உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு

 

அதிகாலைப் பொழுது… அந்தப் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு.

இன்னும் உறக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இது சிட்டி சைடு என்றதனால, எப்போதும் இரைச்சல்கள் தான். ஆனா இப்போ இரைச்சல்கள் அடங்கி கிடக்க,

வானம் மெல்லிய நீலமும் இளஞ்சிவப்பும் கலந்த ஒரு ஓவியமாக விரிந்து இருந்தது.

அந்தக் குடியிருப்பில் இருக்கிற எத்தனையோ வீடுகளில் அமைதி குடி கொண்டிருக்க, ஒரு வீட்டில் மட்டும் கதவு மெல்ல திறந்தது.

தலைக்கு குளிச்சிட்டு நீர் சொட்ட சொட்ட, அவளுடைய துண்டை வைத்து தன்னுடைய தலையை துவட்டி விட்டு, அரைகுறையாக ஒரு கிளிப் எடுத்து மாட்டிகிட்டு வேகமாக வெளியில் வந்து, ரொம்ப மாடன் ஆன அந்த பிளாட்டில் அவளுடைய வீட்டு வாசல் முன்னாடி மட்டும் ஒரு சின்னதாக கலர் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். ஏதோ கான்கிரீட் காட்டில் ஒரு கிராமத்து வசந்தம் நுழைந்தது போல இருந்தது.

ரொம்ப சுமாரான ஒரு டிரஸ். வெள்ளை கோடிட்டு நீல நிறத்தில் அவளுடைய சுடிதார். ஆனா அவளுடைய ரெண்டு தோள்பட்டையிலும் மடிச்சு, ஸ்கூல்ல பொண்ணுங்க பின் குத்திருக்க மாதிரி இறுக்கமாக குத்தி, சைட்ல எங்கயும் தெரிஞ்சிட கூடாதுன்னு அந்த பக்கம் இந்த பக்கம் ன்னு ரெண்டு மூணு பின் குத்தி அந்த கோலத்தை போட்டு முடிச்சா…

இன்னைக்கு வெள்ளிக்கிழமை என்பதனால சந்தனமும் குங்குமமும் அந்த கோலத்து மேல வைக்கணும். அது அவங்க வீட்டு ரூல்ஸ்.

அதனால அவள், எந்த பக்கமாக வைக்கலாம்? இன்னைக்கு சூலம் எந்த பக்கம்? இதெல்லாம் கணக்கு பண்ணிக்கிட்டு, அதை பொறுமையாக அதே நேரத்தில் அழகாக திலகம் போல வைத்துக் கொண்டிருக்க,

ஸ்டெப்ஸ்ல யாரோ ஏறி வந்துட்டு இருக்காங்க…

“டொக்கு டொக்கு….”

ன்னு ஒரு சத்தத்தோட, ஏதோ முணுமுணுத்த படி பாடல் பாடிக்கிட்டு, எதிர் வீட்ல இருக்கிற விக்ரம் கையில ஒரு பாட்டிலோட தள்ளாடிக்கிட்டு படிக்கட்டுகளில் ஏறி வந்தான்.

அவன் பின்னாடி,

“ப்ளீஸ் விக்ரம்… ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட். எனக்கு ஒரு சான்ஸ் கொடு. நீ இந்த மாதிரி விலகி விலகி போகாதே…”

“you look… so sexy!”

“உன்னை என்னால விட முடியாது. நீ எதுக்காக என்ன விட்டு விலகி விலகி போற…”

இப்படியெல்லாம் ஒரு குரல் அவனுக்கு பின்னாடி கேட்டுக் கொண்டே வந்தது. பின்னாடி வந்தது ஒரு பொண்ணு தான்.

முழுக்க முழுக்க போதை.

அவளால் நடக்க கூட முடியல. தள்ளாடிக்கிட்டு, அவள் அப்படியே காலை எந்த பக்கம் வைக்கிறோம் என்று தெரியாமல், ஸ்டெப்ஸ்ல அவளுடைய ஹை ஹீல்ஸ் வச்சுக்கிட்டு, உச்சகட்ட போதையில அவள் தள்ளாடிக்கிட்டு ஒரு எட்டு வைக்கும் போது, அந்த ஹீல்ஸ் சறுக்கி அவள் அப்படியே கீழே விழுந்தாள்.

