அரக்கன் – 5

  • அத்தியாயம்- 5

மறுநாள் காலை வழக்கம போல் தனதறையிலிருந்து எழுந்தவளுக்கு தலை வலிப்பது போல் உணர்வு. 

மெல்ல மெத்தையிலிருந்து எழுந்தவள் காலை கடன்களை முடித்துக் கொள்ள குளியலறையை நோக்கி சென்றவளுக்கு ஆணி அடித்தது போல் தலை பாரமாக தோன்ற, அப்படியே அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள் பெண்ணவள். 

கண்களை இறுக்க மூடி வலியை பொறுத்துக் கொள்ள நினைத்தவளுக்கு கனவு போன்று நேற்று நடந்த காட்சிகள் வந்து செல்ல.. 

பதறியடித்துக் கொண்டு எழுந்து நின்று சுற்றி முற்றி பார்த்தாள். 

“என் ரூம் தான். ஆனா எப்படி இங்கே வந்தோம். நேத்து அந்த காட்டேரி எல்லாரையும் கடிச்சி சாப்பிட்டு இருந்துச்சே. அப்புறம் அந்த பையன்… அவன் பெயர்… ஹான் ஆரோன் ஆரோன் எங்கே போனான். என்னை அவன் தானே காப்பாத்தினான். நேத்து அந்த பீச்சில ஓடினது வரைக்கும் தான் ஞாபகம் இருக்கு. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சி. அய்யோ” என்று தலையை பிடித்துக் கொண்டு தொப்பென்று பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தாள். 

அதுவோ அவள் அமர்ந்த வேகத்தில் டப்பென்ற சத்ததுடன் உடைந்து போக. நான்கு கால் நாற்காலி இப்போது மூன்று கால் நாற்காலியாக மாறியது. 

கீழே விழுந்த வேகத்தில் இடுப்பில் வலி ஏற்பட “அய்யோ, இடுப்பு போச்சே” என்று தன் இடுப்பை பிடித்துக் கொண்டு கத்தினாள்.

பின் தன் வலியை பொறுத்துக் கொண்டு பாவமாக நாற்காலியை பார்த்தாள். 

“மட்டமான பிளாஸ்டிக்” என்று அதுக்கு திட்டியவளின் மனசாட்சியோ,

“ஏதே மட்டமான பிளாஸ்டிக்கா.. புதுசா காசு கொடுத்து வாங்க கஞ்சதனம் பட்டு பழைய சாமான் கடையிலிருந்து ஆட்டையை போட்டு வந்து ஆறு மாசமா அதை பாடாத பாடுப்படுத்தி இப்போ உன்னால உடைஞ்சதும் இல்லாமல் மட்டமான பிளாஸ்டிக் திட்டுற” என்று மூச்சே விடாமல் பேசிய மனசாட்சியை அடக்கினாள் அவள். 

“பார்த்து பார்த்து கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ, செத்து போயிட போற” என்று தன்னை தானே கிண்டல் செய்துக் கொண்டவள் எண்ணம் மீண்டும் நேற்றிய பொழுதுக்கு சென்றது. 

சிறிது நேரம் அதை பற்றியே யோசித்தவள் தன் கரங்களை நீட்டி பார்த்தாள். 

“இந்த கையை தானே வரைய கேட்டான். அப்புறம் நான் முடியாது சொல்லிட்டேன். அப்புறம் காட்டேரி வந்துச்சி” என சொல்லியவளை மீண்டும் மனசாட்சி காரிதுப்ப.. அதை துடைத்துக் கொண்டே,

“சரி சரி… முடியாது சொன்னதுக்கு அப்புறம் நான் அந்த ஆரோனை சைட்டாடிச்சேன். அப்புறம் காட்டேரி வந்துச்சி. அப்புறம் ஒருத்தன் தள்ளி விட்டு ஓடினான். அப்புறம் ஆரோன் என் அழகான கையை பிடிச்சிட்டு ஓடினான்” என்று தன் ஒரு கரத்தை இன்னொரு கரத்தால் மென்மையாக வருடிக் கொண்டே நேற்றிய பொழுதை அசைப் போட்டாள். 

