மலர் -33

மலர் -33

அந்தம்மாவோட ஆத்மா ஏன் குழந்தையை விட்டுடீங்களேன்னு எங்கிட்ட கேட்ட மாதிரி இருந்துச்சு. அமிர்தா என்னங்க பாவம் பண்ணா ? அவ எதுக்கு தனியா இருக்கா ? நாம இன்னும் எத்தனைநாள் வாய மூடிக்கிட்டு இருக்கறது? நம்ம பேரன் நம்ம பேரன்னு நினைச்சோம்? அவளை பத்தி என்னிக்காவது நினச்சு பார்த்தோமா?”

மனைவியை முதுகில் நீவி சாந்தப்படுத்தியவர்,

“அவளை வீட்டுல வச்சுக்கனுன்னு ஏற்கனவே நான் முடிவு பண்ணிட்டேன். நீ என்ன சொல்லுவியோன்னுதான்” தயங்கினேன்.

” நான் என்ன சொல்ல போறேன்?”

“இல்லடி! என்னதான் இருந்தாலும் நீதான நம்ம பையன பெத்தவ. அவனுக்காக  என்ன விட  நீதானடி அவனுக்காக துடிச்ச ? உன்னோட உணர்ச்சிகளை நான் எப்படி ஒதுக்க முடியும்? அதே மாதிரி நான் உன்கிட்ட இன்னொரு விஷயமும் சொல்லாம மறைச்சுட்டேன். நீ கேட்டியே அமிர்தா  என்ன பாவம் பண்ணா ? அவ எதுக்காக தனியா இருக்கான்னு? கோதை விஷயமா சண்டை வந்துதான் அமிர்தாவை ஆனந்தன் பெல்டால் அடிச்சான். அப்போ அவன் முகத்தை பார்த்து நானே பயந்துட்டேன். அமிர்தாவை பாக்கும்போது அவன் அவளை கோதையா பாக்கறான் . அத்தனை வெறி அவன் மனசுலையும் கண்ணுலையும். அமிர்தா  அவனோட இருக்கறத விட உயிரோடவாவது இருக்கணுன்னுதான் அவளை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பினேன்.   

 நமக்கு,காடு வா வா வாங்குது. அதனால நம்மளால சில விஷயங்களை போனா போகுது, கடவுள் இருக்கறாருன்னு ஏத்துக்க முடியும். ஆனா நம்மள விட ஆனந்தன் அவங்க அம்மா மேல வச்சிருந்த பாசம் ரொம்ப அதிகம். அதனாலதான் அவளோட பிரிவே அவனுக்கு வெறியா மாறிடுச்சு.  நமக்கு இருக்கறது கோபம். அதனாலதான் அது மாறிடுச்சு. ஆனா அவனுக்கு இருக்கறது வெறி. கோதையை இங்க கூட்டிட்டு வந்தா அவன் அவளை கொலை  பண்ண கூட வாய்ப்பு இருக்கு. 

“இப்ப என்னதாங்க பண்ணறது?”

“அவங்க வீட்டுல காரியம் முடியற வரைக்கும் குழந்தைங்களை தனியா விட முடியாது. ஆனந்தன் அங்கையே இருக்கட்டும். அதுக்குள்ள அவன் கோதை கூடவே இருந்தா கோபம் குறைய வாய்ப்பு இருக்கு”

“கோபத்துல அவன் கோதையை ஏதாவது பண்ணிட்டான்னா ?”

“சாவு வீட்டுல கோவத்தை காட்டற அளவுக்கு அவன் மோசம் இல்லடி”

“சரிங்க. நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க”

தாத்தாவின் அறிவுரைப்படி அன்று இரவும் ஆனந்தன் அவர்களுடனே இருந்தான். இனியாவுக்கு இவர்களை விட்டு செல்ல மனமே இல்லை. ஆனந்த் தான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கட்டாயப்படுத்தி அவளை வீட்டிக்கு அனுப்பி வைத்தான். அரைகுறை மயக்கத்தில் இருந்த அமிர்தாவுக்கு மெதுவாக தலை கோதி ஆறுதல் படுத்தி உணவை ஊட்டினான். ஒவ்வொரு வாய் வைக்கும்போதும் வெடித்து வெடித்து அழ ஆரம்பித்தாள். முரளி, ஆண் மகன் தன்னை  தேற்றிக்  கொண்டான். அவன் கயலை சமாதானப்படுத்தி ஓரளவு உண்ண  வைத்தான். அமிர்தாதான்  துக்கத்தில் இருந்து வெளியில் வர முடியாமல் தவித்தாள். கணவனின் கை  வளைவில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவளது பேராசை. அது இப்போது நடந்துக்  கொண்டிருக்கிறது. ஆனால் அது அவளுக்கு தெரியவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லை. செந்தில் கோதைக்கு உணவு ஊட்ட முடியாமல் தவித்து போனான். வாயில் உணவை கொண்டு போனால் வாயை அழுத்தி மூடிக் கொள்வார். மீறி கஷ்டப்பட்டு வாயில் உணவை போட்டால் முஞ்சியிலேயே பூ என்று துப்பி கன்னங்களை உப்பி கைகளால் தட்டி ப்புப்பு என்று கிண்டல் காட்டுவார். அவன் முகத்தை துடைத்துக் கொண்டால் கைகளை தட்டி சிரிப்பார். பொறுத்து பொறுத்து பார்த்தவன்,

