அதே மாதிரி நீங்க கேட்கற தொகையை எங்களால கட்டவும்  முடியாது. அவ பேசினத்துக்கு எல்லாத்துக்கும் நான் உங்க கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்கறேன் ப்ளீஸ் .

நொடியும் தாமதிக்காதவன்,

கால்ல  விழுடி  என்று ஆணையிட்டிருந்தான். 

புரியாமல் அவள் விழித்திருந்தாள் . 

விழுடி  அவன் கர்ஜனையில் நடுங்கியவள் 

சட்டென அவன் காலில்  விழுந்தாள்.அவள் கண்ணில் இருந்து இரண்டு கண்ணீர் துளிகளும் விழுந்தது. அதன் சூட்டில் இருந்தே அவள் அவமானமும் அவனுக்கு புரிந்தது. அதை அவன் குரூரமாக ரசித்தான். தான் பட்ட அவமானங்களில் எத்தனை சூடான கண்ணீர் வெளி வந்திருக்கும். யோசித்துக் கொண்டே ஜன்னலின் அருகில் நின்றிருந்தான். காதில் டேய் உங்கம்மாவும் உன்னோட புது அப்பாவும் கார்ல போறாங்கடா. உங்கம்மா உடம்பு பூரா நாகா போட்டுக்கிட்டு ரொம்ப அழகா இருக்காங்கடா.

டே எங்களுக்கும் புது அப்பா வந்தா  எங்கம்மாவும் இப்படி நல்ல ட்ரஸ் பண்ணுவாங்களா. காதுகளில் வார்த்தைகள் துளைத்தது. கண்ணீர் வரவில்லை. ஆனால்  காயங்கள் வலித்தது. 

அவன் தோளில்  கை  வைத்தார் தாத்தா.

உன்னோட மன வலிகளுக்கு அமிர்தா குற்றவாளி இல்லைபா.

அமைதியாக தலையாட்டினான். ஆனால் அதற்க்கு பிறகு அவன் அமிர்தாவிடம் ஓரளவு நல்ல விதமாகவே நடந்து கொண்டான். தினமும் காலையில் காபி அவளிடம் எதிர் பார்த்தான். அவளுக்கு விடுப்பு இருக்கும் நாளில் சற்று திண்டாட்டமாகத்தான் இருந்தது. என்னதான் வேலை ஆட்கள் தயாரித்துக் கொடுத்தாலும் ஏனோ அந்த பக்குவம் வரவில்லை . அவனையும் அறியாமல் அவன் அவளை தேட ஆரம்பித்தான். 

அன்றைய திற்கு பிறகு யோசித்தான் ரொம்ப யோசித்தான். எப்படி இந்த விஷயத்தை ரெஜிதாவிடம் சொல்வது? அதுவே அவன் அவளிடம்  சொன்ன போது  அவளுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவேத் தெரியவில்லை.

“விடுப்பா! இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. எனக்கெதுக்கு உங்க அம்மா கதை. எப்படியும் அவங்க திரும்பி வர போகறது இல்ல. வந்தாலும் உன்னால  அவங்கள ஏத்துக்க முடியாது. இதுல எனக்கென்ன வேலை.

எத்தனை முதிர்ச்சி என்று எண்ணினான். அவளின் உள்  நோக்கம் தெரியாமல். 

அவளை பொறுத்தவரை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வயதானவர்கள் . சீக்கிரம் அவர்கள் கதை முடிந்து விடும். வேறு எதுவும் 

 பிக்கல்  பிடுங்கல் இல்லை. ஆனந்த்  இவளிடம் சரணாகதி அடைந்து விட்டான். தான் செய்ய போகும் காரியங்களுக்கு வசதியான இடம். தந்தையின் கட்டுப்பாடுகள் கிடையாது. கண்டிப்பும் கிடையாது. எதையும் மறைத்து மறைத்து  செய்ய வேண்டியதில்லை. நாம் நினைப்பது எல்லாமே நடந்து விடுமா ?

இனியவை பெண் பார்க்க வரும் போது தானும் அவளுடன்  இருக்க வேண்டும் என்று அமிர்தா  விரும்பினாள் . ஆனால் அடுத்து வருபவர் சற்று தாமதமாகவே வரவும்,  இவர்கள் வீட்டிலேயே  கையேடு கொண்டு வந்த புடவையை மாற்றிக் கொண்டு, குனிதுக் கொண்டே ப்ளீட்  சரியாக்கிக் கொண்டு வந்தாள் . அப்போது அங்கே வந்த ஆனந் அவளை முதல் முறையாக புடவையில் பார்த்ததும் அசந்து விட்டான். அந்த ரோஜாப் பூ நிறம் அவள் கன்னங்களிலும் பளபளத்தது. முகத்திற்கு எந்த வர்ணமும் பூசாமல் இத்தனை  பேரழகாக இருக்க முடியுமா? முடியுமே! வரக்  கூடாத நேரத்தில் அவனுக்கு அன்னையின் நினைவு வந்தது. ஆச்ச்ர்யமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென முகத்தை கடுமையாக்கிக்  கொண்டு போகவும் இவளுக்கு பளீரென்று முகத்தில் அடி  வாங்கிய உணர்வு.  இழுத்து பெரு மூச்சு விட்டாள் .

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பெரியவர் அவளை சமாதான படுத்த,

“ஏய் சிங்காரி! இப்டி பெரு மூச்சு விட்டா புடவைல இருக்கற  ரோஜா வெல்லாம்  பறந்து போய்டும்.”

தாத்தா சொன்ன  விதத்தில் கலகலவென சிரித்தாள். அதை அந்த வீடே அதிசமயமாக பார்த்தது. அமைதியான இடத்தில்  தான் இப்படி சிரிக்கலாமா ? அதுவும் வேலைக்கு வந்த இடத்தில் ? வளர்த்த வளர்ப்பு அவளை அடக்கமாக இருக்க சொன்னது. 

அவள் சிரிப்பை நிறுத்தியதும்,தாத்தா மெதுவாக தலையை தடவிக் கொடுத்தார். ரொம்ப வருஷம் கழிச்சு இந்த வீட்டுல இப்டி ஒரு சிரிப்பு சத்தம். ரொம்ப சந்தோசமா இருக்கு அமிர்தா.

“ஓகே ராஜகுமாரா ! இப்படியே நின்றுக் கொண்டிருந்தால்  நான் 

தங்கள் மனைவிக்கு எப்படி சேவகம் செய்ய முடியும்? அவர் கண்களை மெதுவாக துடைத்து விட்டாள் .

மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கள்வனுக்கு ஏனோ இவர்களின் உறவு முறை பிடிபடவில்லை. தன்  தாத்தாவிற்கு இப்படி இன்னொரு முகம் இருப்பது அவனுக்கேத்த தெரியாதே ? அவன் பார்த்த கதிரேசன், எப்போதுமே சீரியஸாகவேதான் இருக்கார். அவர் மீசையை முறிக்கினாலே எதிரில் இருப்பவருக்கு சர்வமும் ஒடுங்கி போகும். அவரோ இந்த சின்ன பெண்ணிடத்தில் இத்தனை  இலகுவாக இருக்கிறாரே ? அவனுக்கே ஆச்சர்யமாகத் தான் இருந்தது. பாட்டியை பார்க்க போனாள் . 

“அடடே அமிர்தாவா  இது ? இப்போ நீயா சிரிச்ச?”

 

முள் மலரும்…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!