கேட்காத சங்கீதம்

கேட்காத சங்கீதம்:

இந்த உலகில் தோன்றிய மனிதன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு தேவைகளும், முடிக்க வேண்டிய கடமைகளும் நிச்சயம் உண்டு .. அதை அடையும் பாதையில் ஓடும் ஓட்டத்தில்,அவன் சந்திக்கும் மனிதனோ,பொருளோ,சூழளோ அவனை இந்த பயணத்தை ரசித்த படி கடக்க உதவி செய்கிறது 

அதில் பலருக்கு பல விருப்பு வெறுப்புகள்.. இவனுக்கோ இசை மட்டுமே உலகம் ..இவன் வெறுப்பதும் இசையை தான், அதிகம் நேசிப்பதும் இசையை தான் ..

இசை அது ஒன்று மட்டுமே அவனின் உயிர் மூச்சு .. தினம் சந்திக்கும் எதிலும் இசையை தேடுவது அவனின் இயல்பு. 

அழும் குழந்தை,பேசும் மனிதன் ,நெருப்பின் தன்மை என அனைத்திலும் இசையை தேடும் அவனுக்கு வாய் பேசா உயிரிலும் கூட இசை கேட்டு அதையே அவரின் மொழியாய் உணரும் இசை பிரியன்,இல்லை இல்லை பைத்தியம் என்றே கூறலாம் 

இசையை ஓடியே இருக்கும் அவனுக்கு ,இசையே வாழ்க்கையாகவும் மாறி போய் இருந்தது ..பல வருடம் போராட்டத்தின் விலைவாய் , அவனின் திறமையை உணர்ந்து அவனை விரும்பி பின் தொடர கூட்டமே தானக்காய் சேகரித்து வைத்திருந்தான் ஆர்யன் 

சென்னையின் அந்த பிரம்மாண்டமான உள்விளையாட்டு அரங்கம் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து கொண்டிருந்தது. 

மேடையின் மையத்தில் நின்றிருந்த ஆர்யன், அந்த அதிர்வின் நாயகனாகத் தெரிந்தான். இது எனக்கான மேடை..இவர்கள் அனைவருமே நானும் என் உழைப்பால் மட்டுமே சேர்ந்த கூட்டம் என்ற கர்வம் அதிகமே இருந்தது அவனுக்கு.

அவனது கறுப்பு நிற லெதர் ஜாக்கெட்டும், கலைந்த தலைமுடியும், கழுத்தில் மின்னிய அந்த ஒற்றை டாலரும் ரசிகர்களின் உற்சாகத்தை எல்லை கடக்க வைத்தன.

“ஆர்யன்… ஆர்யன்… ஆர்யன்…” – பத்தாயிரம் தொண்டைகளில் இருந்து வெளிப்பட்ட அந்த ஒற்றைப் பெயர், ஒரு மந்திரம் போல அந்த அரங்கெங்கும் சுழன்றடித்தது.

பல நாள் தவம் இன்று நிறைவு பெற்ற ஆனந்தம் அனைவரின் முகத்திலும் மின்னவே செய்தது .அது ஆர்யானை மேலும் உட்சாகத்தில் ஆழ்த்தியது 

அதே உந்துதலில்,ஆர்யன் தன் எலக்ட்ரிக் கிதாரின் கம்பிகளை மென்மையாகத் தடவினான். அது ஒரு போர்க்குதிரையை வீரன் தடவுவது போல இருந்தது. அவன் மைக்ரோபோனை நெருங்கி, கண்களை மூடி அந்தப் பாடலின் முதல் வரியைத் தொடங்கினான். 

அவனது குரல் மதுவைப் போல வசீகரமாகவும், மழையைப் போல இதமாகவும் இருந்தது.அவனின் பாடல் ஆரம்பத்த நொடி முதல், வாசிகரிக்க பட்டது போல அந்த அரங்கத்தின் கூட்டமே அவனுடம் சேர்ந்து இசைந்தது. அவன் பாடும் வரிகளின் அர்த்தம் கூட சரியாய் மூளைக்கு எட்டாமல், அவனை காணும் இன்பமும், அவன் படுவதை கண்ணால் காணும் பாக்கியமும் பெற்றத்தில் லயித்து கொண்டு இருந்தது அந்த அரங்கம் 

பாடலை துவங்கியவனின் போக்கு சரணம் தொடங்கி,பல்லவியாகி இப்பொது பாடலின் கிளைமாக்ஸ் நெருங்கியது. ஆர்யன் தனது முழுச் சக்தியையும் திரட்டி அந்த உயர்ந்த சுருதியை (High Pitch) நோக்கித் தன் குரலை உயர்த்தினான். ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.ஓரு சேர எழுந்த சத்தம் உதகளத்தின் அதிர்வை பிரதிபலித்தது 

ஆனால், அந்த நொடியில் தான் ஆர்யானே எதிர் பாரா ஒன்று நிகழ்ந்தது.

