விரகதாபம் தீருமோ விதுரா? 38

விதுரன் ஆக்சிடென்டான செய்தி கேட்டு அழுது கொண்டே போலீஸ்காரர்கள் கூறிய மருத்துவமனைக்கு சென்றாள் பிரதிக்ஷா.

அங்கு விதுரன்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

பிரதிக்ஷா சென்றதும், விபத்து எப்படி நடந்தது என்பதை  எல்லாம் பிரதிக்ஷாவிற்கு கூறினார்கள். ஒரு பெண்ணின் பெயரை சொல்லிக்கொண்டே  ஓடும்போது விபத்து நடந்தது என்று காவலர்கள் சொன்னதை கேட்கவும், அது மனிஷாவாகத்தான் இருக்கும் என்பதை  உணர்ந்து கொண்டாள் பிரதிக்ஷா. 

தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் மனிஷாவை தேடி, இப்படி அடிபட்டு கிடக்கின்றாரே,  அப்போ மனுஷா அவருக்கு எந்த அளவுக்கு முக்கியமா இருந்திருக்கணும், மனிஷா தான் தனக்கு வேணும்னு ஏகப்பட்ட நேரம் என்கிட்டேயே சொன்னாரே  அப்ப கூட அவருடைய காதலோட ஆழத்தை நான் புரிஞ்சுக்கலையே! நான் தப்பு பண்ணிட்டேனே, என்னோட சுயநலத்துக்காக  என்னோட காதலை காப்பாத்திக்கிறதுக்காக அவரோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அவரோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே!” என்று அந்த இடத்திலே கதறி அழுக ஆரம்பித்து விட்டாள் பிரதிக்ஷா.

“வீட்ல யாராவது பெரியவங்க இருந்தால் ஹாஸ்பிடலுக்கு  துணைக்கு வரச் சொல்லுங்க” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, இன்னும் அதிகமாக கதறி அழுக தொடங்கினாள் பிரதிக்ஷா.

“நானும் அவரும் சந்தோசமா இருக்கணும்னு நினைச்சு தானே எல்லாரும் வீட்டை விட்டு போனாங்க, இப்ப அவருக்கு இப்படி ஒரு நிலைமையினு நான் எப்படி சொல்லுவேன்?” என்று மருத்துவமனை என்று பார்க்காமல் கதறி அழுது கொண்டிருந்தாள்.

விதுரனுக்கு பரிசோதனை செய்த டாக்டர் கொஞ்ச நேரத்தில் வெளியே வர, பிரதிக்ஷா தன்னிலை மறந்து அழுது அழுது களைத்து அமர்ந்திருக்க போலீச இன்ஸ்பெக்டர் மருத்துவரின் அருகில் சென்று விசாரிக்க தொடங்கினார்.

“உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கால்ல எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு, பிளேடு வச்சு ஆப்ரேஷன் பண்ணி இருக்கோம். அவரு பழையபடி எழுந்து நடக்க மூணு மாசத்துல இருந்து ஆறு மாசம் வர ஆகலாம், உடம்புல நிறைய இடத்துல காயங்கள் உண்டாகிருக்கு அந்த காயங்களும் சரியாக பல நாள் ஆகும்!” என்று மருத்துவர் கூறினார்.

இதேபோன்று எத்தனையோ கேசுகளை அவர் பார்த்திருந்தாலும் பிரதிக்ஷாவின் கண்ணீரும் அவளின் புலம்பலும் அவர் மனதை கணக்கச் செய்திருந்தது. அவளுக்காக கண்டிப்பாக விதுரன் பிழைத்து வர வேண்டும் என்று அவரின் இஷ்ட தெய்வத்தை இவ்வளவு நேரம் வேண்டி  கொண்டிருந்தார். இப்போது மருத்துவர் கூறியதை கேட்கவும் தன்னுடைய தெய்வத்திற்கு மனதுக்குள்ளே ஒரு முறை நன்றியை தெரிவித்தார்.

“அந்தப் பொண்ணு கிட்ட சொல்லுங்க, கொஞ்சம் நிம்மதியா இருப்பா? ” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, மருத்துவர் பிரதிக்ஷாவின் அருகில் சென்றார்.

