காதல் – 3

அதற்குள் வீட்டிற்கு வந்துவிட காரை பார்க் செய்து விட்டு, தன் வீட்டு வாயிலில் காத்திருந்தவர்களை உள்ளே அழைத்தான் இந்தர்.

ஏன் இங்கயே நிக்கிறீங்க உள்ள வாங்க.” 

“முதல்ல உங்களுக்கு ஆரத்தி எடுக்கணும்ப்பா! அதுக்கு அப்றம் தான் வீட்டுக்கு உள்ள போகணும்.” என்று கூறினார் சௌமியா.

சரியாக அந்த சமயம் இந்தரின் பாட்டி காமாட்சி ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார். கணேசனுடன் நின்ற ஆத்விகாவின் கைப் பிடித்து தன்னருகே இழுத்துக் கொண்டு தன் பாட்டியின் எதிரே வந்து நின்றான் இந்தர்.

இந்த கிழவி ஆசைய நிறைவேத்திட்டப்பா! நூறு ஆயுசுக்கும் நல்லா இருங்க ரெண்டு பேரும்.” என்று ஆனந்த கண்ணீருடனும், மனம் நிறைந்த மகிழ்வுடனும் கூறி புதுமண தம்பதி இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றார் அந்த பெரிய மனுஷி. 

விளக்கேற்றியதும் பாலும் பழமும் தந்தனர். விருப்பமே இல்லை என்றாலும் அவன் முன் அழக்கூடாது எனும் வீம்பில் அமைதியாய் ஒத்துழைத்தாள். 

“ரெண்டு பேரும் போய் டிரஸ் மாத்திட்டு வாங்க…” என்றார் காமாட்சி. 

நான் எங்க வீட்ல போய் டிரஸ் சேஞ் பண்ணிக்கிறேன் பாட்டிஎன்ற ஆத்விகாவை, “இனி இங்க தான் நீ இருக்கணும்! இது தான் உன் வீடு.” என்று அதட்டினார் கணேசன். 

என் விருப்பமே இல்லாம எனக்கு ஒருத்தன் தாலி கட்டி அழச்சுட்டு வந்துருக்கான்! ஏன்டா இப்படி செஞ்சனு அவன் சட்டையை பிடிச்சு கேட்டு இருக்கணும் நீங்க. அதை பண்ணாம என்ன திட்டுறீங்க. உண்மையிலே நான் உங்க பொண்ணு தானா?” என்று கடுப்பாக பேசியவளை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான் இந்தர்.

ஏய்! வாய அடக்கி பேசு டி! பெரியவங்க சொன்னா…. ஒழுங்கா கேட்டுக்க…..” என்று இந்த முறை அவளை அதட்டினார் சௌமியா. 

லூசாம்மா நீ? என் வாழ்க்கையே போயிடுச்சுனு நொந்து போயிருக்கேன். நீங்க என்னடான்னா சம்பந்தமே இல்லாத விஷயத்துக்கு கோபப்படுறீங்கஎன்று அவரையே எதிர்த்து பேசினாள் ஆத்வி. 

ஆத்வி…… .” என்று அழுத்தமாக அழைத்தார் கணேசன். அதில் சற்றே பயந்து அமைதியானாள். 

விக்ரம் எனக்காக நிறைய டிரஸ் எடுத்து வச்சிருக்கான். இந்த துரை என்னை எல்லாம் நினைச்சிருக்க கூட பார்த்திருக்க மாட்டாரு. எதுக்கு தாலி கட்டுனாரோ தெரியல. அவரு ரூமுக்கு போயி என்ன பண்ணுவேன்? அந்த தடிமாடு ட்ரெஸையா நான் போட்டுக்க முடியும்? போட்டாலும் எனக்கு பத்துமா?” 

காமாட்சிக்கும் ராகவனுக்கும் அது மணக்கண்ணில் தோன்றிட, அகன்றதொரு புன்னகை அரும்பியது. ஆத்விகாவின் தாய் தந்தைக்கோ, வரைமுறை இன்றி பேசும் தங்கள் மகள் மேல் கோவமாய் வந்தது. ஆனால் அவள் மீது கோவம் கொள்ள வேண்டியவனோ மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு முறைத்துக் கொண்டு இருந்தான். 

