மௌனத்தால் உடைந்த காதல் 21

அனைவரும் கோர்ட்டில் கூடியிருந்தனர்.
 

 

இன்று  ஆறு மாதங்களுக்கு பிறகு, ஆதி,சுதா இருவரும் கோர்ட்டுக்கு வர வேண்டிய நாள் .ஆறு மாதம் சேர்ந்து வாழ்ந்த பிறகு அவர்களின் முடிவை கேட்டு,அதன் பின் முடிவெடுக்க வேண்டிய நாள்.அடுத்து கவுன்சிலிங் தர வேண்டுமா? அல்ல அவர்களின் விருப்பம் என்ன? என தெரிந்து கொள்ள வேண்டியது கோர்ட்டின் கடமையாயிற்றே.

 

உதயா ஏதாவது வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல், மீண்டும் பிரச்சினையை செய்து விடுவாளோ ?என்று உடன் துரையும் வந்திருந்தான் .
 

 

அது மட்டுமில்லாமல் ,மீண்டும் அனைவருகுள்ளும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைத்தான்.
 

 

பெண் எடுத்ததிலிருந்து சுதாவிடம் பழகிய போது அண்ணன் ஆக உரிமையாக தனக்கு செய்தது .தன் தாய் ,தந்தைக்கு செய்தது என அனைத்தையும் யோசித்தவன்.
 

 

சுதாவின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும். இப்பொழுது வரை வீட்டிற்கு செல்லும்  போதெல்லாம் முகம் சுளிக்காமல் அனைத்தையும் செய்து தரும் சுதாவும் சரி ,   வீட்டின் மாப்பிள்ளையாக இருந்தாலும், தன்னை ஒரு நண்பன் போல நடத்தும் ஆதியின் வாழ்க்கையும் சரி நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருவரின் வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவன்.
 

 

மனைவியோ ?அல்லது மாமியாரோ ? கூட எதுவும் பேசி விடக்கூடாது என்பதற்காகவே தானும் உடன் வந்திருந்தான்.
 

 

அனைவரும் கோர்ட் வாசலில் கூடியிருந்தனர். கணவனின் அருகில் நின்று கையை பிசைந்து கொண்டு நின்ற  மருமகளையே பார்த்தபடி இருந்தார் சித்ரா. ஆனால், ஒரு வார்த்தை பேசவில்லை. ஜட்ஜ் இருவரையும் உள்ளே அழைக்க.
 

 

இருவரும் போய் நின்றனர்.

 

“ஆறு மாசம் உங்களுக்கு கால அவகாசம் கொடுத்து இருந்தேன். இப்போ என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க ரெண்டு பேரும்?”என்றார் ஜட்ஜ்.
 

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ,குழந்தைகளை திரும்பிப் பார்த்தனர்.
 

 

” என்னப்பா ? நீ ஏற்கனவே உன் பொண்டாட்டி கூட சேர்ந்து வாழனும்னு தான் சொல்லி இருந்த ? இப்ப உன் பொண்டாட்டி தான் முடிவு சொல்லணும் இல்லையா ?”
 

 

அவன் அமைதியாக இருக்க.
 

 

சுதாவை பார்த்தார் .

 

வேர்வை முத்துக்கள் முகத்தில் ஆங்காக்கே பூத்திருந்தாலும், “எனக்கு அவரோட சேர்ந்து வாழ விருப்பம் மேடம்!” என்றாள்.
 

 

“சரிமா.உங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கீங்களா ? இல்ல எப்படி?”என்றவுடன் அவளது உடல் நடுக்கத்தை தத்தெடுத்தது..
 

 

வேகமாக அவளின் அருகில் நெருங்கி வந்த ஆதி. அவள் கையை இறுக்கிப்பிடித்தான்.
 

 

இப்பொழுது ஆதி பேச ஆரம்பித்தான். 
 