திடீரென்று ஆர்யனின் காதுக்குள் ஒரு கூர்மையான ஈட்டி பாய்ந்தது போன்ற வலி. யாரோ ஒரு பெரிய இரும்புக் கம்பியால் அவனது செவிப்பறையைத் தாக்குவது போன்ற உணர்வு.வலியின் வீர்யம் மெல்ல மெல்ல அதிகரித்து தாங்கிக்கொள்ள இயலாத அளவிற்கு அதிகம் ஆனது. அடுத்த விநாடி, ஒரு பயங்கரமான இரைச்சல்… ‘வீஈஈஈஈண்’ என்று ஒரு சத்தம் மட்டும் அவன் மண்டைக்குள் சுழன்றது.

அடுத்த சில நொடிகள்… மௌனம். ஒரு மரண அமைதி.

ரசிகர்கள் வாயைத் திறந்து கத்துவது அவனுக்குத் தெரிந்தது. டிரம்மர் மேளத்தை ஓங்கி அடிப்பது தெரிந்தது. ஸ்பீக்கர்கள் அதிரும் காட்சி அவன் கண்களுக்குப் பட்டது. ஆனால், எந்தச் சத்தமும் அவனுக்குக் கேட்கவில்லை. 

ஏதோ ஒரு ஆழ்கடலுக்குள் தள்ளப்பட்டது போல, உலகம் ‘மியூட்’ செய்யப்பட்டிருந்தது.சத்தம் இல்லா உலகின் ராஜாவாகி நின்று இருந்தான் 

அவன் பயத்தில் பாடலை நிறுத்தினான். தன் சொந்தக் குரலைத் தானே கேட்க முயன்று கத்தினான். ஆனால், அவனது அலறல் கூட அவனுக்குக் கேட்கவில்லை. கையில் இருந்த கிதார் நழுவி கீழே விழுந்தது. மேடை விளக்குகளின் வெளிச்சம் அவன் கண்களை உருத்த, ஆர்யன் அங்கேயே நிலைகுலைந்து சரிந்தான்.

இதுவரை அவன் பெயரையே மந்திரம் போல கூறி கொண்டு இருந்த கூட்டத்திற்கு அவன் கிடந்த நிலை பதட்டத்தை தர,அது அடுத்த நாளே ஊரே பேசும் பேசு பொருளாகி போயிருந்தது ..ஆனால் இது எதுவும் தெரியாமல்,கேட்காமல் இரைச்சல் அதிகம் இருந்த அந்த உலகை விட்டு வெகு தூரம் தள்ளி,தனக்கென அமைதியாய் ஓரு உலகத்தை உருவாக்கி கொண்டவன் ,தன்னை தனிமை படுத்தி கொண்டு வாழ துவங்கினான் ஆர்யன் 

              **மூன்று மாதங்களுக்குப் பிறகு*

கொடைக்கானல்:

அதிகாலை ஐந்து மணி. 

சூரியனும் சந்திரமும் தம்முள் போட்டி போட்டு  சண்டையிட்டு கிடந்த அதிகாலை நேரம் அது. கொடைக்கானளின் அழகில் சந்திரன் செல்ல மறுப்பதும், தன் அன்றைய கடமையை செய்ய சூரியன் உதிக்க ஆயத்தமாய் வாசலில் காத்திருப்பதும் என இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருந்த நேரத்தில் தன் விதியை நினைத்து அரைகுறை தூக்கத்தில்  இருந்தான் ஆர்யன் 

கொடைக்கானலின் பனிமூட்டம் ஒரு வெள்ளை நிறப் போர்வை போல அந்தப் பள்ளத்தாக்கை மூடியிருந்தது. ‘சில்’லென்ற காற்று ஜன்னல் இடுக்குகளின் வழியாக உள்ளே புகுந்து ஆர்யனின் முகத்தைத் தீண்டியது.அரைகுறை தூக்கம் மொத்தம் தெளிந்து,

ஆர்யன் மெல்லக் கண்களைத் திறந்தான். பழைய மரக்கட்டிலின் மீது படுத்திருந்த அவனுக்கு, உலகமே ஒரு நிசப்தமான சித்திரமாகத் தெரிந்தது. 

