திரையிட்டு விலகாதே! -2

திரையிட்டு விலகாதே! – 2

Hiiii வாசகர்களே ✨

நானும் என் தோழியும் அரை மனதோடு வந்து அமர்ந்தோம் வகுப்பில்… கடைசி பெஞ்ச் என்பதால் அந்த வகுப்பின் மூலை முழுக்கு எங்களுக்கு தான்! இருவர் அமரும் டேபிள் என்பதால் ஜாலியாக இஷ்ட படி அமர்ந்து, லஞ்ச் திறந்து உண்டோம் அதை பற்றி பேசிய படியே…

பிறகு இங்கிலீஷ் மேம் வந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்… ஆம்! எங்களுக்கு காலை 8:30 மணி முதல் 5:30 மணி வரை வகுப்பு பள்ளி நேரம் ஆகும்!!

ஆனால் எங்கள் மனமோ அதில் ஒப்பவில்லை… வைஷூ மேஜையிலேயே xo விளையாட அழைத்தாள், அதிலும் என் மனம் ஒப்பவில்லை!!

என் மனம் முழுவதும் எந்த அணி வென்றது? என்பதை அறியவே ஆவல் கொண்டு இருந்தது… ஒரு சிறிய கவிதை எடுத்து நடத்தி விட்டு, பெல் அடித்ததும் கிளம்பி விட்டார்…

காலை 10:30 மணிக்கு ஒரு பிரேக், மாலை 3:30 மணிக்கு ஒரு பிரேக்… ஆகவே இப்போதும் எங்களுக்கு இடைவேளை, ஆகையால் வைஷூ அழைத்த பெயரில் நானும் வாஷ் ரூம் சென்றேன்!!

கூட்டத்தில் இடம் தேடி ஓரமாக நிற்க, அங்கே ஒரு மாணவி நின்று கதை பேசியதில், என் காதில் கேட்டது… வாழ்வில் முதன் முறையாக, நான் யாரென்றே தெரியாத ஒருவர் இடம் நானாக சென்று பேசினேன்!!!

அவனுக்காக தான்!

அவள் பெயர் தாரா… A பிரிவு மாணவி மேலும் அவள் சொல்லியது இது தான்…
“என் தம்பியும் தான் விளையாடினான்…
பேட்டிங் பண்ண டீம் தான் நம்ம ஸ்கூல் பிராஞ்ச் ஓடது!! ஆனா இன்னும் மேட்ச் முடியலை, சோ யாரு ஜெயிச்சான்னு தெரியாது பா….”

“ஓகே டா” என்று அதற்கு மேல் அடுத்து என்ன பேச என்று தெரியாமல் விழித்து கொண்டு நிற்கும் போது வைஷூ மீண்டும் வந்து விட்டாள்…

“ஷ்ரேயா இந்தா டீ!!” என பிஸ்கெட் கொண்டு வந்ததை என்னோடு பகிர்ந்தாள், நான் அந்த மாணவி ஓடு பேசி பெற்ற தகவலை சொன்னேன்!!

“அப்போ அவன் தான் நம்ம ஸ்கூல் டீம் கேப்டன் ஆ!!! அதான் அவ்வளோ கிளாப்ஸ் பறந்து இருக்கு… நாம தான் நியூ ஸ்டூடன்ட் நால தெரியல போல!!”

ஆம்! நான் சென்னையில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்து, இந்த பள்ளிக்கு புதிதாய் வந்து சேர்ந்து இருந்தேன்!! குடும்பத்துடன் ஊர் மாறி வந்த காரணத்தால்…

அவள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ் கணிதம் எல்லாம் பயில வேண்டும் என CBSE மாறி வந்து இருந்தாள்… நாங்கள் இருவருமே, பயோ கம்ப்யூட்டர் குரூப் தேர்வு செய்து கணிதம் இடம் இருந்து தப்பி விட்டோம்!!

ஆனால் எங்கள் கிரகம்!!
பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி முழுக்க முழுக்க டெரிவேஷன் கணிதம் தான்…🫠🙃

இன்னும் இரண்டு வகுப்பு நடந்தது! பள்ளியும் முடிந்தது… வீட்டுக்கு செல்ல, அடித்து பிடித்து குறுக்கு வழி வழியாக ஓடுவோம் நாங்கள் இருவருமே😁😅

வைஷ்ணவி ஸ்கூல் பேருந்தில் ஜன்னல் இருக்கை பிடிப்பதற்காக ஓடுவாள், நான் டவேரா கார் பிரைவேட் வேன் ஆகையால், முதலில் வந்தால் பின்னால் இருக்கையில் நசுக்கி புசுக்கி அமர தேவை இல்லை… டிரைவர் இருக்கை அடுத்து இருக்கும் சீட்டில் தனியாக அமரலாம்!!

அப்படி முதல் ஆளாக அடித்து பிடித்து வந்து அமர்வதில், நான் கிட்ட தட்ட 2 மாதமாக வந்தும் எங்கள் வேனில் எத்தனை பேர் என்றே எனக்கு தெரியாது!! நானும் இன்னொரு 12th அக்கா இருப்பது மட்டும் தெரியும்… மாணவர்கள் எத்தனை என நான் அறியேன்!!