 

“இல்ல மேடம். இப்போதைக்கு நான் அங்க சுதாவை கூட்டிட்டு போறதா இல்ல. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். இப்போதைக்கு நாங்க இருக்க வீட்டிலேயே இருக்கோம். என் பிள்ளைங்க அங்க அப்பா, அம்மாவை பார்க்க வர போக இருக்க தான் செய்றாங்க. அம்மாவும் , அப்பாவும் இங்கே வர போக இருக்க தான் செய்றாங்க.அதனால, எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க “என்று கேட்டிருந்தான் .
 

 

அவரும் “சரி” என்று புன்னகைத்தபடி,” நீ என்னம்மா சொல்ற ?”என்று கேட்க.
 

 

அவள் வாய் திறப்பதற்கு முன், 
 

 

“நான் கொஞ்சம் பேசலாமா ?”என்று கேட்டார் சித்ரா எழுந்து நின்று, இவ்வளவு நேரம் மகன் பேசும் பொழுது அழுகையை அடக்கியபடி இருந்தவர் எழுந்து நின்று கேட்டு விட்டார். 
 

 

“நீங்க?” என்று ஜட்ஜ் கேட்க.
 

 

” நான் ஆதியோட அம்மா ” என்றார்.
 

 

அனைவரும் சித்ரா என்ன பேசப் போகிறார் என்றபடி பார்த்துக் கொண்டு நின்றனர். அவரின் முகத்தையே, நேசன்  தான் ,”என்ன சித்ரா ?” என்று மனைவியின் கையை பிடிக்க.
 

 

” கொஞ்ச நேரம் இருங்க. நான் பேசிடுறேன்”என்று கணவனின் கையில் தட்டிக் கொடுத்துவிட்டு, ஜட்ஜை நேரகப் பார்க்க ஆரம்பித்தார்.
 

 

அவரும்,” சரி ஏதா இருந்தாலும் இங்க வந்து பேசுங்க ” என்றார்.
 

 

சரியென சித்ரா அவர் கூறிய இடத்திற்கு வந்து நிற்க. 
 

 

” சரிம்மா சொல்லுங்க ?என்ன சொல்ல நினைக்கிறீங்க?”என அவரது கண்களை  ஊடுருவி பார்த்தார். 
 

 

“என்ன முதல்ல மன்னிச்சிடுங்க  அம்மா” என்று விட்டு ,தன் மருமகளின் புறம் திரும்பி, அவள் கையை பிடித்துக் கொண்டு, “என்ன மன்னிச்சிடு சுதா! அன்னைக்கு நான் பேசின வார்த்தை தப்புதான்” என்றார் அழுகையுடன்,
 

 

“ஐயோ! அத்தை!” என்று பதறி அவர் கையை பிடித்தாள். ஆனால், அவளால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் நின்றாள். 
 

 

ஜட்ஜ் புறம் திரும்பியவர் .”என் மகனும், மருமகளும் பிரிய முக்கிய காரணமே நா தான். கூமுட்டை கணக்கா கண்டதையும் பேசி ,என் புள்ளைகளை பிரிச்சிபுட்டேன் . அன்னைக்கு நான் பேசின வார்த்தை ரொம்பவே அதிகம் தான். தப்பு ஒரு பொண்ணா இருந்துட்டு,  இன்னொரு பொண்ண பார்த்து கேட்க கூடாத வார்த்தை ,பேசக் கூடாதா வார்த்தைலாம் பேசிட்டேன்  “
 

 

அவர் முழுவதுமாக கூறி முடிக்கும் முன் இடை புகுந்த சுதா, “அத்தை  அதை நான் அப்பவே ” என்றவள் மேற்கொண்டு பேசமுடியால் தவித்தாள்.
 

