கண்கள் பேசுதே – அத்தியாயம் -1

கண்கள் பேசுதே நம் காதலை.

அத்தியாயம் -1

சூரியன் மெல்ல அஸ்தமிக்கும் நேரம், மஞ்சள் நிற அழகியாய் வட்டமுகத்துடன் காட்சியளிக்கும் சூரியனோ அவளுக்கு நேரே ஒளியை வீசிக்கொண்டு இருந்தது. அவள் மொட்டை மாடியில் யோகா செய்தபடி ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தாள். மூச்சை நன்றாக இழுத்துவிட்டு கண்களை திறந்தாள். காலை மாலை இருவேளை யோகா பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

“ரோஜா ஹே ரோஜா கீழ வா க்ரீன் டீ போட்டு வச்சிருக்கேன்” என்று அவளுடைய தந்தை பிரபஞ்சன் அழைக்கும் குரலில் “இதோ வரேன்”என்று குரல் தந்துவிட்டு இறங்கினாள். 

“ஆமா, இன்னைக்கு நைட் ப்ரண்ட்ஸ் எல்லாம் நம்ம வீட்ல ஸ்லீப் ஓவர் னு சொன்னியே வராங்களா ?”

“ஆமா டேட் “

பிரபஞ்சன் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை செதுக்கி வைத்துக்கொண்டவர். மனதளவில் ரொம்ப பாஸிட்டிவ் அபிப்பிராயம் கொண்டவர். தோற்றமும் சற்று இளமையோடு வைத்துக்கொண்டு ரோஜாவுக்கு அண்ணன் போல் தோன்றுவதால் சில நேரங்களில் தோழிகள் முன்போ நண்பர்கள் முன்போ தந்தையை அறிமுகம் செய்து வைக்க அவளுக்கு பெருமையாக இருக்கும்.

பிரபஞ்சன் சென்னை ஈ.ஸி.யாரில் கடல் போன்ற ஒரு வீட்டை கட்டினார். கடற்கரை ஒட்டி பால்கனி இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என்று மனைவி தமிழரசி கூறியதன் விளைவாக பார்த்து பார்த்து வீட்டை கட்டினார்.

ஒரு சின்ன கருத்து வேறுபாடு அதனால் தான் தமிழரசி கோபித்துக்கொண்டு காரைக்குடியில் உள்ள தாய் வீட்டில் மகன் ரவிவர்மனுடன் சென்றுவிட்டார். 

ரவிவர்மன் எப்போதும் அம்மா பெட் அதனால் அம்மாவுடன் கிளம்பிவிட்டான். 

எல்லோரும் வீட்டிற்கு வருகிறார்கள் என்பதால் தடபுடலாக பிரபஞ்சன் சமையல் செய்து வைத்திருந்தார். நண்பர்கள் தோழிகள் என ஒரு பத்து பேர் வந்திருக்க அனைவரும் அந்த பெரிய ஹாலில் அமர்ந்து சாப்பிட்டனர். எல்லாம் காரைக்குடி ஸ்பெஷல் டிஷ்.

“வாவ் அங்கிள் அமேசிங் டிஷ் எல்லாம் சூப்பர்”என்று ரோஜாவின் தோழி கூறினாள். சாப்பிட்டு முடித்ததும் அந்த ஹால் மாப் போட்டு விட்டு அங்கேயே அனைவரும் உறங்குவதற்கு விரிப்புகள் போட்டு ஏற்பாடு செய்தார் பிரபஞ்சன். 

“அங்கிள் நீங்க உங்க லைஃப் ஸ்டோரி சொல்லுங்கள் கேட்டுட்டே தூங்குறோம்”என்றான் நண்பன் ரித்விக்.

“ஹாஹா என் ஸ்டோரி உங்களுக்கு போர் அடிக்கும் வேணாம்”என்று சிரித்தார் பிரபஞ்சன்.

“அதெல்லாம் முடியாது இந்த பிரபஞ்சனின் காதல் கதை நாங்க தெரிஞ்சிக்கனும் ஸோ நீங்க சொல்லியே ஆகணும்”என்று கோரஸாக நட்பு வட்டங்கள் கூற இவரோ ஆரம்பித்தார்.

