அரக்கன் – 7

  • அத்தியாயம்- 7

தன் முதுகில் அடித்தது யாரென்று எரிச்சலுடன் திரும்பி பார்த்த அனு இத்தனை நேரம் குழப்பத்துடன் இருந்த தன் முகபாவனையை மறந்து சிரித்த முகத்தோடு,

“ஏய் பானு” என்று சொல்லிக் கொண்டே அவளை ஆர தழுவினாள். 

தன்னை அணைத்தவளை வலுக்கட்டாயமாக பிரித்து இழுத்து நிற்க வைத்து கோபத்துடன் “இப்போ தான் ஏய் பானு கண்ணுக்கு தெரியுறேனா? எத்தனை கால்.. எத்தனை மெஸேஜ் பண்ணி இருப்பேன். ஏதாவது ஒன்னுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணியாடி. என் கல்யாணத்துக்கும் வரல. ஏன்டி எனக்கு இருக்கிற சொந்தம் நீ தானே. உனக்கு இருக்கிற சொந்தம் நான் தானே. இதை நீயே எத்தனை முறை என்கிட்ட சொல்லி இருக்க. ஆனால் அதை கடைப்பிடிச்சியாடி” என்று படபடவென பொறிந்து தள்ளியவள் கடைசி இருவரிகளில் குரல் கம்மியது. 

தோழியின் உடைந்த குரலை கேட்டதும் குற்றவுணர்வோடு பானுவை பார்த்தாள் அனு.. என்னும் அனுமதி.

சட்டென கலங்கிய விழியை துடைத்துக் கொண்டு “சாரி பானு. கொஞ்சம் எவி வொர்க் லீவ் கூட போட முடில” என்று சொல்லியவளின் மனதில் அப்படி ஒரு வலி.

ஆசையாக தோழியின் திருமணத்திற்காக ஒரு பவுண் தங்க சங்கலியை வாங்கிக் கொண்டு ஆசை ஆசையாக மண்டப்பதிற்கு வந்தவளை திருமண மண்டப வாயிற்லே நிற்க வைத்து

“ஏய் நில்லு. நீ தான் அனுமதியா?” என்று கேட்டவரை ஏற இறங்க பார்த்து,

“அனு மட்டும் சொல்லுங்க போதும். ஆமா நான் தான் அனு” என்றாள் சற்று மிடுக்காக. 

அவரோ “உன் பேரு அனுமதி தானே. அப்போ அதை சொல்லி தானே கூப்பிட முடியும். பேரு வச்சி இருக்காங்க பாரு. அனுமதி அனுமதிக்காகதனு” என்று அவளை மட்டம் தட்டியவரை பார்த்து கோபம் ஏற்பட்டாலும் தோழியின் கணவனாக வரும் போகும் சதீஷின் அக்காவாக இருப்பதால் தோழிக்காக அமைதியாக நின்றாள். 

ஆனால் அவரோ அவளை கேவப்படுத்தும் முடிவோடு “ஆமா உன்னை யாரு கல்யாணத்துக்கு கூப்பிட்டா. என்ன ஓசில விருந்து சாப்பிட்டு போலாம் வந்தீயா?” என்று எளக்காரமாக பேசியவர் “நாங்க பிச்சைக்காரங்களுக்குனு தனியா சோறு எடுத்து வச்சி இருக்கோம். பின் பக்கம் போய் கொட்டிக்கிட்டு கிளம்பு. இனி பானு கினு னு தேடி வந்த.. மரியாதை இருக்காது சொல்லிட்டேன்” என்று அவள் மீது இருந்த மொத்த வெறுப்பையும் வார்த்தையால் கொட்டிக் கொண்டு இருந்தார்.

அனுமதிற்கோ அவமானமாக இருந்தாலும் சிறு வயது முதற்க் கொண்டே உடன் பிறந்தவள் போல் ஒட்டி உறவாடிய ஒரே உறவின் திருமணத்தை கூட காண முடியவில்லையே என்ற வலி உள்ளுக்குள் குத்திக் கொண்டு இருக்க. ஏன் என்று அவரை நிமிர்ந்து பார்த்தாள். 

அவரோ பல்லை கடித்துக் கொண்டு “என்னடி எல்லாத்தையும் மறந்துட்டேன் நினைச்சியா? நானும் பார்த்துட்டு இருக்கேன். இந்த கல்யாணம் முடிவு ஆனதிலிருந்து எல்லாத்துக்கும் நீயே முன்னாடி வந்து நிக்கிற? அந்த பானு உனக்கு பிடிச்ச புடவையை தான் எடுக்கிறா? அப்புறம் நகை அதுவும் நீ சொன்னதை தான் எடுத்தா? இப்படி எல்லாத்தையும் உன் ஆசைப்படியே எடுக்கிறாளே அப்போ நாளைக்கு உன் ஆசைப்படி தான் சாந்தி முகூர்த்தம் நடத்துவாளோ” என்று மிகவும் கீழ் தரமாக இறங்கி

அவளை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியதை அவளால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?