புருவங்கள் உயர்த்தி முறைப்பவனிடம், “பார்ரா இவன் மொறைச்சா நான் அப்படியே பயந்துருவேனா?” என்று முணுமுணுத்துக் கொண்டே பதிலுக்கு முறைத்து தள்ளினாள்.

சௌமியா, “சொன்ன வேலைய பாருடி.”

நான் எப்டி டிரஸ் சேஞ் பண்றது? சும்மா சும்மா பண்ணுனு சொல்லிட்டு இருந்தா மட்டும் போதாது. சேஞ் பண்ண டிரஸ் வேணும். வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரலாம், வாங்க.” என்று தன் எரிச்சலை தாயிடம் காட்டினாள் ஆத்விகா.

ஏய் என்ன டி பேசுற? புதுசா கல்யாணமான பொண்ண முதல் முதல்ல இப்டியா வீட்டுக்கு அழச்சுட்டு போவாங்க? நீ இங்கயே இரு! நான் போய் உன் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்.” என்று கூறிவிட்டு இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் தங்கள் வீட்டிற்கு சென்றனர் கணேசணும், சௌமியாவும்.

ஆமா இங்க எல்லாம் அப்டியே முறப்படி தான் நடந்துச்சு! சடங்கு, சம்பிரதாயம் செஞ்சது ஒருத்தன், தாலி கட்டுனது இன்னொருத்தன்! இவனுக்கு எல்லாம் மொறப்படி பாத்து பாத்து செய்யணுமா?” என்று வீட்டின் நடு ஹாலில் அமர்ந்து வாய் விட்டு புலம்பி கொண்டிருந்தாள்.

ஆடை மாற்ற சென்றவன் எப்போது வந்தான் என்பதை கூட உணராமல் தனது ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருந்தாள் பெண்ணவள். அவனோ அவளுக்கு எதிரே இருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு கண்களால் அவளையும், இதழ்களால் தேநீரையும் பருகிக்கொண்டிருந்தான்.

தன்னை யாரோ உற்று நோக்குவது போன்ற எண்ணம் தோன்ற அவனை அர்ச்சிப்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு மேலும் எரிச்சலூட்டியது அவன் தன்னை முறைத்து கொண்டிருந்த தோரணை. எதுவும் பேசாமல் தலையை தாழ்த்தி கொண்டவள் மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தன. அதே சமயம் இந்தர் மீதுஎழுந்த கோபம், விக்ரம் மீதான காதலுடன் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது.


சௌமியா தன் மகளின் லக்கேஜ்களை சுமந்து வர, இங்க இருக்குற வீட்டுக்கு போய் எடுத்துட்டு வர இவ்ளோ நேரமாம்மா?என்று கத்திக்கொண்டே எழுந்து சென்றாள் அதை வாங்க. 


ஆத்விகாவிற்கு முன் சென்று சௌமியாவிடமிருந்து அந்த லக்கேஜ்களை வாங்கிய இந்தர் அவனின் அறைக்குள் அதை கொண்டு சென்றான். 


செல்லும் வழியில் இடைஞ்சலாக, அவனையே முறைத்து கொண்டு நின்றிருந்தவளின் அருகில் சென்று, இனி அது தான் உன் ரூம் அங்க தான் உன்னோட திங்ஸ்ஸும், நீயும் இருக்கணும்.”என்று கட்டளை இட்டு விட்டு நகர்ந்தான்.


எனக்கே ஆர்டர் போடுறியாடாகொப்பரக்கா மண்டையா? இன்னிக்கு நைட்டோட நைட்டா அந்த ரூம்ல இருந்து உன்னை எப்டி தூரத்துறேன்னு பாரு.”என்று உள்ளுக்குள் கருவிக்கொண்டு உடை மாற்ற சென்றாள் ஆத்வி.


காமாட்சி பாட்டி சௌமியாவை தனியாக அழைத்து, ஏம்மா சௌமியா! இவ இதுக்கே இப்படி முறைச்சிட்டு நிக்கிறாளே! ராத்திரிக்கி எப்படி நம்ம அத பத்தி பேச? எப்டி சடங்குலாம் ஏற்பாடு பண்றது? ரெண்டும் எலியும், பூனையுமால்ல நிக்கிதுங்க! இன்னிக்கே அதெல்லாம் தேவை தானா?என்று கேட்டார். 


