அரக்கன் – 4

  • அத்தியாயம்- 4

ஆரோன், அங்கே முகவாட்டத்துடன் நின்று இருந்த பெண்ணை கண்டவன் பாதங்கள் அப்பெண்ணை நோக்கி சென்றது.

அவள் யாரென்று அவனுக்கு தெரியாது. ஆனால் அவளை பார்த்த அந்நொடி ஆடவன் உடல்.. பொருள்… ஆவி அனைத்தும் அவளின் ஈர்ப்பால் சாய்வதை நன்றாக உணர்ந்தான் ஆரோன்.  அதை அவன் தடுக்கவும் விரும்பவில்லை.

அவளோ கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருக்க. தன் அருகில் ஒரு உருவம் வந்து நின்றதை கூட கவனிக்க தவறினாள். 

சில மணி துளிகள் கழித்து பெண்ணவளின் உள்ளுணர்வு ஏதோ ஒன்றை உணர்த்தியதும் சட்டென்று திருப்பி பக்கவாட்டாக பார்த்தாள். 

அங்கே இரும்பு போல் தன்னையே வெறித்து பார்த்தப்படி நின்று இருந்த மனிதனை கண்டு முதலில் திகைத்தாலும் பின் “என்ன சார்… என்ன வேணும்? யார் நீங்க?” என்று கேட்டாள்.

தெரியாத ஒருவன் தன் அருகில் நிற்பதை விரும்பாதவள் தள்ளி சென்று கடலை நோக்கி நடக்க போனவளை தடுத்தான் ஆரோன். 

“ஹலோ ஒரு நிமிசம்” என்று சொன்னவனை என்ன என்பது போல் பார்த்தாள்.

ஆரோனோ முதல் முறை தானாக அதுவும் ஒரு பெண்ணிடம் தன் சுயத்தை பற்றி விளக்கினான். 

“ஐயம் ஆரோன். ட்ராயிங் ஆர்டிஸ்ட். மனதை கவரும் எந்த ஒரு பொருளையும் சட்டெனு வரையிறது எனக்கு பிடிச்ச ஒன்னு. உங்களுடைய இந்த பால் வண்ண நீண்ட அழகான கரங்களை வரைய அனுமதி கொடுத்தால் அது என் திறமைக்கு கிடைத்த அங்கிகாரம் போல் இருக்கும்” என்று எந்த வித தயக்கமுமின்றி அவள் கரங்களை பார்த்துக் கொண்டு கூறுபவனை வித்யாசமாக பார்த்தாள் அவள். 

முன் பின் தெரியாத ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டுமென்று இவனுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது போல் இருந்தது அவள் பார்வை.

அவளோ “நான் ஒன்னும் நீங்க ரசித்து வரையும் பொருள் இல்லை. அண்ட் யாரு நீங்க? இப்படி தான்  தெரியாத ஒரு பொண்ணுக்கிட்ட வந்து பேசுவீங்களா? அதுவும் என்னை வரையனும் வேற கேட்குறீங்க. உங்களுக்கு வெட்கமா இல்ல” என்று கோபத்துடன் கேட்டாள்.

ஆரோனோ குரலை செறுமிக் கொண்டு “நான் ஒன்னும் உங்களோட முழு உடலையும் வரைய கேட்கலயே மேடம். இந்த நீளமான இரண்டு கைகளை மட்டும் தானே கேட்டேன். எந்த வித ஒப்பனையும் இல்லாமல் இயற்கை அழகோடு பட்டாம்பூச்சிகள் போல் இருக்கும் இறகை ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறது. அந்த அழகை வரைய தான் கேட்கிறேன். அப்புறம் பிடித்த ஒன்றை வரைய ஏன் வெட்கப்படனும்” என்று பேசுவபனை இந்த கடலில் தள்ளி கொன்றால் என்ன என்று தான் தோன்றியது பெண்ணவளுக்கு. 

அவனின் வார்த்தையில் எரிச்சலடைந்தவள் மேலும் அவனுடன் பேச்சை வலுக்க விரும்பாது “சாரி ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட்” என்று சொல்லி விட்டு அலைகளை நோக்கி சென்றாள்.

அவனோ அவளை கட்டாயப்படுத்தும் எண்ணம் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ “தேங்க்ஸ்” என்று மட்டும் கூறிவிட்டு அவளுக்கு முன் நடந்து சென்று அந்த கடலின் அலைகளை ரசிக்க ஆரம்பித்தான். 

தன்னை கடந்து போனவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டு அவனின் பின்னால் ஒரு பத்தடி தள்ளியே நின்றவள் விழிகள் அந்த கடலை அடையும் முன் ஆண்ணவனின் தேகத்தில் முழுமையாக தீண்டியது. 

“ம்.. பார்க்க நல்லா சினிமா நடிகன் போல தான் இருக்கான். ஆனா பொண்ணுங்க கிட்ட எப்படி பேசனும் கொஞ்சம் கூட தெரில. எல்லாரும் முகத்தை பார்த்து பேசுவாங்க. இல்லனா கழுத்துக்கு கீழ பார்த்து பேசுவாங்க. ஆனால் இவன் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்ப வித்யாசமா கையை பார்த்து பேசுறான். என் கை என்ன அவ்வளவு அழகாவா இருக்கு.” என்று தன் கரங்களை முகத்திற்கு நேராக நீட்டி பார்த்தாள். 