“உனக்கு ஏதாவது அறிவிருக்கா? இழவு விழுந்த வீட்ல இப்டி கை கொட்டி சிரிக்கிற? “

அவன் கத்தியதும் அவன் கையில் இருந்த உணவு தட்டை வேகமாக தட்டி விட்டார். அது எங்கோ பறந்து விழுந்தது. 

அதை பார்த்த செந்திலுக்கு கோபம் எகிறியது. 

“இந்த சோத்துக்கு  நான் எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கேன்னு உனக்கு என்ன தெரியும்? தூக்கி விட்டு எரியற ?”

“கொட்டிக்கோ இல்ல பட்டினி கிட. எனக்கு என்ன? “

கீழே விழுந்த சாதத்தை  அள்ளி  தட்டில் போட்டு அதை, தான் உண்ண போனான். 

முரளிதான் வேகமாக சென்று அவன் கையை  பிடித்து தடுத்தான். 

இதை பார்த்த அமிர்தா உடல் தள்ளாட்டத்துடனே மெதுவாக எழுந்து  கோதைக்கு பசியாற்றினாள். அரைகுறையான உறக்கம், பல மணி நேர அழுகையுடன் நாட்கள் நகர ஆரம்பித்தது. பதினாறு நாள் காரியம் முடிந்ததும் அமிர்தாவும்  கோதையும் ஆனந்தன் வீட்டிற்கே சென்று விடுவதாக ஏற்பாடு.  

 அதுவரை தினமும் அலுவலகம் முடிந்து இவர்களை வந்து பார்த்துவிட்டு சென்றான் ஆனந்தன். அங்கே வயதானவர்கள் தனியாக இருப்பார்கள். அதனால் இரவில் அங்கே சென்று விடுங்கள் என்று அமிர்தா தான் கூறி இருந்தாள் .முரளி வேலை செய்யும் ஆட்டோமொபைல் கம்பனியின் இயந்திர பிரிவில் செந்திலை வேலைக்கு சேர்த்து விட்டிருந்தான். 

“மேல் படிப்பை தபாலில் படித்துக் கொள்கிறேன். இதற்கு மேல் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை ” என்று கூறி செந்தில் வேலையில்  சேர்ந்து கொண்டான். அமிர்தாவுக்குத்தான் மனம் அடித்துக் கொண்டது “இல்ல அண்ணி! ஏற்கனவே எங்களாலதான்  நீங்களும் அண்ணாவும் தனித்தனியா இருக்கீங்க. கொஞ்ச நாள். நான் வேலைல செட்டில் ஆகிட்டேன்னா அம்மாவையும் கூப்பிட்டுப்பேன். நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல.”

“சீ! என்னடா பேச்சு இது? நீயும் அம்மாவும் எனக்கு பாரமா? உங்கண்ணா  வரட்டும். நான் பேசறேன். அவரோட ட்ரஸ்டுலே எத்தனை பேரு படிக்கறாங்க . சொந்த தம்பி உன்ன விட்டுடுவாரா?”

விரக்தியான சிரிப்பை பதிலாக கொடுத்து விட்டு மறு நாள் காலையிலேயே வேலைக்கு கிளம்பினான். 

