காதல் – 14

உடை மாற்றி விட்டு கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தவனை கண்டு, “அதுக்குள்ள கிளம்பிட்டியா இந்தர்? வெயிட் பண்றீயா நானும் வரேன்” என்று கேட்டுக்கொண்டே எழுந்தாள் ஆத்வி.

 

“நான் இப்போ ஆஃபிஸ்க்கு போகல. வேற ஒருத்தர மீட் பண்ண போறேன்.” 

 

“பரவால்ல என்ன ஆஃபிஸ்ல இறக்கி விட்டுட்டு நீ போ.”

 

“சரி சீக்கிரம் வா…” என்று கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்ற இந்தர் பிரதீப்க்கு அழைப்பு விடுத்தான்.

 

“கிளம்பிட்டேன் மச்சான். இன்னும் பைவ் மினிட்ஸ்ல நீ சொன்ன இடத்துக்கு வந்துருவேன்” என்றான் பிரதீப். 

 

“நீ எங்கையும் வர வேண்டாம் கம்பெனிக்கு போ.”

 

“ஏன்டா என்ன ஆச்சு?” என்றான் பிரதீப் குழப்பமாக. 

 

“உனக்கு அங்க வேற ஒரு முக்கியமான வேலை காத்து இருக்கு, அங்க போ…” என்று கூறி விட்டு அழைப்பை தூண்டித்தான்.

 

“இவன் ஒருத்தன் எதையும் தெளிவா சொல்ல மாட்டான். அப்படி என்ன முக்கியமான வேலை இருக்க போகுது? சரி போவோம். போய் தான் பாப்போமே…” என்று வடிவேல் பாணியில் தனக்குள் பேசியவன் கிளம்பி அலுவலகம் சென்றான். 

 

பதினைந்தே நிமிடத்தில் தயாராகி வந்த ஆத்வி, “போலாமா?” என்றாள் இந்தரிடம். 

 

“கோளாறு பண்ண அவ்ளோ அவசரம்” என்று மனதிற்குள் நினைத்தவன், “சாப்பாடு பர்ஸ்ட், பிசினஸ் நெக்ஸ்ட்” என்று கூறி விட்டு டைனிங் டேபிள்க்கு சென்றான்.

 

மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். இருவரும் பாட்டியிடம் விடை பெற்று சென்றனர். அலுவலக வாயிலில் தன்னவளை இறக்கி விடவும், பிரதீப் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. 

 

“பை டா, பாத்துக்கோ…” என்ற இந்தரிடம் தலையை காருக்குள் நீட்டி, 

 

“டேய் இது தான் நீ சொன்ன அந்த முக்கியமான வேலையா?” என்றான் பிரதீப்.

 

“ஆமா…” என்று தலை அசைத்து சிரித்தான் இந்தர். 

 

“டேய் என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போயிருடா…” என்றான் பிரதீப் பாவமாக.

 

“கொஞ்சமாது பொறுப்பா நடந்துக்கோ மச்சான். நீயும் என் கூட வந்துட்டா ஆபிஸ யாரு பாத்துப்பா?” என்று கூறிவிட்டு காரை கிளப்பினான் இந்தர்.

 

‘இவன் தப்பிக்க என்ன எவ்ளோ நேக்கா கோர்த்து விட்டு போறான் பாரேன்’ என்று மனதிற்குள் நினைத்தவன், “வாங்க சிஸ்டர்! போய் வேலைய ஆரம்பிங்க…” என்று கூறினான்.

 

ஆத்வி அவனை திரும்பி ஒரு மாதிரி பார்க்க, “உயிரே உயிரே தப்பித்து எப்படியாவது ஓடிவிடு” என்று பாடிக்கொண்டே தனது கேபினுக்கு சென்றான் பிரதீப்.

 

தனது லேப்டாப்பில் சின்சியராக ஆர்டர் எடுத்துக் கொண்டிருந்த பிரதீப்பிற்கு திடீரென ஆத்வியை தனியாக விட்டு வந்தது நினைவிற்கு வந்தது.

