அரக்கன் – 2
- அத்தியாயம்- 2
தன் சிறகுகள் காற்றில் பறக்க வைத்தப்படி குதுகலமாக பறந்துக் கொண்டு இருந்தன நான்கு பட்டாம்பூச்சிகள்.
ஒன்று ராஜா, ஒன்று ராணி, மற்ற இரண்டும் இளவரசிகள்.
ஒவ்வொன்றும் கண்களை கவரும் வண்ணத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டு அந்த இயற்கையை அனுபவித்தக் கொண்டும் ஆனந்தமாக திரிந்துக் கொண்டு இருந்த சமயம் அது.
எங்கோ இருந்து ஒரு நீண்ட கரம், தன்னையே மறந்து, பறந்து கொண்டு இருந்த ஒரு இளவரசி பட்டாம்பூச்சியை கணப்பொழுதில் சிறைப்பிடித்தது.
தான் மாட்டிக் கொள்வோம் என்று அறிந்திடாத இளவரசி பட்டாம்பூச்சி திகைத்து தான் போனது.
எப்படி தப்பித்து செல்வது என்று புரியாமல் தவித்த போது அதனின் ஒருப் பக்கம் வண்ணங்களால் நிறைந்து இருந்த சிறகை உடைத்தது அந்த வலிமையான கரம்.
வலி தாங்க முடியாத பட்டாம்பூச்சியோ விழிநீருடன் தான் சிறைப்பட்டு இருக்கும் கரங்களுக்கு உரியவனை காண முயன்ற நேரம், சுளீர் என்ற வலியோடு மூடி இருந்த நயனங்களை பட்டென்று திறந்ததுக் கொண்டது.
இமை திறந்து பார்த்த சமயம் கோபத்தில் சிவந்து இருந்த வதனத்தின் உருண்டையான ஒரு உருவதை கண்டாள் பாவையவள்.
“உஸ்ஸ்….” என்று சொல்லிக் கொண்டே தன் தலையை தேய்த்துக் கொண்டவள் பாவமாக தன் எதிரே நின்று இருந்தவரை பார்த்து தலை கழிந்துக் கொண்டு,
“மன்னிச்சிடுங்க சார், இனி தூங்க மாட்டேன்” என்று சொல்லி மன்னிப்பை யாசித்தாள்.
அந்த உருண்டை உருவமோ தன் விழிகளை உருட்டிக் கொண்டு கோபத்தோடு கட்டையான குரலில் “இங்க வேலை செய்ய வந்தியா? இல்ல தூங்க வந்தியா? ஒரு நாள் இரண்டு நாள்னா பரவால்ல… உன்கிட்ட டெய்லி இதே கதை தானே. பள்ளி கூட பிள்ளைங்க போல லஞ்ச் டைம் முடிஞ்சதும் டெய்லி தூங்கி தூங்கி வழியுற. இப்படி இருந்தா அப்புறம் எப்படி கஸ்டமர் கிட்ட பேசி நம்ம டிசைன ஓகே சொல்ல வைப்ப” என்று அவளை நிற்க வைத்து பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார் அந்த குழுவின் தலைமை அதிகாரி.
அவளோ தலையை குனிந்தபடியே ‘அப்புறம் அந்த பட்டாம்பூச்சிக்கு என்னாச்சி தெரிலயே! யாரு அந்த பட்டாம்பூச்சியை கொன்னு இருப்பா? முகத்தை பார்க்கிறதுக்குள்ள இந்த இட்லி குண்டா எழுப்பி விட்டுடுச்சி’ என்று மானசீகமாக தனக்கு தானே பேசிக் கொண்டவளுக்கு அந்த இட்லி குண்டா திட்டிய திட்டில் அவளின் காதிலிருந்து ரத்தமே வந்து விட்டது.
கிட்டதட்ட அரைமணி நேரம் அவரும் நின்றுக் கொண்டு அவளையும் நிற்க வைத்து அறிவுரை என்னும் பெயரில் ஒரு பெரிய வகுப்பை எடுத்தவர் தன் உரையாடல் முடிந்தது போல் மூச்சு வாங்க நின்றுக் கொண்டு இருந்தவரை பார்த்து அவளுக்கே பாவமாக தோன்றியது.
‘அய்யோ யார் பெத்த புள்ளையோ தெரில. நமக்கு கிளாஸ் எடுத்து அதோட தொண்டை தண்ணீயெல்லாம் வத்தி போச்சி’ என்று அந்த அதிகாரிக்காக பரிதாபப்பட்டாள்.
மனம் கேளாமல் தன் அருகிலிருந்த நீரை எடுத்து பருக கொடுத்தாள்.
அவளை முறைத்துக் கொண்டே அதை வாங்கி பருகியருக்கு அப்போது தான் வற்றி போன நாவில் உயிர் வந்தது போல் உணர்ந்தார்.
“இது தான் லாஸ்ட் டைம். இனி ஒரு முறை நீ இங்க தூங்குறதை பார்த்தேன் வை. உன் சீட்டை கிழிச்சி போட்டு விடுவேன்” என்று எச்சரித்தார்.
அவளோ “சீட்டை கிழிச்சிட்டா அப்புறம் நான் எங்கே சார் உட்கார” என்று சிறு பிள்ளைப் போல் கேட்டவளை முறைத்து பார்த்தார்.
அதுவரை அமர்ந்து அங்கே நடக்கும் எதையும் காணாதது போல் தன் முன்னே இருந்த கணினியில் கண்ணும் கருத்துமாக வேலையை செய்துக் கொண்டு இருந்தவர்கள் அடுத்து அடுத்து என்று சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்.
