அரக்கன் – 10
- அத்தியாயம்- 10
வீட்டின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவசரம் அவசரமாக ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு ஈவென்ட் நடக்கும் இடத்திற்கு விரைந்தாள் பானு.
போகும் வழியில் தோழிக்கு அழைக்கலாம் என்று கைப்பேசியை பார்த்தவளுக்கு தூக்கிவாரி போட்டது.
அதில் சதீஷின் அக்காவால் அனுவின் நம்பர் அழிக்கப்பட்டதை பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு.
“அது எப்படி நம்பர் காணாம போய் இருக்கோம். குளிக்குறதுக்கு முன்னே அனு நம்பரை பார்த்தோமே” என்று யோசித்தவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.
பின் மனதில் பதிந்து இருக்கும் அனுவின் நம்பரை மீண்டும் தன் கைப்பேசியில் சேமித்து வைத்தாள்.
பாவம் சதீஷின் அக்கா அறியாத ஒன்று சிறு வயதிலிருந்தே தோழிகளாக இருந்தவர்கள் அலைப்பேசி எண்ணை வாங்கும் சமயம் இருவருக்குமே கிட்டதட்ட ஒரே எண்களாகவும் கடைசி இரு நம்பர் மட்டும் மாறி இருப்பது போல் வாங்கியதால் பானுவிற்கு அனுவின் எண் மனதில் பதிந்து வைத்துக் கொள்ள எளிதாக இருந்தது.
விரைந்து அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததால் ஆடோவிற்கு பணம் கொடுத்துவிட்டு தோழியை தேடினாள்.
அனு அங்கே இல்லாமல் போக.. இப்போது தோழிக்கு அழைத்தாள். ஆனால் இம்முறை தொடர்புக்கு அப்பால் உள்ளது என்று இனிமையாக பெண் குரல் கேட்கவும் கடுப்படைந்தாள் பானு.
“ஒருவேளை சதீஷ் உள்ளே அழைச்சிட்டு போய் இருப்பாரோ” என்று யோசித்தவள் கணவனுக்கும் அழைத்தாள்.
அதுவும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று வர.
“ஓ உள்ளே நெட்வொர் ப்ராப்ளம் போல” என்று சொல்லியவள்,
பின் தன்னிடம் இருக்கும் நுழைவு சீட்டை கொடுத்து உள்ளே சென்று தோழியை தேடினாள்.
கணவன் இருக்கும் அறையும் அவளுக்கு தெரியாமல் போக.. அப்படியே உள்ளே நடந்து சென்றுக் கொண்டு இருந்த சமயம் தான் ஆரோன் பானுவை பார்த்ததும் அனுவை வெளியே தள்ளி விட்டான்.
கீழே விழ போன தோழியை பிடித்த பானு “ஏய் அனு பார்த்துடி” என்று சொல்லி அவளை நேராக நிற்க வைத்து “எங்கேடி போன? எவ்வளவு நேரம் உன் மொபைலுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். உனக்கு லைன்னே கிடைக்கல” என்று தோழியிடம் கேட்டுக் கொண்டு இருக்க.
அனுவோ அந்த சிறிய அறையை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றாள்.
பானு அந்த அறையின் வாயில் புறத்திற்கு முதுகு காட்டி நின்றதால் சத்தமே இல்லாமல் அங்கே இருந்து நகர்ந்து சென்ற ஆரோனை பார்க்கவில்லை அவள்.
பானு அவளின் தோளை பிடித்து உலுக்கும் வரை நிதானத்திற்கு வராமல் இருந்தவள், அப்போது தான் தோழியை நிமிர்ந்து பார்த்தாள்.
பானுவை கண்டவுடன் பாதுக்காப்பாக உணர்ந்தாள் அனு. சட்டென அவளை அணைத்துக் கொண்டு,
“ஏன்டி இவ்வளவு நேரம் நீ வர. உனக்காக நான் எவ்வளவு நேரம் வெளியே வைட் பண்ணேன் தெரியுமா? உனக்கு போன் கூட பண்ணேன். ஆனா போகல. அதான் ஒரு வேளை இங்கே உள்ளே போய் இருப்பியோனு நினைச்சி கோல்மால் பண்ணி உள்ள வந்தேன்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளை தேடிக் கொண்டு இருந்த இரு காவலாளர்கள் அங்கே வந்து விட்டனர்.
“எம்மா உன்னை எங்கே எல்லாம் தேடுறது. மேஜீக் வுமன் மாதிரி திடீர்னு மறைஞ்சி போய்ட்ட. அப்போவே சொன்னோம்ல எண்ட்ரி பாஸ் இல்லாமல் உன்னை உள்ள விட மாட்டோம்னு. ஆனா நீ ஏதோ மாயாஜாலம் செய்து உள்ள வந்துட்ட. அப்புறம் ஆளையே காணும். இப்போ சிசிடிவில பார்த்து தான் இங்கே வந்தோம்” என்று மூச்சே விடாமல் பேசியவர் அந்த சிறிய அறையை பார்த்தார்.
அதன் அருகில் சென்று நின்றபடியே “ஆமா எப்படி இவ்வளவு சின்ன இடத்தில இருந்த. பத்து நிமிசம் அங்கே இருந்தாலே மூச்சு முட்டும் ஆனா நீ எப்படி இவ்வளவு நேரம் மூச்சை அடக்கி வச்சிட்டு இருந்தீங்க” என்று ஆச்சிரியமாக கேட்டார்.