முரளிக்கு அலுவலக விஷயமாக வெளி ஊருக்கு சில நாட்கள் செல்ல வேண்டி இருந்தது. ஆனந்த் அமிர்தாவை வேலையை விடச் சொல்லி இருந்தான். அதனால் ஒரு நாள் மதியத்திற்கு மேல் மருத்துவமனையில் ராஜினாமா கொடுக்க  சென்றாள் . கயல் வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என்று ஆனந்த்  அலுவலகத்தில் சில வேலைகளை மற்றும்  முடித்து விட்டு மதியத்திற்கு மேல் வீடு வந்தான்.  வீட்டில் இருந்தே வேலைகளை செய்து கொண்டிருந்தான் ஆனந்த் . நடந்துகொண்டே போனில் பேசிக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ துர்நாற்றம் கோதையின் அறையில் இருந்து வீசியது. கயலை அழைத்து பார்க்க சொன்னான்.

கதவை திறந்ததும் அங்கே அவன் பார்த்த காட்சி ஒரு நொடி ஆனந்துக்கு  தூக்கி போட்டது. 

 

மலர் 40

கதவை திறந்ததும் அங்கே அவன் பார்த்த காட்சி ஒரு நொடி ஆனந்துக்கு  தூக்கி போட்டது. 

 கோதை வழக்கம்போல வாயில் டயாபரை வைத்துக் கடித்துக் கொண்டிருந்தார். அவனை பார்த்ததும் வழக்கம்போல ஈ என இளித்தாள் . பாதி உடைந்த பல்லில் மஞ்சளாக அது என்ன? அவர் கடித்துக் கொண்டிருந்ததில்  அவருடைய உடல் கழிவுகளும் சேர்ந்திருந்தது. அதை பார்த்தவனுக்கு வாந்தி குமட்டிக் கொண்டு வந்தது. 

“மாமா! பாட்டி இப்டி பன்னாங்கன்னா  அவங்களுக்கு பசிக்குதுன்னு அர்த்தம்” கயல் தான் விலக்கினாள் .

“ஆனா அக்கா இப்போதானே சாப்பாடு குடுத்துட்டு போனா ?” புரியாமல் கேட்டான்.

“ஐயோ அவங்களுக்கு பசிக்கு நேரமெல்லாம் கிடையாது. அவங்க  சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. நீங்க போங்க மாமா, நான் பார்த்து கழுவி விடறேன். கோதையின் அருகில் சென்ற கயலை பளீர் பளீரென அறைந்து தள்ளி விட்டார். பாவம் சின்ன பெண் அழுதுகொண்டே வெளியில் வந்து விட்டாள் . அமிர்தா வரும் வரை தாங்காது. ஆனந்த் மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தில் கர்சீப்பை கட்டிக்கொண்டான். பயந்து கொண்டே கோதையின் அருகில் சென்றான். இப்போது அவனுக்கு அவள் அன்னை என்பதெல்லாம் இல்ல. மன நிலை பாதிக்க பட்டவர். அவரின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்றே தெரியாது. அநேகமாக பல விதமான அடிக்கும் உதைக்கும் தயாராக போனவனை கோதை அழைத்தாள் .

புஜ்ஜி !

ஆம் அதுதான் அவன் அன்னை அவனை எப்போதும் அழைக்கும்  பெயர்.

மெதுவாக அவளை அழைத்துச் சென்று வாய் கொப்பளிக்க லிஸ்டரின் கொடுத்தான். அதை முழுங்கி விட்டாள் . மீண்டும்  கொடுத்து துப்ப சொன்னான். ஆனால்  அதையும் முழுங்கி விட்டாள் .

“மாமா! அவங்களுக்கு  அதெல்லாம் தெரியாது. பல்லுதான் தேய்க்கணும் .”

பொறுமையாக பல் தேய்த்து விட்டான். வாய் கொப்பளிக்க இவன் செய்து காட்டினான். அதையே அவளும் செய்தாள் . உடல் கழிவுகளை  உடலில் அங்கங்கு தேய்த்திருந்தார் . இவனுக்கே அருவருப்பாக இருந்தது.  நைட்டியை கழட்டி உடல் எங்கும் சோப்பு போட்டு குளிப்பாட்டினான் .

“அம்மா நான் உனக்கும் குளிப்பாட்டி விட்டுட்டேனே ?” குழந்தை மழலையில் சொன்னது. 

“அதுக்கு என்ன? நாளைக்கு நான் குளிக்கும்போது உனக்கும் குளிப்பாட்டி விட்டுடுவேனே?” கீழ் உதட்டை நீட்டி  மடக்கி மடக்கி குழந்தையை போல் சத்தம் கொடுத்தாள். 

