அரக்கனின் காதலி
- அத்தியாயம்-1
மனதை வருடி சென்ற கடலின் ஓசைகள். கடல் அலைகள் ஒவ்வொன்றும் சண்டையிட்ட படி முன்னேற துடித்தது அப்பொன் பாதங்களை தொட்டு விட.
இருளில் பௌர்ணமின் வெளிச்சம் காரிகையின் வதனத்தில் எதிரொலித்து ஜொலிக்க வைத்தது.
யுவதியவளின் தேகத்தை காற்று கூட யாரும் காணா வண்ணம் கள்ளத்தனமாக தொட்டு விட்டு செல்ல, வஞ்சியவள் இதமாக உணர்ந்தாள்.
பூவை தெட்டு சென்ற காற்று அடுத்தவரிடம் கண்ணாமூச்சி ஆட நினைக்க, எதிரே இருந்த உருவத்தை கண்டு அந்த காற்றே அஞ்சி நடுங்கியது.
மகிழ்ச்சியாக சென்ற வளி(காற்று) அந்த உருவம் யாரென்று அறிந்ததும் மீண்டும் திரும்ப வேகமெடுக்க முயன்றது.
ஆனால் அவன் விட்டு விடுவானா என்ன? தன்னை சீண்டி விட்டு போகாத காற்று வேறு ஒருவரையும் சீண்டி விட கூடாது என்று தன் சுவாசத்தினாலே சிறைப்பிடித்தான் அவன்.
அந்த உருவத்திற்கு சொந்தமானவனை கண்ட நிலா கூட மேகத்திற்குள் தன்னை ஒளித்து வைத்துக் கொள்ள, அலைகளோ பின்னோக்கி ஓடியது அரக்கனின் பாதத்தை தொட்டு விட கூடாதென்று.
நெருப்பாக தகிக்கும் அவன் கண்கள் தன்னை மறைத்து இருக்கும் நிலவை கண்டு அனல் கக்கியது.
அந்த நொடி எங்கே இருந்து ஒரு வாடை அரக்கனவனின் சுவாசத்தில் சிக்கொண்டுக் கொள்ள, வாசம் வரும் பாதையை நோக்கி தானாக அவனின் பெரிய பாதங்கள் எடுத்து வைத்து அவ்விடத்தின் திசையை நோக்கி சென்றது.
அங்கே கடல் அலைகளை ரசித்தப்படி ஒரு காதல் ஜோடிகள் தங்களையே மறந்த நிலையில் அமர்ந்து இருந்ததனர்.
அவனின் கூர்மையான பார்வையில் அவர்கள் தப்பி விடுவார்களா? இல்லை அவன் தப்பிக்க தான் விடுனா?
மிக பெரிய கடல் பரப்பில் சுற்றி யாருமில்லா தனிமையில் அந்த காதல் புறா ஜோடியாக சிரித்து பேசிக் கொண்டு இருக்க, அந்த நேரம் காதல் கொண்ட மனம் தன்னவளை மோகத்தோடு அணைத்து பெண்ணவளின் இதழை சிறைப்பிடித்த தருணம் அது.
அக்காட்சியை கண்ட கயவனின் கண்கள் ரத்தமாக மாறியது. உடல் நரம்புகள் வெடித்து சிதறும் அளவிற்கு புடைத்துக் கொண்டு இருந்தது.
அரக்கனின் கூர்நாசியில் அவர்களின் ருசியை முகுர்ந்தவன் கண்ணில் அங்கே அவர்கள் இருவரும் தங்கள் எல்லைகளை கடந்து போவதை கண்டு கொதித்து எழுந்து விட்டான்.
அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள அவன் ஒன்றும் கடவுள் இல்லையே சாத்தான்.
இதழ்முத்ததில் முழ்கி இருந்தவர்களை நோக்கி சென்றான்.
அவனின் பெரிய பாதம் நான்கு அடிகளாக எடுத்து வைக்க கூடியதாக இருந்தது.. கால் விரல்கள் அணிந்து இருந்த காலாணியை கிழித்துக் கொண்டு வெளியே வர, கை விரல்கள் வில் போன்று வலிந்து கத்தியின் கூர்மை போல் மின்னியது.
சாத்தானுக்கே உரிய பற்களோடு காதல் ஜோடியின் அருகில் சென்றவன் முதலில் பெண்ணவளின் கேசத்தை தன் வில் போன்ற விரல்களால் பிடித்து அவனை நோக்கி இழுத்தான்.
சட்டென்று மோகம் அறுப்பட்ட நிலையில் காதலனை விட்டு தன்னை யாரோ பிரித்தெடுப்பதை உணர்ந்தவளுக்கு அச்சம் உண்டாக அதில் அலறினள்.
பயத்தில் கத்துகிறாளா இல்லை பேதையவனின் கூந்தலில் கொடுத்த அழுத்தத்தின் வலியில் கத்துகிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை.
காதலனோ காதலியின் அலறல் சத்தம் கேட்டு கண்களை திறந்தவன் அங்கே ஆக்ரோஷமாக அரக்கன் போன்ற ஒரு உருவம் நிற்பதை கண்டு பயத்தில் உறைந்து போனான்.
சிவப்பு நிறத்தில் இருந்த அவன் விழிகளை கண்டவனுக்கு தன் காதலியை கூட அந்நொடி காப்பாற்ற தோன்றவில்லை அக்காதலனுக்கு.
அவளோ பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள் மேலும் பயந்து போனாள்.
“ஜெய்… ஜெய் என்னை காப்பாத்துடா” என்று அப்பெண் தன் காதலனிடம் கெஞ்சினாள்.