பின் அலுவலகம் கிளம்பும் நேரம் வர.. குளிக்கும் போதும் சரி.. கிளம்பும் போதும் சரி… பேருந்தில் செல்லும் போதும் சரி… அலுவலகம் வந்த பின்னரும் சரி.. அப்புறம் அப்புறம் என்று அதையே நினைத்து புலம்பிக் கொண்டு இருந்தாள். 

அப்போது அவள் தலையில் நங்கென்று சத்தம் தோன்றி உச்சிதலையில் வலியை கொடுக்க… “ஆஆ” என்று தலையை தேய்த்துக் கொண்டு,

“எவன்டா அது என்னையே அடிச்சது” என்று கேட்டபடி திரும்பி பார்த்தாள். 

‘இவனா’ என்று மனதில் நினைத்தாலும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள். 

தன் பெரிய கண்களை உருட்டி காட்டி தான் உருண்டையான தொப்பையை தடவிக் கொண்டு அவளை சராமாரியாக திட்டிக் கொண்டு இருந்தார் அந்த குழுவின் தலைமை அதிகாரி. 

இந்த நிகழ்வை பார்த்த அவள் மனமோ ‘இப்படி தானே அன்னிக்கும் திட்டுனாரு. அரை மணி நேரம் நிக்க வச்சே பாடம் எடுப்பாரே..’ என்று நினைத்தவள் கரம் தன்னிச்சையாக தண்ணீர் குவளையிடம் சென்று எடுத்து வைத்துக் கொண்டது. அவர் பேசி முடித்ததும் கொடுப்பதற்காக.

அவரும் அவளின் எண்ணத்தை எப்போதும் போல் பொய்யாக்காமல் அரைமணி நேரம் திட்டி தீர்த்து விட்ட பிறகே அவளை விட்டார். 

அவள் மனமோ ‘அய்யோ யார் பெத்த புள்ளையோ.. இப்படி நம்மளை திட்டி திட்டியே டயார்ட்டாகிடுது’ என்று அவருக்காக வருத்தமடைந்து கரத்தில் வைத்து இருந்த தண்ணீரை அவர் முன் நீட்டினார். 

அவரும் தொண்டை வருண்டு போக, அந்த தண்ணீரை பட்டென்று அவள் கரத்திலிருந்து வாங்கி பருகினார். 

பின் “கனவு காணாம ஒழுங்க வேலையை பாரு” என்று சொல்லிவிட்டு தன் பணியை தொடர போய்விட்டார். 

அவளோ “ஸ்ப்பா” என்று பெருமூச்சி விட்டவளை பார்த்த ரம்யா,

“ஏன்டி உனக்கு சொரனையே இல்லையா? அந்த ஆளுக்கிட்ட டெய்லி திட்டு வாங்குற.. ஒரு நாளாவது திட்டு வாங்கமா இருக்கியா?” என்று கேட்டவளை சாகவாசமாக திரும்பி பார்த்து,

“இருக்கேனே” என்றாள். 

ரம்யாவோ “எப்போ” என்று யோசனையுடன் கேட்க, 

அவளோ “சண்டே” என்றாள் பெருமிதமாக. அதை கேட்ட ரம்யாவோ “த்தூ” என்று சொல்லிவிட்டு தன் வேலையை பார்த்தாள். 

ஆனால் அவளோ ரம்யாவை தன் பக்கம்  திருப்பி “அக்கா உன்கிட்ட ஒரு விசியம் சொல்லனும்” என்று சிணுங்களாக கூற, ரம்யாவோ கணினியிலிருந்து பார்வையை விலக்காமல்,

“என்னடி, நேத்து பீச்சிக்கு போன, ஆரோன் ஒருத்தன் வந்து உன் அழகான கையை வரைய கேட்டான். நீ முடியாது சொல்லிட்டு அவனை சைட்டடிச்ச, அப்புறம் ஒரு காட்டேரி அங்கே இருந்த ஜனங்களை கடிச்சி சாப்பிட்டு இருந்துச்சி.. அப்போ ஒருத்தன் உன்னை தள்ளிவிட்டு ஓடினான். அந்த சமயம் அந்த ஆரோன் தான் உன்னை காப்பாத்தினான்… சரியா?” என்று கேட்டவளை வாயை பிளந்துக் கொண்டு ஆச்சிரியமாக பார்த்தாள்.