அவள் விழுகிற சத்தம், கோலம் போட்டுட்டு இருக்க நிலாவிற்கு கேட்டது. அவளுக்கு முன்னே நாலு ஸ்டெப் முன்னாடி வந்த விக்ரமுக்கும் கேட்டது.

அவன் பதறிக்கொண்டு,

“சினேகா… எழுந்திரு,”

என்று சொல்லி கையை பிடித்து தூக்க பார்த்தான்.

ஆனா அவளோ, அவன் சட்டையை பிடித்து அவள் மேலே இழுத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்க,

நிலா ஒரு பக்கம் ஏதோ சத்தம் கேட்டது என்று படி வழியே கீழே பார்க்கும் போது, இரண்டு பேரும் ஏதோ மெத்தைக் கட்டிலில் உருண்டுக்கிட்டு இருக்கிற மாதிரி, ஒருத்தர் மேல ஒருத்தர், அதுவும் ஸ்டெப்ஸ் உடைய அந்த தளம் பகுதியில இப்படி கொஞ்சிக்கிட்டு இருக்க,

இதை பார்த்ததுமே, நிலா அப்படியே மேலே ஏறினாள். அவளுக்கு ஒரு மாதிரி பதட்டமாக இருந்தது. இவங்க ரெண்டு பேரும் பண்றதை பார்த்து…

“சினேகா… ஸ்டாப்…”

“உன்னை யார் என் வீட்டுக்கு வர சொன்னா? இது என்னுடைய வீடு. என்னை டிஸ்டர்ப் பண்ணாதே…”

இப்படி சொல்லிக்கிட்டு அவள் இறுக்கி பிடித்து இருந்த அந்த கைகளை விளக்கி விட்டு, அவன் எழுந்திருக்க முயற்சி பண்ண,

“ஹே டார்லிங்…”

“நான் எவ்வளவு அழகா இருக்கேன். என்னை ஏன்டா உனக்கு புடிக்க மாட்டேங்குது?”

“இன்னைக்கு உனக்கு பிடிக்க வைக்காமல் நான் இங்க இருந்து போக மாட்டேன்.”

“உன்னை விடவும் மாட்டேன்…”

என்று சொல்லி அவனுடைய சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டே இருக்கும் போது,

பதட்டத்தில் நிலா, அவங்க ரெண்டு பேரையும் பார்த்தபடி கைகளை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

திரும்பிப் பார்த்த விக்ரம்,

“ப்ளீஸ் ஹெல்ப் மீ… இவளை கொஞ்சம் தூக்கி விடு. அவ போதைல இருக்கா…”

“கொஞ்சம் வா….”

இப்படி அவளை கூப்பிட, அவள் திரும்பி அவளுடைய வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்.

யாராவது வந்திருக்காங்களான்னு…

இன்னும் யாருமே எழுந்திருக்கல.

அதனால அவள் பயந்துகிட்டு திருதிருனு முழிக்க,

“இங்கே வா என்று சொல்றேன்ல்ல… ஹெல்ப் தான் பண்ண சொல்றேன்.”

“நானும் இப்ப ஸ்டெடியாக இல்ல, அதனால தான் உன்னை கூப்பிடுகிறேன். ப்ளீஸ் வா…”

“இவ இருக்கிற கோலத்தை பாரு… யாராவது வந்தா எப்படி இருக்கும் ப்ளீஸ்…”

இப்படி கூப்பிட, அவளும் ஒரு பார்வை பார்க்கும் போது, ஒரு சின்ன ஸ்கர்ட். மேல ஒரு சட்டை. அதுலயும் ரெண்டு பட்டன் தான் போட்டு இருக்கா…

கீழ விழுந்ததுல இன்னும் அவள் மோசமாக தெரிகிறாள்.

அதனால ஏதோ ஒரு விதமான பதட்டத்தோடு, அவள் மெல்ல கீழே இறங்கி வந்து, சினேகாவை கை தாங்கலாக ரெண்டு பேரும் சேர்ந்து தூக்கினாங்க.

“யாரடி நீ…”

“சரியான பட்டிக்காடு மாதிரி இருக்க… don’t touch me.”