அதை கேட்ட அனுவிற்கு தூக்கி வாரி போட்டது. அவள் இவ்வளவு சிறிய அறையில் ஒரு ஆடவனுடன் நின்று இருக்கிறோம் என்று தோழிக்கு தெரிந்தால் அவளை தவறாக நினைத்து விடுவாளோ என்று பயந்தாள்.
அவளின் நினைவை பொய்யாக்காமல் பானுவும் சந்தேகமாக தோழியை நோக்க,
அனு ஏதாவது சொல்லி சமாளிக்கும் விதமாக வாயை திறக்க போக, அதற்குள் அந்த காவலரே “சொல்லும்மா எப்படி ஒத்த ஆளா பயப்புடாம அந்த இருட்டுல நின்னீங்க” என்று மறுபடியும் கேட்டார்.
அவர் சொன்னதை கேட்ட அனுவிற்கு திடுக்கிட்டது. ‘அப்போ என் கூட இருந்த ஆரோன் இவரு கண்ணுக்கு தெரிலையா?’ என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் ஏதாவது சொல்லி அவரை அனுப்ப வேண்டும் என்பதற்காக,
“அதான் எனக்கு மேஜீக் தெரியும் நீங்களே சொன்னீகளே! அதை வச்சி தான்” என்று பொய்யாக சமாளித்தாள்.
அவள் சொல்வது உண்மை என்று நம்பியவர்.. “ஓ சரி” என்று கூறிவிட்டு ஏதோ நினைவு வந்தவராக “ஏம்மா மோஜீக் வுமன் முதல நீ வெளியே வா. உன்னை முழுமையா செக் பண்ணணும். என்ட்ரி டிக்கெட் இல்லாம நீபாட்டுக்கு உள்ளே ஓடி வந்துட்ட. நீ ஒரு தீவிரவாதி கூட்டதோட தலைவியா இருப்பீயோனு எங்க மேலிடத்துக்கு சந்தேகம் வந்து இருக்கு” என்று சொல்லி அனுவை வெளியே அழைத்தார்.
ஏற்கனவே ஆரோனால் கோபத்தில் இருந்த அனு அவர் சொன்னதை கேட்டதும் கடும் சினத்தோடு அவர் முன் நின்று அனல் தெறிக்க பார்த்து “என்னை நல்லா பாருங்க” என்று மாரப்புக்கு நடுவே கைகளை கட்டிக் கொண்டு அவருக்கு முன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றாள்.
அவரும் அவளை மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் நன்றாக பார்த்தவர் “ம் பார்த்துட்டேன்”
“ம் இப்போ சொல்லுங்க என்னை பார்த்தா தீவிரவாதி கூட்டதோட தலைவி மாதிரியா இருக்கு” என்று பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு கேட்டாள்.
அவரோ சற்று நேரம் அவளை பார்த்தபடி யோசித்தவர் “சந்தேகமே வேணாம். உன்னை பார்த்தால் அச்சு அசல் அப்படி தான் இருக்கு. இதுல உனக்கு வேற மேஜீக் தெரியும்” என்று அவளின் பொறுமையை மிகவும் சோதித்து பார்த்துக் கொண்டு இருந்தார் அந்த காவலாளி.
அருகிலிருந்த பானு தலையும் புரியாமல் வாலு புரியாமல் “என்னடி நடக்குது இங்கே. இந்த ஆளு உன்னை மேஜீக் வுமன் சொல்றாரு. தீவிரவாதி தலைவி சொல்றாரு. என்ன தான் நடந்துச்சி” என்று சத்தம் போட்டு கேட்டாள்.
அதற்குள் அருகிலிருந்த இன்னொரு காவலாளியோ “ஏம்மா போலீஸ் காரனுக்கு மரியாதை கொடுத்து பேச மாட்டியா. அந்த ஆளு இந்த ஆளு சொல்ற” என்று அதட்ட,
பானு திகைப்புடன் “ஏதே போலீஸா? உங்களை பார்த்தா போலீஸ் மாதிரியே தெரில” என்று சொல்லி அவரை மொக்கை செய்தாள்.
அதை கேட்டு கோபமடைந்த காவலாளி “தெரியாது தான்ம்மா உங்க கண்ணுக்கெல்லாம். உன்னை பார்த்தா கூட சந்தேகமா இருக்கு. ஆமா உன் என்ட்ரி பாஸ் எங்கே?” என்று கேட்டார்.
பானுவோ கழுத்தை நெடித்துக் கொண்டு தன் பையிலிருந்த நுழைவு சீட்டை எடுத்து காட்டியவள் அனுவின் நுழைவு சீட்டையும் காட்டினாள்.
அதை வாங்கி பார்த்த இரு காவலாளியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டர்.
பின் சங்கடத்துடன் அனுவை நோக்கி “அப்போ நீ தீவிரவாதி இல்லையா?” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் சமயம்,
முகம் முழுவதும் கட்டி போல் வீங்கி கை விரல் பத்து நகங்களும் நீண்டு இருக்க. வாயிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோஷமாக ஒரு கொடிய உருவமான ரத்தகாட்டேரி இரு காவலாளியின் ஒருவரின் கழுத்தை மட்டும் பிடித்து சட்டென திருப்பியது.
ரத்தகாட்டேரி திருப்பிய வேகத்தில் அவர் தலை அந்த ரத்தகாட்டேரி கையோடு பிடுங்கிக் கொண்டு போக…
தலையில்லா முண்டத்தை பார்த்த மற்ற மூவரும் பயத்தில் உறைந்து போய் நின்றனர்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