அதே வியப்புடன் “எப்படி அக்கா.. நேர்ல பார்த்த மாதிரி சொல்ற” என்று கேட்டளை முறைத்து பார்த்து விட்டு,

“நீ வந்ததுல இருந்து இதை மட்டும் தான் புலம்பிட்டு இருக்கடி” என்று கடுப்புடனே கூறினாள் ரம்யா.

அவளோ “அட அக்கா நான் நிஜமா தான் சொல்றேன்” என்று பேச வந்தவளை இடை நிறுத்தி..

 

“யம்மா தாயே போதும்.. வர வர உன் கற்பனை திறனுக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. பேசமா நீ சொல்ற கதையெல்லாம் ஏன் நாவலா எழுத கூடாது” என்று கிண்டலடித்து விட்டு தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டியப்படி “பை பை டி..” என்று சொல்லிவிட்டு அடுத்து அவள் பேசும் முன் அங்கே இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி சென்றாள். 

 

அவளின் மனமோ ‘ஏன் நான் கூறுவதை யாருமே நம்ப மாட்டிக்கிறாங்க? நான் ஒன்னும் கதை சொல்லலனு.. கத்தனும் போலு இருக்கு. என்னை சுத்தி என்ன நடக்குது’ என்று மேசையில் கை ஊன்றி தலை முடியை பிடித்தப்படி நடந்த அனைத்தையும் மீண்டும் ஒரு முறை நினைத்து பார்த்தாள். 

 

“இல்ல எல்லாமே உண்மையா நடந்த மாதிரி தான் இருக்கு. இதுக்கு ஒரு முடிவு கட்டனும்” என்று முடிவெடுத்தவளாக கைப்பையை மாட்டிக் கொண்டு கடலில் சந்தித்த ஆரோனை தேடி சென்றாள். 

 

அவள் மனமோ மிகுந்த குழப்பத்தில் சுழன்றுக் கொண்டே இருந்தது… அடுத்த இருபது நிமிடத்தில் அவள் வந்து சேர வேண்டிய இடத்தை அடைந்ததும் ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு ஆர்வமாக ஆரோனை தேடினாள். 

 

ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவன் உருவம் அகப்படாமல் போக… சோர்ந்து போனவளாக அலைகளை நோக்கி சென்றாள்.

 

சூரியன் தன் பணியை முடித்துக் கொண்டு நிலவிடம் தன் மீதி பணியை ஒப்படைத்துவிட்டு மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்த நேரம்.. 

அந்த மங்கிய வெளிச்சத்தில் அவனின் உருவம் அவள் கண்ணில் பட…. உற்சாகத்துடன் அவனை நோக்கி நடந்தாள். 

கிட்டதட்ட ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்..

மூச்சி வாங்க தன் முன் ஒரு பெண் வந்து நிற்பதை பார்த்தவன் புருவம் கேள்வியாக உயர்ந்தது. 

 

அவளோ “ஆ..  ஆரோன்” என்று சொல்லிக் கொண்டே மூச்சி நன்றாக இழுத்து விட,

அவனோ கேள்வியோடு “யஸ்” என்றான். 

அவளோ “யஸ்ஸா.. ஏய் ஆரோன் நேத்து என்னை காப்பாத்திட்டு எங்கே போனீங்க. அப்புறம் என்னாச்சி? நீங்க என் அழகான கையை பிடிச்சி இழுத்துட்டு போன வரை தான் ஞாபகம் இருக்கு. அப்புறம் என்னாச்சி?” என்று பேசிக் கொண்டே போனவளை விசித்திரமாக பார்த்து,

 

“அழகான கையை பிடிச்சேனா? நானா?” என்று ஒரு மார்க்கமாக கேட்டுக் கொண்டே பெண்ணவளின் நீண்ட கரங்களை பார்த்தான். 

ஆனால் இம்முறை வியப்படையாமல் “யார் நீங்க? லூசு போல பேசிக்கிட்டு இருக்கிங்க?” என்று சற்று கோபம் கலந்த எரிச்சலோடு கேட்டு பேதையவளை திடுக்கிட வைத்தான் காரிகையவன். 

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்… 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
131 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
250 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page