 

அவளின் கையை பிடித்துக் கொண்டு, “ஆனா.மன்னிப்பு கேட்க தான் என் தன்மானம் இடம் கொடுக்கல. என் வீட்டுக்கு வாழ வந்தவ கிட்ட நான் போய் மன்னிப்பு கேட்கணுமா என்ற மாதிரியா?  எனக்கு சரியா சொல்ல தெரியல .பேசுனா வார்த்தை ஆனா அதிகம்.பேசக் கூடாதா வரர்த்தையும், எப்படி எல்லாம் என்ன பாத்துகிட்ட புள்ளைய இப்படி பேசிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி என்ன கொல்லாமல் கொல்லுது. மன்னிப்பு கேட்க முடியாம தயக்கமும் கூட, ஆன ஒன்னும் மட்டும் இந்த கொஞ்ச நாள்ல புரிஞ்சுகிட்டேன். நான் இப்படியே இருந்தேனா என் புள்ளைங்க கடைசி வரைக்கும் என்னை மன்னிக்கவே மாட்டங்களோ என்ற பயம் எனக்கு வந்துருச்சு. இப்ப கூட என் மருமக வாய் திறக்கறதுக்கு முன்னாடி, என் மகன் வாயைத் திறந்து இப்போதைக்கு நான் அந்த வீட்டுக்கு போகலன்னு சொல்றான். அதுவே எனக்கு பெரிய தண்டனை தான் வேற என்னமா எனக்கு பெரிய தண்டனை கிடைச்சிட போகுது. 
 

 

குடும்பமா புருஷன் ,மக ,மருமகள்  பேரப்பிள்ளைங்களோட வாழ்ந்தவ, இப்போ தனி மரமா இருக்க ,என்னதான் என் புள்ளைங்க வர போக இருந்தாலும், எனக்கு தனிச்சு விட்ட மாதிரி இருக்கு, என் சம்மந்தியோட வலியும் இதிலேயே எனக்கு இப்ப புரியுது .தனியா இருக்கவங்களுக்கு அன்னைக்கு அவங்க முன்னாடியே அவங்க புள்ளையை பேசினது அவங்களுக்கு எந்த அளவுக்கு வலியை கொடுத்திருக்கும் எனக்கு புரியுது. சம்பந்தி அம்மா கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அன்னைக்கு அவங்க பேச வரும் போது அவங்க மூஞ்சுல அடிச்ச மாதிரியும் கொஞ்ச நஞ்ச வார்த்தை இல்ல நிறையவே பேசிப்புட்டேன். எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.
 

 

பழையபடி என் மகனும் ,என் மகளும் என் கூட வந்தா மட்டும் போதும் மா.இனி ஒரு தரம் அப்படி பேச மாட்டேன்.அடிபட்டவ வாயில இருந்து தப்பி தவறி கூட இனி இது போல வராது நம்பலாம்.”என்று சுதாவை பார்க்க. 
 

 

அவள் எதுவும் பேச முடியாமல் உடல் நடுங்க நிற்க. ஆதி பேச வருவதற்கு முன்பாகவே, 
 

 

“இருங்க ஆதி” என்றவர். சித்ராவின் புறம் திரும்பி,” அம்மா நீங்க பேசுறது எல்லாம் சரி. இப்போ நீங்களே சொல்றீங்க, நீங்க பேசின வார்த்தை அதிகப்படினு ,நீங்க என்ன பேசினீங்கன்னு உங்களுக்கும், உங்க மருமகளுக்கும் தான் தெரியும் .எனக்கு தெரியாது .இத இப்ப இந்த நிமிஷம் வரைக்கும் உங்க மருமகளாகட்டும், உங்க மகனாகட்டும் கொண்டு வரல. ஏதோ தகாத வார்த்தை பேசி இருக்கீங்க உங்க மருமகளை அதான் .இப்போ இங்க டைவர்ஸ் வரை  கொண்டு வந்து விட்டு இருக்கு. 
 

 

அதுல இருந்து மீண்டு வர உங்க மருமகளுக்கும் கொஞ்சம் கால அவகாசம் வேணும் இல்லையா ?இப்ப ஆறு மாசம் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றதுக்கான கால அவகாசம் தான் கொடுத்திருந்தது. அதேபோல உங்க மருமக பழைய படி உங்க கிட்ட பேசணும்னா கொஞ்சம் கால அவகாசம் தேவை.
 