அவன் அன்னை எப்போதுமே ஆனந்துடன் விளையாடிக் கொண்டே இருப்பாள். சிரிக்க சிரிக்க பேசுவாள். அவள் இருந்த வரை வீடு எப்போது அழகான நந்தவனம்தான். காக்கை  குருவிகளிடம் கூட பேசிக் கொண்டிருப்பாள். இவளைக் கண்டாலே தெருவில் உள்ள  நாய்களும் துள்ளி குதிக்கும். கோதையை  பொறுத்தவரை அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். அதில் நாய் பூனை காக்கை கிளி என்ற வேறுபாடு இருந்ததில்லை. அணில்கள் கூட வந்து இவள் கையில் இருந்து  உணவுகளை அள்ளிச்  செல்லும். அதே பழக்கத்தை மகனுக்கும் கற்றுக் கொடுத்திருந்தாள் அன்னை. சிறிது பெரியவன் ஆனவுடன்,

“அம்மா நானே குளிச்சுக்கறேன்”

“என்னடா இது புதுசா? பாப்பா பிக் ஆகறானா ?” இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினாள் . அதற்க்கு இவனும் அன்னைக்கு பதிலுக்கு கிச்சு கிச்சு மூட்டினான் . அவள் கிச்சு கிச்சு மூட்டிய தன் இடுப்பை தொட்டு பார்த்தான். இப்போதிருக்கும் அவள் இடுப்பை, உடலை பார்த்தவனுக்கு ஓ  வென அ(ழ)லற வேண்டும் போல இருந்தது. அவளின் உடல் முழுவதும் ஏகப்பட்ட காயங்கள். சிகரெட் தழும்புகள். 

 எந்த மகனாகவும் பார்க்க கூடாததை பார்த்தான். மனதை கல்லாக்கிக் கொள்ள முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. “புஜ்ஜி” கண்ணீரை துடைத்தாள். கோதைக்கு  யாரும் அழுதுவிடக் கூடாது. அப்படிதான் அன்று அமிர்தாவுக்கும் கண்ணீரை துடைத்து விட்டாள் . 

இவனே வேறு புது உடை அணிவித்தான். அவனே டயப்பரும் மாட்டி விட்டான். மற்ற கொடுமைகள் போதாது என்று தான் வெளிவந்த பிறப்புறுப்பை பார்த்தவனுக்கு அந்த நொடியே தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்ற எண்ணம் வந்தது. 

கயல் தட்டில் சுட சுட உணவு  கொண்டு வந்தாள் .  மாமா என்னவென்று திரும்பி பார்த்தான். அவனால் அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளி வர முடியவில்லை.

“மாமா நாம இப்போ அழாதீங்க. அதுக்கு இப்ப டைம்  இல்ல. அவங்களுக்கு உடனே சாப்பாடு குடுங்க. இல்லன்னா மறுபடியும் எதையாவது கடிக்க ஆரம்பிச்சுடுவாங்க”

சிறு பிள்ளைக்கு எத்தனை தெரிந்திருக்கிறது?

கண்ணீர் வழிய வழிய துடைத்துக் கொண்டே அன்னைக்கு உணவை ஊட்டினான்.

மீண்டும் பழைய நினைவுகள்.

“அம்மா நான் பிக் பாய் ஆகிட்டேன். நானே சாப்பிட்டுக்கறேன் “

” எட்டு வயசுல நீ பிக்  ஆயிட்டியா? ஆனா எனக்கு நீ இன்னும் எட்டு மாசத்து குட்டி பாப்பாதான். நான் தான் ஊட்டுவேன் . ஸ்கூல்ல  நீயேதானே  சாப்பிடற. இங்க அம்மாதான் குடுப்பேன்” உண்டு முடித்ததும் தட்டை முகத்தில் சுற்றி திருஷ்டி கழித்தாள் . 

“என் தங்கம், என்னோட செல்ல புஜ்ஜி. முகவாயில்  கொஞ்சுவாள் தினமும்”

இப்போது பசி அடங்கியது போலும். மகனின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் . அவன் கன்னத்தில் சில பருக்கைககள்  ஒட்டிக் கொண்டது.

ஈ இளித்தாள் . இப்போது  இவனுக்கு பயம் இல்லை.  

“மாமா! கை கழுவுங்க கயல் தான் அழைத்தாள் . அக்காவுக்கு சொல்லிட்டேன். பஸ்ஸ  மிஸ் பண்ணிட்டாளாம் .ஆட்டோல வந்துகிட்டு இருக்காங்க.”

அமிர்தா பதட்டத்துடன் வீட்டுக்குள் அவசர அவசரமாக ஓடி வந்தாள் . அவள் பார்த்த காட்சி….

முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!