அவன் எழுந்தமர்ந்து ஜன்னலைப் பார்த்தான். வெளியே பறவைகள் சிறகடித்துப் பறப்பது தெரிந்தது, ஆனால் அவற்றின் அதிகாலை இசை அவனுக்குக் கிடைக்கவில்லை.யாரோ யாரையோ சத்தமாய் கேட்கும் உணர்வு உள்ளூற எழுந்தாலும், அதை கவனிக்க கூட விரும்பவில்லை வாயும் காதையும் சேர்த்தே இழந்த பாடகனுக்கு 

அவன் அருகில் இருந்த மேஜையில் ஒரு தண்ணீர் கண்ணாடி இருந்தது. அதைத் தெரியாமல் தட்டிவிட்டான். கண்ணாடி தரையில் விழுந்து சுக்குநூறாக உடைந்தது. ஆனால், அந்தச் சத்தம் அவனுக்குக் கேட்கவில்லை. சிதறிய கண்ணாடித் துண்டுகளைப் பார்த்தபடி சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தான். அதை போல தானே தன் வாழ்வும் இப்பொது நிலைமாறி கிடப்பதாய் உணர்த்தன் அவன்.

ஒரு காலத்தில் கோடிக்கணக்கான ஒலிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒருவனுக்கு, இன்று ஒரு கண்ணாடி உடையும் சத்தம் கூடச் சொந்தமில்லை என்பது எவ்வளவு பெரிய சாபம்!

அவன் மெல்ல எழுந்து பால்கனிக்கு வந்தான். அவனது இந்தத் தனிமை அவனாகத் தேடிக்கொண்டது. சென்னையில் இருந்த நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் உதறிவிட்டு இங்கே வந்ததற்குக் காரணம், அவர்களின் கண்களில் தெரிந்த ‘பரிதாபம்’. ஆர்யன் வெறுத்த ஒரே விஷயம் அந்தப் பரிதாபம் தான்.

மற்றவரின் பரிதாப பார்வையை வெறுத்தவன்,யாரிடமும் சொல்லாமல் மலையில் தானக்காய் ஓரு குடில் அமைத்து,தன்னை தேற்றி கொண்டு இருந்தான் ஆர்யன் 

உடைந்த கண்ணாடி தூண்டுகளை பார்த்த படியே,உறக்தி பொங்கிய மனதை நிலைப்படுத்தி கொள்ள அறையின் ஜன்னல் அருகே நின்றான் ஆர்யன் .அவ்விடம் தழுவும் குளிர் கற்று இவனின் மனதையும் தீண்டி,அவனின் மன வேதனையை அவைகள் தொட்டு அலசி அவனை நிதான படுத்துவதை போல உணர்ந்தவன்,அதே நிலையில் சில நொடிகள் லயித்து கிடந்தவன் பார்வைக்கு அவன் பக்கத்து வீட்டின் திட்டம் கண்ணில் பட்டது 

குளிர்,புகை மூட்டம் என கொடைக்கானல் வந்ததில் இருந்தே வெண்ணிறம் மட்டுமே பார்த்து கொண்டு இருந்தவனுக்கு,பக்கத்து வீட்டின் பல நிற தோட்டம் உள்ளூற குதாளிக்க வைத்தது 

புதிதாய் பூத்த மலர்கள் தோட்டம் எங்கும் பூத்து குலுங்க,அதை கண்டவனுக்கோ ,எங்கிருந்தோ புத்துணர்ச்சி மனதில் பொங்கியது .தோட்டம் மொத்தம் பனித்துளிகளால் நனைந்திருந்தது. 

பூதோட்டத்திற்கு நடுவே,அப்போதே மலர்ந்த புது மலராய் நின்று இருந்தாள் அவள்,யாழினி.

பல வண்ண பூக்கள் பூத்து கிடந்த தோட்டத்தில் ஒற்றை புது மலராய் நடுவே மலர்ந்து நின்று இருந்தாள் அவள்.அவள் ஒரு வெளிர் நீல நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். தன் கேசம் மொத்தமும் ஒற்றை கிளிப் கொண்டு கட்டியவள்,கையில் சிறு தண்ணீர் ஜாடி கொண்டு அவ்விடத்தின் மலர்களுக்கு தண்ணீர் ஊற்றிய படி இருந்தாள் அவள். அருன்பிய சில மலர்களும்,மொட்டாய் சில மலர்களும் என அவைகளின் சப்ரிசத்தை உள்ளூற உணர்ந்து கொண்டு இருந்தாள் அவள் 

ஆர்யன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது அசைவுகளில் ஒரு அமைதி இருந்தது. அவள் எதையோ முணுமுணுப்பது போலத் தெரிந்தது, ஆனால் அவள் பாடவில்லை. அவள் செடிகளுடன் பேசுவது போலத் தோன்றியது.அவள் உதட்டின் அசைவில் அவளின் குரல் வளம் வளம் அறிய ஆவலாய் இருந்தான் ஆர்யன்.