“தமிழரசி பேருக்கு ஏத்த மாதிரி தமிழ் மீது பற்று கொண்டவ அவ, நான் ஹெட்மாஸ்டரா இருந்த ஸ்கூல்ல தமிழ் ஆசிரியை அது மட்டும் இல்லை நிறைய தமிழ் நாவல்கள் எழுதுவா நான் அவளோட நாவல்களை படிக்க ஆரம்பிச்சேன் அப்பறம் நாவல்களின் காதல்னா இருந்த நான் அவளோட காதல்னா இருக்க ஆரம்பிச்சிட்டேன். தமிழரசியை காதலிக்கிற விஷயம் வீட்ல தெரிஞ்சப்ப எல்லாம் ஒரொரு மாதிரி பேச ஆரம்பிச்சாங்க மூக்கு சரியில்லை முழி சரியில்லை அது இதுன்னு குறை பேச ஆரம்பிச்சாங்க ஆனால் என் பார்வைக்கு அவ தேவதையா தெரிய ஆரம்பிச்சா…..

“அப்பறம் ?” என்றாள். ரோஜா அவளே தந்தையின் காதல் கதையை முதல்முறை கேட்கிறாள். 

“ஹாஹா…அப்பறம் பெத்தவங்க எதிர்ப்பு மீறி கோவில்ல கல்யாணம் பண்ணி சென்னை கூட்டிட்டு வந்துட்டேன். என் கைல இருந்த கொஞ்சம் பணத்தை வச்சு ஒரு மளிகை கடை சின்னதா போட்டேன் அது தான் இப்போ ரோஜா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா வந்து நின்னுருக்கு. எங்க வளர்ச்சியை பார்த்து எங்க ஜனம் பொறாமை கூட பட்டுச்சு அப்பறம் தமிழரசி அண்ணேன் எங்களை ஏத்துக்க ஆரம்பிச்சாரு கொஞ்சம் கொஞ்சமாய் மொத்த குடும்பமும் ஏத்துக்குச்சு. தமிழரசிக்கு சேர வேண்டிய நகை பணம் எல்லாம் எங்க மாமனார் கொடுத்தாரு. அதை வச்சு கொஞ்சம் லைஃப் டெவலப் பண்ணோம். 

தமிழரசி இங்க வந்தும் தமிழ் டீச்சரா கொஞ்ச நாள் வேலையும் போனாள். எங்க உழைப்பு வீண் போகலை,அவ ஆசைப்படி இதோ இந்த ஈசிஆர் ல வீடும் கட்டியாச்சு. இங்கேயே டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் ப்ராஞ் ஓபன் பண்ணியாச்சு…..ம்ம் என்று பெருமூச்சு விட்டார்.

“அதெல்லாம் சரி இப்ப ஏன் ஆண்டி கோச்சிட்டு போனாங்க?”என்றான் ரித்விக் 

“ம்ம் அதை நீ ரோஜாவை தான் கேட்கணும்”

“ஏன்?”

“பின்ன? ரோஜாவுக்கு பிடிச்ச பையனை தான் கட்டி வச்சோம். டாக்டர் ராஜா. ஆனால் ஒரு வருஷம் கூட முழுசா வாழாம இங்க எங்க கூட வந்துட்டா ரோஜா. தமிழரசி எவ்வளவோ சொல்லி பார்த்தா இவ ராஜா வீட்டுக்கு போற மாதிரி தெரியலை. வேற வழியில்லை என் பொண்ணுக்கு நான் சப்போர்ட் பண்ணனுமேன்னு பண்ணேன் அது தமிழரசிக்கு கோபம் அதான் கோச்சிட்டு போய்ட்டா. “என்றார் பிரபஞ்சன்.

“ஹே என்ன ரோஜா? ராஜா கூட சேர்ந்து வாழ என்ன கஷ்டம்? ரோஜா ராஜா உங்க பெயர்லயே அவ்ளோ அம்சமா இருக்கு. டாக்டர் வேற ஸோ…..நல்ல லைஃப் தானே?”என்றாள் தோழி.