 

அதை தான்  உங்க மகனும் சொல்றாப்புல அதனால கொஞ்சம் டைம் கொடுங்க .பழையபடி எல்லாம் மாறும் .சுமுகமா பழையபடி நீங்க குடும்பமா வாழ்வீங்க .நீங்க உங்க தப்பை உணர்ந்த வரைக்குமே சந்தோஷம். இனியும் எதையும் மனசுல வச்சுக்காம உங்க மருமகள் கிட்ட பழையபடி இருங்க. வரப்போக. உங்க மருமகளுக்கு எப்ப விருப்பம் இருக்கோ அப்போ வீட்டுக்கு வரட்டும் ஏத்துக்கோங்க. 
 

 

இப்போ நான் கூட அவங்க கிட்ட உங்க வீட்டுக்கு போய் வாழுங்கனு  சொல்ல முடியாது. உங்க மருமக மனசு மாறி இப்பதான் உங்க பையனோட வாழனும்னு ஆசைப்பட்டிருக்காங்க. இனி இதுக்கப்புறம் நீங்களே இதை கெடுத்து விட மாட்டீங்க நினைக்கிறேன்”  என்றார்.
 

 

மேற்கொண்டு எதுவும் மேசாமல் அமைதியாகி விட்டார் சித்ரா. 
 

 

அனைத்தும் முடிய கோர்ட்  விட்டு வெளியே வந்தனர் அனைவரும்..
 

 

தன் தாய் எழுந்து செல்லும்போது ,ஏதாவது பேசுவார் என்று யோசித்தாள் உதயா.
 

 

அவளும் வாய் திறக்க எழுந்து கொள்ளும் போது, துரை அவள் கையைப் பிடித்து ,” ஏதாவது பேசி குட்டையை குழப்ப நினைச்சா அவங்களுக்கு டைவர்ஸ் வாங்கி தரேன்னு நினைச்சிட்டு இருக்க ,உனக்கு டைவர்ஸ் கொடுக்குற மாதிரி இருக்கும். எப்படி வசதி? அப்புறம் ஆத்தா வீட்டோட போய் உக்காந்துக்குற மாதிரி இருக்கும் “என்று முறைத்தான்.
 

 

எதுவும் பேசாமல் கணவனை பார்த்து முனகிக் கொண்டே உட்கார்ந்து விட்டாள்.
 

 

நேசன் சிரித்துக் கொண்டவர் ,எதுவும் பேசவில்லை.
 

 

” மாமா என்ன  தப்பா நினைச்சீட்டீங்களா?” என்றான் வருத்தத்துடன் அவர் முன்பே மகளுக்கு டைவர்ஸ் கொடுக்க வேண்டி வரும் என்று கூறியதால்,
 

 

“மாப்பிள்ளை உங்களை எனக்கு தெரியாதா ? “என்ற நேசனும் அமைதியாகிவிட்டார். 
 

 

குடும்பத்துடன் அனைவரும் இப்பொழுது ஆதி இருக்கும் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
 

 

“அங்க வரமாட்டேன்னு சொல்லிட்டியே ஆதி .நீ இன்னும் அம்மாவை மன்னிக்கலையாடா ?அம்மா மேல இன்னும் கோவம் போகலையா டா ?” என்று மகன் கையைப் பிடித்தவர் . மருமகளின் முகத்தை பாவமாக பார்த்தார்.

 

“அம்மா கொஞ்சம் என்னையும் பேச விடுமா. இன்னைக்கு கோர்ட்ல  ஜட்ஜ் பேசினதால என்னால பேச முடியாம போச்சு. இனி அவ விருப்பம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய விரும்பல மா நான். அவளுக்கா நம்ம வீட்டுக்கு வரணும்னு தோணனும்,வற்புறுத்தி கூட்டிட்டு போனா கஷ்டமா போயிடும். அவளுக்கு மட்டும் இல்ல உனக்கும் சேர்த்துதான் சொல்றேன் .
 

 

அந்த வீட்டுக்குள்ள இனி அவ கால் எடுத்து வைக்கும் போது தன்னோட முழு சம்மதத்தோடு வரணும் .அது மட்டும் கிடையாது , அந்த வீட்டுக்குள்ள அவ நடமாடும்  போதும் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் தன்னோட வீடு என்ற உரிமையில் நடமாடனும். எந்த ஒரு இடத்திலையும் தன்னை யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோ என்று எண்ணத்தை கொடுத்து விடக்கூடாது.
 