பிரதிக்ஷா மருத்துவரை  பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்து கொண்டிருந்தாள்.

“அம்மா உன் புருஷனுக்கு எதுவும் இல்ல, உன் புருஷனுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர் இவர்தான், இவர் என்ன சொல்றாருன்னு கேளு!” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள் பிரதிக்ஷா.

இவர்கள் மூவரும் பேசிக்கொள்ள அங்கு அழுத கண்களோடு ஓடி வந்தார் சரஸ்வதி.

“என் மகனுக்கு என்ன ஆச்சு? இப்ப என் மகன் எப்படி இருக்கான்?”என்று கதறிக் கொண்டே வர அவருக்கு பின்னாலே ராம்தேவும், ரஞ்சித்தும் வந்தனர்.

மருத்துவர் அவர்களை பார்த்து இவங்க யாரு என்று கேட்க, “விதுரனோட அம்மா?” என்று கூறினாள் பிரதிக்ஷா,

“அம்மா கவலைப்படாதீங்க! உங்க மகனோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கொஞ்சம் காயம் பலமா இருக்கு, முழுசா ரெக்கவராக கொஞ்சம் காலம் எடுக்கும், நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க! நீங்க செஞ்ச புண்ணியமோ என்னமோ தான் உங்க மகன் உயிர் பிழைச்சிருக்காரு” என்று மருத்துவர் சொல்ல கதறி அழுதார் சரஸ்வதி.

“எப்படி சார் இப்படி அடிபட்டுச்சு,  என் மகன் நல்லா கார் ஓட்டுவானே?” என்று ராம்தேவ் கேட்க, ” திடீர்னு கார்ல இருந்து இறங்கி யாரையோ தேடி ஓடி இருக்காரு! இவர் போகவும் அங்க இருந்த எல்லா வாகன ஓட்டிகளும் தடுமாறி இருக்காங்க, எதையும் யோசிக்காம இவரு யாரையோ தேடி ஓட எதிர்பாராத விதமா வந்த பைக் மோதி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு!” என்று கூறினார். நாங்க அவரை தூக்கி ஆம்புலன்ஸ்ல ஏத்தும் போது கூட மனிஷா மனிஷா ஏதோ ஒரு பேர் சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தாரு, ஒருவேளை அந்த பொண்ண தேடி தான் கார்ல இருந்து இறங்கி இருப்பாரோ என்னவோ?” என்று இன்ஸ்பெக்டர் கூற 

“போதுமா உங்களுக்கு இப்ப சந்தோசமா? அவன் மனிஷாவை எவ்வளவு காதலிச்சான்னு எனக்கு தெரியும்! நீங்க எல்லாரும் சேர்ந்து அவனை புரிஞ்சுக்காம   இதோ நிக்கிறாளே இவளோட வாழனும்னு கட்டாயப்படுத்தினீங்க, இப்போ உங்க எல்லாருக்கும் நிம்மதியா? விதுரன் இந்த நிலைமையில் இருக்கிறதுக்கு காரணம் நீங்கதான்!” என்று ரஞ்சித் சொல்ல சரஸ்வதி எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.பிரதிக்ஷாவும் குற்ற உணர்ச்சியில் அமைதியாக கண்கள் கலங்கியபடி  நின்று கொண்டிருந்தாள். 

விதுரன் அடிபட்ட செய்தி கேட்டு பிரதிக்ஷாவின் அம்மா,  சித்தப்பா குடும்பமும் மருத்துவமனை வந்து சேர்ந்து விட்டது.

அனைவரும் மருத்துவமனையிலேயே தஞ்சம் இருந்தனர் விதுரன் கண்விழிப்பதை பார்ப்பதற்காக…!

அங்கு ஒவ்வொரு முறையும் ரஞ்சித் பிரதிக்ஷாவை பார்க்கும் போது அவளை திட்டி தீர்த்துக் கொண்டே இருப்பதை சரஸ்வதியும், ராம்  தேவும் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே நின்று கொண்டிருந்தனர்.