தோழியின் நல்வாழ்வுக்காக அன்று அமைதியாக திரும்பியவள் அதை பற்றி பானுவிடம் பேச கூட அவள் விரும்பவில்லை. எங்கே தான் தொடர்ப்புக் கொண்டு அது மாப்பிளையின் அக்காவிற்கு தெரிந்து பானுவிற்கு ஏதாவது சங்கடம் வந்திட போகுது என்று மொத்தமாகவே தோழியிடமிருந்து விலகி நின்று விட்டாள் அனுமதி.

“அடியே நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்லாம இருக்க?” என்று அனுவை பிடித்து உலுக்கியதும் நடப்புக்கு வந்தவள்,

“ஹான்.. என்னடி சொன்ன” என்று கேட்டாள். 

பானுவோ “சரியா போச்சி. நீ இந்த உலகத்துல தானே இருக்க” என்று கேட்டாள். 

“லூசு” என்று சொல்லிக் கொண்டே பானுவை மீண்டும் அணைத்து விடுவித்த அனு “நீ எப்படி இருக்க. உன் ஹாஸ்பெண்ட் எப்படி இருக்காரு” என்று நலம் விசாரித்தாள். 

“நாங்க நல்லா இருக்கோம். ஆனால் உன் மேல கோவமா இருக்கேன்” என்று மார்புக்கு நடுவே கைகளை கட்டியபடி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி நின்றாள் பானு. 

அவளின் செயலில் மெல்லிதாக சிரித்த அனுவோ “சரிடி சாரி… உன் கல்யாணத்துக்கு வரமா போனது மிக பெரிய தப்பு தான். மன்னிச்சிடுடி.. ப்ளீஸ்” என்று கெஞ்சிதலாக பேசிய தோழியை ஓரே பார்வையால் பார்த்த பானு,

“முடியாது” என்று பிடிவதமாக நின்றாள். 

அப்போது “ஏய் பானு இன்னும் நீ அனு மேல கோபமா இருக்கியா” என்று கேட்டுக் கொண்டே கரங்களில் மாங்காய் பத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் அருகில் வந்து நின்றான் சதீஷ்.

சதீஷை பார்த்ததும் மரியாதை நிமித்தம் மெல்ல புன்னகைத்த அனு “ஹாய் எப்படி இருக்கீங்க சதீஷ்” என்று கேட்டாள். 

சதீஷிம் “நல்லா இருக்கேன் அனு. ஆமா நீ ஏன் மேரேஜ்க்கு வரல. பானு ரொம்ப கவலைப்பட்டாள். அன்னிலிருந்து உனக்கு கால் கூப்பிட்டே இருக்கா நீ எடுக்கவேயில்லை” என்று அக்கறையாக கேட்டான். 

அனுவோ “இல்ல சதீஷ் கொஞ்சம் பிஸி. அதான் எடுக்க முடில என்று பானுயின் கரம் மீது அவள் கரத்தை வைத்தாள் அனு. 

 

ஆனால் பானுவோ கோபத்துடன் அவள் கரத்தை தட்டி விட்டு கணவனின் கரத்திலிருந்த மாங்காய் பத்தையை வாங்கிக் கொண்டு கடல் மணலில் அமர்ந்து வேடிகைப் பார்த்துக் கொண்டு மாங்காயை திண்றாள். 

அனுவிற்கு கஷ்டமாக இருந்தாலும் பானுவின் செயலில் சிரிப்பு வர தான் செய்யது. 

எதிரே நின்ற சதீஷை பாவமாக பார்த்தாள் அனு. 

அவனோ தன் இருக்கரத்தையும் தன்னால் முடியாது என்பது போல் தூக்கி காட்டிவிட்டு மனைவியின் அருகில் சென்று அமர்ந்து விட்டான்.

அனுவோ இருவரையும் மாறி மாறி பார்த்தவள் வேறு வழியின்றி பானுவின் முன் மண்டியிட்டு இருக்கரத்தாலும் காதை பிடித்துக் கொண்டு கெஞ்சுதலும்.. கொஞ்சுதலும் நிறைந்த பார்வையோடு,

 

“ப்ளீஸ் டி. ஐ பார்மிஸ் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். என் பானுவே அவளோட அனு மேல இப்படி கோபமா இருந்தா, இந்த அனு என்ன தான் பண்ணுவா. பாவம் அவளே ரொம்ப ஒருத்தனலா பைத்தியம் பிடிக்காத குறையாக நொந்து நூடுல்ஸா இருக்கா. நீயும் இப்படி பண்ணா.. அனு என்ன பண்ணும்” என்று சமாதானப்படுத்த நினைத்தவள் ஆரோனை பற்றி உளறியும் விட்டாள்.