அந்தப் பக்கமாக ஃபோன் பேசிக் கொண்டு வந்த இந்தரின் காதில் தன் பாட்டியின் வார்த்தைகள் அனுமதியின்றி விழ, சௌமியா அதற்கு பதில் கூறும் முன்னே இந்தர் பதில் கூறினான் தன் பாட்டிக்கு. 


தேவை தான் பாட்டி! அவ எப்போ என்ன பண்ணுவான்னு எனக்கு நல்லா தெரியும். நீங்க ஏற்பாடு பண்ணுங்க.”என கூறிவிட்டு மீண்டும் ஃபோனை தூக்கி கொண்டு சென்று விட்டான். 


இவனுக்கு மட்டும் எங்க நின்னு பேசுனாலும் கேட்டுரும்! சரி போமா! போய் அவள ரெடி பண்ணு.”என்று கூறி ஆம் அனுப்பி வைத்தார் பாட்டி.


ராகவனை அழைத்து இந்தருக்கு பட்டு வேஷ்டியும், பட்டு சட்டையும் எடுத்து வரக் கூறி அறை அலங்காரத்திற்கு மலர்களையும், கொஞ்சம் இனிப்புகளும், பழங்களும் வாங்கி வரக் கூறினார் சௌமியா. ஆத்வியை தேடி அவளின் அறைக்கு சென்றார். 


ஆத்வி கண்ணு, பட்டு புடவை கட்டி ரெடி ஆகிக்கோடா.”என்றார் அறைக்குள் நுழைந்ததும். 


அப்போது தான் வேறு உடை மாற்றி வந்த ஆத்வி, ஏன்? எங்க போக போறோம்?என்று எதிர் கேள்வி எழுப்பினாள் தன் தாயிடம். 


எங்கேயும் போகல டி! இன்னைக்கு உனக்கும் இந்தருக்கும் சாந்தி முகூர்த்தம் வைக்கணும்ல‌.அதுக்குதான் ரெடியாக சொல்றேன்.”என்று கூறியது தான் தாமதம் ஆத்வியின் முகம் சிவந்துப் போனது.‌ கண்டிப்பாக அது வெட்கத்தால் அல்ல. 


கேட்ட கேள்விதான், இருந்தாலும் கேட்கிறேன். ஏம்மா, உண்மைலையே நீ தான் என்ன பெத்தியா? இல்ல குப்பை தொட்டியில இருந்து தூக்கிட்டு வந்தியா?” என்று நிதானமாக கேட்டாள். 


ஆத்வி… .”என்று அதட்டினார் சௌமியா.


பின்ன என்னம்மா? உன் பொண்ணுக்கு விருப்பம் இல்லாம கட்டாய தாலி கட்டி இருக்கான். அவன்கூட நடந்த இந்த கல்யாணத்தையே நான் இன்னும் ஏத்துக்க முடியாம தவிச்சுட்டு இருக்கேன்! இதுல ஃப்ர்ஸ்ட் நைட் ஒண்ணு தான் கேடாம்மா? எப்படி உங்களால மனசாட்சி இல்லாம வந்து என்கிட்ட இப்படி பேச முடியுது? எனக்கு இருக்க கோவத்துல அவன நான் கொன்னுடுறேன்.அவனுக்கு ஆத்ம சாந்தி பூஜை வேணும்னா பண்ணுங்க! அதவிட்டுட்டு சாந்தி முகூர்த்தம், வாந்தி முகூர்த்தம்னு எதையும் என்கிட்ட பேசாதீங்க.”என்று பொறிந்து தள்ளினாள் அவள். 


அப்படியே அறைஞ்சேன்னுவையேன்! என்னப் பேச்சு டி பேசுற? இன்னிக்குதான் உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு. அத நீ ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலனாலும் யாராலையும் அத மாத்த முடியாது. சோ இன்னைக்கு நடக்க வேண்டிய சடங்கு கண்டிப்பா நடக்கும். போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா. இல்லன்னா நான் இந்தர கூப்பிடுறேன்என்று மிரட்டினார்.