பிரதிக்ஷாவின் அம்மா லட்சுமி மனம் வாடினார். தன் மகளை குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பரிதவித்தார். 

சில மணி நேரங்கள் கழித்து விதுரன் கண்விழிக்க அவனை  வேறு அறைக்கு மாற்றி அனைவரையும் பார்ப்பதற்கு அனுமதித்தனர்.

பிரதிக்ஷா தன்னுடைய கணவனை பார்க்க அழுது கொண்டே உள்ளே நுழைய, ” நீ எங்க வர? உன்னால தான் அவனுக்கு இப்படி ஆயிடுச்சு, நீ அவன பார்த்தால் அவன் உடம்புல இருக்குற கொஞ்ச  உயிரும் போயிரும்,  நீ வராத!” என்று ரஞ்சித்  சொல்ல, சரஸ்வதியோ பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தார்.பிரதிக்ஷாவின் கண்களில் கண்ணீர் கசிந்து ஓடியது. அவளின் உதடுகள் எதையோ சொல்ல துடித்தது. ஆனாலும்  தன்னை  கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக நின்றாள்.

ஒரு வாரமாக எப்படியாவது தன் கணவனை பார்த்து விட வேண்டும் என்று ஒரு மூலையில் அமைதியாக நின்று கொண்டே இருந்தாள். இங்கு நடக்கும் அசாதாரண சூழ்நிலையை பார்த்து சகிக்க முடியாமல்  லட்சுமியும் பிரதிக்ஷாவின் சித்தப்பாவும் அவளை வீட்டிற்கு அழைக்க அவர்களோடு போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டாள்.

லட்சுமி ரம்யாவிடம் அழைப்பை விடுத்து மருத்துவமனையில் நடந்ததை சொல்லிவிட்டு பிரதிக்ஷாவிடம் வீட்டிற்கு வரச்சொல் என்று  கூறினார்.

ரம்யா பிரதிக்ஷாவிற்கு அழைப்பை விடுத்து  ” பிரதிக்ஷா அங்க நடந்தத அம்மா சொன்னாங்க! விதுரனுக்கு இப்படி நடந்ததுக்கு காரணம் நீதான்னு எல்லாரும் உன்னைய காரணம் காட்றாங்களாமே , இதுக்கு மேல நீ அங்க இருந்து எல்லார்கிட்டயும் திட்டு வாங்கிக்கிட்டே இருக்க போறியா? ஒரு வாரமாகியும் இன்னும் உன்னைய அவர பாக்க விடல, அவரும் உன்னைய பாக்குறதுக்கு விருப்பப்படவில்ல, ஏன் உன்னைய எங்கன்னு கூட கேட்கல, அப்படி இருக்கும்போது  நீ அங்கே இருந்து என்ன செய்யப் போற! பேசாம நீ அம்மாவோட போ, இன்னைக்கு தான் அந்த ஆடிட்டர் போன் பண்ணி வேலைக்கு உன்னைய ஜாயின் பண்ண சொன்னாங்க, நீ பேசாம இங்க இருந்து கிளம்பி டெல்லி போயி உன்னோட ஸ்டடிஸ பாரு, விதுரன் நல்லபடியா குணமாகி வந்ததுக்கப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்!” என்று ரம்யா சொல்ல,

“அது எப்படிடி இந்த நிலைமையில அவரை விட்டுட்டு நான் எப்புடி  போக முடியும்” என்று பிரதிக்ஷா கேட்டாள்.

“ஏய் லூசு மாதிரி பேசாத! நீ  அவர பார்த்தாலே  விதுரனோட உயிர் போயிரும்னு அவங்க குடும்பம் சொல்லுதே! அது உனக்கு புரியுதா இல்லையா? உன்னோட காதல் அவங்க யாருக்கும் புரியல, ஏன் விதுரனுக்கு கூட புரியல! கண் விழிச்சு  ஒரு வாரமாகிட்டு, என் பொண்டாட்டி எங்கனு கூட அவரு இதுவரை கேட்ட மாதிரி தெரியல, ஒரு வேளை அவர் கேட்டிருந்தால் கட்டாயம் உன்னைய உள்ள அனுப்பி இருப்பாங்க,