“ப்ச்ச்….. டாக்டர் டாக்டர் அது அது தானே பிரச்சனையே எப்ப பாரு கன்சல்டேஷன் கன்சல்டேஷன்னு குடும்பத்தை பார்க்க கூட நேரம் இல்லை மனிஷனுக்கு “என்று புலம்பினாள். அவள் வார்த்தையின் உச்சரிப்பில் உள்ள அழுத்தமே சொல்லியது அவள் மனநிலையை.

“சரி ராஜா வேணாம் ஓகே அடுத்து உன் லைஃப் பத்தி என்ன யோசிச்ச”என்றான் ரித்விக்.

“தெரியலை”என்று முகம் சுழித்தாள் ரோஜா

“வாட்? ஹே உனக்கு அடுத்து உன் தம்பி இருக்கான் அவனை கட்டிட்டு இந்த வீட்டுக்கு வர பொண்ணு அட்ஜஸ்ட் பண்ணுமா நீ இங்க இருக்கிறதுக்கு”

“அதெல்லாம் அப்பறம் பார்க்கலாம்”என்றாள் ரோஜா சற்று கடுப்போடு. ஆம் என்றைக்கோ நடக்கப் போவதை நினைத்து இப்பவே கவலைபடமுடியுமா என்ன? என்பது போல் இருந்தாள்.

“அங்கிள் இதுக்கெல்லாம் நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க முதல்ல நீங்க ராஜாவை அழைச்சு பேசுங்க. அப்பதான் தெளிவா முடிவு எடுக்க முடியும். இதை இப்படியே விட்டிங்கன்னா ரோஜா வாழ்க்கை கெட்டுடும் “என்றாள் தோழி ஒருத்தி.

“கேட்டுச்சா ரோஜா?, இதே தான் அன்னைக்கு உன் அம்மா சொன்னா “என்றார் பிரபஞ்சன்.

ரோஜாவால் எதுவும் பேச முடியவில்லை அவள் அப்படியே சுவரை ஒட்டி  சாய்ந்து அமர்ந்தாள் . அவளிடம் எந்த பதிலும் இல்லை ராஜாவுடன் மறுபடியும் சேர்ந்து வாழ பெரியதாக அவளுக்கு விருப்பமில்லை. அவள் ராஜாவை பிரிந்ததற்கு அவனுடைய வேலை மட்டும் தான் காரணமா இல்லை வேறு ஏதாவது காரணமா என்று அவளுக்கே புரியவில்லை. ஒருவேளை அவனை நேசிக்கும் நபராக இவள் இருந்தால் இந்நேரம் அவனிடம் சமாதானம் பேச ஒரு முறையாவது சென்றிருப்பாளே ஆனால் இதுவரை சமாதானம் பேச அவனை சந்திக்க முயற்சிக்கவில்லை.

மேட்ரிமோனியில் பார்த்த உடனே புடிச்சி இருந்தது.‌ நல்ல லைஃப் நல்லா ஜாலியா இருக்கும் என்ன என்னமோ கற்பனையோடு அவனை திருமணம் செய்தாள் ரோஜா ஆனால் எந்நேரமும் வேலை வேலை என்று சுற்றும் அவனது செயல் எரிச்சலாக இருந்தது அவளுக்கு. கன்சல்டேஷன், சர்ஜரி , மெடிக்கல் கான்பரன்ஸ் என்று எதாவது ஒன்று பின்னால் ஓடிக்கொண்டே இருக்கும் சூழ்நிலை ராஜாவுக்கு. 

ஆனால் இவளுக்கோ ராஜாவின் நெருக்கம் தேவைப்பட்டது. கணவன் மனைவியாய் ஹேப்பியா ஒரு லைஃப் முக்கியமா டென்ஷன் இல்லாத லைஃப் வேணும்னு தோணுச்சு. அது அவளுக்கு கிடைக்கவில்லை. எவ்வளவோ சொல்லியும் பார்த்தாள் ஆனால் ராஜா 

“ஹே இது இப்படி தான் இருக்கும். டாக்டர் லைஃப் இப்படி தான் இருக்கும் நீ தான் அட்ஜஸ்ட் பண்ணனும். முடியலையா ! நீ வேணும்னா உனக்கு ஒரு ஜாப் இல்லாட்டி எதாவது ஹாபி க்ரியேட் பண்ணிக்க அதுவும் இல்லைனா கிளம்பி அம்மா வீட்டுக்கு போ அதை விட்டுட்டு என்னை நச்சரிக்காத “என்று உறுதியாக சொன்ன அந்த நாள் தான் பையை தூக்கிக்கொண்டு ஆட்டோ பிடித்து பிரபஞ்சன் வீட்டுக்கு வந்தாள்.