எனக்கு தெரியும்! இதெல்லாம் அவன் வேலை தான? இன்னிக்கு வரட்டும் அவன். இந்த உலகத்துல ஒன்னு அவன் இருக்கனும், இல்ல நான் இருக்கணும். ரெண்டு பேர்ல யாருன்னு இன்னிக்கு நான் முடிவு கட்டுறேன்”என்று கத்தினாள் ஆத்வி.


ஏய் சும்மா லூசு மாதிரி என்னத்தையாவது ஒளறிட்டு இருக்காத. நடந்தத ஏத்துக்க பழகு. இது தான் வாழ்கை. நம்ம நினைக்கிறது எல்லாம் அப்டியே நடந்துறாது. நம்மள மீறி நடக்குற சில விசயத்த நம்ம ஏத்துகிட்டு தான் ஆகணும்என்று அறிவுரை கூறினார்.


‘இந்த கேடுகெட்டவனுக்கு ஃப்ர்ஸ்ட் நைட் கேட்குதா? வரட்டும் இன்னிக்கு மவனே அவன் மண்டைய பொளக்குறேன்’ என்று முடிவு எடுத்துக் கொண்டவள் தன் தாய்க்கு ஒத்துழைப்பு கொடுத்தாள். 


பட்டுப்புடவை கட்ட முடியாது என்று பிடிவாதமாக மறுத்தவள் மெல்லிய ஷிஃபான் சேரி ஒன்றை எடுத்துக் கட்டிக் கொண்டாள். எப்படியோ இவள் கிளம்பினால் சரி என்று சௌமியா அமைதியாக அவள் வழிக்கே சென்றார். 

ச்சீ! அந்த சிரிக்க தெரியாத சிடுமூஞ்சி கூடலாம் ஒரே ரூம்ல தனியா இருக்க சொல்றாங்களே. ஆண்டவா இவங்களுக்கு மனசாட்சியே இல்லயா? என்று ஏகத்திற்கும் மனதிற்குள் எண்ண ஓட்டங்களை அலைய விட்டுக் கொண்டே தயாரானாள் இந்தருடனான இரவிற்காக. 


மற்றொரு அறையில் இந்தரோ ராகவன் வாங்கி வந்த பட்டு வேஷ்டி, சட்டையில் அழகனாய் ஜொலித்து கொண்டிருந்தான்.


என்ன மாமா எல்லாத்துக்கும் தயாராகிட்டீங்களா?” என்றான் ராகவன். 


அவன் கூறிய எல்லாத்துக்கும் என்பதில் இருந்த அழுத்தத்தை புரிந்து கொண்ட இந்தர் ஒரு பெருமூச்சு விட்டு, “ஆமா.”என்றான். 


எதுக்கும் ஒரு சேஃப்டிக்கு பெப்பர் ஸ்ப்ரே தரவா? இல்ல, நான் வேணா கதவு பக்கத்துலயே நிக்கட்டுமா மாமா?” என்றான் ராகவன். 


அக்குறும்புகாரனை முறைத்தவன் செல்லமாய் தலையில் தட்டி, ”போய் சாப்டுட்டு தூங்குடா.”என்றான்.


ராகவன் சென்றதும் இங்கே கண்ணாடியைப் பார்த்து பேசினான் இந்தர். 


உள்ள என்ன நடந்தாலும், அவ எவ்ளோ கத்துனாலும், ஈவன் உன்ன கோவத்துல அடிச்சா கூட பொறுமையா இருக்கணும் இந்தர்.”என்று தனக்கு தானே கட்டளையிட்டுக் கொண்டு ஆத்வி என்னென்ன பேசுவாள் என்று முன்பே கணித்து கொள்ளும் ஞானி போன்று சிந்தனையில் மூழ்கி இருந்தான் இந்தர்.


நல்ல நேரம் வந்ததும் இருவரையும் அறைக்குள் அனுப்பி வைத்தனர். அந்த அறையில் ஆடம்பரமான அலங்காரங்கள் எதுவும் இல்லை. எனினும் கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகாக தான் அலங்கரித்திருந்தான் ராகவன். ஆனால் அதை ரசிக்கும் மனநிலை தான் இருவருக்கும் இல்லை.

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page