வெகு நேரமாய் தன் முதுகை துளைக்கும் தீண்டாளில் நெளிந்தவள்,பின் ஆர்யன் நின்று இருந்த ஜன்னல் பக்கம் திரும்பி பார்த்தால் .பால்கனியில் நின்றிருந்த ஆர்யனின் கண்கள் அவளது கண்களுடன் மோதின. அவனை எதிர் பாராதவள், அவனின் கூர்மையான பார்வையில் தன்னையே தொலைத்து அவனுள் தேடி கொண்டு இருந்தாள்  யாழினி. அவனோ பல மாதங்களுக்கு முன் தொலைத்த மன அமைதியை அவளுள் தேட துவங்கி இருந்தான் .தோட்டத்தில் பூக்கள் மட்டும் இல்லை ,இவர்களுளின் தேடலும் மொட்டு விரிய துவங்கி இருந்தது 

ஆர்யனின் கண்கள் சிவந்து, தூக்கமில்லாமல், ஒருவிதக் கோபத்துடனும் வலியுடனும் இருந்தன. ஆனால் யாழினியின் கண்கள் ஒரு தெளிந்த நீரோடை போல இருந்தன. இருவரின் மன நிலையை அவர்களின் கண்களின் நிலையே விவரித்து இருந்தது 

சில நொடிகள் அவனை வெறுத்த பின்,இவளே முன் வந்து அவனை பார்த்து சிறு புன்னகை புரிய, அதை கண்டவனுக்கோ கோபம் என்ற அறக்கனே எட்டி பார்த்தான் 

“நான் ஒரு நோயாளி என்று இவளுக்கும் தெரிந்திருக்குமோ? அதான் இப்படிப் பார்த்துச் சிரிக்கிறாளா?” என்று அவன் மனம் விகாரமாகச் சிந்தித்தது. அவன் சட்டென்று பால்கனிக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே வந்தான்.அவனின் இந்த செயல் முதலில் புரியாமல் திகைத்து நின்றவள்,பின் அவளே தேறி, 

“எதுக்கு இப்டி பண்ணாரு!“ யோசித்த படியே மற்ற செடிகளுக்கு நீர் ஊற்றினாள் யாழினி 

இத்தனை நாள் அவன் தப்பித்து வந்த பரிதாபம் என்ற நிலையில் தான் இவளும் தன்னை பார்க்கிறாள் என்று முடிவே செய்து விட்டான் ஆர்யன்,அவளின் சில நொடி சந்திப்பில் 

அவன் தன் படுக்கைக்குச் சென்று தலையணையில் முகம் புதைத்துக் கொண்டான். அவனது ஈகோவும், அவனது இழப்பும் அவனை உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்தன. இத்துணை நாள் தன்னை சுற்றி இருந்தவர்கள் காட்டிய அனுதாபத்தை வெறுத்தவன் மனதிற்கு தன்னுடைய பரிதாப நிலையை நினைத்து கோவம் மட்டுமே வந்தது 

ஆனாலும்,அந்த இருண்ட மனநிலையிலும், யாழினியின் அந்தப் புன்னகை மட்டும் அவன் மூடிய கண்களுக்குள் ஒரு மின்னல் கோடு போல வந்து போனது.

அவன் தன் டைரியை எடுத்தான். அதிருப்தியும் வலியும் நிறைந்த அந்தப் பக்கங்களில் அவன் எழுதத் தொடங்கினான்:

“நிசப்தம் என்பது அமைதி அல்ல. அது ஒரு கொடூரமான சிறைச்சாலை. அந்தச் சிறைக்குள் இன்று நான் மட்டும் அல்ல, என்னைப் பார்த்துச் சிரித்த அந்தப் பெண்ணும் ஏதோ ஒரு ரகசியத்தை மறைத்துக் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது.”

அன்று காலை பனிமூட்டம் விலகத் தொடங்கியது, ஆனால் ஆர்யனின் வாழ்வில் படர்ந்திருந்த மௌனப் போர்வை மட்டும் விலகவே இல்லை.

அவள் யார்?உண்மையில் அவள் கண்கள் கூறும் செய்தியை அறிவானா ஆர்யன்?

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page