நீ யாருக்காக அங்க இருக்க? நீ ஒழுங்கா கிளம்பி டெல்லி போ, அவ்வளவுதான் சொல்லுவேன்!” என்று ரம்யா எச்சரிக்க,

“சாரிடி என்னைய மன்னிச்சிரு, இந்த விஷயத்துல நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன், விதுரனோட மனசுல இருந்த காதல்  தெரியாம அவரோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு! கண்டிப்பா இதுக்கு மேல அவர என்னோட வாழுங்கன்னு சொல்ல மாட்டேன்.ஆனா அவர நல்லபடியா பார்த்து பாத்துக்குறேன்னு நினைக்கிறேன்.

எப்படி நடந்து வர மனுஷன் தெரியுமா? இன்னைக்கு படுத்த படுக்கையா இருக்கிறத பார்க்கும்போது  என் மனசு வலிக்குது,  யார் என்ன சொன்னாலும் சரி, ஏன் விதுரனே நான் பாத்துக்கூறத ஒத்துக்கிறலன்னாலும், கண்டிப்பா நான் அவர் கூட தான் இருப்பேன்!” என்று பிரதிக்ஷா அழுத்தமாக சொல்ல, “எக்கேடோ கெட்டுப் போ, நாங்க சொல்றத சொல்லிட்டோம், இதுக்கு மேல நான் உனக்கு போன் கூட பண்ண மாட்டேன்!” என்று கோபத்தில் சொல்லி விட்டு அழைப்பை அணைத்து விட்டாள் ரம்யா 

இந்த ஒரு வார காலமாக பிரதிக்ஷா ஏன் தன்னை பார்க்க வரவில்லை என்ற எண்ணம் விதுரனின் மனதில் இருந்தது. ஆனாலும் பிரதிக்ஷாவின் மேல் இருந்த கோபத்தில் விதுரன் அவளை பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை. அவள் மருத்துவமனையில் தான் இருக்கிறாள் என்பதை யாரும் அவனிடம் உரைக்கவும் இல்லை.

“ஹாஸ்பிடல் எல்லாம் பணம் கட்டியாச்சு இன்னைக்கு விதுரனை டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்!” என்று ராம்தேவ் சொல்ல 

“நீங்க எதுக்கு என் புருஷன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க! என் புருஷனை எனக்கு பாத்துக்குற தெரியும் நான் என் புருஷனை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்!” என்று பிரதிக்ஷா கூறினாள்.

“ஒழுங்கா போயிரு நீ பார்த்த வரைக்கும் போதும், உன்னால தான் விதுரனுக்கு  இப்படி  நிலைமை வந்திருக்கு,  இது ஹாஸ்பிடல் இருந்ததனாலதான் உன்னைய  கழுத்தை புடிச்சு வெளியில இதுவரை தள்ளல, முதல்ல இங்க இருந்து போ!” என்று கோபமாக கூறினான் ரஞ்சித்.

சரஸ்வதியும் ராம்தேவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

“இங்க பாரு நீ தேவை இல்லாம பிரச்சனை பண்ற, முதல்ல இங்கிருந்து கிளம்பு, நான் விதுரன  கூட்டிட்டு போயி பாத்துக்குவேன் ” என்று சரஸ்வதி சொல்ல,

“அத சொல்ல நீங்க யாரு! ஒரு வாரமா  இந்த ரஞ்சி பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டு அமைதியா இருந்ததுக்கு காரணம் பயம் இல்லை, அவர் சீரியஸா இருக்கிற நேரத்துல நம்ம எதுவும் பேச கூடாதுன்னு அமைதியா இருந்தேன், இப்போ அவனோட சேர்ந்து நீங்களும் பேசுறீங்க, என் புருஷனை நான் கூட்டிட்டு போக யார்கிட்டயும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது, நீங்க யாரும் கூட்டிட்டு போக விடலைன்னா போலீஸ் ஸ்டேஷன் போவேன், கோர்ட்டுக்கு போவேன்” என்று மிரட்ட மூவரும் அதிர்ச்சியில் அப்படியே நின்றார்கள்.

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page