 

“ஐயோ! அந்த குட்டி சாத்தான மறந்துட்டோமே” என்று வேகமாக இந்தரின் அறைக்கு சென்றான். 

 

அங்கு அவள் இல்லாததை கண்டு, “என்ன இங்க காணும்? இன்னிக்கு என்ன பண்ண போயிருக்காளோ தெரியலயே” என்று நினைத்தவன் ஒவ்வொரு இடமாக அவளை தேடிக் கொண்டு வந்தான்.

 

கடைசியாக பேக்கிங் செய்யும் ஏரியாவில் நின்ற ஆத்வி, அங்கிருந்த குடோனை பார்வையிட்டு கொண்டிருக்கும் போதே அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டாள்.

 

‘என்ன குட்டி சாத்தான் எதுவும் செய்யாம நல்ல பிள்ளையா நிக்கிது? இந்நேரத்துக்கு இதோட வேலைய ஆரம்பிச்சிருக்கணுமே’ என்று நினைத்தவன், ‘ஒரு வேலை திருந்திட்டாளோ?’ என்றும் நினைத்து கொண்டான்.

 

“ஏன் சிஸ்டர் இங்கயே நிக்கிறீங்க? வாங்க அங்க போகலாம்” என்று கேஷ் கவுன்ட்டரில் அவளை அழைத்துச் சென்று அமர வைத்தான்.

 

அப்போது தான் எழுந்து சென்று வேறு எந்த சதி வேலைகளையும் பார்க்க மாட்டாள் என்ற நம்பிக்கையில். ஆத்வி ஒரு இடத்தில் சமத்தாக அமர்ந்தப்பின்னே பிரதீப் நிம்மதியாக வேறு வேலையை பார்க்க சென்றான். 

 

அங்கிருந்தபடி பல பொருட்களை நோட்டம் விட்டவளின் கண்களில் அழகாக தென்பட்டது அந்த A4 ஷீட் பண்டல். யாரும் கவனிக்காத வண்ணம் அதை எடுத்து கொண்டு தனியே சென்றவள் பற்ற வைத்து விட்டு நகர்ந்து விட்டாள்.

 

சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் புகை படர்ந்து தீ விபத்து எற்படாமல் இருக்க பெரிய பெரிய கடைகளில் பொருத்தியிருக்கும் ஸ்பிரிங்க்ளர் வேலை செய்ய, அது பொருத்தபட்டிருந்த அனைத்து இடங்களிலும் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருக்கவும் இந்தர் வரவும் சரியாக இருந்தது. 

 

தன் உணர்வுகளை வெளியே காட்டாது துரிதமாக செயல்பட்டான்.

 

அங்கு வேலை செய்யும் அனைவரும் பதட்டத்தோடு நிற்கையில், “யாரும் பயப்படாதீங்க! ஃபையர் ஸ்பிங்க்ளர் ஃபிக்ஸ் பண்ணி இருக்குற எல்லா இடத்துக்கும் போங்க. எந்த இடத்தில பிரச்சனைன்னு உடனே இன்ஃபார்ம் பண்ணுங்க” என்று ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்திற்கு அனுப்பி வைத்தான்.

 

ஒரு வழியாக கடைசியில் ஸ்டேஷனரி பொருட்கள் அடுக்கி வைத்திருந்த ஸ்டோர் ரூமில் தான் பிரச்சனை என தெரிந்ததும் ஸ்ப்ரிங்க்னின் மெயின் ஸ்வீட்ச்சை ஆப் செய்து விட்டு வந்தான்.

 

“மச்சான், எல்லா பொருளுக்குள்ளயும் தண்ணீ போயிருக்கும். எல்லா பேக்கிங்கையும் பிரிச்சு வெயில்ல காயவச்சு அதுக்கு அப்றம் தான் மறுபடியும் பேக் பண்ணி எடுத்து வைக்க முடியும்” என்றான் பிரதீப் மிகவும் கவலையுடன். 