ஆனால் அவனோ அடுத்த நொடி தன்னை காப்பாற்றிக் கொள்ள அவனை மட்டுமே நம்பி வந்தவளை மனசாட்சியே இல்லாமல் அந்த அரக்கனிடம் விட்டு ஓடினான்.
அதை பார்த்த அரக்கனோ ஏளனமாக சிரிக்க,
தன் காதலனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தவள் அவளை விட்டு ஓடிச் செல்பவனை மனம் ரணமாக வலி நிறைந்த விழிகளோடு கண்ணீருடன் கண்டவளின் ரத்தத்தை ருசி பார்க்க தொடங்கினான்.
தன் கூர்பற்களால் பெண்ணவளின் கழுத்தில் பதிய வைத்து தன் பசியை தனித்துக் கொண்டவன் அவள் உயிர் பிரிந்த அடுத்த நொடி நம்பிய பெண்ணை விட்டு ஓடியவன் முன் புயலாக வந்து நின்றான் அந்த அரக்கன்.
அவனை அரண்டு பார்த்தவன் அடுத்த சில நொடியில் தன் உயிரை துறந்து கடல் மண்ணில் சரிந்து விழுந்தான்.
பின் உயிற்று கிடந்த இரு உடல்களையும் ஒன்றாக தன் நீண்ட கரத்தில் ஏந்தியவன் காற்றை போல் அவ்விடத்தை விட்டு மறைந்தான்.
அதே கடல் பகுதில் வேறு ஒரு மூளையில் அலைகளை தன் பாதங்களை தொட்டு செல்ல அனுமதித்துக் கொண்டு நின்று இருந்தவள் மனம் ஏனோ பாரம் முழுவதும் இறங்கியது போல் உணர்ந்தாள்.
தன் பொன்பாதங்களை அலைகளிடமிருந்து விலகி திரும்பி நடந்தாள். அலைகளோ பரிதவிப்புடன் ‘எங்களை பிரித்து செல்லாதே’ என்று ஓலமிட்டுக் கொண்டு வருவது போல் ஒவ்வொன்றும் அடித்து பிடித்துக் கொண்டு அவளை நோக்கி வர, அச்சமயம் அரக்கனின் பெரிய பாதத்தை கண்டு முட்டி மோதியபடி மீண்டும் பின்னொக்கி சென்றன அலைகள்.
இரு உயிர்களின் ரத்தத்தை குடித்தும் அவன் பசி அடங்கவில்லை போல். வேறொருவர் உதிரத்தை ருசி பார்க்க மீண்டும் அந்த கடலுக்கே வந்தான்.
கடல் முன் தன் உருவத்தை நிறுத்தி வைத்தவன் அங்கே தூரத்தில் நடந்து செல்லும் மங்கையவளை, கழுத்தை மட்டும் திருப்பி பார்த்தவனின் சிவப்பு நிற கருவிழி அரக்கனே அறியாமல் அதற்கே உரியதான கருப்பு நிறத்திற்கு மீண்டும் வந்தடைந்தது.
அவள் நின்ற பாதத்தின் சுவடுகளில் அரக்கனின் பாதம் பட்டதும் ஆக்ரோஷமாக இருந்த அவனின் உடல் மனிதனின் உடல் போல் சாதாரணமாக மாற தொடங்கியது.
கால் விரல்களும் கை விரல்களும் அதற்கே உரியதான அளவில் தன்னை தானே பொருத்திக் கொள்ள… அவன் உடலில் நடக்கும் மாற்றத்தைக் கண்டு ஸ்தம்பித்து போனான் அந்த அரக்கன்.
அரக்கனின் நயனங்கள்.. அங்கே அந்த கடல் மண்ணிற்கு கூட வலித்து விட கூடாதென்று பூவை விட மென்மையாக நடந்து செல்பவளின் மீது ஆழ்ந்து பதிந்தது.
அவன் செவிகளிலோ…
“நன்றாக செவி சாய்த்து கேள். நீ செய்த பாவச் செயலால் இனி வரும் ஆறு ஜென்மமும் ஒரு சாத்தான் உருவம் கொண்டு அரக்கனாகவே பிறப்பை.
எக்கரத்தால் ஒரு தேவதையின் பிராணத்தை பறித்தாயோ அக்கரத்தாலே மீண்டும் தேவதையின் உயிரை மீட்டெடுப்பாய்.
அந்நொடி உன் சாபம் நீங்கும்,
இதோ இங்கே ஆன்மாவாக தவித்துக் கொண்டு இருக்கும் தேவதையால் மட்டுமே உன் சாபத்தை நீக்க முடியும்.
அதுவரை உனக்கு விருப்பமே இல்லையயென்றாலும் மனிதர்களின் குருதியை அருந்தும் காட்டெரியாகவே பிறப்பெடுப்பை. இது நான் உனக்கு வழங்கும் சாபம்”
என்ற வார்த்தைகள் கடந்த ஆறு ஜென்மம் அவனின் செவிகளில் உச்சரித்துக் கொண்டே தான் இருந்தது.
அவனிற்கே விருப்பமே இல்லையென்றாலும் மனிதர்களின் உதிரத்தை ருசி பார்க்க தான் அவன் மூளை செயல்படும், வாங்கிய சாபத்தால்.
இதோ அவன் சாபம் நீக்கும் ஏழாவது ஜென்மம்.
அவன் கரம் கொண்டு அழிந்த தேவதை மீண்டும் இப்புவியில் தன் அவதாரத்தை எடுப்பாளா? அப்படி எடுத்திருந்தால் அரக்கனின் சாபம் விமோசனம் கிடைக்குமா?
உடனிருந்து பயணித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