 

அதே சமயம் நான் அவளுக்கு பக்கபலமா இருப்பேன்.துணை நிற்பேன்னு நம்பிக்கையை கொடுக்கணும்.. அந்த நம்பிக்கை போச்சுன்னா மொத்தமா போச்சு. அதுக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. எப்பயும் போல நீ இங்க வர போக இரு, பசங்கள நா அங்க கூட்டிட்டு வரேன். எந்த பிரச்சினையும் இனி நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு சரியா ?அவ மனசு மாறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. கொஞ்சம் கால அவகாசம் மட்டும் கொடும்மா”  என்றான்.
 

 

இப்போது மருமகளை பார்த்தார்.
 

 

அவளுமே கூட ஒரு முறை மாமியாரை பார்த்துவிட்டு, கீழே பார்வையை பதித்த படி ,”எனக்கு உண்மையாவே கொஞ்சம் காலம் நேரம் தேவை. என்னால இப்போ அங்க வந்து சகஜமா இருக்க முடியும்னு தோணல .பழையபடி நான் நானா இருக்க எனக்கு கொஞ்ச நேரம் காலம் தேவ படுது. அங்க வந்தா உங்களுக்காகவோ, இல்ல  அவருக்காகவோ இருக்கிற மாதிரி தான் இருக்கும் .ஆனா, அப்படி இல்லாம நான் நான இருக்கணும்” என்றவள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க .
 

 

அவள் காலில் விழப்போனார் சித்ரா.
 

 

வேகமாக நகர்ந்து நின்றவள்.”அத்தை  என்ன பண்றீங்க?” என்று பதறினாள்.
 

 

“நீ என்ன வாய் நிறைய அத்தைனு கூப்பிட்டதே எனக்கு போதும் சுதா.நான் பண்ண எல்லாத்தையும் மன்னிச்சிட்டன்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லுமா ?”என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டவர்.
 

 

” நீ சொன்ன போல உனக்கு எப்ப தோணுதோ அப்ப நீ வா ஆத்தா. என் வீட்டுக்கு வாழ வந்தவளை பேசக்கூடாத  பேச்செல்லாம் பேசிட்டேன். என்னை மன்னிச்சிரு “என்று வேண்டியவர் .
 

 

மேற்கொண்டு அங்கு  நிற்கவும் ஒரு மாதிரியாக இருக்க, கணவனை  கையோடு அழைத்துக் கொண்டு ,தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். 
 

 

கிளம்பும் போதே அங்கு நடப்பவையை  வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற மகளைப் பார்த்து ” இங்க உனக்கு என்னடி வேலை” என்றவர் மருமகனிடம் ,”நீங்க இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க மாப்ள .ரெண்டு மூணு நாளைக்கு அவ அங்க நம்ம வீட்டு பக்கம் வரவும் வேணா. என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க “என்று மகளைப் பார்த்து கூறிவிட்டு , தன் கணவனுடன் தன் வீட்டை நோக்கி கிளம்பிவிட்டார். சித்ரா.

அவரை குற்ற உணர்ச்சி வாட்டி வதைத்தது .யார் என்னதான் தன்னை ஏற்றி விட்டாலும், தன்னுடன் 12 வருடங்களாக வாழ்ந்த மருமகளை  பற்றி தனக்கு தெரியாதா? யார் எப்படி கூறினாலும் ,அதைக் கேட்டுக் கொண்டு ,மண்டையாட்டி விட்டு மருமகளை அப்படி ஒரு வார்த்தை பேசி இருக்கலாமா ? என்று குற்ற உணர்ச்சி அவரை வாட்டி வதைத்தது இத்தனை நாட்களாக.

அதுவும் இன்று அவள் தன் வீட்டிற்கு வருவதற்கு தயங்கிய தயக்கத்திலும் ,தன்மகன் கூறிய வார்த்தைகளிலும் மொத்தமாக உடைந்து விட்டார்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page