 

“சரி என்ன பண்ணணுமோ குய்க்கா பண்ணுங்க” என்ற இந்தர் தன் கோவத்தை அடக்குவது பிரதீப்க்கிற்கு நன்றாகவே தெரிந்தது. 

 

அவன் தோளை ஆறுதலாக தட்டி விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான் பிரதீப். ஒன்றும் தெரியாதது விழித்துக் கொண்டு நின்ற ஆத்வியின் கை பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் இந்தர். செல்லும் வழியில் நூறு கேள்விகள் கேட்டிருப்பாள் அவனிடம்.

 

“என்னாச்சு இந்தர்? எப்டி இப்படி நடந்தது? யாரு பண்ணிருப்பாங்க? நீங்க இப்போ இந்த லாஸ்க்குலாம் என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க?” என்ற கேள்விகள் அனைத்திற்கும் எதுவும் பேசாது வீட்டு வாயிலில் அவளை இறக்கி விட்டான். 

 

“இந்தர்…” என்றவளை திரும்பியும் பாராது காரை கிளப்பி கொண்டு மீண்டும் கடைக்கு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை பார்த்து கொண்டிருந்தான்.

 

உணவு பொருட்கள் மற்றும் உணவல்லாத பொருட்கள் என அனைத்தும் நீரில் நனைந்து இருந்தது. பாதிக்கும் குறைவான சேதம் தான் என்றாலும் அதைக் கண்டு சோர்ந்து போகாதவனுக்கு, ஏற்று மதி செய்ய வேண்டிய பொருட்களிலும் சேதம் ஏற்பட்டு ஏற்றுமதி தாமதம் ஆனது தான் மிகவும் கவலையையும் டென்ஷனையும் கொடுத்தது. 

 

உரிய நேரத்தில் பொருட்களை கஸ்டமருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைப்பவன். அவனால் இந்த தாமதத்தை ஏற்று கொள்ள முடியாத கடுப்பில் வேலைகளை பிரதீப்பிடம் ஒப்படைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

 

கடுப்பில் கார் ஒட்டிக் கொண்டு வந்தவன் வீட்டிற்குள் நுழையவும் ஒரு கல் அவன் கார் கண்ணாடியை துளைக்கவும் சரியாக இருந்தது. இப்போது உச்ச கட்ட கடுப்பிற்கு சென்றவன் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்க அவனவள்தான் அங்கு திமிராக நின்று கொண்டு இருந்தாள். 

 

“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? நானும் பொறுமையா இருக்கணும்ன்னு நினைச்சா நீ ரொம்ப ஓவரா தான் போய்ட்டு இருக்க” என்று நிலமே அதிரும் அளவிற்கு கத்தினான்.

 

அப்போது தான் அவள் பின்னிருந்து எட்டி பார்த்த ராகவனை கண்டான்.

 

“நீயும் இப்போ இவ கூட கூட்டு சேர்ந்துட்டியா டா?” என்றான் கோவமாக.

 

“இல்ல மாமா நாங்க விளையாடிட்டு இருக்கும் போது நீங்க தான் குறுக்க வந்துட்டீங்க” என்றான் ராகவன் பாவமாக. 

 

அச்சிறுவனிடம் கோபத்தை காட்ட மனமில்லாமல், உள்ளே போய்விட்டான்.

 

அலைபேசியில் கார் மெக்கானிக்கிற்கு அழைப்பு விடுத்து, கார் கண்ணாடியை மாற்றி தருமாறு கூறியபடியே தன் அறைக்குள் நுழைந்தவன் ஃபோனை சார்ஜில் போட்டு விட்டு கட்டிலில் அப்படியே கவிழ்ந்து விட்டான் கண்களை மூடி. 

கீழே ஆத்வியோ இந்தரின் கோவமான முகத்தை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

 

ராகவனோ இந்தர் கத்தி விட்டு சென்றதும், “அக்கா மாமா பாவம்க்கா. வா நம்ம சாரி கேட்டுட்டு வரலாம்” என்றுஅழைத்தான். 