“ஹேய் விக்ரம்…”

“யார் இந்த அரவேக்காடு…”

இப்படியெல்லாம் அந்த பொண்ணு அவள வாய்க்கு வந்த மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க, ஆனா எதையும் கண்டுகொள்ளாத அதே நேரத்தில், வீட்டில் இருக்கிறவங்க யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தோட, வேக வேகமா அவள் கைய புடிச்சு அவனோடு சேர்ந்து இழுத்துக்கிட்டு அவனுடைய வீட்டுக்குள்ள கொண்டு போக,

சினேகா ரொம்ப சத்தம் போட்டுக்கிட்டே ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருந்தா….

அவள ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிலில் படுக்க வைக்க, அவளுடைய ஹீல்ஸ் கால வச்சு அங்கும் இங்குமாக அசச்சு ரொம்ப ஆர்ப்பாட்டம் தான்.

அதனால அவன் வேகமாக போய் அவ கால்ல இருக்கிற ஹீல்ஸ் கழட்டி தூக்கி வீசி எறிந்தான்.

வீடு அலங்கோலமாக தான் இருந்துச்சு. ஆனா எங்க பாத்தாலும் எக்சர்சைஸ் பண்றதுக்கான எக்யூப்மென்ட்ஸ் இருந்துச்சு.

சுத்தி சுத்தி ஒரு மாதிரி நிலா பயந்துகிட்டே பாத்துட்டு, ஒரு பெட்ஷீட் வச்சு அவள் உடல் முழுவதும் போர்த்தி விட்டு, அங்கிருந்து எதுவும் சொல்லாமல் வேக வேகமாக கிளம்பினாள்.

சரியா அவள் வெளியில் வர, மோட்டாரை ஆஃப் பண்ணிட்டு வாட்ச்மேன் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துட்டு இருந்தார்.

இவ அந்த வீட்டுக்குள்ள இருந்து ரொம்ப பதட்டமாக, உடம்பெல்லாம் வேர்த்து போய், அதை தொடச்சுக்கிட்டு வெளியில் ஓடி வருவதை அவர் பார்த்தார்.

“இந்த பொண்ணு எதுக்கு இந்த கேடி வீட்டுக்குள் போறான்னு தெரியலையே…”

“ஆளு பச்ச புள்ள மாதிரி இருந்துகிட்டு செய்யுற வேலைய பாத்தியா?…”

“அவங்க அப்பன் ஒழுக்கத்தை பத்தி நாலு பக்கத்துக்கு எழுதி எல்லாருக்கும் பாடம் எடுத்துட்டு இருப்பான்.”

“ரெண்டாவது பொண்ணு எவன் கூடவோ வந்து பைக்ல இறங்குது.”

“மொத பொண்ணு அப்பு ராணி மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு செய்யறது எல்லாம் பயங்கரமான வேலையா இருக்கே…”

“தங்கச்சிக்கு பயங்கர போட்டியா இருக்கும் போல…”

“கால கொடுமைடா சாமி…”

இப்படி எல்லாம் பேசிக்கிட்டு அவர் கீழே இறங்கினார்.

ஆனால் அவர் பார்த்ததை இவள் பாக்கல. யாரும் பார்த்து விட கூடாதுன்னு பதட்டத்துல வேக வேகமா ஓடுனா…

கொஞ்ச நேரம் ஆக ஆக…

அவங்க வீட்டுக்குள்ள சமையல் பண்ற சத்தம் கேட்டது. நிலாவும் அவங்க அம்மாவுக்கு எல்லா உதவிகளையும் பண்ணிட்டு வேலைக்கு கிளம்பிட்டா.

அப்போ, அவங்க அம்மா ஒரு டிரஸ் கொடுத்து வரும்போது,

“இத போட்டுட்டு வா.”

“இதே ட்ரெஸ்ஸோட வந்துவிடாதே.”

“கொஞ்சம் பிரண்ட்ஸ் யாராவது இருந்தா தல அழகா சீவி விட சொல்லு.”

“நீ வரும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரன் இங்கே இருப்பாங்க.”

“நான் சொல்றது புரியுது தானே…”

“எப்போதும் போல என்ன வடிஞ்சு மூஞ்சியோட தலையை பின்னிக்கிட்டு வராத.”

“அங்கே என்ன பாத்ரூமா இல்லை?”