அதை பார்த்த தலைமை அதிகாரியோ கோபத்துடன் “ஷேட் ஆப்” என்று கத்த, அந்த சத்ததில் கப் சிப் என்று வாயை மூடிக் கொண்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தனர்.
அவளோ ‘ஏற்கனவே நெச நெசனு கத்திட்டு இருப்பாரு. இப்போ இவங்க சிரிச்சதுக்கு இன்னும் அரை மணி நேரம் எக்ஸ்ட்ரா கிளாஸ் எடுப்பாரே’ என்று நொந்தபடி கால் வலியை பொற்றுக் கொண்டு நின்று இருந்தாள்.
அவளின் எண்ணத்தை பொய்யாக்காமல் அடுத்த அரைமணி நேரம் வகுப்பை எடுத்த பிறகே அவளை விட்டார்.
அவளோ “அப்பாட்டா” என்று பெருமூச்சு விட்டபடி சுழலும் நாற்காலியில் அமர்ந்த நேரம் வேலை முடியவதற்கான ஒலியை எழுப்பியது அந்த இடம் முழுவதும்.
“அதுக்குள்ள அஞ்சி ஆகிடுச்சா? நான் இன்னும் வேலையை முடிக்கவேயில்லையே” என்று கேட்டுக் கொண்டே தன் உடைமைகளை கைப்பையில் திணித்தவள் மதியம் வரை செய்து வைத்த வேலையை கணினியில் பாதுக்காப்பாக வைத்துவிட்டு அதை அணைத்தாள்.
அருகிலிருந்தவளோ “இன்னிக்கு வேலை செய்யாமலே திட்டி வாங்கி நேரத்தை கடத்திட்ட” என்று சிரித்துக் கொண்டே கேலி செய்ய, அவளும் சிரித்து விட்டாள்.
பின் இருவரும் சிரித்து பேசியப்படி அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவர்கள் பேருந்து நிலையை நோக்கி செல்ல, திடீரென்று மேகங்கள் கருமையாக மாறி காற்று பலமாக வீச தொடங்கியது.
வேகமாக அடித்த காற்றில் அங்கே இருந்த குப்பைகள் காற்றில் பறந்துக் கொண்டு அந்த இடத்தை அசுத்தம் செய்தது.
“என்னக்கா திடீருனு காத்து இப்படி அடிக்குது” என்று கேட்டவள், தன் புறங்கையால் கண்ணில் மண் விழுந்து விட கூடாது என்று மூடியபடி நடந்தாள்.
அருகில் நடந்து வந்தவளோ “அதான்டி எனக்கும் தெரில. மழை வரும் போல. சீக்கிரம் நட, பஸ் வந்துட போகுது” என சொல்லிக் கொண்டே நடந்துச் சென்றனர்.
அந்த சமயம் எங்கோ இருந்த வந்த ஒரு கொடிய உருவம் பேசிக் கொண்டு வந்தவளின் வாயை பொற்றி நொடி பொழுதில் அந்த இடத்திலிருந்து அவளை கடத்திக் கொண்டு மறைந்து சென்றது.
காற்று வேகமாக அடித்ததால் அவ்வபோது கண்ணை மூடுவதும் திறப்பதுமாக இருந்ததால் அருகில் மின்னல் போல் நடந்த சம்பவத்தை அவள் கவனிக்கவேயில்லை.
அப்போது பேருந்து நிலையம் வந்து சேர, சரியாக ஒரு பேருந்தும் உலர்ந்து வந்தது.
கண்ணை சுருக்கிக் கொண்டு அதன் நம்பரை பார்த்தவள் “அக்கா உங்க பஸ் தான் வருது” என்று சொல்லிக் கொண்டே திரும்பி பார்த்து அதிர்ந்து போனாள்.
தன்னுடன் வந்தவளை திடீரென்று காணாமல் போனது அவளுக்கு அதிர்ச்சியாக தானே இருக்கும்.
சுற்றி முற்றி திரும்பி பார்த்தவள் குழப்பத்துடன் நின்று இருந்தாள்.
“எங்கே போய்ட்டாங்க இந்த அக்கா” என்று அந்த பலத்த காற்றில் தன்னுடன் வந்தவரை தேடினாள் அவள்.
புயல் அடித்து ஓய்ந்தது போல் அந்த காற்றும் தன் வேகத்தை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டது.
கருமேகங்களும் தன் வெண்மைக்கு மாற, அவளை சுற்றி நடப்பதை அதிசியமாக பார்த்தபடி நின்று இருந்தவளின் எதிரே ஒரு உருவம் மின்னல் போல் வந்து நிற்க.
அதில் பயந்து போனவள் தடுமாறி பின்னால் விழி போக, பெண்ணவளை கீழே விழுந்து விடாமல் பேதையின் மெல்லிடையை தன் கரம் கொண்டு வளைத்து பிடித்து விழ விடாமல் நிறுத்தினான் அரக்கன்.
அவளோ கண்ணை இறுக்க மூடிக் கொண்டு அவனின் விரிந்து இருந்த தோள்களை இருப்பக்கமும் பிடித்துக் கொள்ள, வஞ்சியின் பரிசம் பட்டதும் அரக்கனின் உடல் மனிதனின் உடல் போல் மெல்ல மாற தொடங்க. தன்னுள் நிகழும் மாற்றத்தை பிரம்மித்து பார்த்தான்.
அழிக்க வந்தவனே அவளை காக்க வைத்து விட்டாள் அல்லவா பெண்ணவள்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