அனு சொன்னதை முகத்தை திருப்பி கேட்டுக் கொண்டு இருந்த பானு ஒருத்தனாலே என்று செவியில் விழுந்ததும் சட்டென திரும்பி தோழியை புரியாமல் பார்த்தாள். 

 

அனுவோ தான் உளறியதில் நாக்கை கடித்துக் கொண்டு ஒற்றை கண்ணை மூடி தோழியை கண்டாள். 

 

சதீஷிம் அனு கூறியதை கேட்டு “ஒருத்தனால பைத்தியமாகிட்டியா? யாரு அனு அந்த ஒருத்தன். உன்னையே இப்படி உளற வச்சி இருக்கான்” என்று கேலியாக கேட்டான். 

 

அனுவோ சதீஷை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பானுவிடம் திரும்பியவள் அவளின் முறைப்பிலும்.. நடந்ததை தனக்குள்ளே போட்டு குழப்பிக் கொள்ளாமல் தோழியிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் இதுவரை அவளுக்கு நடந்த அனைத்தையும் பெருமூச்சோடு கூறிவிட்டு, நன்றாக அமர்ந்து விட்டாள். 

 

சதீஷோ சத்தமாக சிரித்துக் கொண்டே “நீ சொல்றதை பார்த்தா மாநாடு படம் போல… வந்தான், போடுறான், ரிப்பீட்டு மாதிரி இருக்கு. உன்னை சுத்தி நடக்கிறது உனக்கு மட்டும் தான் உண்மையா நடக்குற மாதிரி பீல் பண்ற. ஆனால் மத்தவங்களுக்கு அந்த பீல் இல்லை. அதே போல நீ டைம் லூப்லும் மாட்டால. ஆனால் நடந்தது பாதிக்கப்பட்ட மத்தவங்க மறந்து போறாங்க. இது தானே அனு நீ சொல்ல வர” என்று சதீஷ் கேட்க,

அனுவோ அலுத்துக் கொண்டு “ஆமா இதே தான் நான் சொல்ல வரேன். ஆனால் யாருமே நம்ப மாட்றாங்க. அலீஸ்ட் நீங்களாவது நம்புங்களே” என்றாள் கெஞ்சும் குரலில். 

பானுவோ ஆராய்ச்சியாக தோழியை பார்த்தாள்.

சதீஷோ “சத்தியமா நம்ப முடில அனு. இந்த காலத்துல காட்டேரி எப்படி வரும். இதுவே பஸ்ட் ஏத்துக்க முடில. இரண்டாவது முன்ன பின்ன தெரியாதவன் ஒரு பொண்ணு கிட்ட… அதுவும் இங்கே அத்தனை பேர் சுத்தி இருக்கும் போது எப்படி வந்து உன் கையை வரைய கேட்பான்” என்று அவளுக்கு அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்றும் அனைத்து அவள் பிரம்மை என்றும் எடுத்து கூற முயன்றான்.

அனுவிற்கோ இவங்களும் நம்ப மாட்டிக்கீறாங்களே என்று வேதனையாக இருந்தது. 

 

ஆனால் பானுவோ “நீ சொல்றது உண்மையினா.. நாளைக்கு ஒரு ட்டிராயிங் எக்ஸ்ஷிபிசன் நடக்க இருக்கு. இவரு தான் இன்சார்ஜ் நம்ம வேணா அங்கே போய் பார்க்கலாம். நீ சொல்ற மாதிரி உண்மையாவே அவன் ஓவியனா இருந்தா கண்டிப்பா அவனோட திறமையை நிரூபிக்க அங்கே அவன் வரைஞ்சதை வச்சி இருப்பான். இல்லனா நீ சொல்ற எல்லாமே உன்னோட கற்பனை தான். புரியுதா?” என்றாள். 

அனுவை பற்றி நன்றாக அறிந்தவளுக்கு தெரியாத தோழி உண்மையை கூறிகிறாளா? இல்லையா? என்று. 

ஏதோ ஒரு மன குழப்பித்தில் சிக்கி இருக்கிறாள் என்று உணர்ந்த பானு இப்படி ஒரு திட்டம் கூற.. அனுவிற்கும் அது தான் சரியாகப்பட்டது. 

சதீஷோ “என்ன பானு நீயுமா?” என்று பேச வர.

கணவனை கண்களாலே அடக்கி வைத்தாள் பானு. 

பானு சொன்னதை கேட்ட அனுவிற்கோ ஏதோ ஒரு வித நிம்மதி பரவ தொடங்கியது. 

 

நாளை இவர்கள் தேடி சொல்லும் ஆரோனின் ஓவியங்கள் அங்கே இருக்குமா? என்று அடுத்த அத்தியாயத்தில் காணலாம். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
134 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
250 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page