ஆனால், இன்றோ நான் வந்து அமர்ந்ததும் டிரைவர் அங்கிள் வந்து பின் இருக்கைக்கு மாறி அமர சொல்லி விட்டார், புதிதாய் ஒரு மாணவி வரப் போவதாக சொல்லி…

வேண்டா வெறுப்பாக, நடு இருக்கை இல்லை, கடைசி இருக்கைக்கு சென்று அமர்ந்தேன்… அன்று தான் 4 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றே எனக்கு தெரியும்..!!

பள்ளி பேருந்து எல்லாம் ஒவ்வொன்றாக கிளம்ப துவங்கி விட்டது! அடுத்து பள்ளி வாசலில் ஒரு கிரவுண்ட், தனியார் வாகனங்களுக்கே இருக்கும்… அங்கு இருந்த வேன்களும் கூட கிளம்பி விட்டன…

எங்கள் வேன் மட்டும் கிளம்பாமல் அப்படியே நின்றது… எதற்கு என்று எனக்கு முதலில் புரியவில்லை!! பிறகு அந்த 4 மாணவர்களும் கத்த துவங்கவும் தான், அங்கிள் “ஹே இன்னும் அவன் வரல டா… வரேன்னு சொல்லிட்டு தான் போனான்!” என்றார்…

கிட்ட தட்ட இருட்டவும் ஆரம்பித்து விட, வேறு வழி இன்றி அவர் காரை ஸ்டார்ட் செய்து, அந்த கிரவுண்ட் விட்டு வெளியேற… திடும் என சட்டேன் பிரேக் அடித்து நிற்க, அனைவருமே இருக்கை விட்டு சரிந்து விட்டோம்..!!

நான் என் இருக்கை விட்டு விழுந்ததில், மேல் ஏறி அமர அப்போது தான் ஒரு உருவம் வேகமாக ஓடி வந்து தடால் என்று ஏறி அமர்ந்து கதவை அறைந்து சாற்றியது… நடு இருக்கையில் அமர்ந்து இருந்த மூன்று பசங்கள் மடியில் அவன் கிரிக்கெட் கிட் பையை தூக்கி வீசி இருந்தான்!!

எல்லோரும் எரிச்சல் கொண்டு இருக்க,😤 நான் மட்டும் என் கண்களை அகல விரித்து அதிர்ச்சியோடு உறைந்து போய் அசையாது அமர்ந்து இருந்தேன்!!😲

ஆம்! அவனுக்காக தான் 6 மணி தாண்டி நாங்கள் அனைவருமே காத்து இருந்தோம்!

அவனே தான்!!!

அந்த வெள்ளை ஜெர்சி, பச்சை காலர் கேப்டன் மாணவன்….

நான் தான் கடைசியாக ஏறி, முதலில் இறங்குவேன்… எனக்கு முன்னால் இரண்டு மாணவிகளும் அடுத்த அடுத்த தெருவில் இறங்கி விடுவார்கள்!!

ஆகவே, நானும் 5 மாணவர்களும் தான் எஞ்சி இருப்போம்! என் வீடும் வந்து விட்டது, ஆனால் இப்போது வரை அவன் முகம் மட்டும் பார்க்க முடியவில்லை…

இறங்கியும் விட்டேன், அவன் ஆனால் பேக் மீது தலை கவிழ்ந்து உறங்கி போய் இருந்தான்… முன்னால் வந்து நானே ஏறி, மேலே லக்கேஜ் கேரியரில் இருக்கும் என் பள்ளி பையை எடுத்து கொண்டு ஏமாற்றத்தோடு வீட்டிற்குள் சென்று விட்டேன்…

நாட்கள் அப்படியே உருண்டு ஓடியது!!

நான் இப்போதெல்லாம் பின் இருக்கையில் தான் அமர்ந்து வந்தேன், ஆனால் என்ன அவனை நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் இல்லை!! ஆனால் பிறர் பேசுவதை வைத்து, அவன் பெயர் மட்டும் அறிந்து கொண்டு இருந்தேன்…

“மாட்டி கொண்டால் அசிங்கம் ஆகி போயிடும்..” என்று ஏறியதும் ஒரு முறை பார்ப்பதோடு சரி, அதற்கு மேல் அவன் பக்கமே திரும்ப மாட்டேன்!!

எல்லோருமே டிரைவர் அங்கிள் மொபைல் எடுத்து நோண்டுவது உண்டு!! அன்று இரு மாணவியரும் வர மாட்டார்கள் என்று ஒரு மாலையில் சொல்ல, நானும் பாட்டு போட்டு விட்டு இன்ஸ்டாகிராம் லாகின் செய்ய அந்த செயலியை திறந்தேன்!!

அதில் அவன் பெயர்…
அப்போது தான் லாக் அவுட் செய்ய பட்டு இருக்க, முகப்பு பக்கத்தில் அவன் கணக்கு காட்டியது!!