“ம்.. எனக்கு எந்த வித்யாசமும் தெரிலயே. எல்லாருடைய கை போல தானே எனக்கும் இருக்கு” என்று புலம்பியவள் நயனங்கள் அவளையும் மறந்து அவனையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றவளை ஓரவிழிரோம் அவன் நோட்டமிட தான் செய்தான். 

ஆனால் அவனின் பார்வையோ அவளின் நீண்ட கரத்தில் தான் அவ்வபோது படிந்து மீண்டது. அவனுக்கு தான் ஒரு காட்சியை பார்த்தாலே அப்படியே படம் பிடித்தது போல் அவன் ஆழ்மனம் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமே.. இப்போதும் பெண்ணவளின் அனுமதி இல்லாமல் அவனின் கரு விழிகள் படம் எடுத்துக் கொண்டு இருந்தது. 

எத்தனையோ நபர்களை அவன் ஓவியமாக வரைந்து இருக்கிறான். ஆனால் என்னவோ அப்பெண்ணின் கரங்களை பார்த்ததும் அக்கரத்தின் மீது ஒரு விதமான ஈர்ப்பு. 

அவள் வதனத்தை கூட அவன் கவனித்தான என்று கேட்டால் நிச்சியமாக இல்லை என்று தான் சொல்லுவான். அப்படி ஒரு ஈர்ப்பு அக்கரங்களில்.

இதுவரை இது போன்ற நீண்ட மெல்லிய அழகான மங்கையர்கள் கரத்தை அவன் பார்த்ததில்லை. அக்கரத்தின் ஒவ்வொரு விரல்களும் மெல்லிந்து நீண்டு ஓவியமாகவே அவன் கண்களுக்கு தெரிந்தன. மீண்டும் இதே போல் ஒரு கரத்தை அவன் பார்ப்பானா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அத்தனை அழகாக இருந்தது அவள் கரம். 

என்னவோ கிடைக்காத பொக்கிஷம் அவன் எட்டி பிடிக்கும் தூரத்தில் இருப்பது போன்ற பிரம்மையில் திகழ்ந்தான் ஆரோன்.

அதையெல்லாம் கவனிக்காதவள் அவனை அடுத்து இருந்த கடலை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.

பெண்ணவளின் மனதில் குழப்புங்கள் மட்டுமே சுழன்றுக் கொண்டு இருந்தது… தான் ஒரு வாரத்திற்கு முன் கண்ட காட்சிகள் அனைத்தும் உண்மையா இல்லை பொய்யா என்ற குழப்பத்தில் இருந்தாள். 

அந்நேரம் அங்கே இருட்டான பகுதியிலிருந்து சில பேரின் கூக்குரலின் அலறல்  சத்தம் கேட்க.. இருவருமே திரும்பி என்ன என்று பார்த்தனர்.

அங்கே ரத்தம் சொட்ட சொட்ட ஒரு ஒரு மனிதர்களாக கடித்து கோதரி கொண்டு தன் பசியை தீர்த்துக் கொண்டு இருந்தது ஒரு ரத்தக்காட்டேரி. 

அதை அதிர்ச்சியுடன் விழி விரித்து பார்த்தவள் கால்கள் தானாக பின்னோகி செல்ல.. 

அந்த ரத்தக்காட்டேரியை பார்த்துக் கொண்டு இருந்த ஆரோன் மீது மோதி நின்றாள் பெண்ணவள். 

பயத்துடனே சட்டென்று திரும்பி ஆரோனை பார்த்தாள். 

ஆரோனும் அவளை தான் பார்த்தான். அந்த விழிகளில் ‘தன்னை எப்படியாவது காப்பாத்தி விடு’ என்று இறைஞ்சிவது போல் தோன்றியது அவனுக்கு.

தன் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அவர்களை இடித்துக் கொண்டு ஜனங்கள் அங்கே இருந்து தப்பித்து ஓடினார்கள். 

பயத்துடன் நின்று இருந்தவளை ஒருவன் இடித்துக் கொண்டு ஓட, கீழே விழ போனவளின் நீண்ட மெல்லிய கரத்தை தன் பெரிய கரம் கொண்டு பிடித்தான் ஆரோன். 

அவளின் கரத்தை பிடித்ததும் அப்படி ஒரு பிரகாசம் ஆரோனின் உள்ளத்தில். ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னை நிகாரித்த கரத்தை தன் உள்ளங்கையில் புதைத்துக் கொண்டு அவளை அங்கே இருந்து இழுத்து சென்றான் ஆரோன். 

அவனின் எண்ணமோ அந்த அழகான கரங்களுக்கு சேதாரம் நேர்ந்துவிட கூடாதென்று மட்டுமே குறிகோளாக இருக்க. அவளுக்கு தன் உயிரை காப்பற்றும் காவலனாக ஆரோன் தோன்றினான். 

 

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.. 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
132 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
250 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page