“வேலையை விட்டு கிளம்பும்போது தலையை சீவி கட்டி லிப்ஸ்டிக் போட்டு பவுடர் அடிச்சிட்டு வாடி.”

“உன் பேக்ல உன் தங்கச்சியோட மேக்கப் திங்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கேன்.”

“அதை வரும்போது போட்டுக்கிட்டு தான் வரணும், சரியா?”

இப்படி அவங்க மிரட்டி கிட்டே சொன்னாங்க.

அவளும்,

“சரிமா… சரிமா…”

“இதெல்லாம் எனக்கு தேவையா?…”

“அவங்க ஏன் லீவு டைம்ல வர மாட்டேங்கிறாங்க?…”

“சரி, நான் போயிட்டு வரேன்.”

இப்படி சொல்லிக்கிட்டு அவள் வெளியில் போக, எதிர் வீட்டில் இருக்கிற விக்ரம் கதவுக்கு பக்கத்துல நின்னுகிட்டு நகத்தை கடிச்சிட்டு இருந்தான்.

சரியா இவள் வெளியில் வந்ததுமே, அவனை பார்த்து எதுவும் பேசாமல் தலையை குனிஞ்சு கிட்ட, கீழே இறங்க போகும்போது,

“எக்ஸ்கியூஸ் மீ… ஒன் மினிட்.”

இப்படி சொல்ல, அவள் திரும்பி அவளுடைய வீட்டை மறுபடியும் ஒரு பார்வை பார்த்துட்டு, “என்ன?” என்ற மாதிரி முகத்தை வைக்க,

“தேங்க்ஸ் ஃபார் எவ்ரி திங்…”

“நீங்க இல்லன்னா…”

இப்படி அவன் பேசிட்டு இருக்கும் போதே,

“எனக்கு லேட் ஆயிடுச்சு.”

“நான் கிளம்புறேன்.”

“இட்ஸ் ஓகே.”

“இது ஒன்னும் அவ்ளோ பெரிய ஹெல்ப் இல்லை.”

இப்படி சொல்லிக்கிட்டு அவள் கீழே இறங்க,

இப்போ பேசுவதையும் அந்த வாட்ச்மேன் பாத்துட்டாரு.

“கதை அப்படி போகுதா?…”

“உங்க அப்பா நான் சின்ன தப்பு பண்ணதுக்கு எல்லாம் என் மேல பெரிய கம்ப்ளைன்ட் பண்ணி, அசோசியேஷன் வச்சு என்ன கேவலப்படுத்தினார்ல்ல…”

“இப்ப நான் என்ன செய்றன்னு பாரு.”

“நான் ஒன்னும் பொய் சொல்ல போறது கிடையாது.”

“இங்க நடந்த எல்லா கூத்தையும் சொல்ல போறேன்.”

“எனக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்கலாம்ல.”

“வரட்டும்… வரட்டும்…”

“நான் பார்த்துக்கிறேன்.”

இப்படி அவங்க அப்பாவ பழி வாங்கின மாதிரி ஆயிடுச்சு. அதே நேரத்துல இந்த விஷயத்தை யார் கிட்டயாவது சொல்லனுமே அதையும் சொன்ன மாதிரி ஆயிடுச்சு.

இந்த நெனப்புல, அவன் நிலாவை பற்றி மாப்பிள்ளை வீட்டில் தப்பா சொல்றதுக்கு தயாராக இருக்கான்.

ஏற்கனவே நிறைய மாப்பிள்ளை வந்து பார்த்துட்டு போயிட்டாங்க. இவளுடைய இன்னசெண்ட் யாருக்குமே பிடிக்கல. அதனால நிறைய சம்பந்தம் தட்டி போயிடுச்சு.

இப்ப தங்கச்சிக்கு நிறைய வரன் வருது. ஆனா இவருக்கு அதனால எதையும் பண்ண முடியல.

அந்த வருத்தமே அவங்க அப்பா அம்மா இரண்டு பேருக்கும் கோபமா மாறிடுச்சு.

இப்படி இருக்கிற நேரத்துல, இந்த வாட்ச்மேன் இந்த சம்பந்தத்தை தப்பான கண்ணோட்டத்தில் சொன்னா, இவளுடைய வாழ்க்கை என்ன ஆகும்?…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page