நான் என் கணக்கில் லாக் இன் செய்து, அவனுக்கு ஃபாலோ ரெக்வெஸ்ட் கொடுத்து விட்டு, தாளம் தப்பி துடிக்கும் இதயத்தோடு மொபைலை வைத்தேன்..!! அனைவரும் வரவும், வேன் கிளம்பியது…

பின்னர் நடு இருக்கையில் பொதி மூட்டை போல் அடைந்து அமர்ந்து இருந்த மாணவர்கள் மொபைலை வாங்கி கொண்டு, இஷ்டத்துக்கு ஐட்டம் பாடல்கள் ஓட விட்டு, மாறி மாறி மொபைலை வாங்கி நோண்டினார்கள்…

வீடு வந்து சேர்ந்ததும், எனக்கு எப்படியாவது மொபைல் கிடைத்து விடாதா? என்று குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தேன்! கிடைக்கவே இல்லை…

ஆம்!! வீட்டில் தங்கம் வாங்கி குடுக்க கேட்டால் கூட கிடைத்து விடும் மறுநாளே, ஆனால் மொபைல் மட்டும் கொடுக்க மாட்டார்கள்!!

அடுத்த நாள் காலையிலேயே, வேன் அங்கிள் இடம் மொபைல் வாங்கி பார்க்க அவன் ஏற்று இருந்தான்… எனக்கும் ரெக்வெஸ்ட் வந்து இருந்தது!!

நான் அப்படியே, கீழ் இறக்கி அவனுக்கு தெரியாத படி பார்த்தேன்… அதில் ஸ்டோரி ஹைலைட்ஸ் பல இருந்தன!!

எல்லாத்தையும் கள்ள தனமாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து, எனக்கு நானே மெசேஜ் அனுப்பி கொண்டு டெலிட் செய்து விட்டேன்…

ஸ்கூல் வந்தது! அந்த குரூப் படத்தில் இருந்தார் போல் அவன் வகுப்பை தெரிந்து கொண்டேன்… 11 – D என்றால், பன்னிரண்டாம் வகுப்பும் D பிரிவாக தான் இருக்கும்!!

அன்று, ஐயா கெத்து சீனியர் என்ற பெயரில் வீட்டு பாடம் செய்யாமல் வெளியே அமர்ந்து இருப்பதை கண்டேன்!
கிஞ்சித்தும் கவலை இல்லாமல், அருகில் குழுவாக பிற மாணவர்களோடு அமர்ந்து சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தான்…

பன்னிரண்டாம் வகுப்பு முழுவதும் கீழ் தளத்தில் இருக்கும், நான் முதல் தளத்தில் கம்ப்யூட்டர் லேப் செல்லும் போது இதைக் கண்டு முதன் முதலாய் வெட்கம் கொண்டு சிரித்தேன்…

அதில் இருந்து நானும் வைஷூவும் எப்போது பேசினாலும், அவனை பற்றி தான் இருக்கும் பெரும்பாலும்..!! பேசி பேசி பித்து பிடித்து போனார் போல் ஆயிற்று…

தினம் அவனை பார்த்து விட்டால் போதும்!!
என் நாளே அன்று முழுவதும் மிளிரும்…
ஆனால் என்ன, அந்த சந்தோஷம் வெகு நாட்கள் நீடிக்க வில்லை..!!

ஆம்! அவன் வேனில் வருவதை நிறுத்தி இருந்தான்… பொது தேர்வுக்கான ஸ்பெஷல் கிளாஸ் காரணமாக!!

இப்போது அவனை வாரம் இரு முறை, கம்ப்யூட்டர் லேப் செல்லும் போது மட்டுமே பார்க்க முடிந்தது!! மாடல் தேர்வுகள் முடிந்து, அவனுக்கு ஸ்டடி லீவ் விட்டு விடவே, அதுவும் முடியாமல் போய் விட்டது!!

அன்று ஒரு மாலை, அவன் கேப்டன்சி கேப் திரும்ப தருவதற்காக வந்து இருந்த போது தான் ஒரு வாரம் கழித்து அவனை பார்த்தேன்… இன்னொரு பையன் அவனிடம், “நான் கொடுத்த ரெக்வெஸ்ட் அந்த பொண்ணு அக்செப்ட் பண்ணிட்டாலே!!” என என்னை பற்றி சொன்னான்…

அதற்கு அவனோ அசராமல், “என் அக்கவுண்ட் லந்து தானே அவ அக்கவுண்ட் பாத்து ரெக்வெஸ்ட் கொடுத்த…?”

“ஆமா!!”

“ஹான்! எனக்கு ரெக்வெஸ்ட் கொடுத்ததே மொதல்ல அந்த பிள்ளை தான்…” என்று அவன் பெருமையான தொனியில் சொல்ல, அதை கேட்டு கொண்டு இருந்த மற்ற ஐவரும் வாயை பிளந்தார்கள்…

அவன் பெயர் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்😉

Thanks for reading மக்களே 🩷 
 

 

❤️ Loading reactions...
5 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page