ஆனால் அவள் வந்ததும் அவளிடம் பிரபஞ்சன் மற்றும் தமிழரசி எதுவும் கேட்கவில்லை, சின்ன பிரச்சினையாக தான் இருக்கும் போகப் போக சரியாகிவிடும் இவளே மறுபடியும் கணவன் வீட்டுக்கு சென்று விடுவாள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர் பெற்றோர். ஆனால் 20 நாட்களாகியும் இவள் அங்கு செல்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற போது தான் தமிழரசி அறிவுரை கூற முயற்சித்தாள் இதில் பிரபஞ்சன் சப்போர்ட் செய்ததால் தமிழரசி கோபம் கொண்டு…

“நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு ஏதோ பண்ணி தொலைங்க “என்று நடையை கட்ட ரவி வர்மா “மா தனியா போகாத நானும் வரேன் “என்று அவளுடன் சென்றுவிட்டான்.

அப்படியே இரண்டு மாதங்கள் ஓடியது தமிழரசியும் இங்கு வரவில்லை ரோஜாவும் கணவனை தேடி போகவில்லை. 

(இன்று)

நட்பு வட்டங்கள் கொட்டாவி விட்டபடி சரி தூங்கலாம் என்று படுத்து உறங்கினர். பிரபஞ்சன் மட்டும் தூங்கவே இல்லை மகளை பற்றிய சிந்தனை ,தன் காதல் மனைவி இன்னும் வரவில்லை என்ற ஏக்கம் ஒருபக்கம். ரோஜா எழுந்து தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள் திரும்பிப் பார்க்கும்போது பிரபஞ்சன் தூங்காமல் படுத்துக் கொண்டிருப்பதை கவனித்தாள். 

“டேட் இன்னுமா நீங்க தூங்கலை?”

“யெஸ்….”

“என்னதான் பிரச்சனை உங்களுக்கு”

“உனக்கு சொன்னா புரியாது நீ தூங்கு “

நீ என்னமோ பண்ணுங்க என்ற எழுந்து ஃப்ரிட்ஜில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தாள். அதன்பின் அவளும் உறங்கினாள். 

இரவு 1மணியளவில் திடிரென்று ஒரு ஆடவனின் குரல் “ஹே வெளியே வாடி உனக்கு தூக்கம் கேட்குதா தூக்கம்? உன்னே கல்யாணம் பண்ணி என் தூக்கம் போச்சு.‌ டாக்டர்னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ண? அப்பறம் என்ன எழவுக்கு கோச்சிட்டு இங்க வந்த “என்று ராஜா கத்திக்கொண்டே இருக்க நண்பர்கள் மற்றும் பிரபஞ்சன்,ரோஜா அனைவரும் எழுந்து பால்கனியில் எட்டி பார்த்தனர்.

ராஜா குடித்துவிட்டு உலறுவது நன்றாகவே புரிந்தது இதை பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள். 

“அங்கிள் இவன் என்ன மேனர்ஸ் இல்லாம இந்த நேரத்துல வந்து குடிச்சிட்டு கத்திட்டு இருக்கான். ரோஜா இவன் கூட சண்டை போட்டு இங்க வந்தது தப்பே இல்ல போல இருக்கு”என்று தோழிகள் கூறினர்.

“ராஜா எதுக்கு இங்க கத்திட்டு இருக்கீங்க நீங்க முதல்ல கிளம்பி உங்க வீட்டுக்கு போங்க”என்று பிரபஞ்சன் விரட்டி விட….

“டேய் மானங்கெட்ட மாமா…உன் பொண்ணை நீயே உன் வீட்ல பத்ரமா வச்சிக்க நான் கிளம்புறேன் “என்று சொல்லிவிட்டு ராஜா கிளம்பினான் காரில். கார் ஜெட் வேகத்தில் பறந்தது.

அடுத்து ரோஜா என்ன முடிவு எடுக்க போகிறாள் பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடரும்.

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page