 

“நீ போடா! என்ன பாத்தா இன்னும் கத்துவான்” என்று தோட்டத்திலேயே அமர்ந்து விட்டாள் ஆத்வி.

 

நேராக ரூமிற்குள் நுழைந்த ராகவன் இந்தர் படுத்திருப்பதை கண்டு, “மாமா, சாரி மாமா. நாங்க வேணும்னே எதுவும் பண்ணல. யார் வீசுற கல் ரொம்ப தூரம் போகுது அண்ட் ரொம்ப ஹைட் போகுதுன்னு சும்மா விளையாடிட்டு இருந்தோம். அப்போ தான் நீங்க வந்துட்டிங்க. அதனால தான் தெரியாம கல் கார்ல பட்டுருச்சு. வேணும்னு பண்ணல மாமா. சாரி.” என்றான் அழுகாத குறையாக. 

 

தலை உயர்த்தி தன் மச்சினன் கூறுவதை கேட்ட இந்தர், “அதனால என்னடா, கண்ணாடி தான போச்சு? ரெண்டு நாள்ல சரி பண்ணிடலாம். நான் ஏதோ டென்ஷன்ல வந்தேன். அத உங்க மேல காட்டிட்டேன். நான் தான் சாரி சொல்லணும்” என்று பொறுமையாக பேசிட, பாய்ந்து சென்று கட்டிக் கொண்டு தேம்பினான் ராகவன். 

 

“சாரி மாமா நீங்க கோவமா வந்ததும் எங்க இனி என் கூட பேசவே மாட்டிங்களோன்னு பயந்துட்டேன்” என்றான் கண்ணீர் மல்க.

 

“டேய், என்னடா குழந்தை மாதிரி இதுக்கு எல்லாம் அழுதுகிட்டு இருக்க? இங்க பாரு நான் டிரஸ் சேஞ்ச் கூட பண்ணல. ஆஃபிஸ்ல இருந்து வந்து அப்டியே படுத்துட்டேன். ஏதாச்சும் இன்ஃபெக்ஷன் ஆக போது. ப்ரெஷ் ஆகிட்டு வரேன், இரு.” என்று கூறி சென்றவனுக்கு ராகவனின் அன்பு ஒரு வித இதத்தை தந்தது. 

 

குளிர்ந்த நீரும் இந்தரை தன் பங்கிற்கு அமைதி படுத்தியது. அவன் குளித்து விட்டு வரவும், மெக்கானிக் அவனுக்கு போன் செய்தான்.

 

“சார் சாவி கொண்டு வந்து குடுத்தீங்கன்னா, நான் கார் எடுத்துட்டு போவேன்” என்று கூறினார். 

 

“இதோ, டு மினிட்ஸ்.” என கூறிக்கொண்டு ராகவனோடு கீழிறங்கி வந்தான் இந்தர். 

 

கார்டனில் நின்ற மெக்கானிக் சாவியை அவனிடமிருந்து வாங்கி காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

 

“மச்சான் நம்ம கிரிக்கெட் விளையாடுவோமா?” எனக் கேட்டான் இந்தர். 

 

அதில் ஆனந்த அதிர்வு கொண்ட ராகவன், “சரி மாமா விளையாடுவோம்‌. ஆனா ரெண்டு பேர் தான இருக்கோம்” என்றான். 

 

‘என்ன இவன் இவ்ளோ சீக்கிரம் நார்மல் ஆகி விளையாட வந்துட்டான்? இவன இவ்ளோலாம் ரிலாக்ஸ்ஸா இருக்க விட கூடாதே’ என்று எண்ணிய ஆத்வி, “நானும் வர்றேன், நான் தான் பர்ஸ்ட் பேட்டிங் பிடிப்பேன்” என்றவள் பேட்டை எடுத்து கொண்டு நின்று விட்டாள்.

 

அடுத்து இந்த பிசாசு என்ன செய்ய காத்திருக்கிறதோ?!

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page